search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 113336"

    தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.
    பிரசித்தி பெற்ற தஞ்சை பெரியகோவில் உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வருகிறது. இந்த கோவிலை மாமன்னன் ராஜராஜசோழன் கி.பி.1004ம் ஆண்டு கட்டத்தொடங்கி 1010-ம் ஆண்டு கட்டி முடித்தார். மாமன்னன் ராஜராஜன் காலத்தில் பெரியகோவிலில் நடந்த திருவிழாக்கள் பற்றி கோவில் கல்வெட்டுகள் கூறுகின்றன.

    பல்வேறு சிறப்புகள் வாய்ந்த பெரியகோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சாமி புறப்பாடு நடைபெற்றது. மேலும் பரதநாட்டியமும், திருமுறை இன்னிசை நிகழ்ச்சியும் நடந்தது. தேர் இருக்கும் இடமான மேலவீதியில் கடந்த 7-ந் தேதி தேர் அலங்காரம் செய்யப்பட்டதையடுத்து பந்தகால் முகூர்த்தம் நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. நேற்று முதலே தஞ்சை மாவட்டம் மட்டுமில்லாது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் தஞ்யில் குவிந்தனர். தற்போது கோடை விடுமுறை என்பதால் வழக்கத்தை விட அதிகளவில் கூட்டம் காணப்பட்டது. இதுமட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் தேரோட்டத்தை காண அதிகளவில் வந்தனர்.

    தேரோட்டத்தையொட்டி இன்று அதிகாலை 5 மணிக்கு பெரியகோவிலில் இருந்து விநாயகர், சுப்பிரமணியர், நீலோத்பலாம்பாள், சண்டிகேஸ்வரர், தியாகராஜர்கமலாம்பாள் ஆகிய பஞ்சமூர்த்திகள் ஒன்றன்பின் ஒன்றாக முத்துமணி அலங்கார சப்பரத்தில் புறப்பட்டு தேர் மண்டபத்தை வந்தடைந்தனர். பின்னர் தியாகராஜர்- கமலாம்பாள் மட்டும் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதற்காக 16½ அடி உயரத்துடன் 40 டன் எடை கொண்ட 3 அடுக்குகள் கொண்ட தேரில் பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தியாகராஜருக்கு சிறப்பு ஆராதனைகள் செய்யப்பட்டது.

    அதைத்தொடர்ந்து காலை 6.15 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. மாவட்ட கலெக்டர் அண்ணாத்துரை, போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன், தஞ்சை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே ஆகியோர் வடம்பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். இதையடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேர் மேலவீதியில் இருந்து பக்தர்கள் வெள்ளத்தில் அசைந்தாடி புறப்பட்டது. பக்தர்கள் ‘‘ஓம் நமச்சிவாய’’ என்ற கோ‌ஷங்களை எழுப்பியபடி தேரை வடம்பிடித்து இழுத்து சென்றனர். அப்போது மங்கள வாத்தியங்கள், கரகாட்டம், குச்சிப்புடி, தப்பாட்டம், செண்டை வாத்தியங்கள் இசைக்கப் பட்டன.

    தஞ்சை மேலராஜவீதி, வடக்கு ராஜவீதி, கீழராஜவீதி, தெற்கு ராஜவீதி ஆகிய 4 ராஜ வீதிகளிலும் தேர் வலம் வந்தது. பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வசதியாக மேலராஜவீதியில் 3 இடங்களிலும், வடக்கு ராஜ வீதியில் 4 இடங் களிலும், கீழராஜ வீதியில் 4 இடங்களிலும், தெற்குராஜ வீதியில் 3 இடங்களிலும் தேர் நிறுத்தப்பட்டது.

    பக்தர்கள் பய பக்தியுடன் சாமி தரிசனம் செய்து சாமிக்கு மாலைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொடுத்தனர். பின்னர் மதியம் 11.45 மணிக்கு தேர் நிலை மண்டபத்தை வந்த டைந்தது.

    இதில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளி நாட்டினர் என லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். தஞ்சை நகரமே இன்று விழாக்கோலம் பூண்டது. போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் உத்தரவுப்படி பாதுகாப்பு பணியில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.
    தன் மகன் போல் உள்ள பக்தன் நந்திக்கு திருமணம் செய்து வைக்க எண்ணம் கொண்டார் திருவையாறு ஐயாறப்பன். பங்குனி மாத புனர்பூச நன்னாளில் நந்திக்கும் சுயம்பிரகாசைக்கும் திருமழப்பாடியில் திருமணம் நடந்தது.
    பங்குனி மாத புனர்பூச நன்னாளில் நந்திக்கும் சுயம்பிரகாசைக்கும் திருமழப்பாடியில் திருமணம் நடந்தது. தன் மகன் போல் உள்ள பக்தன் நந்திக்கு திருமணம் செய்து வைக்க எண்ணம் கொண்டார் திருவையாறு ஐயாறப்பன். புலிக்கால் முனிவரான வியாக்ர பாத முனிவரின் மகள் சும்பிரகாசைக்கும் ஐப்பேசன் என்ற பெயருடைய நந்தி தேவருக்கும் சிறப்பாகத் திருமணம் செய்வித்தார். இதற்கு எல்லாரும் அவரவர் பங்குக்கு சில செலவுகளை ஏற்றுக் கொண்டனர்.

    பழமும், பூவும், நெய்யும், குண்டலங்களும் கொடுத்ததுடன் வேதியர்களையும் அனுப்பி திருமணத்தை சிறப்பாக நடத்த உதவினர். இப்படி திருமணம் நடத்தி சிறப்பித்தவர்களக்கு நன்றி கூறினார் நந்திதேவர். இந்த நன்றி கூறும் திருவிழாவிற்கு ஏழூர் பெருவிழா எனப்பெயர்.

    ஏழு ஊர்களுக்கும் சென்று நன்றி கூறி, அவர்களின் மரியாதைகளை ஏற்றபின், இரு பல்லக்குகளுடன் அந்த ஏழு ஊர்களின் பெருமான்களும் பிராட்டியும் உடன் வந்த திருவையாறு அடைவார்கள். பின் எல்லா ஊர்பெருமான்களும் கல்யாண தம்பதிகளிடமும் பிரபஞ்ச தம்பதிகளிடமும் (சிவ-பார்வதி) விடை பெற்றுக் கொண்டு அவரவர் ஊர் போய்ச் சேருவார்கள்.

    முதல் ஊர் திருப்பழனம், அடுத்து திருச்சோற்றுத் துறை, தொடர்ந்து திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம், இறுதியாக திருவையாறு என ஏழு ஊர்களுக்கும் செல்வது தான் இவ்விழா.

    இந்த ஊர்வலத்துடன் பக்தர்கள், இசை வித்வான்கள், நடனக்காரர்கள், நாயனக்காரர்கள் எல்லாரும் போவார்கள். எல்லா இடங்களிலும் இசை, நாதஸ்வரம், குசல விசாரிப்புகள், விருந்து உபசாரம் கேளிக்கை, கொண்டாட்டம் என உற்சாகமாகவும் கோலா கலமாகவும் இவ்விழா நடைபெறும்.
    சிவபெருமானின் வாகனமாக நந்தி விளங்குகிறார். வெள்ளை நிறம் கொண்ட, எருது வாகனமாக இருக்கும் அவர், சிவபெருமானின் சேவகர்களில் தலைமையானவர்.
    சிவபெருமான் வீற்றிருக்கும் புனித ஸ்தலம் கயிலாய மலை. இந்த மலையின் காவலனாக விளங்குகிறார் நந்தியம்பெருமான். எருது வாகனமாக இருக்கும் அவர், சிவபெருமானின் சேவகர்களில் தலைமையானவர்.

    வெள்ளை நிறம் கொண்ட அவர், தூய்மைக்கும், அறத்திற்கும் உரியவர் ஆவார். சிவபெருமானின் வாகனமாக நந்தி விளங்குகிறார். கயிலை மலையில் வீற்றிருக்கும் சிவபெருமானை யார் ஒருவர் பார்க்க வேண்டும் என்றாலும், அதற்கான முன் அனுமதியை நந்தியிடம் பெற வேண்டியது அவசியம்.

    அந்த முறை தான், தற்போது கோவில்களிலும் உள்ளது. சிவபெருமானை வழிபடுவதற்கு முன்பாக நந்தி வைக்கப்பட்டிருப்பதன் காரணம் இது தான். நந்தியை வழிபட்டு அனுமதி வாங்கிய பிறகே, கருவறையில் இருக்கும் சிவபெருமானை தரிசிக்கச் செல்ல வேண்டும்.
    பெரிய சிவாலயங்களில் 5 வகையான நந்திகள் அமைந்திருக்கும். எந்த நந்தி எந்த இடத்தில் அமைந்திருக்கும் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
    பெரிய சிவாலயங்களில் 5 வகையான நந்திகள் அமைந்திருக்கும்.

    இந்திர நந்தி
    வேத நந்தி
    ஆத்ம நந்தி
    மால்விடை நந்தி
    தரும நந்தி

    ஆகியவைதான் அவை.

    இவைகளில், இந்திர நந்தியை கோவிலுக்கு வெளியே சற்றுத் தொலைவில் கருவறையை நோக்கி அமைக்கின்றனர்.

    வேத நந்தி அல்லது பிரதம நந்தியை சுதையாலும், சுண்ணாம்பாலும் மிகப் பெரிய அளவில் பெரிய மண்டபத்தினுள் அமைக்கின்றனர்.

    ஆத்ம நந்தி கொடி மரத்தின் அடியில் அமைகிறது. இதற்கே, பிரதோஷ கால சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

    மால்விடை நந்தி சக்தி பதமான இரண்டாவது ஆவரணுத்துள் அமைகிறது.

    தரும நந்தி இறைவனுக்கு அருகில் மகா மண்டபத்தில் எழுந்தருளியிருக்கும்
    நமது நல்லெண்ணங்கள், நியாயமான விருப்பங்கள் மற்றும் கோரிக்கைகள் நிறைவேற நமது உள்ள தூய்மையோடு இறைவனின் அனுக்கிரகமும் வேண்டும். அதற்கான நந்தி பகவானின் நந்தி ஸ்லோகம் இதோ.
    நந்திகேசி மஹாயாக
    சிவதயா நபராயண கௌரீ
    சங்கரஸேவர்த்தம்
    அனுக்ராம் தாதுமாஹஸ

    சிவனின் வாகனமும், சிறந்த ஞானியும் ஆன நந்தி பகவானை போற்றும் ஸ்லோகம் இது. இந்த நந்தி ஸ்லோகத்தை தினமும் இது. குளித்து முடித்ததும் 9 முறை அல்லது 27 முறை கூறி வழிபடலாம். மாத சிவராத்திரி, பிரதோஷம் மற்றும் மஹாசிவராத்திரி ஆகிய தினங்களில் சிவன் கோவிலுக்கு சென்று நந்தி பகவானை இந்த ஸ்லோகத்தை கொண்டு 9 முறை துதித்த பின்பு சிவபெருமான் மற்றும் பார்வதியை வணங்குவதால் நமது மனதில் இருக்கும் தீமையானவை அனைத்தும் நீங்கி, உங்களின் கோரிக்கைகள், நல்லெண்ணங்கள், நியாயமான விருப்பங்கள் அனைத்தும் நிச்சயம் நிறைவேற அருள்புரிவார் நந்தி பகவான்.
    மகரசங்கராந்தி விழாவையொட்டி தஞ்சை பெரியகோவிலில் நந்திபெருமானுக்கு 1 டன் காய்-கனி, மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது.
    தஞ்சை பெரிய கோவிலில் மிகப்பெரிய நந்திபெருமான் சிலை உள்ளது. நந்திபெருமானுக்கு மகரசங்கராந்தி விழா பொங்கல் பண்டிகை தினமான நேற்றுமுன்தினம் தொடங்கியது. இதையொட்டி பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும், அதைத்தொடர்ந்து தீபாராதனையும் நடைபெற்றது.

    மாட்டு பொங்கல் பண்டிகையான நேற்று பக்தர்கள், வியாபாரிகளால் வழங்கப்பட்ட உருளைகிழங்கு, கத்தரிக்காய், சவ்சவ், முட்டைகோஸ், பூசணிக்காய், வாழைக்காய், பாகற்காய், கேரட், மிளகாய், வெண்டைக்காய், பீட்ரூட் போன்ற பல்வேறு வகையான காய்கறிகளாலும், ஆரஞ்சுப்பழம், வாழைப்பழம், ஆப்பிள், மாதுளை, கொய்யா, அன்னாசிப்பழம் போன்ற பலவகையான கனிகளாலும், முறுக்கு மற்றும் பால்கோவா போன்ற பல்வேறு வகையான இனிப்புகளாலும், மலர்களாலும் நந்திபெருமானுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. மொத்தம் 1 டன் காய்-கனிகள், மலர்கள், இனிப்புகளால் நந்திபெருமானுக்கு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

    மாட்டுப்பொங்கலையொட்டி தஞ்சை பெரியகோவிலில் 108 பசுகளுக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    மேலும் 108 பசுகளுக்கு பூஜை நடைபெற்றது. நந்தி பெருமான் சிலை முன்பு பசுமாடுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு, மாடுகள் மீது சந்தனம், குங்குமம் பூசப்பட்டு, மாலை அணிவிக்கப்பட்டு, பட்டுதுணி போர்த்தப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதேபோல பெருவுடையார்-பெரியநாயகி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    மைசூருவில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் சாமுண்டி மலை உள்ளது. இந்த மலை அடிவாரத்தில் மகா நந்தி உள்ளது. இந்த நந்திக்கு 12-ந்தேதி மகா ருத்ராபிஷேகம் நடத்தப்பட உள்ளது.
    மைசூருவில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் சாமுண்டி மலை உள்ளது. இந்த மலை அடிவாரத்தில் மகா நந்தி உள்ளது. 16 அடி உயரம் கொண்ட இந்த மகா நந்திக்கு மகா ருத்ராபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது. அதுபோல் நடப்பு ஆண்டில் வருகிற 12-ந்தேதி (திங்கட்கிழமை) நந்திக்கு மகா ருத்ராபிஷேகம் நடத்தப்பட உள்ளது.

    இந்த ருத்ராபிஷேகத்தின் போது 500 லிட்டர் பால், 200 லிட்டர் தயிர், 100 லிட்டர் தேன், திவ்ய, திரவிய பொருட்கள் என 47 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெறுகிறது. மேலும் சிறப்பு அலங்காரம், பூஜையும் நடத்தப்படுகிறது.

    இந்த தகவலை நந்தி மகா ருத்ராபிஷேக குழு தலைவர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். 
    சிவபெருமான் வீற்றிருக்கும் ஆலயங்களில் அவரது சன்னிதிக்கு முன்பாக வீற்றிருப்பார், நந்தியம்பெருமான். இவரைப் பற்றிய இருபது சிறப்பு அம்சங்களை இங்கே பார்க்கலாம்.
    சிவபெருமான் வீற்றிருக்கும் ஆலயங்களில் அவரது சன்னிதிக்கு முன்பாக வீற்றிருப்பார், நந்தியம்பெருமான். சிவலோகத்தில் இருக்கும் கணங்களில், முதன்மையானவர் இவர் என்றும் கூறப்படுகிறது. இவரைப் பற்றிய இருபது சிறப்பு அம்சங்களை இங்கே பார்க்கலாம்.

    * ‘நந்தி’ என்பதற்கு ‘மகிழ்ச்சியைத் தருபவர்’ என்று பொருள். ஈசனை வழிபடுவதற்கு, பக்தர்களுக்கு அனுமதி கொடுத்து மகிழ்ச்சியை வழங்குபவர் என்பதால் இந்தப் பெயர்.

    * கயிலாயத்தின் வாசலை காவல் காப்பவர் நந்தி பகவான். இவரிடம் அனுமதி பெற்றுதான், கயிலையில் வீற்றிருக்கும் ஈசனைப் பார்க்க முடியும். அதே வழிமுறையைதான் நாம் சிவாலயங்களிலும் பின்பற்றுகிறோம். முதலில் நந்தியை வணங்கிய பிறகே, மூலவரை வணங்க வேண்டும்.

    * பிரதோஷ காலங்களில் நந்தீஸ்வரருக்குத் தான் முன்னுரிமை. ஆலகால விஷத்தை அருந்திய ஈசன், நந்தியின் கொம்புகளுக்கு இடையில் நின்று நடனம் புரிந்தார். அது ஒரு பிரதோஷ வேளையாகும். எனவேதான் பிரதோஷ காலத்தில் நந்திக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகிறது. பிரதோஷங்களில் தவறாது கலந்து கொண்டு நந்தியை வழிபட்டால் வேண்டிய வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    * நாகப்பட்டினம் மாவட்டம் ஆத்தூரில் மந்தாரவனேஸ்வரர் திருக்கோவில் இருக்கிறது. இங்கு நந்தியம்பெருமான், சிவபெருமானை பூஜை செய்யும் அற்புதக் காட்சியை தரிசிக்கலாம்.

    * தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நந்தி என்று சொன்னால், அது தஞ்சை பெரியகோவிலான பிரகதீஷ்வரர் ஆலயத்தில் உள்ள நந்திதான் நினைவுக்கு வரும். இந்த நந்தி ஒரே கல்லில் வடிக்கப்பட்டது.

    * ஆந்திர மாநிலம் லேபாட்சியில் உள்ள கருங்கல் நந்தியே, இந்தியாவில் உள்ள மிகப் பெரிய கருங்கல் நந்தி என்று கூறப்படுகிறது.

    * சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் ஆதிபுரீஸ்வரர் கோவில் இருக்கிறது. இங்கு பிரமாண்டமான அதிகார நந்தி வாகனம் இருக்கிறது.

    * அக்னி தலமாக விளங்குவது திருவண்ணாமலை. இதன் கிரிவலப்பாதையின் ஒரு பகுதியில் மலையில் நந்தி படுத்திருப்பது போன்ற உருவம் தென்படும். இதனை ‘நந்தி முக தரிசனம்’ என்று அழைக்கிறார்கள்.

    * திருவண்ணாமலையில் கிரிவலப்பாதையில் ‘ஜோதி நந்தி’ உள்ளது. இதன் முன்பாக தீபம் ஏற்றி, மலையை நோக்கி வழிபடுவதை பக்தர்கள் வழக்கமாக வைத்துள்ளனர்.

    * மதுரை ஆவணி மூல வீதியில் ‘மாக்காளை’ என்று அழைக்கப்படும், சுதையால் வடிக்கப்பட்ட பிரமாண்ட நந்தி சிலை உள்ளது. இதுபோன்ற மாக்காளை நந்திகளை, திருநெல்வேலி, சுசீந்திரம், ராமேஸ்வரம், திருவிடைமருதூர் போன்ற ஆலயங்களிலும் காண முடியும்.

    * கேரள மாநிலம் வைக்கத்தில் மகாதேவர் ஆலயம் அமைந்திருக்கிறது. இந்த ஆலயத்தின் நான்கு மூலைகளிலும் நந்தி சிலை அமைக்கப்பட்டுள்ளது.

    * மராட்டிய மாநிலம் புனேயில் கருவறை நந்தி என்ற நந்திக் கோவில் இருக்கிறது.



    * மைசூர் பகுதியில் உள்ள சாமுண்டி மலை மீது காணப்படும் நந்தி, சுற்றுலாப்பயணிகளைக் கவரும் வகையில் அழகுற அமைக்கப்பட்டிருக்கிறது.

    * திருவாரூர் தியாகராஜர் கோவிலில், ஈசனை ஆச்சரியத்துடன் பார்த்தபடி எழுந்து நிற்கும் கோலத்தில் நந்தி காணப்படுகிறது. இந்த நந்தியை வழிபட்டால் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும் என்பது நம்பிக்கை.

    * திருமந்திரம் எனும் நூலை எழுதிய திருமூலருக்கு குருவாக திகழ்ந்தவர் நந்தியம்பெருமான். திருமூலருக்கு இவர்தான், வேத ஆகமங்களை விளக்கி அருளியதாக புராணங்கள் கூறுகின்றன.

    * கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தில் நந்தி மலை உள்ளது. இந்த மலையே பெண்ணாறு, பாலாறு, பொண்ணையாறு ஆகியவற்றின் பிறப்பிடமாக இருக்கிறதாம். கடல் மட்டத்தில் இருந்து 1,500 அடி உயரத்தில் உள்ள இந்த மலையில் பழமை வாய்ந்த நந்தி கோவில் ஒன்றும் உள்ளது.

    * சனகர், சனந்தர், சனாதனர், சனத்குமாரர், பதஞ்சலி, சிவயோக மாமுனி, வியாக்கிரபாதர், திருமூலம் ஆகிய 8 பேரும் நந்தியம் பெருமானின் சீடர்கள் ஆவர்.

    * நந்தியம்பெருமானின் வரலாற்றைப் பற்றி லிங்க புராணம் விளக்கமாக எடுத்துரைக்கிறது. சிவபெருமானே, நந்தியம்பெருமானாக பிறந்து, கணங்களில் தலைவராக மாறினார் என்றும் கூறப்படுகிறது.

    * தத்துவம், யோகம், நாட்டியம், இசை, ஆயுர்வேதம், அஸ்வவேதம், காமவேதம் முதலிய பல்வேறு சாத்திரங்களைத் தோற்றி வைத்தவராக, நந்திகேஸ்வரர் என்ற பெயரில் ஒரு முனிவர் வாழ்ந்ததாக கூறப்படுகிறது.

    * சிவபெருமான் நாட்டியக் கலையை பிரம்மாவுக்கு கற்றுக் கொடுக்க, அதனை அறிந்த நந்தியம்பெருமான், அந்த நாட்டியக் கலையை பரத முனிவருக்கு போதித்ததாக அபிநய தர்ப்பணம் என்ற நூல் கூறுகிறது. 
    பெங்களூருவில் உள்ள ‘பசவனகுடி’ என்ற நந்தி கோவிலில் அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், முதலில் அறுவடை செய்யும் ஒரு பகுதியை ஒவ்வொரு ஆண்டும் நந்திக்கு படைத்து வழிபட்டு வந்தனர்.
    இந்தியாவில் ஒரே கல்லால் ஆன நந்தி சிலை அமைந்துள்ள 6 கோவில்களில், பெங்களூருவில் உள்ள நந்தி கோவிலும் ஒன்று. கர்நாடகத்தில் மைசூரு, பேளூர் ஆகிய இடங்களிலும், தமிழ்நாட்டில் தஞ்சாவூர், ராமேசுவரம் ஆகிய இடங்களிலும், ஆந்திராவில் இந்துப்பூர் அருகே உள்ள லெபாட்சி என்ற இடத்திலும் இதேபோல் ஒரே கல்லால் ஆன சிலைகள் உள்ளன.

    பெங்களூருவில் உள்ள நந்தி கோவிலை ‘பசவனகுடி’ என்று உள்ளூர் மக்கள் அழைக்கிறார்கள். அதற்கு ‘நந்தியின் கோவில்’ என்று பொருள். இந்த கோவில் 16-ம் நூற்றாண்டில் திராவிட கட்டிடக்கலை அம்சத்துடன் பெங்களூருவை நிர்மாணித்த கெம்பே கவுடாவால் கட்டப்பட்டது. அந்தப் பகுதியில் பயிரிடப்பட்டு இருந்த வேர்க் கடலை தோட்டத்தில் நந்தி புகுந்து சேதப்படுத்தியதாகவும், எனவே அதை சாந்தப்படுத்த கோவில் கட்டியதாகவும் புராதன வரலாறு சொல்லப்படுகிறது. அங்கு நந்தி சிலை வளர்ந்து கொண்டே இருந்ததால் அதை தடுக்க தலைப்பகுதியில் திரிசூலம் அணிவிக்கப்பட்டதாகவும் நம்பப்படுகிறது.

    இந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், தாங்கள் விளைவிக்கும் வேர்க்கடலையில் முதலில் அறுவடை செய்யும் ஒரு பகுதியை ஒவ்வொரு ஆண்டும் நந்திக்கு படைத்து வழிபட்டு வந்தனர். அதுவே நாளடைவில் ‘கடலைக்காய் சந்தை’யாக மாறி, தற்போது நவம்பர், டிசம்பர் மாதங்களில் இந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

    நந்திகோவில் அருகே ‘தொட்ட கணேசா’ கோவில் உள்ளது. இங்கு 18 அடி உயர விநாயகர் சிலை உள்ளது. ஒவ்வொரு திங்கள், வெள்ளிக்கிழமைகளில் விநாயகர் சிலை 100 கிலோ நெய்யால் அலங்கரிக்கப்படுகிறது. அந்த நெய் பக்தர்களுக்கு வினியோகமும் செய்யப்படுகிறது. இந்தக் கோவில் தினமும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

    இதுதவிர நந்திகோவில் அருகே கவி கங்காதேஸ்வரர் கோவிலும் அமைந்துள்ளன. பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் நந்தி கோவில் உள்ளது. 
    ×