என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "குடிப்பழக்கம்"
பாகூர்:
பாகூர் அருகே குடியிருப்பு பாளையத்தை சேர்ந்தவர் முகமது உசேன் (வயது 52). இவர் கடலூரில் உள்ள ஒரு பழக்கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு பாத்திமா என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
மது குடிக்கும் பழக்கம் உள்ள முகமது உசேன் அடிக்கடி வேலைக்கு செல்லாமல் மது குடித்து வந்தார். அதுபோல் நேற்றும் வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். இதனை அவரது மனைவி பாத்திமா கண்டித்தார்.
இதனால் மனமுடைந்த முகமது உசேன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நைலான் கயிற்றால் மின் விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்த புகாரின் பேரில் பாகூர் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் அருள்மணி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் அருகே உள்ள பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் திருநாவுக்கரசர் (வயது 35), விவசாயி. இவரது மனைவி லட்சுமி (27). இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
திருநாவுக்கரசர் வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மது குடித்து வந்தார். இதனால் அவரை லட்சுமி கண்டித்தார்.
இதைத்தொடர்ந்து அவர்களுக்குள் குடும்பத்தகராறு ஏற்பட்டது. நேற்று மாலையும் திருநாவுக்கரசர் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார்.
குடிப்பழக்கத்தை நிறுத்தி விட்டு ஒழுங்காக வேலைக்கு செல்ல வேண்டியதுதானே என்று லட்சுமி சத்தம்போட்டார். இதனால் அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது.
பின்னர் லட்சுமி கோபித்து கொண்டு அதே பகுதியில் உள்ள தனது தந்தை கலியன் வீட்டுக்கு சென்றார். சிறிது நேரத்தில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து திருநாவலூர் போலீசில் கலியன் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் பரணிதரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகேயுள்ள சொக்கன்குடியிருப்பு சிலுவை தெருவை சேர்ந்தவர் பெருமாள். கூலி தொழிலாளி. இவருக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இவரது 2-வது மகன் சுரேஷ்(வயது20). இவர் தந்தையுடன் கூலி வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் சுரேசுக்கு குடிப்பழக்கம் ஏற்பட்டது. அடிக்கடி குடித்துவிட்டு சரியாக வேலைக்கு செல்லாமல் சுற்றினாராம். இதனால் சுரேசை பெருமாள் கண்டித்தார். இதில் மனவேதனை அடைந்த சுரேஷ் அங்குள்ள காட்டுப்பகுதிக்கு சென்று விஷத்தை குடித்துவிட்டு மயங்கி விழுந்தார்.
அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே சுரேஷ் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தட்டார்மடம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்