search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 113362"

    • பில்சின்னாம்பாளையம் ஊராட்சியில் ரூ.37 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை பார்வையிட்டார்.
    • பணிகள் விரைவாகவும், தரமானதாகவும் முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    கோவை,

    கோவை மாவட்டம் ஆனைமலை ஊராட்சி ஒன்றிய பகுதிகள் மற்றும் சமத்தூர், கோட்டூர் பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின் போது கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அலர்மேல்மங்கை, சமத்தூர் பேரூராட்சி தலைவர் காளிமுத்து, பில்சின்னாம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சுமதி, அங்கலக்குறிச்சி ஊராட்சிமன்ற தலைவர் திருஞானசம்பத் குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குழந்தைசாமி, பாலசுப்ரமணியம், உதவி செயற்பொறியாளர் ஜெயந்தி, சமத்தூர் செயல் அலுவலர் தாஜ் நிஷா, கோட்டூர் செயல் அலுவலர் ஜெசிமா பானு ஆகியோர் பங்கேற்றனர்.

    கோவை மாவட்டம் சமத்தூர் பேரூராட்சியில் அம்ருத் திட்டத்தின் வார்டு எண் 1-ல் சக்தி கார்டன் லே அவுட் பகுதியில் ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சிறுவர் விளையாட்டு பூங்கா, சக்தி கார்டன் முதல் கிருஷ்ணா நகர் வரை ரூ.57 லட்சம் மதிப்பீட்டில் 1.5 கி.மீ நீளத்திற்கு தார் சாலை அமைக்கும் பணியினை கலெக்டர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும், ஆனைமலை ஒன்றியம் பில்சின்னாம்பாளையம் ஊராட்சியில் ரூ.37 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.9.09 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கட்டிடப் பணிகள், கரியாஞ்செட்டி பாளையத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள மண்புழு இயற்கை உரம் தயாரிக்கும் கூடம் மற்றும் அடர்வனம் அமைக்கும் இடம், அங்கலக்குறிச்சி ரூ.70.75 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சுயஉதவிக்குழு கட்டிடம், ரூ.1.82 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் நூலக கட்டிடம், கோட்டூர் பேரூராட்சி ஆழியார் பகுதியில் ரூ.15.85 கோடி மதிப்பில் கட்டப்பட்டுவரும் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு இல்ல கட்டிடப்பணிகள், கோட்டூர் பேரூராட்சி பகுதியில் ரூ.5.60 கோடி மதிப்பில் கட்டப்பட்டுவரும் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு இல்ல பணிகள், கோட்டூர் ஆழியார் நகர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ரூ.32.43 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டப் பட்டு வருவதையும் கலெக்டர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகள் விரைவாகவும், தரமானதாகவும் முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    • சித்திரை திருவிழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • அக்னிச்சட்டி ஏந்தியும், பால்குடம் எடுத்தும், சக்தி கரகம் எடுத்தும் ஏராளமான பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர்.

    கோவை,

    கோவை- அவினாசி ரோடு உப்பிலிபாளைத்தில் உள்ள தண்டு மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் இரவு 8 மணிக்கு பல்வேறு வாகனங்களில் அம்மன் திருவீதி உலா நடந்து வருகிறது.

    நேற்று இரவு அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. அப்போது பல்வேறு சீர்வரிசை பொருட்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவில் கோவில் செயல் அலுவலர் வெற்றிச் செல்வன், தக்கார் ஹர்சினி, தலைமை பூசாரி சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    தொடர்ந்து மலர் பல்லக்கில் அம்மன் திருவீதி உலா நடந்தது. இதைத் தொடர்ந்து இன்று காலை 7 மணியளவில் சக்தி கரகம், அக்னி சாட்டு புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. கோனியம்மன் கோவிலில் இருந்து ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலத்தில் அக்னிச்சட்டி ஏந்தியும், பால்குடம் எடுத்தும், சக்தி கரகம் எடுத்தும் ஏராளமான பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஊர்வலத்தில் பங்கேற்றேனர்.

    டவுன்ஹால், ஒப்பணக்கார வீதி, லிங்கப்ப செட்டி வீதி, பால்மார்க்கெட், சிரியன் சர்ச் ரோடு, புரூக்பாண்ட் ரோடு, அவினாசி ரோடு மேம்பாலத்தின் கீழ் பகுதி, காலீஸ்வ ராமில் ரோடு, சோமசுந்தரா மில் ரோடு வழியாக அனுப்பர்பாளையம், டாக்டர் நஞ்சப்பா ரோடு, டிஎன்எஸ்டி டெப்போ, ஜிடி டிரைவிங் பள்ளி வழியாக ஊர்வலம் தண்டுமாரியம்மன் கோவிலை அடைந்தது.

    இதையொட்டி நகரில் இன்று காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

    மேலும் ஏராளமான போலீசார் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • மாமியார் சரஸ்வதி அடிக்கடி காரணம் இல்லாமல மஞ்சுளாவை திட்டி வந்தார்.
    • மஞ்சுளாவை கோவை அரசு ஆஸ்பத்திரி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர்.

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஸ்ரீமகாதேவபுரத்தை சேர்ந்தவர் சங்கர் கணேஷ். இவரது மனைவி மஞ்சுளா (வயது 27). இவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது மஞ்சுளா 5 மாத கர்ப்பமாக உள்ளார்.

    இந்தநிலையில் இவரது மாமியார் சரஸ்வதி அடிக்கடி காரணம் இல்லாமல மஞ்சுளாவை திட்டி வந்தார். இதற்கு அவரது கணவரும் உடந்தையாக இருந்தார்.

    இதனால் கடந்த சில நாட்களாக அவர் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று மீண்டும் மாமியார் -மருமகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த மஞ்சுளா 20 தூக்க மாத்திரைகளை சாப்பிட்டார். சிறிது நேரத்தில் மயங்கினார்.

    இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு மஞ்சுளாவை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இது குறித்து மகாலிங்கபுரம் போலீசார் கணவர் சங்கர் கணேஷ், மாமியார் சரஸ்வதி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கணவரிடம் வேலைக்கு செல்வதாக கூறி விட்டு குழந்தையுடன் சென்றார்.
    • கணவர் தனது மனைவியை கண்டு பிடித்து தரும்படி கோட்டூர் போலீசில் புகார் செய்தார்.

    கோவை,

    பொள்ளாச்சி கோட்டூர் அருகே உள்ள தென்செங்கம் பாளையத்தை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். இவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    இளம்பெண் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு வீட்டு வேலைக்கு சென்றார். அப்போது அவருக்கு வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர்.

    தனது கைக்குழந்தையுடன் வேலைக்கு செல்வதாக கூறி விட்டு செல்லும் இளம்பெண் 2 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே வீட்டிற்கு சென்று வந்தார். இதனை அவரது கணவர் கண்டித்தார். இதனால் கணவன் -மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    சம்பவத்தன்று இளம் பெண் தனது கணவரிடம் வேலைக்கு செல்வதாக கூறி விட்டு குழந்தையுடன் சென்றார்.

    பின்னர் அவர் அவரது கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தார். தனது மனைவி வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வராததால் அவரை அவரது கணவர் அக்கம் பக்கத்தில் தேடினார். அப்போது இளம்பெண் குழந்தையுடன் கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தது தெரிய வந்தது.

    இது குறித்து அவர் குழந்தையுடன் மாயமான தனது மனைவியை கண்டு பிடித்து தரும்படி கோட்டூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையுடன் கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

    • மாவட்டத் தலைவர் வக்கீல் ராமர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

    கோவை,

    ஐகோர்ட்டில் தமிழ் மொழியை அலுவல் மொழியாக்க வலியுறுத்தி அகில இந்திய வக்கீல் சங்கத்தின் கோவை மாவட்ட குழு சார்பில் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாவட்டத் தலைவர் வக்கீல் ராமர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வக்கீல்கள் இந்தியாவில் உள்ள ஐகோர்ட்டுகளில் வழக்கு விசாரணைகள் அந்தந்த மாநில மொழிகளில் நடத்தப்படால் தான் மக்களுக்கு சட்டத்தின் ஆட்சியும் ஜனநாயகத்தின் மாண்புகளும் சரியான புரிதலோடு சேரும்.

    அப்போதுதான் நீதித்துறையின் மீது முழுமையான நம்பிக்கை ஏற்படும் என தெரிவித்தனர்.

    • யானை இறந்து 90 முதல் 120 நாட்களுக்கு மேலாக இருக்கலாம்.
    • வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை,

    கோவை மாவட்டம் போளுவாம்பட்டி வனசரகத்திற்குட்பட்ட நரசீபுரம் பிரிவு, ரத்தப் பாறை வனப்பகுதியில் வனப்பணியாளர்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு இறந்த ஆண் யானையின் மண்டையோடு, 2 தந்தங்கள் மற்றும் எலும்புகள் கிடந்தது. இதை பார்த்த வன ஊழியர்கள் சம்பவம் குறித்து வனத்துைற உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதனையடுத்து இன்று காலை 10 மணியளவில் கோவை வனக்கோட்ட வன விரிவாக்க அலுவலர் தலைமையில் போளுவாம்பட்டி வனச்சரக அலுவலர் மற்றும் வனப்பணியாளர்கள் முன்னிலையில் ஆனைமலை புலிகள் காப்பக வனக்கால்நடை மருத்துவர் சுகுமார் இறந்த ஆண் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தார்.

    பிரேத பரிசோதனையில் இறந்தது ஆண் காட்டு யானை என்பதும், 5 முதல் 6 வயது வரை இருக்கலாம். மேலும் இந்த யானை இறந்து 90 முதல் 120 நாட்களுக்கு மேலாக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கூட்டத்துக்கு கூடுதல் தொழிலாளர் ஆணையாளர் தமிழரசி தலைமை தாங்கினார்.
    • சட்ட உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கூட்டம் நடந்தது.

    கோவை,

    கோவை மண்டல தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் வெளி மாநில தொழிலாளர்களுக்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்தது.

    கூட்டத்துக்கு கூடுதல் தொழிலாளர் ஆணையாளர் தமிழரசி தலைமை தாங்கினார். வெளி மாநில தொழிலாளர்கள் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகை மற்றும் அவர்களுக்கு உள்ள சட்ட உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கூடுதல் ஆணையர்கள் தலைமையில் மண்டல அளவிலான ஒருங்கிணைப்பு குழுவினை சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய மண்டலங்களில் அமைத்துள்ளது.

    கோவை, திருப்பூர், சேலம், கிருஷ்ணகிரி, நீலகிரி, ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர் நல உதவி ஆணையர்கள் கோவை மண்டல அளவிலான் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில் மாநில அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள், தன்னார் அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள், தொழிற்சாலை உரிமையாளர் சங்கப் பிரதிநிதிகள் ஆகியோர் இந்த கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டனர்.

    மேலும் சேலம், கோவை, திருப்பூர், ஈரோடு, ஓசூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் நலன் சார்ந்த கூடுதல் இயக்குனர்கள் சிறப்பு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    தொழிலாளர் நல கூடுதல் ஆணையர் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் கூட்டம் நடத்தி ஒவ்வொரு காலண்டிற்கும் ஏற்படும் முன்னேற்றம் குறித்த அறிக்கையை தொழிலாளர் நல ஆணையரிடம் சமர்ப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • மகேஷ்வரன், ஆட்டோ டிரைவரிடம், ஏன் ஆட்டோவை வேகமாக ஓட்டினாய் என கேட்டார்.
    • பையில் வைத்திருந்த ரூ.11,300 பணம் மற்றும் செல்போனை பறித்து விட்டு தப்பி சென்றனர்.

    கோவை,

    கோவை கணபதி அருகே விநாயகர் கோவில் பகுதியை சேர்ந்தவர் மகேஷ்வரன் (வயது 43). இவர் ரேஸ்கோர்சில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று, இவர் கணபதி பாரதி நகரில் உள்ள வார சந்தையில் நின்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக ஆட்டோவை ஓட்டிச் சென்ற டிரைவர், எதிர்பாரபத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதினார்.

    இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற 45 வயது பெண் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதனை கண்ட மகேஷ்வரன், ஆட்டோ டிரைவரிடம், ஏன் ஆட்டோவை வேகமாக ஓட்டி வந்தாய் என கேட்டார். இதில் கோபம் அடைந்த ஆட்டோ டிரைவர் அங்கிருந்து சென்று விட்டார்.

    பின்னர் சிறிது நேரம் கழித்து ஆட்டோ டிரைவர், 4 பேர் கும்பலுடன் அங்கு சென்றார். இதையடுத்து அங்கு நின்று கொண்டிருந்த மகேஷ்வரனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவரை ஆட்டோவில் கடத்தி சென்று மணியகாரம்பாளையம் சாலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி அருகே கணபதிக்கு அழைத்துச் சென்றனர். இதனையடுத்து 5 பேரும் சேர்ந்து அவரை தாக்கினர்.

    பின்னர் அவர் பையில் வைத்திருந்த ரூ.11,300 பணம் மற்றும் செல்போனை பறித்து விட்டு தப்பி சென்றனர். இதயைடுத்து மகேஷ்வரன் நண்பரின் உதவியுடன் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சென்றார்.

    பின்னர் இதுகுறித்து அவர் சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் உள்பட 5 பேர் கும்பலை தேடி வருகின்றனர்.

    • செப்டம்பர் முதல் வாரம் தொடங்கும் பயணமானது 16 நாட்களில் நிறைவு பெறுகிறது.
    • இதற்கான கட்டணம் ரூ.22 ஆயிரத்து 900 மட்டுமே வசூலிக்கின்றனர்.

    கோவை,

    கோவை மருதமலை சாலை பி.என்.புதூரில் வசந்த் அன் கோ எதிரில் பிரியா டிராவல்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. டிராவல்ஸ் துறையில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகால அனுபவம் வாய்ந்த இந்நிறுவனம், ஏராளமான பக்தர்களை ெரயிலில் ஆன்மீக சுற்றுப்பயணம் அழைத்து ெசன்றுள்ளது.

    அதேபோன்று இந்த ஆண்டு செப்டம்பர் முதல் வாரத்தில் காசியாத்திரைக்கு பக்தர்களை ெரயிலில் அழைத்து செல்வதற்கு ஏற்பாடு செய்துள்ளனர். செப்டம்பர் முதல் வாரம் தொடங்கும் பயணமானது 16 நாட்களில் நிறைவு பெறுகிறது.

    காசி, அலகாபாத், அயோத்தியா, கயா, புத்தகயா, டெல்லி, ஆக்ரா, மதுரா, ஜெய்ப்பூர், ஹரித்துவார், ரிஷிகேஷ் ஆகிய பகுதிகளுக்கு அழைத்து செல்ல திட்டமிட்டுள்ளனர். இதற்கான கட்டணம் ரூ.22 ஆயிரத்து 900 மட்டுமே வசூலிக்கின்றனர்.

    காசியாத்திரை செல்ல விரும்புபவர்கள் தற்போது ரூ.5 ஆயிரம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். ெரயில் கட்டணம், உணவு கட்ட ணம், தங்கும் வசதி (தனித்தனி அறை) அனைத்தையும் இந்நிறுவனத்தாரே தனது சொந்த செலவில் செய்து தருகின்றனர்.

    இது குறித்து பிரியா டிராவல்ஸ் நிறுவனத்தின் மானேஜிங் டைரக்டர் பிரியா மற்றும் நிர்வாக இயக்குநர் சுகுமார் ஆகியோர் கூறுகையில், காலம்காலமாகவே எங்களது குடும்பத்திற்கு தெய்வீக பற்றுதல் உண்டு. எனவே அதன் அடிப்படையில் தெய்வீக சுற்றுலா அடிக்கடி செல்வோம்.

    அதே போன்று அனைத்து பக்தர்களும் அதனை அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தெய்வீக சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்தோம். அதுவே வருடா வருடம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    பொதுமக்களும், பக்தர்களும் இத்தகைய அரிய வாய்ப்பினை பயன்படுத்தி, மிகவும் முக்கியமான புண்ணிய தலங்களில் தங்களது பாதத்தை பதித்து, பாவம் நீங்கி, புண்ணியம் பெற்று இன்பத்துடன் வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறோம்

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • வீட்டிற்கு திரும்பிய லலிதா கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
    • ராமநாதபுரம் போலீசார் மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை நஞ்சுண்டாபுரம் அருகே உள்ள இந்திரா நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி லலிதா (வயது 54). துணி தேய்க்கும் வேலை செய்து வருகிறார். இவர்களது பேத்திக்கு காது குத்து நிகழ்ச்சி வைத்து உள்ளனர்.

    சம்பவத்தன்று இதற்காக லலிதா தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் டவுன்ஹாலில் உள்ள ஜவுளி கடைக்கு துணிகள் எடுக்க சென்றார். அப்போது அவரது வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர். பின்னர் அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த 34 பவுன் தங்க நகைகள், ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை பட்ட பகலில் கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

    வீட்டிற்கு திரும்பிய லலிதா கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ேள சென்று பார்த்த போது அறையில் பீரோவில் இருந்த 34 பவுன் தங்க நகைகள், ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவை கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    பின்னர் இது குறித்து அவர் ராமநாதபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் சம்பவஇடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.

    அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த 2 மர்மநபர்களின் கை ரேகைகளை பதிவு செய்தனர். இதனை வைத்து ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து 34 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

    • சில கிராமங்களில் சுமார் 100 ஏக்கர்களில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் சாய்ந்தன.
    • வருவாய் துறை அதிகாரிகள் சென்று பார்வையிட்டு பாதிப்பு விவரங்களை கணக்கெடுத்தனர்.

    சூலூர்,

    கோவை மாவட்டம், சூலூர் அடுத்த சுல்தான்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் ஜெ.கிருஷ்ணாபுரம், தாளகரை, கரையாம் பாளையம், ஜல்லிப்பட்டி, செஞ்சேரி உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 100 ஏக்கர்களில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் சாய்ந்தன.

    அறுவடைக்கு சில மாதங்களே இருந்த நிலையில் மரங்கள் சரிந்ததால் விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதையடுத்து விவசாயிகளின் தோட்டங்களுக்கு வருவாய் துறை அதிகாரிகள் சென்று பார்வையிட்டு பாதிப்பு விவரங்களை கணக்கெடுத்தனர்.

    இந்த நிலையில் கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி, நேற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் சாய்ந்து கிடந்த வாழை மரங்களை நேரில் பார்வையிட்டார். அப்போது கலெக்டரிடம் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.

    தொடர்ந்து கலெக்டர் கிராந்தி குமார் பாடி கூறியதாவது:-

    பயிர் காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு முழு நிவாரண தொகையும் கிடைக்க மாவட்ட நிர்வாகம் ஆவண செய்யும்.காப்பீடு செய்யாத பயிர்களுக்கும் அரசிடம் எடுத்துரைத்து இழப்பீடு பெற்று தர நடவடிக்கை செய்யப்படும் .

    விவசாய நிலங்களுக்கு வண்டல் மண் தேவைப்பட்டால் உரிய அனுமதியுடன் குளங்களில் எடுத்துக் கொள்ளலாம். கோவை மாவட்டத்தில் 35 குளங்களில் வண்டல் மண் எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது என்றார்.கலெக்டர் ஆய்வு நிகழ்ச்சியில் சூலூர் தொகுதி எம்.எல்.ஏ. வி.பி. கந்தசாமியும் பங்கேற்றார். அவர் கூறுகையில் இந்தாண்டு அதிக அளவில் வாழையை விவசாயிகள் பயிர் செய்து இருக்கிறார்கள்.

    விற்பனை செய்யக்கூடிய அளவிற்கு இந்த வாழைகள் வளர்ந்து உள்ள நிலையில் நேற்று முன்தினம் அடித்த சூறாவளி காற்றினால் ஒன்றரை லட்சத்துக்கு மேற்பட்ட வாழைகள் பாதிப்புக்கு உள்ளாகி விற்பனை செய்ய முடியாத நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது எனவே உடனடியாக அரசு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு உரிய விலை வழங்க வேண்டும். இது குறித்து மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம்.

    உடனடியாக மாவட்ட கலெக்டர் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

    • மூதாட்டி 20 மீட்டர் தூரம் அளவிற்கு தூக்கி வீசப்பட்டார்.
    • இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    நீலாம்பூர்,

    கோவை ஒண்டிப்புதூரை சேர்ந்தவர் பொன்கிஆத்தால் (வயது72). சம்பவத்தன்று இவர் அவரது அக்கா வீட்டுக்கு சென்று விட்டு சேலம்-கொச்சின் எல் அண்ட் டி பைபாஸ் ரோட்டில் சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது அடையாளம் தெரியாத கார் இவர் மீது வேகமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் 20 மீட்டர் தூரம் அளவிற்கு தூக்கி வீசப்பட்டார்.

    இதில் படுகாயமடைந்த மூதாட்டி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த சூலூர் போலீசார் பொன்கிஆத்தாலை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் பொன்கி ஆத்தால் மீது கார் மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி தற்போது அதிர்ச்சியையும் பதைபதைப்பையும் ஏற்ப டுத்தி உள்ளது. இந்த விபத்து குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×