என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தென்காசி"
நெல்லை மாவட்டத்தில் கடந்த வாரம் வெயில் சுட்டெரித்தது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக வெப்பம் குறைந்து ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. நேற்று முதல் இன்று காலை வரை அதிகபட்சமாக தென்காசியில் 41.5 மில்லி மீட்டர் மழையும், செங்கோட்டையில் 41 மில்லி மீட்டர், சிவகிரியில் 40 மில்லி மீட்டர், ஆய்க்குடியில் 39.4 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது.
கருப்பாநதி அணை பகுதியில் 38 மில்லி மீட்டர், அடவிநயினார் அணை பகுதியில் 23 மில்லி மீட்டர், குண்டாறு 21 மில்லி மீட்டர், ராமநதி அணை பகுதியில் 18 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது. நேற்று இரவு 7.30 மணி முதல் இரவு 9 மணி வரை சூறைக்காற்றுடன் பலத்த இடி- மின்னலுடன் தென்காசி, செங்கோட்டை, புளியரை, இலஞ்சி, கணக்கப்பிள்ளை வலசை பகுதியில் கனமழை கொட்டியது.
அப்போது குண்டாறு பாலம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பெரிய மரம் சரிந்து விழுந்தது. இதில் உயர் அழுத்த மின் கம்பங்கள் முறிந்து மின் கம்பிகள் அறுந்து சாலைகளில் விழுந்தன. இதனால் கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக மின் வாரிய அதிகாரிகள் மற்றும் போலீசார் விரைந்து செயல்பட்டு மின்சாரத்தை துண்டித்தனர். இதனால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. போக்குவரத்து வல்லம் வழியாக மாற்று பாதையில் அனுப்பப்பட்டது.
பலத்த மழை காரணமாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் இன்று தண்ணீர் நன்றாக கொட்டுகிறது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் இன்று நன்றாக தண்ணீர் விழுந்ததால், சுற்றுலா பணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. வழக்கமாக மே மாதம் இறுதியில் தான் குற்றால சீசன் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு ஏப்ரல் இறுதியில் கோடை மழை காரணமாக குற்றால அருவிகளில் தண்ணீர் கொட்டுவதால், சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
இதுபோல நெல்லை மாவட்டத்தின் பிற பகுதியான கடனாநதி அணைப்பகுதியில் 10 மில்லி மீட்டர், சங்கரன் கோவிலில் 5 மில்லி மீட்டர், கண்ணடியன் கால்வாயில் 2.6 மில்லி மீட்டர், பாபநாசத்தில் 2 மில்லி மீட்டர், அம்பையில் 2 மில்லி மீட்டர், சேர்வலாறு 1 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது. வறண்டு கிடந்த பாபநாசம் அணைக்கு மழை காரணமாக வினாடிக்கு 4.86 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையின் நீர்மட்டம் இன்று காலை 16.85 அடியாக குறைந்த அளவில் உள்ளது. அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 54.75 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 34 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையின் நீர்மட்டம் இன்று காலை 76 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 48.69, கடனாநதி-27.40, ராமநதி-25, கருப்பாநதி-31.20, குண்டாறு-11.62, அடவிநயினார்-15 அடிகளாகவும் நீர்மட்டம் உள்ளது.
இந்நிலையில் வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இலங்கையிலும், தென் தமிழகத்திலும் தொடர்ந்து மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.#Rain
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெப்பம் நிலவியது. நேற்று தென்காசியில் அதிகபட்சமாக 80 மில்லிமீட்டர் மழை கொட்டியது. இன்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மேகக்கூட்டங்கள் காணப்படுகிறது. செங்கோட்டை பகுதியில் இன்று காலை வரை 33 மில்லிமீட்டர் மழை பெய்தது. தென்காசியில் 5.4 மில்லிமீட்டரும், குண்டாறு பகுதியில் 9 மில்லிமீட்டர் மழையும் பெய்துள்ளது. மற்ற இடங்களில் மழை பெய்யவில்லை.
கடும் வெப்பம் நிலவுவதால் அணைகளில் நீர்மட்டம் மிகவும் குறைந்து விட்டது. பாபநாசம் அணையில் 23.45 அடியாக நீர்மட்டம் குறைந்துவிட்டது.
இதனால் அணையில் 202.30 மில்லியன் கனஅடி நீர்மட்டுமே உள்ளது. இந்த தண்ணீர் இன்னும் 1 வாரத்திற்கு மட்டுமே போதுமானது. அதன் பிறகு மழை பெய்யாவிட்டால் பாபநாசம் அணை மூடப்பட்டு விடும்.
மணிமுத்தாறு அணையில் மட்டுமே ஓரளவு நீர் இருப்பு உள்ளது. அங்கு 74.02 அடியாக நீர்மட்டம் உள்ளது. இதனால் மணிமுத்தாறு அணை தண்ணீர் குடிநீருக்கு பயன்படுத்தப்பட உள்ளது. சேர்வலாறு அணையில் 47.61 அடியாக நீர்மட்டம் உள்ளது. மற்ற அணைகளில் நீர்மட்டம் மிகவும் குறைந்து விட்டது.
தற்போது தென்காசி, செங்கோட்டையில் மழை பெய்துள்ளதால் மெயினரு, ஐந்தருவியில் இன்று லேசாக தண்ணீர் விழுந்தது. மற்ற அருவிகளில் தண்ணீர் விழவில்லை.
தென்காசி:
தென்காசி அருகே மேற்கு தொடர்ச்சி மலையடி வாரத்தில் இருந்து சற்று தொலைவில் உள்ள கிராமம் மத்தளம்பாறை. இந்த பகுதியில் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. இப்பகுதியில் கடந்த வாரம் காட்டு யானைகள் புகுந்தன. அவை அங்கு பயிரிட்டிருந்த தென்னை, நெற்பயிர்களை சேதப்படுத்தின.
இந்நிலையில் நேற்று முன்தினமும் இரவு அதே பகுதியில் காட்டு யானைகள் கூட்டமாக புகுந்தன. அவை மத்தளம்பாறையை சேர்ந்த அருணாச்சலம், சேதுராமன், பொன்னையா, இசக்கி, வேலாயுதம் ஆகியோருக்கு சொந்தமான வயல்களில் பயிரிடப்பட்டிருந்த நெற் பயிர்களையும், தென்னை, வாழை மரங்களையும் சேதப்படுத்திவிட்டு காட்டுக்குள் சென்று விட்டன.
இதில் 132 தென்னை மரங்களும், 8 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள், 3 ஏக்கரில் பயிரிட்டிருந்த நெற்பயிர்கள் சேத மடைந்தன. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த குற்றாலம் வனவர் பாண்டியராஜ், வனக்காவலர் வனராஜ், வேட்டை தடுப்பு காவலர்கள் மாடசாமி, ராஜு, சிவா ஆகியோர் சேத மடைந்த பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் வனத்துறை ஊழியர்கள் இரவில் பொதுமக்கள் உதவியோடு யானைகளை காட்டுக்குள் விரட்டினர். இது தொடர்பாக குற்றாலம் வனத்துறை ரேஞ்சர் ஆரோக்கியசாமி கூறியதாவது:-
மத்தளம்பாறை பகுதிக்குள் புகுந்த காட்டு யானைகள் விரட்டப்பட்டு விட்டன. இந்த யானைகள் களக்காடு பகுதியில் இருந்து வந்துள்ளன. தொடர்ந்து யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நெல்லை:
தென்காசி அருகே உள்ள ஆய்க்குடியை அடுத்த அகரக்கட்டு கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி சங்கரம்மாள் (வயது33). நேற்று அதிகாலை இவர் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது கோட்டைச் சுவற்றை ஏறி குதித்து உள்ளே நுழைந்த வாலிபர், சங்கரம்மாள் கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்க சங்கிலியை இழுத்து அறுத்தார்.
அப்போது சங்கரம்மாள் விழித்து கொண்டதால் செயினை பிடித்து கொண்டு திருடன் திருடன் என கூச்சலிட்டார். ஆனாலும் கொள்ளையன் செயினின் ஒரு பகுதியை அறுத்துக் கொண்டு ஓடிவிட்டான். இதில் 23 கிராம் எடையுள்ள பகுதி கொள்ளையனின் கையில் சிக்கி விட்டது. மீதமுள்ள 9 கிராம் எடையுள்ள செயின் சங்கரம்மாள் கையில் இருந்தது.
உடனடியாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கொள்ளையனை விரட்டி சென்று தேடினார்கள். ஆனால் அதற்குள் அவர் தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து சங்கரம்மாள் ஆய்க்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையனை தேடி வருகிறார்கள்.
கேரள மாநிலம் சபரிமலையில் அனைத்து வயதுடைய பெண்களும் தரிசனம் செய்யலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சபரிமலை தீர்ப்பை கண்டித்தும், அனைத்து வயது பெண்கள் செல்ல எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க. பிரமுகர் சசிகலா என்பவரை நேற்று இரவு கேரள அரசு கைது செய்தது.
இதனை கண்டித்து கேரளாவில் பா.ஜ.க. சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது. இதை தொடர்ந்து தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. காலை 6 மணிக்கு பின்னர் எந்த வாகனமும் செல்லவில்லை.
தினமும் செங்கோட்டை வழியாக ஏராளமானவர்கள் கேரளாவிற்கு சென்று வருகின்றனர். இன்று வாகனங்கள் இயக்கப்படாததால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இதையடுத்து ரெயிலில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதேபோல் கேரளாவில் இருந்து நெல்லை வந்த அரசு பஸ்கள் அனைத்தும் தென்காசி புதிய பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இன்று மாலை 6 மணிக்கு பின்னர் வழக்கம்போல் வாகனங்கள் இயங்கும். #sabarimala
நெல்லை:
தென்காசி அருகே உள்ள இலத்தூரை அடுத்த மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் மதன்குமார் (வயது27). இவர் அந்த பகுதியில் மாடு மேய்த்து வந்தார். நேற்று மாடுகளை குளிப்பாட்ட அந்த பகுதியில் உள்ள தண்ணீர் குட்டைக்குள் இறங்கினார். அப்போது மதன்குமாருக்கு திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டது. இதில் தண்ணீரில் விழுந்த மதன்குமார் சம்பவ இடத் திலேயே நீரில் மூழ்கி பலியானார்.
இதுகுறித்து இலத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மோதலில் 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தார்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து செங்கோட்டையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டுள்ளனர். செங்கோட்டையில் முக்கிய வீதிகளில் போலீசார் ரோந்து சுற்றி வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மதியம் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டன. மாலையில் இந்த சிலைகள் குண்டாறில் கரைக்கப்படுகிறது.
இதனிடையே திட்டமிட்ட பாதை வழியாக ஊர்வலம் செல்லும் போது மீண்டும் பிரச்சினை வரக்கூடாது என்பதற்காக இருதரப்பினரையும் அழைத்து கலெக்டர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து மேலும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க செங்கோட்டை, தென்காசி பகுதியில் 144 தடை உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா பிராபகர் சதீஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-
செங்கோட்டை பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. செங்கோட்டை மற்றும் தென்காசி தாலுகா பகுதிகளில் நாளை காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மற்ற இடங்களில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது தேவைபட்டால் 144 தடை உத்தரவு விரிவுபடுத்தப்படும். குற்ற நிகழ்வுகள் நடைபெறாமல் தடுக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #VinayagarChathurthi #Section144
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்