search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்தியப்பிரதேசம்"

    மத்தியப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த குப்பை சேகரித்து பிழைப்பு நடத்துபவரின் மகன் எய்ம்ஸ் மருத்துவ படிப்புக்கு தேர்வானதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். #AIIMS #AsharamChoudhary #RahulGandhi
    புதுடெல்லி:

    மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் தேவாஸ் நகரை சேர்ந்தவர் ஆஷாராம் சவுத்ரி (18). இவரது தந்தை தெருவோர குப்பைகளில் இருந்து விலைபோகும் பொருள்களை சேகரித்து விற்று வாழ்க்கை நடத்தி வருகிறார். இவரது வீட்டில் மின்சாரமும், கழிப்பறையும் கிடையாது. ஆஷாராம் சவுத்ரி அரசு பள்ளியில் படித்து சக மாணவர்களுடன் போட்டி போட்டு படித்து வந்தார். 

    நாடு தழுவிய அளவில் மே 6-ம் தேதி நடைபெற்ற மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் ஆஷாராம் சவுத்ரி 803 வது ரேங்க் பெற்று தேர்ச்சி அடைந்தார்.
     
    அதன்பின்னர், டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வு மே 27-ம் தேதி நடைபெற்றது. இதில் ஆஷாராம் தேர்வெழுதினார்.

    இந்த நுழைவு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. மொத்தமுள்ள 707 இடங்களில் 141-வது இடம் பிடித்து முதல் முயற்சியிலேயே ஆஷாராம் தேர்வானார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், எய்ம்ஸ் மருத்துவமனை நுழைவு தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. நரம்பியல் நிபுணர் ஆவதே எனது இலக்கு. எனது சொந்த கிராமத்துக்கு தேவைப்படும் மருத்துவ வசதிகளை பெற்று தருவேன் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். 

    இதற்கிடையே, எய்ம்ஸ் மருத்துவமனை நுழைவு தேர்வில் முதல் முயற்சியில் இடம் பிடித்த ஆஷாராம் சவுத்ரிக்கு வாழ்த்து தெரிவித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதுதொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில், எய்ம்ஸ் மருத்துவமனை நுழைவு தேர்வில் முதல் முயற்சியில் வெற்றி பெற்ற உனக்கு எனது வாழ்த்துக்கள். தேசிய வளர்ச்சியில் உனது பங்களிப்பை நல்க வேண்டும் என வாழ்த்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார். #AIIMS #AsharamChoudhary #RahulGandhi
    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு வெங்காயம், மிளகாய் விளைச்சல் குறித்து தெரியுமா? என முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கேள்வி எழுப்பியுள்ளார். #SivarajSinghChauhan #RahulGandhi
    போபால்:

    மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் பா.ஜ.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கலந்து கொண்டார். இதில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது சிவராஜ் சிங் சவுகான் பேசியதாவது:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் மண்டாசூர் பகுதிக்கு வந்து அங்குள்ள விவசாயிகளை பார்த்து ஆறுதல் கூறியுள்ளார். அப்போது அவர், தான் பிரதமராக தயாராக இருக்கிறேன் என்கிறார். ஆனால் அவரை யார் பிரதமராக்க போகிறார்கள்?

    விவசாயிகளை சென்று சந்தித்து ஆறுதல் கூறி வரும் ராகுலுக்கு, வெங்காயம் மற்றும் மிளகாய் ஆகியவை எப்படி விளைகின்றன என தெரியுமா? மிளகாய் மேல் நோக்கி வளருகிறதா, கீழ் நோக்கியா என்பதை அறிவாரா? வெங்காயம் தரைக்கு மேலே அல்லது தரைக்கு கீழே எப்படி வளர்கிறது என்பதை அறிவாரா?

    காங்கிரஸ் ஒரு குடும்பத்தின் கீழ் ஆட்சி நடத்தி வருகிறது. ஆனால் பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க. நல்லாட்சியை தந்து கொண்டிருக்கிறது. அவரது தலைமையில் நாடுவளர்ச்சி பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என தெரிவித்துள்ளார். #SivarajSinghChauhan #RahulGandhi
    மத்தியப்பிரதேச மாநிலத்தில் 72 வயதில் மின்னல் வேக டைப்பிங் செய்யும் மூதாட்டியை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக் பாராட்டியுள்ளார். #MadhyaPradeshtypist #VirenderSehwag #LaxmiVerma

    போபால்:

    மத்தியப்பிரதேச மாநிலம் செஹோர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் லட்சுமி வெர்மா (72) என்ற பெண்மணி டைப்-ரைட்டிங் வேலை செய்து வருகிறார். இந்த வயதிலும் அவரின் மிக வேகமாக டைப்பிங் செய்யும் திறமை உடையவர். லட்சுமி வெர்மா செய்யும் வேலையை வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.

    இதையடுத்து அவரைப் பேட்டியெடுக்க ஏராளமான பத்திரிகையாளர்கள் ஆர்வம் காட்டினர். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேனான வீரேந்தர் சேவாக், தனது டுவிட்டர் பக்கத்தில் லட்சுமிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து அவர் பதிவு செய்திருந்த வாழ்த்து செய்தியில், “என்னைப் பொறுத்தவரை அவர் ஒரு சூப்பர் பெண்மணி. மத்தியப்பிரதேச மாநிலம் சிஹோரில் வாழ்ந்து வரும் அவரிடம் இருந்து இளைஞர்கள் நிறையக் கற்றுக் கொள்ள வேண்டும். வேகத்தை மட்டுமல்ல, உற்சாகமான மனநிலை, கற்பதற்கும், செய்வதற்கும் வேலையோ, வயதோ தடையில்லை என்பதையும் கற்றுக் கொள்ள வேண்டும். அவருக்கு மரியாதையுடன் வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். #MadhyaPradeshtypist #VirenderSehwag #LaxmiVerma
    மத்தியப்பிரதேசம் மாநில விவசாய சங்கங்கள் அறிவித்திருந்த பத்து நாள் தொடர் போராட்டம் அனைத்து மாவட்டங்களிலும் இன்று தொடங்கியது. #MPFarmersstrike
    இந்தூர்:

    மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் விவசாய விளைபொருள் ஏற்றுமதி கொள்கையை நிர்ணயிக்க வேளாண்மைத்துறை ஆராய்ச்சியாளர்களை நியமிக்க வேண்டும். உற்பத்தி கொள்முதலுக்கான அதிகபட்ச ஆதரவு விலையை அறுவடைக்கு 2 மாதங்களுக்கு முன்னதாகவே அறிவிக்க வேண்டும்.

    இயற்கை முறையில் மட்டும் வேளாண்மை செய்யும் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ஏக்கர் ஒன்றுக்கு 8 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை அளிக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஜூன் மாதம் முதல் தேதியில் இருந்து பத்தாம் தேதிவரை தொடர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக 130 விவசாய சங்கங்களை உள்ளடக்கிய மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கிசான் கிராந்தி ஜன் அந்தோலன் என்னும் அமைப்பு அறிவித்திருந்தது.

    இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் பத்தாம் தேதி நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்றும் இந்த அமைப்பின் உறுப்பினர் குசும் சாவந்த் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், இம்மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இன்று போராட்டம் தொடங்கியது. இன்றிலிருந்து தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் இந்த போராட்டத்தின்போது விவசாயிகள் தங்களது விளைபொருட்களை மற்றும் பால் போன்றவற்றை சந்தைகளுக்கு அனுப்ப கூடாது என சங்கத்தின் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளதால், காய்கறி மற்றும் தானியங்களின் விலை கணிசமாக உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

    இந்த தடையை மீறி நீமுச் பகுதியில் சிலர் விளைபொருட்களை சந்தைக்கு கொண்டு செல்ல முயன்றபோது போராட்டக்காரர்கள் வழிமறித்து தகராறில் ஈடுபட்டனர்.

    கடந்த ஆண்டு ஜூன் மாதம் மாநிலம் தழுவிய அளவில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின்போது மன்ட்சூர் பகுதியில் வெடித்த வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர்.

    தற்போது, தொடங்கியுள்ள போராட்டமும் வன்முறை களமாக மாறிவிடாதபடி போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அரசியல் கட்சி தலைவர்களை உளவுத்துறை காவலர்கள் நோட்டமிட்டு வருகின்றனர். இந்தூர் நகரில் உள்ள மாநில காவல்துறை தலைமை அலுவலகத்தில் தனி கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. #MPFarmersstrike 
    எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ. இடைத்தேர்தல்களில் பாஜக பெற்ற தோல்வி என்பது, நீண்ட தூரம் தாண்டுவதற்கு இரண்டு அடி பின்னால் செல்வதற்கு நிகரானது என உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். #RajnathSingh #BypollResults
    போபால்:

    மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மத்தியப்பிரதேசம் மாநிலத்துக்கு நேற்று சென்றார். அங்கு போலீசாருக்கான பயிற்சி மையம் திறப்பு விழாவில் இன்று கலந்து கொண்டார்.



    அங்கு பாஜக ஆட்சியின் நான்கு ஆண்டு கால சாதனைகள் குறித்து பேசினார். அப்போது, இடைத்தேர்தல்களில் பாஜக பெற்ற தோல்வி குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேட்டனர். அதற்கு ராஜ்நாத் சிங் சமாளிப்பாக பதிலளித்துள்ளார்.

    அப்போது அவர் கூறுகையில், சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகளில் பாஜக பெற்ற தோல்வி என்பது, நீண்ட தொலைவை தாண்டுவதற்கு ஒருவர் இரண்டடி பின்னால் செல்வது போலாகும் என குறிப்பிட்டுள்ளார். #RajnathSingh #BypollResults
    மத்தியப்பிரதேசம் மாநில காங்கிரஸ் கட்சியின் ஒருங்கிணைப்பு குழு தலைவராக மூத்த தலைவர் திக்விஜய் சிங்கை நியமித்து அக்கட்சியின் தேசிய தலைவர் ராகுல் காந்தி உத்தரவிட்டுள்ளார். Congress #DigvijaySingh
    போபால்:

    காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்ற பின்னர் பல மாநிலங்களில் உள்ள முக்கிய பொறுப்பாளர்களை மாற்றி அமைத்து வருகிறார்.

    அவ்வகையில், மூத்த தலைவர் திக்விஜய் சிங்கை மத்தியப்பிரதேசம் மாநில காங்கிரஸ் கட்சியின் ஒருங்கிணைப்பு குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக டெல்லியில் உள்ள அக்கட்சியின் தலைமை இன்று அறிவித்துள்ளது.

    இதேபோல், தேர்தல் பிரசாரக்குழு தலைவராக ஜோதிராதித்யா சிங் மற்றும் தேர்தல் திட்டக்குழு தலைவராக சுரேஷ் பச்சவுரியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    230 இடங்களை கொண்ட மத்தியப்பிரதேசம் சட்டசபைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெறும் நிலையில் இன்று இந்த நியமனங்கள் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. #MadhyaPradeshCongress #DigvijaySingh
    உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட நான்கு பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். #IPL2018 #VIVOIPL #CricketBetting

    ஐ.பி.எல். 11-வது சீசன் போட்டிகள் கடந்த 7-ம் தேதி மும்பை நகரில் கோலாகலமாக தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் ஐ.பி.எல். போட்டிகளின் போது சூதாட்ட புகார் எழுந்து வருகிறது. போலீசாரும் சூதாட்டங்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தின் லக்னோவில் உள்ள சாடட்கஞ்ச் கிரிக்கெட் சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் போலீசார் நடத்திய சோதனையில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.22 லட்சம் பணம், ஐந்து செல்போன்கள், டிவி, செட்-டாப் பாக்ஸ் மற்றும் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்கான ஆவணங்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    அவர்கள் நான்கு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. #IPL2018 #VIVOIPL #CricketBetting
    ×