search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆயுள்தண்டனை"

    12 குழந்தைகளை வீட்டில் அடைத்து கொடுமை செய்த தம்பதிக்கு ஆயுள்தண்டனை விதித்து அமெரிக்க கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. #Court

    கலிபோர்னியா:

    அமெரிக்கவின் கலிபோர்னியாவை சேர்ந்தவர் டேவிட் ஆலன் டர்பின் (வயது57). இவரது மனைவி லூயிஸ் அன்னா டர்பின் (50). இவர்களுக்கு 12 குழந்தைகள் உள்ளனர்.

    இவர்கள் பிறந்ததில் இருந்து வீட்டுக்குள் அடைத்து சிறை வைத்து கொடுமைப்படுத்தினர். அவர்களை சங்கிலியால் கட்டி வைத்து கொடுமைப்படுத்தினர். இவ்வாறு 3 முதல் 30 வயது வரையிலான தங்களது குழந்தைகளை சித்ரவதை படுத்தி வந்தனர்.

    இதற்கிடையே ஒரு பெண் குழந்தை வீட்டின் ஜன்னல் வழியாக ஏறிக்குதித்து வெளியே தப்பி வந்து போலீசில் புகார் செய்தாள். அதைத் தொடர்ந்து போலீசார் வீட்டுக்கு சென்று சிறை வைக்கப்பட்டிருந்த 12 குழந்தைகளையும் மீட்டனர்.

    வீட்டில் அடைத்து வைத்திருந்த குழந்தையின் பெற்றோர் டேவிட் ஆலன் டர்பின், லூயிஸ் அன்னா டர்பின் ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    வழக்கை விசாரித்த கோர்ட்டு தம்பதிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. சிறை தண்டனை அனுபவித்து 25 ஆண்டுகளுக்கு பிறகு தான் இவர்களுக்கு பரோல் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. #Court

    பஞ்சாப் மாநிலத்தில் புனித நூல்களை அவமதித்தால் ஆயுள் தண்டனை வழங்கும் சட்ட திருத்தத்துக்கு மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. #Sacrilege #Punjab
    சண்டிகார்:

    பஞ்சாப் மாநிலத்தில் புனித நூல்களை அவமதித்தால் ஆயுள் தண்டனை வழங்கும் சட்ட திருத்தத்துக்கு மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

    அதன்படி புனித நூல்களான பகவத்கீதை, குரான், பைபிள், குரு கிரந்த் சாகிப் ஆகியவற்றை மத உணர்வுகளை காயப்படுத்தும் நோக்கத்துடன் கிழித்தாலோ, சேதப்படுத்தினோலோ அல்லது அவமதிப்பு செய்தாலோ அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.

    இதற்காக இந்திய தண்டனை சட்டத்தில் புதிதாக 295 ஏஏ பிரிவு சேர்க்கப்படுகிறது.

    முதல்-மந்திரி அம்ரீந்தர் சிங் தலைமையில் நடந்த மாநில மந்திரி சபை கூட்டத்தில் இந்த சட்ட திருத்தத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.



    பஞ்சாபில் புனித நூல்கள் அவமதிக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதை தடுக்கவும், சமூக நல்லிணக்கத்தை தொடர்ந்து பேணவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநில அரசின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். #Sacrilege #Punjab
    சோழவரத்தில் காதலிக்க மறுத்த பெண்ணை கொன்ற வாலிபருக்கு ஆயுள்தண்டனை விதித்து திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
    திருவள்ளூர்:

    சோழவரம் சோலையம்மன் நகரை சேர்ந்தவர் ஆறுமுகம். ஆட்டோ டிரைவர். இவரது மனைவி கற்பகம். இவர்களது மகள் லதா (வயது 17).

    இவர்களது வீட்டுக்கு புதுச்சேரி தன்வந்திரி நகரை சேர்ந்த எழிலரசன் (26) அடிக்கடி வந்து சென்றார். அப்போது லதாவை அவர் ஒருதலையாக காதலித்து வந்தார்.

    கடந்த 7.4.2011 அன்று, ஆறுமுகம் மனைவியுடன் ஆஸ்பத்திரிக்கு சென்று இருந்தார். வீட்டில் லதாவும், அவரது தங்கையும் இருந்தனர்.

    அப்போது வீட்டுக்கு வந்த எழிலரசன், லதாவிடம், நான் உன்னை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன் என்று கூறினார். லதா மறுப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த எழிலரசன், லதாவை கத்தியால் குத்தி கொலை செய்தார்.

    சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து எழிலரசனை கைது செய்தனர். இந்த வழக்கு திருவள்ளூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

    வழக்கை விசாரித்த நீதிபதி பரணிதரன் தீர்ப்பு அளித்தார். அதில், கொலை, ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டதால் எழிலரசனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

    மேலும் அபராதத் தொகையை கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என கூறினார். இதைத்தொடர்ந்து சோழவரம் போலீசார் எழிலரசனை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். #tamilnews
    ×