search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 113362"

    • 19-வது வார்டுக்குட்பட்ட பகுதிகளுக்கு 20 நாட்களாக தண்ணீர் வரவில்லை என தெரிகிறது.
    • குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் இன்று மாலைக்குள் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என உறுதி அளித்தார்.

    சரவணம்பட்டி,

    கோவை மாநகராட்சி 19-வது வார்டுக்குட்பட்ட மணியகாரம்பாளையம், லட்சுமிபுரம், கணக்கன் தோட்டம், எம் கே ஜி நகர், பாலாஜி லேஅவுட், திருவள்ளுவர் நகர், வெள்ளிங்கிரி கவுண்டர் வீதி ஆகிய பகுதிக உள்ளன.

    இந்த பகுதிக்கு கடந்த 20 நாட்களாக தண்ணீர் வரவில்லை என தெரிகிறது. இதனால் அப்பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கணபதி-துடியலூர் சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்த சரவணம்பட்டி போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து அவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

    இருப்பினும், அவர்கள் சாலையோரம் நின்று கொண்டு, எங்கள் வார்டின் கவுன்சிலரும், கோவை மாநகராட்சி மேயருமான கல்பனா ஆனந்தகுமார் வந்து உறுதி அளித்தால் மட்டுமே நாங்கள் கலைந்து செல்வோம் என கூறி அங்கேயே நின்றனர்.

    பின்னர் கோவை மாநகராட்சி குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் நாசர், தொலைபேசி மூலம் போலீசாரிடம் இன்று மாலைக்குள் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என உறுதி அளித்தார். இதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.

    • திடீரென செல்வன் நெஞ்சை பிடித்தபடி மயங்கி கீழே விழுந்தார்.
    • சம்பவம் குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள சொக்கம்பாளையம் காந்தி காலனியை சேர்ந்தவர் செல்வன் (வயது 43). டிரம்ஸ் இசை கலைஞர். இவரது மனைவி ஆனந்தி கூலித் தொழிலாளி.

    சம்பவத்தன்று இவர்களது ஊரில் உள்ள மகாளியம்மன் கோவிலில் திருவிழா நடந்தது. திருவிழாவில் டிரம்ஸ் இசைப்பதற்காக செல்வன் சென்றார். அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து உற்சாகத்தில் டிரம்ஸ் அடித்து கொண்டு இருந்தார்.

    அப்போது திடீரென செல்வன் நெஞ்சை பிடித்தபடி மயங்கி கீழே விழுந்தார். இதனை பார்த்த அவரது நண்பர்கள் உடனடியாக செல்வத்தை மீட்டு அந்த பகுதியில் உள்ள அன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் செல்வன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    கோவில் திருவிழாவில் டிரம்ஸ் இசை கலைஞர் மாரடைப்பில் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவம் குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கோவையில் இருந்து சென்னைக்கு தினந்தோறும் 35 ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
    • வருகிற 8-ந் தேதி சென்னை வரும் பிரதமர் மோடி வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்கி வைக்க உள்ளார்

    கோவை,

    தொழில் நகரமான கோவையில் இருந்து சென்னைக்கு தினமும் இன்டர்சிட்டி, கோவை, சதாப்தி, நீலகிரி, சேரன் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

    இதுதவிர வாரத்தில் வெள்ளிக்கிழமை மட்டும் இரவில் சென்னைக்கு ரெயில் இயக்கப்படுகிறது. மேலும் கேரளாவில் இருந்து கோவை வழியாகவும் சென்னைக்கு ரெயில்கள் சென்று வருகின்றன.

    இந்த ரெயில்கள் என மொத்தம் கோவையில் இருந்து சென்னைக்கு தினந்தோறும் 35 ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    இத்தனை ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தாலும், இந்திய ரெயில்வே அறிமுகப்படுத்தி உள்ள வந்தே பாரத் அதிவிரைவு ரெயில் சேவையானது பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

    எனவே கோவை வழித்தடத்திலும் வந்தே பாரத் ரெயிலை தொடங்கினால் நன்றாக இருக்கும் என பயணிகள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

    தற்போது அவர்களின் கனவு நனவாக உள்ளது. வருகிற 8-ந் தேதி சென்னை வரும் பிரதமர் மோடி கோவை-சென்னை இடை யே வந்தே பாரத் ரெயில் சேவையும் தொடங்கி வைக்க உள்ளார்.வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்க உள்ள செய்தி கோவை மாவட்டம் மட்டுமின்றி சுற்றுப்புற மாவட்ட மக்களுக்கும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

    இந்த நிலையில் வந்தே பாரத் ரெயிலின் சோதனை ஓட்டம் இன்று சென்னையில் தொடங்கியது. இதனை யொட்டி இன்று காலை 5.40 மணிக்கு சென்னையில் இருந்து வந்தே பாரத் ரெயில் புறப்பட்டது. 8 பெட்டிகளுடன் புறப்பட்ட இந்த ரெயில் ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக முற்பகல் கோவை ரெயில் நிலையத்தை வந்தடைந்தது.

    பின்னர் கோவையில் இருந்து சென்னைக்கு சோதனை ஓட்டம் நடக்கிறது. மதியம் 12.40 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்ட வந்தே பாரத் ரெயில், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தை கடந்து மாலை 6.40 மணிக்கு சென்னை சென்றடைகிறது.இன்று நடந்த இந்த சோதனை ஓட்டத்தில் ரெயில்வே துறை உயர் அதிகாரிகள் உள்பட பலர் பங்கேற்று ரெயிலில் பயணித்தனர். விரைவில் வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்க உள்ளதும், இதனையொட்டி சோதனை ஓட்டம் நடந்ததும் கோவை மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து கோவை மக்கள் கூறியதாவது:-

    கோவை வழித்தடத்தில் வந்தே பாரத் ரெயில் ேசவை தொடங்கப்பட உள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. இதற்காக மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி.

    விரைவில் கோவை-பெங்களூரு வழித்தடத்திலும் வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். மேலும் பயணிகள் பாதுகாப்பு மட்டுமின்றி, வழித்தடத்தில் விலங்குகள் பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் அளிப்பது அவசியம்.எனவே ரெயில்வே நிர்வாகம் இதற்கேற்ப ஊழியர்களை பணியில் அமர்த்தி சீரான முறையில் கண்காணிக்க வேண்டும். இந்த ரெயில் சேவைக்கான கட்டணத்தை குறைவாக நிர்ணயிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • மோட்டார்சைக்கிளை திருடிய காட்சி அங்கிருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவாகி இருந்தது.
    • வாலிபர் இருசக்கர வாகன திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் எல்.எஸ். புரம் பகுதியில் நள்ளிரவு நேரத்தில் வாலிபர் ஒருவர் வீட்டின் கதவை திறந்து மோட்டார்சைக்கிளை திருட முயன்றார். வாகனம் பூட்டு போட்டு இருந்ததை கண்டு திரும்பிய வாலிபர் அப்பகுதியில் வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இருசக்கர வாகனங்களையும் திருட முயன்றார்.

    இந்த சம்பவம் அங்கிருந்து கண்காணிப்பு காமிராவில் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகள் தற்போது வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில் இணையத்தில் வைரலாகி வரும் வீடியோவில் உள்ள நபர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு இருசக்கர வாகன திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

    பொதுமக்கள் வீடுகளிலும், தெருக்களிலும் பொது இடங்களிலும் கண்காணிப்பு காமிமராக்களை பொருத்த வேண்டும். கோடை காலம் என்பதால் வீடுகளை திறந்து வைத்து உறங்க வேண்டாம். வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இருசக்கர வாகனங்களை பூட்டி விட்டு செல்லுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.

    • பிப்ரவரி 24-ந் தேதி முதல் தற்போது வரை 1,254 வாகனங்கள் ஆய்விற்குட்படுத்தப்பட்டன.
    • 94 வாகனங்களுக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    கோவை,

    கோவையில் அனுமதி யில்லாமல் கனிமவளங்கள் கடத்தி சென்ற 54 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    கோவையில் இருந்து கேரளத்துக்கு அனுமதியில்லாமல் கனிமவளங்கள் கடத்தப்பட்டு வருவதாக புகார்கள் வரப்பெற்றன. இதனைத் தொடர்ந்து மாவட்டத்திலுள்ள எல்லை சோதனைச் சாவடிகளில் அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய குழு தணிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

    அனுமதி வழங்கப்பட்ட கனிம இருப்பு கிடங்குகளிலிருந்து கேரளத்துக்கு எடுத்துசெல்ல புவியியல் மற்றும் சுரங்கத் துறை மூலம் சீனியரேஜ் தொகை, கனிம அறக்கட்டளை நிதி மற்றும் பசுமை வரி ஆகியவற்றை செலுத்திய பின் 4 யூனிட், 6 யூனிட் அளவுகளில் எடுத்து செல்ல போக்குவரத்து நடைச்சீட்டு கள் வழங்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து நடைச்சீட்டில் நாள், நேரம் போன்ற விவரங்கள் விடுபட்டிருந்தலோ, பிழை திருத்தங்கள் செய்யப்பட்டிருந்தாலோ, அனுமதிக்கப்பட்ட அளவிற்கும் அதிகமாக கனிமங்கள் ஏற்றிச்செல்லப்பட்டாலோ கனிம வளத்துறை வருவாய்த்துறை, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மூலம் அபராதம் விதிக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில எல்லைச் சோதனைச் சாவடிகளிலும் கடந்த பிப்ரவரி 24-ந் தேதி முதல் தற்போது வரை 1,254 வாகனங்கள் ஆய்விற்குட்படுத்தப்பட்டன. மேலும், கடந்த ஜூலை 2022 முதல் மார்ச் 2023 வரை உரிய அனுமதியில்லாமல் கனிமவ ளங்களை கடத்தி சென்ற 54 வாகனங்கள் கனிமவளம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் கூடுதலாக கனிம வளங்க ளை ஏற்றிச் சென்ற 94 வாகனங்களுக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்படும் குவாரிகளை கண்டறியும் வகையில் 15-க்கும் மேற்பட்ட குவாரிகளில் ஆய்வுகள் நடைபெற்றன. இதில் 2 குவாரிகளில் விதிமீறல்கள் கண்ட றியப்பட்டு உரிய அபராதம் விதிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள குவாரிகளில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. குவாரி குத்தகை வழங்கப்படும் நேர்வுகளில் அனுமதி கோரும் புலத்தினை அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தால் ஆய்வு செய்யப்பட்டு எல்லைத் தூண்கள் நடுவதற்கு அனைத்து குத்தகை தாரர்களுக்கும் அறிவு றுத்தப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • 40 கடைகளில் பிளாஸ்டிக் பொருள்கள் இருக்கிறதா என்பது குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
    • 8 கடைகளிலிருந்து 1215 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

    மேட்டுப்பாளையம்,

    தமிழக அரசு சுற்றுச்சூ ழலுக்கு மாசு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது. மேலும் தடை விதிக்கப்பட்ட பொருட்களை விற்பனை செய்வோருக்கு அபராதமும் விதிக்க உத்தரவிட்டுள்ளது.

    அதன் ஒருபகுதியாக மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி லாவண்யா, மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையர் வினோத் உள்ளிட்டோர் நேற்று மேட்டுப்பாளையத்தின் பல்வேறு பகுதிகளில் திடீரென அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர். குறிப்பாக கோவை சாலை, அண்ணாஜி ராவ் ரோடு, மார்க்கெட், ஊட்டி சாலைகளில் செயல்பட்டு வரும் 40 கடைகளில் பிளாஸ்டிக் பொருள்கள் இருக்கிறதா என்பது குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது,தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர் கள்,பேப்பர் கப்புகள்,கேரி பேக்குகள், பாலிதீன் கவர்கள், பிளாஸ்டிக் முலாம் பூசப்பட்ட தட்டுகள் உள்ளிட்ட பொருள்களை விற்பனை செய்த 8 கடைகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் என மொத்தமாக ரூ.80 ஆயிரம் விதித்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.மேலும்,அக்கடைகளில் விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த 1215 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

    அதிகாரிகள் ஆய்வி ன்போது மேட்டுப்பாளையம் நகராட்சியின் சுகாதார ஆய்வாளர் பாஸ்கரன், சுகாதார மேற்பார்வை யாளர் மணி மற்றும் நகராட்சி ஊழியர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

    மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மேட்டுப்பா ளையம் நகராட்சியின் இந்த அதிரடி நடவடிக்கை கடை உரிமையாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து பேசிய மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையர் வினோத் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப்பொருட்களை விற்பனை செய்வது சட்டப்படி குற்றம்.மீறி விற்பனை செய்வது தெரிய வந்தால் அவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தங்களது அதிரடி நடவடிக்கை தொடரும் எனவும் தெரிவித்துள்ளார்.

    • ஆசை வார்த்தை கூறி அஜய் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தார்.
    • அஜய் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    கோவை,

    கோவை பேரூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது கல்லூரி மாணவி. இவர் தனியார் கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு ஈச்சனாரியை சேர்ந்த தொழிலாளி அஜய் (23) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போனில் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

    கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5-ந் தேதி அஜய் மாணவியை மருதமலை ரோட்டில் உள்ள காலி இடத்துக்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அஜய் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தார்.

    கடந்த சில நாட்களாக மாணவி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவரை அவரது பெற்றோர் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு மாணவியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் 2 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.

    இது குறித்து மாணவி தனது காதலன் அஜயிடம் தெரிவித்தார். மேலும் தன்னை உடனடியாக திருமணம் செய்யும்படி கூறினார். அதற்கு அவர் கருவை கலைத்து விடு என கூறி விட்டு செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார்.

    இதனால் அதிர்ச்சிய டைந்த மாணவி இது குறித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் பேரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அனைத்து மகளிர் போலீசார் மாணவியிடம் விசாரணை நடத்தினர். அவர் அளித்த புகாரின் பேரின் கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கி அஜய் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தற்போது தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • ஆட்டோ டிரைவர் மது போதைக்கு அடிமையானதால் மாணவி பழகுவதை தவிர்த்தார்.
    • ஆலாந்துறை போலீசார் ஆட்டோ டிரைவரை கைது செய்தனர்

    கோவை,

    கோவையை சேர்ந்தவர் 20 வயது கல்லூரி மாணவி. இவர் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், மாணவிக்கு கோவை அறிவொளி நகரை சேர்ந்த 22 வயது ஆட்டோ டிரைவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    இரண்டு பேரும் கடந்த 5 ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் ஆட்டோ டிரைவர் மது போதைக்கு அடிமையானார்.

    இது மாணவிக்கு அவர் மீது அதிருப்தியை ஏற்படுத்தியது. இதன் காரணமாக கடந்த 6 மாதங்களாக மாணவி ஆட்டோ டிரைவருடன் பேசுவதையும், பழகுவதையும் முற்றிலும் தவிர்த்தார்.

    இது ஆட்டோ டிரைவருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. சம்பவத்தன்று மாணவி கல்லூரியில் உள்ள உணவகத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கே சென்ற ஆட்டோ டிரைவர் மாணவி கையை பிடித்து என்னுடன் வா என அழைத்தார்.

    அதற்கு மாணவி மறுப்பு தெரிவித்தார். இதனையடுத்து ஆட்டோ டிரைவர் மாணவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பிச் சென்றார்.

    இது குறித்து மாணவி ஆலாந்துறை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கல்லூரிக்கு சென்று காதலிக்க மறுத்த மாணவியை தாக்கிய ஆட்டோ டிரைவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • புவி வெப்பமயமாதலை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் 4,200 கிலோமீட்டர் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
    • தமிழக அரசு இளைஞர்கள் சைக்கிள் ஓட்டுவதை ஊக்கப்படுத்த வேண்டும்.

    கோவை,

    பசுமையை பேணிக்காக்க வலியுறுத்தியும், புவி வெப்பமயமாதலை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் கோவை இளைஞர் ஒருவர் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 4,200 கிலோமீட்டர் விழிப்புணர்வு சாதனை பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

    கோவை அடுத்த தொண்டாமுத்தூர் கலிக்க நாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் சிவசூரியன் செந்தில்ராமன் (28).

    கெமிக்கல் என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் குஜராத்தில் உள்ள நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

    இந்நிலையில், அவர் இந்த மாதம் 3-ந் தேதி காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி நோக்கி சாதனை விழிப்புணர்வு பயணத்தை மேற்கொண்டார்.

    அங்கிருந்து அவர் கடந்த 24 நாட்களாக பயணம் மேற்கொண்டு நேற்று முன்தினம் கோவை வந்தார்.

    இன்று கோவை ராஜ வீதியில் அவருக்கு கோவை அரசு மகளிர் கல்வியியல் கல்லூரி முதல்வர் கீதா தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது இந்த பயணம் குறித்து சிவசூரியன் செந்தில் ராமன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புவி வெப்பமயமாதலை தடுக்கவும், பசுமையை காக்க வலியுறுத்தியும் நான் தொடர்ந்து விழிப்புணர்வு செய்து வருகிறேன். இதேபோல் கடந்த 2021-ம் ஆண்டு குஜராத்தில் இருந்து கோவைக்கு 1920 கிலோமீட்டர் சைக்கிளில் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டு உள்ளேன்.

    கடந்த ஆண்டு எனக்கு குருவாயூர் கோயிலில் திருமணம் நடைபெற்றது. அதற்காக கோவையிலிருந்து 150 கிலோமீட்டர் தூரம் சைக்கிளில் குருவாயூர் சென்று திருமணம் செய்தேன். பசுமையை வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் இடையே விழிப்புணர்வு செய்கிறேன். பசுமை இந்தியா மற்றும் புவி வெப்பமயமாதலை தடுக்க தமிழக அரசு இளைஞர்கள் சைக்கிள் ஓட்டுவதை ஊக்கப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதனைத் தொடர்ந்து வருகிற வெள்ளிக்கிழமை அவர் கோவையில் இருந்து கன்னியாகுமரி நோக்கி தனது விழிப்புணர்வு சைக்கிள் பயணத்தை தொடர உள்ளார்.

    • பணம் கொடுக்க மறுத்ததால் 2 வாலிபர்கள் கத்தியால் குத்தினர்.
    • போத்தனூர் போலீசார் 2 பேரை கைது செய்தனர்.

    கோவை,

    கோவை வெள்ளலூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் கோகுலகிருஷ்ணன்(23). இவர் மாநகராட்சி லாரியில் கிளீனராக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் தனது வீட்டருகே நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் கோகுலகிருஷ்ணனிடம் பணம் கேட்டு மிரட்டினர். அவர் கொடுக்க மறுத்ததால் 2 பேரும் தகாத வார்த்தைகளால் பேசி கத்தியால் குத்தினர். பின்னர் அங்கிருந்து ஓடிவிட்டனர்.

    காயம் அடைந்த கோகுலகிருஷ்ணனை அவரது நண்பர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். இதுகுறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாநகராட்சி லாரி கிளீனரை கத்தியால் குத்திய வெள்ளலூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த சர்புதீன்(25), கிஷோர்(25) ஆகிய 2 பேரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • 5 முதுநிலை படிப்புகளும், 6 இளநிலை படிப்புகளும் தொடங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது
    • புதிய கட்டிடம் கட்ட அரசு ரூ.13 கோடி ஒதுக்கியுள்ளது.

    கோவை,

    கோவை புலியகுளத்தில் அரசு மகளிர் கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் 650க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.

    தற்போது இந்த கல்லூரியில் பி.ஏ. தமிழ், ஆங்கிலம், பி.காம், பி.எஸ்.சி. கணிதம், கணினி அறிவியல் உள்ளிட்ட படிப்புகள் கற்று கொடுக்கப்படுகின்றன.

    இந்த நிலையில் இந்த கல்லூரியில் அடுத்த கல்வியாண்டு முதல் புதிதாக 11 பாடப்பிரிவுகள் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக கல்லூரி முதல்வர் வீரமணி கூறியதாவது:-

    தற்போது இந்த கல்லூரியில் புதிதாக 11 பாடப்பிரிவுகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதில் 5 முதுநிலை படிப்புகளும், 6 இளநிலை படிப்புகளும் தொடங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி எம்.ஏ. தமிழ், எம்.ஏ. ஆங்கிலம், எம்.காம், எம்.எஸ்.சி. கனிணி அறிவியல், எம்.எஸ்.சி. கணிதம் உள்ளிட்ட முதுநிலை படிப்புகளும், பி.எஸ்.சி. அரசியல் அறிவியல், பி.எஸ்.சி. இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளை தொடங்க திட்டமிட்டுள்ளோம்.

    இந்த கல்லூரி தற்போது 9 அறைகள் கொண்ட பழைய மாநகராட்சி பள்ளியில் இயங்கி வருகிறது. இங்கு போதிய வகுப்பறைகள் இல்லாததால் ஷிப்ட் முறையில் வகுப்புகளை நடத்தி வருகிறோம். இப்போது பி.ஜி.திட்டங்களை தொடங்க எங்களிடம் போதுமான இடம் இல்லை. எனவே புதிய கட்டிடம் தயாரானதும் அங்கு புதிய படிப்புகளை தொடங்க திட்டமிட்டுள்ளோம். மேலும் அடுத்த ஆண்டுக்குள் கல்லூரிக்கு ஒரு புதிய கட்டிடம் கட்டப்படும். அதற்கு அரசு ரூ.13 கோடி ஒதுக்கியுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அரசு ஆஸ்பத்திரி டீன் நிர்மலா ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.
    • புதன்கிழமை தோறும் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை மூன்றாம் பாலினத்தவருக்கான வெளிநோயாளிகள் பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    கோவை,

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் இன்று திருநங்கைகளுக்கான பன்னோக்கு மருத்துவ மையம் தொடங்கப்பட்டது. இதனை அரசு ஆஸ்பத்திரி டீன் நிர்மலா ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.

    இந்த பன்னோக்கு மருத்துவமையத்தில் புதன்கிழமை தோறும் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை மூன்றாம் பாலினத்தவருக்கான வெளிநோயாளிகள் பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்கு என தனி சிறப்பு டாக்டர்களும் நியமிக்கப்பட்டுள்ளது.

    இந்த சிகிச்சை மையத்தில் தோல்நோய், பிளாஸ்டிக் சர்ஜரி, சிறுநீரக அறுவை சிகிச்சை, மனநோய், மகப்பேறு மற்றும் காது, மூக்கு, தொண்டை டாக்டர்கள் கொண்ட சிறப்பு குழுவினர் ஒரே இடத்தில் சிகிச்சை அளிக்க உள்ளனர்.

    இதுவரை மூன்றாம் பாலினத்தவர்கள் வெவ்வேறு சிகிச்சைப் பிரிவிற்கு சென்று ஆலோசனை பெற வேண்டி இருந்தது. ஆனால் தற்போது அவர்களுக்கான ஒருங்கிணைந்த சிறப்பு பன்நோக்கு சிகிச்சை மையம் அவர்களின் மருத்துவ தேவையை ஒரே இடத்தில் பூர்த்தி செய்ய ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

    இது அவர்களுக்கு பெரிய உதவியாக இருக்கும். இந்த சிகிச்சை தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தின் கீழும் மற்றும் இந்திய அரசின் தேசிய சுகாதார திட்டத்தின் கீழும் செயல்பட உள்ளது.

    ×