search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜம்மு"

    ஜம்முவில் சன்சார் ஏரிக்கரையில் ரம்மியமான இயற்கை சூழலில் அமைந்துள்ள துலிப் மலர் தோட்டத்தில் கண்காட்சி தொடங்கியது. #TulipGarden #JammuTulipGarden
    ஜம்மு:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் தலைநகரான ஸ்ரீநகரில் இந்திரா காந்தி துலிப் தோட்டம் என்ற பெயருடன் ஆசியாவின் மிகப்பெரிய துலிப் (அல்லிப் பூ) மலர்கள் தோட்டம் அமைந்துள்ளது.

    இதேபோல், ஜம்முவில் இருந்து சுமார் 130 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள உத்தம்பூர் மாவட்டத்தின் சன்சார் ஏரிக்கரையில் ரம்மியமான இயற்கை சூழலில் மேலும் ஒரு மிகப்பெரிய துலிப் தோட்டம் அமைந்துள்ளது.

    இந்த தோட்டத்தில் சிவப்பு, மஞ்சள் போன்றபல வண்ணங்களில் துலிப் மலர்கள் உள்ளன. இந்த தோட்டத்தில் ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் வண்ணமயமான கண்காட்சி அமைக்கப்பட்டு, பொதுமக்கள் பார்வைக்கு திறந்து விடப்படும்.

    அவ்வகையில், இந்த ஆண்டின் கண்காட்சியை ஜம்மு சுற்றுலாத்துறை இயக்குனர் மற்றும் தோட்டக்கலை இயக்குனர் நேற்று திறந்து வைத்தனர். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட புதுவித நிறக்கலப்பு கொண்ட மலர் வகைகளும் இதில் இடம்பெற்றுள்ளன.



    15 நாட்களிலிருந்து 30 நாட்கள் வரை நடைபெறும் இந்த கண்காட்சியை உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் உள்பட லட்சக்கணக்கான மக்கள் கண்டு களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    17-ம் நூற்றாண்டு காலகட்டத்தில் பாரசீக நாட்டில் இருந்து துலிப் மலர்கள் ஐரோப்பா கண்டத்துக்கு கொண்டு வரப்பட்டன. அங்கு பல பகுதிகளில் மரபணு மாற்றம் செய்து துலிப் தோட்டங்கள் உருவாக்கப்பட்டன.

    உலகின் மிகப்பெரிய துலிப் தோட்டம் நெதர்லாந்து நாட்டின் ஹாலந்து நகரில் உள்ளது குறிப்பிடத்தக்கது. #TulipGarden #JammuTulipGarden 
    ஜம்முவில் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வுக்காக நடத்தப்படும் மாரத்தானில் சுமார் 2000 குழந்தைகள் கலந்துகொள்ள உள்ளனர். #JKChildrenMarathon
    ஸ்ரீநகர்:

    ஜம்மு மாவட்டத்தில்  பெற்றோர் மற்றும் குழந்தைகளின் உரிமைகள், பாதுகாப்பு, குழந்தைகள் பாலியல் வன்கொடுமை குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் நடத்தப்பட உள்ளது. ஜம்மு பல்கலைக்கழகத்தில் வரும் 24-ம் தேதி இந்த மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது.

    இது குறித்து ஜம்மு காஷ்மீரின்  இளைஞர் சேவை மற்றும் விளையாட்டுத் துறை கமிஷனர் சர்மத் ஹஃபீஸ் கூறியிருப்பதாவது:

    இந்த மாரத்தானில் எங்கள் குட்டி நட்சத்திரங்கள் பங்கேற்று, ஜம்மு பல்கலைக்கழக விளையாட்டுத் திடலில் ஓடுவார்கள். குழந்தைகள் வளரும்போது சந்திக்கும் பாலியல் ரீதியான பிரச்சனைகள் குறித்து அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும், விளையாட்டுத் துறையில் பல்வேறு விளையாட்டுகளில் குழந்தைகள் பங்கு கொள்ள ஊக்குவிக்கப்பட வேண்டும் என்பதே இந்த மாரத்தானின் முக்கிய நோக்கம் ஆகும்.

    மேலும் இந்த மாரத்தானில், 5 முதல் 12 வயது வரையிலான குழந்தைகள் கலந்துகொள்ள உள்ளனர். இதில் ஜம்மு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், சுமார் 2000க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #JKChildrenMarathon
    கடந்த ஆண்டில் ஜம்முவுக்கு 1½ கோடி சுற்றுலாப்பயணிகள் வருகை தந்துள்ளதாக மாநில அரசு தெரிவித்து உள்ளது. #Jammu #VaishnoDeviTemple
    ஜம்மு:

    இந்தியாவின் சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படும் காஷ்மீர் மாநிலம் சிறந்த சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. நாட்டின் வடக்கு எல்லையாக உள்ள இமயமலையை ஒட்டி அமைந்துள்ள இயற்கை எழில் மிகுந்த ஜம்மு காஷ்மீரில் பல வழிபாட்டுத்தலங்களும், பள்ளத்தாக்குகளும் உள்ளன.

    கோடை காலம் மட்டுமின்றி ஆண்டு முழுவதும் இங்கு சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 2018-ம் ஆண்டில் மட்டும் காஷ்மீரில் உள்ள ஜம்முவுக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இன்றி ஒரு கோடியே 60 லட்சத்து 469 சுற்றுலாப்பயணிகள் வருகை தந்துள்ளதாக காஷ்மீர் மாநில அரசு தெரிவித்து உள்ளது. இது மிகவும் அதிக எண்ணிக்கையாகும்.

    ஆனால் அதே சமயம் காஷ்மீருக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. 2017-ம் ஆண்டில் 11 லட்சம் பயணிகள் காஷ்மீருக்கு வருகை புரிந்துள்ளனர். ஆனால் 2018-ம் ஆண்டில் 8½ லட்சம் பேர் மட்டுமே காஷ்மீருக்கு சுற்றுலா வந்துள்ளனர்.



    இதுகுறித்து சுற்றுலாத்துறை அதிகாரி கூறுகையில், ‘ஜம்முவில் உள்ள வைஷ்ணவி தேவி கோவில் உள்ளிட்ட வழிபாட்டுத்தலங்களை தவிர இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள் சுற்றுலாப்பயணிகளை கவர்ந்து இழுக்கும் வகையில் அமைந்துள்ளது. எனவே பயணிகள் ஜம்முவில் தங்கி ஓய்வு எடுக்க விரும்புவதால் இங்கு வருவோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது’ என்று தெரிவித்தார்.

    காஷ்மீரில் அடிக்கடி நிகழும் பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் பிரிவினைவாதிகள் நடத்தும் கல் வீச்சு சம்பவங்களும் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததற்கு காரணமாக கூறப்படுகிறது. சுற்றுலாவை அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் கழிக்க விரும்புவோர், வன்முறை நடந்தேறும் காஷ்மீரை தேர்ந்தெடுக்க தயங்குகிறார்கள். எனவே இங்கு அமைதியை ஏற்படுத்த அரசு நடவடிக்கை வேண்டுமென உள்ளூர் வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். #Jammu #VaishnoDeviTemple
    சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங்கை பயங்கரவாதி எனக்கூறிய ஜம்மு பல்கலைக்கழக பேராசிரியர் மீது விசாரணை நடத்தப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. #BhagatSingh #JammuUniversity
    ஜம்மு :

    ஜம்மு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து வருபவர் முகமது தஜுதீன். இவர் நேற்று பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது, பகத்சிங்கை பயங்கரவாதி என குறிப்பிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் அவர் பாடம் எடுப்பதை வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோவை பல்கலைக்கழக துணைவேந்தரிடம் கொடுத்துள்ளனர். 



    பகத்சிங்கை பயங்கரவாதி எனக்கூறிய பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளனர். மாணவர்கள் புகார் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால், இந்த குற்றச்சாட்டை பேராசிரியர் முகமது தஜுதீன் மறுத்துள்ளார்.

    சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங்கை பயங்கரவாதி என ஜம்மு பல்கலைக்கழக பேராசிரியர் கூறியது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. #BhagatSingh #JammuUniversity
    காஷ்மீர் மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. இதையொட்டி அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. #JammuKashmir #LocalBodyElection
    ஸ்ரீநகர்:

    கவர்னர் ஆட்சி நடந்து வரும் காஷ்மீர் மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. 1,145 வார்டுகளுக்கு 4 கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது. முதற்கட்டமாக இன்று (திங்கட்கிழமை) ஜம்மு மாவட்டத்துக்கு உட்பட்ட 149 வார்டுகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    4 லட்சத்து 42 ஆயிரத்து 159 வாக்காளர்களுக்காக 584 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தலையொட்டி ஜம்மு மாவட்டத்தில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



    அங்கு முதல்முறையாக மின்னணு வாக்கு எந்திரத்தில் வாக்குப்பதிவு நடக்கிறது. காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் தேசிய மாநாட்டு கட்சி ஆகிய இரு முக்கிய கட்சிகளும் இந்த உள்ளாட்சி தேர்தலை புறக்கணித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே இந்த தேர்தலில் பங்கேற்று வாக்களிப்பதை மக்கள் புறக்கணிக்க வேண்டுமென பயங்கரவாதிகள் மற்றும் பிரிவினைவாத அமைப்புகள் வலியுறுத்தி உள்ளன.

    இதனால் தேர்தலின் போது அசம்பாவித சம்பவங்கள் நிகழும் அபாயம் உள்ளது. எனவே தேர்தலை அமைதியான முறையில் நடத்தும் வகையில் ஜம்மு மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பாதுகாப்படை வீரர்கள் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். பதற்றம் மிகுந்தவையாக கண்டறியப்பட்டு உள்ள 26 வாக்குச்சாவடிகளில் கூடுதலாக பாதுகாப்பு படைவீரர்கள் மற்றும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

    மேலும் அனைத்து சோதனை சாவடிகளிலும் கூடுதல் போலீசார் பணியமர்த்தப்பட்டு வாகனங்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. வேட்பாளர்களுக்கு பயங்கரவாதிகளிடம் இருந்து அச்சுறுத்தல் இருப்பதால் அவர்கள் அனைவரும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளனர்.

    தேர்தலை சுமுகமாக நடத்தி முடிப்பதற்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், எனவே மக்கள் எந்தவித அச்சமும் இன்றி வாக்களிக்க முன்வரவேண்டும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இதற்கிடையில், சோபியான் மாவட்டத்தில் உள்ள 6 கிராமங்களில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் பயங்கரவாதிகளை பிடிப்பதற்கான தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.  #JammuKashmir #LocalBodyElection
    ஜம்முவில் உள்ள சர்வதேச எல்லைக் கோட்டின் அருகில் சந்தேகத்துக்குரிய விதத்தில் நடமாடிய வங்காளதேசத்தை சேர்ந்த 3 பேரை எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.
    ஸ்ரீநகர்:

    ஜம்முவில் உள்ள ரன்பீர் சிங் புரா என்ற பகுதியில் சர்வதேச எல்லை கட்டுப்பாடு கோடு அமைந்துள்ளது. இந்த பகுதியில் கடந்த இரு தினங்களாக ஆட்கள் நடமாட்டம் உள்ளதாக எல்லை பாதுகாப்பு படைக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, அங்கு பாதுகாப்பு படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வங்காளதேசம் நாட்டை சேர்ந்த 3 பேர் சுற்றித் திரிவதை கண்டனர். தொடர்ந்து அவர்களை கைது செய்த எல்லை பாதுகாப்பு படையினர் அவர்களை உள்ளூர் போலீசில் ஒப்படைத்தனர்.

    விசாரணையில் அவர்கள் சுமன்கஞ்ச் மாவட்டத்தை சேர்ந்த மொகமது ஜகாகிர்(18), மொகமது அலி (18) மற்றும் சில்ஹெட் மாவட்டம் ஜத்வாபரியை சேர்ந்த அப்துல் கரீம் (20) என தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து 2 ஸ்மார்ட் போன்கள், இந்திய ரூபாய்களும் பறிமுதல் செய்யப்பட்டன. #Tamilnews
    பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா காஷ்மீர் மாநிலம் ஜம்முவுக்கு நேற்று சென்றார். விமான நிலையத்தில் இருந்து விருந்தினர் மாளிகை சென்ற அமித்ஷா அங்கு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். #AmitShah #Jammu
    ஜம்மு:

    பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா காஷ்மீர் மாநிலம் ஜம்முவுக்கு நேற்று சென்றார். விமான நிலையத்தில் இருந்து விருந்தினர் மாளிகை சென்ற அமித்ஷா அங்கு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    இந்த ஆலோசனையில், காஷ்மீரில் கவர்னர் ஆட்சி அமலில் இருக்கும் நிலையில் தற்போது அங்கு நிலவும் சூழல், கட்சியை பலப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் மூத்த நிர்வாகிகள், கட்சியின் தேர்தல் பிரிவு நிர்வாகிகளுடன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது எப்படி? என்பது குறித்து அமித்ஷா ஆலோசித்தார்.

    இதை தொடர்ந்து மாலையில் பாரதீய ஜன சங்கத்தின் நிறுவனர் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் நினைவு நாளையொட்டி நடந்த பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேசினார்.

    காஷ்மீரில் மெகபூபா முப்தி அரசுக்கு அளித்த ஆதரவை 19-ந் தேதி பா.ஜனதா விலக்கி கொண்ட பிறகு ஜம்முவுக்கு அமித்ஷா சென்றுள்ளது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.  #AmitShah #Jammu #tamilnews 
    போர் நிறுத்தத்தின் புனிதத்தை பாகிஸ்தான் எப்போதுமே மதித்ததில்லை என எல்லை பாதுகாப்பு படை உதவி இயக்குனர் ஜெனரல் கமல்நாத் சவுபே தெரிவித்துள்ளார். #BSF #ADG #KamalNathChoubey #PakistanCeasefire
    ஜம்மு: 

    போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லைப்பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் ராணுவம் வாடிக்கையாக கொண்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த அத்துமீறிய செயலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. 

    இதற்கிடையே, ஜம்முவின் சம்பா செக்டாரில் உள்ள சர்வதேச எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தினர்.   இதில் இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 4 பேர் வீர மரணம் அடைந்தனர். மேலும், 3 வீரர்கள் காயம் அடைந்தனர். 



    இந்நிலையில், எல்லை பாதுகாப்பு படை உதவி இயக்குனர் ஜெனரல்  கமல்நாத் சவுபே இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    போர் நிறுத்தம் என்பது இருநாடுகளும் செய்துகொண்ட ஒப்பந்தம். நாம் அந்த ஒப்பந்தத்தை மதித்து நடந்து வருகிறோம். ஆனால், பாகிஸ்தான் போர் நிறுத்தத்தின் புனிதத்தை எப்போதுமே மதிப்பதில்லை என தெரிவித்துள்ளார். #BSF #ADG #KamalNathChoubey #PakistanCeasefire
    ஜம்மு காஷ்மீரில் உள்ள முகாமில் ராணுவ அதிகாரி ஒருவர் மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஜம்மு:

    ஜம்மு நகரில் ராணுவ பயிற்சி முகாம் அமைந்துள்ளது. இன்று காலை ஒடிசாவை சேர்ந்த ராணுவ அதிகாரி கர்னல் சனத் கபி (51), சுய நினைவற்ற நிலையில் அங்கு மயங்கி கிடந்தார்.

    இதைக்கண்ட சக அதிகாரிகள் அவரை மீட்டு ஜம்முவில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    பிரேத பரிசோதனை முடிந்ததும், ராணுவத்திடம் அவரது உடல் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
    ஜம்முவில் பேருந்து நிறுத்தம் அருகில் பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதில் மூன்று போலீசார் படுகாயம் அடைந்தனர். #Jammu #GrenadeAttack
    ஸ்ரீநகர்:

    ஜம்மு பேருந்து நிலையம் அருகில் நேற்று நள்ளிரவு போலீசார் வாகனம் சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் போலீசார் வாகனத்தின் மீது கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

    இந்த தாக்குதலில் போலீசார் வாகனம் சேதமடைந்தது. அதில் பயணித்த 3 போலீசார் படுகாயம் அடைந்தனர். அங்கிருந்த பாதுகாப்பு படையினர் அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். இந்த தாக்குதலை தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Jammu #GrenadeAttack
    ×