என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மதுக்கரை"
கோவை:
கோவை மதுக்கரை அருகே உள்ள அறிவொளி நகரை சேர்ந்தவர் அபுதாகீர்(வயது 43). கஞ்சா வியாபாரி.
சம்பவத்தன்று இரவு இவர் குனியமுத்தூர் ரெயின்போ காலனி பகுதியில் மயங்கி கிடந்தார். அவரது வாயில் ரத்தக் காயம் இருந்தது. இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து குனியமுத்தூர் போலீசாருக்கு தகவல் தெரி வித்தனர்.
உடனடியாக போலீசார் விரைந்து வந்து அபுதாகீரை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அபுதாகீர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் அபுதாகீரை இடையர்பாளையத்தை சேர்ந்த அராத்நிசார், அனந்த், கோபி என்கிற கோபிநாத், சுகுணாபுரத்தை சேர்ந்த பாவா, முஜிபூர் ரகுமான், ஜமீல், முகமது ஹூசைன் (40) ஆகியோர் சேர்ந்து கஞ்சா விற்பனைக்கு பிரிப்பதற்கு ஏற்பட்ட தகராறில் அடித்து கொலை செய்தது தெரிய வந்தது.
இந்த கொலை வழக்கில் தொடர்புடைய தலைமறைவாக இருந்த கோபிநாத், முகமது ஹூசைன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் 2 பேரையும் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அராத் நிசார், அனந்த், பாவா, முஜிபூர் ரகுமான், ஜமீல் ஆகியோரை வலை வீசி தேடி வருகிறார்கள்.
கோவை:
மதுக்கரை வஞ்சியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் சார்லி (வயது 52). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அன்சியா நர்சாக பணியாற்றி வருகிறார்.
நேற்று புனித வெள்ளியையொட்டி சார்லி, தனது மனைவி, மகளுடன் ஆலயத்துக்கு சென்றார். பின்னர் மதியம் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 18 பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து அவர் மதுக்கரை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வீட்டை நன்கு நோட்ட மிட்டு, ஆட்கள் வெளியே செல்வதை கண்காணித்து கொள்ளையர்கள் கைவரிசை காட்டி உள்ளனர். அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடியவர்கள் யார்-யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுக்கரை அருகே உள்ள மயில்சாமி கோவில் வீதியை சேர்ந்தவர் கார்த்திக்குமார் (வயது 28). தனியார் நிறுவன ஊழியர். சம்பவத்தன்று இவர் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். இதனை அவரது மனைவி கண்டித்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் மனவேதனை அடைந்த கார்த்திக்குமார் மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்