search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எஸ்எஸ்எல்சி"

    எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் இந்த ஆண்டு மாணவர்களை விட மாணவிகள் 3.7 சதவீதம் பேர் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். #SSLC #SSLCResult
    சென்னை:

    தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 14-ந்தேதி தொடங்கி 29-ந்தேதி வரை நடைபெற்றது.

    இந்த ஆண்டு மாநிலம் முழுவதும் பள்ளிகள் மூலமாகவும், தனி தேர்வுகள் மூலமாகவும் 9 லட்சத்து 76 ஆயிரத்து 19 பேர் தேர்வு எழுதி இருந்தனர். இவர்களில் மாணவிகள் எண்ணிக்கை 4 லட்சத்து 68 ஆயிரத்து 570. மாணவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 69 ஆயிரத்து 289.

    விடைத்தாள்கள் திருத்தும் பணி முடிவடைந்து இன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

    10-ம் வகுப்பில் மொத்தம் 95.2 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட அதிகமாகும். கடந்த ஆண்டு 94.5 சதவீதம் மாணவ-மாணவிகள்தான் தேர்ச்சி அடைந்து இருந்தனர்.

    இந்த ஆண்டு மாணவிகள் 97 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 93.3 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 3.7 சதவீதம் பேர் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இந்த ஆண்டு மாநிலம் முழுவதும் 12,548 பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் பொதுத் தேர்வை எழுதி இருந்தனர். இந்த பள்ளிகளில் 6,100 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன.

    அரசு பள்ளிகளில் 92.48 சதவீதம் அளவுக்கு மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு உதவி பெறும் பள்ளிகளில் 94.53, மெட்ரிக் பள்ளிகள் 99.05, இருபாலர் பள்ளிகளில் 95.42 சதவீதம் தேர்ச்சி கிடைத்துள்ளது.

    பெண்கள் பள்ளிகளில் 96.89 சதவீதமும், ஆண்கள் பள்ளிகளில் 88.94 சதவீதமும் தேர்ச்சி கிடைத்துள்ளது.

    பாட வாரியாக தேர்ச்சியை கணக்கிட்டால் மொழி பாடத்தில் 96.12 சதவீத பேரும், ஆங்கிலத்தில் 93.35 சதவீத பேரும், கணிதம் பாடத்தில் 96.46 சதவீதம் பேரும், அறிவியல் பாடத்தில் 98.56 சதவீதம் பேரும், சமூக அறிவியலில் 97.07 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    தேர்வு எழுதிய 4,816 மாற்றுத் திறனாளி மாணவர்களில் 4,395 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சிறைக் கைதிகளில் 152 பேர் 10-ம் வகுப்பு தேர்வு எழுதி இருந்தனர். அவர்களில் 110 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

    இன்று காலை 9.30 மணிக்கு 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதும் அவற்றை 3 இணைய தளங்கள் மூலம் மாணவ-மாணவிகள் பார்த்தனர். இதன் மூலம் மாணவ-மாணவிகள் உடனுக்குடன் தேர்வு முடிவுகளை தெரிந்து கொண்டனர்.

    மேலும் பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டு இருந்தன. தனித்தேர்வர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டன.

    இவை தவிர கலெக்டர் அலுவலகங்களிலும், நூலங்களிலும் இலவசமாக தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. இதனால் மாணவ-மாணவிகள் மிக எளிதாக தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள முடிந்தது.

    வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள் தாங்கள் படித்த பள்ளி அல்லது தேர்வு எழுதிய பள்ளியின் தலைமை ஆசிரியர் மூலம் மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம். வருகிற 2-ந்தேதி முதல் மதிப்பெண் பட்டியல்களை இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மே 6-ந்தேதி முதல் மாணவர்கள் www.dge.tn.nic என்ற இணைய தளத்தில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்வு துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

    சி.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகள் மே மாத இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சி.பி.எஸ்.சி. 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை மே மாதம் மூன்றாவது வெளியிட முடிவு செய்துள்ளனர்.

    சி.பி.எஸ்.சி. 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை மே மாதம் நான்காவது வாரம் வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்த ஆண்டு முதல் 10-ம் வகுப்பு சி.பி.எஸ்.சி. மாணவர்களுக்கு சான்றிதழுடன் மதிப்பெண் பட்டியலும் சேர்த்து வழங்க ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள். #SSLC #SSLCResult

    எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியானது. மொத்த தேர்ச்சி 95.2 சதவீதமாகும். #SSLC #SSLCResult
    சென்னை:

    எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு கடந்த மாதம் (மார்ச்) 14-ந் தேதி தொடங்கி 29-ந் தேதியுடன் முடிவடைந்தது. இந்த தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் என மொத்தம் 9 லட்சத்து 97 ஆயிரத்து 794 மாணவ- மாணவிகள் எழுதினார்கள்.

    ரேங்க் பட்டியல் முறையை கல்வித்துறை ரத்து செய்து, தேர்ச்சி சதவீதத்தை மட்டுமே வெளியிட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தான், இந்த ஆண்டும் தேர்வு முடிவு வெளியிடப்படுகிறது.

    தேர்வு முடிவுகளை மாணவ-மாணவிகள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளங்களில் பதிவு எண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து பார்க்கலாம்.

    பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்ணுடன் கூடிய தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். மேலும் பள்ளி மாணவர்கள் அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த செல்போன் எண்ணுக்கும், தனித்தேர்வர்கள் ஆன்லைனில் தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது கொடுத்திருந்த செல்போன் எண்ணுக்கும் மதிப்பெண் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.



    தற்போது வெளியான எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 95.2% பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.

    இதில் 93.3% மாணவர்களும் 97%  மாணவிகளும் தேர்ச்சியடைந்துள்ளனர்.

    இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகள் 3.7 அதிகம் தேர்ச்சியடைந்துள்ளனர். #SSLC #SSLCResult
    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. சுமார் 10 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். #SSLCExam
    சென்னை:

    2018-19-ம் கல்வியாண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. வருகிற 29-ந் தேதி வரை இந்த தேர்வு நடைபெற இருக்கிறது. இந்த ஆண்டு மொழிப்பாடங்களுக்கான தேர்வுகள் (தமிழ், ஆங்கிலம்) மட்டும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 4.45 மணி வரை நடைபெறும். மற்ற பாடங்களுக்கான தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 12.45 மணி வரை நடக்கும். இன்று பிற்பகல் தமிழ் முதல் தாள் தேர்வு தொடங்கியது.

    எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 12 ஆயிரத்து 546 பள்ளிகளில் இருந்து 9 லட்சத்து 59 ஆயிரத்து 618 மாணவ-மாணவிகளும், தனித்தேர்வர்களாக 38 ஆயிரத்து 176 பேரும் என மொத்தம் 9 லட்சத்து 97 ஆயிரத்து 794 மாணவ-மாணவிகள் இந்த தேர்வை எழுதுகின்றனர்.



    தமிழ்நாடு, புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுக்கு மொத்தம் 3 ஆயிரத்து 731 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டை காட்டிலும் 133 தேர்வு மையங்கள் அதிகம் ஆகும்.

    சென்னை மாநகரில் 567 பள்ளிகளில் இருந்து 213 தேர்வு மையங்களில் 50 ஆயிரத்து 678 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.  வேலூர், கடலூர், சேலம், கோவை, மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி மற்றும் புழல் சிறைகளில் உள்ள 152 சிறைவாசிகள் புழல், திருச்சி, பாளையங்கோட்டை மற்றும் கோவை ஆகிய 4 சிறைகளில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் தேர்வு எழுதுகின்றனர்.

    தேர்வுக்காக 49 ஆயிரம் ஆசிரியர்கள் அறை கண்காணிப்பாளர் பணியில் ஈடுபட்டுள்ளனர். தேர்வு பணியில் அனைத்து நிலைகளிலும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிப்பிட வசதிகள் சிறப்பான முறையில் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    காப்பி அடிப்பதை தடுக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் சுமார் 5 ஆயிரத்து 500 எண்ணிக்கையிலான பறக்கும் படை மற்றும் நிலையான படை உறுப்பினர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். #SSLCExam

    எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. தமிழகம், புதுச்சேரியில் 9 லட்சத்து 97 ஆயிரத்து 794 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். #SSLC
    சென்னை:

    2018-19-ம் கல்வியாண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. வருகிற 29-ந் தேதி வரை இந்த தேர்வு நடைபெற இருக்கிறது. இந்த ஆண்டு மொழிப்பாடங்களுக்கான தேர்வுகள் (தமிழ், ஆங்கிலம்) மட்டும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 4.45 மணி வரை நடைபெறும். மற்ற பாடங்களுக்கான தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 12.45 மணி வரை நடக்கும்.

    எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 12 ஆயிரத்து 546 பள்ளிகளில் இருந்து 9 லட்சத்து 59 ஆயிரத்து 618 மாணவ-மாணவிகளும், தனித்தேர்வர்களாக 38 ஆயிரத்து 176 பேரும் என மொத்தம் 9 லட்சத்து 97 ஆயிரத்து 794 மாணவ-மாணவிகள் இந்த தேர்வை எழுதுகின்றனர்.

    தமிழ்நாடு, புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுக்கு மொத்தம் 3 ஆயிரத்து 731 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. இது கடந்த ஆண்டை காட்டிலும் 133 தேர்வு மையங்கள் அதிகம் ஆகும்.



    சென்னை மாநகரில் 567 பள்ளிகளில் இருந்து 213 தேர்வு மையங்களில் 50 ஆயிரத்து 678 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத இருக்கின்றனர். வேலூர், கடலூர், சேலம், கோவை, மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி மற்றும் புழல் சிறைகளில் உள்ள 152 சிறைவாசிகள் புழல், திருச்சி, பாளையங்கோட்டை மற்றும் கோவை ஆகிய 4 சிறைகளில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் தேர்வு எழுதுகின்றனர்.

    தேர்வுக்காக 49 ஆயிரம் ஆசிரியர்கள் அறை கண்காணிப்பாளர் பணியில் ஈடுபடுத்தப்பட இருக்கின்றனர். தேர்வு பணியில் அனைத்து நிலைகளிலும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிப்பிட வசதிகள் சிறப்பான முறையில் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன.

    காப்பி அடிப்பதை தடுக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு மையங்களை பார்வையிடுவதற்கு சுமார் 5 ஆயிரத்து 500 எண்ணிக்கையிலான பறக்கும் படை மற்றும் நிலையான படை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    தேர்வு மைய வளாகத்தில் மாணவ-மாணவிகள் செல்போன் எடுத்து வருவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களும் தேர்வு அறையில் தங்களுடன் செல்போனை வைத்திருப்பதற்கும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இதை மீறும் பட்சத்தில் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாணவ-மாணவிகள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால், விதிமுறைகளின்படி உரிய தண்டனைகள் வழங்கப்படும்.

    தேர்வு தொடர்பான புகார்கள், கருத்துகளை தெரிவிக்க 9385494105, 9385494115, 9385494120, 9385494125 ஆகிய எண்களில் நாளை முதல் 29-ந்தேதி வரை ஒவ்வொரு நாளும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.

    மேற்கண்ட தகவல் அரசு தேர்வுத்துறை இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #SSLC
    எஸ்.எஸ்.எல்.சி. தேறியவர்கள், பிளஸ்-2 தேர்வை தனித்தேர்வர்களாக நேரடியாக இனி எழுத முடியாது என்று அரசு தேர்வு இயக்குனர் அறிவித்து உள்ளார். #SSLC #Plustwo
    சென்னை:

    தமிழகத்தில் இதுவரையில் எஸ்.எஸ்.எல்.சி. (10-ம் வகுப்பு) பொதுத்தேர்வு எழுதி தேறியவர்கள், தனித்தேர்வர்களாக பிளஸ்-2 தேர்வை நேரடியாக எழுதலாம் என்ற நிலை இருந்து வந்தது.

    இப்போது கடந்த மார்ச் மாதம் முதல் பிளஸ்-1 தேர்வு அரசு பொதுத்தேர்வாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அதன் காரணமாக எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றவர்கள், பிளஸ்-2 தேர்வை நேரடியாக எழுத முடியாது. இவர்கள் பிளஸ்-1 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற பின்னர்தான், பிளஸ்-2 தேர்வு எழுத முடியும்.

    நடைபெறவுள்ள செப்டம்பர் மாத பிளஸ்-2 தேர்விற்கு, இத்துறையால் நடத்தப்பட்ட பிளஸ்-2 தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத மற்றும் தனித்தேர்வர்கள் தோல்வியுற்ற அல்லது வருகை புரியாத பாடங்களில் தேர்வு எழுத ஆன்லைனில் விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கலாம். இவர்களுக்கு செப்டம்பர் 2018 தவிர்த்து, இன்னும் ஒரு வாய்ப்பு (2019 மார்ச்) மட்டும் தரப்படும்.

    இவர்கள், கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசு சேவை மையங்களுக்கு சென்று 27-ந் தேதி முதல் செப்டம்பர் 1-ந் தேதி மாலை 5.45 மணிக்குள் தங்களின் விண்ணப்பத்தினை பதிவு செய்து கொள்ளலாம். குறிப்பிட்டுள்ள தேதிகளில் விண்ணப்பிக்கத் தவறும் தனித்தேர்வர்கள் ஆயிரம் ரூபாய் கூடுதல் கட்டணத்துடன் ‘சிறப்பு அனுமதி திட்டத்தில்’ செப்டம்பர் மாதம் 3 மற்றும் 4-ந் தேதி ஆகிய இரு தேதிகளில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

    இந்த தகவல்கள், அரசு தேர்வு இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டு உள்ள அறிக்கையில் இடம் பெற்று உள்ளன.  #SSLC #Plustwo
    தமிழ்வழியில் படிக்கும் எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபி அருகே கூகலூரில் உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் ‘ஸ்மார்ட்’ வகுப்பு தொடக்க விழா நடந்தது. விழாவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கலந்து கொண்டு ‘ஸ்மார்ட்’ வகுப்பை தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

    1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அடுத்த ஆண்டு முதல் சீருடைகள் மாற்றி அமைக்கப்படும். இதன் மூலம் தனியார் பள்ளிக்கும், அரசு பள்ளிக்கும் இடையே உள்ள வேறுபாடு அகலும். அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழி கல்விக்காக 50 சதவீதம் இடம் ஒதுக்கி அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

    9, 10, பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகள் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட உள்ளது. இதன் மூலம் மாணவ-மாணவிகள் உலக செய்திகளை தெரிந்து கொள்ளலாம். பட்டயக் கணக்காளர் படிப்பு படிக்க பிளஸ்-2 முடித்த 25 ஆயிரம் பேருக்கு இந்த ஆண்டு முதல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

    மேலும், பிளஸ்-2 படித்தவுடன் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற உத்தரவாதத்துடன் இந்த அரசு பல்வேறு புதிய பாடத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த கல்வி ஆண்டில் அரசு பள்ளிக்கூடங்களில் 1 லட்சம் மாணவ-மாணவிகள் கூடுதலாக சேர்ந்து உள்ளனர். வரும் கல்வி ஆண்டில் 3 லட்சம் மாணவ, மாணவிகளை அரசு பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    தமிழகத்தில் 4 ஆயிரத்து 622 நூலகங்கள் உள்ளன. இதில் கடந்த ஒரு மாதத்தில் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக சேர்ந்து உள்ளனர். இலங்கையில் உள்ள நூலகத்துக்கு 1 லட்சம் சிறந்த நூல்கள் அரசின் சார்பில் விரைவில் வழங்கப்பட உள்ளது. தமிழ் வழி கல்வி படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த அரசு ஊக்கத்தொகை வழங்க உள்ளது.

    அதன்படி பள்ளியில் சிறந்த வருகை, ஒழுக்கம், நல்ல மதிப்பெண், சமூக சேவையில் ஆர்வம் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் 10-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு ரூ.10 ஆயிரமும், பிளஸ்-2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ரூ.20 ஆயிரமும் என மொத்தம் 960 பேருக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது.

    இதற்காக 5 பேர் கொண்ட குழு அமைக்கப்படும். அவர் கள் சிறந்த மாணவ, மாணவிகளைத் தேர்வு செய்வார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    10-ம் வகுப்பு தேர்வில் எதிர்பார்த்த அளவுக்கு மார்க் கிடைக்காததால் பிளஸ்-1 வகுப்பில் சேர முடியாமல் மாணவர்களும், பெற்றோர்களும் திண்டாடுகின்றனர்.
    சென்னை:

    எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு கடந்த 23-ந்தேதி வெளியானது. தேர்வு எழுதிய 9.5 லட்சம் மாணவர்களில் 8.97 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

    கடந்த காலங்களை ஒப்பிடும்போது இந்த வருடம் வினாக்கள் மிகவும் கடினமாக இருந்ததால் மாணவ- மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெற முடியாமல் போனது. பொதுவாக கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய 3 பாடங்களில் எளிதாக 100-க்கு 100 பெறுவார்கள்.

    ஆனால் இந்த வருடம் எத்தனை மணவர்கள் பாட வாரியாக தேர்ச்சி பெற்றார்கள் என்ற விவரத்தை தேர்வுத்துறை வெளியிடவில்லை. அதற்கு பதிலாக சதவிகிதம் அடிப்படையில் தேர்ச்சியை குறிப்பிட்டு இருந்தனர்.

    இந்த வருடம் கணிதம், சமூக அறிவியல், அறிவியல் பாடங்களில் கேட்கப்பட்ட வினாக்கள் கடினமாக இருந்ததால் ‘சென்டம்’ பெறக்கூடிய மாணவர்கள் வாய்ப்பை இழந்தனர்.

    அதேபோல பெரும்பாலான மாணவர்கள் 300 முதல் 400 மதிப்பெண்கள்தான் பெற முடிந்தது. 400-க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கையும் குறைந்தது. மேலும் 200 முதல் 300 மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது. தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காததால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    10-ம் வகுப்பு தேர்வில் எதிர்பார்த்த அளவுக்கு மார்க் கிடைக்காததால் பிளஸ்-1 வகுப்பில் சேர முடியாமல் மாணவர்களும், பெற்றோர்களும் திண்டாடுகின்றனர். தாங்கள் படித்த அதே பள்ளியில் பிளஸ்-1 வகுப்பை தொடர்வதற்கு விரும்பிய பாடப்பிரிவு கிடைக்காமல் தவிக்கின்றனர்.

    தாங்கள் படித்த பள்ளியில் இடம் கிடைக்காத மாணவர்கள் வேறு பள்ளிகளை நோக்கி செல்கிறார்கள். கணிதப் பாடப்பரிவு, அறிவியல், வணிகவியல் பாடப்பிரிவுகளில் சேர போதிய மார்க் இல்லாததால் ஒவ்வொரு பள்ளிகளாக ஏறி இறங்குகிறார்கள்.

    தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் தாங்கள் கேட்கிற பாடப்பிரிவு கிடைக்கவில்லை என்று மாணவர்கள் ஆதங்கப்படுகிறார்கள். அரசு பள்ளிகளிலும் குறிப்பிட்ட பாடப் பிரிவுகளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. #Tamilnews
    ×