search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 112989"

    இந்தியாவில் மரணம் அடைபவர்களில் 8-ல் ஒருவர் காற்று மாசுவினால் பாதிக்கப்பட்டு உயிர் இழக்கிறார்கள். இது புகை பிடிப்பதால் ஏற்படும் உயிர் இழப்பை விட அதிகமாகும். #AirPollution #India
    புதுடெல்லி:

    காற்று மாசுவினால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது. இங்கு தொடர்ந்து காற்று மாசு அதிகரித்தபடி இருக்கிறது.

    இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இது சம்பந்தமாக ஒரு ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவில் மரணம் அடைபவர்களில் 8-ல் ஒருவர் காற்று மாசுவினால் பாதிக்கப்பட்டு உயிர் இழக்கிறார்கள். இது, புகை பிடிப்பதால் ஏற்படும் உயிர் இழப்பை விட அதிகமாகும்.

    காற்று மாசு குறிப்பிட்ட அளவுக்கு குறைந்து இருந்தால் இந்தியாவில் சராசரி வாழ்க்கையானது 1.7 வருடங்கள் அதிகரிக்கும். ஆனால், காற்று மாசு உயர்ந்து வருவதால் இதை பாதித்துள்ளது. காற்று மாசுவினால் ஏராளமானோர் உயிர் இழப்பதோடு மட்டுமல்லாமல் பல்வேறு நோய்களையும் அவை ஏற்படுத்துகின்றன.

    நாட்டில் 77 சதவீத மக்கள் மோசமான காற்று மாசுவை சந்திக்கும் நிலை இருக்கிறது.



    அதாவது, காற்றில் எவ்வளவு மாசு இருந்தால் பாதுகாப்பானது என்ற வரையறை உள்ளது. அதைவிட அதிகமாக காற்றில் மாசு கலந்துள்ளது. வீதிகளில் மட்டும் அல்ல, வீட்டுக்குள்ளும் காற்று மாசு மோசமாக இருக்கிறது.

    கடந்த ஆண்டு மட்டுமே காற்று மாசுவினால் 12 லட்சத்து 40 ஆயிரம் பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். அதில் 4 லட்சத்து 80 ஆயிரம் பேர் வீட்டுக்குள் ஏற்பட்ட காற்று மாசுவினால் உயிர் இழந்தவர்கள் ஆவர்.

    இந்தியாவில் 5 வயதுக்குட்பட்ட 26 சதவீத குழந்தைகள் காற்று மாசுவினால் மரணம் மற்றும் பல்வேறு நோய் பாதிப்புகளை சந்திக்கிறார்கள்.

    கடந்த ஆண்டு மட்டும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் காற்று மாசுவினால் உயிர் இழந்து இருக்கிறார்கள்.

    70 வயதுக்குள் மரணம் அடைபவர்களில் பாதி பேர் காற்று மாசுவினால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவர்.

    இந்தியாவில் வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் தான் காற்று மாசு மோசமாக இருக்கிறது. குறிப்பாக பீகார், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், ஜார்கண்ட், டெல்லி, அரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் காற்றில் அதிக அளவு மாசு கலந்துள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #AirPollution #India
    தொடர் மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், புழல் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. #PuzhalLake
    திருவள்ளூர்:

    வங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்தம் காரணமாக நேற்று முன்தினம் மாலை முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    சென்னையில் இன்று காலையும் பரவலாக மழை பெய்தது. புறநகர் பகுதியான ஆவடி, அம்பத்தூர், புழல், சோழவரம் உள்ளிட்ட பகுதிகளில் விட்டு விட்டு கனமழை கொட்டியது.

    திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. பழவேற்காடு, மீஞ்சூர், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, புழல், பூந்தமல்லி உள்ளிட்ட இடங்களிலும் பலத்த மழைபெய்தது. ஊத்துக்கோட்டையில் நேற்று மாலையில் தொடங்கிய மழை நள்ளிரவு வரை நீடித்தது. இதனால் தாழ்வான இடங்களில் வெள்ளம் தேங்கியது.

    தொடர் மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், புழல் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

    செம்பரம்பாக்கம் ஏரி நீர்ப்பிடிப்பு பகுதியில் போதிய மழை இல்லாததால் எதிர்பார்த்த நீர் வரத்து இல்லை.இந்த 4 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 257 மில்லியன் கனஅடி நீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி மொத்தம் 1,704 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது.

    கடந்த 3-ந் தேதி 4 ஏரிகளையும் சேர்த்து 1,681 மில்லியன் கனஅடி தண்ணீர் இருந்தது. கடந்த 2 நாட்களில் 23 மில்லியன் கனஅடி நீர் அதிகரித்து உள்ளது.  #PuzhalLake

    சபரிமலையில் ஆய்வு செய்ய கேரள ஐகோர்ட்டு நியமித்த 3 பேர் குழுவினர் பக்தர்களுக்கு நிலக்கல்லிலும், பம்பையிலும் அரசு செய்துள்ள வசதிகள் திருப்தியாக இருப்பதாக தெரிவித்தனர். #Sabarimala #KeralaHC
    திருவனந்தபுரம்:

    சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் கடந்த 16-ந் தேதி மண்டல பூஜைக்காக கோவில் நடை திறக்கப்பட்டது.

    வழக்கமாக மண்டல பூஜை காலத்தின் போது சபரிமலை கோவிலுக்கு கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானாவில் இருந்து அதிக அளவு ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனத்திற்குச் செல்வார்கள். இதனால் முதல் நாளில் இருந்தே சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

    ஆனால் தற்போது சபரிமலையில் இளம்பெண்களை சாமி தரிசனத்திற்கு அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சிகளும், இந்து அமைப்புகளும் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    சபரிமலை செல்லும் இளம்பெண்களும் விரட்டியடிக்கப்படுகிறார்கள். இதனால் சபரிமலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    இதுபோன்ற காரணங்களால் சபரிமலை செல்லும் பக்தர்கள் கூட்டம் இந்த முறை குறைந்தது. சபரிமலையில் ஐயப்ப பக்தர்களிடம் போலீசார் கெடுபிடியாக நடந்து கொள்வதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். கேரள ஐகோர்ட்டும் இது தொடர்பாக அரசுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது.

    இதனால் சபரிமலையில் பக்தர்களிடம் கெடுபிடி குறைந்துள்ளது. இதுபோன்ற காரணங்களால் சபரிமலை செல்லும் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது.

      சபரிமலை சன்னிதானத்தில் குவிந்த அய்யப்ப பக்தர்கள் கூட்டம்.

    நேற்று ஒரே நாளில் சபரிமலைக்கு 68 ஆயிரத்து 315 பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்தனர். இந்த மண்டல பூஜை காலத்தில் இந்த அளவுக்கு அதிக பக்தர்கள் சபரிமலை சென்றது இதுதான் முதல் முறையாகும். தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து உள்ளதால் அங்கு அரவணை, அப்பம் பிரசாதம் விற்பனையும் அதிகரித்து உள்ளது. இதன் மூலம் தேவசம் போர்டுக்கு கூடுதல் வருமானம் கிடைத்துள்ளது.

    சபரிமலையில் போலீஸ் கெடுபிடிகளுக்கு எதிராக கேரள ஐகோர்ட்டில் ஏராளமானோர் வழக்கு தொடர்ந்து உள்ளனர். இதை விசாரித்த ஐகோர்ட்டு சபரிமலையில் ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதிகள் ராமன் , ஸ்ரீஜெகன், டி.ஜி.பி. ஹேமச்சந்திரன் ஆகிய 3 பேர் அடங்கிய குழுவை நியமித்தது.

    இந்த குழு நேற்று சபரிமலை சென்று தங்களது ஆய்வு பணியை தொடங்கியது. முதலில் நிலக்கல்லில் அவர்கள் ஆய்வு செய்தனர். அதன் பிறகு அங்கிருந்து கேரள அரசு பஸ் மூலம் பம்பை சென்ற அந்த குழுவினர் அங்கும் பக்தர்களை சந்தித்து அவர்கள் கருத்துக்களை கேட்டனர். சபரிமலையில் பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகளையும் அவர்கள் ஆய்வு செய்தனர்.

    தங்களது முதல் கட்ட ஆய்வு பற்றி கருத்து தெரிவித்த 3 பேர் குழுவினர் சபரிமலை வரும் பக்தர்களுக்கு நிலக்கல்லிலும், பம்பையிலும் கேரள அரசு செய்துள்ள வசதிகள் திருப்தியாக இருப்பதாக தெரிவித்தனர்.

    இந்த குழுவினர் இன்று சபரிமலை சன்னிதானம் சென்றனர். அங்கும் அவர்கள் ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதன் பிறகு அவர்கள் தங்கள் ஆய்வு அறிக்கையை கேரள ஐகோர்ட்டில் தாக்கல் செய்வார்கள். அதன் அடிப்படையில் கேரள ஐகோர்ட்டு உத்தரவுகளை பிறப்பிக்கும்.  #Sabarimala #KeralaHC


    தமிழ்நாட்டில் எய்ட்ஸ் நோய் தாக்குதலுக்கு இளைஞர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. #AIDS #TN
    சென்னை:

    சர்வதேச எய்ட்ஸ் நோய் தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. அதையொட்டி எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவல் வெளியிடப்பட்டது.

    அதில் தமிழ்நாட்டில் எய்ட்ஸ் நோய் தாக்குதல் அதிகரித்து உள்ளது. அதுவும் புதிதாக இளைஞர்களை பெருமளவில் பாதித்து இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 2015-ம் ஆண்டில் 20 முதல் 25 வயது வரையிலான இளைஞர்கள் 432 பேரை எய்ட்ஸ் தாக்கி இருந்தது. 2017-2018-ம் ஆண்டில் அதன் எண்ணிக்கை 554 ஆக உயர்ந்துள்ளது.

    அதே நேரத்தில் நடப்பு ஆண்டில் ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையே 318 பேரை எய்ட்ஸ் நோய் பாதித்துள்ளது.

    2015 முதல் 2016-ம் ஆண்டில் 60 வயதுக்கு மேற்பட்டோரில் 435 பேரை எய்ட்ஸ் நோய் தாக்கியிருந்தது. அது 2017-2018-ம் ஆண்டில் 536 ஆக அதிகரித்தது. தற்போது ஏப்ரல் மற்றும் அக்டோபருக்கு இடைப்பட்ட காலத்தில் மட்டும் புதிதாக 435 எய்ட்ஸ் நோயாளிகள் உருவாகியுள்ளனர்.

    10 முதல் 19 வயது வரையிலான சிறுவர்களையும் எய்ட்ஸ் நோய் விட்டு வைக்கவில்லை. 2015-2016-ம் ஆண்டில் 160 பேரையும், 2017-2018-ம் ஆண்டில் 187 பேரையும் தாக்கியது. தற்போது ஏப்ரல்-அக்டோபர் மாதங்களுக்கு இடையே மேலும் 99 பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.



    பாதுகாப்பற்ற முறையில் ‘செக்ஸ்’ மற்றும் ஒரே ஊசியை பலருக்கு பயன்படுத்துவது போன்ற காரணங்களால் 10 வயது சிறுவர்கள் முதல் 25 வயது இளைஞர்கள் வரை எய்ட்ஸ் நோய் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர். தற்போது தமிழ்நாட்டில் 1,12,778 எய்ட்ஸ் நோயாளிகள் உள்ளனர். அவர்களில் சென்னையில் தான் அதிக அளவில் இருக்கின்றனர் என பொது சுகாதார துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

    எய்ட்ஸ் நோயை தடுக்க சமூக வலை தளங்கள், உள்ளிட்ட பல ஊடகங்களை பயன்படுத்தலாம். அதன் மூலம் இளைஞர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். #AIDS #TN

    நேற்று 103.22 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று 103.4 அடியாக உயர்ந்தது. #Metturdam
    மேட்டூர்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையால் மேட்டூர் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    நேற்று 5 ஆயிரத்து 623 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 5 ஆயிரத்து 734 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு காவிரி ஆற்றில் 2 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாய் பாசனத்திற்கு 600 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டு வந்தது.

    இன்று காலை முதல் கால்வாய் பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு 750 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. டெல்டா பாசனத்திற்கு வழக்கம் போல 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    நேற்று 103.22 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று 103.4 அடியாக உயர்ந்தது. இனி வரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது.  #Metturdam



    முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
    கூடலூர்:

    நீர் பிடிப்பு பகுதியில் சாரல் மழை பெய்ததால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து 130.75 அடியை எட்டியுள்ளது. ஆனால் தற்போது மழை ஓய்ந்துள்ளது. இதனால் அணைக்கு வரும் நீர் வரத்து 666 கன அடியாக குறைந்துள்ளது.

    இருந்தபோதும் தமிழக பகுதிக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று வரை 900 கன அடி நீர் திறக்கப்பட்டது. இன்று காலை அது 1000 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

    இன்று காலை முதலே மேகமூட்டம் சூழ்ந்துள்ளதால் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது என விவசாயிகள் தெரிவித்தனர். தற்போது கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதனால் தண்ணீர் தேவையில்லை. ஒரு சிலர் மட்டும் அடுத்த போக சாகுபடிக்காக நாற்றாங்கால் நடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

    இந்த தண்ணீர் பாசனத்துக்கு போக வைகை அணையை வந்து சேர்கிறது. இதனால் அணைக்கு நீர் வரத்து 875 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்துக்காக 1,360 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர் மட்டம் 58.76 அடியாக உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 54.65 அடியாக உள்ளது. 65 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 100 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணை நீர் மட்டம் 126.25 அடியாக உள்ளது. வருகிற 30 கன அடி நீர் அப்படியே திறந்து விடப்படுகிறது.

    முல்லைப் பெரியாறு அணை நீர் பிடிப்பு பகுதியில் சாரல் மழை தொடர்ந்து பெய்து வருவதால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. #PeriyarDam
    கூடலூர்:

    வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து முல்லைப் பெரியாறு அணை நீர் பிடிப்பு பகுதியில் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர் மட்டம் வேகமாக குறைந்தது. தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு வரும் நீர் வரத்து 1,093 கன அடியில் இருந்து 1,882 கன அடியாக உயர்ந்துள்ளது.

    இதன காரணமாக அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவும் 900 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அணையின் நீர் மட்டம் 130.20 அடியாக உள்ளது. இன்றும் காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. இதனால் மழை பெய்யும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

    கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் வைகை அணை நீர் மட்டம் 62.89 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு 800 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 1310 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணை நீர் மட்டம் 55 அடியாக உள்ளது. வருகிற 100 கனஅடி நீர் அப்படியே திறந்து விடப்படுகிறது. சோத்துப்பாறை அணை நீர் மட்டம் 126.60 அடியாக உள்ளது. 175 கன அடி நீர் வருகிறது. 30 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 6.2, தேக்கடி 49, கூடலூர் 13, சண்முகா நதி அணை 14, உத்தமபாளையம் 16.4, வீரபாண்டி 4, கொடைக்கானல 6.2 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது. #PeriyarDam

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது. #MetturDam
    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது.

    நேற்று 4 ஆயிரத்து 203 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 4 ஆயிரத்து 785 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு கடந்த சில நாட்களாக 1000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கால்வாய் பாசனத்திற்கு திறந்து விடப்பட்ட 900 கன அடி தண்ணீர் இன்று 400 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    நேற்று 100.16 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 100.36 அடியாக உயர்ந்தது. இனி வரும் நாட்களில் மழை அதிகாரித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது. #MetturDam
    மேட்டூர் அணைக்கு நேற்று 4 ஆயிரத்து 6 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று சற்று அதிகரித்து 4 ஆயிரத்து 378 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது. #MetturDam
    மேட்டூர்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு கடந்த சில நாட்களாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    நேற்று 4 ஆயிரத்து 6 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று சற்று அதிகரித்து 4 ஆயிரத்து 378 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து நேற்று காலை 5 ஆயிரத்து 900 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில், நேற்று இரவு முதல் தண்ணீர் திறப்பு 1,900 கனஅடியாக குறைக்கப்பட்டது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் மீண்டும் உயரத் தொடங்கி உள்ளது.

    நேற்று 99.86 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று 99.88 அடியாக உயர்ந்தது. இனிவரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்பு உள்ளது. #MetturDam

    மேட்டூர் அணையில் இருந்து இன்று காலை முதல் பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு 5 ஆயிரத்து 700 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. #MetturDam
    மேட்டூர்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக உயர்ந்து வருகிறது.

    நேற்று 5,244 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 6 ஆயிரத்து 38 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து நேற்று 2 ஆயிரத்து 700 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் இன்று காலை முதல் பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு 5 ஆயிரத்து 700 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று 99.95 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 100.01 அடியாக உயர்ந்தது. #MetturDam

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. #MetturDam
    மேட்டுர்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.

    கடந்த 31-ந் தேதி 3 ஆயிரத்து 12 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 4 ஆயிரத்து 130 கன அடியாக அதிகரித்தது. இன்று நீர்வரத்து 5 ஆயிரத்து 548 கன அடியாக அதிகரித்தது.

    அணையில் இருந்து நேற்று காலை 5 ஆயிரத்து 850 கன அடி தண்ணீர் பாசனத்திற்கு திறந்து விடப்பட்ட நிலையில் நேற்றிரவு முதல் தண்ணீர் திறப்பு 1,100 கன அடியாக குறைக்கப்பட்டது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் மீண்டும் உயர தொடங்கி உள்ளது.

    நேற்று 97.84 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 98.09 அடியாக உயர்ந்தது. இனி வரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. #MetturDam
    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. நேற்று 6ஆயிரத்து 191 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 10ஆயிரத்து 42 கனஅடியாக அதிகரித்து உள்ளது. #MetturDam
    மேட்டூர்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

    நேற்று 6ஆயிரத்து 191 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 10ஆயிரத்து 42 கனஅடியாக அதிகரித்து உள்ளது. அணையில் இருந்து 13ஆயிரத்து 700 கனஅடி தண்ணீர் பாசனத்திற்காக திறந்து விடப்படுகிறது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் சரிந்து வருகிறது.

    நேற்று 103.35 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று 103.10 அடியாக இருந்தது. இனிவரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் அணை நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது.

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று 10ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 12ஆயிரம் கனஅடியாக அதிகரித்து உள்ளது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    இதில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்ததுடன், உற்சாகமாக படகு சவாரியும் சென்று மகிழ்ந்தனர். #MetturDam
    ×