search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 113362"

    • சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் கல்லிமேடு பஸ் நிறுத்தத்தில் சோதனை செய்தனர்.
    • 8 பேரையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    கோவை,

    கோவை இடையர்பாளையம் கல்லிமேடு பஸ் நிறுத்தம் அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக சுல்தான்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் கல்லிமேடு பஸ் நிறுத்தத்தில் சோதனை செய்தனர். அப்போது அந்த பகுதியில் வாலிபர் ஒருவர் நின்று கொண்டு இருந்தார்.

    போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து ஓட முயன்றார். உடனே சுதாரித்து கொண்ட போலீசார் அவரை மடக்கி பிடித்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தியதில் அவர் சூலூர் பாப்பம் பட்டியை சேர்ந்த திருமால்சாமி (வயது 53) என்பதும், கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் மேட்டுப்பாளையம், கே.ஜி சாவடி, கோமங்களம், சூலூர் மற்றும் அன்னூர் ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்ததாக கார்த்திக் (22), ஸ்டீபன்ராஜ் (21), முகமது ரபிக் (18), நந்தலால் (43), அஜித்குமார் (22), அரவிந் (21), மனோகரன் (51) ஆகியோரை போலீசார் பிடித்தனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 700 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் 8 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • கோவில்பட்டி-குமாரபுரம் இடையே ெரயில் பாதையில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
    • ெரயில் இன்றும், வருகிற 17-ந் தேதியும் தேதியும் ரத்து.

    கோவை,

    கோவை-நாகர்கோவில் ெரயில் இன்றும், வருகிற 17-ந் தேதியும் தேதி பகுதியாக ரத்து செய்யப்படுவதாக ெரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக சேலம் ெரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மதுரை ெரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட கோவில்பட்டி-குமாரபுரம் இடையே ெரயில் பாதையில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் கோவை-நாகர்கோவில் இடையே இயக்கப்படும் ெரயில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

    அதன்படி, இன்றும், வருகிற 17-ந் தேதியும் காலை 8 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் கோவை-நாகர்கோவில் விரைவு ரயில் (எண் 16322) திண்டுக்கல்-நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மேற்கண்ட தேதிகளில் இந்த ெரயிலானது கோவை-திண்டுக்கல் இடையே மட்டும் இயக்கப்படும்.

    இதேபோல மே 3 மற்றும் 17-ந் தேதி காலை 7.35 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படும் நாகர்கோவில்-கோவை விரைவு ெரயில் (எண் 16321) நாகர்கோவில்-திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மேற்கண்ட தேதிகளில் இந்த ெரயிலானது, திண்டுக்கல்-கோவை இடையே மட்டுமே இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடந்தது
    • ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் மற்றும் பயிற்சிகளையும் வழங்கினார்.

    கோவை,

    கோவை மாநகரில் போலீசாரின் மன அழுத்த த்தை குறைக்கும் வகையில் மாநகர காவல்துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் போலீசாருக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகிறார்.

    இதில் போலீசாருக்கான உடற்பயிற்சிக்கூடம், வாகனங்களில் 'மினி' நூலகம், போலீசாரின் குடும்பத்தினருக்கான விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் இன்று கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தீவிரவாதம் தடுப்பது தொடர்பான பயிற்சி கூட்டம் மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் கோவை மாநகர போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் பலர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு தீவிரவாதம் தடுப்பதற்கு உரித்தான ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் மற்றும் பயிற்சிகளையும் வழங்கினார்.

    இதில் குற்றச்செயல்களை எவ்வாறு கண்டறிவது எவ்வாறு அதனை தொடர்ந்து கண்காணிப்பது, அதனை எப்படி கையாள வேண்டும் என்பது குறித்து அறிவுரைகள், ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் பலர் கலந்து பயிற்சி பெற்றனர். 

    • வீட்டில் மாடியில் துணியை உலர்த்தி கொண்டு இருந்தார்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை, -

    கோவை பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் (54). இவர் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் வங்கியில் காசாளராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று, அவர் தனது வீட்டில் மாடியில் துணியை உலர்த்தி கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரியநாயக்கன்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • இயற்கை அழகை பாதுகாக்க வேண்டும்.
    • குழந்தைகளுக்கு உயர்கல்வியை பெற்று சுயவேலை வாய்ப்பை உருவாக்கலாம் என கூறினார்

    கோவை

    மே தினத்தினை முன்னிட்டு தொண்டா முத்தூர் வட்டாரம் இக்கரை போளுவாம்பட்டி, முள்ளாங்காடு சமுதாய நலக் கூடத்தில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது :-

    குடியரசு தினம், மே தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, உலக தண்ணீர்தினம், உள்ளாட்சி தினம் ஆகிய நாட்களில் கிராம சபை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு மே தினத்தில் கோயம்புத்தூர் மாவட்டம், தொண்டாமுத்தூர் வட்டாரம், இக்கரை போளுவாம்பட்டி, ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெறுகின்றது.

    இந்த கிராமம் அழகானதாக உள்ளது. தூய்மை பாரத இயக்கம், நம்ம ஊரு சூப்பரு போன்ற திட்டங்களில் இந்த கிராமம் முன்னோடியாக விளங்கி வருகிறது. நொய்யல் ஆறு இந்தப் பகுதியில் தான் உள்ளது. இயற்கை அழகை பாதுகாக்க வேண்டும். பிளா ஸ்டிக் பயன்படு த்துவதை தவிர்க்க வேண்டும். குப்பைகளை தரம் பிரித்து தூய்மை காவலர்களிடம் கொடுக்க வேண்டும்.

    இதன் மூலம் நீர்நிலைகள் மற்றும் சுற்றுச் சூழலும் பாதுகாக்கப்படும். கழிவறைகளை பயன்படுத்த வேண்டும். சிறுவாணி சுய உதவி குழுக்கள் உள்ளிட்ட மகளிர் சுய உதவிக்குழுக்கள் இங்கு உள்ளன. சுய உதவிக்குழுக்கள் மூலம் இந்த பகுதியில் சிறப்பு பெற்ற பொருட்களை தயாரித்து விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். சுய உதவிக் குழுக்களுக்கு திறன் பயிற்சிகள் வழங்கப்ப டுகிறது. அதனை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    நான் முதல்வன் திட்டம், கல்லூரி கனவு போன்ற திட்டங்கள் செயல்படுத்த ப்படுகிறது. குழந்தைகள் அனைவரும் கல்வி கற்க வேண்டும். குழந்தை திருமணத்தை தவிர்க்க வேண்டும். குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் இருக்க கூடாது. இந்த இந்த ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    பள்ளி படிப்பு முடிக்கும் குழந்தைகளுக்கு கல்லூரி கல்வியை பயின்றால்தான் அவர்களுக்கான சரியான வேலை வாய்ப்பை பெற முடியும். கோவை மாவட்டத்தில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் உள்ளன. பல்வேறு மாவட்ட ங்கள், மாநிலங்களை சேர்ந்த வர்களுக்கு வேலைவா ய்ப்பை வழங்கும் இடமாக நம் மாவட்டம் திகழ்கிறது. புதுமை பெண்கள் திட்டம், உள்ளிட்ட அரசின் திட்டங்க ளை சிறப்பாக பயன்படுத்தி குழந்தை களுக்கு உயர்கல்வியை பெற்று சுய வேலை வாய்ப்பை உருவாக்கலாம்.

    உயர்ந்த பணி வாய்ப்பினை பெறலாம். குழந்தை திருமணம் இல்லாத கிராமமாகவும், குழந்தை தொழிலாளர் இல்லாத கிராமமாகவும், சிறப்பான ஊராட்சியாக உருவாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளது.
    • 2 மயில்கள் மீது மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தது.

    கோவை,

    கோவையில் தேசிய பறவையான மயில்கள் தொடர்ந்து உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. மின் கம்பியில் சிக்கி மயில்கள் உயிரிழ ப்பதை தடுக்க வனத்துறை யினர் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரி க்கை விடுத்து உள்ளனர்.

    கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள பகுதிகளான துடியலூர், வடவள்ளி, நரசீபுரம், தொண்டாமுத்தூர், மதுக்கரை உள்ளிட்ட கோவையின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான மயில்கள் உணவிற்காக கூட்டம் கூட்டமாக விளை நிலங்களிலும், மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கும் வருகை தருகின்றன.

    இந்நிலையில் கோவை மாநகரின் முக்கிய பகுதியான ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளது. அதனை சுற்றி காலி இடங்கள் ஏராளமாக உள்ளன. அங்கு மயில்கள் கூட்டம் கூட்டமாக காணப்படும். இந்நிலையில் அவை மின் கம்பிகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழக்கும் சம்பவங்களும் அவ்வப்போது நடந்து வருகின்றன.

    இந்நிலையில் இன்று ரேஸ்கோர்ஸ் தாமஸ் பார்க் பகுதியில் 2 மயில்கள் சுற்றி வந்தது. பின்னர் ஒரு பகுதியில் இருந்த மற்றொரு பகுதிக்கு பறந்து செல்ல முயன்ற போது அப்பகுதியில் இருந்த டிரான்ஸ்பார்மரில் எதிர்பாராத விதமாக சிக்கியது. இதில் 2 மயில்கள் மீது மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தது. மயில்கள் மின் கம்பியில் சிக்கி பரிதாபமாக பலியாகும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது பறவை ஆர்வலர்கள் இடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

    இதனை தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • 8-ந்தேதி முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது
    • 28-ந்தேதி மாரியம்மனுக்கு மகா அபிஷேகத்துடன் தேர்த்திரு விழா நிறைவு பெறுகிறது.

    பொள்ளாச்சி,

    கிணத்துக்கடவு அருகே சூலக்கல் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகத்தில் பல பகுதிகளில் இருந்தும், கேரள மாநிலத்தில் இருந்தும் அதிக பக்தர்கள் வருவது வழக்கம்.

    இந்த கோவிலில் ஆண்டு தோறும் தேர்திருவிழா 3 நாட்கள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டி ற்கான தேர் திருவிழா வருகிற 8-ந் தேதி காலை முகூர்த்தக்கால் நடும் நிக ழ்ச்சியுடன் தொடங்குகிறது. 9-ந் தேதி காலை வேல் புறப்பாடு நிகழ்ச்சியும், இரவு பூச்சாட்டு விழாவும் நடைபெறுகிறது.

    15-ந் தேதி இரவு கிராம சாந்தி, வாஸ்து சாந்தி பூஜை நடைபெறுகிறது. 16-ந் தேதி இரவு கம்பம் நடும் நிகழ்ச்சியும், பூவோடு எடுத்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 17-ந் தேதி காலை யாக சாலை ஆரம்பம் அதனை தொடர்ந்து கொடி யேற்றம் நிகழ்ச்சி நடைபெறு கிறது. இரவு மாரியம்மன் சிம்மவாகனத்தில் திருவீதி உலா விழா நடைபெறுகிறது.

    18-ந்தேதி முதல் 23-ந் தேதி வரை மாரியம்மன் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது. 24-ந் தேதி காலை 6 மணிக்கு பக்தர்கள் மாரியம்மனுக்கு மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அதனை தொடர்ந்து பொங்கல் விழாவும் நடைபெறுகிறது.

    இரவு 7 மணிக்கு மாரி யம்மனுக்கு திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சியும், நடைபெறுகிறது. 25-ந்தேதி காலை 5 மணிக்கு மாரியம்மன், திருத்தேர் புறப்படும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலை 4.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    26-ந்தேதி 2-ம் நாள் தேர் திருவிழாவும், 27-ந் தேதி 3-ம் நாள் தேர் திருவிழாவும் நடக்கிறது. அதனை தொடர்ந்து 28-ந்தேதி பகல் 12 மணிக்கு மாரியம்மனுக்கு மகா அபிஷேகத்துடன் தேர்த்திரு விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை சூலக்கல் மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் கந்த சாமி மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

    • கோவையில் ஓட்டல்களில் சிறுவர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது.
    • உணவ உரிமையாளர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

    கோவை,

    கோவையில் கடைகள், வணிக வளாகங்கள், ஓட்டல்களில் சிறுவர்கள் பணிக்கு அமர்த்தப்ப டுவதை தடுக்கும் விதமாக அதிகாரிகள் சோதனை செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேசிய குழந்தை தொழி லாளர் திட்ட அதிகாரி களுக்கு கோவை யில் உள்ள சில கடைகள் மற்றும் ஓட்டல்களில் சிறுவர்கள் பணிக்கு அமர்த்தப்ப ட்டுள்ளதாக தகவல் கிடைத்தது.

    அதன்படி, அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சவுரிபாளையம் உடையாம்பாளையத்தில் உள்ள ஒரு உணவகத்தில், 13 வயது சிறுவனை பணிக்கு அமர்த்தியது தெரியவந்தது. அதிகாரிகள் சிறுவனை மீட்டு பீளமேடு போலீசில் புகார் அளித்த னர். அதன்பேரில், சிறு வனை பணிக்கு அமர்த்திய உணவக உரிமையாளர் ஜெகன் (வயது 30) என்பவர் மீது குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதேபோல், சவுரிபா ளையம் உடையாம்பாளை யத்தில் உள்ள பூக்கடையில் வேலை பார்த்த 12 வயது சிறுவனை அதிகாரிகள் மீட்டனர். அவர்கள் அளித்த புகாரின் பேரில், பீளமேடு போலீசார் சிறுவனை பணிக்கு அமர்த்திய சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அஜித் (33) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பஸ்நிறுத்தத்தில் நின்ற பயணிகள் அலறல்
    • இதற்கிடையே சந்துரு, சூலூர் போலீஸ் நிலையம் சென்று சரண் அடைந்தார்.

     சூலூர்,

    கோவை அருகே கோவை புதூர் அறிவொளி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த் (வயது 28). இவர் இன்று காலை சூலூர் அருகே உள்ள பாப்பம்பட்டி பிரிவு செல்வ ராஜா மில் பகுதியில் நின்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வாலிபர் ஒருவர் அரிவாளுடன் வந்தார். அவர் ஆனந்த்தை ஓட, ஓட அரிவாளால் வெட்டினார். அவரிடம் இருந்து தப்பிக்க ஆனந்த் ஓட்டம் பிடித்தார். இருந்தாலும் தொடர்ந்து விரட்டிச் சென்று ஆனந்த்தை அந்த வாலிபர் வெட்டினார்.

    இதில் ஆனந்த்துக்கு இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் கழுத்துப்பகுதியில் மற்றொரு வெட்டு விழுந்தது.

    பஸ் நிறுத்தத்தில் பயணிகள் இந்த சம்பவத்தை பார்த்து அலறி அடித்து ஓடினர். சிலர் ஆனந்த்தை வெட்டிய வாலிபரை கண்டித்து அவரை தடுத்தனர். கூட்டம் அதிகமாக திரண்டதால் அந்த வாலிபர் மோட்டார்சைக்கிளில் அங்கிருந்து சர்வசா தாரணமாக தப்பிச்செ ன்றார்.

    ஆனந்த்தை பார்த்து உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என கூறியபடியே அந்த வாலிபர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

    காயம் அடைந்த ஆனந்த்தை பொதுமக்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதி த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதுதொடர்பாக சூலூர் இன்ஸ்பெக்டர் மாதையன் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார்.

    விசார ணையில் ஆன ந்தை வெட்டியது கோவை ப்புதூரைச் சேர்ந்த சந்துரு என்பது தெரியவந்தது. கள்ளக்காதல் விவகார த்தில் ஆனந்த்தை அந்த நபர் வெட்டிய விவரம் தெரிய வந்தது. இதற்கிடையே சந்துரு, சூலூர் போலீஸ் நிலையம் சென்று சரண் அடைந்தார். அவரிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.  

    • பல்வேறு விளையாட்டுகளுக்கான பொருட்கள் போடப்பட்டுள்ளது.
    • பூங்காவில் குழந்தைகளை விளையாட வைத்து மகிழ்கின்றனர்.

    வடவள்ளி,

    கோவை தொண்டா முத்தூர் சாலையில் கிருஷ்ணாம்பதி குளம் உள்ளது.

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இந்த குளத்தின் குளக்க ரைகள் தூய்மைப்ப டுத்தப்பட்டு நடைபாதை, குழந்தைகள் விளையாடி மகிழ பல்வேறு வசதிகளும் செய்து கொடுக்க ப்பட்டுள்ளது.

    இதுதவிர பூங்கா ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. அந்த பூங்காவில் குழந்தை களுக்கு பிடித்தமான ஊஞ்சல், சறுக்கு விளை யாட்டு உள்பட பல்வேறு விளை யாட்டுகளுக்கான பொரு ட்கள் போடப்ப ட்டுள்ளது.

    இதனால் இந்த பகுதியில் எப்போதும் மக்கள் கூட்டம் இருக்கும். இதுதவிர காலை, மாலை நேரங்களில் ஏராள மானோர் நடைபயிற்சியும் மேற்கொண்டு வருகின்றனர்.தற்போது கோடை விடு முறை விடப்பட்டுள்ளதால் இந்த குளத்திற்கு வரும் மக்களின் கூட்டமும் அதிகரித்து விட்டது. சீரநாயக்கன் பாளையம், பூசாரிபாளையம் உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து மக்கள் குடும்பம், குடும்பமாக வர தொடங்கி யுள்ளனர்.

    அவர்கள் தங்கள் குழந்தை களுடன் குளக்கரைகளில் அமர்ந்தும், அங்குள்ள பூங்காவில் குழந்தைகளை விளையாட வைத்து மகிழ்கின்றனர்.

    தற்போது இங்குள்ள நடைப்பாதையில் புற்கள் அதிகமாக காணப்படுகிறது. குழந்தைகள், பொதுமக்கள் பயன்படுத்தும் விதமாக அந்த புற்களை தூய்மை செய்ய வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.

    • சங்க உறுப்பினர்களுக்கு அறிவுரைகளை தெரிவிக்க வேண்டும்
    • மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

     ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் கலெக்டர் கூடுதல் அலுவ லகத்தில், கோடை விழாவை முன்னிட்டு, ஓட்டல் மற்றும் தங்கும் விடுதிகள், பேக்கரி, உணவக உரிமையாளர்கள், நடைபாதை வியாபாரிகள் ஆகியோர் கடை பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து கலெக்டர் அம்ரித் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் அம்ரித் பேசியதாவது:-

    தற்போது தொடர் விடுமுறை காரணமாக நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நிலவக்கூடிய இதமான கால நிலையை அனுபவிக்க தமிழகத்தின் பிற பகுதிகள் மற்றும் வெளி மாநிலங்கள், வெளிநாடு களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். மேலும், ஓட்டல் தங்கும் விடுதி உரிமையாளர்கள் தேசிய, மாநில நெடுஞ்சாலை மற்றும் நகரின் பிரதான சாலைகளை ஒட்டி இடங்களில் அமைந்துள்ள ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் தங்கியுள்ள சுற்றுலா பயணிகளை வெளி யில் அழைத்து செல்லும் போது வாகனங்க ளை சாலைகளில் நடுவில் நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒதுக்கப்பட்ட இடங்களில் வாகனங்கள் நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு ள்ளது. மேலும் தங்கள் சங்க உறுப்பினர்களுக்கு அறிவுரைகளை தெரிவிக்க வேண்டும்.

    உணவக உரிமையாள ர்கள், பேக்கரி உரிமையா ளர்கள் சுற்றுலா பயணிக ளுக்கு தரமான உணவினை வழங்க வேண்டும். வாகனங்களில் வரும் சுற்றுலாப்பயணிகளிடம் தங்களது வாகனத்தினை உரிய பார்க்கிங் பகுதியில் நிறுத்துமாறு அறிவுறுத்த வேண்டும். சாலையோர வியாபாரிகள் நகரின் சாலையோரங்களில் நடைபாதை கடைகள் அமைத்து பாதசாரிகள் மற்றும் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படாதவாறு செயல்பட வேண்டும். மேலும் நகராட்சி சார்பில் சுற்றுலா பயணிகள் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் குடிநீர் பாட்டி ல்களை பயன்படுத்தா தவாறும், குப்பைகளை வனப்பகுதிகளில் கொட்டா தவாறும், உள்ளாட்சி அமைப்பின் சார்பில் அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி மற்றும் மொபைல் கழிப்பிடங்கள் அமைத்தும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடமாடும் மருத்துவ முகாம் நடத்தபட வேண்டும் எனவும், சுற்றுலா பயனிகள் மற்றும் உள்ளூர் பொது மக்கள், பல்வேறு சங்க நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார். இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபா கர், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியத ர்சினி, ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் துரைசாமி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தனப்ரியா, வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கோவை) பொது மேலாளர் நடராஜ், வட்டாட்சியர் ராஜசேகர், ஹோட்டல் மற்றும் தங்கும் விடுதிகள் உரிமையாளர்கள், நடைபாதை வியாபாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை,

    கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் அந்தபகுதியில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சிறுமி நீண்ட நேரமாக செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். இதனை அவரது தந்தை கண்டித்தார். இதில் கோபம் அடைந்த சிறுமி யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியே சென்றார். இதையடுத்து சிறுமி காணாமல் போனதை கண்டு அவரது தந்தை தெரிந்த இடங்களில் எல்லாம் தேடிப்பார்த்தார். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து சிறுமியின் தந்தை ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×