என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 110124
நீங்கள் தேடியது "காலமானார்"
திமுக முன்னாள் எம்பி வசந்தி ஸ்டான்லி உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் காலமானார். #VasanthiStanley #RIPVasanthiStanley #DMK
திராவிட முன்னேற்ற கழகம் கட்சியிலிருந்து இந்திய பாராளுமன்றத்தின் மேல் சபையான ராஜ்ய சபாவில் தமிழகத்தின் பிரதிநிதியாக தோ்வு செய்யப்பட்டவர் வசந்தி ஸ்டான்லி (56).
2008 முதல் 2014 வரை திமுக சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக இருந்த வசந்தி ஸ்டான்லி, பத்திரிகையாளராகவும், பல்வேறு நூல்களையும் எழுதியுள்ளார்.
உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில், வசந்தி ஸ்டான்லியின் உடல் சென்னை லாயிட்ஸ் காலனி வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று மாலை 6 மணி வரை வைக்கப்பட உள்ளது. அதன்பின்னர் பாளையங்கோட்டை எடுத்துச் செல்லப்பட்டு நாளை இறுதிச் சடங்குகள் நடைபெறும் என உறவினர்கள் தெரிவித்தனர். #VasanthiStanley #RIPVasanthiStanley #DMK
நீண்டகாலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த, முன்னாள் ராணுவ மந்திரி ஜார்ஜ் பெர்னாண்டஸ் டெல்லியில் இன்று காலமானார். #GeorgeFernandes #RIPGeorgeFernandes
புதுடெல்லி:
வி.பி.சிங் ஆட்சிக்காலத்தில் ரெயில்வே மந்திரியாக ஜார்ஜ் பெர்னாண்டஸ் பதவி வகித்தார். மொரார்ஜி தேசாய் அமைச்சரவையிலும் அமைச்சராக பணியாற்றினார். கடைசியாக 2009 ஆகஸ்ட் முதல் 2010 ஜூலை மாதம் வரை மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றினார்.
அதன்பின்னர் முதுமைசார்ந்த உடல்நலக்குறைவு காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கிய ஜார்ஜ் பெர்னாண்டஸ் (வயது 88), நீண்டகாலமாக மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், டெல்லியில் இன்று ஜார்ஜ் பெர்னாண்டஸ் காலமானார். #GeorgeFernandes #RIPGeorgeFernandes
கர்நாடக மாநிலம் மங்களூரில் பிறந்தவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ். சமதா கட்சியின் நிறுவனரான இவர் வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்புத்துறை மந்திரியாக பணியாற்றியவர். அவரது பதவிக்காலத்தில்தான் கார்கில் போர் நடந்தது. போக்ரான் அணு ஆயுத சோதனை நடத்த வேண்டும் என்பதை வெளிப்படையாக ஆதரித்தவர்.
வி.பி.சிங் ஆட்சிக்காலத்தில் ரெயில்வே மந்திரியாக ஜார்ஜ் பெர்னாண்டஸ் பதவி வகித்தார். மொரார்ஜி தேசாய் அமைச்சரவையிலும் அமைச்சராக பணியாற்றினார். கடைசியாக 2009 ஆகஸ்ட் முதல் 2010 ஜூலை மாதம் வரை மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றினார்.
அதன்பின்னர் முதுமைசார்ந்த உடல்நலக்குறைவு காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கிய ஜார்ஜ் பெர்னாண்டஸ் (வயது 88), நீண்டகாலமாக மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், டெல்லியில் இன்று ஜார்ஜ் பெர்னாண்டஸ் காலமானார். #GeorgeFernandes #RIPGeorgeFernandes
தருமபுரி மாவட்டம் அரூர் முன்னாள் எம்எல்ஏ ராஜமாணிக்கம் உடல்நலக்குறைவால் காலமானார். #ADMK #FormerMLARajamanickam
அரூர்:
தர்மபுரி மாவட்டம், அரூர் தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ராஜமாணிக்கம் இன்று அதிகாலை காலமானார். இவர் 1984 ஆண்டு முதல் 1987 ஆண்டு வரை அரூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா, ஜானகி அம்மாள் ஆகியோருக்கும் ராஜமாணிக்கம் நெருக்கமானவர். அன்னாரது இறுதி சடங்கு இன்று மாலை 3 மணிக்கு மேல் அம்பேத்கார் நகரில் நடைபெற உள்ளது.
இவருக்கு மனைவி தவமணி, மகன்கள் ராஜா, முருகன், சம்பத், மருமகள்கள் ஜெயந்தி, சரஸ்வதி, நாகலட்சுமி ஆகியோர் உள்ளனர். அவரது உடலுக்கு உறவினர்கள் அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்கள், அரசு அலுவலர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். #ADMK #FormerMLARajamanickam

இவரது மகன் ஆர்.ஆர். முருகன் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. ஆவார். மேலும் அவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாநில எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணை செயலாளராக இருக்கிறார்.
முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா, ஜானகி அம்மாள் ஆகியோருக்கும் ராஜமாணிக்கம் நெருக்கமானவர். அன்னாரது இறுதி சடங்கு இன்று மாலை 3 மணிக்கு மேல் அம்பேத்கார் நகரில் நடைபெற உள்ளது.
இவருக்கு மனைவி தவமணி, மகன்கள் ராஜா, முருகன், சம்பத், மருமகள்கள் ஜெயந்தி, சரஸ்வதி, நாகலட்சுமி ஆகியோர் உள்ளனர். அவரது உடலுக்கு உறவினர்கள் அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்கள், அரசு அலுவலர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். #ADMK #FormerMLARajamanickam
சென்னை தேனாம்பேட்டை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நெல்ஜெயராமன் இன்று காலை 5.10 மணிக்கு காலமானார். #NelJayaraman #PassedAway #cancer #ApolloHospital
திருத்துறைப்பூண்டியை அடுத்த கட்டிமேடு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன். இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வாரின் மாணவர்களில் ஒருவர் நெல் ஜெயராமன். இவர், 169 பாரம்பரிய நெல் வகைகளை மீட்ட பெருமைக்கு உரியவர். பாரம்பரிய நெல் விதைகளை அழிவிலிருத்து காத்த அவர், புற்று நோயால் பாதிக்கப்பட்டுவந்தாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
சாதாரண கூலித் தொழிலாளியாக இருந்த அவர் பின்னர் நெல் வகைகளைக் காப்பாற்ற களம் இறங்கினார். ஆண்டுதோறும் நெல் திருவிழா நடத்தி பாரம்பரிய நெல்வகைகளை பிரபலப்படுத்தியிருந்தார். இவர் கடந்த 2 ஆண்டுகளாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தநிலையில் இன்று காலை காலமானார்.
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நெல் ஜெயராமனை பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வந்தனர்.
அவருக்கு பல்வேறு நாடுகளில் உள்ள தமிழர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், விவசாயிகள், திரைப்பட கலைஞர்கள் என பல்வேறு தரப்பினர் நிதியுதவி செய்தனர்.
முன்னதாக முதலமைச்சர் ஏற்கனவே அறிவித்திருந்த 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அமைச்சர் காமராஜ், அவரது குடும்பத்தாரிடம் வழங்கினார்.
இந்நிலையில் சென்னை அப்போலோ மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நெல்ஜெயராமன் இறந்ததை தொடர்ந்து பல அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். #NelJayaraman #PassedAway #cancer

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ்(94) உடல் நலக்குறைவால் இன்று காலமானார். #FormerUSPresident #GeorgeHWBush
வாஷிங்டன்:
பராக் ஒபாமாவுக்கு முன்னர் அமெரிக்காவை ஆண்ட முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ. புஷ்ஷின் தந்தையும் அந்நாட்டின் மற்றொரு அதிபருமான ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் (ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ. புஷ்) அந்நாட்டின் அதிபராக கடந்த 1989 முதல் 1993-ம் ஆண்டுவரை பொறுப்பு வகித்தவர். அதற்கு முன்னதாக 1981 முதல் 1989 வரை 8 ஆண்டுகாலம் துணை அதிபராகவும் இவர் இருந்துள்ளார்.
இந்நிலையில், வயோதிகம் சார்ந்த காரணங்களால் வீட்டில் ஓய்வெடுத்துவந்த ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ. புஷ்(94) நிமோனியா எனப்படும் கபவாதம் சார்ந்த பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருந்தார்.
கடந்த ஆண்டு கடுமையான உடல்நலக் குறைவால் ஹூஸ்டன் நகரில் உள்ள மெத்தடிஸ்ட் மருத்துவமனையில் சுமார் 15 நாட்கள் சிகிச்சைபெற்ற அவர் ஓரளவுக்கு குணமடைந்து வீடி திரும்பினார்.
இந்நிலையில், முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் இன்று காலமானதாக அவரது செய்தி தொடர்பாளர் அறிவித்துள்ளார். அவரது இறுதி சடங்குகள் தொடர்பான விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #FormerUSPresident #GeorgeHWBush

இவரது மகனான ஜார்ஜ் டபிள்யூ. புஷ், அந்நாட்டின் அதிபராக 2001 முதல் 2008-ம் ஆண்டுவரை இருமுறை அந்நாட்டின் அதிபராக பதவி வகித்துள்ளார்.
தாஜ்மகாலில் மனைவி பார்பராவுடன் ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ. புஷ்
இந்நிலையில், வயோதிகம் சார்ந்த காரணங்களால் வீட்டில் ஓய்வெடுத்துவந்த ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ. புஷ்(94) நிமோனியா எனப்படும் கபவாதம் சார்ந்த பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருந்தார்.
கடந்த ஆண்டு கடுமையான உடல்நலக் குறைவால் ஹூஸ்டன் நகரில் உள்ள மெத்தடிஸ்ட் மருத்துவமனையில் சுமார் 15 நாட்கள் சிகிச்சைபெற்ற அவர் ஓரளவுக்கு குணமடைந்து வீடி திரும்பினார்.
இந்நிலையில், முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் இன்று காலமானதாக அவரது செய்தி தொடர்பாளர் அறிவித்துள்ளார். அவரது இறுதி சடங்குகள் தொடர்பான விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #FormerUSPresident #GeorgeHWBush
முன்னாள் மத்திய மந்திரியும் கர்நாடக மாநில மூத்த காங்கிரஸ் தலைவருமான ஜாபர் ஷரிப் உயிர் போகப்போவதை முன்கூட்டியே சொன்ன சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. #FormerRailwayminister #CKJafferSharief
பெங்களூரு:
முன்னாள் மத்திய மந்திரியும் கர்நாடக மாநில மூத்த காங்கிரஸ் தலைவருமான ஜாபர் ஷரிப் நேற்று மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.
85 வயதான அவருக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. சமீப ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டு தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார்.
கடந்த 23-ந்தேதி அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் பெங்களூருவில் உள்ள போர்டிஸ் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அதன்பிறகு உடல்நலம் சற்று தேறியது.
இதயத்தில் உள்ள கோளாறை சரி செய்வதற்காக நேற்று ஆபரேஷன் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக நேற்று மதியம் அவர் இருந்த அறையில் இருந்து ஸ்டிரெச்சரில் ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்து சென்றனர்.
அப்போது தனது பேரன் அப்துல் வகாப் ஷெரீப்பிடம் நான் உயிர் பிழைக்கமாட்டேன். நான் மரணமடைய போகிறேன் என்று கூறினார். பின்னர் ஆபரேஷன் தியேட்டருக்குள் கொண்டு சென்று ஆபரேஷன் டேபிளில் படுக்க வைத்தனர். அப்போது மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.
நான் இறந்துவிடுவேன் என்று சொன்ன சில நிமிடங்களில் அவர் மரணம் அடைந்தது குறிப்பிடத்தக்கது. அவர் உயிர் போகப் போவதை முன்கூட்டியே தெரிந்திருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஜாபர் ஷரிப்பின் உடல் இன்று பொதுமக்கள் அஞ்சலிக்கு பிறகு இன்று முஸ்லிம் மத சம்பிரதாயப்படி அக்கம் செய்யப்பட்டது.
ஜாபர் ஷரிப் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரசில் செல்வாக்கு பெற்ற நபராக திகழ்ந்தார். இந்திராகாந்தியின் தீவிர விசுவாசியான அவர் இந்திராவின் ஆதரவினால் அரசியலில் பல்வேறு நிலைக்கு உயர்ந்தார்.
மத்திய மந்திரி பதவியும் வழங்கப்பட்டது.
அவர் ரெயில்வே மந்திரியாக இருந்தபோது, பல வளர்ச்சி திட்டங்களை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது. #FormerRailwayminister #CKJafferSharief

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ரெயில்வே துறை முன்னாள் மந்திரியுமான ஜாபர் ஷரிப்(85) பெங்களூரு நகரில் இன்று காலமானார். #FormerRailwayminister #CKJafferSharief
பெங்களூரு:
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் முக்கிய தலைவர்களில் ஒருவர் ஜாபர் ஷரிப். அம்மாநில காங்கிரஸ் அமைப்பில் பல்வேறு பொறுப்புகளை வகித்த அவர், 1991-95 ஆண்டுகளுக்கிடையில் பிரதமர் நரசிம்மராவ் தலைமையிலான மத்திய அரசில் ரெயில்வே துறை மந்திரியாக பதவி வகித்துள்ளார்.
நிஜலிங்கப்பா தலைமையிலான காங்கிரசில் இருந்து இந்திரா காந்தி பிரிந்து இந்திரா காங்கிரஸ் என்ற தனிக்கட்சியை தொடங்கியபோது கர்நாடக மாநிலத்தில் மட்டுமின்றி அகில இந்திய அளவிலும் இந்திரா காந்தியை ஆதரித்த தலைவர்களில் முக்கியமானவராகவும் ஜாபர் ஷரிப் இருந்தார்.

இவர் இந்த இலாகாவின் மந்திரியாக இருந்தபோதுதான் நாட்டிலுள்ள பல்வேறு ரெயில்வே வழித்தடங்கள் அகலப்பாதைகளாக மாற்றப்பட்டன. இதன் மூலம் நாட்டுக்கு ஏராளமான பணத்தை மிச்சப்படுத்தியதுடன், ரெயில்வே துறையின் வருமானமும் அதிகரித்தது.
நிஜலிங்கப்பா தலைமையிலான காங்கிரசில் இருந்து இந்திரா காந்தி பிரிந்து இந்திரா காங்கிரஸ் என்ற தனிக்கட்சியை தொடங்கியபோது கர்நாடக மாநிலத்தில் மட்டுமின்றி அகில இந்திய அளவிலும் இந்திரா காந்தியை ஆதரித்த தலைவர்களில் முக்கியமானவராகவும் ஜாபர் ஷரிப் இருந்தார்.
இந்நிலையில், சமீபகாலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த ஜாபர் ஷரிப், கடந்த வெள்ளிக்கிழமை ‘ஜும்மா’ தொழுகை முடிந்து காரில் ஏறச்சென்றபோது மயங்கி விழுந்தார். இதைதொடர்ந்து, பெங்களூரு நகரில் உள்ள தனியார் மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி தனது 85-வது வயதில் இன்று காலமானார்.
ஜாபர் ஷரிப் மறைவிற்கு காங்கிரஸ் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #FormerRailwayminister #CKJafferSharief
கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பி ஷானவாஸ் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் இரங்கல் தெரிவித்துள்ளனர். #WayanadMP #ShanavasMP #KeralaCongress
சென்னை:
கேரளா காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவரும் வயநாடு மக்களவை தொகுதி எம்.பி.யுமான எம்.ஐ ஷானவாஸ் (வயது 67) உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 2-ம் தேதி அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன்பின்னர் அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
எம்பி ஷானவாஸ் மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன், மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான உம்மன் சாண்டி, எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
வயநாடு மக்களவைத் தொகுதியில் இருந்து இரண்டு முறை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஷானவாஸ். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். #WayanadMP #ShanavasMP #KeralaCongress

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை ஷானவாஸ் உயிரிழந்தார். அவரது உடல் இன்று பிற்பகல் கொச்சிக்கு எடுத்துச் செல்லப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எம்பி ஷானவாஸ் மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன், மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான உம்மன் சாண்டி, எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
வயநாடு மக்களவைத் தொகுதியில் இருந்து இரண்டு முறை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஷானவாஸ். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். #WayanadMP #ShanavasMP #KeralaCongress
உடல்நலக்குறைவால் பெங்களூரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மத்திய அமைச்சர் அனந்தகுமார் காலமானார். #UnionMinister #Anandakumar
பெங்களூரு:
மத்திய பா.ஜனதா அரசில் ரசாயனம் மற்றும் உரம், நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரியாக இருந்து வருபவர் அனந்தகுமார். வயது 59. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவர் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பெங்களூரு தெற்கு தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அனந்தகுமார் புற்றுநோயால் அவதிப்பட்டார். அமெரிக்காவில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற பின்னர் உடல்நலம் சீரானது.
இந்த நிலையில் மத்திய மந்திரி அனந்தகுமாருக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவர் புற்றுநோய் காரணமாக அவதிப்படுவதாக தெரிகிறது.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் அனந்தகுமார் அதிகாலை 2 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #UnionMinister #Anandakumar

நோபல் பரிசு பெற்ற அமெரிக்காவை சேர்ந்த பிரபல இயற்பியல் விஞ்ஞானி லியோன் லெடர்மேன் காலமானார். #GodParticle #Nobel #LeonLederman
வாஷிங்டன்:
அமெரிக்காவை சேர்ந்த பிரபலமான இயற்பியல் விஞ்ஞானி லியோன் லெடர்மேன் நேற்று காலமானார். அவருக்கு வயது 96. இடாஹோ மாகாணத்தில் ரெக்ஸ்பர்க் நகரில் உள்ள ஆஸ்பத்திரியில் அவரது உயிர் பிரிந்தது. அவர் ‘முவான் நியுட்ரினோ’ கண்டுபிடிப்புக்காக, வேறு 2 விஞ்ஞானிகளுடன் இணைந்து 1988-ம் ஆண்டு நோபல் பரிசு பெற்றார்.
லியோன் லெடர்மேனுக்கு மனைவியும், 3 பிள்ளைகளும் உள்ளனர். #GodParticle #Nobel #LeonLederman

கர்நாடக மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை முன்னாள் மந்திரி விமலாபாய் தேஷ்முக்(70) இன்று காலமானார். #VimalabhaiDeshmukhdead
பெங்களூரு:
கர்நாடக மாநில எம்.எல்.ஏ.வாக மூன்றுமுறை பதவி வகித்தவர் ஜே.எஸ். தேஷ்முக். இவரது மனைவி விமலாபாய் தேஷ்முக் 1994-ம் ஆண்டு கர்நாடக அந்நாள் முதல் மந்திரி நாடகவுடாவை எதிர்த்து ஜனதாதளம் கட்சி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
பின்னர், ஜே.ஹெச். பட்டேல் தலைமையிலான மாநில மந்திரிசபையில் குழந்தைகள் நலத்துறை மந்திரியாக விமலாபாய் நியமிக்கப்பட்டார்.
சமீபகாலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த விமலாபாய் தேஷ்முக்(70) விஜயபுரா (பிஜப்பூர்) மாவட்டத்தில் உள்ள இல்லத்தில் இன்று காலமானார். அவரது இறுதி சடங்குகள் நாளை நடைபெறும் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ள நிலையில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #VimalabhaiDeshmukhdead
கர்நாடக மாநில எம்.எல்.ஏ.வாக மூன்றுமுறை பதவி வகித்தவர் ஜே.எஸ். தேஷ்முக். இவரது மனைவி விமலாபாய் தேஷ்முக் 1994-ம் ஆண்டு கர்நாடக அந்நாள் முதல் மந்திரி நாடகவுடாவை எதிர்த்து ஜனதாதளம் கட்சி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
பின்னர், ஜே.ஹெச். பட்டேல் தலைமையிலான மாநில மந்திரிசபையில் குழந்தைகள் நலத்துறை மந்திரியாக விமலாபாய் நியமிக்கப்பட்டார்.
பா.ஜ.க.வில் இருந்து தனியாக பிரிந்த கர்நாடக ஜனதா பக்ஷா கட்சி வேட்பாளராக கடந்த 2012- சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
மகனை கொலை செய்ததாக கைதாகி சிறையில் இருந்த எழுத்தாளர் சவுபா(எ) சவுந்திரபாண்டியன் உடல் நலக்குறைவால் மதுரை அரசு மருத்துவமனையில் காலமானார். #WriterSoundarapandian
மதுரை:
மதுரை டோக்நகரைச் சேர்ந்தவர் எழுத்தாளர் சௌந்தரபாண்டியன் என்ற சவுபா(55). இவர், கடந்த மே மாதம் தனது மகன் விபினை (27) கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
இந்த நிலையில், சிறையில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சவுந்திரபாண்டியன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். #WriterSoundarapandian

×

X