search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஸ்கள்"

    • சென்னை தடத்தில் 150 சிறப்பு பஸ்களும், பிற தடங்களில் 100 சிறப்பு பஸ்களும் இயக்கம்.
    • சிறப்பு அலுவலா்கள், பரிசோதகா்கள் பணியமா்த்தப்பட்டு பஸ் இயக்கத்தை சீரமைக்க ஏற்பாடு.

    தஞ்சாவூர்:

    அரசு போக்குவரத்து கழகத்தின் கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குநா் மோகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சனி, ஞாயிறு வாரவிடுமுறை மற்றும் சுபமுகூா்த்த நாளையொட்டி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கும்பகோணம் கோட்டம் சாா்பில் பொது மக்களின் வசதிக்காக, திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூா், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூா், மயிலாடுதுறை, வேதா ரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, இராமநாதபுரம் ஆகிய ஊா்களிலிருந்து சென்னைக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    இதேபோல் சென்னையிலிருந்து மேற்கண்ட ஊா்களுக்கு 150 பஸ்களும், திருச்சியிலிருந்து கோவை, திருப்பூா், மதுரை ஆகிய இடங்களுக்கும், கோவை, திருப்பூா், மதுரை ஆகிய இடங்களிலிருந்து திருச்சிக்கும், திருச்சியிலிருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூா், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ஆகிய ஊா்களுக்கு 100 பஸ்களும் என மொத்தம் 250 சிறப்பு பஸ்கள் இன்று (வெள்ளிக்கிழமை) மற்றும் நாளை (சனிக்கிழமை) இயக்கப்பட உள்ளன.

    இதேபோல, விடுமுறைக்கு வந்த பயணிகள் மீண்டும் அவரவா் ஊா்களுக்குச் செல்ல 20 மற்றும் 21-ந் தேதிகளில் (ஞாயிறு, திங்கள்) சென்னை தடத்தில் 150 சிறப்பு பஸ்களும், பிற தடங்களில் 100 சிறப்பு பஸ்களும் இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும், முக்கிய பேருந்து நிலையங்களில் சிறப்பு அலுவலா்கள், பரிசோ தகா்கள், பணியாளா்கள், பயணிகள் வசதிக்காக பணியமா்த்தப்பட்டு பேருந்து இயக்கத்தைச் சீரமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ஆகிய ஊா்களுக்கு 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
    • பிற தடங்களில் 100 சிறப்பு பஸ்களும், இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    மொஹரம் பண்டிகை யையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் கோட்டம் சாா்பில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 4 நாள்களுக்கு 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    இதுகுறித்து போக்கு வரத்துக் கழகத்தின் கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குநா் மோகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

    சனி, ஞாயிறு வார விடுமுறை, மொஹரம் பண்டிகையையொட்டி, தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழகத்தின் கும்பகோணம் கோட்டம் சாா்பில், பொதுமக்களின் வசதிக்காக, திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூா், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூா், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்து றைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, இராமநாதபுரம் ஆகிய ஊா்களிலிருந்து சென்னைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    இதேபோல் சென்னையி லிருந்து திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூா், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், வேளாங்க ண்ணி, திருவாரூா், மயிலாடு துறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, இராமநாதபுரம் ஆகிய ஊா்களுக்கு 150 பஸ்களும், திருச்சியிலிருந்து கோவை, திருப்பூா், மதுரை ஆகிய இடங்களுக்கும், கோவை, திருப்பூா், மதுரை ஆகிய இடங்களிலிருந்து திருச்சிக்கும், திருச்சியிலிருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூா், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ஆகிய ஊா்களுக்கு 100 பஸ்களும் என மொத்தம் 250 சிறப்பு பஸ்கள் நாளை ( வெள்ளி க்கிழமை) மற்றும் நாளை மறுநாள் ( சனிக்கிழமை) இயக்கப்பட வுள்ளன.

    இதேபோல, விடுமுறைக்கு வந்த பயணிகள் மீண்டும் அவரவா் ஊா்களுக்கு செல்ல வரும் 30 மற்றும் 31 ஆம் தேதிகளில் (ஞாயிறு, திங்கள்) சென்னை தடத்தில் 150 சிறப்பு பஸ்களும், பிற தடங்களில் 100 சிறப்பு பஸ்களும், இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    முக்கிய பஸ் நிலையங்களில் சிறப்பு அலுவலர்கள் , பரிசோதகர்கள் ,பணியா ளர்கள், பயணிகள் வசதிக்காக பணி அமர்த்தப்பட்டு பஸ் இயக்கத்தை சீரமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    சென்னை மாநகர போக்குவரத்து கழகம் கோடை விடுமுறை காலத்தில் பொதுமக்கள் சுற்றுலா மையங்களுக்கு செல்ல சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. #Specialbus

    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்து கழகம் கோடை விடுமுறை காலத்தில் பொதுமக்கள் சுற்றுலா மையங்களுக்கு செல்ல சிறப்பு பஸ்களை இயக்குகிறது.

    சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் நகரின் பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலா தலங்களுக்கு 150 சிறப்பு பஸ்கள் நேற்று முதல் விடப்பட்டுள்ளது. ஜூன் மாதம் 30-ந் தேதி வரை இயக்கப்படுகிறது.

    மெரினா கடற்கரை, அண்ணாசதுக்கம் செல்வதற்கு 50 பஸ்களும், கோவளத்திற்கு 3 பஸ்களும், வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு 21 பஸ்களும், மாம்மல்லபுரம்- 7 பஸ்களும் விடப்பட்டுள்ளது.

    பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலுக்கு 8, திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் கோவிலுக்கு -8, சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு 3 சிறப்பு பஸ்கள் வீதம் விடுமுறை நாட்களில் விடப்படுகின்றன.

    இந்த சிறப்பு பஸ்கள் 21 ஜி, 27 எல், 25 ஜி, 11 எச், 12 ஜி, 45 பி, 102, 13, 6டி, 2ஏ, 27பி, 22 பி, 27எச், 40ஏ, 29ஏ, 500, 517, பி18, ஜி18, ஈ18, 70வி, 99, வி51, 517கட், 109கட், 515, 588, 514, 547, 580, 159, 50, 72சி, 29இ, 59 ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படுகிறது. #Specialbus

    காடுவெட்டி குரு மரணம் அடைந்ததையொட்டி அரியலூர் மாவட்டத்தில் 2-வது நாளாக கடைகள் அடைக்கப்பட்டும், பேருந்துகளும் ஓடாததால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி இருக்கிறார்கள். KaduvettiGuru
    ஜெயங்கொண்டம்:

    காடுவெட்டி குரு மரணமடைந்ததையொட்டி அரியலூர் மாவட்டத்தில் 2-வது நாளாக கடைகள் அடைக்கப்பட்டும், பேருந்துகளும் ஓடாததால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி இருக்கிறார்கள். KaduvettiGuru

    வன்னியர் சங்க தலைவர் குரு மரணமடைந்ததை தொடர்ந்து, அவருடைய உடல் சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டிக்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

    இந்நிலையில் குரு மரணமடைந்ததையொட்டி நேற்று முன்தினம் இரவு முதல் ஜெயங்கொண்டம் சுற்றுவட்டார பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வந்தது. ஜெயங்கொண்டம் செந்துறை பிரிவு ரோட்டில் உள்ள அரசு பணிமனைக்கு சென்ற 3 அரசு பஸ்களை வழிமறித்த மர்மநபர்கள் பஸ்களின் கண்ணாடிகளை உடைத்து விட்டு தப்பி ஓடினர்.

    இதேபோல் காட்டுமன்னார்குடியில் இருந்து ஜெயங்கொண்டம் நோக்கி வந்த அரசு பஸ்சை பொன்னேரியிலும், ஜெயங்கொண்டத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பஸ்சை கல்லாத்தூரிலும் வழிமறித்த மர்ம நபர்கள் கண்ணாடிகளை உடைத்து விட்டு சென்றனர். திருச்சி-சிதம்பரம் சாலையில் சூரியமணலில் ஒரு பஸ்சின் கண்ணாடியையும், ஜெயங்கொண்டம் மார்க்கெட் கமிட்டி அருகே 2 பஸ்களின் கண்ணாடியையும், வாரியங்காவலில் ஒரு பஸ்சின் கண்ணாடியையும் மர்ம நபர்கள் உடைத்தனர்.

    ஜெயங்கொண்டம் போலீசார் விசாரணை நடத்தி பஸ் கண்ணாடிகளை உடைத்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    இதனால் மாவட்டம் முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் பஸ்கள் நிறுத்தப்பட்டன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. அரியலூரிலும் கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டிருந்தன. இன்று (ஞாயிற்றுக் கிழமை) முகூர்த்த நாள் என்பதால் பொதுமக்கள் முன்கூட்டியே பொருட்கள் வாங்குவதற்காக வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    ஆண்டிமடம் கடைவீதியில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் வந்த ஒரு கும்பல் ஆண்டிமடம் 4 ரோடு சந்திப்பில் போலீசாரால் வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்பு கம்பிகளை எடுத்து சாலையின் குறுக்கே போட்டு, அதன்மேல் டயர்களை போட்டு எரித்து கொண்டிருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆண்டிமடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினோத்ராஜ் மற்றும் போலீசார் அந்த கும்பலை எச்சரித்தனர்.

    ஆனாலும் அந்த கும்பல் போலீசாரை கண்டுகொள்ளாமல் 4 ரோடு சந்திப்பு மற்றும் ஸ்ரீமுஷ்ணம் ரோட்டில் உள்ள போலீஸ் கண்காணிப்பு கேமராக்களை அடித்து உடைத்தது. அங்கிருந்து அண்ணாசிலை வரை உள்ள வணிக வளாகங்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியது.

    தனியார் கடைகள் முன்பு வைக்கப்பட்டிருந்த விளம்பர போர்டுகள், டீக்கடை பெஞ்ச், தள்ளுவண்டி போன்ற பொருட்களை உடைத்தும், உடைத்த பொருட்களை நடுரோட்டில் போட்டும் எரித்தது. இதனால் நேற்று முன்தினம் இரவு அந்த வழியாக கனரக, இலகுரக வாகனங்கள், செல்லவில்லை. மேலும் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

    இந்த சம்பவங்களால் ஆண்டிமடம் பகுதி கலவர பூமி போல் காட்சியளித்தது. இந்த சம்பவம் தொடர்பாக ஆண்டிமடம் நாட்டார் தெருவை சேர்ந்த செல்வம் (வயது 35), சூரக்குழி கிராமத்தை சேர்ந்த சரவணகுமார்( 28), அருள்பிரகாசம் (32), சிவகுமார் (30), ஜான்விக்டர் (31), கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியை சேர்ந்த செந்தமிழ்செல்வன் (33), பார்த்திபன் (34), பிரகாஷ் (29), மேலநெடுவாய் கிராமத்தை சேர்ந்த விஜயகுமார் (35) ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அவர்கள் வந்த கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.


    இந்தநிலையில் ஜெ. குருவின் உடல் இன்று காலை அவரது வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இதில் லட்சக்கணக்கானோர் திரண்டு அஞ்சலி செலுத்தினர். இதையொட்டி அரியலூர் மாவட்டத்திற்குட்பட்ட ஜெயங்கொண்டம், மீன் சுருட்டி, தா.பழுர், ஆண்டிமடம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று 2-வது நாளாக கடைகள் அடைக்கப்பட்டன.

    ஜெயங்கொண்டம் பகுதியில் முற்றிலும் பஸ்கள் இயக்கப்படவில்லை. அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    அரியலூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 13 அரசு பஸ்களின் கண்ணாடிகள் உடைத்து சேதப்படுத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து போலீசார் அரியலூர் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடு பட்டு வருகின்றனர். #KaduvettiGuru
    ×