search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தவான்"

    ஒரு நாள் போட்டியில் அதிவேகத்தில் 5 ஆயிரம் ரன்கள் எடுத்த 4-வது வீரர் என்ற சாதனையை ஷிகர் தவான் படைத்துள்ளார். #ShikharDhawan #BrianLara
    நேப்பியர்:

    நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் தவான் 10 ரன்னை எடுத்த போது 5 ஆயிரம் ரன்னை தொட்டார்.

    119 ஒருநாள் போட்டியில் 118 இன்னிங்சில் தவான் 5 ஆயிரம் ரன்னை எடுத்தார். இதன் மூலம் ஒரு நாள் போட்டியில் அதிவேகத்தில் 5 ஆயிரம் ரன் எடுத்த 4-வது வீரர் என்ற சாதனையை லாராவுடன் (வெஸ்ட் இண்டீஸ்) இணைந்து பெற்றார்.

    ஹசிம் அம்லா (தென் ஆப்பிரிக்கா), 101 இன்னிங்சிலும், விவியன் ரிச்சர்ட்ஸ் (வெஸ்ட் இண்டீஸ்), விராட்கோலி (இந்தியா) 114 இன்னிங்சிலும் 5 ஆயிரம் ரன்னை கடந்து இருந்தனர். லாராவும், தவானும் 118 இன்னிங்சில் இந்த ரன்னை எடுத்தனர். இந்த இருவருமே இடது கை பேட்ஸ்மேன்கள் ஆவார்கள்.



    வில்லியம்சன் (நியூசிலாந்து) 119 இன்னிங்சிலும், கிரீனிட்ஜ் (வெஸ்ட் இண்டீஸ்) 121 இன்னிங்சிலும் டிவில்லியர்ஸ் (தென் ஆப்பிரிக்க) 124 இன்னிங்சிலும் 5 ஆயிரம் ரன்னை எடுத்து அதற்கு அடுத்த நிலைகளில் உள்ளனர்.

    ஒரு நாள் போட்டியில் 5 ஆயிரம் ரன்னை எடுத்த 13-வது இந்தியர் தவான் ஆவார்.

    டெண்டுல்கர் (18,426 ரன்), கங்குலி (11,221), டிராவிட் (10,768), விராட் கோலி (10,387), டோனி (10,192), அசாருதீன் (9378), யுவராஜ்சிங் (8609), ஷேவாக் (7995), ரோகித்சர்மா (7650), ரெய்னா (5615), அஜய் ஜடேஜா (5359), காம்பீர் (5238) ஆகியோர் வரிசையில் தவான் இணைந்தார். #ShikharDhawan #BrianLara
    சிட்னியில் நடைபெற்று வரும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 4 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றத்துடன் ஆடி வருகிறது. #AUSvIND #Viratkohli #Dhawan #AmbatiRayudu
    சிட்னி:

    இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் முதலாவது ஒரு நாள் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

    நிர்ணயித்த 50 ஓவரில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 288 ரன்கள் எடுத்திருந்தது. ஆஸ்திரேலியா தரப்பில் ஹேண்ட்ஸ்கோம்ப் 61 பந்துகளில் 73 ரன்களும், கவாஜா 81 பந்துகளில் 59 ரன்களும், மார்ஸ் 70 பந்துகளில் 54 ரன்கள் எடுத்திருந்தனர்.

    இந்தியா அணியில் புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ் தலா இரண்டு விக்கெட்களும், ஜடேஜா 1 விக்கெட்டும் விழ்த்தினர்.

    இதையடுத்து 289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது.

    தொடக்க ஆட்டகாரரான தவானை எல்பிடபிள்யூ (கோல்டன் டக்) முறையில் ஜேசன் பெரண்டார்ப் வெளியேற்றினார். அடுத்து வந்த கேப்டன் விராட் கோலி (8 பந்துகளில் 3 ரன்கள்) எடுத்த நிலையில் ரிச்சர்ட்சன் ஓவரில் ஸ்டாயின்சிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பின்னர் வந்த அம்பதி ராயுடுவும் வந்த வேகத்தில் வெளியேறினார். 2 பந்துகளை சந்தித்த அவர் ரன் ஏதும் எடுக்கவில்லை. அதன்பின்னர் ரோகித் சர்மா, டோனி  இருவரும் நிதானமாக விளையாடி வருகின்றனர். #AUSvIND #Viratkohli #Dhawan #AmbatiRayudu
    இந்தியாவின் டாப் 3 பேட்ஸ்மேன்களான தவான், ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோரை சாய்ப்பதே முதல் இலக்கு என்று ஆரோன் பிஞ்ச் தெரிவித்துள்ளார். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை சிட்னியில் தொடங்குகிறது. இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட் தொடர் குறித்து ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பிஞ்ச் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

    அப்போது ஆரோன் பிஞ்ச் கூறுகையில் ‘‘கடந்த 12 மாதங்களில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி ஒருநாள் போட்டியில் 133 சராசரி வைத்துள்ளார். ஷிகர் தவான் 75-ம், ரோகித் சர்மா 50-ம் சராசரி வைத்துள்ளார். ஆகவே, ஏராளமான ரன்கள் குவித்ததுடன், ஏராளமான பந்துகளை சந்தித்தவர்களும், இந்த டாப் 3 பேட்ஸ்மேன்கள்தான். ஆகவே, இவர்களை விரைவில் வீழ்த்தியாக வேண்டும். ஏனென்றால், அவர்கள் களத்தில் நின்று விரைவாக ரன்குவிக்க தொடங்கிவிட்டால், எளிதில் ஆட்டமிழக்க செய்ய இயலாது.



    தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ், டோனி ஆகியோர் அவரவர் இடத்தில் சிறப்பாக விளையாட முடியும். இருந்தாலும் டாப் 3 பேட்ஸ்மேன்கள்தான் முக்கியம். இவர்களையும் எளிதாக எடைபோட முடியாது. களத்தில் அவர்களுக்குரிய நாளாக அமைந்தால் ஆட்டத்தை திசை திருப்பி விடுவார்கள்’’ என்றார்.
    உள்ளூர் தொடர்களில் எம்எஸ் டோனி, தவான் ஏன் விளையாடவில்லை என்று இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார். #MSDhoni #Gavaskar
    இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்தவர் மகேந்திர சிங் டோனி. தற்போதைய நிலையில் டோனி ஒருநாள் போட்டியில் மட்டுமே விளையாடும் நிலையில் உள்ளார். இதனால் அதிக நேரம் ஓய்வு கிடைக்கிறது. தற்போது தவான் டெஸ்ட் அணியில் இருந்து கழற்றி விடப்பட்டுள்ளார். இதனால் அவரும் தற்போது ஓய்வில் இருக்கிறார்.

    இந்தியாவின் உள்ளூர் முதல் தர கிரிக்கெட் தொடரான ரஞ்சி டிராபி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இருவரும் விளையாடவில்லை. இந்நிலையில் எம்எஸ் டோனி மற்றும் தவான் ஏன் உள்ளூர் தொடர்களில் விளையாடவில்லை என்று பிசிசிஐ-க்கு கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதுகுறித்து கவாஸ்கர் கூறுகையில் ‘‘ நீங்கள் ஏன் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் விளையாடவில்லை? என்று நாம் ஏன் கேட்கக்கூடாது. உண்மையிலேயே பிசிசிஐயிடம், சர்வதேச போட்டிகளில் அவர்கள் இடம்பெறாத நிலையில் உள்ளூர் தொடர்களை புறக்கணிக்க ஏன் அனுமதி கொடுத்தீர்கள் என்று பிசிசிஐ மற்றும் தேர்வாளர்களிடம் நாம் கேள்வி கேட்க வேண்டும்.

    டோனி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக டி20 தொடரில் விளையாடவில்லை. அதற்கு முன் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாடவில்லை. தற்போது தொடங்க இருக்கும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் விளையாடப்போவதில்லை.



    இதனால் அக்டோபரில் இருந்து அவர் விளையாடவில்லை. ஜனவரியில்தான் ஒருநாள் தொடர் நடைபெற இருக்கிறது. இதனால் மிகப்பெரிய இடைவெளி உள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தொடரில் சரியாக விளையாடவில்லை என்றால், உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் அவர் பெயர் இடம்பிடிக்க, பல்வேறு கேள்விகள் எழுப்பப்படும்.

    உங்களுக்கு வயது ஆகஆக, உங்களுடைய ஆட்டத்திற்கு இடையே இடைவெளி ஏற்பட்டால், ஆட்டத்திறன் மெதுவாக குறைய ஆரம்பிக்கும். நீங்கள் உள்ளூர் தொடரில் எந்தவொரு பார்மில் விளையாடினாலும், நீண்ட இன்னிங்ஸ் விளையாட வாய்ப்பு கிடைக்கும். இது சிறந்த பயிற்சியாக அமையும்’’ என்றார்.
    இந்திய டெஸ்ட் அணியில் இருந்து நீக்கியது பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. அதில் இருந்து தற்போது வெளியில் வந்திருக்கிறேன் என்று தவான் தெரிவித்துள்ளார். #AUSvIND #Dhawan
    இந்திய தேசிய அணியில் மூன்று வகை கிரிக்கெட் போட்டியிலும் தொடக்க பேட்ஸ்மேனாக களம் இறங்கி விளையாடி வந்தவர் ஷிகர் தவான். இங்கிலாந்து தொடரில் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

    அவருக்குப் பதிலாக களம் இறங்கிய பிரித்வி ஷா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் ஆஸ்திரேலியா தொடரிலும் தவானுக்கு இடம் கிடைக்கவில்லை. மூன்று டி20 போட்டியில் முதல் மற்றும் 2-வது போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

    என்றாலும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டது மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. அதில் இருந்த மெதுவான நகர்ந்து வந்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து தவான் கூறுகையில் ‘‘டெஸ்ட் அணியில் இருந்து நீக்கிய கொஞ்சம் கவலையைக கொடுத்தது. ஆனால், அதில் இருந்து நாள் மெதுவாக நகர்ந்து வந்திருக்கிறேன். தனது மனநிலை தற்போது தெளிவாக உள்ளது. தற்போது மகிழ்ச்சியான நேர்மறையான சிந்தனையோடு உள்ளேன்.

    என்னுடைய ஆட்டத்தை நான் அனுபவித்து விளையாடி வருகிறேன். கொஞ்சம் நேரம் எடுத்து, அதன்பின் பயிற்சிறை மேற்கொண்டு வருகிறேன்’’ என்றார்.
    தவான், தினேஷ் கார்த்திக் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் இக்கட்டான நிலையில் விக்கெட் இழந்ததால் இந்தியா 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் டி20 போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்றது. ஆஸ்திரேலியா 16.1 ஓவரில் 153 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை பெய்தது. இதனால் ஆட்டம் நீண்ட நேரம் தடைப்பட்டது. பின்னர் மழை விட்டதும் ஆட்டம் தொடங்கியது. ஆனால் போட்டி 17 ஓவராக குறைக்கப்பட்டது. ஆஸ்திரேலியா 17 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது. மேக்ஸ்வெல் 24 பந்தில் 4 சிக்சருடன் 46 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மார்கஸ் ஸ்டாய்னிஸ் 19 பந்தில் 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 33 ரன்கள் சேர்த்து களத்தில் இருந்தார்.

    ஆஸ்திரேலியா 158 ரன்கள் எடுத்தாலும் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இந்தியாவின் வெற்றிக்கு 17 ஓவரில் 174 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    102 பந்தில் 174 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ரோகித் சர்மா, தவான் ஆகியோர் தொடக்க வீரராக களம் இறங்கினார்கள். தவான் தொடக்கம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் ரோகித் சர்மா சற்று தடுமாறினார்.

    5-வது ஓவரை பெரென்டோர்ப் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் ரோகித் சர்மா 7 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த லோகேஷ் ராகுல் 13 ரன்னிலும், விராட் கோலி 4 ரன்னில் அடுத்தடுத்து ஆடம் ஜம்பா சுழற்பந்தில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

    மறுமுனையில் தவான் 28 பந்தில் 8 பவுண்டரி, ஒரு சிக்சருடன் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 42 பந்தில் 10 பவுண்டரி, 2 சிக்சருடன் 76 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    தவான் ஆட்டமிழக்கும்போது இந்தியாவின் வெற்றிக்கு 32 பந்தில் 69 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது ரிஷப் பந்த் உடன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் இந்தியாவிற்கு வெற்றி வாய்ப்பு இருந்தது.

    கடைசி இரண்டு ஓவரில் 24 ரன்கள் தேவைப்பட்டது. அண்ட்ரிவ் டை 16-வது ஓவரை வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை தினேஷ் கார்த்திக் பவுண்டரிக்கு விரட்டினார். ஆனால் 3-வது பந்தில் ரிஷப் பந்த் ஆட்டமிழந்தார். அவர் 15 பந்தில் 20 ரன்கள் சேர்த்தார்.



    ரிஷப் பந்த் ஆட்டமிழ்ந்ததும் இந்தியாவிற்கு நெருக்கடி ஏற்பட்டது. இருந்தாலும் கடைசி பந்தை தினேஷ் கார்த்திக் அபாரமான வகையில் பவுண்டரிக்கு விரட்டினார்.

    இதனால் கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை ஸ்டாய்னிஸ் வீசினார். குருணால் பாண்டியா எதிர்கொண்டார். முதல் பந்தில் குருணால் பாண்டியா இரண்டு ரன்கள் அடித்தார். 2-வது பந்தில் ரன்ஏதும் எடுக்கவில்லை. 3-வது பந்தில் ஆட்டமிழந்தார்.

    இதனால் கடைசி மூன்று பந்தில் 11 ரன்கள் தேவைப்பட்டது. 4-வது பந்தில் தினேஷ் கார்த்திக் 13 பந்தில் 4 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 30 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதனால் இந்தியாவின் தோல்வி உறுதியானது. கடைசி பந்தில் குல்தீப் யாதவ் பவுண்டரி அடிக்க இந்தியா 17 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது.

    இதனால் ஆஸ்திரேலியா நான்கு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது ஆட்டம் மெல்போர்னில் 23-ந்தேதியும், 3-வது மற்றும் கடைசி போட்டி நவம்பர் 25-ந்தேதி சிட்னியிலும் நடக்கிறது. ஆடம் ஜம்பா, ஸ்டாய்னிஸ் தலா இரண்டு விக்கெட்டுக்கள் கைப்பற்றினர்.
    ஆஸ்திரேலியா தொடர் தொடங்கும் நிலையில் ஷிகர் தவான் பார்முக்கு திரும்பியது மிகவும் முக்கியமானது என்று ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். #INDvWI
    இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேன் ஆன ஷிகர் தவான் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சிறப்பாக விளையாடவில்லை. ஒருநாள் போட்டியில் மிகப்பெரிய அளவில் ரன் குவிக்க திணறினார். அதேபோல் டி20 போட்டியிலும் திணறி வந்தார். நேற்று சென்னையில் நடைபெற்ற போட்டியில் சிறப்பாக விளையாடி 62 பந்தில் 92 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

    இந்தியா அடுத்து ஆஸ்திரேலியா சென்று மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இந்த போட்டிக்கு முன் தவான் மீண்டும் பார்முக்கு வந்தது முக்கியமானது என்று ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ரோகித் சர்மா கூறுகையில் ‘‘அணியின் கண்ணோட்டத்தில் முக்கியமான ஆஸ்திரேலியா தொடருக்கு முன் வீரர்கள் சிறப்பாக விளையாடி ரன்கள் குவிப்பது முக்கியமானது. ஒருநாள் போட்டியில் சிறப்பாக போட்டிங் செய்தாலும் பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை. முக்கியமான தொடருக்கு முன் அணியின் வெற்றிக்கு உதவும் வகையில் அதிக ரன்கள் குவித்ததால் நான் மகிழ்ச்சியடைகிறேன்.



    ரிஷப் பந்த் ஆடுகளம் இறங்கி ரன்கள் குவிக்க வேண்டும் என்ற வேட்கையில் உள்ளார். இது அவருக்கு சரியான தருணமாக இருந்தது. முதல் ஆறு ஓவர்களுக்குள் இரண்டு விக்கெட்டுக்களை இழந்திருந்தோம். இதனால் சற்று நெருக்கடி ஏற்பட்டது. நெருக்கடியை தவான் மற்றும் ரிஷப் பந்த் சிறப்பாக எதிர்கொண்டார்கள்.

    எப்போதுமே இந்தியா வெளிநாடு சென்று விளையாடும்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது சவாலானதாகும். ஒவ்வொரு முறையில் அங்கு செல்லும்போது அணி, வீரர்கள் மற்றும் தனிப்பட்ட முறையில் பரிசோதனையாகும். ஆஸ்திரேலியா மாறுபட்ட பந்தை கொண்ட விளையாட்டு’’ என்றார்.
    வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சால் கடும் நெருக்கடி கொடுத்தபோதிலும், தப்பிப்பிழைத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. #INDvWI #dineshkarthik #krunalpandya
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டி20 போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்கள் சேர்த்தது.

    பின்னர் 110 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் ஓவரின் கடைசி பந்தில் ரோகித் சர்மா 6 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    தவான் 3 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டம்பை பறிகொடுத்தார். இரண்டு விக்கெட்டுக்களையும் தாமஸ் வீழ்த்தினார். 16 ரன்கள் எடுப்பதற்குள் இந்தியா தொடக்க பேட்ஸ்மேன்களை இழந்தது. வேகப்பந்து வீச்சாளர்கள் தாமஸ், கீமோ பால், பிராத்வைட் பவுன்சர் பந்தால் கடும் நெருக்கடி கொடுத்தார்கள். வேகப்பந்தை சமாளிக்க முடியாமல் ரிஷப் பந்த் 1 ரன்னிலும், லோகேஷ் ராகுல் 16 ரன்னிலும் வெளியேறினார்கள். இந்த இரண்டு விக்கெட்டுக்களையும் பிராத்வைட் வீழ்த்தினார்.

    இந்தியா 7.3 ஓவரில் 45 ரன்கள் எடுப்பதற்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்தது. 75 பந்தில் 65 ரன்கள் என்ற நெருக்கடி ஏற்பட்ட நிலையில் 5-வது விக்கெட்டுக்கு மணிஷ் பாண்டே உடன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார்.

    12-வது ஓவரை பொல்லார்டு வீசினார். இந்த ஓவரில் மூன்று பவுண்டரிகள் விளாசினார் தினேஷ் கார்த்திக். இதனால் இந்தியா சற்று நிம்மதி அடைந்தது. கடைசி 8 ஓவரில் 41 ரன்கள் தேவைப்பட்டது.  இந்தியாவின் ஸ்கோர் 83 ரன்னாக இருக்கும் போது மணிஷ் பாண்டே 18 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். 6-வது விக்கெட்டுக்கு தினேஷ் கார்த்திக்வுடன் குருணால் பாண்டியா ஜோடி சேர்ந்து இருவரும் இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். 17.5 ஓவரில் இந்திய அணி 5 விக்கெட்டை இழந்து 110 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. கார்த்திக் 31 ரன்னுடனும், குர்ணால் பாண்டியா 21 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். #INDvWI #dineshkarthik #krunalpandya 
    கடைசி ஒருநாள் போட்டியில் 14.5 ஓவரிலேயே 105 ரன்களை எட்டி இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை 3-1 என கைப்பற்றியது. #INDvWI
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. முதலில பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் ஜடேஜாவின் (4) அபார பந்து வீச்சால் 104 ரன்னில் சுருண்டது.

    பின்னர் 105 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக தவான், ரோகித் சர்மா ஆகியோர் களம் இறங்கினார்கள். வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை முதலில் சந்திக்க இருவரும் திணறினார்கள். தவான் 6 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.



    அடுத்து ரோகித் சர்மா உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடி ஆட்டத்தில் வெளிப்படுத்தியது. ரோகித் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    அவர் அரைசதம் அடிக்க இந்தயா 14.5 ஓவரிலேயே 105 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 3-1 எனக்கைப்பற்றியது.
    ரோகித் சர்மா மற்றும் அம்பதி ராயுடு ஆகியோரின் சதத்தால் வெஸ்ட் இண்டீஸ்க்கு 378 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா. #INDvWI
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார். சாஹல், ரிஷப் பந்த் நீக்கப்பட்டு கேதர் ஜாதவ், ஜடேஜா சேர்க்கப்பட்டனர்.

    ரோகித் சர்மா - தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இந்திய அணியின் ஸ்கோர் 11.5 ஓவரில் 71 ரன்னாக இருக்கும்போது தவான் ஆட்டமிழந்தார். தவான் 40 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் இந்த ரன்னை எடுத்தார். அடுத்து ரோகித் சர்மா உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். தொடக்கம் முதலே விராட் கோலி அதிரடியாக விளையாட முயற்சி செய்தார். இந்தியாவின் ஸ்கோர் 16.4 ஓவரில் 101 ரன்னாக இருக்கும்போது விராட் கோலி 16 ரன்கள் எடுத்த நிலையில் ரோச் பந்தில் வெளியேறினார்.



    3-வது விக்கெட்டுக்கு ரோகித் சர்மா உடன் அம்பதி ராயுடு ஜோடி சேர்ந்தார். 22-வது ஓவரின் 2-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டி ரோகித் சர்மா 60 பந்தில் 37-வது அரைசதத்தை பூர்த்தி செய்தார்.

    அரைசதம் அடித்தபின்னர் ரோகித் சர்மா தனது ஆட்டத்தில் வேகத்தை கூட்டினார். மறுமுனையில் அம்பதி ராயுடும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரோகித் சர்மா 98 பந்தில் 13 பவுண்டரி, 1 சிக்சருடன் தனது 21-வது சதத்தை பூர்த்தி செய்தார். இதனால் இந்தியாவின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.



    இந்த ஜோடி 312 ரன்கள் எடுத்திருக்கும்போது பிரிந்தது. ரோகித் சர்மா 137 பந்தில் 20 பவுண்டரி, 4 சிக்சருடன் 162 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ரோகித் சர்மா - அம்பதி ராயுடு ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 211 ரன்கள் குவித்தது.

    அடுத்து அம்பதி ராயுடு உடன் எம்எஸ் டோனி ஜோடி சேர்ந்தார். அம்பதி ராயுடு 80 பந்தில் 8 பவுண்டரி, 4 சிக்சருடன் சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடி அவர் சதம் அடித்த அடுத்த பந்தில் ரன்அவுட் ஆனார். அப்போது இந்தியாவின் ஸ்கோர் 47.1 ஓவரில் 344 ரன்கள் எடுத்திருந்தது.

    டோனி 15 பந்தில் 2 பவுண்டரியுடன் 23 ரன்கள் சேர்த்து ஆட்மிழந்தார். 6-விக்கெட்டுக்கு கேதர் ஜாதவ் உடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். கேதர் ஜாதவ் 7 பந்தில் 16 ரன்களும், ஜடேஜா 4 பந்தில் 7 ரன்களும் அடிக்க இந்தியா 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 377 ரன்கள் குவித்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரோச் இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    பின்னர் 378 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களம் இறங்க உள்ளது.
    4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தவான், விராட் கோலி ஆட்டமிழந்த நிலையில், ரோகித் சர்மா அரைசதம் அடித்துள்ளார். #INDvWI
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார். சாஹல், ரிஷப் பந்த் நீக்கப்பட்டு கேதர் ஜாதவ், ஜடேஜா சேர்க்கப்பட்டனர்.

    ரோகித் சர்மா - தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இந்திய அணியின் ஸ்கோர் 11.5 ஓவரில் 71 ரன்னாக இருக்கும்போது தவான் ஆட்டமிழந்தார். தவான் 40 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் இந்த ரன்னை எடுத்தார்.



    அடுத்து ரோகித் சர்மா உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். தொடக்கம் முதலே விராட் கோலி அதிரடியாக விளையாட முயற்சி செய்தார். இந்தியாவின் ஸ்கோர் 16.4 ஓவரில் 101 ரன்னாக இருக்கும்போது விராட் கோலி 16 ரன்கள் எடுத்த நிலையில் ரோச் பந்தில் வெளியேறினார்.

    3-வது விக்கெட்டுக்கு ரோகித் சர்மா உடன் அம்பதி ராயுடு ஜோடி சேர்ந்தார். 22-வது ஓவரின் 2-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டி ரோகித் சர்மா 37-வது அரைசதத்தை பூர்த்தி செய்தார். இந்தியா 24 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் சர்மா 59 ரன்னுடனும், அம்பதி ராயுடு 15 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
    ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தொடக்க ஜோடி அதிக ரன்கள் குவித்ததில் சச்சின் தெண்டுல்கர் - சேவாக் ஜோடியை முந்தியது தவான் - ரோகித் சர்மா ஜோடி.
    இந்திய ஒருநாள் கிரிக்கெட்டில் தொடக்க ஜோடி என்றாலே நமக்கு ஞாபகம் வருவது சச்சின் தெண்டுல்கர் - சவுரவ் கங்குலிதான். இந்த ஜோடி நீண்ட காலமாக தொடக்கத்தில் களம் இறங்கியது. இருவரும் தொடக்க ஜோடியாக களம் இறங்கி 6609 ரன்கள் குவித்துள்ளனர். இதுதான் இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோராகும். அதன்பின் சச்சின் தெண்டுல்கர் - விரேந்தர் சேவாக் ஜோடி 3916 ரன்கள் குவித்து 2-வது இடத்தில் இருந்தது.



    சமீப காலமாக ரோகித் சர்மா - தவான் தொடக்க வீரர்களாக களம் இறங்கி விளையாடி வருகிறார்கள். இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பையில் நடைபெற்று வருகிறது.



    ரோகித் சர்மா - தவான் ஜோடி இந்த போட்டிக்கு முன் 3916 ரன்கள் அடித்திருந்தது. முதல் ஓவரை ரோச் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை ரோகித் சர்மா பவுண்டரிக்கு விரட்டினார். இதன்மூலம் தவான் - ரோகித் சர்மா ஜோடி 3920 ரன்களை எட்டு சச்சின் - சேவாக் ஜோடி அடித்த ரன்களை முந்தி 2-வது இடத்தை பிடித்துள்ளது.

    கவுதம் காம்பீர் - சேவாக் ஜோடி 1870 ரன்களுடன் 4-வது இடத்திலும், கவாஸ்கர் ஸ்ரீகாந்த் ஜோடி1680 ரன்களுடன் 5-வது இடத்திலும் உள்ளது.
    ×