search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 110454"

    ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பான தமிழக அரசு மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. #SupremeCourt #Sterlite
    புதுடெல்லி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்குமாறு தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்து உள்ளது.



    இந்த நிலையில் நேற்று தமிழக அரசு தரப்பில் அரசு வக்கீல் யோகேஷ் கன்னா சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வில் ஆஜராகி, தங்கள் தரப்பு மனுவை அவசர வழக்காக கருதி உடனடியாக விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று முறையிட்டார். இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், சுப்ரீம் கோர்ட்டு பதிவாளர் அலுவலகம் முறைப்படி பட்டியலிடும் போது இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவித்தனர். #SupremeCourt #Sterlite
    ஆலங்குளத்தில் மனைவியை சேர்த்து வைக்ககோரி மனு கொடுக்க வந்தவர் உறவினரை தாக்கியதால் அவரை போலீசார் கைது செய்தனர்.
    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே உள்ள மேலபட்டமுடையார் புரத்தை சேர்ந்த சங்கர பாண்டியன் (வயது38). இவரது மனைவி தங்க துரைச்சி. இவர் நர்சாக உள்ளார். இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது. 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன்- மனைவி இருவரும் கடந்த ஒரு ஆண்டாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

    இதனிடையே மனைவியை கணவருடன் சேர்த்து வைக்குமாறு சங்கர பாண்டியன் ஆலங்குளம் மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மனு கொடுக்க வந்தார். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் இதுபற்றி விசாரிக்க தங்க துரைச்சியை போலீசார் அழைத்தனர். அவர்கள் இருவரிடமும் போலீசார் விசாரித்து கொண்டிருந்தனர். 

    அப்போது வெளியில் தங்க துரைச்சியின் தாய் மாமன் வெங்குசாமி என்பவர் நின்று கொண்டிருந்தார். அவரை பார்த்ததும் சங்கர பாண்டியன் உன்னால் தான் என் குடும்பம் பிரிந்து விட்டது என கூறி தாக்கினாராம். இதுபற்றி வெங்குசாமி ஆலங்குளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து சங்கர பாண்டியனை கைது செய்தனர்.
    ஈரோடு அருகே மதுக்கடையை திறங்கள் அல்லது பஸ்சில் சென்று மதுகுடிக்க பஸ் பாஸ் கொடுங்கள் என்று கலெக்டரிடம் குடிமகன் மனு அளித்த சம்பவம் அதிகாரிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. #Drunkard
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த வெள்ளோட்டாம்பரப்பு பகுதியைச்சேர்ந்த கூலி தொழிலாளியான செங்கோட்டையன் ஈரோடு கலெக்டர் அலுவலகம் வந்து கலெக்டர் கதிரவனிடம் ஒரு மனு கொடுத்தார்.

    அந்த மனுவில் அவர் கூறி இருப்பதாவது:-

    கொடுமுடி ஒன்றியம் வெள்ளோட்டம் பரப்பு பேரூராட்சிக்கு உட்பட்ட வேப்பம்பாளையம் அருகே மதுபானக்கடை கட்டும் பணி நடந்து முடிந்துள்ளது இருப்பினும் இன்னும் அந்த பகுதியில் மது கடை திறக்கப்படவில்லை.

    நான் ஒரு கூலித்தொழிலாளி தினமும் மது அருந்தும் பழக்கம் உடையவன் தற்போது மதுகுடிக்க பத்து கிலோ மீட்டர் வரை சென்று மதுஅருந்தி வருகிறேன். இதனால் பஸ் செலவு அதிகமாகிறது. இருசக்கர வாகனத்தில் சென்றால் போலீசார் மடக்கி கேஸ் போடுகிறார்கள். எனவே எங்கள் பகுதியில் மதுபானக் கடையை திறக்க வேண்டும் இல்லை என்றால் எனக்கு பஸ்சில் சென்றுவர பஸ் பாஸ் வசதி செய்து கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.

    இந்த மனுவை பார்த்த அதிகாரிகள் ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்தனர்.  #Drunkard
    குட்கா ஊழல் வழக்கில் அதிகாரிகள் என்.கே.பாண்டியன், செந்தில்முருகன் ஆகியோர் மீண்டும் ஜாமீன் கோரி சி.பி.ஐ. கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். #Gutkhascam
    சென்னை:

    குட்கா ஊழல் தொடர்பாக குட்கா ஆலை உரிமையாளர் மாதவராவ், பங்குதாரர்கள் உமாசங்கர் குப்தா, சீனிவாசராவ், மத்திய கலால் துறை அதிகாரி என்.கே.பாண்டியன், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் செந்தில்முருகன், சிவக்குமார் ஆகியோரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். ஜாமீன் கோரிய அவர்கள் 6 பேரின் மனுவை சென்னை சி.பி.ஐ. கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

    இந்தநிலையில் அதிகாரிகள் என்.கே.பாண்டியன், செந்தில்முருகன் ஆகியோர் மீண்டும் ஜாமீன் கோரி சி.பி.ஐ. கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.  #Gutkhascam
    சிபிஐ இயக்குனர் மற்றும் சிறப்பு இயக்குனருக்கு அளிக்கப்பட்ட கட்டாய விடுப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு நாளை விசாரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #CBI #AlokVerma #NageswaraRao #CBIVsCBI
    புதுடெல்லி:

    சர்ச்சைக்குரிய இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷி மீதான வழக்கை சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வந்த நிலையில், வழக்கில் தொடர்புடைய தொழில் அதிபர் சதீஷ் சனாவை விடுவிக்க இடைத்தரகர் மூலம் லஞ்சம் பெற்றதாக ராகேஷ் அஸ்தானா மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. இதன்மூலம், சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா இடையே மோதல் ஏற்பட்டது.  

    அதன்பின்னர், அடுத்தகட்ட நடவடிக்கையாக சி.பி.ஐ. துணை போலீஸ் சூப்பிரண்டு தேவேந்தர் குமாரை சி.பி.ஐ. கைது செய்தது. இவ்வாறு சி.பி.ஐ. இயக்குனருக்கும், சிறப்பு இயக்குனருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால், இணை இயக்குநராக இருந்த நாகேஸ்வர ராவை தற்காலிக சி.பி.ஐ. இயக்குநராக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 



    மேலும், இயக்குனர் அலோக் வர்மாவும், சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவும் கட்டாய விடுப்பில் செல்லலாம் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    இதனை கடுமையாக எதிர்த்த அலோக் வர்மா, மற்றும் சிறப்பு இயக்குனர் ராஜேஷ் அஸ்தானா உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். 

    இந்த மனுவை ஏற்ற உச்சநீதிமன்றம், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அடங்கிய அமர்வு நாளை விசாரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  #CBI #AlokVerma #NageswaraRao #CBIVsCBI
    பெரியார் சிலையில் செருப்பு வைத்தவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவரது ஜாமீன் மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. #Periyarstatue

    சென்னை:

    திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் உள்ள பெரியார் சிலை மீது செருப்பு வைத்து கடந்த செப்டம்பர் 17-ந்தேதி அவமரியாதை செய்யப்பட்டது.

    இதுகுறித்து தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நவீன்குமார் என்பவரை கைது செய்தனர். இவருக்கு கீழ் கோர்ட்டுகளில் ஜாமீன் கிடைக்கவில்லை என்பதால், சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனு நீதிபதி தண்டபாணி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, திராவிடர் கழகத்தின் சார்பில் வக்கீல் குமாரதேவன், திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் வக்கீல் அருண் ஆகியோர் ஆஜராகி, மனுதாரருக்கு ஜாமீன் வழங்க கூடாது என்று வாதிட்டனர். சமுதாய சீர்த்திருத்தவாதியான பெரியாரை மனுதாரர் நவீன் குமார் உள்நோக்கத்துடன் அவமரியாதை செய்துள்ளதாக குற்றம் சாட்டினர்.

    மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் மனோகரன், ‘மனுதாரர் நவீன்குமார் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு, ஏற்கனவே சிகிச்சை பெற்றவர். தற்போது அந்த பாதிப்பில்தான் இது போன்ற செயலை செய்து விட்டார். எனவே, ஜாமீன் வழங்கவேண்டும்’ என்று வாதிட்டார்.

    இதையடுத்து நீதிபதி, மனுதாரரின் மனநிலை குறித்து மருத்துவ பரிசோதனை செய்து அறிக்கையை அக்டோபர் 22-ந் தேதி தாக்கல் செய்யும்படி, போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனு தாரர் சார்பில் ஆஜரான வக்கீல், ‘சிறையில் இருக்கும் நவீன் குமாரிடம் இருந்து நிபந்தனையற்ற மன்னிப்பு கடிதம் பெற சிறை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. ஐகோர்ட்டின் உத்தரவு நகல் இருந்தால் தான், அதற்கு அனுமதிக்க முடியும் என்கின்றனர்’ என்று கூறினார்.

    இதற்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார். அந்த சிறை அதிகாரிகளை நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

    அப்போது திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் ஆஜரான வக்கீல் அருண், ‘சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிப்பதற்காகவும், தங்களது புத்திசாலித்தனத்தை காட்டிக் கொள்ளவும் இதுபோல மன்னிப்பு கேட்கின்றனர். இதை ஏற்க கூடாது’ என்று வாதிட்டார்.

    இதையடுத்து இந்த மனு மீதான விசாரணையை நாளை (செவ்வாய்கிழமை) தள்ளிவைத்து நீதிபதி உத்தர விட்டார். #Periyarstatue

    ஆக்கிரமிப்புகளை அகற்றி தார்ச்சாலை போட வேண்டும் என்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலுப்பைக்குடி கிராம மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சாந்தா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது ஆலத்தூர் தாலுகா இலுப்பைக்குடி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், ஆலத்தூரில் இருந்து அரியலூர் வரை செல்லும் சாலையில் குன்னம் உட்கோட்டத்தில் இலுப்பைக்குடி, பிலிமிசை, கூத்தூர் ஆகிய மூன்று கிராமங்களில் தற்போது தார்ச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் பிலிமிசை, கூத்தூர் ஆகிய 2 கிராமங்களில் செல்லும் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி விட்டு, கழிவுநீர் வாய்க்கால்கள் அமைக்கப்பட்டு, தார்ச்சாலை போடப்பட்டுள்ளது.

    ஆனால் இலுப்பைக்குடியில் மட்டும் தார்ச்சாலை போடும் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றாமலும், கழிவுநீர் வாய்க்கால் அமைக்காமலும் தார்ச்சாலை போடுவதற்கான உத்தேச பணிகள் நடந்து வருகிறது. அவ்வாறு தார்ச்சாலை அமைத்தால் மழைநீர், கழிவுநீர் புதிதாக போடப்படும் தார்ச்சாலையில் தேங்கி நிற்கும். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி விட்டு, கழிவுநீர் வாய்க்கால் அமைத்து தார்ச்சாலை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

    குன்னம் தாலுகா ஓதியம் கிராம மக்கள் கொடுத்த மனுவில், ஓதியம் கிராமத்தில் அமைந்துள்ள சுத்துக்குளத்திற்கு செல்லும் மழைநீர் வரத்து வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

    குன்னம் தாலுகா கோவில்பாளையம் கிராமத்தை சேர்ந்தவரும், தமிழ்நாடு கரும்பு உற்பத்தியாளர் சங்க மாநில செயற்குழு உறுப்பினருமான அழகுமாமன்னன் கொடுத்த மனுவில், பெரம்பலூர் மாவட்டத்தில் புதிய வருவாய் கிராமங்கள் உருவாக்கப்படாமல் இருப்பதை கருத்தில் கொண்டு குன்னம், ஆலத்தூர் ஆகிய தாலுகாக்களில் புதிதாக வருவாய் கிராமங்களை உருவாக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். நிர்வாக வசதிக்காக ஆலத்தூர் ஒன்றியத்தை 2-ஆக பிரித்து பிலிமிசை அல்லது கொளக்காநத்தத்தை ஒன்றியமாக அறிவிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.  #tamilnews
    தாராபுரம் அருகே வீட்டு மனை வரையறைக்கு மனு அளிக்க வந்தவர் மயங்கி விழுந்து இறந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாராபுரம்:

    தாராபுரம் - உடுலை சாலையில் அனுமதியற்ற வீட்டு மனைகளுக்கு வீட்டு மனை வரையறை படுத்தும் முகாம் நடைபெற்றது.

    இதில் சேலம் மண்டல இயக்குனர் தலைமையில் அதிகாரிகள் கலந்து கொண்டு மனுக்களை பெற்றனர்.

    தாராபுரம் நகராட்சி மற்றும் குண்டடம், கொளத்துப்பாளையம், சின்னக்கா பாளையம், ருத்ராபதி, மூலனூர் ஆகிய பேரூராட்சிகளை சேர்ந்த 2 ஆயிரத்து 200 பேர் மனு அளித்தனர்.

    மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு 1,200 மனுக்களுக்கு மனை அனுமதி வழங்கப்பட்டது.

    இந்த முகாமில் கோவை பெரியநாயக்கன் பாளையத்தை சேர்ந்த நாகராஜன் (49) மனு அளிக்க வந்தார். அவர் தாராபுரத்தில் உள்ள தனது வீட்டு மனைக்கு அனுதிக்காக வந்து இருந்தார்.

    மனு அளிக்க வந்தவர்கள் நீண்ட வரிசையில் நின்றனர். நாகராஜனும் அவர்களுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார்.

    அவரை அருகில் நின்றவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் தாராபுரம் விரைந்து வந்தனர். நாகராஜன் உடலை பார்த்து கதறி அழுதனர்.

    இது தொடர்பாக தாராபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலை மீண்டும் செயல்பட அனுமதிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.#Sterlite #thoothukudiProtest
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாப்பிள்ளை யூரணி ஜெ.ஜெ.நகர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் தலைவர் முருகேசன் தலைமையில் பொது மக்கள் கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    எங்கள் ஊரில் ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்ந்து வருகிறோம். இங்குள்ள மக்களுக்கு ஸ்டெர்லைட் நிறுவனத்தின் நடமாடும் மருத்துவ வாகனம் மூலமாக தேவையான மருத்துவ வசதிகள் தவறாமல் செய்து கொடுக்கப்பட்டு வந்தது.

    மேலும் எங்கள் பகுதியிலுள்ள மிகவும் கஷ்டப்பட்ட மக்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, அடிப்படை வசதிகள், கோவிலுக்கான நிதியுதவி என பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஸ்டெர்லைட் நிறுவனத்தினர் செய்து வந்தனர்.இதனால் எங்கள் பகுதி மக்கள் மட்டுமின்றி அனைத்து மக்களும் பயன் அடைந்து வந்தனர்.

    இந்நிலையில் சிலரது சூழ்ச்சியாலும், தேவையில்லாத வதந்தியாலும் ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிரான பொய்பிரச்சாரம் மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டது. இதனால் ஏற்பட்ட பிரச்சினைகளால் தமிழக அரசு ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மூடுவதற்கு உத்தரவு பிறப்பித்துவிட்டது.

    ஸ்டெர்லைட் தொழிற்சாலை மூடப்பட்டு விட்டதால் அதனை நம்பி வாழ்ந்து வந்தவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அதோடு எங்களைப் போன்ற பல்வேறு பகுதி கிராம மக்களுக்கும் கிடைத்து வந்த அனைத்து வசதிகளும், நலத்திட்ட உதவிகளும் தடைபட்டு முடங்கியுள்ளது.

    எனவே ஸ்டெர்லைட் தொழிற்சாலை மீண்டும் செயல்படுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Sterlite #thoothukudiProtest
    விராலிமலை தொகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கிய அமைச்சருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
    அன்னவாசல்:

    புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தொகுதிக்கு உட்பட்ட அன்னவாசல் அருகே உள்ள சீகம்பட்டி, குடுமியான்மலை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் குறைகள் கேட்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அவற்றை மனுக்களாக பெற்று கொண்டனர். பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் விராலிமலை தொகுதிக்கு உட்பட்ட மருங்கிப்பட்டி, அரிய முத்துப்பட்டி அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு தொண்டர் ஒருவரின் மோட்டார் சைக்கிளில் திடீரென ஏறி சென்று பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.

    அப்போது அங்கு கூடிநின்ற பெண்கள் அமைச்சருக்கு ஆரத்தி எடுத்தும், நெற்றியில் குங்கும் வைத்தும் அமைச்சர் விஜயபாஸ்கரை வரவேற்றனர். திடீரென அமைச்சர் விஜயபாஸ்கர் மோட்டார் சைக்கிளில் வந்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டது அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அப்போது அந்தப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தெரு விளக்கு வசதி, சாலைவசதி பசுமைவீடு உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கொடுத்தனர். இதையடுத்து அவர் நடவடிக்கை எடுப்பதாக கூறி சென்றார்.

    இதைத்தொடர்ந்து குடுமியான்மலையில் மக்களை சந்திக்க சென்ற பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களிடம் கூறுகையில், “மக்களின் குறைகளை நேரடியாக கேட்கும் வகையில் தான் இது போன்ற மக்களை சந்திக்கும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறோம். தற்போது ஆட்சியிலும் சரி, கட்சியிலும் சரி எந்த குழப்பமும் இல்லை. யாராலும் எந்தவித குழப்பத்தையும் ஏற்படுத்த முடியாது. மக்களும், தொண்டர்களும் தெளிவாக உள்ளனர். மக்கள் ஆட்சிக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைத்திருப்பது போதாது. மத்திய அரசு நினைத்தால் பெட்ரோல், டீசல் விலையை 10 ரூபாய் வரை குறைக்க முடியும். விலை குறைப்பை மத்திய அரசு தான் செய்ய வேண்டும். துணை முதல் அமைச்சர் பன்னீர் செல்வம், டி.டி.வி.தினகரன் பிரச்சினை தொடர்பாக பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார். தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, கவர்னர் சந்திப்பு என்பது வழக்கமான ஒன்று தான். இந்த சந்திப்பில் 7 பேர் விடுதலை குறித்தும் முதல்-அமைச்சர் பேசி இருக்கலாம்” என்றார்.
    உடனடி முத்தலாக் முறையை சட்டவிரோதமாக அறிவிக்கும் மத்திய அரசின் புதிய சட்டத்தை எதிர்த்து கேரளாவைச் சேர்ந்த இஸ்லாமிய அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. #TripleTalaqBill #TripleTalaqOrdinace #SupremeCourt
    புதுடெல்லி:

    இஸ்லாமியர்களின் திருமண முறிவு முறையான முத்தலாக் நவீன காலங்களில் தவறாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. செல்போன்களிலும், எஸ்.எம்.எஸ்., வாட்ஸ் அப் போன்றவற்றிலும் முத்தலாக் கூறி கணவன் மனைவியை விவாகரத்து செய்து வருகின்றனர்.

    இதனை தடுக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கான சட்ட மசோதா கடந்த மழைக்கால கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் நிறைவேற்ற கடும் முயற்சி மேற்கொண்டும் முடியாமல் போனதால் அவசர சட்டம் மூலம் உடனடி முத்தலாக் தடை சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்து அதற்கான ஒப்புதலை பெற்றது.



    இந்நிலையில், இந்த புதிய சட்டத்தை எதிர்த்து கேரளாவைச் சேர்ந்த சமஸ்தா கேரளா ஜமிய்யத் உல் உலமா என்ற இஸ்லாமிய அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.

    முன்னதாக, மும்பையைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் மசூத் அன்சாரி உள்ளிட்ட 3 பேர் இணைந்து மும்பை உயர்நீதிமன்றத்தில் முத்தலாக் தடை சட்டத்தை எதிர்த்து மனுத்தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. #TripleTalaqBill #TripleTalaqOrdinace #SupremeCourt
    திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் கழுத்தில் மாலையுடன் நூத முறையில் மனு அளிக்க வந்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தாண்டிக்குடியைச் சேர்ந்த கணேஷ்பாபு (வயது 37) என்பவர் மனு அளிக்க வந்தார்.

    அவர் தனது கழுத்தில் மாலை அணிந்து தரையில் பிணம் போல் படுத்து கிடந்தார். இதைப்பார்த்ததும் அங்கிருந்த போலீசார் அவரை அப்புறப்படுத்த முயன்றனர். இது குறித்து அவர் கூறுகையில், தாண்டிக்குடி பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தர வேண்டும். மற்றும் ஊழல் முறைகேட்டை தடுக்க வேண்டும் உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி பல மனுக்கள் அளித்துள்ளேன். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனால் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வருவதே எனக்கு கவலையாக உள்ளது. இதனால் இறந்து விடுவதே மேல் என்பதை உணர்த்தும் வகையில் பிணம் போல் படுத்து மனு அளிக்க வந்துள்ளேன் என்றார்.

    இதனையடுத்து தனது கோரிக்கை மனுவை கலெக்டர் அலுவலகத்தில் அளித்துச் சென்றார். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    இதே போல் முன்னாள் ராணுவத்தினர் குறைதீர்ப்பு முகாம் முறையாக நடத்தப்படுவதில்லை என்றும் பெயரளவுக்கு மனுக்கள் மட்டும் வாங்கி வைத்துக் கொள்வதாக கூறி ஏராளமான முன்னாள் ராணுவத்தினர் மற்றும் அவரது குடும்பத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். #tamilnews
    ×