search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அய்யனார்"

    • சிங்கம்புணரியில் உள்ளது சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில்.
    • சிங்கம்புணரி அய்யனார் கோவில் கழுவன் திருவிழா வரலாற்று சிறப்புமிக்கது.

    சிங்கம்புணரியில் சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் வைகாசி திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வரலாற்று சிறப்புமிக்க கழுவன் திருவிழா நடைபெற்றது. கழுவன் வேடமிட்டு பயமுறுத்தும் கருப்பு திருமேனியுடன் தீப்பந்தங்கள் கைகளில் ஏந்தியவாறு ஓடிவரும் கழுவனை கண்டு இளைஞர்கள் உற்சாகமாக கொண்டாட்டினர்.

    சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட சிங்கம்புணரியில் உள்ள சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் வைகாசி விசாக பிரமோற்சவ விழா நடைபெற்று வருகிறது. கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவில் சாமி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. 5-ம் நாள் திருவிழாவில் திருக்கல்யாணம் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து 6-ம் நாள் திருவிழாவில் கழுவன் திருவிழா நடைபெற்றது. கருப்பு திருமேனியுடன் ஜடாமுடி அணிந்து கோர உருவத்துடன் கழுவன் சேவுகப்பெருமாள் அய்யனார் கோவிலுக்கு கயிற்றால் கட்டி அழைத்து வரப்பட்டார். அங்கு அமர்ந்திருந்த நாட்டார்களிடம் மரியாதை நிமித்தமாக வணங்கி சேவுகப்பெருமாள் சன்னதியில் அவருக்கு திருநீறு, தீர்த்தம், சிவாச்சாரியார்களால் வழங்கப்பட்டு நாட்டார்கள் அவருக்கு வேட்டி, பரிவட்டம் கட்டி மரியாதை செய்தனர்.

    விழா ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் மற்றும் சிங்கம்புணரி நாட்டார்கள், கிராமத்தார்கள், விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

    கிராம தேவதையான அய்யனார், சிவன் மற்றும் மோகினி அவதாரத்தில் இருந்த விஷ்ணு ஆகியோர் மூலம் படைக்கப்பட்டவர் என்ற கதை உள்ளது.
    கிராம தேவதையான அய்யனார், சிவன் மற்றும் மோகினி அவதாரத்தில் இருந்த விஷ்ணு ஆகியோர் மூலம் படைக்கப்பட்டவர் என்ற கதை உள்ளது. ஒரு சில ஆலயங்களில் உள்ள அய்யனாருக்கு காவல் தேவதையாக வீரபத்திரர் இருக்கிறார்.

    அய்யனாரை அங்கு ‘அழகன் முத்தையனார்’ என்ற பெயரில் அழைக்கிறார்கள். அதே அய்யனார் கடலூர் மாவட்டம் இடைச்செருவாய் எனும் சிறிய ஊரில் ‘மஞ்சபத்திர அய்யனார்’ என்ற பெயரில் கிராம காவல் தெய்வமாக இருக்கிறார்.

    புதுச்சேரி, புதுப்பெட்டில் உள்ள மஞ்சனீஸ்வரர் ஆலயத்தில் பூரணா, புஷ்கலை என்ற இரண்டு அம்பாள்களுடன் அய்யனார் காட்சி தருகிறார். அய்யனாரே பின்னர் ஐயப்பனாக அவதரித்தார் என்பதாகவும் கதைகள் உள்ளன.
    கடலூர் அருகே அழகுமுத்து ஐயனார் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    கடலூர் அருகே தென்னம்பாக்கம் கிராமத்தில் அழகு முத்து ஐயனார் கோவில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் அழகர் சித்தரின் ஜீவ சமாதியும் அமைந்துள்ளது. ஆண்டு தோறும் சித்திரை மாதம் முதல் திங்கட்கிழமையன்று

    இக்கோவிலில் சித்திரை திருவிழா மற்றும் திருக்கல்யாணம் நடைபெறுவது வழக்கம். அதன்படி சித்திரை மாதத்தில் முதல் திங்கட்கிழமையான நேற்று சித்திரை திருவிழா நடைபெற்றது.

    இதையொட்டி தென்பெண்ணை ஆற்றில் இருந்து கரகங்கள் புறப்பட்டு மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. தொடர்ந்து நேற்று காலை ஆற்றிலிருந்து காவடிகள் புறப்பட்டு சென்று அழகு முத்து ஐயனாருக்கும், பூரணி பொற்கலை அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா ஆராதனை நடைபெற்றது.

    இதை தொடர்ந்து மாலையில் 108 மேளம் மற்றும் நாதஸ்வர கலைஞர்கள் வாத்தியத்துடன் அழகு முத்து ஐயனாருக்கும், பூரணி பொற்கலை அம்மனுக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை மற்றும் பொதுமக்கள் செய்து இருந்தனர். 
    அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 21-ந் தேதி சுவாமி கற்பக பொன் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
    தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் குரும்பூர் அருகே மேலப்புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலும் ஒன்றாகும். கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும். கோவிலில் இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதனை முன்னிட்டு, அதிகாலையில் நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், யாகசாலை பூஜை நடந்தது. அதிகாலை 5.50 மணிக்கு கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து தீபாராதனை நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இரவில் உற்சவர் அய்யனார் சப்பரத்தில் எழுந்தருளி, கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழா நாட்களில் தினமும் இரவில் உற்சவர் அய்யனார் சப்பரத்தில் எழுந்தருளி, கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். 6-ம் நாளான வருகிற 17-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 11.30 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை, மதியம் 1 மணிக்கு அன்னதானம் நடக்கிறது.

    10-ம் நாளான 21-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 10 மணிக்கு பங்குனி உத்திர கும்பாபிஷேகம், மதியம் 12 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை, மதியம் 2 மணிக்கு பக்தர்கள் நேமிசங்களை செலுத்தி அய்யனாரை வழிபடுகின்றனர். இரவு 12 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை, இரவு 1 மணிக்கு உற்சவர் அய்யனார் கற்பக பொன் சப்பரத்தில் எழுந்தருளி, மேலப் புதுக்குடி கிராம வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.

    விழா நாட்களில் தினமும் இரவில் வில்லிசை, இன்னிசை நிகழ்ச்சி, பட்டிமன்றம் போன்றவை நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகக்குழுவினர் உத்திரபாண்டியன் நாடார், வீரசிங் நாடார், லட்சுமண பாண்டியன் நாடார், சேர்மத்துரை நாடார், அசோகராஜ் நாடார், ஜெயக்குமார் நாடார், அழகேசன் நாடார், பாஸ்கர் நாடார் மற்றும் ஊர் மக்கள் செய்து வருகின்றனர்.
    பாலமேடு அருகே மஞ்சமலை அய்யனார் கோவில் குதிரை எடுப்பு திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டார்.
    பாலமேடு அருகே வலையபட்டியில் உள்ளது பிரசித்தி பெற்ற மஞ்சமலை அய்யனார்சாமி கோவில். இங்கு குதிரை எடுப்பு திருவிழா நடந்தது. இதில் மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் சென்னை போன்ற பகுதிகளிலிருந்து பக்தர்கள் நேர்த்திகடனாக குதிரைகள், காளைகள், பசுக்கள், திருபாதங்கள், திருமண தம்பந்திகள், குழந்தைகள், கோழிகள் உள்ளிட்ட பல்வேறு உருவ வர்ண சிலைகளை எடுத்து வந்தனர்.

    முன்னதாக இந்த சிலைகள் அரசம்பட்டி மந்தையில் வேட்டி, துண்டுகள், வண்ண மாலைகளால் அலங்கரிக்கபட்டு வைத்திருந்தது. அத்துடன் மஞ்சமலை அய்யனார், ஈரடி கருப்புசாமி மற்றும் கன்னிமார் உள்ளிட்ட உபதெய்வங்களின் சிலைகளும் தயார் நிலையில் வைக்கபட்டிருந்தன. பின்னர் வாணவேடிக்கையுடன் மேளதாளம் முழங்க சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு வலையபட்டி மந்தை திடலில் வைக்கப்பட்டன.

    அங்கு சிலைகளின் கண்கள் திறக்கப்பட்டு விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டன. அதன் பின்பு பரிவாரங்களுடன் சாமி, குதிரைகள் உள்ளிட்ட சிலைகள் அந்தந்த பகுதி கோவில் இருப்பிடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 
    ×