search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேராவூரணி"

    பேராவூரணி அருகே கார் மோதி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பேராவூரணி:

    பேராவூரணி அருகே முடச்சிக்காடு கிராமத்தை சேர்ந்தவர்கள் ராமமூர்த்தி(வயது56). இவரது மனைவி நாகம்மாள்(48). இருவரும் நேற்று மாலை விளங்குளம் பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்று விட்டு இரவு மோட்டார் சைக்கிளில் ஊர் திரும்பினர்.

    அப்போது கிழக்கு கடற்கரை சாலையில் வந்தபோது சம்பைப்பட்டினம் என்ற இடத்தில் எதிரே வந்த கார் மோதி 2 பேரும் படுகாயமடைந்தனர். உடனடியாக அவர்களை மீட்டு பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே நாகம்மாள் இறந்தார்.

    ராமமூர்த்தி பேராவூரணியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தகவலறிந்து சேதுபாவா சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் ஓட்டிவந்த தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த டிரைவர் ராஜ்மோகன் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    பேராவூரணி அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் தாமரை உருவம் பொறித்த வெள்ளிக்காசுகளை பறிமுதல் செய்தனர். #LSPolls

    பேராவூரணி:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தஞ்சை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதுவரை நடத்திய வாகன சோதனையில் ரூ.2 கோடிக்கும் மேல் பணம் சிக்கியுள்ளது.

    மேலும் முக்கிய இடங்களில் 24 மணி நேரமும் பறக்கும் படையினர் கண்காணித்து சோதனை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே தேர்தல் பறக்கும் படையினர் இன்று காலை நடத்திய வாகன சோதனையில் தாமரை உருவம் பொறித்த வெள்ளிக்காசுகளை பறிமுதல் செய்தனர்.

    பேராவூரணி அடுத்த காரங்குடி கிழக்கு கடற்கரை சாலையில் இன்று காலை தேர்தல் பறக்கும் படையை சேர்ந்த வட்ட வழங்கல் அலுவலர் வில்சன் தலைமையில் ஏட்டுகள் பாரதிதாசன், காந்தி ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு மினி லாரியை வழிமறித்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அந்த லாரியின் பின்புறத்தில் பீடி பண்டல்கள் இருந்தது. அதன் நடுவில் ஒரு சிறிய பெட்டி மறைத்து வைக்கப்பட்டு இருந்தது.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அந்த பெட்டியை திறந்து பார்த்தனர். அதில் தாமரை உருவம் பொறித்த 133 வெள்ளிக்காசுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதுபற்றி டிரைவரிடம் நடத்திய விசாரணையில், திருநெல்வேலி மாவட்டம் இலங்காபுரி பட்டினத்தை சேர்ந்த சக்திவேல் (33) என்பதும் அவர் பட்டுக்கோட்டையை நோக்கி பீடி பண்டல்களை ஏற்றி வந்ததும் தெரிய வந்தது.

    அவர் கொண்டு வந்த வெள்ளிக்காசுக்கு உரிய ஆவணம் எதுவும் இல்லாததால் அதனை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    இதைத்தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட வெள்ளிக்காசுகள் வாக்காளர்களுக்கு வினியோகம் செய்ய கொண்டு வரப்பட்டதா? தாமரை சின்னம் பொறிக்கப்பட்டு உள்ளதால் பா.ஜனதாவினருக்கு தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    பேராவூரணி அருகே பஸ் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பேராவூரணி:

    பேராவூரணி அருகே உள்ள ஆதனூர் கிராமத்தை சேர்ந்தவர் இளந்தமிழன் (வயது 16). அதே கிராமத்தை சேர்ந்தவர் பாலா (16). இவர்கள் 2 பேரும் பேராவூரணி அடுத்த ஆவணத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் ஏ.சி. மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தனர்.

    இன்று காலை வேலைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து 2 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த ஆட்டோ மீது மோட்டார் சைக்கள் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் நடுரோட்டில் விழுந்தனர். அந்த நேரத்தில் அந்த வழியாக வந்த பஸ் எதிர்பாராதவிதமாக கீழே கிடந்த இளந்தமிழன் மீது ஏறி இறங்கியது. இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இளந்தமிழன் பரிதாபமாக இறந்தார். பாலா பலத்த காயம் அடைந்தார்.

    இதுபற்றி தகவல் அறிந்த பேராவூரணி இன்ஸ்பெக்டர் பரமானந்தம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பாலாவை மீட்டு சிகிச்சைக்காக பேராவூரணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பேராவூரணியில் பழுதடைந்த நிழற்குடையை சீரமைக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பேராவூரணி:

    பேராவூரணி அரசு மருத்துவமனை, அரசு வங்கி, தனியார் வங்கி அருகில் உள்ள பயணியர் நிழற்குடை மூலம் கொன்றைக்காடு, காலகம், ஒட்டங்காடு, துர்க்கையம்மன் கோயில், புனல்வாசல், துறவிக்காடு பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் 1000-க்கும் மேற்பட்டோர் பயனடைந்து வந்தனர். மேலும் அரசு மருத்துவமனை,அரசு வங்கி,தனியார் வங்கி மற்றும் கடை வீதிக்கு சென்று தங்கள் ஊருக்கு திரும்ப மழை மற்றும் வெயில் காலங்களில் நிழற்குடையை பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த நிழற்குடை கடந்த 2011-12-ஆம் ஆண்டு முன்னாள் மத்திய மந்திரி பழனிமாணிக்கம் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டது ஆகும். இதனை முறையாக பராமரிக்காததால் தரையில் ஒட்டப்பட்ட டைல்ஸ் பெயர்ந்தும், பயணிகள் அமரும் இருக்கைகளை சேதமடைந்த நிலையில் உள்ளது. சில இருக்கைகள் காணவில்லை. இரவு நேரங்களில் மின்வசதி துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ளதால் சமூக விரோதிகள் மது அருந்துவது,எச்சில் துப்புவது,புகை பிடித்துக் கொண்டிருப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

    எனவே தூய்மை இந்தியா திட்டத்தில் பயணியர் நிழற்குடையை சீரமைத்து மின்வசதி செய்துதர வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பேராவூரணியில் குடிநீர் தொட்டிக்கு மின் இணைப்பு வழங்காததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    பேராவூரணி:

    தஞ்சை மாவட்டம், பேராவூரணியை அடுத்த பொன்காடு பகுதியில் குடிநீர் தொட்டிக்கு மின் இணைப்பு வழங்காததால் பொதுமக்கள் அவதிபட்டு வருகின்றனர்.

    இதுபற்றி பொதுமக்கள் புகார் கூறியதை தொடர்ந்து அங்கு இன்று மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுப்பதாக பேராவூரணி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். ஆனால் இன்று காலை குடிநீர் தொட்டிக்கு செல்லும் மின் இணைப்பை சரிசெய்ய யாரும் வரவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பேராவூரணி ஆதிமுத்து சரோஜா சினிமா தியேட்டர் முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் உதவி செயற்பொறியாளர் ராதாகிஷ்ணன் பேராவூரணி இன்ஸ்பெக்டர் கார்த்திக் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தேனி மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளர்களை சம்பவ இடத்திற்கு அழைத்து வந்து குடிநீர் தொட்டிக்கு மின்இணைப்பு கொடுக்க நடவடிக்கை எடுத்தனர்.

    இதைதொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    பேராவூரணி அருகே மினி பஸ்சில் ஏறும்போது தவறி விழுந்த பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    பேராவூரணி:

    பேராவூரணியை அடுத்த மணக்காடு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி வீரம்மாள் (வயது 62), கூலி தொழிலாளி.

    இவர் முடச்சிக்காட்டில் உள்ள தனது மகள் வீடு சென்று விட்டு, ஊர் திரும்புவதற்காக முடச்சிக்காடு பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த வீரம்மாள், அவ்வழியே வந்த மினி பஸ்சில் ஏறியுள்ளார். அப்போது ஓட்டுநர் பேருந்தை இயக்கியதாக கூறப்படுகிறது. இதில் தவறி விழுந்த வீரம்மாளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் பேராவூரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வீரம்மாள் முதலுதவி சிகிச்சைக்கு பிறகு, மேல்சிகிச்சைக்காக தஞ்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    இதுகுறித்து வீரம்மாளின் மகன் தனபால் அளித்த புகாரின் பேரில் பேராவூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×