search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 113155"

    சூரியனில் தோன்றிய புள்ளிகளால் ஏற்படும் காந்தப்புயலால் செயற்கைகோள்களுடன் உள்ள தொடர்பு துண்டிக்கும் அபாயம் உள்ளது என்று கொடைக்கானலில் உள்ள வானியல் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி குமரவேல் கூறினார். #Sun #Satellites
    கொடைக்கானல்:

    கொடைக்கானல் அப்சர்வேட்டரியில் வானியல் ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சூரியனை குறித்த ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன. இந்நிலையில் அங்கு பணிபுரியும் விஞ்ஞானி குமரவேல் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    11 ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியனில் புள்ளிகள் தோன்றி வருகின்றன. இதில் 5½ ஆண்டுகள் குறைவாகவும், 5½ ஆண்டுகள் அதிகமாகவும் புள்ளிகள் தோன்றுகின்றன. கடந்த 2013-ம் ஆண்டு சூரியனில் அதிக புள்ளிகள் காணப்பட்டன. இதனிடையே கடந்த இரண்டு நாட்களாக பூமியைவிட சுமார் 5 மடங்கு அளவில் பெரியதாக சூரிய புள்ளி தோன்றியுள்ளது. இதன் காரணமாக சூரிய காந்தப்புயல் அடிக்கடி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளன.

    இதனால் பூமிக்கு நேரடியாக பாதிப்பு இல்லையென்றாலும் சூரிய புள்ளிகள் வெடித்து சிதறும்போது செயற்கைக்கோள்களுடன் உள்ள தொடர்பு துண்டிக்கும் அபாயம் உள்ளது. இதனால் தொலைத்தொடர்பு சாதனங்களின் பாகங்கள் பாதிப்பு அடையும் நிலை ஏற்படும். இதன் நிலைமை குறித்து இனி அடுத்து வரும் சில நாட்களில் தெரியவரும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Sun #Satellites
    சூரிய தோஷம் இருப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்லோகத்தை தினமும் அல்லது ஞாயிற்று கிழமைகளில் விரதம் இருந்து சொல்லி வழிபாடு செய்து வரலாம்.
    ஸம்ரக்த சூர்ணம் ஸஸுவர்ணதோயம்
    ஸகுங்குமாபம் ஸகுஸம் ஸபுஷ்பம்
    ப்ரதத்த மாதாய ச ஹேம பாத்ரே
    ஸஹஸ்ரபானோ பகவன் ப்ரஸீத

    - சூர்ய ஸ்லோகம்

    பொதுப்பொருள்: சிந்தூரம் போன்ற சிவந்த நிறமுள்ளவரே ஆதவனே நமஸ்காரம். அழகிய மண்டலத்தைக் கொண்டவரே, ஸ்வர்ணம், ரத்னம் இழைத்த ஆபரணங்களைத் தரித்தவரே, சூரிய பகவானே, நமஸ்காரம். தாமரையின் ஒளி போன்ற கண்களை உடையவரே, அழகிய தாமரையைக் கையிலேந்தியவரே, ப்ரம்மா, இந்திரன், நாராயணன், சங்கரன் ஆகியோரின் வடிவமாய்த் திகழ்பவரே, தினகரா, நமஸ்காரம்.

    கணவனை இழந்தவர்கள் ரதசப்தமி விரதம் அனுஷ்டித்தால், அடுத்து வரும் பிறவிகளில் இந்த நிலை ஏற்படாது என்று புராணங்கள் சொல்கின்றன.
    உலகிற்கு ஒளி தரும் சூரிய பகவானுக்கு உரிய விரதங்களில், மிக முக்கியமானது ரத சப்தமி. தை மாத வளர்பிறையில் ஏழாவது நாள் இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் சூரியன் உலா வருவதால், திதிகளில் ஏழாவது நாள் சப்தமி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.

    செல்வத்தைப் பெருக்கும் இந்த விரதம் மிகவும் எளிமையானது. ஏழு எருக்கன் இலைகளை, தலையில் ஒன்று, கண்களில் இரண்டு, தோள்பட்டைகளில் இரண்டு, கால்களில் இரண்டை வைத்து நீராட வேண்டும். தலையில் வைக்கும் இலையில், பெண்கள் மஞ்சள் பொடி மற்றும் அட்சதையும், ஆண்கள் அட்சதை மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு செய்வது ஆரோக்கியத்தையும், செல்வ வளத்தையும் தரும். ரத சப்தமி நாளில் செய்யப்படும் தர்மத்திற்கு பலமடங்கு புண்ணியம் உண்டு. இந்த நாளில் தொடங்கும் தொழில் விருத்தியாகும். பெண்கள் உயர்நிலையை அடைவர். கணவனை இழந்தவர்கள் இந்த விரதம் அனுஷ்டித்தால், அடுத்து வரும் பிறவிகளில் இந்த நிலை ஏற்படாது என்று புராணங்கள் சொல்கின்றன. இந்த நாள் தியானம், யோகா செய்ய சிறந்தது.
    பொங்கல் தினத்தன்று சூரியனைப் பார்த்து நாம் சொல்லி வழிபடும் போது அவரை போற்றும் வகையிலான பாடலைப் பாடி வழிபடுவது நன்மைகளை வாரி வழங்கும்.
    பொங்கல் தினத்தன்று சூரியனைப் பார்த்து நாம் சொல்லி வழிபடும் போது அவரை போற்றும் வகையிலான பாடலைப் பாடி வழிபடுவது நன்மைகளை வாரி வழங்கும்.

    சுகத்தைக் கொடுக்கும் சூரியா போற்றி!
    செல்வம் வழங்கும் செங்கதிர் போற்றி!
    பயிர்களை வளர்க்கும் பகலவா போற்றி!
    உயிர்களைக் காக்கும் உத்தமா போற்றி!
    நலங்களை வழங்கும் ஞாயிறே போற்றி!
    குலம் தழைக்க வைக்கும் கோவே போற்றி!
    ஆற்றலை வழங்கும் ஆதவா போற்றி!
    நவக்கிரகத்தின் நாயகா போற்றி!
    நாளும் வரம் தரும் கதிரவா போற்றி!
    ஒளியைக் கொடுக்கும் உத்தமா போற்றி!
    ஏழு குதிரை பூட்டிய தேரில்
    எழிலாய் வலம்வரும் இறைவா போற்றி!
    பொங்கல் நாளில் போற்றித் துதித்தோம்!
    மங்கல நிகழ்ச்சி மனையில் நடக்கவும்
    எங்கும் மகிழ்ச்சி பொங்கிப் பெருகவும்
    செல்வச் செழிப்புடன் சிறப்பாய் வாழ்ந்திட
    சூரிய தேவே! துதித்தோம் அருள்க!
    காரிய வெற்றியைக் கதிரவா தருக!

    என்று துதிப்பாடல்களைப் பாடினால் மதிப்பும், மரியாதையும் உயரும். பிரகாசமான எதிர்காலமும் அமையும். இந்த பாடலைப் பொங்கல் தினம் மட்டுமல்லாது, மற்ற கிழமைகளிலும் குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய நமஸ்காரம் செய்யும் போது அந்த பாடலைப் படிக்கலாம்.
    ஒருவரது ஜாதகத்தில் சூரியதோஷம் இருந்தால் என்னென்ன பிரச்சனைகள் வரும். அந்த பிரச்சனைகள் தீர என்ன பரிகாரம் என்பதை தெரிந்து கொள்வோம்.
    சூரியன் பிதுர்காரகன். அதாவது தந்தைவழி உறவுகளின் அமைப்பில் சாதக பாதகங்களை ஏற்படுத்தக் கூடியவன். அரசு, அரசியல் துறை அமைப்புகள், ஆரோக்கியம் இதற்கெல்லாமும் சூரியனோட அமைப்பே காரணம்.

    உங்க ஜாதகப்படியோ அல்லது தசாபுக்திப்படியோ சூரியனோட அமைப்பு கெட்டிருந்தால், தந்தை வழி உறவுகளோடான ஒற்றுமை பாதிக்கப்படும். பூர்வீக சொத்தில் வில்லங்கம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் தலை, கண்கள், வயிறு, ரத்த மாறுபாடு, பித்தம் அதிகரிப்பு இப்படிப்பட்ட உபாதைகள் மாறி வரும்.

    சட்டப்புறம்பான நபர்களால் மிரட்டல், அரசுவழி அனுமதிகள் கிடைப்பதில் தாமதம், சிலருக்குத் திருமண தாமதம் இப்படிப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் சூரியன் அமைப்பு சரியில்லையாதலால், அதாவது சூரியதோஷத்தால் வரும்.

    சூரியதோஷத்தில் இருந்து பாதுகாப்பது எப்படி?

    சூரியதோஷம் இருந்தால், அடிக்கடி அனுமன் கோயிலுக்குப் போய் வழிபடுங்கள்.

    தாமிரத்தால் செய்த இஷ்டதெய்வ டாலர் அல்லது அனுமன் டாலரை அணிந்து கொள்ளுங்கள்.

    ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியோதயத்தின் போது உங்கள் வீட்டு பூஜையறையில் பசுநெய் தீபம் 5 அகலில் ஏற்றிவைத்து வழிபடுங்கள்.

    பசுமாட்டுக்கு கோதுமை அல்லது கோதுமைத்தவிடு வாங்கிக் கொடுங்கள்.

    சூரியனுக்குரிய ஆதித்ய ஹ்ருதயம், அனுமன் சாலீசா துதிகளை தினமும் கேளுங்கள்.

    முடியாதவர் மாணிக்கக் கல்லில் டாலர் செய்து கழுத்தில் அணியுங்கள். அல்லது மாணிக்கத்தால் செய்த விநாயகரை பூஜியுங்கள். அடிக்கடி பிரசித்தி பெற்ற அனுமன் கோயிலுக்குப் போய் தரிசனம் செய்துவிட்டு

    சூரியனுக்குரிய தானியமான கோதுமையால் ஆன இனிப்பு வகைகளை இயன்ற அளவு தானம் செய்யுங்கள். சூரியனார் கோயிலுக்குப் போவதும் நல்லது.

    தினமும் சூரிய உதயத்திற்கு முன் எழுந்து உங்களது பணிகளை செய்ய ஆரம்பியுங்கள்.

    ஞாயிற்றுக்கிழமைகளில் நவகிரகத்தில் உள்ள சூரியனை வழிபடுங்கள். இதில் உங்களால் முடிந்ததை செய்யுங்கள். சூரியதோஷம் சுலபமாக விலகும்.
    சூரியன் அருகே பூமியை போன்று ஒரு புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது பூமியை விட 3.2 மடங்கு எடை கொண்டது. #NewPlanet

    நியூயார்க்:

    அமெரிக்காவின் கலிபோர்னியா விண்வெளி நிறுவனம் மற்றும் ஸ்பெயின் விண்வெளி அறிவியல் மையத்தின் விஞ்ஞானிகள் சூரியன் அருகேயுள்ள ‘பர்னாட்ஸ்’ என்ற நட்சத்திரம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது அந்த நட்சத்திரம் அருகே பூமியை போன்று ஒரு புதிய கிரகம் இருப்பதை கண்டுபிடித்தனர். அது பூமியை விட 3.2 மடங்கு எடை கொண்டது.

    இது சூரியனிடம் இருந்து 2 சதவீத சக்தியை கிரகித்து கொள்கிறது. இதன் மேற்பரப்பில் மைனஸ் 160 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவுகிறது. இதனால் அங்கு கடும் குளிர் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. உயிரினங்கள் வாழமுடியாது. ஏனெனில் அங்கு திரவ நிலையில் தண்ணீர் இல்லை.

    தண்ணீர் அல்லது வாயு இருந்தால் திட நிலையில் தான் இருக்கும். அவை உறைந்த நிலையில் இருக்கலாம் என நம்பப்படுகிறது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். #NewPlanet

    தீபாவளி பண்டிகையை தொடர்ந்து 4 நாட்கள் நடைபெற்ற சூரிய பகவானை வணங்கும் சத் விரத பூஜை நிறைவடைந்தது.
    சூரிய பகவானை வணங்கும் சத் விரத பூஜை நிறைவடைந்தது.. 4 நாள்கள் கொண்டாடப்படும் இந்த பூஜை தீபாவளி பண்டிகையை தொடர்ந்து வரும் 6-வது நாள் தொடங்கி அடுத்த 4 நாள்களுக்கு கொண்டாடப்படும்.

    இந்த பண்டிகையை பீகார் மற்றும் உ.பியின் கிழக்கு பூர்வாஞ்சல் பகுதி மக்கள் வெகு விமரிசையாக கொண்டாடுவார்கள். இதற்காக நாட்கள் பல பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி கங்கை நதிக்கரையில் வழிபாடு செய்து விருத்துண்டு மகிழ்வார்கள்.

    அதிகாலையில் சூரிய நமஸ்காரம் செய்வது இவ்விழாவின் முக்கியச் சடங்காகும். சத் பூஜாவுக்காக வாரணாசியின் கங்கை நதிக்கரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனிதநீராடி அருகம் புல்லுடன் திரண்டு வந்து சூரியனை வணங்கினர். டெல்லி, மும்பை பாட்னா உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் நீர் நிலைகளில் திரண்ட மக்கள் புனித நீராடி, சூரிய பகவானை வணங்கி உலகிற்கு இருள் நீக்கி ஒளி பெருகச் செய்ய வேண்டிக் கொண்டனர்.

    நேபாளம், பீகார் மற்றும் உத்திரப்பிரதேசத்தில் பரவலாக கொண்டாடப்படும் சத் பூஜா பண்டிகை. இது மிகவும் கடினமான சடங்குகளில் ஒன்றாகும், மற்றும் முழு திருவிழா நான்கு நாட்கள் நீடிக்கும்.

    சத்ய பூஜை பற்றி சில சுவாரஸ்யமான உண்மைகள் இங்கே உள்ளன.

    இந்த விழா நேபாளத்தில் வசிக்கும் மக்கள் மற்றும் இந்தியாவில் பரவலாக முக்கியமாக பீகார், ஜார்கண்ட் மற்றும் உத்திரப்பிரதேச மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது.

    இந்த விழாவில் பின்பற்ற வேண்டிய சடங்குகள் மிகவும் கடினமானவை, முக்கியமாக குடும்பத்திலுள்ள பெண்களால் நடத்தப்படுகின்றன.

    நான்கு நாட்களுக்கு சத் பூஜா கொண்டாடப்படுகிறது. இது புனித குளியல், உண்ணாவிரதம் மற்றும் குடிநீர் (வெள்ளாடு) ஆகியவற்றை உள்ளடக்கியது. நீரில் நீண்ட நேரத்திற்கு நீரில் நின்று, பிரசாதத்தை அர்ப்பணிக்க வேண்டும்.

    இந்த திருவிழா கார்டிகிஷ்குலாஷஷ்டி அன்று கொண்டாடப்படுகிறது, இது விக்கிரமசம்வாதியின் கார்டிகாரடி மாதத்தின் ஆறாம் நாளாகும்.

    சத் பூஜை தீபாவளி முதல் நாள் அன்று துல்லியமாக தொடங்குகிறது. நஹய்கே இந்த பண்டிகை நாளன்று தான். இந்த நாளில் ஒரு நதி அல்லது குளத்தில் குளித்தெடுத்து, ஒரு சிறப்பு மதிய உணவை தயார் செய்து, அதில் அரிசி மற்றும் பருப்பு கலந்த கலவை கொண்ட பூசணி கொண்டிருக்கும்.

    சந்திர பூஜையின் இரண்டாம் நாள் கர்னா. கெய்ர் மற்றும் சப்பாத்தி ஆகியவை கையால் செய்யப்பட்ட சல்லூ என அழைக்கப்படும் ஒரு தீ இடத்தில் சமைக்கப்படுகின்றன. முழுக்க முழுக்க குடிநீர் இன்றி, வேகமாக வரும் சந்திரன் மற்றும் கங்கை தெய்வம் ஆகியவற்றைப் பலி செலுத்துவதற்குப் பிறகு, கெய்ரோ-ரோடி இரவு உணவை சாப்பிடுகிறார்கள்.

    சந்திர பூஜையின் கடைசி நாள் உஷாஆர்கியா என்று அழைக்கப்படுகிறது. பக்தர்கள் சூர்ய நமஸ்கரை சூர்யனுக்கு பூஜை செய்து வழிபாடு செய்கின்றனர். சந்திர பூஜை முடிவடைகிறது.

    இந்த மிக பிரபலமான பூஜையில் பூஜை செய்யப்படும் தெய்வம் சதிமையா. சத்யாவின் இளைய சகோதரியாக சத்தியமலை நம்பப்படுகிறது.

    பீகாரில், சாத் பூஜியா மிகப்பெரிய கொண்டாட்டங்களில் ஒன்றாகும். பிஹாரி அவர்கள் இந்தியாவில் குடிபெயர்ந்தாலும் இந்த விழாவை கொண்டாடும் பாரம்பரியத்தைத் தொடர்ந்தார். இந்த திருவிழாவின் அதிகரித்த பிரபலத்திற்கான காரணம் இதுதான்.
    சூரியனை ஆராய்ச்சி செய்வதற்காக அமெரிக்கா அனுப்பிய பார்கர் சோலார் புரோப் செயற்கைக் கோளில் 11 லட்சம் பெயர்களை சுமந்து சென்றுள்ளது. #ParkerSolarProbe
    நியூயார்க்:

    சூரியனுக்கு மிக அருகில் சென்று ஆய்வு நடத்த அமெரிக்காவின் நாசா மையம் ‘பார்கர் சோலார் புரோப்’ எனப்படும் விண்கலத்தை நேற்று முன்தினம் அனுப்பியது.

    இந்த விண்கலம் ராக்கெட் மூலம் செலுத்தப்பட்டுள்ளது. இதை உலகமே கொண்டாடி வருகிறது. இதுவரை சூரியனை மிக அருகில் செல்லும் வகையில் யாரும் ராக்கெட்டை அனுப்பியதில்லை. ஒரு மணிநேரத்தில் 4 லட்சத்து 30 ஆயிரம் மைல் கல் தூரம் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ராக்கெட் 11 லட்சம் மனிதர்களின் பெயர்களை தாங்கி செல்கிறது.

    இந்த ராக்கெட்டில் பொருத்தப்பட்டுள்ள பார்கர் விண்கலத்தில் ஒரு ‘மெமரி கார்டு’ உள்ளது. அதில் 11 லட்சத்து 37 ஆயிரத்து 202 பேரின் பெயர்கள் ஏற்றப்பட்டுள்ளன. இந்த பெயர்களை பரிந்துரைக்க அறிவியல் பத்திரிகைகளில் நாசா முன்பே விளம்பரம் செய்திருந்தது. #ParkerSolarProbe
    சூரியன் மறைந்ததும் வானில் பல நட்சத்திரங்கள் தோன்ற முயற்சிப்பதாகவும் அதில் ஜொலிக்கப் போகும் நட்சத்திரத்தை பொருத்திருந்து பார்ப்போம் என்றும் தமிழிசை கூறினார். #BJP #TamilisaiSoundararajan
    சென்னை:

    தி.மு.க.வில் மு.க.அழகிரி போர்க்கொடி தூக்கி இருப்பது பற்றி பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    நானும் செய்திகளில் படித்தேன். அது அவர்கள் உள்கட்சி பிரச்சனை. ஆனால் ஒரு சூரியன் மறைந்ததும் வானில் பல நட்சத்திரங்கள் தோன்ற முயற்சிக்கின்றன. அதில் ஜொலிக்கப் போகும் நட்சத்திரத்தை பொருத்திருந்து பார்ப்போம்.

    பொதுவாக மிகப்பெரிய தலைவர்கள் எல்லோருமே உள்கட்சி பூசலை வலுவிழக்க செய்யும் வலுவான தலைவர்களாக இருந்தார்கள்.


    கருணாநிதி, ஜெயலலிதா என்ற இரு பெரிய தலைவர்கள் இல்லாததால் தமிழக அரசியல் களம் மாறுபட்ட அரசியல் களமாக இதுவரை பார்த்திராத களமாகத்தான் இருக்கும்.

    ஒரு தலைவர் இல்லாததால் ஏற்படும் வெற்றிடத்தில் இருந்து வெற்றிடத்தை பெற வேண்டிய நிலையில் பா.ஜனதா இல்லை. வாக்குச்சாவடி அளவில் கட்சியை வலுப்படுத்தும் பணிகளை செய்து வருகிறோம்.

    சட்டமன்ற தொகுதி வாரியாக 20 தலைவர்கள் இன்று முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்கள். நான் இன்று ராமநாதபுரம் மாவட்டம் செல்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #TamilisaiSoundararajan #DMK #MKAzhagiri
    சூரியனை இதுவரை இல்லாத வகையில் நெருக்கமாக சென்று ஆய்வு செய்வதற்காக நாசா தயாரித்துள்ள செயற்கைகோள் நாளை விண்ணில் செலுத்தப்பட உள்ளது. #Nasa #ParkerSolarProbe
    நியூயார்க்:

    சூரியன் குறித்த தகவலை திரட்டி வர கடந்த 1970 களில் விண்வெளிக்குச் சென்ற முதல் விண்கலமான ‘ஹீலியஸ் 2’ சூரியனை சுமார் 27 மில்லியன் மைல் தூரத்தில் இருந்துதான் ஆய்வு செய்ய முடிந்தது. அதனால் உலக அழிவை ஏற்படுத்தக்கூடிய சூரிய புயல் (Solar Wind)  தொடர்பான போதிய தகவல்களை இதுவரை திரட்ட முடியவில்லை. 

    ஒவ்வொரு நொடியும் பல்லாயிரக்கணக்கான டிகிரி செல்சியஸ் வெப்பத்தைக் கக்கும் சூரியனையே, சுமார் ‘நாற்பது லட்சம் மைல்கள்’ தொலைவில் அல்லது மிக அருகில் சென்று ஆய்வு செய்யக்கூடிய ‘பார்க்கர் சோலார் புரோப்’ (Parker Solar Probe) எனும் செயற்கைகோளை நாசா அனுப்புகிறது.  அமெரிக்க நேரப்படி நாளை அதிகாலை 3.30 அனுப்பப்படுகிறது. புறப்படுவதற்கு  70 சதவீதம் கால நிலை  சாதகமாக உள்ளதாக நாசா கூறி உள்ளது.

    சூரியன் மற்றும் பெரும் அழிவை ஏற்படுத்தக் கூடிய ‘சூரிய புயல்’ அல்லது சூரிய பருவநிலை தொடர்பான புதிய தகவல்களை சேகரித்து பூமிக்கு அனுப்பக் கூடிய இந்த பார்க்கர் சோலார் புரோப், சூரிய பரப்பின் 64 லட்சம் கி.மீ பகுதியில் பறக்கும் என்றும், சுமார் 1,400 செல்சியஸ் (2,500 பாரன்ஹீட்) வெப்பம் மற்றும் மிகப்பெரிய கதிரியக்கத்தையும் தாங்கி, எதிர்கொண்டு ஆய்வு செய்யும் திறன்கொண்டது என்றும் கூறப்படுகிறது. சூரியனின்  வெப்பம் மிகுந்த கரோனா பகுதியில் பார்க்கர் சோலார் புரோப் பயணித்து ஆய்வு செய்கிறது.

    ஏனென்றால், இந்த செயற்கைகோள் அதீத தட்பவெப்ப நிலைகளைத் தாங்கும் சுமார் 11.4 செ.மீ (4.5 அங்குலம்) தடிமன் உள்ள கார்பன் காம்போசிட்டால் ஆன கவசத்தைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. மணிக்கு சுமார் 7,25,000 கி.மீ வேகத்தில் பறக்கக் கூடிய திறன்கொண்ட பார்க்கர் சோலார் புரோப், சுமார் 6 வருடங்கள் மற்றும் 11 மாதங்களில் சூரியனை 24 முறை சுற்றி வந்து ஆய்வு செய்யும் என்கிறது நாசா. 
    ×