search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 111322"

    பண்பு சார்ந்தும், அறிவு சார்ந்தும் தங்களை உயர்த்திக்கொள்வதற்கான வாய்ப்பாக விடுமுறை காலத்தை மாணவ-மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
    தமிழகம் முழுவதும் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு விட்டது. இனி ஜூன் மாதம் பள்ளிக்கூடம் மீண்டும் திறக்கப்படும். இந்த கோடை விடுமுறையை குதூகலமாக கொண்டாட மாணவ- மாணவிகள் தயாராகி விட்டனர். இந்த விடுமுறை காலம் மகிழ்ச்சியாக கழிக்க வேண்டும். நெருக்கடியான மனநிலையில் இருந்து விடுபட்டு உற்றார், உறவினர்களிடம் நெருங்கி பழக ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

    செல்போன் போன்ற சாதனங்களை கையில் வைத்துக்கொண்டு மாணவ-மாணவிகள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளக்கூடாது. அது அவர்களிடம் மன அழுத்தத்தையும், உடல் சோர்வையும் ஏற்படுத்தி விடும். எனவே பெற்றோர்கள் மாணவ-மாணவிகளின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும். மேலும் இன்டர்நெட் மற்றும் சமூகவலைதளங்களில் அவர்களின் செயல்பாடு எந்த அளவுக்கு உள்ளது? என்பதையும் அறிந்து வைத்திருப்பது உத்தமம். ஏனெனில் அதில் நிறைய பிரச்சினைகள், ஆபத்துகளும் உள்ளன.

    இதில் இருந்து விடுபட நண்பர்களுடன் கூடி விளையாடி மகிழ வேண்டும். தினமும் உடற்பயிற்சி செய்தாலும் அதிலும் உற்சாகம் கிடைக்கும். பொழுது போக்கு என்பது மாணவர்களுக்கு உத்வேகத்தையும், புத்துணர்ச்சியையும் அளிப்பதாக இருக்க வேண்டும். அதை விடுத்து மாணவ-மாணவிகளை வீட்டுக்குள்ளேயே முடங்கி விட செய்வதாக இருந்து விடக்கூடாது.

    அதே நேரத்தில் மாணவ-மாணவிகள் விளையாட செல்லும் போது மிகுந்த கவனத்துடன் இருந்திட வேண்டும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் விலகியே இருக்க வேண்டும். ஆசைவார்த்தை கூறுவதை நம்பி தெரியாதவர்களிடம் சென்று விடக்கூடாது. பரிசுப்பொருட்கள், உணவுப்பொருட்கள் என எந்த பொருட்களை அறிமுகம் இல்லாத நபர்கள் வாங்கிக்கொடுத்தால், அதை ஏற்றுக்கொள்ளக்கூடாது.

    வீட்டை விட்டு வெளியே செல்லும் போது எங்கு செல்கிறோம்? எவ்வளவு நேரத்தில் திரும்பி வருவோம்? என்பது உள்ளிட்ட தகவல்களை வீட்டில் உள்ள பெற்றோர்கள், உறவினர்களிடம் தவறாமல் தெரிவித்து விட்டு செல்ல வேண்டும். வெளியில் சென்றிருக்கும் போது சுவையான, சுவாரசியமான சம்பவங்கள், சோக சம்பவங்கள் என எது நடந்தாலும் வீட்டில் உள்ளவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். அதில் ஒளிவுமறைவு இருக்கக்கூடாது. பெற்றோர்கள், உறவினர்களின் ஆதரவுடன் தான் மாணவ-மாணவிகள் எதையும் எதிர்கொள்ள முடியும். பிரச்சினைகளை தெரிவித்தால் தான், அதற்கு பெரியவர்களால் தீர்வு காண முடியும். தவறுகளை மூடி மறைப்பதால் எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை.

    மாணவ-மாணவிகள் விடுமுறையில் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புகள் கிடைக்கும். அது போன்ற நேரங்களில் தங்களுக்கோ, தங்களால் பிறருக்கோ தவறு ஏதாவது நேர்ந்து விடாமல் கவனமுடன் செயல்பட வேண்டும். எதிலும் அவசரம் காட்டக்கூடாது. பொறுமையுடன் நடந்து கொள்ள வேண்டும்.

    விடுமுறை காலம் என்பது மாணவ-மாணவிகளுக்கு பிடித்தமான, குதூகலமான காலம் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அந்த நாட்களில் தங்களுக்கு பிடித்தமான கலைகளை மாணவ-மாணவிகள் கற்றுக்கொள்ளலாம். தங்களது திறமைகளை வளர்த்துக்கொள்ள வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ளலாம். அதற்கான பயிற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.

    பண்பு சார்ந்தும், அறிவு சார்ந்தும் தங்களை உயர்த்திக்கொள்வதற்கான வாய்ப்பாக விடுமுறை காலத்தை மாணவ-மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உறவினர்களுடன் பழகி அன்பை பெறலாம். கோடை விடுமுறை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதில் இருந்து மாணவ-மாணவிகள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
    இரண்டு வயது குழந்தைகள் கூட, போனில் வீடியோ பார்க்க ஆறு மணி நேரம் வரை செலவிடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    குழந்தைகள் முன்பு போல ஓடி ஆடி விளையாடுவது என்பது மிகவும் குறைந்து விட்டது. அவர்கள் இன்று திரை ஊடகங்களுக்கு அடிமையாகிக் கொண்டிருக்கிறார்கள்.

    ஒரு வீட்டின் வரவேற் பறைக்குள் நுழைந்தால், தந்தை ஃபோனில் இமெயில் படித்துக் கொண்டிருக்க, தாய் டிவி பார்த்துக்கொண்டிருக்க, பிள்ளைகள் ஐபேடில் விளையாடிக் கொண்டிருக்கும் காட்சியை பார்ப்பது சகஜமானது தான். திரையில் அதிக நேரம் செலவிடுவது, அதிலும் பிள்ளைகள் மற்றும் இளம் வயதினர் இவ்வாறு செய்வது பரவலாகி வருகிறது. இரண்டு வயது குழந்தைகள் கூட, பல்வேறு சாதனங்களில் ஆறு மணி நேரம் வரை செலவிடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஊடகங்களில் அதிக நேரம் செலவிடுவது உணவு உட்கொள்ளும் பிரச்சனை, குழந்தை பருவ பருமன், கவன சிக்கல், தூக்க பாதிப்பை உண்டாக்கலாம்.

    திரையில் செலவிடும் எல்லா நேரங்களும் மோசமானது அல்ல. மணிக்கணக்கில் பார்க்க கல்வி சார்ந்த நிகழ்ச்சிகள் உள்ளன. குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும் விஷயங்களும் அநேகம் உள்ளன. பல திரைகளில் விருப்பமானவற்றை பார்ப்பது குழந்தைகள் மனதை லேசாக்குகிறது. இது நிலைமையை இன்னும் சிக்கலாக்குகிறது அல்லவா?

    குழந்தைக்கு போரடிக்கும் போது, வெளியே மழை பெய்து விளையாட முடியாமல் போனால், டிவி பார்க்கத்தோன்றும். நீண்ட தூரம் காரில் செல்லும் போது குழந்தை அடம்பிடித்தால், ஃபோனில் வீடியோ பார்க்கச் செய்து சமாளிக்கலாம். ஃபோனில் நண்பர்களுடன் பேச விரும்பும் போது, குழந்தை தன்னுடன் பேச சொல்லும் போது, ஐபேடை கையில் கொடுத்து சமாதானப்படுத்துவது இயல்பாக இருக்கிறது. இப்படி தான் குழந்தைகளின் வாழ்க்கையில் திரைகளின் தாக்கம் அதிகரித்துவிட்டது.

    திரையில் செலவிடப்படும் நேரத்தை விட, திட்டமிடப்படாத விளையாட்டு நேரம் குழந்தை வளர்ச்சியில் நல்லவிதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.  கண்காணிக்கப்படாத, கட்டுப்படுத்தப்படாத திரை நேரம், வன்முறை சார்ந்த நிகழ்ச்சிகளை பார்க்க வைத்து பாதிப்பை ஏற்படுத்தலாம். பெரும்பாலான நேரங்களில் குழந்தைகள் தங்கள் வயதுக்கு பொருத்தம் இல்லாத விஷயங்களை பார்க்கின்றனர். இது எதிர்மறையான தாக்கத்தை உண்டாக்கும். திரைகளில் நேரம் செலவிடுவது பிரச்சனை அல்ல; ஆனால் அது அளவுக்கு அதிகமாக இருப்பது தான் சிக்கல். 
    குழந்தைகளை வெறும் காலோடு நடக்க விடுங்கள். அது அவர்களின் மூளைத்திறனை அதிகரிக்கும் என்கிறார்கள் சான்பிரான்சிஸ்கோ பல்கலைக்கழக ஆய்வாளர்கள்.
    ஆரோக்கிய அச்சுறுத்தல் காரணமாக வெறும் காலோடு குழந்தைகளை விளையாட அனுமதிப்பதே இல்லை. காரணம் கிருமித் தொற்றால் குழந்தைக்கு ஏதேனும் வந்துவிடுமோ என்ற பயம். ஆனால், குழந்தைகளை வெறும் காலோடு நடக்க விடுங்கள். அதுவும் மண்தரையில் நன்றாக ஓடி, ஆடி விளையாட விடுங்கள் அது அவர்களின் மூளைத்திறனை அதிகரிக்கும் என்கிறார்கள் சான்பிரான்சிஸ்கோ பல்கலைக்கழக ஆய்வாளர்கள்.

    வெறும் காலோடு நடப்பது, ஏறுவது, குதிப்பது, ஓடுவது போன்ற செயல்களை செய்யும்போது குழந்தைகளுடைய கால்களின் தசைகள் மற்றும் தசைநார்கள் வளர்ச்சியடைந்து, காலின் வலிமையும் அதிகரிக்கிறது. விளையாடும் இடத்திற்கேற்ற விழிப்புணர்வை அதிகரிக்கிறது. பாத வளைவின் சமநிலைக்கு உதவுகிறது’ என்கிறார் நரம்பியல் மருத்துவரான ஆலியென் பெர்தோஸ்.

    அதுமட்டுமல்ல, ஸ்பெயினின் மாட்ரிட்ஸில் உள்ள கம்ப்யூட்டன்ஸ் பல்கலைக்கழகத்தில் Preventive Podiatry, Barefoot babies result in Smarter Children என்ற தலைப்பின் கீழ் நடத்தப்பட்ட ஆராய்ச்சி. வெறும் காலுடன் விளையாடும் குழந்தைகள் பாதுகாப்பு உணர்வைப் பெறுவதால் எல்லையற்ற மகிழ்ச்சி அடைகிறார்கள்.

    அவர்களுடைய மோட்டார் செல்கள் மிக வேகமாக முதிர்ச்சி அடைவதோடு, அவர்களின் காட்சி மற்றும் செய்கைகளில் ஒருங்கிணைப்பு கிடைக்கிறது. சிக்கலான சூழலிலும் சிந்தனை வடிவங்களை மேம்படுத்தும் ஆற்றலும், குறிப்பாக நினைவாற்றலும் குழந்தைகளிடத்தில் வளர்கிறது என அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

    ‘வாரத்திற்கு மூன்று நாட்கள் இயற்கை சூழ்ந்த பூங்காக்களிலோ, மைதானங்களிலோ வெறும் காலுடன் விளையாடும் குழந்தைகள் வெவ்வேறு பரப்புகளின் தன்மையை அறிவதன் மூலம், வெளிப்புற உலகத்தைப் பற்றிய தகவலை அறிய முடிகிறது. ஒரு விஷயத்தைப் பற்றிய பல்வேறு அணுகுமுறையை கற்றுக் கொள்கிறார்கள்’ என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
    குழந்தைகள் விளையாட ஏராளமான பாரம்பரிய விளையாட்டுகள் உள்ளன. கோடையை குதூகலமாக்கும் பாரம்பரிய விளையாட்டுகளையும், அவை உடலுக்கு வழங்கும், நன்மைகளையும் தெரிந்து கொள்வோமா குட்டீஸ்...
    கோடை விடுமுறை ஆரம்பித்துவிட்டது. உங்கள் மனதில் சுற்றுலா எண்ணமும், விளையாட்டு எண்ணங்களும் அலைமோதும். கோடையின் கொடுமை தெரியாமல் குழந்தைகள் விளையாட ஏராளமான பாரம்பரிய விளையாட்டுகள் உள்ளன. செல்போன் விளையாட்டுகளைவிட சிறந்தவை பாரம்பரிய விளையாட்டுகள். அவை செல்போன் விளையாட்டுகளைப்போல நம்மை சோர்வடைய வைப்பதில்லை. கோடையை குதூகலமாக்கும் பாரம்பரிய விளையாட்டுகளையும், அவை உடலுக்கு வழங்கும், நன்மைகளையும் தெரிந்து கொள்வோமா குட்டீஸ்...

    தாயம்

    சிறுவர் விளையாட்டுகளில் முதன்மையானது தாயம். தாயக்கட்டம், சொக்கட்டான் என வேறுபெயர்களிலும் இது அழைக்கப்படும். உலகம் முழுவதும் இந்த விளையாட்டு பரவி இருக்கிறது. ஆனால் விதிமுறைகளில் சிறிது மாற்றம் இருக்கும். இந்தியாவிலும் நீண்ட காலமாக இந்த விளையாட்டு விளையாடப்படுகிறது. தாயம் ஆடுவது குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு இன்றியமையாதது. காய் நகர்த்தலில் கணிதத் திறன் மேம்படும். விதிமுறைகளுக்கு உட்பட்டு விளையாடுவது வாழ்வின் அடிப்படையை விளக்கும். புத்திக்கூர்மையை வளர்க்கும்.

    கிச்சுக்கிச்சு தாம்பளம்


    கிச்சுக்கிச்சு தாம்பளம் விளையாட்டை அனைவரும் அறிந்திருப்பீர்கள். மணலை சிறிது குவித்துக் கொண்டு சிறு குச்சி அல்லது கற்களை அதனுள் மறைத்து வைத்து சரியாக எந்த இடத்தில் மறைத்து வைத்தோம் என்பதை கண்டுபிடிக்கச் செய்து விளையாடப்படுவது இந்த ஆட்டமாகும். சிறுவர்களின் மதிநுட்பத்தை வளர்க்கக்கூடியது இந்த விளையாட்டு. துப்பறியும் ஆற்றலை அதிகமாக்கும். சிந்தனையை தெளிவாக்கும். குறி அறியும் திறனும் வலுப்பெறும்.

    பச்சைக்குதிரை

    பச்சைக்குதிரை விளையாட்டும் சிறுவர்களுக்கான நிழல் விளையாட்டுகளில் ஒன்றாகும். ஒருவர் குனிந்து நிற்க மற்றவர்கள் அவரைத் தாவிச் செல்வது இந்த விளையாட்டாகும். குனிந்து நிற்பவர் ஒவ்வொரு முறையும் சிறிது சிறிதாக உயரத்தை கூட்டுவார். அதற்கேற்ப மற்றவர்கள் தாவிச் செல்லவேண்டும். இந்த ஆட்டத்தை விளையாடுவதால் சிறுவர்களின் உடல் வலுப்பெறும். வளர்ச்சி வேகமடையும். குதிக்கும் திறன் அதிகமாவதால் உடற்செயல்கள் உந்தப்பட்டு கழிவுகள் வெளியேறும். எச்சரிக்கையுடன் செயல்படும் ஆற்றலையும் வளர்க்கும்.



    பல்லாங்குழி

    பெண் குழந்தைகளுக்கான பிரத்தியேக விளையாட்டாக விளங்கும் பல்லாங்குழியும் கோடைக்கு ஏற்ற விளையாட்டுதான். பழங்காலத்தில் சிறுகற்களை குழியில் நிரப்பி விளையாடப்பட்டதால் இதற்கு கல்லாங்குழி என்ற பெயரும் இருந்ததுண்டு. இது இருவர் ஆடும் ஆட்டமாகும். எண்ணிக்கையைக் கொண்டு ஆடப்படுவதால் கணிதத் திறனை வளர்க்கும். வணிக நுட்பத்தையும் வளர்க்கும். தக்கம் வைத்து விளையாடும் விதி இதில் உண்டு. இது சேமிக்கும் பண்பை உணர்த்துவதாக அமையும். மதிநுட்பமாக விளையாடினால், ஜெயிக்க முடியும் என்பதால் புத்திக்கூர்மையையும், விடா முயற்சியையும், தன்னம்பிக்கையையும் வளர்க்கும்.

    கிட்டிப்புள்

    சில்லுக்குச்சி அல்லது கிட்டிப்புள் என அழைக்கப்படும் விளையாட்டும் சிறுவர்களை கவர்ந்த விளையாட்டாகும். ஒரு நீண்ட குச்சியால், நுனி சீவப்பட்ட சிறிய சில்லுக்குச்சியை அடித்து விளையாடுவது இந்த விளையாட்டாகும். இதுவும் குழந்தைகளின் குறிதிறனை அதிகமாக்கும். அளவீட்டு கணிதமுறையை நன்கு விளங்கச் செய்யும். கைகளை வலுப்படுத்தும். சிந்தனையையும் செம்மையாக்கும்.

    ஆடுபுலிஆட்டம்-ஏணிக் கட்டம்

    தாயக்கட்டம்போல குறிப்பிட்ட வடிவில் அமைந்த கோடுகளில் இரு விதமான காய்களைக் கொண்டு ஆடப்படுகிறது ஆடுபுலியாட்டம். ஒரு வகை காய்கள் புலி ஒன்றும், மற்றொரு வகை காய்கள் ஆடு என்றும் குறிப்பிடப்படும். அடுத்தடுத்த புள்ளிகளுக்கு காய்களை நகர்த்தும்போது புலியின் பிடியில் சிக்காமல் ஆடுகளை நகர்த்துவதே இந்த விளையாட்டு. இப்படி விளையாடுவதால் புத்தி கூர்மையடையும். தன்னம்பிக்கை வளரும். சிக்கலைத் தீர்க்கும் சாதுர்ய தன்மை வளரும். புதுப்புது எண்ணங்கள் உருவாகும். ஆடுகளாக இருந்தாலும் புலியை மடக்க முடியும் எனும்போது தலைக்கனத்தை குறைக்கும் தன்மையையும் இந்த விளையாட்டு வழங்கும்.

    இதுபோன்றதே பாம்பு ஏணி ஆட்டம். கணிதத் திறன் வளர்க்கும். வாழ்வின் ஏற்ற இறக்கங்களை புரிய வைத்து வாழ்வியல் திறன் வளர்க்கும்.



    கயிறாட்டம்

    சிறுமிகளுக்கு ஏற்ற விளையாட்டு கயிறாட்டம். ஆங்கிலத்தில் ‘ஸ்கிப்பிங்’ எனப்படும் இந்த விளையாட்டு குழந்தைகளின் மூச்சுமண்டலத்தை தூய்மையடையச் செய்யக்கூடியது. உடல்உறுப்புகள் அனைத்தும் நன்கு செயல்படத்தூண்டும். உடற்கழிவுகளை வெளியேற்றும். பெண்களின் கருப்பை வலுப்பெற உதவி செய்யும். இது விளையாட்டு என்பதுடன் சிறந்த உடற்பயிற்சி என்றே கூறிவிடலாம்.

    ஊதித்தள்ளும் விளையாட்டும் நமது பாரம்பரியத்தில் இருந்துள்ளது. புளி விதைகளை வட்டத்திற்குள் வைத்து ஊதி ஊதி கோட்டிற்கு வெளியே நகர்த்திவிட்டு அதை தனக்கு உரிமையாக்கி வெற்றி கொள்வது இந்த விளையாட்டு. மூச்சுமண்டலம் வலுவடையச் செய்கிறது இந்த விளையாட்டு. செரிமான சிக்கல்கள் தோன்றாது. புரிந்துணர்வும், சிக்கலை தீர்க்கும் மதி நுட்பமும் வேலை செய்யும்.

    இன்று இந்த விளையாட்டுகளில் பல மறக்கடிக்கப்பட்டுவிட்டன. நகர வளர்ச்சியும், செல்போன் விளையாட்டுகளும் அதற்கு முக்கிய காரணமாகும். கோடை நேரத்தில் ஸ்மார்ட்போனில் விளையாடுவதையும், வெயிலில் விளையாடுவதையும் தவிர்த்து, மதியையும், உடலையும் வளமாக்கும் நம் பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடி மகிழ்வோம்.

    பம்பரம்

    சிறுவர்கள் விரும்பும் விளையாட்டுகளில் ஒன்று பம்பரம். கயிற்றால் சுற்றி ஆட்டுவிக்கப்படும் பம்பரங்கள் மனதுக்கு மகிழ்ச்சியைத் தரும். வட்டத்தில் வைத்து, பம்பரங்களை வெளியேற்றி விளையாடுவது சுவாரஸ்யமிக்க பம்பரம் விளையாட்டாகும். சரியாக குறிபார்த்து பம்பரத்தை அடித்து வெளியேற்று வதால் சிறுவர் களின் குறித் திறனை இந்த விளையாட்டு வளர்க்கும். மதி நுட்பத்தையும், இலக்குடன் செயல்படும் திறனையும் வளர்க்கும், எதிராளியின் திட்டத்தை யூகித்து அறியும் ஆற்றல் மேம்படும். தனது பம்பரம் வட்டத்தில் இருந்து வெளியேற காத்திருப்பது பொறுமையை வளர்க்கும். எதிராளியின் வேகத்திற்கு ஈடுகொடுத்து செயல்படும்போது சுறுசுறுப்பை தரும். போட்டியை எதிர்கொள்ளும் மனப்பான்மையையும் வளர்க்கும்.
    நலிந்த நிலையில் உள்ள முன்னாள் விளையாட்டு வீரர்கள் ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்து உள்ளார்.
    ஊட்டி:

    நலிந்த நிலையில் உள்ள முன்னாள் விளையாட்டு வீரர்கள் ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    விளையாட்டுத் துறையில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்று, தற்போது நலிந்த நிலையில் உள்ள நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் விளையாட்டு வீரர்கள் ஓய்வூதிய உதவித் தொகையாக மாதம் ரூ.3 ஆயிரம் வழங்கும் திட்டத்தின் கீழ், விண்ணப்பங்களை www.sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்று முதலிடம், 2-ம் இடம், 3-ம் இடம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

    மத்திய அரசால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான போட்டிகள், அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள், இந்திய ஒலிம்பிக் சங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு சம்மேளனங்களால் நடத்தப்பட்ட சர்வதேச, தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள், விளையாட்டு அமைச்சகம் இந்திய விளையாட்டு ஆணையத்தால் நடத்தப்பட்ட சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகள், சர்வதேச போட்டிகளாயின் குறைந்தபட்சம் ஆறு நாடுகளில் பங்கேற்றிருக்க வேண்டும்.

    கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதியன்று 58 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரரின் மாத வருமானம் ரூ.6 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மத்திய அரசின் விளையாட்டு வீரருக்கான ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் மத்திய, மாநில அரசின் கீழ் ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் முதியோருக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதி இல்லை. தகுதி உள்ள முன்னாள் விளையாட்டு வீரர்கள் இணையதளம் மூலம் வருகிற பிப்ரவரி மாதம் 21-ந் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
    கரூர் மாவட்டம் புன்னம்சத்திரம் சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு விழா நடை பெற்றது.

    வேலாயுதம்பாளையம்:

    கரூர் மாவட்டம் புன்னம்சத்திரம் சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு விழா நடை பெற்றது. சேரன் பள்ளிகளின் தலைவர் கருப்பண்ணன் தலைமை தாங்கினார். சேரன் பள்ளிகளின் தாளாளர் பாண்டியன் முன்னிலை வகித்தார். கரூர் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்அமலி டெய்சி சிறப்பு விருந்தினராக பங்கேற்று கண்கவர் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். மாணவர்கள் விளையாட்டையும் கல்வியையும் கண்களாக கொள்ள வேண்டும்.பெண்கள் கல்வி பெற வேண்டும் என்றார்.

    விழாவிற்கு வந்தவர்களை வரவேற்றும் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தும் சேரன் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தேவராஜன் பேசினார்.

    சேரன் விடுதி தாளாளர் சித்ரா பாண்டியன், சேரன் பள்ளிகளின் நிர்வாக அலுவலர் கணபதி ஆகியோர் விழாவில் பங்கேற்றனர். மாநில போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு பரிசுகள் வழங்கி சிறப்பு விருந்தினர் பாராட்டினார். பல்வேறு விதமான விளையாட்டு போட்டிகளும், வண்ண மயமான அணிவகுப்பும், ஒலிம்பிக் சுடர் ஓட்டமும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

    நிகழ்ச்சியில் சேரன் பள்ளிகளின் தாளாளர் பெரியசாமி , ஹரிகீர்த்தன், தரணிஹரிகீர்த்தன் மற்றும் வெண்ணைமலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் பழனியப்பன் , புன்னம்சத்திரம் சேரன் கல்வியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் சு.சுமதி, சேரன் உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் அமுதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.முடிவில் பள்ளியின் தமிழா சிரியர் உமையொருபாகம் நன்றி கூறினார்.விழா ஏற்பாடுகளை மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தேவராஜன் , மெட்ரிக் பள்ளி முதல்வர் பாஸ்கர் வழிகாட்டுதலோடு பள்ளிகளின் உடற்கல்வி ஆசிரியர்களும், யோகா ஆசிரியர்களும் மற்ற ஆசிரியர்களும் செய்திருந்தனர்.

    குழந்தைகளை விளையாட விடாததால் உடல்திறன் மற்றும் மன வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்படுகிறது. குழந்தைகளை விளையாடவிடுவதன் பலன்களைத் தெரிந்துகொள்வோம்.
    வெளியே விளையாடினால் ஏதேனும் பாதிப்பு வந்துவிடும் என்று வீட்டிலேயே பொத்திபொத்தி பாதுகாக்கின்றனர். இதனால், குழந்தைகளின் உடல்திறன் மற்றும் மன வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்படுகிறது. குழந்தைகளை விளையாடவிடுவதன் பலன்களைத் தெரிந்துகொள்வோம்.

    உடல் உழைப்பு இன்மை, ஜங்க் புஃட் காரணமாக நகர்ப்புற குழந்தைகளில் நான்கில் ஒருவர் உடல்பருமனாக உள்ளனர். அதுவும், தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளில், 26 சதவிகிதம் பேரும் அரசுப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளில், 4.5 சதவிகிதம் பேரும் உடல்பருமனாக உள்ளனர். ஓடியாடி விளையாடும்போது தேவையற்ற கலோரி, கொழுப்பு எரிக்கப்படுகிறது. இதனால், குழந்தைகள் ஃபிட்டாக இருப்பர்.

    விளையாடும்போது மற்ற குழந்தைகளுடன் பழக்கம் ஏற்படுகிறது. இது, கூட்டுறவு மற்றும் சமூகத்துடன் இணைந்து செயல்படும் திறனை வளர்க்க உதவுகிறது. இது, குழந்தையின் படைப்பாற்றலை அதிகரிக்கவும், பிரச்னைகளைச் சமாளிக்கும் திறனை, முடிவெடுக்கும் திறனை வளர்க்கவும் உதவுகிறது. குழுவாக விளையாடும்போது பிரச்னை ஏற்பட்டால், அதை சமாளிக்கும் திறனும் அவர்களுக்கு ஏற்படுகிறது. வீட்டிலேயே அடைந்துகிடக்கும் குழந்தைகளுக்கு இந்தத் திறன் மிகக் குறைவாகவே இருக்கிறது.

    ‘குழந்தைகள் விளையாடும்போதுதான் அவர்கள் மூளை வளர்ச்சி நன்றாக இருக்கிறது’ என்கிறது ‘அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ்’ ஆய்வு. குழுவாக விளையாடும்போது, குறிப்பிட்ட விஷயத்தில் கவனத்தைச் செலுத்தும் திறன், சமாளிக்கும் திறன், இதற்காக கை, கால், கண்கள் என ஐம்புலன்களையும் ஒருங்கிணைத்து செயல்படும் திறன் மேம்படுகிறது.

    “பள்ளிகளில் விளையாட்டு நேரம் என்பது பெயரளவுக்குத்தான் உள்ளது. குறைந்தது 15 நிமிடங்களாவது குழந்தைகளை விளையாட அனுமதிக்கும்போதுதான் அவர்களது கல்வி கற்கும் திறன் மேம்படும்” என்கின்றனர் குழந்தைகள் நல மருத்துவர்கள்.

    மொபைல் விளையாட்டில் குழந்தைகளுக்கு வெறித்தனம் அதிகரிக்க அதிகரிக்க படிப்பு உள்பட்ட அவர்களது அன்றாட செயல்கள் அனைத்தையும் அது பாதிக்கும்.
    விளையாட்டுகளால் குழந்தைகளுக்கு பலனுண்டு. ஆனால் இது பலனற்ற விபரீதமான விளையாட்டு! குழந்தைகளின் எதிர்காலத்தை முற்றிலுமாக தகர்க்கும் விளையாட்டு!

    திருடனை பிடிப்பது-மறைத்து வைத்திருக்கும் வெடிகுண்டுகளை கண்டறிவது-மந்திரவாதிகளை ஒரு கை பார்ப்பது…போன்ற அனைத்து விளையாட்டுகளிலுமே, விளையாடும் குழந்தைகளே ‘ஹீரோ’ ஆகிக்கொள்கிறார்கள். நண்பர்களோடு சேர்ந்து விளையாடும்போது ஒருவரை ஒருவர் வீழ்த்தப்பார்க்கிறார்கள்.

    அவர்களை அடிமைப்படுத்தும் விதத்தில்தான் ஒவ்வொரு விளையாட்டும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. வெற்றிபெற வேண்டும் என்ற வெறியை உருவாக்கும் விதத்தில் அது உள்ளது. மதுவுக்கு அடிமையாவது போன்ற சூழல் இல்லை என்றாலும், சில குழந்தைகளிடம் அதைவிட மோசமான பாதிப்பையும் இந்த விளையாட்டுகள் ஏற்படுத்தியிருக்கின்றன.

    விளையாட்டில் அவர்களுக்கு வெறித்தனம் அதிகரிக்க அதிகரிக்க படிப்பு உள்பட்ட அவர்களது அன்றாட செயல்கள் அனைத்தையும் அது பாதிக்கும். முழு கவனமும் விளையாட்டை நோக்கி சென்று குழந்தைகளை அடிமையாக்கும் முன்பு அவர்களை காப்பாற்றியாக வேண்டும்.

    ‘எனது குழந்தை சமர்த்து. அவன் ஒருபோதும் மொபைல் கேம்ஸ்க்கு அடிமையாகமாட்டான்’ என்று நீங்கள் நினைக்கிறீர்களா? தவறு!. அப்படி நினைக்காதீர்கள். எவ்வளவு புத்திசாலியான குழந்தை என்றாலும் இந்த விளையாட்டுக்கு அடிமையாகிவிடும். எப்போதும் துறுதுறுவென்று இருக்கும் ‘ஹைப்பர் ஆக்டிவிட்டி’ குழந்தைகள் எளிதாக இந்த விளையாட்டுக்கு அடிமையாகிவிடுவார்கள். பெற்றோர் அருகில் இல்லாத குழந்தைகளும், பெற்றோரின் கண்காணிப்பு குறைவாக உள்ள குழந்தைகளும் அதிகம் பாதிக்கப்படும்.

    மூளைப்பகுதியில் ‘டோபாமின்’ என்ற ஹார்மோன் சில குழந்தைகளுக்கு அதிகம் சுரக்கும். அவர்கள் இந்த விளையாட்டுக்கு எளிதாக அடிமையாகிவிடுவார்கள். ‘ஆன்லைனில்’ குழந்தைகள் அதிக நேரம் விளையாடுவதும் ஆபத்துதான். அவை குழந்தைகளை தொடர்ச்சியாக விளையாடவைக்கும். பிரச்சினைக்குரிய பெரியவர்களோடு தொடர்பினை ஏற்படுத்தி புதிய தொந்தரவுகளையும் உருவாக்கும்.

    உங்கள் குழந்தைகள் தினமும் 1-2 மணி நேரத்துக்கு மேல் மொபைலில் கேம்ஸ் விளையாடினால் உடனே அதை கட்டுப்படுத்துங்கள். ஒரு மணி நேரத்துக்கு மேல் விளையாட அனுமதிக்காதீர்கள். உங்கள் குழந்தை இந்த விளையாட்டுக்கு அடிமையாகி இருந்தால் உடனே விளையாட்டில் இருந்து விடுபடச்செய்ய முயற்சிக்க வேண்டாம்.

    படிப்படியாக விளையாடும் நேரத்தின் அளவை குறைத்துக்கொண்டே, அதற்கு பதிலாக நல்ல பொழுதுபோக்குகளில் ஈடுபட ஏற்பாடு செய்யுங்கள். ‘விளையாட்டில் இருந்து விலகி, முழு நேரமும் படிக்க வேண்டும்’ என்பதுபோல் வற்புறுத்த வேண்டாம். ‘அந்த விளையாட்டில் இருந்து விடுபட்டால் பார்க், பீச், நல்ல சினிமாக்களுக்கு கூட்டி செல்வேன். நீச்சல் போன்ற பயிற்சிகளுக்கு அனுமதிப்பேன்’ என்று கூறி, குழந்தைகளை ஊக்குவியுங்கள்.

    உங்கள் குழந்தை மொபைல் கேம்ஸ்களுக்கு அடிமையாகிவிட்டால் குழந்தைக்கு மட்டுமல்ல, பெற்றோர்களுக்கும் கவுன்சலிங் அவசியம். அதற்காக மனோதத்துவ நிபுணர்களின் ஆலோசனையை பெறுங்கள்.
    புளூவேலை விட அதிக பயப்படுத்துகிறது மோமோ. மோமோ விளையாட்டின் விபரீதத்தை சொல்லி குழந்தைகள் பாதுகாப்பது எப்படி என்று பார்க்கலாம்.
    “வெளுத்ததெல்லாம் பால்” என நினைக்கும் வயது சிறுவர்களுக்கு உரியது. “எனக்கு எல்லாம் தெரியும்“ என நினைக்கும் வயது பதின்வயதுகளுக்கு உரியது. இவர்களைக் குறிவைத்து களமிறங்கியிருக்கும் ஒரு உயிர்க்கொல்லி விளையாட்டு தான் மோமோ! உயிர்க்கொல்லி விளையாட்டு என்றவுடன் சட்டென உங்கள் நினைவுக்கு புளூவேல் விளையாட்டு வந்திருக்கும். கடந்த 2016, 2017களில் சுமார் 130 உயிர்களைப் பலிவாங்கிய விளையாட்டு அது. ஐம்பது நாட்கள், ஐம்பது சவால்கள். ஐம்பதாவது சவால் தற்கொலை செய்து கொள்வது என்பது தான் புளூவேல் விளையாட்டின் அடிப்படை.அந்த வலையில் விழுந்து உயிரை மாய்த்துக் கொண்டவர்களில் பெரும்பாலானோர் சிறுவர்கள் தான்.

    இப்போது அந்த வரிசையில் வந்து பயத்தை விதைத்துக் கொண்டிருக்கிறது மோமோ. சொல்லப் போனால் புளூவேலை விட அதிக பயப்படுத்துகிறது மோமோ. காரணம் இதற்கு தனியாக எந்த ஆப்ஸையும் டவுன்லோட் பண்ண தேவையில்லை, வாட்ஸ்அப்மூலம் வந்து உயிரை விலைபேசுகிறது என்பது தான். இப்போது தகவல் தொழில்நுட்பம் எல்லோரது கையிலும் ஸ்மார்ட்போனைக் கொடுத்திருக்கிறது. ஸ்மார்ட் போன் இருக்கும் எல்லோரது கையிலும்வாட்ஸ் அப் இருக்கிறது. அது இல்லாமல் இருக்க முடிவதில்லை.

    “ஹாய்“ என வெகு சாதாரணமாக ஏதோ ஒரு எண்ணிலிருந்து வருகின்ற வாட்ஸ்அப் மெசேஜ் தான் மோமோவின் தொடக்கப் புள்ளி. பதிலுக்கு ஒரு ஹாய் அனுப்பினால், ‘என் பெயரை மோமோ என பதிவு செய்து கொள். நாம் நண்பர்களாக இருப்போம்“ என அடுத்த மெசேஜ் வரும். பதிவு செய்தால் ஒரு பயமுறுத்தும் பெண்ணின் படம் டிஸ்ப்ளே பிக்சராக தெரியும்.

    அந்த படத்தை வடிவமைத்தவர் ஜப்பானைச் சேர்ந்த மெடோரி ஹாயான்ஷி எனும் கலைஞர். ஆனால் அவருக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது. சரி, விஷயத்துக்கு வருவோம். கள்ளம் கபடமில்லாத பிள்ளைகள் அந்த எண்ணைச் சேமித்து வைத்தால் அடுத்தடுத்த மெசேஜ்கள் வரும். முதலில் வெகு சாதாரணமாக ‘உனக்குப் பிடித்த நிறம் என்ன?‘ என்பது போல உரையாடல்கள் ஆரம்பித்து வளரும். ஒரு சின்னப் பெண் பூசணிக்காய் ஒன்றை வைத்திருப்பது போலவோ அல்லது மக்கள் கூட்டம் போலவோ வெகு சாதாரணமான சில புகைப்படங்களும் வரும்.

    அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக பேச்சு திசை மாறும். செல்பி எடுத்து அனுப்பு, அந்தரங்க புகைப்படங்கள் அனுப்பு என்பது போல உரையாடல் நீளும். சில நாட்களுக்குப் பின் விபரீதமான செயல்களைச் செய்யச் சொல்லி மெசேஜ் வரும். அதை மறுக்கும் போது அந்தரங்கத்தை வெளியிடுவேன் என்றோ, நெருக்கமானவர்களை ஏதாவது செய்து விடுவேன் என்றோ மிரட்டல் வரும். தலையில்லாத மனிதர்கள், கோரமான அச்சுறுத்தும் புகைப்படங்கள் போன்றவை அனுப்பி வைக்கப்படும்.

    “இதோ செத்துப் போனவர்களுடைய புகைப்படங்கள்“ இதே போல நீயும் செத்துப் போ என்பது போல புகைப்படங்கள் மன உளைச்சலை அதிகரிக்கும். நான் எல்லாவற்றையும் கண்காணித்துக் கொண்டே தான் இருக்கிறேன், உன் தோழி இன்னும் வீடு போய் சேரவில்லை என தற்போதைய தகவலைச் சொல்லி வெலவெலக்க வைக்கும். கடைசியில் மன அழுத்தத்தின் உச்சத்தில் போய் தற்கொலை செய்ய வைக்கும். அதை வீடியோவாகவும் பதிவு செய்யவும் வைக்கும். மெக்சிகோ, கொலம்பியா, ஜப்பான் போன்ற நாடுகளிலிருந்து இத்தகைய வாட்ஸ் அப் எண்கள் வலை வீசுகின்றன. இவை ஒரு சில எண்கள் அல்ல. ஒரு சில எண்களுக்குள் ஒளிந்து கொண்டிருக்கின்ற ஒரு மிகப்பெரிய குழு என்பதை தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் புரிந்து கொள்வார்கள்.



    பார்ப்பதற்கு எளிதான விஷயம் போல தோற்றமளிக்கும் மோமோவில் கண்ணுக்குத் தெரியாத பல பகீர் ஆபத்துகள் ஒளிந்திருக்கின்றன.

    முதலாவதாக, மோமோ அனுப்புகின்ற படங்கள் சாதாரண படங்கள் அல்ல. அவை மால்வேர் எனப்படும் வைரஸ்களைத் தாங்கி வருகின்ற படங்கள். இணையத் தாக்குதல் வெறுமனே நடக்காது. நாம் உள்ளிருந்து கதவைத் திறக்காமல் யாரும் வீட்டுக்குள் நுழைய முடியாது இல்லையா ? அதே போல, நாம் அனுமதி கொடுக்காமல் யாரும் நமது நெட்வர்க்கை உடைக்க முடியாது.

    மோமோ அனுப்புகிற படங்களை நாம் டவுன்லோட் செய்யும் போது அந்த மால்வேர் நமது மொபைலுக்குள் புகுந்து சமர்த்தாய் அமர்ந்து கொள்கிறது. முதலில் நமது முன்பக்க கேமராவை அது கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறது. அது இங்கே நடக்கின்ற நிகழ்ச்சிகளையெல்லாம் நம்மையறியாமலேயே மோமோவுக்கு வீடியோவாகக் காண்பித்துக் கொண்டே இருக்கிறது. நமது முக பாவனைகள், நாம் யாரிடம் பேசுகிறோம், நமது மனநிலை எப்படி இருக்கிறது, பயப்படுகிறோமா என்பதையெல்லாம் அது கண்காணிக்கிறது.

    இரண்டாவதாக நமது மொபைலுக்குள் இருக்கின்ற தகவல்களையெல்லாம் அப்படியே அபேஸ் செய்கிறது. தனிநபர் ரகசியங்கள் வெளியே செல்லும் போது அது எத்தகைய அச்சுறுத்தலுக்கும் விதையாகி விடுகிறது. மூன்றாவதாக, அடுத்தவரை துன்புறுத்தி அதில் இன்பம் காணும் சைக்கோ மனநிலை கொண்டவர்களுக்கு மோமோ விளையாட்டு ஒரு திரில்லான அனுபவமாக இருக்கிறது. தாங்கள் கவனிக்கப்படுகிறோம், தங்களைப் பற்றி உலகமே பேசுகிறது, தாங்கள் நினைத்தால் ஒருவரை சாகடிக்க முடியும் என்பதெல்லாம் அவர்களைப் புளகாங்கிதம் அடையச் செய்கிறது.

    சரி, இந்த மோமோவிலிருந்து பாதுகாப்பாய் இருப்பது எப்படி ?

    குழந்தைகளுக்கு மோமோ பற்றி சொல்லுங்கள். தனிப்பட்ட தகவல்கள், படங்கள், வீடியோக்கள் போன்றவற்றை யாருக்கும் அனுப்பக் கூடாது என்பதை புரிய வையுங்கள்.புதிய எண்ணிலிருந்து என்ன மெசேஜ் வந்தாலும் பதிலளிக்காதீர்கள். உடனடியாக பிளாக் செய்யுங்கள். என்ன தான் நடக்கிறது பார்ப்போமே எனும் அசட்டுத் துணிச்சல் உயிரைப் பலிவாங்கலாம்.

    எந்த படம் வந்தாலும் அனுப்பினவரைப் பற்றித் தெரியாவிட்டால் திறக்கவோ, தரவிறக்கம் செய்யவோ வேண்டாம். அட்மின் யார் என்று தெரியாத குழுக்களில் தங்காதீர்கள், வெளியேறிவிடுங்கள். வாட்ஸப்பில் ஆட்டோ டவுன்லோட் ஆப்ஷனை ஆஃப் செய்தே வையுங்கள். பாதுகாப்பு பகுதிக்குச் சென்று, நமது காண்டாக்ட் லிஸ்டில் இல்லாத நபர்களுக்கு நமது புரஃபைல் தெரியாதபடி மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். குழந்தைகளோடு அதிக நேரம் செலவிடுங்கள்.

    குழந்தைகள் எல்லாவற்றையும் உங்களிடம் சொல்ல உற்சாகப்படுத்துங்கள். குழந்தை சோர்வாகவோ, கலக்கமாகவோ, பதட்டமாகவோ, சரியாகச் சாப்பிடாமலோ, இரவில் தூங்காமலோ இருந்தால் உடனே உஷாராகி விடுங்கள். அவர்களிடம் உடனடியாகப் பேசுங்கள். குழந்தைகளுக்கு ஸ்மார்ட்போன் கொடுப்பதை குறையுங்கள். அவர்களுடைய செயல்பாட்டைக் கவனியுங்கள். உங்களுக்குத் தெரியாதபடி அவர்கள் இரவில் பேசுவதை தடை செய்யுங்கள். எந்தத் தவறை குழந்தை செய்திருந்தாலும் நீங்கள் மன்னிப்பீர்கள் எனும் உண்மையை அவர்களுக்குப் புரியவையுங்கள்.

    தெரிந்த பிள்ளைகள் இந்த விபரீதத்தில் இருந்தால் உடனே வெளியே கொண்டு வர முயலுங்கள். முடியாவிடில் காவல்துறைக்கு தெரியப்படுத்துங்கள்.

    சேவியர்
    படிப்பிலும், விளையாட்டிலும் மாணவர்கள் அக்கறை செலுத்தினால் வாழ்க்கையில் முன்னேறலாம் என்று கவர்னர் கிரண்பேடி அறிவுரை கூறியுள்ளார்.

    சேதராப்பட்டு:

    புதுவை ஆலங்குப்பத்தில் கால்பந்து விளையாட்டில் மாணவர்கள் ஏராளமானோர் ஆர்வத்துடன் தினமும் அங்குள்ள அரசு பள்ளி மைதானத்தில் பயிற்சி பெற்று வருகிறார்கள்.

    இவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இன்று காலை 7 மணிக்கு கவர்னர் கிரண்பேடி ஆலங்குப்பத்துக்கு சென்றார்.

    அங்கு கால்பந்து வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ரோட்டரி சங்கம் வழங்கிய கால்பந்து விளையாட்டு உபகரணங்களை கவர்னர் கிரண்பேடி வீரர்களுக்கு வழங்கினார்.

    மேலும் வீரர்களுடன் சேர்ந்து கால்பந்து விளையாடிய கவர்னர் கிரண்பேடி அவர்களுடன் குரூப் போட்டோ எடுத்து கொண்டார்.

    பின்னர் விளையாட்டு வீரர்கள் மத்தியில் கிரண்பேடி பேசியதாவது:-

    படிப்பிலும், விளையாட்டிலும் மாணவர்கள் அக்கறை செலுத்த வேண்டும், இதன் மூலம் வாழ்க்கையில் முன்னேறலாம். இன்று அரசியல்வாதிகள், அரசு பதவிகளில் உள்ளவர்கள் உயர்ந்த இடத்தில் இருப்பதற்கு அவர்கள் ஏதேனும் ஒரு விளையாட்டில் ஈடுபட்டவர்களாக இருப்பார்கள்.

    ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12-ந் தேதி விவேகானந்தர் பிறந்த நாளை தேசிய இளைஞர் தினமாக கொண்டாடி வருகிறோம். வருகிற ஜனவரி 12-ந் தேதி விவேகானந்தர் பிறந்த நாளை கால்பந்து தினமாக கடைபிடிக்க மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

    எனவே, நகரம் மற்றும் கிராமங்களில் மாணவர்கள் கால்பந்து ஆர்வத்துடன் விளையாட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அப்போது கவர்னருடன் வந்த கலெக்டர் அபித்ஜித் சிங், படிக்கும் போது விளையாட்டில் ஆர்வம் செலுத்த வேண்டும். அப்போது தான் தேர்வில் குறைந்தமதிப்பெண் எடுத்து தோல்வி அடைந்தாலும் தோல்வியை சகஜமாக எடுத்து கொள்ள முடியும் என்றார்.

    விளையாட்டுகளில் ஈடுபடுவர்கள் கல்வியிலும் தம்மை சிறந்தவர்களாக வளர்த்து கொள்கின்றனர். விளையாட்டில் ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடுகளை கற்றுக்கொள்கின்றனர்.
    இன்றைய மாணவர்கள் செல்போன்கள் மூலம் சமூக வலைத்தளங்களிலேயே பொழுதை போக்குவதால் விளையாட்டின் அருமை, பெருமைகள் தெரியாமல் இருக்கிறார்கள். இது அவர்களது உடல்நிலையில் பாதிப்பை ஏற்படுத்தும். விளையாடுவதால் ஏற்படும் நன்மைகளை மாணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

    மாணவர்கள் விளையாட்டில் ஆர்வத்துடன் ஈடுபடும் போது அவர்கள் திறமையை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் உருவாகின்றது. அவர்களுக்கு சுயவிழிப்புணர்வு ஏற்படுகின்றது. குழு விளையாட்டில் ஈடுபடும் ஒரு மாணவர், தனது அதிகமான நேரத்தை விளையாட்டிற்கு செலவழித்து, பல செயற்பாடுகளை அதற்காக மேற்கொள்கிறார். அதன் காரணமாக தொடர்ச்சியான பயிற்சிகளுக்கு அவர் உள்வாங்கப்படுகின்றார். எனவே, அவர் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவராகவும், முழுமையான ஆரோக்கியம் உள்ள நபராகவும் மாறுகிறார்.

    விளையாட்டு பயிற்சிகள் மற்றும் விளையாட்டுகளின் போது ஒவ்வொரு மாணவரும், மற்ற மாணவர்களுடனும், பயிற்சியாளர்களுடனும் உறவுகளை ஏற்படுத்திக் கொள்கின்றனர். இதனால் மாணவர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படுவதுடன், அவர்கள் சமூகத்துடன் புதிய உறவுகளை வளர்த்துக்கொள்கிறார்கள். விளையாட்டுகளில் ஈடுபடுவர்கள் கல்வியிலும் தம்மை சிறந்தவர்களாக வளர்த்து கொள்கின்றனர். விளையாட்டில் ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடுகளை கற்றுக்கொள்கின்றனர். அதுவே அவர்கள் கல்வியிலும் சிறந்தவர்களாக மாற காரணமாக இருக்கின்றது.

    விளையாட்டில் ஈடுபடும் போது வெற்றி, தோல்வி ஆகிய இரண்டையும் எதிர்கொள்ள வேண்டியிருப்பதால் தோல்வியை தாங்கிக்கொள்ளும் தன்மை, வெற்றியை கொண்டாடும் முறைமை மற்றும் சந்தர்ப்பங்களின் போது தமது அணியின் ஏனைய வீரர்களின் நிலையை அறிந்துகொள்ளல் போன்றவற்றை அவர் கற்றுக்கொள்கிறார். இவை அனைத்தும் எதிர்காலத்தில் அவர் தனது இலக்குகளை வெற்றி கொள்வதற்கு அதிக பங்களிப்பை செலுத்துகின்றன.

    விளையாட்டில் ஈடுபடும் மாணவர் பயிற்சியாளர்கள், ஆசிரியர்கள், நடுவர்கள் ஆகியோரை மதித்து நடக்க வேண்டிய கட்டாயம் இருக்கின்றது. எனவே விளையாட்டில் உண்டாகும் இந்த ஏனையோரை மதிக்கும் பழக்கம், பின்னர் மாணவரது வாழ்க்கையிலும் தானாகவே நிலைத்து நிற்கின்றது. விளையாட்டில் ஈடுபடும் போதும், அதற்கான பயிற்சிகளின் போதும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உற்சாகப்படுத்தும் போது அவர்கள் மீது மதிப்பு மரியாதை ஏற்படும். இவ்வாறு பல நன்மைகளை ஏற்படுத்துவதாக விளையாட்டும், அதற்கான பயிற்சியும் அமைந்துள்ளது. 
    முள்ளூர் அரசு உயர் நிலைப்பள்ளியில் கிராம ஊராட்சி விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இதில் பேசிய கலெக்டர் மாணவர்கள் விளையாட்டில் ஆர்வம் செலுத்த வேண்டும் என்றார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், முள்ளூர் அரசு உயர் நிலைப்பள்ளி மைதானத்தில் கிராம ஊராட்சி விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. அதனை மாவட்ட கலெக்டர் கணேஷ் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் தெரிவித்ததாவது:-

    கிராமங்களில் உள்ள திறமையான விளையாட்டு வீரர்களை கண்டறிந்து அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்து சிறந்த விளையாட்டு வீரர்களாக உருவாக்கும் வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் விளையாட்டுப்போட்டிகள் நடத்த தமிழக முதல்வர் அறிவுறுத்தி  உள்ளார். 

    அதன் அடிப்படையில் முள்ளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் கிராம ஊராட்சி விளையாட்டுப் போட்டிகள்  தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களிலும்   2 கட்டங்களாக நடத்தப்பட உள்ளது.  இப்போட்டிகள் 11.7.2018 வரை 2 கட்டமாக நடத்தப்பட உள்ளது. 

    மாணவர்களின் எதிர் காலத்தில் வேலை வாய்ப்புகளின் விளையாட்டு பிரிவிற்கென சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது. கல்வி கற்கும் காலங்களிலேயே மனநலம், உடல் நலத்தை மேம்படுத்தும் விளையாட்டிலும் ஆர்வம் செலுத்த வேண்டும் என்றார்.
    ×