search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தவான்"

    விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் 2-வது ஒரு நாள் போட்டியில் ரோகித் சர்மா, தவான் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். விராட் கோலி, அம்பதி ராயுடு விளையாடி வருகிறார்கள். #INDvWI
    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி துறைமுக நகரான விசாகப்பட்டினத்தில் உள்ள ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி மைதானத்தில் பகல்- இரவு ஆட்டமாக நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார்.

    இந்திய அணியில் கலீல் அஹமது நீக்கப்பட்டு குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டார். ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார். தவான் தொடக்கத்தில் இருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    முதல் போட்டியில் சதம் அடித்த ரோகித் சர்மா, இந்த ஆட்டத்தில் சொற்ப ரன்களில் வெளியேறினார். 4-வது ஓவரை ரோச் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் நான்கு ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.



    அடுத்து தவான் உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்தியா முதல் 8 ஓவரில் 39 ரன்கள் எடுத்திருந்தது. 9-வது ஓவரை நர்ஸ் வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தில் தவான் எல்பிடபிள்யூ மூலம் வெளியேறினார். தவான் 30 பந்தில் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் 29 ரன்கள் சேர்த்தார்.

    3-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் அம்பதி ராயுடு ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 10.1 ஓவரில் 10 ரன்னைத் தொட்ட இந்தியா, 19.2 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது.

    25 ஓவர் முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்துள்ளது. 25-வது ஓவரின் கடைசி பந்தில் விராட் கோலி 56 பந்தில் அரைசதம் அடித்தார். அம்பதி ராயுடு 39 ரன்னுடன் களத்தில் உள்ளனர்.
    இங்கிலாந்து தொடரின் போது காயமடைந்த இஷாந்த் சர்மா, அஸ்வின் உடல் தகுதி பரிசோதனைக்கு பின்னர் மருத்துவ சான்றிதழ் அடிப்படையில் தேர்வு பெறுவார்கள். #INDvWI #IshantSharma #Ashwin #BCCI
    புதுடெல்லி:

    வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 5 ஒருநாள் ஆட்டம் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது.

    இந்தியா- வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் அக்டோபர் 4-ந்தேதி ராஜ்கோட்டில் தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் ஐதராபாத்தில் 12-ந்தேதி தொடங்குகிறது.

    இந்த ஆண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியை தேர்வு செய்ய எம்.எஸ்.கே. பிரசாத் தலைமையிலான தேர்வு குழு டெல்லியில் நேற்று கூடியது. அவருடன் தேவங் கார்வி மட்டுமே வந்து இருந்தார்.

    மற்ற தேர்வு குழு உறுப்பினர்களில் ஒருவரான சரண்தீப்சிங் துபாயில் உள்ளார். ஜதின் பரஞ்செ, கதன்கோடா ஆகிய இருவரும் விஜய் ஹசாரே போட்டியை பார்ப்பதற்காக வெவ்வேறு இடங்களுக்கு சென்றுள்ளனர். இந்த 3 தேர்வு குழு உறுப்பினர்களும் வராததால் தேர்வு குழு கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது.

    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது வேகப்பந்து வீரர் இஷாந்த்சர்மா, அஸ்வினுக்கு காயம் ஏற்பட்டது. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு அவர்கள் தேர்வாக உடல் தகுதி பரிசோதனை நடத்தப்படுகிறது.

    இருவருக்கும் வருகிற 29-ந்தேதி உடல் தகுதி சோதனை நடக்கிறது என்று இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.


    அஸ்வின் ஏற்கனவே காயத்துக்கு தேசிய கிரிக்கெட் அகாடமில் புனர்வு பெற்று வருகிறார். அவருடன் இஷாந்த்சர்மா இணைவார். தேசிய கிரிக்கெட் அகாடமியின் உடல் இயக்க நிபுணர் அளிக்கும் உடல் தகுதி அறிக்கை அடிப்படையில் இருவரது தேர்வு இருக்கும்.

    உள்ளூரில் வெஸ்ட் இண்டீசுடன் விளையாடிய பிறகு இந்திய அணி ஆஸ்திரேலியா செல்கிறது. அதை மனதில் கொண்டு 15 வீரர்கள் தேர்வு செய்ய தேர்வு குழு முடிவு செய்கிறது.

    இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் தவானின் பேட்டிங் ஏமாற்றம் அளிப்பதாக இருந்தது. இதனால் அவர் அணியில் இருந்து கழற்றிவிடப்படலாம் என்ற நிலை இருக்கிறது. #INDvWI #IshantSharma #Ashwin #BCCI #TeamIndia
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் ‘சூப்பர் 4’ சுற்றில் பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணிக்கு விராட் கோலி பாராட்டு தெரிவித்துள்ளார். #INDvPAK
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் ‘சூப்பர் 4’ சுற்றில் நேற்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 237 ரன்கள் சேர்த்தது. பின்னர் 238 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது.

    ஷிகர் தவான், ரோகித் சர்மா ஆகியோரின் சதத்தால் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு ஓய்வில் இருக்கும் இந்திய அணி கேப்டன் விராட் கோலி பாராட்டு தெரிவித்துள்ளார்.

    அதேபோல் சதம் அடித்த ரோகித் சர்மா, ஷிகர் தவானுக்கு சச்சின் தெண்டுல்கரும் பாராட்டு தெரிவித்துள்ளார்.
    இந்திய பேட்ஸ்மேன்கள் நிலையான பேட்டிங்கை வெளிப்படுத்தாததுதான் தொடரை இழக்க காரணம் என்று சேவாக் தெரிவித்துள்ளார். #Sehwag
    இங்கிலாந்து- இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 1-4 இழந்தது. லார்ட்ஸ் டெஸ்டை தவிர மற்ற போட்டிகளில் கடுமையாக போராடிய போதிலும் வெற்றியை பறிக்க முடியவில்லை.

    இந்திய அணி கேப்ட்ன் விராட் கோலி மட்டுமே தொடர் முழுவதும் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மற்ற வீரர்கள் பெரிய அளவில் சோபிக்கவில்லை. தவான் 162 ரன்களும், கேஎல் ராகுல் 299 ரன்களும், ரகானே இரண்டு அரைசதத்துடன் 257 ரன்களும், புஜாரா ஒரு சதத்துடன் 278 ரன்களும் அடித்தனர்.



    இவர்கள் அனைவரும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதுவே தோல்விக்கு முதன்மையான காரணம் என்று முன்னாள் தொடக்க வீரரும் அதிரடி பேட்ஸ்மேனும் ஆன சேவாக் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சேவாக் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘இங்கிலாந்து தொடரை 4-1 என கைப்பற்றியதற்கு வாழ்த்துக்கள். இந்தியா சிறப்பாக விளையாடியது. ஆனால், நிலையான ஆட்டத்தை பேட்டிங்கில் வெளிப்படுத்தவில்லை. ரிஷப் பந்த், லோகுஷ் ராகுல் கடைசி டெஸ்டின் கடைசி நாள் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடினார்.



    இந்த தொடர் முழுவதும் விராட் கோலி, பந்து வீச்சாளர்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினா்ரகள். வெளிநாட்டு தொடரில் சிறப்பாக விளையாட இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும்’’ என்று பதவிட்டுள்ளார்.
    லார்ட்ஸ் டெஸ்டில் இந்தியாவிற்கு எதிராக இங்கிலாந்து டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு தேர்வு செய்துள்ளது. புஜாரா, குல்தீப் யாதவ் இடம் பிடித்துள்ளனர். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    2-வது டெஸ்ட் லார்ட்ஸில் நேற்று தொடங்குவதாக இருந்தது. முதல் நாள் ஆட்டம் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்டது. இதனால் டாஸ் கூட சுண்டப்படாமல் முதல்நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.

    2-வது நாள் இன்று உள்ளூர் நேரப்படி சரியான 11 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தார்.



    இந்திய அணியில் ஷிகர் தவான், உமேஷ் யாதவ் ஆகியோர் நீக்கப்பட்டு புஜாரா, குல்தீப் யாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்து அணியில் போப் அறிமுகமாகியுள்ளார். பென் ஸ்டோக்ஸிற்குப் பதிலாக கிறிஸ் வோக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.
    இங்கிலாந்து தொடரில் மோசமான தொடக்கத்தை கொடுத்ததில் இருந்து வலிமையாக திரும்பி வருவேன் என்று ஷிகர் தவான் நம்பிக்கை தெரிவித்துள்ளார். #Dhawan #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. தொடக்க வீரர் ஷிகர் தவானின் ஆட்டம் மிகவும் மோசமாக இருந்தது.

    டெஸ்ட் தொடருக்கு முன்பான பயிற்சி ஆட்டத்தில் இரு இன்னிங்சிலும் டக்அவுட் ஆனார். முதல் டெஸ்டில் இரு இன்னிங்சிலும் சேர்த்து 39 ரன்களே சேர்த்தார். அத்துடன் பீல்டிங் செய்தபோது ஸ்லிப் திசையில் கேட்ச்களை கோட்டைவிட்டார்.



    இந்நிலையில் 2-வது போட்டியில் வலிமையாக திரும்பி வருவேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தவான் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் நாம் தோல்வியடைந்ததால் கவலையும் ஏமாற்றமும் அடைந்திருப்பீர்கள்.

    என்னுடைய தனிப்பட்ட செயல்பாட்டில் நான் தவறுகள் செய்துள்ளேன். அடுத்த போட்டியில் இதில் இருந்து வலிமையாக திரும்பி வருவேன். அன்பும் ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும் நன்றி’’ என்று பதிவிட்டுள்ளார்.
    எட்ஜ்பாஸ்டன் டெஸ்டின் 2-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்துள்ளது. #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. நேற்றைய முதல் நாளில் 9 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் எடுத்திருந்தது. இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியதும் மேலும் இரண்டு ரன்கள் எடுத்த நிலையில் ஆல்அவுட் ஆனது. அஸ்வின் நான்கு விக்கெட்டுக்களும், முகமது ஷமி 3 விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. தவான் மற்றும் முரளி விஜய் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் இந்தியா 11.1 ஓவரில் 50 ரன்னைத் தொட்டது. 14-வது ஓவரை சாம் குர்ரான் வீசினார். இந்த ஓவரில் இந்தியாவிற்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. 4-வது பந்தில் முரளி விஜய் எல்பிடபிள்யூ மூலம் வெளியேறினார். அடுத்து வந்த லோகேஷ் ராகுல் 6-வது பந்தில் க்ளீன் போல்டானார்.



    இந்த அதிர்ச்சியில் இருந்து இந்திய ரசிகர்கள் மீள்வதற்குள் சாம் குர்ரான் வீசிய 16-வது ஓவரின் ஐந்தாவது பந்தில் தவான் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 8 ரன்னுக்குள் 3 விக்கெட்டை இழந்தது. 20 வயதே ஆன சாம் குர்ரான் மூன்று விக்கெட்டுக்களையும் வீழ்த்தி இந்தியாவிற்கு அதிர்ச்சியூட்டினார. பின்னர் 4-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் ரகானே ஜோடி சேர்ந்தார்.



    இந்த ஜோடி 2-வது நாள் மதிய உணவு இடைவேளை முடியும் வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது. இந்தியா மதிய உணவு இடைவேளை வரை 21 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 9 ரன்னுடனும், ரகானே 8 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
    இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் புஜாராவிற்கு இடமில்லை. #ENGvIND
    இங்கிலாந்து -  இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டனில் இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்ததுள்ளது.

    இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    அலைஸ்டர் குக், ஜென்னிங்ஸ், ஜோ ரூட், மலன், பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், பட்லர், சாம் குர்ரான், அடில் ரஸித், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன்.

    இந்திய அணியில் புஜாரா நீக்கப்பட்டு லோகேஷ் ராகுல் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    முரளி விஜய், தவான், லோகேஷ் ராகுல், விராட் கோலி, ரகானே, ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, முகமது ஷமி, அஸ்வின்.
    எசக்ஸ் அணிக்கெதிரான 2-வது இன்னிங்சிலும் இந்திய தொடக்க வீரர் ஷிகர் தவான் டக்அவுட் ஆகி ஏமாற்றம் அளித்துள்ளார். #ENGvIND #Dhawan
    இந்தியா - எசக்ஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டம் செல்ம்ஸ்போர்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 395 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. முரளி விஜய், விராட் கோலி, கேஎல் ராகுல், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா ஆகியோர் அரைசதம் அடித்தார்கள்.

    அதேவேளையில் ஷிகர் தவான் டக்அவுட் ஆகியும், புஜாரா 1 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்கள்.

    பின்னர் எசக்ஸ் அணி முதல இன்னிங்சை தொடங்கியது உமேஷ் யாதவ் (4), இசாந்த் ஷர்மா (3) ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சால் எசக்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 359 ரன்கள் சேர்த்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.



    பின்னர் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக லோகேஷ் ராகுல், தவான் ஆகியோர் களம் இறங்கினார்கள். முதல் இன்னிங்சில் முதல் பந்திலேயே டக்அவுட் ஆன தவான், இந்த இன்னிங்சில் 3 பந்துகள் சந்தித்து ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார்.

    இரண்டு இன்னிங்சிலும் ஒரு ரன்கூட அடிக்க முடியாமல் தவான் ஏமாற்றம் அளித்துள்ளார். புஜாரா 23 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.
    விராட் கோலி, தவான், டோனியின் ஆட்டத்தால் இங்கிலாந்துக்கு 257 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா. #ENGvIND #ViratKohli #MSDhoni #Dhawan
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் மோர்கன் பந்து வீச்சு தேர்வு செய்தார். இந்திய அணியில் லோகேஷ் ராகுல் நீக்கப்பட்டு தினேஷ் கார்த்திக் இடம்பிடித்துள்ளார். அதேபோல் உமேஷ் யாதவ் நீக்கப்பட்டு சர்துல் தாகூர் சேர்க்கப்பட்டுள்ளார். சித்தார்த் கவுல் நீக்கப்பட்டு புவனேஸ்வர் குமார் சேர்க்கப்பட்டுள்ளார்.

    ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் இரண்டு போட்டிகளை காட்டிலும் இந்த போட்டிக்கான ஆடுகளம் பந்து வீச்சாளர்களுக்கு அதிக அளவில் ஒத்துழைத்தது.



    இதனால் ரோகித் சர்மா - தவான் ஜோடி ரன்கள் குவிக்க திணறியது. முதல் ஐந்து ஓவரில் 12 ரன்கள் மட்டுமே எடுத்தது. 6-வது ஓவரை வில்லே வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தில் ரோகித் சர்மா ஆட்டமிழந்தார். அவர் 18 பந்தில் 2 ரன்கள் மட்டுமே அடித்தார்.

    அடுத்து தவான் உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாகவும், அதே நேரத்தில் சீரான வேகத்தில் ரன்களும் குவித்து வந்தனர். பவர்பிளே ஆன முதல் 10 ஓவரில் இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 32 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

    13-வது ஓவரை பிளங்கெட் வீசினார். இந்த ஓவரில் தவான் ஹாட்ரிக் பவுண்டரி அடித்து அசத்தினார். 17-வது ஓவரை பென் ஸ்டோக்ஸ் வீசினார். இந்த ஓவரில் விராட் கோலி இரண்டு பவுண்டரி விரட்டினார். 18-வது ஓவரை மொயீன் அலி வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தில் தவான் துரதிருஷ்டவசமாக ரன்அவுட் ஆனார். அவர் 49 பந்தில் 44 ரன்கள் அடித்தார்.



    அடுத்து விராட் கோலியுடன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார். 19.5 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. 24-வது ஓவரை பிளங்கெட் வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டி அரைசதம் அடித்தார் விராட் கோலி. 25-வது ஓவரை ரஷித் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் கார்த்திக் போல்டானார். இவர் 22 பந்தில் 21 ரன்கள் சேர்த்தார்.

    4-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் எம்எஸ் டோனி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நம்பிக்கை அளிக்கும் வகையில் விளையாடினார்கள். ஆனால் 31-வது ஓவரின் முதல் பந்தில் விராட் கோலி போல்டானார். அவர் 72 பந்தில் 8 பவுண்டரியுடன் 71 ரன்கள் சேர்த்தார். அப்போது இந்தியா 30.1 ஓவரில் 156 ரன்கள் சேர்த்திருந்தது.

    அடுத்து வந்த ரெய்னா இந்த ஓவரின் கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஓரே ஓவரில் இரண்டு விக்கெட்டுக்களை இழந்த இந்தியா, அதன்பின் மீள முடியவில்லை. ஹர்திக் பாண்டியா தன் பங்கிற்கு 21 ரன்களும், டோனி 66 பந்தில் 42 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.



    புவனேஸ்வர் குமார் (21), சர்துல் தாகூர் (13 பந்தில் 22 ரன்கள்) ஓரவிற்கு விளையாட இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுக் இழப்பிற்கு 256 ரன்கள் சேர்த்தது. இதனால் இங்கிலாந்து அணிக்கு 257 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா. இங்கிலாந்து அணி சார்பில் ரஷித் 49 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
    இங்கிலாந்திற்கு எதிரான இன்றைய போட்டியில் முதல் 10 ஓவரில் இந்தியா 32 ரன்கள் மட்டுமே எடுத்து மிகவும் குறைந்த ஸ்கோரை பதிவு செய்துள்ளது. #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி இந்தியா முதலில் களம் இறங்கியது. ரோகித் சர்மா, தவான் வழக்கமான அதிரடிக்குப் பதிலாக நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் இந்தியாவின் ஸ்கோர் மந்தமான நிலையில் உயர்ந்தது.

    இந்தியாவின் 5.4 ஓவரில் 13 ரன்னாக இருக்கும்போது ரோகித் சர்மா ஆட்டமிழந்தார். அவர் 18 பந்துகளை சந்தித்து 2 ரன்களே எடுத்தார். அடுத்து தவான் உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார்.



    இந்தியா முதல் 10 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 32 ரன்களே எடுத்தது. இதன்மூலம் கடந்த 2015 உலகக்கோப்பைக்குப் பிறகு தற்போதுதான் பவர் பிளேயில் மிகவும் குறைவான ரன்களை சேர்த்துள்ளது.

    இதற்கு முன் தரம்சாலாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஆட்டத்தில் 2 விக்கெட் இழப்பிற்கு 42 ரன்கள் எடுத்ததே குறைவான ஸ்கோராக இருந்தது.
    அயர்லாந்திற்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்தியா பேட்டிங் செய்கிறது. டோனி, புவி, பும்ரா, தவானுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. #IREvIND
    இந்தியா - அயர்லாந்து இடையிலான 2-வது மற்றும் கடைசி டி20 போட்டி டப்ளினில் இன்றிரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் அயர்லாந்து கேப்டன் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்ய இருக்கிறது. முதல் போட்டியில் களம் இறங்கிய எம்எஸ் டோனி, புவனேஸ்வர் குமார், தவான், பும்ரா ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்குப் பதிலாக கேஎல் ராகுல், தினேஷ் கார்த்திக், உமேஷ் யாதவ் மற்றும் சித்தார்த் கவுல் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.



    இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. கேஎல் ராகுல், 2. ரோகித் சர்மா, 3. விராட் கோலி, 4. சுரேஷ் ரெய்னா, 5. தினேஷ் கார்த்திக், 6. மணிஷ் பாண்டே, 7. உமேஷ் யாதவ், 8. குல்தீப் யாதவ், 9. சாஹல், 10. சித்தார்த் கவுல், 11. ஹர்திக் பாண்டியா.
    ×