search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராணிப்பேட்டை"

    ராணிப்பேட்டை அருகே 3 குடிசை வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் மூதாட்டி உடல் கருகி பலியானார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வாலாஜா:

    ரணிப்பேட்டை அடுத்த காரை பகுதியை சேர்ந்தவர் சாந்தி (வயது 70) குடிசை வீட்டில் வசித்து வருகிறார். இவரது மகள் சுகுணா (42). மகன் ராஜ்குமார் (35).

    சுகுணாவிற்கு திருமணமாகி சாந்தி வீட்டின் அருகிலேயே வசித்து வருகிறார். இவரது வீட்டில் மின் இணைப்பு இல்லாத காரணத்தால் தாய் சாந்தி வீட்டில் இருந்து ஒயர் மூலம் மின் இணைப்பு பெற்று பயன்படுத்தி வந்தார்.

    இந்நிலையில் நேற்றிரவு சுகுணா வீட்டிற்கு சென்ற மின் ஒயரில் திடீரென தீபிடித்து எரிந்து சாந்தியின் குடிசை வீட்டில் தீ பற்றியது காற்று அதிகமாக வீசியதால் தீ அருகில் இருந்த சுகுணா மற்றும் வினோத்குமார் வீடுகளிலும் மளமளவென பரவியது.

    சாந்தியால் வீட்டை விட்டு வெளியே வரமுடியவில்லை. இதனால் தீயில் கருகி பரிதாபமாக இறந்தார். தீ பற்றி எரிவதை கண்டு வெளியே ஓடிவந்த ராஜ்குமார் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

    இது குறித்து ராணிப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு அலுவலர் கமலக்கண்ணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் 1 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர்.

    ராணிப்பேட்டை டி.எஸ்.பி. கலைசெல்வன், மற்றும் போலீசார் சாந்தியின் உடலை மீட்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தீகாயமடைந்த ராஜ்குமாரை அடுக்கம்பாறை அரசு ஆஸ்த்திரியில் சேர்த்தனர். பின்னர் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இன்று காலை தீ விபத்து நடந்த வீடுகளை காந்தி எம்.எல்.ஏ. பார்வையிட்டு பாதிக்கபட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை உடனடியாக வழங்க அதிகாரி களுக்கு உத்தரவிட்டார்.

    ராணிப்பேட்டை அருகே பால் வியாபாரியிடம் ரூ. 82 ஆயிரம் திருட்டு போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    வாலாஜா:

    ராணிப்பேட்டை அடுத்த பொன்னை எஸ்.என். பாளையம் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 62). பால் வியாபாரி.

    கணேசன் வியாபார தேவைக்காக நேற்று பொன்னையில் உள்ள கூட்டுறவு வங்கியில் ரூ.40ஆயிரமும் மற்றோரு தனியார் வங்கியில் ரூ.42 ஆயிரம் எடுத்தார். அந்த பணத்தை ஒரு பையில் வைத்து வங்கி முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது பைக் பெட்டியில் வைத்தார்.

    அப்போது அங்கு வந்த அவரது நண்பரிடம் கணேசன் பேசிக் கொண்டு இருந்தார். பின்னர் அங்கிருந்து மளிகை பொருட்கள் வாங்க கடைக்கு சென்றார். அங்கு பைக்கை நிறுத்தி பெட்டிடையை திறந்து பார்த்தார். அபபோது பொட்டியில் வைத்திருந்த பணப்பை காணமல் போயிருந்தது.இதனை கண்டு அதிர்ச்சியடைந்த கணேசன் இது குறித்து பொன்னை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராணிப்பேட்டையில் பீர் பாட்டிலை உடைத்து 3 பேரை குத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

    வாலாஜா:

    ராணிப்பேட்டை ஆர்.எப். ரோடு பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் மகன் சுரேஷ் (வயது 28). இவர், நேற்று மாலை பைக்கில் சென்ற போது ஒரு டீக்கடை முன்பு உட்கார்ந்து இருந்த அதே பகுதியை சேர்ந்த கண்ணன் (32) என்பவர் மீது மோதி விட்டார்.

    இதனால் இருத்தரப்பினர் பயங்கரமாக மோதி கொண்டனர். கண்ணன் தரப்பினர் பீர் பாட்டிலை உடைத்து பைக்கை மோதிய சுரேஷ் மற்றும் அவரது உறவினர்கள் பிரதாப், கலைவாணனை சரமாரியாக குத்தினர். இதில் 3 பேருக்கும் மார்பு, முதுகில் குத்துப்பட்டு ரத்தம் பீறிட்டு கொட்டியது.

    படுகாயமடைந்த அவர்களை, பொதுமக்கள் மீட்டு ராணிப்பேட்டை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதுகுறித்து ராணிப்பேட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி வழக்குப்பதிவு செய்து பீர் பாட்டிலால் தாக்கிய கண்ணன் மற்றும் அவரது மைத்துனர் விஜய் (20), நண்பர் வீரமணி (26) ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    ராணிப்பேட்டை வனச்சரக அலுவலகத்தில் காவலாளியை கட்டிப்போட்டு செம்மரக் கட்டைகளை 4 பேர் கும்பல் கடத்திச் சென்றனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #semmaram

    வாலாஜா:

    ராணிப்பேட்டை டி.எஸ்.பி. அலுவலகம் மற்றும் போலீஸ் குடியிருப்புக்கு நடுவில் வனச்சரக அலுவலகம் உள்ளது. வனச்சரக அலுவலகம் எதிரில் கோர்ட்டும் உள்ளது. வனச்சரகராக இருந்த விஜய், கடந்த 7-ந் தேதி பணியிடமாற்றப்பட்டார்.

    தற்போது, கந்தசாமி என்பவர் வனச்சரக அலுவலராக பொறுப்பேற்றுள்ளார். விஜய் வனச்சரகராக இருந்த போது 3 மாதத்திற்கு முன்பு வாலாஜா ஜே.ஜே. நகரில் 750 கிலோ எடை கொண்ட 17 செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்தார்.

    இந்த செம்மரக்கட்டைகள் வனச்சரக அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்தது. இரவு நேர காவலாளியாக, கத்தாரி குப்பம் ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்த சம்பத் என்பவர் (வயது 59) உள்ளார்.

    நேற்றிரவு சம்பத் வழக்கம் போல் காவல் பணியில் இருந்தார். நள்ளிரவு 11.30 மணியளவில் அவர் அயர்ந்து தூங்கிவிட்டார்.

    அப்போது, 4 பேர் கும்பல் வந்தனர். காவலாளியை கை, கால்களை கட்டி தூக்கி கொண்டு சென்று வனச்சரக அலுவலகத்தில் உள்ள ஒரு அறையில் உள்ளே தள்ளி பூட்டினர்.

    வனச்சரக அலுவலகத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்திய காட்சி.

    பிறகு, வனச்சரக அலுவலக வளாகத்தில் இருந்த 17 செம்மரக் கட்டைகளில் ½ டன் எடையுள்ள செம்மரக் கட்டைகளை தங்கள் கொண்டு வந்த வாகனத்தில் ஏற்றி கொண்டு தப்பிச் சென்றனர். கடத்தப்பட்ட செம்மரக்கட்டைகளின் மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    இன்று அதிகாலை 3.30 மணியளவில் வனச்சரக அறையில் இருந்து காவலாளி அலறிய சத்தம் கேட்டு, போலீஸ் குடியிருப்பில் வசிக்கும் ராணிப்பேட்டை இன்ஸ்பெக்டர் சரவணன் சென்று பார்த்தார்.

    அப்போது அறையில் கை, கால்கள் கட்டிய நிலையில் கிடந்த காவலாளியை கட்டை அவிழ்த்து மீட்டார். தகவல் அறிந்த டிஎஸ்.பி. கலைச் செல்வம் மற்றும் வாலாஜா இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு மற்றும் போலீசார் வனச்சரக அலுவலகத்திற்கு விரைந்து வந்தனர்.

    மாவட்ட உதவி வன பாதுகாவலர்கள் பால சுப்பிரமணியம், சரவணன் ஆகியோரும் விரைந்து வந்து கடத்தல் சம்பவம் குறித்து காவலாளியிடம் விசாரணை நடத்தினர்.

    மேலும், இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து கடத்தல் கும்பலை பிடிக்க தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர். #semmaram

    ராணிப்பேட்டையில் மணல் கடத்தலை தடுத்த போலீஸ் சப் -இன்ஸ்பெக்டரை ஒழித்து விடுவதாக மிரட்டியவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    ராணிப்பேட்டை:

    சிப்காட்டை அடுத்த அவரக்கரை அருகே உள்ள பாலாற்றில் இருந்து நேற்று அதிகாலை புளியங்கண்ணுவை சேர்ந்த ரஞ்சித்குமார் (வயது 28) என்பவர் டிப்பர் லாரியில் மணல் கடத்தி வந்தார்.

    ராணிப்பேட்டை ஒத்தவாடை தெரு அருகே வந்தபோது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த நெடுஞ்சாலை ரோந்துப்பணி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருணாநிதி மணல் கடத்தி வந்த லாரியை மடக்கினார்.

    அப்போது சம்பவ இடத்திற்கு வந்த ராணிப்பேட்டை காரை பகுதியை சேர்ந்த நரேஷ் என்பவர் சப்-இன்ஸ்பெக்டர் கருணாநிதியை அசிங்கமாக பேசி ஒழித்து விடுவேன் என மிரட்டல் விடுத்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

    இதுகுறித்து கருணாநிதி ராணிப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். ராணிப்பேட்டை போலீசார் மணல் கடத்தி வந்த டிப்பர் லாரி டிரைவர் ரஞ்சித்குமாரை கைது செய்து டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நரேசை தேடி வருகின்றனர்.#tamilnews
    ×