search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 113362"

    • சிறுமி தனது தந்தையிடம் இது குறித்து தெரிவித்தார்.
    • பெருமாள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

    கோவை,

    கோவை விளாங்குறிச்சியை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமியின் வீட்டு அருகே இரும்பு கடை வைத்து நடத்தி வரும் பெருமாள் (வயது 40) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகவில்லை.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமியின் தாய்க்கும், அவரது தந்தைக்கும் இடை யே தகராறு ஏற்பட்டது. இதனால் சிறுமியின் தாய் தனது கணவரிடம் கோபித்துக்கொண்டு தனது குழந்தைகளுடன் சொந்த ஊரான நெல்லைக்கு சென்றார். பின்னர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு கோவைக்கு திரும்பினார்.

    கணவர் மீது கோபத்தில் இருந்த அந்த பெண், பக்கத்து வீட்டில் வசிக்கும் பெருமாளின் வீட்டிற்கு சென்று தனது குழந்தைகளுடன் தங்கியிருந்தார்.

    அப்போது இரும்பு கடை உரிமையாளர் பெருமாள், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். இது குறித்து சிறுமி தனது தந்தையிடம் தெரிவித்தார்.

    அவர் இது குறித்து பேரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இருப்பு கடை உரிமையாளர் பெருமாள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்போது தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • அஜித்குமார் குடிபோதையில் தனது மனைவியுடன் தகராறு செய்து கொண்டு இருந்தார்.
    • போலீஸ்காரர் பிரபு சண்டையை தடுக்க சென்றார்.

    கோவை,

    கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள நெல்லுகுத்தி பாறையை சேர்ந்தவர் பிரபு. இவர் கோட்டூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று அந்த பகுதியில் உள்ள கரட்டுப்பாளையம் மாரியம்மன் கோவிலில் திருவிழா நடந்தது. இதையொட்டி பிரபு மற்றும் போலீசார் பாதுகாப்பு பணிக்கு சென்று இருந்தனர்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த கூலித் ெதாழிலாளி அஜித்குமார் (வயது 27) என்பவர் குடிபோதையில் தனது மனைவியுடன் தகராறு செய்து கொண்டு இருந்தார். இதனை பார்த்த போலீஸ்காரர் பிரபு சண்டையை தடுக்க சென்றார்.

    இதில் ஆத்திரம் அடைந்த அஜித்குமார் போலீஸ்காரரின் சட்டையை பிடித்து தகாத வார்த்தைகளால் பேசினார். பின்னர் அவர் போலீஸ்காரர் பிரபுவின் ஆள்காட்டி விரலை கடித்தார்.

    காயம் அடைந்த போலீஸ்காரரை மற்ற போலீசார் மீட்டு கோட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். இதுகுறித்து போலீஸ்காரர் பிரபு அளித்த புகாரின் பேரில் போலீசார் அஜித்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • திருவிழா கடந்த 28-ந் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
    • அக்னி சட்டி, சக்தி கரகம் எடுத்து வந்த பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்து சென்றனர்.

    வடவள்ளி,

    கோவை தொண்டாமுத்தூர் அடுத்த கெம்பனூர் அண்ணா நகரில் வீரமாஸ்தியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 28-ந் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து முகூர்த்தங்கால் நடுதல், காப்பு கட்டுதல், அக்னி கம்பம் நடும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    நேற்று சக்தி கரகம், அக்னி சட்டி ஊர்வலம், அம்மனை ஆற்றில் இருந்து அழைத்துவரும் நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சக்தி கரம் எடுத்தும், அக்னி சட்டி எடுத்து வந்தும் அம்மனை தரிசனம் செய்து சென்றனர்.

    இன்று மாவிளக்கு பூஜை முளைப்பாரி , அம்மனுக்கு சீர் தட்டுகள் கொண்டுவருதல் நிகழ்ச்சி நடக்கிறது. அதனை தொடர்ந்து நாளை அம்மனுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்க உள்ளது. தொடர்ந்து 108 திருவிளக்கு வழிபாடும் நடைபெற உள்ளது.

    விழாவின் இறுதியாக அக்னி கம்பம் ஆற்றுக்கு எடுத்து செல்லுதல், மறுபூஜை , மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இந்த திருவிழா கோவை ஆதீனம் ஸ்ரீலாஸ்ரீ பாலமுருகனடிமை சுவாமிகள் அருளாசியுடன் நடைப்பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கெம்பனூர் அண்ணா நகர் ஊர்பொதுமக்கள், விழா கமிட்டியினர் செய்துள்ளனர்.

    • ஏ.டி.எம் கார்டை எடுத்து தருவதாகக் கூறி ஜான் சேவியரை வாலிபர் ஏமாற்றியுள்ளார்.
    • ஜான் சேவியர் ராமநாதபுரம் போலீஸ் நிலையம் சென்று புகார் அளித்தார்.

    கோவை,

    கோவை ரெட்பீல்டு ரோட்டை சேர்ந்தவர் ஜான் சேவியர்(வயது52). டிபன் கடை உரிமையாளர்.

    சம்பவத்தன்று இவர் புலியகுளம் தாமு நகர் பஸ் நிறுத்தம் அருகே உள்ள ஏ.டி.எம்., மையத்துக்கு பணம் எடுக்க சென்றார். அங்கு அவர் 3 கட்டங்களாக ரூ.14 ஆயிரம் எடுத்தார். அப்போது திடீரென அவரது ஏ.டி.எம்., கார்டு எந்திரத்தில் சிக்கி கொண்டது. ஜான் சேவியர் எவ்வளவு முயற்சி செய்து எடுக்க முடியவில்லை. இதனை வெளியில் நின்றிருந்த வாலிபர் ஒருவர் பார்த்தார்.

    பின்னர் அவரே ஏ.டி.எம். மையத்திற்குள் வந்து என்னவென்று விசாரித்தபோது, ஜான்சேவியரும் நடந்ததை தெரிவித்தார். உடனே அந்த வாலிபர், தான் உங்களுக்கு உதவுகிறேன் எனவும், அதற்கு நீங்கள் உங்கள் ரகசிய எண்ணை தெரிவித்தால் உங்களின் ஏ.டி.எம். கார்டை எடுத்து தருகிறேன் என்றார்.

    ஜான் சேவியரும் கார்டை எடுத்து தருகிறார் என்பதால், அந்த வாலிபரிடம் ரகசிய எண்ணை தெரிவித்து விட்டார். ரகசிய எண்ணை பெற்று கொண்டு வாலிபர் உள்ளே சென்றார். பின்னர் சிறிது நேரத்தில் வெளியே வந்த வாலிபர், கார்டை எடுத்து விட்டதாக கூறி ஜான் சேவியரிடம் ஏ.டி.எம். கார்டை கொடுத்தார்.

    இதனை உண்மை என நினைத்து அந்த கார்டை வாங்கி கொண்டு ஜான் சேவியர் வீட்டிற்கு வந்து விட்டார். இந்த நிலையில் சிறிது நேரத்தில் ஜான் சேவியருக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் ரூ.70 ஆயிரம் வங்கி கணக்கில் இருந்து எடுக்கப்பட்டு இருப்பதாக வந்த தகவலை பார்த்ததும் அவர் அதிர்ச்சியடைந்தார்.

    உடனே ஜான் சேவியர் வங்கி கிளைக்கு சென்று விசாரித்தார். அவர்களும் உங்கள் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

    கார்டு தன்னிடம் இருக்கும்போது எப்படி பணம் எடுக்க முடியும் என யோசித்தார். அப்போது தான் அவருக்கு அந்த வாலிபரின் நியாபகம் வந்தது. அந்த வாலிபர் தனக்கு உதவுவது போல் நடித்து, தனது ஏ.டி.எம். கார்டை அவர் எடுத்து கொண்டு, வேறொரு கார்டை தன்னிடம் கொடுத்ததும், தனது ஏ.டி.எம் கார்டை பயன்படுத்தி வங்கி கணக்கில் இருந்து ரூ. 70 ஆயிரத்தை எடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து ஜான் சேவியர் ராமநாதபுரம் போலீஸ் நிலையம் சென்று புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, பணத்தை அபேஸ் செய்த மர்ம நபரை தேடி வருகின்றனர்

    • மருதமலையில் 16 வகை வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
    • பக்தர்கள் தங்கள் குலதெய்வ கோவில்களுக்கும் சென்று பொங்கல் வைத்து வழிபட்டனர்.

    வடவள்ளி,

    பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் உள்ள பல கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடுகள் நடந்தது.

    மருதமலையில் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று தொடங்கியது. இன்று அதிகாலை 6 மணிக்கு கோபூஜை நடந்தது. அதை தொடர்ந்து பால், பன்னீர், ஜவ்வாது போன்ற 16 வகை வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் ரத்தின அங்கி சாத்தப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். அதிகாலை முதலே பக்தர்கள் பால்குடம் எடுத்தும், காவடி எடுத்தும் பாதயாத்திரையாக பல்வேறு இடங்களில் கோவிலுக்கு வந்து சாமியை தரிசனம் செய்தனர்.

    மதியம் 12 மணிக்கு பக்தர்களின் பிரமாண்ட பால்குட ஊர்வலம் நடந்தது. பக்தர்கள் கொண்டு வந்த பாலை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் தங்கமயில் வாகனத்தில் சுவாமி எழுந்தருளி கோவிலை வலம் வந்தார்.

    மாலை 6 மணிக்கு சாயரட்ச பூஜை, தங்க ரதத்தில் சுப்பிரமணிய சாமி வள்ளி தெய்வானையுடன் எழுந்தருள்கிறார்.

    இன்று மாலை 7 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பங்குனி உத்திர திருவிழா வையோட்டி 2 மற்றும் 4 சக்கர வாகனங்களில் மலை மேல் செல்ல அனுமதி இல்லை.

    அதற்கு பதிலாக மலைக்கோவில் செல்வதற்கு கோவில் சார்பில் மினி பஸ்கள் இயக்கப்பட்டது. நீண்ட வரிசையில் காத்து நின்று பக்தர்கள் மலைக்கு சென்றனர்.

    இதேபோல பேரூர் பட்டீஸ்வரர் கோவில், கோவை காந்திபார்க் தண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளிட்ட கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடு நடந்தது. மேலும் பக்தர்கள் தங்கள் குலதெய்வ கோவில்களுக்கும் சென்று பொங்கல் வைத்து வழிபட்டனர்.

    • பரத்தின் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாடு இழந்து விபத்துக்குள்ளானது.
    • வெங்கடேசலு மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானார்.

    கோவை,

    திண்டுக்கல் அருகே உள்ள வேடச்சந்தூரை சேர்ந்தவர் செந்தில்குமார். பைனான்சியர். இவரது மகன் பரத் (வயது 21). இவர் கோவை மயிலேரிபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.சி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    சம்பவத்தன்று பரத்துடைய நண்பரான குமரேசன் என்பவரது மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் இல்லை. எனவே பெட்ரோல் போட செல்வதற்காக பரத் தனது மோட்டார் சைக்கிள் மூலம் குமரேசன் மோட்டார் சைக்கிளை காலால் மிதித்து தள்ளியபடி சென்று இருந்தார்.மோட்டார் சைக்கிள் ஒத்தகால்மண்டபம் - ஒக்கிலிபாளையம் ரோட்டில் சென்ற போது பரத்தின் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரத்தில் இருந்த கம்பி வேலி, கல்லில் மோதி நின்றது. இதில் அவர் தலையில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்.

    இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் பரத்தை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே பரத் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பீளமேடு அருகே உள்ள நேருநகரை சேர்ந்தவர் வெங்கடேசலு (75). சம்பவத்தன்று இவர் கோவை- காளப்பட்டி ரோட்டை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் இவர் மீது மோதியது.

    இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் முதியவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கிழக்கு போக்குவ ரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தற்போது தினசரி பாதிப்பு எண்ணிக்கை 10-க்கு கீழ் வந்துள்ளது.
    • கொரோனா காரணமாக தற்போது 90 பேர் வரை சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கோவை,

    தமிழகத்தில் கொரோனா பரவல் இருந்து வருகிறது. இதையடுத்து, சுகாதாரத்துறையின் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கொரோனா பரவலை தடுக்க அரசு மருத்துவமனைகள், தியேட்டர், பஸ், வணிக வளாகம் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முக கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கோவை மாவட்டத்தில் கடந்த வாரத்தில் தினமும் 15 முதல் 20 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வந்த நிலையில், தற்போது தினசரி பாதிப்பு எண்ணிக்கை 10-க்கு கீழ் வந்துள்ளது. கொரோனா காரணமாக தற்போது 90 பேர் வரை சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், மாவட்டத்தில் பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் மருத்துவமனைகள், தியேட்டர், வணிக வளாகங்கள் போன்ற இடங்களுக்கு பொதுமக்கள் செல்லும் போது கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

    இது குறித்து மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் அருணா கூறியதாவது:-

    கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனால், பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. மூச்சு திணறல் உள்ளிட்ட பாதிப்புகளுடன் வரும் நோயாளிகள் மருத்துவமனைகளில் வைத்து சிகிச்சை அளிக் கப்பட்டு வருகிறது. தற்போது சிகிச்சையில் உள்ளவர்களில் 90 சதவீதம் பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

    காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். தனிச்சையாக மருந்துகளை எடுத்துக்கொள்ளக்கூடாது. மேலும், மருத்துவமனைகள், வணிக வளாகம், தியேட்டர், பஸ்களில் செல்லும் பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். இதனால், கொரோனா பரவலை தடுக்க முடியும். தடுப்பூசி செலுத்தாத நபர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • அரை மணி நேரத்திற்கும் மேலாக இந்த மழை நீடித்தது.
    • 10க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் சேதம் அடைந்தன.

    கோவை,

    கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கடுமையான வெயில் கொளுத்தி வந்தது. இதனால் மக்கள் பெரும் சிரமம் அடைந்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று காலை முதலே கோவை மாநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வெயில் குறைந்து மிதமான கால நிலையே நிலவி வந்தது.

    அவ்வப்போது லேசான வெயில் அடித்தாலும், வானம் மேகமூட்டத்துடனேயே காணப்பட்டது. இதனால் எப்போது வேண்டுமானலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது.

    இந்த நிலையில் மாலையில் கோவை மாநகர் பகுதிகளில் திடீரென இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. அரை மணி நேரத்திற்கும் மேலாக இந்த மழை நீடித்தது.

    காந்திபுரம், ராமநாதபுரம், பீளமேடு, கலெக்டர் அலுவலகம், உக்கடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மழை கொட்டியது. இதில் காந்திபுரம், ராமநாதபுரம் பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது.

    இந்த மழையால் அவினாசி சாலை, சத்தி சாலை, திருச்சி சாலை, ரெயில் நிலைய சாலை, அரசு ஆஸ்பத்திரி சாலை உள்பட நகரின் முக்கிய சாலைகளில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.இதனால் சாலையில் சென்ற வாகனங்கள் ஊர்ந்தபடியே சென்றன.மழை காரணமாக கோவை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் தண்ணீர் தேங்கியது. ஆம்புலன்ஸ் வாகனங்கள் தேங்கிய நீரில் சிக்கி வெளியே வர முடியால் தவித்தது.

    அவினாசி ரோடு லட்சுமில் பகுதி, அரசு ஆஸ்பத்திரி லங்கா கார்னர் பகுதி உள்பட பல்வேறு இடங்களில் சாக்கடை நீர் கழிவுநீருடன் கலந்து தண்ணீர் கருப்பாக ஓடியது. இதனால் அந்த பகுதிகள் சேறும், சகதியுமாக மாறியது.

    லங்கா கார்னர், குட் சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தண்ணீரை அகற்றிய பிறகு போக்குவரத்து சீரானது.

    இந்த மழைக்கு கலெக்டர் அலுவலகத்தில் நின்றிருந்த மூங்கில் மரம், உக்கடம் புல்லுக்காடு பகுதியில் உள்ள ஒரு மரம் முறிந்து விழுந்தது. தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் மரத்தை அப்புறப்படுத்தினர்.

    அன்னூர் அடுத்த தெலுங்குபாளையத்தில் சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டியது. இந்த மழையால் தெலுங்கு பாளையம், பிள்ளையப்பம் பாளையம் பகுதிகளில் ஓட்டு வீடுகள், சிமெண்ட் சீட் வீடுகள், குடிசை வீடுகள் என 10க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் சேதம் அடைந்தன.

    மேலும் சில இடங்களில் வீடுகள் மீது மரங்கள் முறிந்து விழுந்தன. சாலை யோரத்தில் மின் கம்பங்களும் முறிந்து விழுந்ததால் மின்வினியோகம் பாதிக்கப்பட்டது.

    • கோவை மாநகரில் போலீசார் ரோந்து சென்று தீவிரமாக கண்காணித்தனர்.
    • 997 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    கோவை,

    மகாவீர் ஜெயந்தியை யொட்டி நேற்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் டாஸ்மாக் பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

    இந்தநிலையில் கோவை மாநகரில் போலீசார் ரோந்து சென்று தீவிரமாக கண்காணித்தனர். குனியமுத்தூர் அறிவொளி நகர், சிங்காநல்லூர் மாணிக்கம் நகர், போத்தனூர் சாரதா மில் ரோடு, சரவணம்பட்டி சிவானந்தாபுரம், ரத்தினபுரி கண்ணப்பநகர், காந்திபுரம் 3-வது வீதி, செட்டி வீதி, வைசியாள் வீதி, பேரூர் பைபாஸ் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் அருகே சட்ட விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி விற்ற 13 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 398 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதே போல கோவை புறநகர் பகுதிகளான பெரியநாயக்கன் பாளையம், பேரூர், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட சப்-டிவி சனுக்குட்பட்ட போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் மதுபாட்டில்களை பதுக்கி விற்ற 53 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 596 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்த னர்.

    • ஓட்டுநர் உரிமம் உள்ளவர்களுக்கு கூடுதல் பயிற்சி அளிக்கப்படுகிறது
    • அனைத்து வகை வாகனங்களும் ஓட்ட பெண் போலீசாருக்கு பயிற்சி வழங்கப்படும்.

    கோவை,

    தமிழகத்தில் பெண் போலீசார் போலீஸ் துறையில் சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதனையொட்டி, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் அறிவுரையின்படி மாநகரில் பணிபுரியும் பெண் போலீசாருக்கு வாகனங்களை ஓட்டுவதற்கு ஓட்டுனர் பயிற்சி அளிக்கப்படுகிறது.

    இதன் தொடக்க விழா இன்று போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடந்தது. "சி.ஓ.பி. அவள்" என்ற இந்த நிகழ்ச்சியில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு ஓட்டுனர் பயிற்சியை தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக கோவை மாநகர போலீஸ் நிலையம் மற்றும் ஆயுதப்படையில் பணியாற்றி வரும் 150 பெண் போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் நான்கு சக்கர வாகனம், இரு சக்கர வாகனம் இரண்டிற்கும் பயிற்சி அளிக்கப்பட்டு ஓட்டுனர் உரிமம் பெற்று தரப்பட உள்ளது. ஏற்கனவே ஓட்டுநர் உரிமம் உள்ளவர்களுக்கு கூடுதல் பயிற்சி அளிக்கப்படுகிறது .

    அப்போது மாநகர போலீஸ் கமிஷனர் பாலகி ருஷ்ணன் கூறியதாவது:-

    கோவை மாநகரில் உள்ள 721 பெண் போலீசாரில் 261 பெண் போலீசாருக்கு இலகு ரக வாகனங்கள் ஓட்ட விருப்பம் தெரிவித்துள்ளனர். முதல் கட்டமாக 30 பேருக்கு இன்று முதல் பயிற்சி வழங்கப்படுகிறது. இலகு ரக மற்றும் கனரக வாகனங்கள் என அனைத்து வாகனங்களும் ஓட்ட பயிற்சி அளிக்கப்படும். இது வரை கனரக வாகனங்களை ஆண் போலீசார் மட்டுமே ஓட்டி வருகின்றனர். அனைத்து பெண் போலீசாருக்கு பயிற்சி அளித்து ஓட்டுநர் உரிமம் வாங்கி கொடுக்க உள்ளோம். இதற்காக தனியார் வாகன பயிற்சி மையத்துடன் இணைந்து பயிற்சி வழங்கப்படும். மேலும் 4 பெண் போலீசார் கனரக வாகன பயிற்சி பெற விருப்பம் தெரிவித்துள்ளனர்.

    பெண் போலீசார் மத்தியில் தன்னம்பிக்கையை ஏற்படுத்தவே இந்த பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநகர போலீசில் ஆயுதப்படை வாகனம், ரோந்து வாகனம், சட்டம் ஒழுங்கு போலீஸ் நிலையம் வாகனங்கள் என அனைத்து வகை வாகனங்களும் ஓட்ட பெண் போலீசாருக்கு பயிற்சி வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 15-ந் தேதி நோன்பு சாட்டுதலுடன் தொடங்கியது.
    • 22-ந் தேதி இரவு 10 மணிக்கு கோவில் முன் கம்பம் நடப்பட்டது.

    பொள்ளாச்சி,

    பொள்ளாச்சி கடை வீதியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் வெள்ளி தேர்த்திருவிழா கொண்டாடப்படும்.

    இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 15-ந் தேதி நோன்பு சாட்டுதலுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து 22-ந் தேதி இரவு 10 மணிக்கு கோவில் முன் கம்பம் நடப்பட்டது. பின்னர் பெண்கள் வீடுகளில் இருந்து மஞ்சள் நீர் கொண்டு கம்பத்திற்கு ஊற்றி வழிபட்டு வருகின்றனர்.

    திருவிழா முடியும் வரை இந்த கம்பத்திற்கு பெண்கள் மஞ்சள் நீர் ஊற்றி வழிபடுவார்கள். கடந்த 1-ந்தேதி கம்பத்தில் கோவில் பூவோடு வைக்கப்பட்டது. மேலும் கோவில் கொட்டு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதை தொடர்ந்து விரதம் இருந்த பக்தர்கள் பல்வேறு பகுதியில் இருந்து பூவோடு ஏந்தி கோவிலுக்கு வரும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. நேற்று காலை 9 மணிக்கு ஆயக்கால் போடுதல், இன்று செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்கு மேல் மகுடம் வைத்தல் ஆகியவை நடக்கிறது. நாளை (புதன்கி ழமை) காலை 6 மணிக்கு மாவிளக்கு எடுத்து வருதல், அதை தொடர்ந்து 10 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடை பெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான முதல் நாள் வெள்ளித் தேர் இரவு 7 மணிக்கு புறப்பட்டு, வெங்கட்ரமணன் வீதியில் இமான்கான் வீதி சந்திப்பில் நிறுத்தப்படுகிறது.

    நாளை மறுநாள் (வியாழக்கிழமை) இரவு 7 மணிக்கு வெங்கட்ரமணன் வீதியில் இருந்து 2-ம் நாள் தேர் புறப்பட்டு, சத்திரம் வீதியில் கொண்டு நிறுத்தப்படுகிறது. வருகிற 7-ந் தேதி இரவு 7 மணிக்கு அங்கிருந்து 3-ம் நாள் தேர் புறப்பட்டு, தேர் நிலைக்கு வருதல், அதை தொடர்ந்து பரிவேட்டை, தெப்பத்தேர் உற்சவம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    8-ந்தேதி காலை 8.30 மணிக்கு அம்மன் மஞ்சள் நீராடுதல், இரவு 9 மணிக்கு கம்பம் எடுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் 10-ந்தேதி இரவு 8 மணிக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது. தேர்த்திரு விழாவை யொட்டி வெள்ளித்தேர் மற்றும் விநாயகர் தேரை தயார் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

    • 30 -ந் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.
    • பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் குண்டம் இறங்கி நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் - ஊட்டி செல்லும் சாலையில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மைதானம் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் 92 -ம் ஆண்டு திருவிழா கடந்த 30 -ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    அதனைத்தொடர்ந்து 31-ந் தேதி சுப்பிரமணியசாமி கோவிலில் இருந்து பால்குடம் எடுத்தல் நிகழ்ச்சியும்,நேற்று காலை குண்டம் திறத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு தினந்தோறும் பல்வேறு சிறப்பு பூஜைகளும், அபிஷேக அலங்காரங்களும் நடைபெற்றன.விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி இன்று காலை தொடங்கியது. தலைமை பூசாரி மோகன்குமார் தலையில் கரகம் எடுத்து பூப்பந்தினை உருட்டி விட்டு குண்டம் இறங்கி நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து விரதம் இருந்த பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் லோகநாதன், கோவை மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் கவிதா கல்யாணசுந்தரம், தலைமை ச்செயற்குழு உறுப்பினர்கள் டி.ஆர்.சண்முகசுந்தரம், அஷ்ரப் அலி, தி.மு.க. காரமடை கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.எம்.டி.கல்யாணசுந்தரம், மேட் டுப்பாளையம் நகராட்சி ஆணையர் வினோத், வட்டாட்சியர் மாலதி, நகர் மன்ற உறுப்பினர்கள் விஜய காண்டீபன், உமா மகேஸ்வரி, தனசேகரன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், திருக்கோவில் கமிட்டியினர் உட்பட 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பக்தர்களின் பாதுகா ப்பிற்காக மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீத கிருஷ்ணன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு விழா கமிட்டி குழுவினரால் அன்னதா னமும் வழங்கப்பட்டது.

    ×