search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொல்லங்கோடு"

    • இவருக்கு உடல்நிலை பாதிப்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
    • அரவிந்த் மன உளைச்சலில் இருந்து வந்தார்.

    கன்னியாகுமரி:

    கொல்லங்கோடு அடுத்த சூழால் நெய்தவிளை பகுதியை சேர்ந்தவர் விசுவம்பரன். இவரது மகன் அரவிந்த் (வயது 26). இவருக்கு உடல்நிலை பாதிப்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அரவிந்த் மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று அவர் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    இதுதொடர்பாக விசுவம்பரன் கொல்லங்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
    • தமிழகத்திலேயே குமரி மாவட்டத்தில் தான் அதிக இருச்சக்கர வாகனங்கள் விற்பனை ஆகின்றன.

    கொல்லங்கோடு, ஜூன்.17-

    தமிழகத்திலேயே குமரி மாவட்டத்தில் தான் அதிக இருச்சக்கர வாகனங்கள் விற்பனை ஆகின்றன.

    இதில் நவீன ரக வாகனங்களும், விலை உயர்ந்த இருச்சக்கர வாகனங்களும் இங்கு அதிகம் விற்பனை ஆகின்றன. மாணவர்கள் மற்றும் இளைஞர்களே இத்தகைய வாகனங்களை அதிகம் பயன்படுத்துகிறார்கள். இந்த வாகனங்களில் அரசு அனும தித்து உள்ள அள வை விட அதிக ஒலி எழுப்பும் கருவி களை பொருத்தி வீதிகளிலும், சாலைகளி லும் வலம் வரு கிறார்கள்.

    குறிப்பாக கிராம புறங்களில் உள்ள சாலைகளில் இப்படி அதிக ஒலி எழுப்பியபடி செல்லும் இருச்சக்கர வாகனங்களால் பொதுமக்கள் பலரும் அலறியடித்து ஓட்டம் பிடிக்கிறார்கள். மேலும் முதியோர் மற்றும் பெண்கள், குழந்தைகள் இச்சத்தத்தை கேட்டு மிரண்டு ஓடும் சம்பவங்களும் நடக்கிறது. இப்படி அதிக ஒலியுடன் வலம் வரும் வாகனங்களால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்கள் நடந்துள்ளன.

    இதையடுத்து நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த போக்குவரத்து விழிப்புணர்வு ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற கலெக்டர், குமரி மாவட்டத்தில் அதிக ஒலி எழுப்பி செல்லும் வாகனங்களை அனைத்தையும் பறிமுதல் செய்து கடும் நடவடிக்ைக எடுக்க வேண்டும் என போலீசாருக்கு அறிவுறுத்தினார். கலெக்டரின் உத்தரவை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் அதிக ஒலி எழுப்பும் வாகனங்கள் போக்குவரத்து போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த வாகனங்களை போலீஸ் நிலையம் கொண்டு சென்ற போலீசார் அதில் பொருத்தப்பட்ட கருவிகளை அகற்றியதோடு, அதனை ஓட்டி வந்தோருக்கு அபராதமும் விதித்தனர்.

    குளச்சல் பகுதியில் நேற்று சுமார் 12-க்கும் மேற்பட்ட வாகனங்கள் போலீ சாரால் பறிமுதல் செய்யப்பட்டன. இது போல நாகர்கோ வில், தக்கலை, மார்த்தாண்டம் பகுதிகளில் வாகனங்களை கண்காணிக்கும் பணி நடந்து வரு கிறது.

    ஆனால் கொல் லங்கோடு பகுதி யில் இன்னும் அதிக ஒலி எழுப் பியபடி செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப் பட வில்லை. இதனால் இங்கு சாலையில் நடந்து செல்லும் முதியோரும், பெண்களும் கடும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள். சில இடங்களில் ஆடு, மாடு போன்ற விலங்குகள் மிரண்டு ஓடி விபத்தை ஏற்படுத்தும் சம்பவங்களும் நடந்தது.

    எனவே இந்த பகுதியில் அதிக ஒலி எழுப்பும் வாகனங்களால் பேராபத்து ஏற்படும் முன்பு போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது
    • குழந்தைகள் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழவும் தூக்கத்தி திருவிழா நடத்தப்படுகிறது.

    நாகர்கோவில்:

    கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் குழந்தை பாக்கியம் வேண்டியும், குழந்தைகள் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழவும் தூக்கத்தி திருவிழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு தூக்கத்திருவிழா நாளை (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.

    விழாவை முன்னிட்டு நாளை காலை 7 மணிக்கு மூலக்கோவிலில் இருந்து வெங்கஞ்சி கோவிலுக்கு கொடிமரம் கொண்டுவரப்ப டுகிறது. மாலை 3 மணிக்கு மூலக்கோவிலில் இருந்து அம்மன் திருவிழா நடைபெறும் வெங்கஞ்சி கோவிலுக்கு மேளதாளங்களுடன் எழுந்தருள்வார்.

    தொடர்ந்து இரவு 7 மணிக்கு கொடியேற்றம் நிகழ்ச்சி நடக்கிறது, பின்னர் தூக்கத்திருவிழா தொடக்க நிகழ்ச்சி நடைபெறும். நிகழ்ச் சிக்கு கோவில் தலைவர் ராம சந்திரன் நாயர் தலைமை தாங்குகிறார். கேரள கவ ர்னர் ஆரிப் முகம்மது கான் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைக்கிறார்.

    நிகழ்ச்சியில் மதுரை ஆதினம் ஹரிஹர சம்மந்த தேசிக பரமாச்சாரிய திருவடிகள் ஆன்மிக உரையாற்றுகிறார். கன்னியாகுமரி தொகுதி எம். பி. விஜய் வசந்த், நெல்லை தொகுதி எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன், கிள்ளியூர் எம். எல். ஏ. ராஜேஷ்குமார், கொல்லங்கோடு நகராட்சி தலைவர் ராணி ஆகியோர் வாழ்த்தி பேசுகிறார்கள்.

    தொடர்ந்து விழா நாட்களில் தினமும் நிர்மால்ய தரிசனம், அபிஷேகம், உஷ பூஜை, கணபதி ஹோமம், தீபாராதனை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    தூக்கக்காரர்களின் நமஸ்காரம் நமஸ்காரம் 19-ந்தேதி காலையில் தூக்க நேர்ச்சை குலுக்கல் மற்றும் காப்புக்கட்டும் நிகழ்ச்சி நடக் கிறது. அன்று இரவு 9மணிக்கு தூக்கக்காரர்களின் நமஸ்காரம் நடைபெறும். 21-ந் தேதி இரவு 7 மணிக்கு நடக்கும் பண்பாட்டு மாநாட்டை அமைச்சர் மனோதங்கராஜ் தொடங்கிவைக்கிறார். இதில் சிறப்பு விருந்தினர்களாக கேரள முன்னாள் டி.ஜி.பி. அலெக்சாண்டர் ஜேக்கப், கேரள முன்னாள் சுகாதார துறை மந்திரி சிவகுமார், நடி கர் கரமனை சுதீர், நாகர்கோவில் இந்து கல்லூரி செயலாள ரும், தாளாளருமான நாகராஜன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

    23-ந்தேதி காலை 7.30 மணி முதல் தூக்கக்காரர்களின் உருள் நமஸ்காரம் நடக்கிறது. 24-ந் தேதி மாலையில் வண்டியோட்டம் எனப்படும் தூக்கத்தேர் முன்னோட்டம் நடக்கிறது.

    தூக்க நேர்ச்சை 25-ந் தேதி சனிக்கிழமை அதிகாலையில் தூக்கக்காரர் களின் முட்டுகுத்தி நமஸ்கா ரம், அம்மன் பச்சை பந்தலில் எழுந்தருளுதல் நடக்கிறது. தொடர்ந்து காலை 6.30 மணிக்கு பச்சிளம் குழந்தைக ளுக்கு தூக்க நேர்ச்சை நிறை வேற்றும் நிகழ்ச்சி தொடங்குகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் தலைவர் ராமசந்தி ரன் நாயர், செயலாளர் மோகன் குமார், இணை செய லாளர் பிஜூ குமார். துணைத்தலைவர் சதிகுமாரன் நாயர், பொருளாளர் சீனி வாசன் தம்பி மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.

    • கேட்பாரற்று நின்றதால் கடத்தியது யார்? போலீசார் விசாரணை
    • அருமனை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாமுவேல் சம்பவ இடம் வந்து விசாரித்து காரை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தார்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் கொல்லங்கோடு போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பின்குளம் பகுதியில் வசிப்பவர் ஆல்பர்ட்.இவரது மனைவி ஷிஜி.இவர்கள் தங்களது காரை வீட்டு முன்பு நிறுத்தி இருந்தனர்.

    அந்தக் கார் கடந்த அக்டோபர் மாதம் 26- ந் தேதி திடீரென மாயமானது. பல இடங்களில் தேடியும் கார் கிடைக்காததால் அதனை யாரோ திருடிச் சென்றிருக்கலாம் என 28- ந் தேதி கொல்லங்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    இது தொடர்பாக போலீ சார் வழக்கு பதிவு செய்து காரை தேடி வந்தனர். இந்நிலையில் ஆல்பர்ட்டின் நண்பர், அருமனை வழியாக சென்றார். அப்போது அங்கு திருட்டு போன ஆல்பர்ட்டின் கார் நிற்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து அவர் ஆல்பர்ட்டுக்கு தகவல் தெரிவித்தார். அவர் விரைந்து வந்து விசாரித்த போது ஒரு மாதத்திற்கு மேலாக கார் இப்பகுதியில் நின்று கொண்டி ருப்பதாக அங்கு உள்ளவர்கள் தெரி வித்தனர்.

    இதுகுறித்து அருமனை போலீசுக்கு ஆல்பர்ட் தகவல் தெரிவித்தார். அருமனை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாமுவேல் சம்பவ இடம் வந்து விசாரித்து காரை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தார். கார் திருடப்பட்டு கொண்டு விடப்பட்டதா? அல்லது கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்டதா? என்று பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • லட்சக்கணக்கான பொருட்களை அள்ளி சென்றதால் பரபரப்பு
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    கொல்லங்கோட்டை அடுத்த நடைக்காவு அருகே வில்லுவிளையில் பிரசித்தி பெற்ற இசக்கி அம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் காலை, மாலை வேளைகளில் பூஜை நடப்பது வழக்கம். நேற்று மாலை கோவிலில் பூஜை முடிந்து பூசாரி கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார்.

    இந்நிலையில் இன்று காலை பூசாரி கோவிலுக்கு வந்து பார்த்தபோது கோவில் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது கோவில் நடையில் வைத்திருந்த 8 அடி நீளமுள்ள நிலவிளக்கு திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

    மேலும் கோவிலுக்கு தேவையான பொருட்கள் வைக்கும் அறையை உடைத்து 27 நிலவிளக்குகள் மற்றும் கோவிலுக்கு தேவையான வெள்ளி தட்டுகள் மற்றும் ஏராளமான வெண்கல பாத்திரங்களும் திருடப்பட்டிருந்தது.

    இதன் மொத்த மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. கோவிலில் திருட்டுப்போனது குறித்து பூசாரி கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார். நிர்வாகிகள் நித்திரவிளை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் ஏதோ மர்ம நபர்கள் கோவில் பூட்டை உடைத்து பொருட்கள் திருடி சென்றது தெரியவந்தது. மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    இந்த திருட்டு சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நித்திரவிளை போலீஸ் நிலையத்திற்குக்குட்பட்ட பகுதியில் சில நாட்களாக தொடர்ச்சியாக பல இடங்களில் செயின் பறிப்பு மற்றும் திருட்டு சம்பவங்களும் நடப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    • கடத்தப்பட்டாரா? என போலீசார் விசாரணை
    • கல்லூரிக்கு வருகை குறைவு காரணமாக தேர்வு எழுதவில்லை எனப்படுகிறது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே உள்ள மேடவிளாகம் பகுதியைச் சேர்ந்த 21 வயது இளம்பெண், கல்லூரியில் முதுகலை பயின்று வந்தார்.

    அவர் சில நாட்களுக்கு முன்பு ஒரு ஞாயிற்றுக்கிழமை உறவினருடன், பொழியூர் கடற்கரை பகுதிக்குச் சென்றுள்ளார். அங்கு அவர் உறவினரின் பார்வையில் இருந்து திடீரென மாயமாகி விட்டார்.

    மாணவியின் கைப்பை மற்றும் காலணிகள் கடற்கரையிலேயே கிடந்தன. இதுகுறித்த புகாரின் பேரில் பொழியூர் போலீசார் விசாரணை நடத்தினர். மாணவியின் வீட்டில் சோதனை செய்த போது, தற்கொலை செய்து கொள்ள மாணவி முடி வெடுத்ததாக எழுதப்பட்ட கடிதம் கிடைத்தது.

    இதனால் மாணவி தற்கொலை செய்திருக்க லாமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். மரைன் போலீ சாரும் கடற்கரை பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடு பட்டனர். இதற்கிடையில் அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை கைப்பற்றி ேபாலீசார் ஆய்வு செய்தனர்.

    அப்போது, சந்தேகம் அளிக்கும் வகையில் பர்தா அணிந்த ஒருவர் ஆட்டோ வில் ஏறிச் செல்வது தெரிய வந்தது. அது மாணவி யாக இருக்கலாமா? என்ற சந்தே கத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட ஆட்டோ டிரை வரை அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது பர்தா அணிந்து ஆட்டோவில் ஏறியவர், களியக்காவிளையில் உள்ள ஒரு பேக்கரியில் 'கூகுள் பே' செய்து பணம் பெற்றார் என தெரிய வந்தது. இதனை தொடர்ந்து 'கூகுள் பே' பயன்படுத்திய செல்போன் எண்ணை வைத்து, போலீசார் விசாரணை தொடங்கினர்.

    இதில் தற்போது அந்த செல்போன் சிக்னல் மும்பையில் இருப்பது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் மாணவி மும்பையில் இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்ற னர். இதனை தொடர்ந்து பொழியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சஜிகுமார் தலைமையில் போலீசார் மும்பை சென்றுள்ளனர்.

    மாணவி மும்பை சென்றது ஏன்? அவர் தானாக சென்றாரா? அல்லது கடத்தப்பட்டாரா? என போலீசார் விசாரணை தொடங்கினர். அப்போது மாணவி, கல்லூரிக்கு வருகை குறைவு காரணமாக தேர்வு எழுத வில்லை என்பதும் அதனால் அவர் ஊரை விட்டு சென்றிருக்க லாம் என்ற தகவலும் கிடைத்து உள்ளது.

    இதுகுறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர். மும்பை சென்ற போலீசார், மாணவியுடன் திரும்பினால் தான், இந்தப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.

    • தனது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.
    • கொல்லங்கோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    கொல்லங்கோடு அருகே கிராத்தூர் பண்டாரகாடு வீட்டை சேர்ந்தவர் ஜார்ஜ் (வயது 58). கூலி தொழிலாளி. இவருக்கு ஒரு மகளும் மகனும் உள்ளனர். ஜார்ஜ் அதிகமாக மது அருந்தும் பழக்கம் கொண்டவர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை அதிகமான மது போதையில் வீட்டிற்கு வந்த ஜார்ஜ் தனது அறையில் சென்று கதவை அடைத்துள்ளார்.நேற்று காலை வரை கதவு திறக்காததால் வீட்டில் உள்ளவர்கள் ஜன்னல் வழியே பார்த்தபோது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து ஜார்ஜ் மனைவி சவுந்தர்யா (50) கொடுத்த புகாரின் பேரில் கொல்லங்கோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    • கொல்லங்கோடு நகராட்சியில் அவசர கூட்டம் நேற்று தொடங்கியது.
    • உள்ளிருப்பு போராட்டம் இரவிலும் நீடித்தது.

    கன்னியாகுமரி:

    கொல்லங்கோடு நகராட்சியில் அவசர கூட்டம் நேற்று தொடங்கியது.இதில் நகராட்சித் தலைவர் ராணி ஸ்டீபன் மற்றும் ஆணையர், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியதும் கவுன்சிலர்கள் ஆணையர் மீது பல்வேறு புகார்களை கூறினர்.

    குறிப்பாக பல்வேறு வளர்ச்சி பணிகள் கிடப்பில் உள்ளதாகவும் தற்காலிக ஊழியர்களை மிரட்டுவதாகவும் கூறினர்.இதனால் கோபமடைந்த ஆணையர் ஒரு கட்டத்தில் கூட்டத்தை புறக்கணித்து விட்டு வெளியே சென்றார். இதனால் ஆத்திரமடைந்த தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் நகராட்சி அலுவலகத்தின் முன்பக்கத்தில் வரிசையாக அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து நகராட்சி தலைவர் ராணி ஸ்டீபன் கூறியதாவது:-

    நகராட்சியில் பல்வேறு பகுதிகளில் பல மாதங் களாக டெண்டர் விடப்பட்ட வளர்ச்சிப் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதற்கான ஆணை பிறப்பிக்காமல் உள்ளது. ஆணையர் நகராட்சி சம்பந்தமான பணிகள் தொடர்பாக தலைவரிடம் எந்த கலந்தா லோசனையும் செய்வதில்லை.சுமார் 20 ஆண்டுகளாக கலெக்டர் வழிகாட்டுதல் படி தற்காலிக ஊழியராக செயல்பட்டு வருபவர்களை வேலையை விட்டு நீக்குவேன் என மிரட்டுகிறார்.

    இவை குறித்து பேச அவசர கூட்டம் கூட்டப்பட்டது.ஆனால் கூட்டத்திற்கு வந்த ஆணையர் உடனடியாக புறக்கணிப்பு செய்து விட்டார். இதனை கண்டித்து அனைத்து கட்சியை சேர்ந்த 33 கவுன்சிலர்களும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இரவிலும் இந்த போராட்டம் குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.நேரமாகியும் அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தை நடத்த வரவில்லை இதனால் உள்ளிருப்பு போராட்டம் இரவிலும் நீடித்தது. இன்றும் 2-வது நாளாக போராட்டம் நடக்கிறது.

    • கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோவிலில் 10 நாட்கள் தூக்க திருவிழா நடக்கிறது.
    • அதிகாலையில் தொடங்கி இரவு வரை விடிய, விடிய தூக்க நேர்ச்சை நடைபெறும்.

    கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோவிலில் ஆண்டுக்கு ஒருமுறை 10 நாட்கள் தூக்க திருவிழா நடக்கிறது. 4 மர சக்கரங்களுடன் கூடிய தேர் போன்று தூக்க வண்டி அமைந்திருக்கும். அந்த தூக்க வண்டியின் உச்சியில் நீளமான இரண்டு களை கம்புகள் (வில்) பொருத்தப்பட்டுள்ளன.

    இரண்டு வில்களின் நுனியிலும் குறுக்குவாட்டில் தலா இரண்டு மரச்சட்டங்கள் இருக்கும்.

    தூக்க வண்டியில் இருப்போரை தூக்ககாரர்கள் என்று அழைப்பார்கள். ஒவ்வொரு வண்டியிலும் 4 தூக்கக்காரர்களை மார்பிலும், இடுப்பிலும் துணியால் கட்டி அந்த மரச்சட்டங்களில் தொங்கவிடுவார்கள். தொங்கிக் கொண்டிருக்கிற ஒவ்வொரு நபரின் கைகளிலும் தலா ஒரு பச்சிளம் குழந்தை.

    தூக்க நேர்ச்சை தொடங்கியதும் தூக்க வண்டியின் வில்களின் பின்பகுதியை கயிறால் கட்டி சிலர் கீழே இழுப்பார்கள். இதனால் முன்பகுதி சர்ரென மேலே போகிறது. அப்போது 4 தூக்கக்காரர்களும் குழந்தைகளுடன் 40 அடி உயரத்தில் மேலே தொங்குவார்கள். அப்போது சுற்றி நிற்கும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குலவையிட்டு பக்தி பரவசத்தோடு அம்மனை வழிபடுவார்கள். பின்னர் செண்டை மேளம் ஒலிக்க, நூற்றுக்கணக்கான இளைஞர்கள் வடம் பிடித்து தூக்க வண்டியை கோவிலை சுற்றி இழுத்து வருவார்கள்.

    அந்தரத்தில் குழந்தைகளுடன் தொங்கியபடியே அந்த 4 நபர்களும் கோவிலை ஒரு சுற்று சுற்றி முடிந்ததும் கீழே இறங்குவார்கள். பிறகு வேறு 4 நபர்களை தூக்க வண்டியில் கட்டி தொங்கவிட்டு அவர்களின் கைகளில் வேறு நான்கு குழந்தைகள் கொடுக்கப்படும். இப்படி அதிகாலையில் தொடங்கி இரவு வரை விடிய, விடிய தூக்க நேர்ச்சை நடைபெறும். இந்த காட்சியை காணும் பக்தர்களுக்கு மெய்சிலிர்க்கும். குழந்தைகளை அந்தரத்தில் தூக்கிச் சென்றபடி அம்மனை வழிபடுவதால் இந்த திருவிழாவுக்கு தூக்க நேர்ச்சை திருவிழா என்று பெயர்.

    தூக்க காரர்கள் 4-ம் திருவிழா நாளில் இருந்தே விரதமிருக்க வேண்டும். கோவில் வளாகத்தில் தான் தங்க வேண்டும். அந்த 7 நாட்களும் கோவில் நிர்வாகம் சார்பில் அவர்களுக்கு எளிமையான உணவு வழங்கப்படும்.

    கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவில் விழாவில் 1,691 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நிறைவேற்றப் பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    தென் தமிழகத்தின் சிறப்பு வாய்ந்த தேவி கோவில்களில் குமரி மாவட்டம் கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவி லும் ஒன்று. இந்த கோவி லில் ஆண்டு தோறும் குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நடத்தப்படுவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் (மார்ச்) 30-ந் தேதி தொடங்கியது. கோவில் தந்திரி பிரம்ம கொட்டாரக்கரை நீர்மனை ஈஸ்வரன் போற்றி தலைமையில் கொடியேற்று விழா நடந்தது. தொடர்ந்து பத்து நாட்கள் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுடன் விழா நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்வான குழந்தைகளின் தூக்க நேர்ச்சை திருவிழா நேற்று காலை 6 மணிக்கு தொடங்கி யது. தூக்க நேர்ச்சை தொடங்குவதற்கு முன்னதாக தூக்ககாரர்களின் முட்டுகுத்தி நமஸ் காரம் நடந்தது. தொடர்ந்து காலை 6 மணிக்கு அம்மனுக்கு தூக்க நேர்ச்சை நிகழ்ச்சி நடந்தது. பின்னர் 1,691 குழந்தைகளின் தூக்க நேர்ச்சை நடத்தப்பட்டது. நேற்று தொடங்கிய இந்த நிகழ்ச்சி இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் வரை நடக்கிறது.

    தூக்ககாரர்கள் நேர்ச்சை குழந்தைகளை தூக்க தேரில் தூக்கி கோவிலை ஒருமுறை சுற்றி வந்து வேண்டுதலை முடித்த வண்ணம் உள்ளனர். குழந்தைகளின் பாதுகாப்பு கருதி பாதுகாப்பு கவசங்கள் அணியப்பட்டு இருந்தன.

    தூக்க விழாவை காண தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர்.

    ×