search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 114339"

    • இலங்கைக்கு இந்தியா ரூ.20,000 கோடி மதிப்பிலான நிதி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் உதவிகளை வழங்கியுள்ளது.
    • இதைத்தவிர ரூ.2000 கோடி மதிப்பிலான மருத்துவ உதவிகளையும் இந்தியா வழங்கியுள்ளது.

    பெய்ஜிங்:

    இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காமல் அந்நாட்டு மக்கள் போராடி வருகின்றனர். இதை தொடர்ந்து அந்நாட்டு அரசியலிலும் பல்வேறு மாற்றங்கள் நடந்துள்ளன. இருப்பினும் பொருளாதார பிரச்சனைகள் மட்டும் தீரவில்லை.

    இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா பல்வேறு கடனுதவிகளை வழங்கி வருகிறது. ரூ.20,000 கோடி மதிப்பிலான நிதி மற்றும் அத்தியாவசிய பொருட்களை இலங்கைக்கு இந்தியா வழங்கியுள்ளது. இதைத்தவிர 2000 கோடி ரூபாய் அளவிலான மருத்துவ உதவிகளையும் இந்தியா வழங்கி இருக்கிறது.

    இந்தியாவின் இந்த உதவிகளை பாராட்டுவதாக சீனா தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீனா வெளியுறவுத்துறை மந்திரி ஜாவோ லிஜியன் கூறியதாவது:-

    இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடிகளை நாங்கள் அறிவோம். அதை சரி செய்வதற்கு இந்தியா எடுக்கும் முயற்சிகளையும் நாங்கள் குறித்து வைத்திருக்கிறோம். அவற்றை பாராட்டவும் செய்கிறோம். இந்தியா மற்றும் உலக நாடுகளுடன் இணைந்து, இலங்கை மற்றும் கடினமான சூழலை எதிர்கொள்ளும் வளர்ந்து வரும் நாடுகளுக்கு உதவ சீனா தயாராக இருக்கிறது.

    சீனாவும் இலங்கைக்கு தன்னால் ஆன அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. எங்களால் முடிந்த அளவிற்கு சீனாவின் சமூக- பொருளாதார முன்னேற்றத்திற்கு ஆதரவை வழங்கி வருகிறோம். 500 கோடி அளவிலான மனிதாபிமான உதவிகளையும் நாங்கள் வழங்குகிறோம்.

    இவ்வாறு ஜாவோ லிஜியன் தெரிவித்துள்ளார்.

    • தோல்வி அடைந்த அதிபராக தன்னால் பதவியை விட்டு வெளியேற முடியாது என இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
    • ஐந்து வருடங்கள் ஆட்சி செய்ய மக்கள் தனக்கு ஆணை வழங்கியுள்ளதாகவும், எஞ்சியுள்ள 2 ஆண்டு காலத்தையும் ஆட்சி செய்வேன் என அவர் தெரிவித்துள்ளார்.

    கொழும்பு:

    இலங்கையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து அந்நாட்டில் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது.

    மக்கள் போராட்டத்தை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகிவிட்டு, புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே செயல்பட்டு வருகிறார். அவர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், பொருளாதார முன்னேற்றத்தில் எந்த பயனும் இல்லை.

    இதையடுத்து இந்த பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சே குடும்பம்தான் காரணம் என்றும், இதனால் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என மக்கள் போராட்டத்தை திவீரப்படுத்தியுள்ளனர்.

    இந்நிலையில் தோல்வி அடைந்த அதிபராக தன்னால் பதவியை விட்டு வெளியேற முடியாது என இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில்,

    ஐந்து வருடங்கள் ஆட்சி செய்ய மக்கள் தனக்கு ஆணை வழங்கியுள்ளனர். எஞ்சியுள்ள 2 ஆண்டு காலத்தையும் ஆட்சி செய்வேன். குறைந்தது ஒரு ஆண்டிற்கு முன்பாக சர்வதேச நாணய நிதியத்திடம் சென்றிருந்தால் இந்த பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்காது. இருப்பினும் நெருக்கடியை சமாளிக்க இந்தியா, சீனா நாடுகளிடம் உதவியை நாடியுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

    இத்தாலி நாட்டில் கடந்த 1994ம் ஆண்டு இறந்த இலங்கையைச் சேர்ந்த தமிழரின் சடலம் 25 ஆண்டுகளுக்கு பின்னர் தாயகத்திற்கு கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.#Srilankamandead
    கொழும்பு:

    இலங்கையில் உள்ள சாவகச்சேரியைச் சேர்ந்தவர் ஸ்டீபன்(49). இவர் கடந்த 1983ம் ஆண்டு வேலை செய்வதற்காக இத்தாலி நாட்டிற்கு சென்றுள்ளார்.  அங்கு பணிப்புரிந்த அவர்,  1994ம் ஆண்டு மே மாதம் உடல் நலக்குறைவினால் உயிரிழந்தார். இலங்கையில் அந்த சமயம் போர் தீவிரமாகியிருந்தது.

    இதனால் ஸ்டீபனின் சடலத்தை தாய்நாட்டிற்கு எடுத்து வர இயலவில்லை. இதையடுத்து  அங்கிருந்த அவரது உறவினர்கள் இத்தாலி அரசிடம், இலங்கையில் நடைபெற்றுவரும் போர் குறித்து எடுத்துக்கூறி அங்கேயே பதப்படுத்தி வைக்க அனுமதி பெற்றனர்.

    இந்த தகவலை, இலங்கையில் போர் சூழல் சற்றும் குறையாததால் ஸ்டீபனின் குடும்பத்தினருக்கு கூறவில்லை. கடந்த 2009ம் ஆண்டு போர் முடிவுக்கு வந்தது. குடும்பத்தினருக்கு இது குறித்து தெரியப்படுத்தினர்.



    அப்போது ஸ்டீபனின் குடும்பத்தினர்  பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்தனர். இதனால் ஏற்படும் சட்ட சிக்கல்களை சமாளிக்க முடியாததால் உடனடியாக இலங்கைக்கு கொண்டு வர இயலவில்லை.

    இந்நிலையில் ஸ்டீபன் இறந்து 25 ஆண்டுகள் ஆன நிலையில் நேற்று முன் தினம் சாவகச்சேரிக்கு அவரது சடலம் கொண்டு வரப்பட்டது. உறவினர்கள் அஞ்சலி செலுத்திய பின்னர் சாவகச்சேரியில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

    இலங்கை அரசு விமானத்தில் தனக்கு வழங்கப்பட்ட உணவில் இருந்த முந்திரியை நாய் கூட சாப்பிடாது என இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார். #SriLankaAirlines
    கொழும்பு:

    சமீபத்தில் நேபாளத்தில் நடந்த பிம்ஸ்டெக் மாநாட்டை முடித்துக்கொண்டு கொழும்பு திரும்பிய இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவுக்கு வழங்கப்பட்ட உணவில் இருந்த முந்திரி தரம் குறைந்ததாக இருந்துள்ளது. இதனை குறிப்பிட்டு, ‘விமானத்தில் வழங்கப்பட்ட முந்திரியை நாய் கூட சாப்பிடாது’ என அவர் கூறியிருந்தார்.

    மேலும், விமான நிறுவனத்திற்கு முந்திரிகள் சப்ளை செய்தது யார்? என்ற விசாரணைக்கும் அவர் உத்தரவிட்டிருந்தார். இதனை அடுத்து, இலங்கை விமானங்களில் முந்திரி கொடுக்கப்படுவது நிறுத்தப்பட்டது. துபாயை சேர்ந்த சப்ளையருக்கும் இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது.
    இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியா தலைமையில் இந்தியா வந்துள்ள எம்.பி.க்கள் குழு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, மக்களவை சபாநாயர் சுமித்ரா மகாஜன் ஆகியோரை சந்தித்துள்ளனர். #Srilanka #India
    புதுடெல்லி:

    இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியா, எதிர்க்கட்சி தலைவர் ஆர் சம்பந்தன் உள்பட 11 எம்.பி.க்கள் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளனர். டெல்லியில் இன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஆகியோரை சந்தித்து அவர்கள் பேசினர்.

    பிரதமர் மோடியுடனான சந்திப்பின் போது இலங்கை வடக்கு, கிழக்கு மாகாண தமிழர்கள் விவகாரம் தொடர்பாக பேசப்பட்டது. 13வது அரசியல் சாசன திருத்தம் குறித்தும் பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


    சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட நாயை தடுத்த சுங்க அதிகரிகளை தாக்கிய வழக்கில் குவைத் நாட்டை சேர்ந்த ஜோடியை நாட்டை விட்டு வெளியேற இலங்கை கோர்ட் தடை விதித்துள்ளது.
    கொழும்பு:

    குவைத்தை சேர்ந்த ஜோடி தங்களது நாயுடன் கொழும்பு வந்து இறங்கியுள்ளனர். விமான நிலையத்தில் இருந்து அவர்கள் வெளியேறும் போது சுங்க அதிகாரிகள் தடுத்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த இருவரும் 5 அதிகாரிகளை தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதனை அடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர். பின்னர், அவர்களை ஜாமினில் விடுவித்த மாவட்ட கோர்ட், இருவரின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்து உத்தரவிட்டது. இருவரும் தனித்தனியாக தங்கள் மீதான விசாரணையை சந்திக்க வேண்டும் எனவும் நீதிபதி தெரிவித்தார். 
    நார்வே பெண் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்ட பிரச்சனையில் இலங்கை வீரர் குணதிலகா 6 போட்டிகளில் விளையாட அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது. #Gunathilaka
    கொழும்பு:

    இலங்கை கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் தனுஷ்கா குணதிலகா. ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக கூறி இலங்கை கிரிக்கெட் வாரியம் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரை சஸ்பெண்டு செய்து அதோடு அவரது வருமானத்தில் 20 சதவீதத்தை அபராதமாக செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.

    குணதிலகாவின் நண்பர் ஒருவர் லண்டனில் இருக்கிறார். இங்கிலாந்தில் கிளப் கிரிக்கெட் ஆடுகிறார். இவர் தனது தந்தையை பார்க்க சமீபத்தில் இலங்கை சென்றார். அவர் இலங்கைக்கு சுற்றுலா வந்த நார்வே நாட்டு பெண்கள் 2 பேரை குணதிலகா தங்கி இருந்த ஓட்டல் அறைக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

    வீரர்கள் தங்கும் அறைக்கு மற்றவர்களை அழைத்து செல்லக்கூடாது என்பது விதியாகும். இதன் காரணமாகவே குணதிலகா சஸ்பெண்டு செய்யப்பட்டார். நார்வே பெண்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் குணதிலகாவின் நண்பரை இலங்கை போலீசார் கைது செய்தனர்.

    இந்த நிலையில் நார்வே பெண்கள் கற்பழிக்கப்பட்டது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் வீரர் குணதிலகாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.ஆனால் அவர் மீது எந்த குற்றச்சாட்டையும் போலீசார் இன்னும் சுமத்தவில்லை.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் குணதிலகாவிடம் விசாரணை நடத்தினர். தான் தூங்கி கொண்டு இருந்ததால் நண்பர் என்ன செய்தார் என்பது தனக்கு தெரியாது என்று போலீசாரிடம் குணதிலகா தெரிவித்ததாக செய்திகள் வெளியாயின. 

    இந்த சம்பவம் குறித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் குணதிலகாவிடம் விசாரணை நடத்தியது. அதில் அவர் வீரர்களின் ஒப்பந்த விதிகளை மதிக்காமலும், வீரர்களின் நடத்தை விதிமுறைக்கு புறம்பாகவும் நடந்து கொண்டது உறுதியானது.

    இதனை அடுத்து குணதிலகா 6 சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாட இலங்கை கிரிக்கெட் வாரியம் தடைவிதித்துள்ளது. ஏற்கனவே விளையாடிய 2 டெஸ்ட் போட்டிக்கான ஊதியம் உள்ளிட்ட எந்தவித சலுகையும் அவருக்கு வழங்கப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனாவின் செயலாளராக பணியாற்றிய ஆஸ்டின் பெர்னாண்டோ இந்தியாவுக்கான புதிய தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். #India #Srilanka
    கொழும்பு:

    இந்தியாவுக்கான இலங்கை தூதராக தற்போது சித்ராங்கனே வாகிஸ்வரா பணியாற்றி வருகின்றார். இந்நிலையில், புதிய தூதராக ஆஸ்டின் பெர்னாண்டோவை நியமித்து அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறீசேனா உத்தரவிட்டுள்ளார். எனினும், உயர் பதவி நியமனங்களுக்கான பாராளுமன்ற கமிட்டி ஒப்புதல் வழங்கப்பட்ட பின்னர் அவர் பொறுப்பேற்பார்.

    மைத்ரிபால சிறீசேனாவிடம் செயலாளராக பணியாற்றிய ஆஸ்டின் பெர்னாண்டோ சமீபத்தில் தனது பதவியை ராஜீனாமா செய்திருந்தார். மேலும், அதிபரின் ஆலோசகராகவும் கிழக்கு மாணத்தின் கவர்னராகவும் ஆஸ்டின் பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    தனது ஒரு வயது மகனை மடியில் கிடத்தி பீர் ஊட்டிய வீடியோ வைரலாக பரவியதை அடுத்து தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.
    கொழும்பு:

    இலங்கையின் அனுராதபுரத்தில் உள்ள மீகலேவா கிராமத்தை சேர்ந்த ஒருவர் தனது மகனுக்கு பீர் கொடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அந்த வீடியோவில், சுற்றிலும் மூன்று பேர் அமர்ந்திருக்க மகனை மடியில் கிடத்திய அந்த நபர், பீர் பாட்டிலில் இருந்த பீரை இரண்டு முறை சிறுவனுக்கு ஊட்டினார்.

    இந்த வீடியோ வைரலாக பரவியதை அடுத்து, போலீசார் அந்த நபரை கைது செய்துள்ளனர். மேலும், அந்த குழந்தையை மருத்துவ பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். 
    இலங்கையில் பாலியல் பலாத்காரம் குற்றத்திற்காக தன்னை கைது செய்ய வந்த போலீஸ்காரரை புத்த பிட்சு கத்தியால் குத்தி கொன்ற தகவல் வெளியாகியுள்ளது.
    கொழும்பு :

    இலங்கையின் தென்கிழக்கு மாகாணமான ரத்னபுராவில் உள்ள கலண்டா பகுதிக்குட்பட்ட புத்த மத கோவிலில் கொன்வலனே தம்மசாரா தேரா எனும் புத்த பிட்சு வசித்து வந்துள்ளார்.  பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததால் அவரை நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

    இந்நிலையில், நீதிமன்றத்தில் ஆஜராகமல் இருந்த புத்த பிட்சுவை கைது செய்ய அவர் வசித்து வந்த கோவிலுக்கு போலீஸ்காரர் ஒருவர் நிராயுதபாணியாக சென்றுள்ளார். அப்போது அவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் போலீஸ்காரரை குத்தியதில் வலியில் போலீஸ் அதிகாரி அலரியுள்ளார்.

    அலரல் சத்தம் கேட்டு அப்பகுதிக்கு வந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்துவிட்டு ரத்த வெள்ளத்தில் இருந்த போலீஸ்காரரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதைத்தொடர்ந்து, புத்த பிட்சுவை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். போலீஸ் ஒருவரை புத்த பிட்சு கொன்ற சம்பவம் இதுவே முதல்முறை என போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.
    எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை கைது செய்துள்ள இலங்கை, புதிய சட்டத்தின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
    கொழும்பு:

    கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டு இருந்த தமிழக மீனவர்கள் 12 பேரை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்களை, மன்னார் கடற்படை முகாமிற்கு இலங்கை கடற்படை அழைத்துச்சென்றனர்.

    இந்தநிலையில்,  ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் மீது முதல்முறையாக புதிய சட்டத்தின் கீழ் வழக்குபதிய இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாகவும், கொழும்பு நீரியல் துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்ய அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ரூ.50 லட்சம் முதல் ரூ.1.50 கோடி வரை மீனவர்களுக்கு அபராதம் விதிக்க வாய்ப்பு உள்ளதாகவும், அதனை கட்ட தவறினால் 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கவும் புதிய சட்டத்தில் இடம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
    இலங்கையில் தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ விடுதலை புலிகள் மீண்டும் வர வேண்டும் என வடக்கு மாகாண பெண் மந்திரி தெரிவித்துள்ள கருத்து இன்று பாராளுமன்றத்தில் கடும் அமளியை ஏற்படுத்தியது. #Srilanka #LTTE
    கொழும்பு:

    இலங்கை வடக்கு மாகாண அரசில் மந்திரியாக இருப்பவர் விஜேயகலா மகேஷ்வரன். ஆளும் ஐக்கிய தேதிய கட்சி உறுப்பினரான இவர் நேற்று யாழ்ப்பாணத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசுகையில், “2009-ம் ஆண்டுக்கு முன்னர் நாம் எப்படி இருந்தோம். நாம் தலைநிமிர்ந்து வாழ, தெருவில் சுதந்திரமாக நடமாட, நமது குழந்தைகள் பத்திரமாக பள்ளி சென்று வர தற்போது உள்ள சூழலில் விடுதலை புலிகள் மீண்டும் வந்தால் மட்டுமே சாத்தியம்” என கூறினார்.

    சமீபத்தில் யாழ்ப்பாணத்தில் 6 வயது சிறுமி பாலியல் வன்புனர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாள். இதனை மேற்கோள் காட்டி பேசிய விஜயகலா, ‘இதற்காகவா மைத்திரிபால சிறிசேனாவுக்கு நாங்கள் வாக்களித்தோம்’ என்றார். வடக்கு மாகாண பகுதியில் எந்த வளர்ச்சி திட்டமும் நிறைவேற்றப்படவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டினார்.

    விஜேயகலாவின் இந்த பேச்சு அந்நாட்டு பாராளுமன்றத்தில் இன்று அமளியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஆளும் கட்சி விளக்கமளிக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து பேசிய கல்வி மந்திரி அகில விராஜ் கரியவாசம், “விஜேயகலாவின் பேச்சு தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது” என்றார்.
    ×