search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இணையதளம்"

    • பதிவுதாரர்களின் வேலைவாய்ப்பு பதிவு விவரங்கள் மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
    • பதிவுதாரர்கள் அலுவலக வேலை நாட்களில் தங்களது சான்றிதழ்களுடன் நேரில் வருகை புரிந்து பதிவினை சரிபார்த்துக் கொள்ளலாம்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறைமாவட்ட கலெக்டர் லலிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    நாகப்பட்டினம் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழி காட்டும் மையத்திலிருந்து மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையம் பிரிக்கப்பட்டு புதியதாக 25.1.22ம் தேதி முதல் 2வது குறுக்குத் தெரு,பாலாஜி நகர் பூம்புகார் சாலை, மயிலாடுதுறை-1 என்றமுகவரியில் செயல்பட்டு வருகிறது.

    மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக எல்லைக்குட்பட்ட மயிலா டுதுறை, குத்தாலம், சீர்காழி மற்றும் தரங்கம்பாடி வட்டங்களைச் சார்ந்த நாகப்பட்டினம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவ லகத்தில் பதிவுசெய்துள்ள பதிவுதாரர்களி ன்வேலை வாய்ப்பு பதிவு விவரங்கள் மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

    எனவே மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த பதிவுதாரர்கள் தங்கள்வே லைவாய்ப்பு அலுவலக பதிவுமாற்றம் செய்யப்பட்டுள்ளதை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இணையதளத்தில் சரிபா ர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

    ஏற்கனவே மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு வருகைப் புரிந்து பதிவு சரிபார்த்தவர்களை தவிர்த்து ஏனைய பதிவுதாரர்கள் அலுவலக வேலை நாட்களில் தங்களது அனைத்து அசல் கல்வி சான்றிதழ்கள், சாதிசான்றிதழ், ஆதார் அட்டை மற்றும்குடும்ப அடையாள அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் நேரில் வருகை புரிந்து தங்களது பதிவினை சரிபார்த்துக் கொள்ளலாம்.

    மேலும் அவ்வாறு சரிபார்த்துக் கொள்ளவரும்பட்சத்தில் பயணப்படி ஏதும் வழங்கப்படமாட்டாது.

    மேலும் வேலைவாய்ப்பு அலுவலகங்கள்வழியாக நிரப்பப்படுகின்ற அரசு பணியிடங்களுக்கான முன்னுரிமைகளை பதிவு செய்துகொள்ளதமிழக அரசின் மனிதவள மேலாண்மைதுறை அரசாணையில்கு றிப்பிட்டுள்ள 20 வகையான முன்னுரி மைகளை பதிவு செய்துகொள்ள விருப்பமுள்ளவர்கள்உ ரிய சான்றுகளைப் பெற்று வந்துபதிவு செய்துகொள்ளலாம்.

    மேலும் சந்தேகங்களுக்கு 04364299790 என்ற அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு பயன் பெறலாம் என தெரிவித்துள்ளார்.

    அனில் அம்பானி வழக்கு தொடர்பாக இணையதளத்தில் தவறான தகவலை பதிவிட்ட சுப்ரீம் கோர்ட் அதிகாரிகள் 2 பேரை பணிநீக்கம் செய்து, அவர்களை கைது செய்ய தலைமை நீதிபதி உத்தரவிட்டார். #AnilAmbani #SupremeCourt
    புதுடெல்லி:

    ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் தலைவர் அனில் அம்பானிக்கு எதிராக எரிக்சன் நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த கோர்ட் அவமதிப்பு வழக்கு, கடந்த ஜனவரி 7-ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, அனில் அம்பானி, கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி ஆர்.எப்.நாரிமன் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது.

    ஆனால், நீதிபதி உத்தரவை குறிப்பெடுத்து சுப்ரீம் கோர்ட் இணையதளத்தில் பதிவு செய்யும் அதிகாரிகள் 2 பேர், அனில் அம்பானி ஆஜராக தேவையில்லை என்று நீதிபதி உத்தரவிட்டதாக தவறான தகவலை இணையதளத்தில் பதிவிட்டனர். இத்தகவலை எரிக்சன் நிறுவன வக்கீல், நீதிபதி நாரிமன் கவனத்துக்கு கொண்டு சென்றார். இதுபற்றி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயிடம் நீதிபதி நாரிமன் புகார் செய்தார்.

    அதையடுத்து, தலைமை நீதிபதி உத்தரவுப்படி, மணவ், தபன் என்ற 2 அதிகாரிகளும் பணிநீக்கம் செய்யப்பட்டனர். நேற்று முன்தினம் அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. #AnilAmbani #SupremeCourt
    போன்களால் நமக்கு பலவகை ஆபத்துகளும் ஏற்படுகின்றன. குறிப்பாக நாம் செல்போன் வைத்திருக்கும் பல வகை அந்தரங்க தகவல்கள் திருடப்படுவதாக கூறப்படுகிறது.
    செல்போன் இன்று உலகம் முழுவதும் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. செல்போன் இல்லாதவர்களே இல்லை என்ற நிலையை நோக்கி தற்போது சென்று கொண்டிருக்கிறது. அதுவும் பல்வேறு வசதிகளையும் கொண்ட ஸ்மார்ட் போன்களுக்கு பெரும்பாலானோர் மாறி விட்டனர். ஆனால், இந்த போன்களால் நமக்கு பலவகை ஆபத்துகளும் ஏற்படுகின்றன. குறிப்பாக நாம் செல்போன் வைத்திருக்கும் பல வகை அந்தரங்க தகவல்கள் திருடப்படுவதாக கூறப்படுகிறது.

    போனில் எந்த ஒரு செயல்பாட்டையும் மேற்கொள்வதற்கு ஆண்ட்ராய்டு பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிளின் ஆப் ஸ்டோருக்கோ சென்று செயலிகளை பதிவிறக்கம் செய்கிறோம். பயன்படுத்தும் செயலியை இன்ஸ்டால் செய்வதற்கு முன் அது கேட்கும் அனுமதிகளை பார்த்தீர்களானால் அதிர்ச்சியடைய நேரிடும்.

    உதாரணமாக, புகைப்படத்தை எடிட் செய்யும் ஒரு பிரபல செயலியை இன்ஸ்டால் செய்வதாக வைத்து கொள்வோம். அப்போது கேமரா, தொடர்பு எண்கள், லொகேஷன், ஸ்டோரேஜ் போன்றபலவற்றிற்கு அனுமதி அளித்தால்தான் அந்த செயலியை செயல்படுத்த முடியும். ஆனால், புகைப்படத்தை எடிட் செய்யும் இந்த செயலிக்கு, புகைப்படம், தொடர்பு எண்கள், ஸ்டோரேஜ் ஆகியவை அவசியம்தான். ஆனால், முற்றிலும் தேவையற்ற லொகேஷன், இருப்பிடத்தை கண்டறிந்து அதன் மூலம் மிகச்சரியான விளம்பரங்களை உங்களது போனுக்கு அனுப்பி பணம் சம்பாதிப்பதற்காக அனுமதி கேட்கப்படுகிறது.

    இதேபோன்று பல்வேறு செயலிகளில் முற்றிலும் சம்பந்தமே இல்லாத தகவல்கள் கேட்கப்படுகின்றன. கண்மூடித்தனமாக செயலிகளை இன்ஸ்டால் செய்பவர்கள், அதிலுள்ள ஆபத்தை உணராமல் ஜி.பி.எஸ்., நெட்ஒர்க் செயல்பாடு, வைபை, மற்ற ஆப்களின் செயல்பாட்டை கண்காணித்தல் - முடக்குதல், ஐ.எம்.இ.ஐ. எண் போனை அணையாமல் இருக்க செய்தல், தகவல்களை மாற்ற, நீக்க அனுமதி போன்ற பல்வேறு தகவல்களுக்கு ஒப்புதல் கொடுத்து செயலியோடு பிரச்சினையையும் இலவசமாக வாங்கி கொள்கின்றனர்.

    போனில் இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்கள், ஆவணங்கள் போன்றவற்றை உங்களுக்கு தெரியாமலேயே அந்த செயலிகள் தனது சர்வர்களில் பதிவேற்றம் செய்துகொள்வதற்கு வாய்ப்புள்ளது. இதுபோல் அந்த ரங்க தகவல்களையும் எடுத்து கொண்டும் கூகுள் உள்ளிட்ட தேடுபொறி இணைய தளங்கள் உங்களுக்கு தெரியாமலேயே கூகுள் சேகரிக்கும் பட்டியல் மிகவும் நீண்டது. இந்த காலத்தில் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கணக்கு இல்லாதவர்களை கண்டறிய முடியாத அளவுக்கு அவற்றின் பயன்பாடு மிகப் பெரியளவில் விரிவடைந்துள்ளது.



    பேஸ்புக் பயன்பாட்டாளர்கள், அதில் ஒரு பதிவை பகிரும் போது அதை யார் யாரெல்லாம் பார்க்க முடியும் என்று தேர்ந்தெடுக்கலாம். அதன்படி, பேஸ்புக்கின் மென்பொருளில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினையின் காரணமாக சுமார் 14 மில்லியன் பயன்பாட்டாளர்கள் தங்களுக்கு தெரியாமலேயே பொதுவாக தெரிவு செய்யும் “ஒன்லி மீ” என்பதற்கு பதிலாக “பப்ளிக்கில்” பதிவுகளை போட்டிருக்கக் கூடும் என்று சமீபத்தில் அந்நிறுவனம் எச்சரித்திருந்தது. இதன் மூலம் தங்களது அந்தரங்க தகவல்களை தங்களுக்கு தெரியாமலேயே பயனாளர்கள் பொதுவெளியில் பகிர்ந்திருக்கக் கூடும்.

    கைபேசி செயலிகளை போன்றே பேஸ்புக்கை முதலாக கொண்டு ஒரு இணையதளத்தில் கணக்கை ஆரம்பிக்கும் போதோ அல்லது கேம் விளையாடும்போது நீங்கள் அந்தரங்கமாக வைத்திருக்கும் தகவல்கள், பதிவுகள், நண்பர்களின் தகவல்கள், உங்களது நடவடிக்கைகள் போன்றவற்றை பயன்படுத்துவதற்கு ஏதோவொரு செயலின் வடிவமைப்பாளருக்கு அதிலுள்ள ஆபத்து தெரியாமல் பலரும் அனுமதி தருகிறார்கள்.

    இதுபோன்ற செயலிகள் சில நேரங்களில் உங்களது கணக்கை பயன்படுத்தி உங்களது நண்பர்களுக்கு நீங்கள் அனுப்பியதாக தவறான வீடியோ, புகைப்படங்கள், இணையதள இணைப்புகளை பகிரும் சம்பவங்கள் பரவலாக நடந்து வருகின்றன. இலவச கிளவுட் ஸ்டோரேஜ் சேமிப்பு, கருத்துக் கணிப்பில் பங்கேற்றால் இலவச கூப்பன், பயனர் கணக்கு உள்ளவர்களுக்கே உள்நுழைய அனுமதி, புதிய கணக்கை தொடங்கினால் வாங்கும் பொருளில் தள்ளு படி போன்ற பல்வேறு கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி பலரும் தங்களது அந்தரங்க தகவல்களை அளித்து நம்பகத்தன்மையற்ற இணையதளங்களில் உள்நுழைகின்றனர்.

    மேற்குறிப்பிடப்பட்டது போன்ற விளம்பரங்களை நம்பி முன்பின் தெரியாத இணையதளங்களில் அந்தரங்க தகவல்களை அளித்த பயனீட்டாளர்களுக்கு என்றாவது ஒரு நாள், தன்னுடைய போட்டோ மார்பிங் செய்யப்பட்டு வெளிவரும்போதோ அல்லது வங்கியிலுள்ள பணம் நூதமான முறையில் திருடப்படும் போதோ தான் அதன் தீவிரம் தெரிய வருகிறது.

    ஒரு செயலியையோ, மென்பொருளையோ, இணையதள கணக்கையோ முதன் முதலாக பயன்படுத்துவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் நூற்றுக்கணக்கான பக்கங்களை கொண்ட விதிமுறைகளை படிக்காமல், அனைத்துக்கும் ‘அக்சப்ட்’ கொடுப்பவர்களுக்கு என்றாவது ஒருநாள் தங்களது அந்தரங்க தகவல்களுக்கு பாதிப்பு ஏற்படும் போது தான் அதன் வீரியம் புரிகிறது.
    சமூக வலைத்தளங்களின் அசுர வளர்ச்சிப் பசிக்கு குடும்ப பெண்களும் தப்பவில்லை. இத்தகைய இணையதள வன்முறைகள் ஆண்களை விட பெண்களுக்கு 27 மடங்கு அதிகமாக நடக்கிறது.
    சமூக வலைத்தளங்கள் தவிர்க்கமுடியாத அங்கமாக சமூகத்துடன் இணைந்துவிட்டன. கணினி வழியாக பரிமாறிக்கொள்ளப்பட்டு வந்த தகவல்கள் கையடக்க கைப்பேசிக்குள் சுலபமாக புகுந்துவிட்டன. அவற்றுள் எவை அவசியமானவை? எவை அவசியமற்றவை? என்பதை வகைப்படுத்தி பிரித்து பார்க்கும் சிந்தனைத் தெளிவு இல்லாமல் அனைத்து தகவல்களையும் பார்வையிடும் நிர்பந்தத்திற்கு பெரும்பாலானவர்கள் உள்ளாகிவிட்டார்கள். அடுத்தவர்கள் அனுப்பும் தகவல்களை அறிந்துகொள்ளும் ஆர்வத்தில் சமூக வலைத்தளத்திலேயே மூழ்கி கிடப்பவர்கள் அதிகரித்துவிட்டார்கள்.

    பயனுள்ள விஷயங்களை அறிந்து கொள்வதற்கு நேரத்தை செலவிடுவதற்கு பதில், வீண் விஷயங்களில் கவனம் செலுத்தி பொழுதை போக்குவது பேஷனாகவே மாறிக்கொண்டிருக்கிறது. சமூக வலைத்தளங்களின் அசுர வளர்ச்சிப் பசிக்கு குடும்ப பெண்களும் தப்பவில்லை. ஒரே வீட்டில் வசித்தாலும் தனித்தனி தீவுகளைப்போல் தனிமையில் சமூக வலைத்தளங்களில் மூழ்கி கிடப்பது குடும்ப கட்டமைப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறிக்கொண்டிருக்கிறது. சமூகவலைத்தளங்கள் சமூகத்தை எந்த அளவிற்கு தன் பிடிக்குள் அடி பணிய வைத்திருக்கிறது என்பதை உணர்த்தும் சர்வே இது!

    ‘சமூக வலைத்தளங்களில் தினமும் எத்தனை மணி நேரத்தை செலவிடுகிறீர்கள்?’ என்ற கேள்விக்கு, 68 சதவீதம் பேர் “தினமும் 4 முதல் 5 மணி நேரத்தை ஒதுக்குகிறோம்” என்று கூறி இருக்கிறார்கள். “நேரத்தை கவனத்தில் கொள்ளாமல் டேட்டா தீர்ந்து போகும் வரை அதிலேயே மூழ்கி கிடப்போம்” என்று பத்து சதவீதம் பேர் பதில் சொல்லியிருக்கிறார்கள். “வீட்டில் இருக்கும் நேரத்தில் வீடியோ பார்ப்பது, சாட்டிங் செய்வது என்று பொழுதை போக்கிவிட்டு மனைவி, குழந்தைகளுடன் முகம் கொடுத்து பேச நேரம் கிடைப்பதில்லை” என்றும் 8 சதவீதம் பேர் வருத்தப்பட்டிருக்கிறார்கள். டேட்டா தீர்ந்துபோன பிறகும் மற்றவர்களின் வை-பை மூலம் நெட் பயன்படுத்துவதாக 9 சதவீதம் பேர் சொல்கிறார்கள்.

    இதில் அதிர்ச்சி அளிக்கும் விஷயம் என்னவென்றால் சமூக வலைத்தளங்களில் ஐந்தாறு மணி நேரத்தை செலவிடுபவர்களில் பெரும்பாலானோர் திருமணமானவர்கள். அவர்கள், அதன் பிறகு குடும்பத்தோடு செலவிட தங்களுக்கு ஒரு மணி நேரம்கூட கிடைப்பதில்லை என்றும் கூறுகிறார்கள். கிடைக்கும் ஓய்வு நேரத்தில் எல்லாம் சமூக வலைத்தளத்துடனேயே தொடர்பில் இருப்பதாக 5 சதவீதம் பேர் கூறி இருக்கிறார்கள்.

    ‘இரவு 11 மணிக்கு மேல் இணைய தளத்தை பயன்படுத்துவீர்களா?’ என்ற கேள்விக்கு, 26 சதவீதம் பேர் ‘ஆம்’ என்று பதில் அளித்திருக்கிறார்கள். 39 சதவீதம் பேர் ‘இல்லை’ என்று கூறி இருக்கிறார்கள். 35 சதவீதம் பேர் எப்போதாவது இரவில் இணையதளத்தை பயன்படுத்துவதாக சொல்லியிருக்கிறார்கள்.

    ‘வீட்டில் உள்ளவர்களுடன் குடும்ப விஷயங்களை பேசுவதற்கு தினமும் எவ்வளவு நேரத்தை ஒதுக்குகிறீர்கள்?’ என்ற கேள்விக்கான பதிலில், சமூக வலைத்தளம் எந்த அளவுக்கு குடும்பத்தினர் மத்தியில் இடைவெளியை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. 21 சதவீதம் பேர் குடும்ப விஷயங்கள் பற்றி பேசுவதற்கு 1 மணி நேரத்திற்கும் குறைவாகத்தான் செலவிடுவதாக கூறி இருக்கிறார்கள்.

    2 மணி முதல் 3 மணி நேரம் வரை பேசுவதாக 23 சதவீதம் பேர் சொல்லி இருக்கிறார்கள். 2 முதல் 4 மணி நேரம் வரை ஒதுக்குவதாக 27 சதவீதம் பேர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். உறவு பந்தத்திற்கு ஆறுதல் அளிக்கும் விதமாக 29 சதவீதம் பேர் 4 மணி நேரத்திற்கும் அதிகமாக பேசுவதாக கூறி இருக்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் அதிக நேரத்தை செலவிடுவது விவாகரத்து அதிகரிப்பதற்கும் காரணமாக இருப்பதும் தெரியவந்துள்ளது.



    ‘மகளின் செல்போனின் பாஸ்வேர்டு தெரியுமா?’ என்ற கேள்விக்கு, 52 சதவீதம் பேர் தெரியும் என்கிறார்கள். 42 சதவீதம் பேர் ‘தெரியாது’ என்று கூறி இருக்கிறார்கள். மீதி உள்ள 6 சதவீதம் பேர் கட்டாயப்படுத்தி கேட்டால் சொல்வாள் என்று பதிலளித்திருக்கிறார்கள். அதேபோல் மனைவியின் செல்போன் பாஸ்வேர்டு பற்றிய கேள்விக்கு 56 சதவீதம் ஆண்கள் ‘தெரியும்’ என்கிறார்கள். 25 சதவீதம் பேர் ‘தெரியாது’ என்றும், 11 சதவீதம் பேர் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறி இருக்கிறார்கள். “நாங்கள் கேட்டாலும் அவள் சொல்வதில்லை” என்று 8 சதவீதம் பேர் கூறியுள்ளார்கள்.

    ‘டீன் ஏஜ்’ பருவத்தினர் சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்துவதும் சர்வேயில் கண்டறியப்பட்டிருக்கிறது. 26 சதவீதம் பேர் செக்ஸ் சார்ந்த விஷயங்களையும், செக்ஸ் ரீதியான தமாஷ்களையும் பகிர்ந்துகொள்வதாக சொல்கிறார்கள். காதலர்களும் சமூகவலைத்தளங்கள் மூலம் அரட்டை அடிப்பதை பிரதானமாக கொண்டிருக்கிறார்கள். அப்போது செக்ஸ் சார்ந்த விஷயங்களும் எட்டிப்பார்க்கத்தான் செய்கிறது. சர்வேயில் பங்கெடுத்த பெண்களில் 24 சதவீதம் பேர் காதலிக்கும் நபருக்கு தங்களின் நிர்வாண படங்களை அனுப்புவதாக கூறி அதிர்ச்சியடைய வைத்திருக்கிறார்கள். தங்களுடைய முகத்தை மறைத்து படம் அனுப்புவதாக 5 சதவீதம் பேர் கூறியுள்ளனர். 71 சதவீதம் பேர் அப்படிப்பட்ட படங்களை அனுப்புவதில்லை என்று கூறி சற்று நிம்மதி பெருமூச்சுவிட வைத்திருக்கிறார்கள்.

    குளிக்க செல்லும்போதுகூட சமூகவலைத்தளங்களில் தங்கள் பிரியமானவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். சிலர் அங்கிருந்துகொண்டே புகைப்படங்களை பகிர்வது, வீடியோ கால் செய்து பேசுவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். 7 சதவீதம் பேர் குளியல் அறையில் இருந்து வீடியோ காலில் காட்சிகளை பகிர்ந்துகொள்வதாக கூறி இருக்கிறார்கள். ஸ்கிரீன் ரெக்கார்டிங் போன்ற அப்ளிகேஷன்களை பயன்படுத்தி தனிமையில் இருக்கும்போது எடுக்கப்படும் காட்சிகளை பதிவுசெய்து பின்னர் எடிட்டிங் செய்து மற்றவர்களுக்கு அனுப்பலாம் என்பது நிறைய பெண்களுக்கு தெரியவில்லை.

    தனக்கு விருப்பமான அவர் மட்டும்தான் பார்த்து ரசிப்பதாக தவறாக நினைத்து விடுகிறார்கள். இந்த மாதிரியான ஆபாச வீடியோ பதிவுகளை எடுக்கும் ஆண்கள் முதலில் பாத்ரூமில் தங்களை அதுபோன்ற கோணத்தில் படம் பிடித்துக்கொள்கிறார்கள். அதனை காண்பித்து அதுபோன்ற கோணத்தில் தனக்கு விருப்பமான பெண்ணிடம் வீடியோ பதிவு செய்து அனுப்பும்படி சொல்கிறார்கள். அப்படி எடுக்கப்படும் படங்கள் பல கைமாறி அந்த பெண்ணுக்கு விபரீதத்தை உருவாக்கிவிடுகிறது.

    போலி கணக்குகள் தொடங்கி அதன் மூலம் தங்களுக்கு பிடிக்காதவர்களை அவமானப்படுத்தவும் நிறைய பேர் சமூகவலைத்தளங்களை பயன்படுத்துகிறார்கள். ‘உலகில் 9 கோடி பெண்கள் சைபர் கிரைம் குற்ற வழக்குகளால் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்’ என்று ஐ.நா.வின் பிராட்பேண்ட் கமிஷன் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இணையதளங்கள் மூலமாக பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் அதிகரித்து கொண்டிருக்கின்றன.

    இத்தகைய இணையதள வன்முறைகள் ஆண்களை விட பெண்களுக்கு 27 மடங்கு அதிகமாக நடக்கிறது. சமூகவலைத்தளங்களில் போலி கணக்குகள் தொடங்கி இருப்பதை சர்வேயில் 17 சதவீதம் பேர் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். பெற்றோருக்கு தெரியாமல் இருப்பதற்காகவும், தாங்கள் காதலிக்கும் நபருக்கு தெரியாமல் இருப்பதற்காகவும் போலி கணக்குகள் தொடங்கி இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். இது சமூக அமைப்பு ஒன்று மேற்கொண்ட சர்வே தகவலாகும்.

    சமூகவலைத்தளங்களை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவதே சமூகத்திற்கும், உபயோகிப்பவர்களுக்கும் நன்மை சேர்க்கும்.
    உலகின் சிறந்த சமூக வலைத்தளம் எது? என்று நடத்தப்பட்ட ஒரு புள்ளி விவர கணக்கெடுப்பில் வாட்ஸ்-ஆப் பேஸ்புக்கை விஞ்சிய வலைத்தளமாக வளர்ந்துள்ளது தெரியவந்துள்ளது.
    உலகின் சிறந்த சமூக வலைத்தளம் எது? என்று நடத்தப்பட்ட ஒரு புள்ளி விவர கணக்கெடுப்பில் வாட்ஸ்-ஆப் பேஸ்புக்கை விஞ்சிய வலைத்தளமாக வளர்ந்துள்ளது தெரியவந்துள்ளது.

    2018-ம் ஆண்டின் சமூகவலைத்தள பயன்பாட்டை வைத்து ஒரு புள்ளிவிவர கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் வாட்ஸ்ஆப் பேஸ்புக்கை விஞ்சி உலகின் சிறந்த சமூக தகவல்தொடர்பு வலைத்தளமாக பதிவானது. இது பேஸ்புக் நிறுவனத்தின் ஒரு அப்ளிகேசன் என்றாலும் அது பேஸ்புக்கை மிஞ்சியிருப்பது குறிப்பிடத்தக்க சாதனையாக கருதப்படுகிறது.

    கடந்த 2 வருடங்களில் வாட்ஸ்ஆப் பயன்பாடு 30 சதவீத அளவு வேகமாக உயர்ந்திருக்கிறது.

    மாதாந்திரம் தொடர்ந்து பயன்படுத்தும் ‘ஆக்டிவ்’ பயனாளர்களின் அடிப்படையில் வாட்ஸ்-ஆப் மெஸேஞ்சரில் பேஸ்புக்கைவிட அதிகமான எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் செயல்பாட்டில் உள்ளனர்.

    பேஸ்புக்கின் மற்றொரு சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமும் 2017-2018 காலத்தில் 35 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது.

    பேஸ்புக் மற்றும் பேஸ்புக் மெஸேஞ்சர் வலைத்தளங்கள் கடந்த 2 வருடங்களில் முறையே 20 சதவீதம் மற்றும் 15 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.

    சமூக வலைத்தளங்களின் பயன்பாட்டு நேரம் கடந்த 2 ஆண்டுகளில் 35 சதவீதம் உயர்ந்துள்ளது.

    மொபைல் போன்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதே சமூக வலைத்தளங்களின் வளர்ச்சிக்கும் முக்கிய காரணமாகும்.

    சமூக வலைத்தளத்தில் வீடியோக்களை ரசிப்பதும். பகிர்வதும் பெருகி உள்ளது. இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், டிக்டோக் போன்றவை அதிகம் பிரபலமான வீடியோ காட்சி பகிர்வுத் தளங்களாக தெரியவந்துள்ளன.

    இந்தியாவில் வாட்ஸ்ஆப் மெஸேஞ்சர் தளம் அதிக பயன்பாட்டில் முதலிடத்தையும், அடுத்ததாக இன்ஸ்டாகிராமும், மூன்றாவது இடத்தை பேஸ்புக்கும் பெற்றுள்ளன.

    அமெரிக்காவில் ஸ்னாப்சாட் தளம் முதலிடம் பிடித்திருக்கிறது.

    இலவச போன் அழைப்பு, இலவச மெஸேஜ் மற்றும் தொடர்பு எண் மூலம் தகவல் பரிமாற்றம் ஆகியவை வாட்ஸ்ஆப் பயன்பாட்டிற்கு முக்கிய காரணமாக தெரியவந்துள்ளன. மேலும் ‘என்ட் டூ என்ட் என்கிரிப்டடு’ பாதுகாப்பு அம்சமும் அதன் நம்பிக்கையை அதிகரித்துள்ளது.
    இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் இணையதளத்தில் காதலியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். #RishabhPant
    இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் இணைய தளத்தில் இளம் பெண்ணுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். அந்த இளம் பெண்ணின் பெயர் இஷா என்றும் அவர் ரிஷப் பந்த்தின் காதலி என்றும் தெரியவந்துள்ளது.

    ரிஷப் பந்த் தனது பதிவில் ‘நான் உன்னை மகிழ்ச்சியாக வைக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஏனெனில் நான் மகிழ்ச்சியாக இருக்க நீ தான் காரணம்’ என்று குறிப்பிட்டுள்ளார். அதேபோல் அந்த இளம்பெண்ணும் அதே படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ‘என்னுடையவர், என் ஆத்மா, எனது சிறந்த நண்பர், எனது வாழ்க்கையின் காதலர்’ என்று பதிவிட்டுள்ளார். #RishabhPant
    தற்போது, உடனடி தகவல் பரிமாற்றத்துக்காக பிரபலமாகி வரும் ‘வாட்ஸ்ஆப்’ எனும் தொழில்நுட்பத்திலும் பெண்களுக்கான பிரச்சனைகள் பல உள்ளன.
    சமூக வலைதளங்கள் மூலமாக பெண்களுக்கு நேரும் பிரச்சனைகளும் ஆபத்துகளும் அனைவரும் அறிந்த ஒன்றே! தற்போது, உடனடி தகவல் பரிமாற்றத்துக்காக பிரபலமாகி வரும் ‘வாட்ஸ்ஆப்’ எனும் தொழில்நுட்பத்திலும் பெண்களுக்கான பிரச்சனைகள் பல. ‘வாட்ஸ்ஆப் என்பது தனிநபர், தன் செல்போனில் உபயோகிக்கும் ஆப்ஸ்தானே… இதில் என்ன ஆபத்து வந்துவிடப் போகிறது?’ என்பது உங்களின் கேள்வியாக இருந்தால்… இதோ பதில் விரிவாக!

    என்னென்ன ஆபத்துகள்?


    தெரிந்தவரோ, தெரியாதவரோ… உங்களுக்குத் தொல்லை கொடுக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு, உங்களின் செல்போன் நம்பர் கிடைத்தால் போதும்… அவர்களால் உங்கள் ‘வாட்ஸ்ஆப்’ கணக்கைப் பார்க்கவும், அதிலிருக்கும் புகைப்படங்களை டவுன்லோடு செய்யவும் முடியும். உங்களுக்குத் தெரியாத நபர்கள்கூட, உங்கள் ஸ்டேட்டஸ் மூலம் உங்களைத் தொடர முடியும். போலி பெயருடன் ஒருவர் ஒரு குறிப்பிட்ட செல்போன் எண்ணிலிருந்து தோன்றும்போது, எதிர்முனையில் இருக்கும் நபர் இவர்தான் என்று உங்களால் உறுதிபடுத்த முடியாத சூழலில், அவர் உங்களைத் தொடர்புகொண்டு, உங்களது தகவல்களைப் பெற வாய்ப்புள்ளது. தோழிகளால் ‘வாட்ஸ்ஆப்’ குரூப்களில் உங்கள் பெயர் இணைக்கப்படும்போது, உங்கள் எண் அந்த குரூப்பில் ஏற்கெனவே உள்ள அனைவரிடமும் பகிரப்பட வாய்ப்புள்ளது.

    எப்படித் தவிர்க்கலாம்?

    பிரச்சனைகளைத் தவிர்க்க, ‘வாட்ஸ்ஆப்’ செட்டிங்கில் உள்ள, பிரைவஸி செட்டிங்கை மாற்றியமைக்க வேண்டும். அதாவது,  பிரைவஸி செட்டிங் பகுதிக்குச் சென்று உங்கள் புகைப்படம், ஸ்டேட்டஸ், ‘லாஸ்ட் ஸீன்’ ஆகியவற்றை, மைகான்டாக்ஸ் அல்லது ஒன்லி மீ ஆப்ஷன்களைப் பயன்படுத்தி பாதுகாத்துக்கொள்ளலாம்.



    நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்பதை அறிவுறுத்தும் ஸ்டேட்டஸ்களைப் பதிவு செய்யாதீர்கள். குரூப்களில் இணைவதிலும், அதில் அதிதீவிரமாக செய்திகளை அனுப்புவதிலும் எச்சரிக்கையாக இருங்கள். ‘ப்ளாக்’ (Block) ஆப்ஷனை பயன்படுத்தி, உங்களுக்குத் தொல்லை தருபவரை உங்கள் கணக்கைத் தொடராமல் தடுக்கும் வசதியும் இதில் உள்ளது. இப்படிப்பட்ட நபர்களின் செல்போன் எண்களை உங்கள் மொபைல் போனில் இருந்து நீக்கிவிட்டால்… போயே போச்!

    தெரிந்தவர்களோடு மட்டும் ‘வாட்ஸ்ஆப்’ பேசுவது எப்போதுமே பாதுகாப்பானது.

    ஆபத்துதவி ஆப்ஸ்!

    ஆபத்தில் சிக்கிக் கொள்ளும்போது, அதிலிருந்து தப்பிப்பதற்கு உதவக்கூடிய ஆப்ஸ் ஒன்று, ஆண்ட்ராய்டு போன்களில் பிரபலமடைந்துள்ளது. இது இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப பிரிவான ‘நாஸ்காம்’ அமைப்பு நடத்திய, பெண்கள் பாதுகாப்புக்கான ஆப்ஸ் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

    நீங்கள் ஏதாவது பிரச்சனையில் மாட்டிக்கொண்டால், ‘ஆபத்துதவி’யாக யார் இருப்பார்களோ அவருடைய செல்போன் நம்பர் மற்றும் இ-மெயில் முகவரியை இந்த ஆப்ஸில் பதிவு செய்ய வேண்டும். ஆபத்து நேரத்தில் செல்போன் திரையில் இருக்கும் இந்த ஆப்ஸை விரல் நுனியில் அழுத்தினாலே, வாய்ஸ் ரெக்கார்டர் வேலை செய்ய செய்ய ஆரம்பித்துவிடும். 45 விநாடிகள் பதிவானதும், நீங்கள் இருக்கும் இடத்தின் விவரத்தோடு குறுந்தகவல் மற்றும் மின்னஞ்சல் இரண்டும், அந்த ஆபத்துதவிக்கு போய்ச் சேர்ந்துவிடும். ஒருவேளை நீங்கள் அப்போது இருப்பது இன்டர்நெட் வசதி இல்லாத இடமாக இருந்தால், குறுஞ்செய்தி மட்டும் சென்று சேர்ந்துவிடும்.

    இளம்பெண்கள் பலரும் இந்த புகைப்படம் மோகம் என்னும் மாயவலையில் சிக்கியுள்ளனர். புற அழகு மட்டுமே முக்கியம் என்ற மனப்போக்கு இன்றைய பெண்களிடம் காணப்படுகிறது.
    புகைப்படம் என்பது நமது ஞாபகங்களை உறைய வைக்கும் ஒரு அற்புதமான அதிசயம். பழைய புகைப்படங்களை பார்க்கும் போது நம்மையும் அறியாமல் அதில் மூழ்கி கடந்த காலத்திற்கு சென்று விடுவதுண்டு. அந்த காலத்தில் வீட்டின் வரவேற்பறையில் வரிசையாக தொங்க விடப்பட்டிருக்கும் கருப்பு வெள்ளை படங்கள் பல கதைகளைச் சொல்லும்.

    பின்னாட்களில், போட்டோ ஸ்டுடியோவிற்கு குடும்ப சகிதமாக சென்று விறைப்பாக நின்று போஸ் கொடுத்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அனேகமாக எல்லோருடைய வீட்டிலும் ஞாபக சின்னங்களாய் வீற்றிருக்கும். அதன் பின்னர் கேமராக்கள் மூலம் நாமே புகைப்படம் எடுத்து பிரிண்டு போட்டு ஆல்பங்களாக சேகரித்து வைக்கும் பழக்கமும் வெகு காலமாக இருந்து வருகிறது. வீட்டிற்கு விருந்தினர் என்று யார் வந்தாலும் அந்த ஆல்பங்களை காட்டி பரவசப்பட்டு கொள்வதும் நம்மிடையே பொதுவாக காணப்படும் குணமாகும்.

    இன்றைக்கு செல்போனிலேயே புகைப்படம் எடுத்து கொள்ளும் வசதி வந்தாலும் வந்தது. நிற்பது, நடப்பது, சாப்பிடுவது, கொட்டாவி விடுவது என்று நம்முடைய ஒவ்வொரு அசைவையும் புகைப்படம் எடுக்க தொடங்கிவிட்டோம். போட்டோ எடுப்பதால் ஆயுசு குறையும் என்ற அந்த கால நம்பிக்கை மறைந்து பிறவி எடுத்ததே புகைப்படம் எடுப்பதற்குத் தான் என்றாகிவிட்டது இந்த காலத்தில்.

    இளசுகள், பெரியவர்கள் என்ற பாகுபாடின்றி அனைவருமே இந்த புகைப்பட மோகத்தில் சிக்கி சீரழிந்து வருகின்றனர்.

    வித்தியாசமாக செல்பி எடுத்து நண்பர்களிடையே பாராட்டு பெறவேண்டும் என்று மலை உச்சியில் தலைகீழாய் தொங்குவது, உயரமான நீர்வீழ்ச்சியின் மேலே ஒற்றைக்காலில் நிற்பது, ஓடுகிற மோட்டார் சைக்கிள் நின்று கொண்டு சவாரி செய்து போஸ் கொடுப்பது, மிக உயரமான கட்டிடங்களின் மேல்தளத்தின் விளிம்பில் அமர்ந்து போட்டோ எடுப்பது என்று ஆபத்தை உணராமல் விபரீத சாகசம் செய்ய ஆரம்பித்து விட்டனர் இன்றைய இளம் தலைமுறையினர்.

    இதனால் பல்வேறு உயிர் இழப்புகளும், விபத்துகளும் நிகழ்ந்த போதும் இம்மாதிரி செயல்கள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இளம்பெண்கள் பலரும் இந்த புகைப்படம் மோகம் என்னும் மாயவலையில் சிக்கியுள்ளனர். புற அழகு மட்டுமே முக்கியம் என்ற மனப்போக்கு இன்றைய பெண்களிடம் காணப்படுகிறது. தங்களை விதவிதமாக அலங்கரித்துக் கொண்டு போட்டோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதால் ஏற்படும் ஆபத்துகள் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதற்கு எத்தனை லைக்குகள் வந்திருக்கின்றன, என்னென்ன கமெண்டுகள் வந்திருக்கின்றன என்று பார்ப்பதிலேயே பொழுதை கழித்து வருகின்றனர்.



    இளைஞர்களின் இந்த மோகத்திற்கு தீனி போடுவதற்காகவே புகைப்படம் பதிவிடுவதற்கெனவே சில சமூக வலைத்தளங்களும் இயங்குகின்றன. இதில் காலவரையறை இன்றி நாளும் பொழுதும் போக்குவதால் படிப்பில் கவனம் சிதறுகிறது. மேலும் ஓவியம் வரைவது, பாடுவது, நடனம் ஆடுவது, பேச்சுப் போட்டி போன்ற அவர்களுக்கு உரித்தான தனித்திறமைகளையும் மறந்து தங்கள் சுயத்தையும் இழந்து மந்த நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

    நல்ல அதிகமான பிக்சல் கொண்ட கேமராக்கள் உள்ள செல்போன்களை வாங்குவதும் அதிகரித்து வருகிறது. இவ்விதமான போன்களை கொண்டோ அல்லது நமது முகத்தை மாசு மருவின்றி காட்டக்கூடிய மொபைல் செயலிகள் கொண்டோ போட்டோ எடுத்து தனக்கென ஒரு போலியான பிம்பத்தை தோற்றுவித்துக் கொள்கின்றனர்.

    கருப்பான முகத்தை வெண்மையாக்கி, சிறிய கண்களை பெரிதாக்கி, பருக்கள் மற்றும் தழும்புகளை நீக்கி, முகத்தையும் உடலையும் மெலியச் செய்து காட்டுவது என தங்கள் அடையாளத்தையே முழுவதுமாக மாற்றி வழுவழுப்பான முகத்துடன் பேரழகாக காட்டிக் கொண்டு போலியான உலகத்தில் வாழுகிறார்கள்.

    திருமணத்திற்கு வரன் தேடும் வலைத்தளங்களில் இது போன்ற புகைப்படங்களை பதிவிடுகின்றனர். இதனால் நேரில் பார்ப்பதற்கும் நிழற்படத்துக்கும் நிறைய வேறுபாடு இருப்பதால் பெண்ணையோ, ஆணையோ நிராகரிப்பதும் நடந்து வருகிறது. அந்த நேரத்தில் ஏற்படும் மனஉளைச்சலும் வேதனையும் மிக அதிகம். பெண்கள் தங்கள் புகைப்படங்களை எல்லோரும் பார்க்கும்படி பகிருவதால் ஏற்படும் ஆபத்துகளை பற்றி எண்ணிப் பார்க்கவேண்டும். அந்த புகைப்படங்களை யார் வேண்டுமானாலும் தங்களுடைய போனில் தரவிறக்கம் செய்யலாம். அதை எப்படி வேண்டுமானாலும் ‘மார்ப்பிங்’ மூலம் மாற்றம் செய்து தவறான நோக்கத்திற்கு பயன்படுத்த முடியும். இதனால் அவர்களுடைய எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும்.

    இது போன்ற பல விஷயங்களை செய்திகளில் கேள்விப்பட்டாலும் அதைப் பற்றி கண்டுகொள்ளாமல் இருக்கும் அலட்சியப் போக்கே காணப்படுகிறது. ஆபத்து வருமுன் தற்காத்து கொள்வதே புத்திசாலித்தனம். இது மட்டுமின்றி, பள்ளிக் குழந்தைகளை சீருடையுடன் புகைப்படம் எடுத்து முகநூலில் பதிவிடுவது முற்றிலும் தவிர்க்கப்படவேண்டும். குழந்தை என்ன வகுப்பு படிக்கிறது, என்ன பெயர் என்று எல்லா தகவல்களையும் நாமே வலிய வந்து கொடுக்கிறோம். இதனால் குழந்தைக் கடத்தல் போன்ற சம்பவங்கள் அதிகமாக நடந்து வருகின்றன. தொழில்நுட்ப வளர்ச்சி தவிர்க்க முடியாதது அதை சரியாக பயன்படுத்திக் கொண்டால் தவறில்லை.

    புகைப்படம் எடுப்பது, ரசிப்பது என்பதெல்லாம் நம் வாழ்வோடு ஒன்றி விட்ட விஷயங்கள். தேவையான அளவு எடுத்துக் கொள்வதில் தவறில்லை. நமது புகைப்படங்களை சமூக வலைத்தளங்கள் மூலம் பகிர விரும்பினால் அதை நம் நம்பகமான நண்பர்களிடம் மட்டுமே பகிரக் கூடிய பாதுகாப்பு அம்சங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நமது பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்கும் என்று தெரிந்த எந்த ஒரு செயலையும் செய்யாமல் இருப்பதே நல்லது.

    சுற்றி இருக்கும் நிஜ உலகத்தை மறந்து இந்த நிழல்திரைக்குள் சிக்கிக் கொண்டால் நமது பொன்னான நேரமும் வீணாகி, விபரீதமும் விளைகிறது. அழகியல் சார்ந்த உணர்வுகள் இருப்பது அவசியம் தான். வாழ்க்கையை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்வதும் ரசனைகளே. ஆயினும் எதிலும் எல்லை மீறாமல் எச்சரிக்கையாக இருப்பது நன்மை பயக்கும். அது புகைப்பட போதைக்கும் பொருந்தும்.

    விஷ்வசாந்தி சரவணகுமார், எழுத்தாளர்.
    ஒரு குறிப்பிட்ட ஆப்பை உருவாக்குபவர் தவறாக பயன்படுத்தினால், உங்களது அந்தரங்க தகவல்களின் நிலை என்னவாகும் என்று கொஞ்சம் நினைத்து பாருங்கள்.
    வெறும் அழைப்புகள், குறுஞ்செய்திகள் என்பதை தாண்டி வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் பயன்படக்கூடிய அத்தியாவசியமான ஒன்றாக கைபேசிகள் உருவெடுத்துள்ள அதே வேளையில், இதுவரை நாம் அறியாத பிரச்சனைகளின் பிறப்பிடமாகவும் கைபேசிகள் உள்ளன.

    குறிப்பாக, உங்களது கைபேசியில் எந்த ஒரு செயல்பாட்டையும் மேற்கொள்வதற்கு ஆண்ட்ராய்டு பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிளின் ஆஃப் ஸ்டோருக்கோ சென்று செயலிகளை பதிவிறக்கம் செய்கிறீர்கள் தானே? என்றாவது நீங்கள் பயன்படுத்தும் செயலியை இன்ஸ்டால் செய்வதற்கு முன் அது கேட்கும் அனுமதிகளை பார்த்தீர்களானால் அதிர்ச்சியடைய நேரிடும்.

    உதாரணமாக, புகைப்படத்தை எடிட் செய்யும் ஒரு பிரபல செயலியை நீங்கள் இன்ஸ்டால் செய்வதாக வைத்துக்கொள்வோம். அப்போது,, கேமரா, தொடர்பு எண்கள், லொகேஷன், ஸ்டோரேஜ், போன்ற பலவற்றிற்கு அனுமதியளித்தால்தான் அந்த செயலியை செயல்படுத்த முடியும் என்கிறது. ஆனால், இந்த இடத்தில் கூர்ந்து கவனித்தீர்களானால், புகைப்படத்தை எடிட் செய்யும் இந்த செயலிக்கு, புகைப்படம், தொடர்பு எண்கள், ஸ்டோரேஜ் ஆகியவை அவசியம்தான். ஆனால், முற்றிலும் தேவையற்ற லொகேஷன், உங்களது இருப்பிடத்தை கண்டறிந்து அதன் மூலம் மிகச் சரியான விளம்பரங்களை உங்களது கைபேசிக்கு அனுப்பி பணம் சம்பாதிப்பதற்காக அனுமதி கேட்கப்படுகிறது.

    இதேபோன்று, பல்வேறு செயலிகளில், முற்றிலும் சம்பந்தமேயில்லாத தகவல்கள் கேட்கப்படுகின்றன. கண்மூடித்தனமாக செயலிகளை இன்ஸ்டால் செய்பவர்கள், அதிலுள்ள ஆபத்தை உணராமல் ஜிபிஎஸ், நெட்ஒர்க் செயல்பாடு, வைஃபை, மற்ற ஆஃப்களின் செயல்பாட்டை கண்காணித்தல் & முடக்குதல், ஐஎம்இஐ எண், கைபேசியை அணையாமல் இருக்க செய்தல், தகவல்களை மாற்ற/ நீக்க அனுமதி போன்ற பல்வேறு தகவல்களுக்கு ஒப்புதல் கொடுத்து செயலியோடு பிரச்சனையையும் இலவசமாக வாங்கி கொள்கின்றனர்.



    உங்களது கைபேசியில் இருக்கும் புகைப்படங்கள், காணொளிகள், ஆவணங்கள் போன்றவற்றை உங்களுக்கு தெரியாமலேயே அந்த செயலிகள் தனது சர்வர்களில் பதிவேற்றம் செய்துகொள்வதற்கு வாய்ப்புள்ளது. இதன் மூலம் உங்களது கைபேசியில் இருக்கும் புகைப்படங்கள், காணொளிகள், ஆவணங்கள் போன்றவற்றை உங்களுக்கு தெரியாமலேயே அந்த செயலிகள் தனது சர்வர்களில் பதிவேற்றம் செய்துகொள்வதற்கு வாய்ப்புள்ளது.

    கைபேசி செயலிகளை போன்றே ஃபேஸ்புக்கை முதலாக கொண்டு ஒரு இணையதளத்தில் கணக்கை ஆரம்பிக்கும்போதோ அல்லது கேம் விளையாடும்போது நீங்கள் அந்தரங்கமாக வைத்திருக்கும் தகவல்கள், பதிவுகள், நண்பர்களின் தகவல்கள், உங்களது நடவடிக்கைகள் போன்றவற்றை பயன்படுத்துவதற்கு ஏதோவொரு செயலின் வடிவமைப்பாளருக்கு அதிலுள்ள ஆபத்து தெரியாமல் பலரும் அனுமதி தருகிறார்கள்.

    இதுபோன்ற செயலிகள், சில நேரங்களில் உங்களது கணக்கை பயன்படுத்தி உங்களது நண்பர்களுக்கு நீங்கள் அனுப்பியதாக தவறான காணொளிகள்/ புகைப்படங்கள்/ இணையதள இணைப்புகளை பகிரும் சம்பவங்கள் பரவலாக நடந்து வருகின்றன.

    ஒரு செயலியையோ, மென்பொருளையோ, இணையதள கணக்கையோ முதன் முதலாக பயன்படுத்துவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் நூற்றுக்கணக்கான பக்கங்களை கொண்ட விதிமுறைகளை படிக்காமல், அனைத்திற்கும் ‘அக்சஃப்ட்’ கொடுப்பவர்களுக்கு என்றாவது ஒருநாள் தங்களது அந்தரங்க தகவல்களுக்கு பாதிப்பு ஏற்படும்போதுதான் அதன் வீரியம் புரிகிறது.

    மேற்கண்ட தகவல்களை ஒரு குறிப்பிட்ட ஆப்பை உருவாக்குபவர் தவறாக பயன்படுத்தினால், உங்களது அந்தரங்க தகவல்களின் நிலை என்னவாகும் என்று கொஞ்சம் நினைத்து பாருங்கள். 
    டிஜிட்டல் பரிவர்த்தனை பாதுகாப்பானதா? எனும் கேள்வி இன்றைக்கு மலையேறிவிட்டது. அதிலிருக்கும் ஆபத்துகளை அங்கீகரித்துக் கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கி மக்கள் முன்னேறிவிட்டார்கள்.
    நமக்கு முந்தைய தலைமுறையினர் சட்டைப்பையில் ஒரு சின்ன நோட்புக்கும், ஒரு பேனாவும் சொருகி வைத்துக் கொண்டு திரிந்தார்கள். அந்த புத்தகம் தான் அவர்களுடைய ஒட்டு மொத்த கணக்கு வழக்குகளுக்கு மான ஆதாரம். அதில் தான் விலாசங்களும், தொலைபேசி எண்களும், கடன் பாக்கிகளும் எழுதப்பட்டிருக்கும். இன்றைக்கு அது டிஜிட்டல் மயமாகிவிட்டது. நமது கையில் இருக்கும் ஸ்மார்ட்போன்கள் தான் நமது நடமாடும் தகவல் பெட்டகம். தொலைபேசி எண்களானாலும் சரி, தகவல்களானாலும் சரி, வங்கிக்கணக்கு விஷயங்களானாலும் சரி எல்லாமே அந்த கையடக்க பெட்டிக்குள் டிஜிட்டல் வடிவத்தில் இளைப்பாறுகின்றன.

    டிஜிட்டல் பரிவர்த்தனை பாதுகாப்பானதா? எனும் கேள்வி இன்றைக்கு மலையேறிவிட்டது. அதிலிருக்கும் ஆபத்துகளை அங்கீகரித்துக் கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கி மக்கள் முன்னேறிவிட்டார்கள். அது தருகின்ற வசதிக்காக, சில சவால்களை எதிர்கொள்ளவும் அவர்கள் தயாராக இருக்கின்றனர். உதாரணமாக நீண்ட நெடிய கியூவில் சில மணி நேரங்கள் காத்திருப்பதை விட ஒரு சின்ன ஆபத்து வரலாம் எனும் எச்சரிக்கை உணர்வுடன் ஆன்லைனில் பில் கட்டுவதையே மக்கள் இன்று விரும்புகின்றனர். தியேட்டரில் கவுண்டர் முன்னால் அதிகாலையிலேயே நின்று மண்டை உடைய, ரத்தம் சொட்டச் சொட்ட முதல் காட்சி டிக்கெட் வாங்கியதெல்லாம் வரலாறுகளாகிவிட்டன. இன்று ஏதோ ஒரு ஆப் தான் நமக்கு டிக்கெட்களை வசதியாய் வாங்கித் தருகிறது.

    வணிகம் எப்போதும் மக்களுடைய வசதிக்கு ஏற்ப கடைகளை விரித்துக் கொண்டே இருக்கும். இன்றைக்கு மக்களின் டிஜிட்டல் பயன்பாட்டை முன்னிறுத்தி தான் ஏகப்பட்ட புதிய பிஸினஸ் முறைகள் கிளர்ந்தெழுந்து கொண்டிருக்கின்றன. டிஜிட்டலைத் தொடாத எந்த தொழிலும் இனிமேல் வெற்றி பெற முடியாது என்பது எழுதப்படாத விதி. அது உணவகம், மருத்துவம் போன்ற அடிப்படை விஷயங்களானாலும் கூட. அந்தவகையில் டிஜிட்டல் வாலெட்கள் இன்றைக்கு வசீகர அம்சமாக மாறியிருப்பதற்கும், புதிது புதிதாய் முளைத்தெழும்புவதற்கும் அது தான் காரணம். உதாரணமாக பே டி எம், மொபிவிக், பே-யு, கூகுள் பே, ஆப்பிள் பே, ஓலா மணி என ஏகப்பட்ட வாலெட் சேவைகள் இன்றைக்கு களத்தில் குதித்திருக்கின்றன. அவற்றில் சில, மிக வெற்றிகரமாக காலூன்றியும் இருக்கின்றன.

    பயனர்களுக்கு எதைப் பயன்படுத்தலாம்?, எது நல்லது?, எது ஆபத்தில்லாதது? எனும் கேள்விகள் எழுவது சகஜம். குறிப்பாக சில டிஜிட்டல் வாலெட் நிறுவனங்கள் ஏகப்பட்ட தள்ளுபடிகளை அள்ளி வீசுகின்றன, ஏகப்பட்ட ‘கேஷ் பேக்’ ஆபர்களையும் கொட்டித் தருகின்றன. டிஜிட்டல் வாலெட்டுகளின் மூலம் பணம் அனுப்பினாலும், வரப்பெற்றாலும் கேஷ்பேக் சலுகைகள் கிடைக்கின்றன. கூடவே ‘ஸ்கிராட்ச் கார்ட்’ ஆபர்களும் கிடைப்பதால், டிஜிட்டல் வாலெட்டை மக்கள் அதிகமாக பயன் படுத்துகின்றனர்.

    இதற்கிடையில் இந்த இணையதளத்தில் வாங்கினால் இவ்வளவு சலுகை, அந்த இணையதளத்தில் அவ்வளவு ஆபர்... என கவர்ச்சி வலைகள் நம்மை சூழ்ந்து கொண்டிருக்கின்றன. ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். ‘லாபம்’ எனும் விஷயம் இல்லாமல் எந்த நிறுவனமும் அதன் சுண்டு விரலைக் கூட பயனர்களை நோக்கி நீட்டுவதில்லை. பெரும்பாலான டிஜிட்டல் வாலெட் நிறுவனங்களும், மொபைல் அப்ளிகேஷன்களும் அப்படித் தான்.

    இவை பயனர்களுக்கும், விற்பனையாளர்களுக்கும் இடையே ஒரு பாலம் போல இருக்கின்றன. பயனர்களின் தேவையை, விற்பனையாளர்களிடமிருந்து வாங்கி தங்கள் மூலமாக பரிவர்த்தனை செய்கின்றன. இந்த நிறுவனங்களுக்கு லாபம் பல வகைகளில் வருகின்றன. ஒன்று, விற்பனையாளர்களிடமிருந்து ஒரு தொகையை கமிஷனாகப் பெறுகின்றன. சில சேவைகளுக்கு பயனர்களிடமிருந்தே கட்டணத்தைப் பெறுகின்றன. இன்னொன்று தங்கள் மூலமாக நடைபெறும் மொத்த பரிவர்த்தனைகளின் மூலம் சேரும் பல கோடி ரூபாய்களை ஒரு குறிப்பிட்ட காலம் தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்து பல இடங்களில் முதலீடு செய்கின்றன.

    வங்கியின் மூலம் நடக்கவேண்டிய பணப்பரிமாற்றம், தனியார் நிறுவனங்களின் வழியே நடப்பதனால், அதில் கிடைக்கும் லாபத்தின் சில பங்கை நமக்கு ‘ஆபர்’ என்ற பெயரில் கொடுக்கிறார்கள். இப்படி சின்ன மீனை ‘ஆபர்’ என்ற பெயரில் அள்ளி வீசுவது, ‘பெரிய பரிவர்த்தனை’ என்ற மீனை பிடிக்கத்தான். ஏனெனில் ஒருசில ஆயிரங்களை பரிமாற்றம் செய்யும்போதே கொள்ளை லாபம் கிடைக்கிறது என்றால், பரிவர்த்தனை லட்சங்களை தொட்டால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்ற தொலைநோக்கு பார்வையில்தான் நமக்கு ஆபர்கள் கிடைக்கின்றன. இந்த ஆபர்களுக்கு நமக்கு டிஜிட்டல் பணமாகவே கிடைக்கிறது. உதாரணமாக, உங் களுக்கு 300 ரூபாய் பணம் திரும்ப வருகிற தெனில் அது உங்கள் பாக்கெட்டில் பணமாக வருவதில்லை. ஏதோ ஒரு டிஜிட்டல் வடிவத்தில் தான் தருகின்றன.

    உண்மையில் அந்த பணம் நீங்கள் பயன்படுத்தும் வரை அவர்களுடைய கட்டுப்பாட்டில் தான் இருக்கும். ஒரு கோடி பேருக்கு 300 ரூபாய் கிடைத்தால் அந்த முன்னூறு கோடி ரூபாயும் உண்மையில் அவர்களிடம் தான் இருக்கும். இந்த பணத்தை வைத்திருக்கின்ற வங்கியும் நிறுவனத்துக்கு வட்டி கொடுக்கும். அந்த பணத்தை முதலீடு செய்யும்போதும் கணிசமான லாபம் கிடைக்கும். அந்த பரிவர்த்தனைகளுக்கும் நல்ல கட்டணம் கிடைக்கும். இவையெல்லாம் போக விளம்பரங்களை தளங்களில் வெளியிடு வதன் மூலமும் பணம் கிடைக்கும்.

    இந்த நிறுவனங்களைப் பயன்படுத்துவதில் ஏதேனும் ஆபத்து உண்டா? என்றால் சில ஆபத்துகள் உண்டு என்பதே பதில். உதாரணமாக, இவை உங்களுக்கும் உங்களுடைய வங்கிக்கும் இடையேயான பாலமாக இருக்கின்றன. உங்களுடைய முக்கியமான தகவல்கள் இந்த இடை நிறுவனத்திற்குக் கிடைக்கிறது. அவற்றை அவை தவறாகப் பயன்படுத்துவதில்லை, காரணம் நீங்கள் அவர்களுடைய கஸ்டமர். ஆனால் அவர்களிடமிருந்து அவை திருடப்படலாம், ஹேக்கர்களால் கடத்திச் செல்லப்படலாம் எனும் ஆபத்து உண்டு.



    எனினும், இன்றைய நவீன தொழில்நுட்பங்கள் இத்தகைய நிறுவனங்களின் பாதுகாப்பையும் ‘என்கிரிப்ஷன் டெக்னாலஜி’ மூலமாக உறுதி செய்கின்றன. இதன்மூலம் தகவல்கள் திருடப்படுவது குறையும். ஆயிரம் தான் இருந்தாலும், டிஜிட்டல் பயன் பாட்டுக்கே உரிய ஆபத்துகள் இவற்றிலும் உண்டு. டிஜிட்டலை முழுமையாய் ஒதுக்கி விடவே முடியாது எனும் காலகட்டத்தில் நாம் வாழ் கிறோம். விரும்பியோ, விரும்பாமலோ அந்த சூழல் உருவாகியிருக்கிறது. இத்தகைய சூழலில் பாதுகாப்பாய் இருக்க இந்த அடிப்படை விஷயங்களை மனதில் கொள்ளுங்கள்:

    1. டிஜிட்டல் வாலெட் அப்ளிகேஷன்களில் சிரமம் பார்க்காமல் மிகவும் கடினமான பாஸ்வேர்டு பயன் படுத்துங்கள். அதை அடிக்கடி மாற்றுங்கள்.

    2. உங்கள் ஸ்மார்ட்போன் எப்போதும் லாக் செய்யப்பட்ட நிலையிலேயே இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

    3. பொது வை-பைகளில் அதை இணைக்காதீர்கள். வீட்டை விட்டு வெளியே வந்தால் வை-பையை அணைத்தே வையுங்கள்.

    4. புதிதாக வருகின்ற பாதுகாப்பு அப்டேட்களை உதாசீனம் செய்யாதீர்கள்.

    5. எந்த ஆப் பயன்படுத்தினாலும் அதை பயன்படுத்தியபின் அதை விட்டு முழுமையாக வெளியே வாருங்கள்.

    6. அடிக்கடி உங்களுடைய கணக்கு வழக்குகளைப் பார்த்து ஏதேனும் சந்தேகப்படும்படியான பரிவர்த்தனை நடந்திருக்கிறதா என கவனியுங்கள்.

    7. பாதுகாப்பற்ற ஆப்களை உங்கள் ஸ்மார்ட்போனில் தரவிறக்கம் செய்யாதீர்கள்.

    8. சிறப்பு வைரஸ் பாதுகாப்பு மென் பொருட்களைப் பயன்படுத்துங்கள்.

    9. சந்தேகத்திற்கிடமான தளங்களில் ஆன்லைன் பரிவர்த்தனை செய்யாதீர்கள்.

    10. உங்கள் பாஸ்வேர்டு, பயனர் பெயர், மின்னஞ்சல் பாஸ்வேர்டு போன்ற அனைத்தையும் பாதுகாப்பாகவே வைத்திருங்கள்.

    பரிவர்த்தனை முறைகள்

    யூ.பி.ஐ. UPI (Unified platform interface), பி.எச்.ஐ.எம். BHIM (Bharath Interface for Money), ஐ.எம்.பி.எஸ். IMPS (Immediate Payment Service), பி.பி.பி.எஸ். BBPS (Bharat Bill Payment System) போன்றவையெல்லாம் இந்திய அரசின் கீழ் இயங்கும் நிறுவனங்களின் தயாரிப்புகள். இவற்றில் யூ.பி.ஐ. (UPI) இப்போது மிகவும் பிரபலமாகி வருகிறது. உங்களுடைய மொபைல் எண்ணையோ, பயனர் சொல்லையோ மட்டும் வைத்துக் கொண்டு பணப் பரிமாற்றம் செய்யும் எளிய முறை இது. இதன் மூலம் நமது வங்கிக் கணக்கு எண்ணையோ, தகவல்களையோ எங்கும் கொடுக்க வேண்டிய தேவையில்லை. உடனடியாகப் பணப் பரிமாற்றம் நடக்கும். இது பாதுகாப்பானது, ஆர்.பி.ஐ-யின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் செயல்படக் கூடியது என்பதால் நம்பிக்கையானது. இந்திய அரசின் டிஜிட்டல் கனவுக்குக் கைகொடுக்கப் போவது இது தான்.

    எந்த ஆப்கள் சிறந்தது?


    எல்லா வங்கிகளும் தங்களுக்கென தனியே மொபைல் ஆப்களை வைத்திருக்கின்றன. முடிந்தவரை அவற்றையே பயன் படுத்துங்கள். ‘தேர்ட் பார்ட்டி’ எனப்படும் வெளி ஆப்கள் மூலமாக உங்களுடைய வங்கியைத் தொடர்பு கொள்ளும் ஆப்களை முடிந்தவரை நீங்கள் தவிர்க்கலாம். உங்களுடைய வாகனத்தை முறையான சர்வீஸ் சென்டரில் விடுவதற்கும், ஏதோ ஒரு கடையில் சர்வீஸுக்கு விடுவதற்கும் இடையேயான வித்தியாசம் என இதைப் புரிந்து கொள்ளலாம்.

    பாதுகாப்பான அப்ளிகேஷனை தேர்ந்தெடுங்கள்

    இது டிஜிட்டல் யுகம். இன்னும் சிறிது காலத்தில் ஏ.டி.எம். எனும் ஒரு விஷயமே அபூர்வமாகிவிடும். எல்லாமே மொபைல் மூலமாக அல்லது அணியும் தொழில்நுட்பம் மூலமாக நடக்கின்ற பரிவர்த்தனைகளாக மாறிவிடும். விரும்பியோ, விரும்பாமலோ இந்த டிஜிட்டல் பரிவர்த்தனையில் அனைவரும் இணையும் நிலை உருவாகி வருகிறது. எனவே பாதுகாப்பான, நல்ல ஆப்களை தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தத் தொடங்குவது நல்லது.

    சேவியர்
    பிரதமர் நரேந்திர மோடி கம்ப்யூட்டர் குற்றங்களை தடுப்பது குறித்த புதிய இணையதளத்தினை தொடங்கி வைத்தார். #PMModi
    புதுடெல்லி:

    குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில் போலீஸ் டி.ஜி.பி.க்களுக்கான 3 நாள் மாநாடு நேற்று நடைபெற்றது. மாநாட்டில் கம்ப்யூட்டர் மூலமாக மேற்கொள்ளப்படும் பணமோசடி உள்ளிட்ட குற்றங்களை (சைபர் கிரைம்) தடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு, கம்ப்யூட்டர் குற்றங்களை தடுப்பது குறித்த புதிய இணையதளத்தை தொடங்கி வைத்து பேசினார்.

    அப்போது அவர், ‘இந்த இணையதளம் மூலமாக அனைத்து கம்ப்யூட்டர் மூலமாக நடத்தப்படும் குற்றங்களை அறிந்து கொள்ள முடியும். சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதில் போலீசார் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். நவீன தொழில்நுட்பமான இணையதளம், செயலிகள் (ஆப்) மூலமாக போலீஸ் பற்றிய தகவல்களையும், குற்றச்செயல்களை தடுப்பது குறித்தும் அனைத்து தரப்பினரும் அறிந்து கொள்ள செய்ய வேண்டும்’ என்று தெரிவித்தார். #PMModi
    இன்று இணையதளத்தில் மகிழ்ச்சி என்ற பெயரில் வேடிக்கை செய்து தங்கள் மதிப்பையும், அடையாளத்தையும் அலங்கோலப்படுத்திக் கொள்ளும் அவலங்கள் அரங்கேறுகிறது.
    நமது தோற்றமே நம்மை பிறருக்கு அறிமுகம் செய்கிறது. ஆளுமை வெற்றியை பெற்றுத் தருவதாக இருந்தாலும், அதை முந்தியதாக நம்மை பிறருக்கு அடையாளம் காட்டுவது நம் தோற்றமே. நன்மதிப்பு பெற்றுத் தருவதாக அமைய வேண்டும் நமது தோற்றம். இன்று இணையதளத்தில் மகிழ்ச்சி என்ற பெயரில் வேடிக்கை செய்து தங்கள் மதிப்பையும், அடையாளத்தையும் அலங்கோலப்படுத்திக் கொள்ளும் அவலங்கள் அரங்கேறுகிறது. மாணவர்களான நீங்கள் உங்கள் ’இமேஜை’ (மதிப்பை) இணைய வேடிக்கையில் இழந்துவிடாமல் இருக்க இதை கொஞ்சம் கவனிங்க...

    தோற்றத்தின் அடிப்படையில் ஒருவரை மதிப்பிடுவது தவறு என்றாலும், தோற்றம் ஒருவருக்கு அடையாளமாக இருக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது. உடையில் அழுக்கு இருப்பது நீங்கள் கறை படிந்தவர் என்பதன் அடையாளம் அல்ல. ஆனால் உடையில் சுருக்கங்கள் இருந்தால் நீங்கள் ஆடை விஷயத்தில் அதிக அக்கறையற்றவர் என்பதை காட்டிக் கொடுக்கும். அது உங்களைப் பற்றிய மதிப்பை மாற்றக்கூடியது. சுகாதாரமற்றவர் என்று எதிர்மறையாக எண்ண வைக்கக்கூடியதல்லவா? எனவே உடையில் கவனம் செலுத்துவது அவசியமே.

    அணியும் உடையில் அவ்வளவு கவனம் தேவையென்றால், அகிலமே கவனிக்கும் இணைய வெளியில் எவ்வளவு ஒழுக்கம் பேண வேண்டும் என்பது மிக மிக முக்கியம். ஏனெனில் உங்களின் சகல நடவடிக்கைகளையும் இந்த உலகம் இணையத்தின் வழியே கூர்ந்து கவனிக்கிறது. அதன் அடிப்படையில் உங்களைப் பற்றிய கருத்துகளை பார்ப்பவர்கள் தாங்களாகவே உருவாக்கிக் கொள்கிறார்கள். அது நல்லவிதமானதா, மோசமானதா என்பதை உங்களின் இணைய செயல்பாட்டைப் பொறுத்தது.

    ஆம், உங்கள் இணைய செயல்பாடு உங்களுக்கென்று ஒரு இணைய ‘இமேஜை’ உருவாக்கித் தருகிறது. அது உங்கள் நட்பு வட்டத்தை தாண்டியது என்பதை நீங்கள் உணர வேண்டும். நண்பர்களிடம்தானே சகஜமாக இருக்கிறோம் என்ற வகையில் என்று அவசியமற்ற பதிவுகளை வெளியிடுவது உங்கள் இமேஜை வேறுவகையில் மதிப்பிடவும், வாழ்க்கையை மாற்றி அமைக்கவும் கூடியது.

    நீங்கள் பொது வெளியில் சிறந்த பண்பாட்டுடன் நடந்து கொள்ளும் நல்ல மாணவராக இருக்கலாம். அதே நேரத்தில் நண்பர்கள் மத்தியில் ஜாலியாக இருக்கிறோம் என்ற பெயரில் வேடிக்கைகள் செய்வதும், அதை இணையத்தில் வெளியிடுவதும் கூடாது.

    உதாரணமாக முகத்தை அஷ்ட கோணலாக வைத்துக் கொண்டு விதவிதமாக படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது, புகைப்பிடிக்கும் பழக்கம், மதுப்பழக்கம் இல்லாவிட்டாலும் வேடிக்கையாக அப்படி செய்து காட்டுவதுபோல போஸ் கொடுத்து படம் பிடிப்பது, வீடியோ பதிவு செய்வது போன்ற வேடிக்கைகளில் ஈடுபட்டு அதை இணையத்தில் வெளியிடுவது எதிர்வினை ஆற்றக்கூடியது. உங்களைப் பற்றிய மதிப்பை மாற்றக்கூடியது.

    பெண்களைப் பற்றி, காதலைப் பற்றி, சாதி, மதங்களைப் பற்றி கருத்து தெரிவிப்பது என வேடிக்கையான, முரணான கருத்துகளை பதிவு செய்வது பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். இவற்றில் பலவற்றை நீங்கள் இன்று வேடிக்கையாக செய்துவிட்டு மறந்து போனாலும், நாளை அது உங்கள் வாழ்க்கையில் எதிரொலிக்கும்.

    உதாரணமாக நீங்கள் படித்து முடித்துவிட்டு ‘லிங்ட் இன்’ உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள், வர்த்தக தளங்களின் வழியே வேலை தேடுவதாக வைத்துக் கொள்வோம். அப்போது வேலை வழங்குபவர்கள் உங்களைப் பற்றிய விவரங்களை பயோடேட்டா மூலமாக மட்டும் தெரிந்து கொள்ளமாட்டார்கள். சொந்த ஒழுக்கங்கள், பழக்க வழக்கங்களை இணையத்தின் வழியாகவும் தேடி தெரிந்து கொள்வார்கள். நீங்கள் நண்பர்களுடன் ஜாலியாக எடுத்த புகைப்படங்கள், வேடிக்கையாக செய்தவைகள், உங்கள் கருத்துகள் போன்றவற்றையும் ஆராய்வார்கள். நீங்கள் மறந்துபோன பல விஷயங்கள் அவர்களின் தேடலில் கிடைக்க வாய்ப்பு உண்டு.

    வேண்டுமானால், உங்களைப் பற்றி நீங்களே கூகுளில் தேடி, ‘நீங்கள் எவ்வளவு பிரபலம்’ என்று ஆராய்ந்து பாருங்கள். அதில் நீங்கள் வெளியிட்ட கருத்துகளும், வேடிக்கையாய் வெளியிட்ட படங்களும் கிடைக்கும். அப்படியென்றால் உங்கள் இணைய கணக்கின் முகவரி ஒருவருக்கு கிடைத்து விட்டால் இன்னும் உங்களை மிக நெருக்கமாக ஆராய்ந்து அறிந்து கொள்ள முடியும் என்பது புரிகிறதல்லவா?.

    எனவே இணையத்தில் வேடிக்கையாக புகைப்படமோ, கருத்துகளோ வெளியிடுவதை தவிர்க்க வேண்டும். நல்ல மதிப்பைத் தரும் கருத்துகள், புகைப்படங்கள், கட்டுரைகளை பதிவு செய்யுங்கள். உங்களுக்கென தனி இணைய தளம் தொடங்கினால்கூட தவறு இல்லை. ஆனால் பதிவுகள் ஒவ்வொன்றும், உங்கள் மதிப்பை உயர்த்துவதாக இருக்க வேண்டும். இனி உங்கள் இணைய இமேஜ் உயரட்டும்.
    ×