என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ராசிபுரம்"
தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார் மற்றும் மிசோரம் மாநிலங்களில் சட்டசபை தேர்தலின் போது பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் ராஜஸ்தான், சத்தீஷ்கார் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று பா.ஜ.க.விடம் இருந்து ஆட்சியை தட்டி பறித்தது. இதை நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
நாமக்கல் மணிக்கூண்டு அருகே கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் வெற்றியை கொண்டாடினர். இந்த நிகழ்ச்சிக்கு கிழக்கு மாவட்ட தலைவர் ஷேக்நவீத் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் மாவட்ட தலைவர் ஜி.ஆர்.சுப்பிரமணியம், மாவட்ட துணை தலைவர் மாணிக்கம், நகர செயலாளர் குப்புசாமி, துணை தலைவர் ராஜேந்திரன், சிறுபான்மை பிரிவு மாவட்ட துணை தலைவர் சபருல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ராசிபுரம் அருகே உள்ள வடுகம் முனியப்பம்பாளையம் கிராம காங்கிரஸ் கட்சி சார்பில் காங்கிரஸ் கட்சியினர் நாமகிரிப்பேட்டை வட்டார காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் சவுந்திரராஜன் தலைமையில் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இதேபோல ராசிபுரம் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம் பகுதியில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட தலைவர் பாச்சல் சீனிவாசன், ராசிபுரம் நகர தலைவர் ஸ்ரீராமுலு முரளி, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் விநாயகமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
குமாரபாளையம் காங்கிரஸ் கட்சியினர் பள்ளிபாளையம் பிரிவு சாலை பகுதியில் நகர தலைவர் ஜானகிராமன் தலைமையில் பட்டாசு வெடித்தனர். வாகனங்களில் மற்றும் நடந்து சென்ற பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் நிர்வாகிகள் தங்கராஜ், சிவராஜ், சுப்பிரமணி, சரவணன், சக்திவேல், தாமோதரன், காளியப்பன், சிவகுமார், மனோகரன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
ராசிபுரம்:
ராசிபுரம் அருகே உள்ள அத்தனூர் ஆலாங்காட்டு புதூர் பாரதிநகரைச் சேர்ந்தவர் சின்னுசாமி. இவரது மகன் ரமேஷ் (35) கூலி தொழிலாளி. இவர் நேற்று இரவு ராசிபுரம் அருகேயுள்ள சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆட்டையாம்பட்டி பிரிவு ரோடு அருகே சென்றபோது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் சென்றுவிட்டது.
இதில் சம்பவ இடத்திலேயே ரமேஷ் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி வெண்ணந்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராசிபுரம்:
ராசிபுரம் டவுன் நரசிம்மன் தெருவைச் சேர்ந்தவர் சந்திரன் (வயது 62). நெசவு தொழிலாளி. இவர் கடந்த மாதம் 18-ந் தேதி நெல்லை மாவட்டம், தாமிரபரணி மகா புஷ்கர விழாவில் கலந்து கொள்வதற்காக அவரது நண்பர் ஒருவருடன் சென்றிருந்தார். விழாவில் கலந்து கொண்டுவிட்டு ரெயிலில் புறப்பட்டு ராசிபுரத்திற்கு வந்தனர். அவர்கள் இருவரும் கடந்த மாதம் 20-ந் தேதி விடியற்காலையில் ராசிபுரம் ரெயில் நிலையத்தில் இறங்கி உள்ளனர்.
பிறகு அங்கிருந்து ராசிபுரம் புதிய பஸ் நிலையத்திற்கு ஆட்டோவில் சென்றனர். புதிய பஸ் நிலையத்தில் இறங்கிய சந்திரன் அவரது நண்பரை வீட்டுக்கு போகச் சொல்லியுள்ளார். ஆனால் சந்திரன் அவரது வீட்டுக்கு செல்லவில்லை.
தாமிரபரணி மகா புஷ்கர விழாவுக்கு சென்றவர் ஊர் திரும்பிய நிலையில் வீட்டுக்கு திரும்பி வராததை கண்டு அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பல இடங்களில் தேடியும் அவரை பற்றிய தகவல் தெரியவில்லை. இது பற்றி சந்திரன் மனைவி சாந்தி (59) தனது கணவர் மாயமானது குறித்து ராசிபுரம் போலீசில் புகார் செய்தார். இது பற்றி ராசிபுரம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பூபதி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ராசிபுரம் நகராட்சியில் நடந்து வரும் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மற்றும் குடிநீர் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் சரோஜா கலந்து கொண்டார். நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம் முன்னிலை வகித்தார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். அமைச்சர் சரோஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
ராசிபுரம் நகராட்சிப் பகுதியில் ரூ.55 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு டிசம்பர் மாதம் மக்கள் செயல்பாட்டுக்கு ஒப்படைக்கப்படும். ராசிபுரம் நகராட்சிப் பகுதியில் குடிநீர் பற்றாக்குறையை நிரந்தரமாக போக்குவதற்காக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனியாக கூட்டு குடிநீர் திட்டம் கொண்டுவர அனுமதி வழங்கியுள்ளார். இந்த புதிய குடிநீர் திட்டத்திற்காக அரசராமணி கிராமப் பகுதியில் 2 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படும். இந்த புதிய குடிநீர் திட்டத்தில் ராசிபுரம் நகராட்சி, பட்டணம், சீராப்பள்ளி, நாமகிரிபேட்டை, புதுப்பட்டி ஆகிய பேரூராட்சிப் பகுதிகளும், புதுச்சத்திரம் யூனியன் பகுதிகளும் பயன்பெறும். இதைத் தவிர ராசிபுரம், வெண்ணந்தூர் ஒன்றியத்தில் விடுபட்ட கிராமங்களை இந்த திட்டத்தில் சேர்க்கப்படும்.
முதல் அமைச்சர் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், குமாரபாளையத்தில் வெள்ளப் பகுதிகளை பார்வையிட்டார். அப்போது அவர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்யும்படியும், குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க லாரிகள் மூலம் குடிநீர் வழங்கவும் உத்தரவிட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்