search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சின்னவெங்காயம்"

    ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் சின்னவெங்காயம் வரத்து குறைந்ததால் விலை உயர்ந்து காணப்பட்டது.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் அருகே அம்பிளிக்கை, கள்ளிமந்தயம், இடையகோட்டை, மூலச் சத்திரம் கேதையெறும்பு, விருப்பாச்சி, சத்திரப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சின்ன வெங்காயம் பயிரிட்டு வருகின்றனர். இந்த வெங்காயங்கள் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு அதிக அளவு கேரள பகுதிக்கு அனுப்பப்படுகிறது.

    மேலும் கோவை, மதுரை, திருச்சி, பட்டுக்கோட்டை உள்ளிட்ட நகரங்களுக்கும் அனுப்பப்படுகிறது. கடந்த சில மாதங்களாகவே சின்ன வெங்காயம் விலை குறைந்தே காணப்பட்டது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர். பலர் வெங்காயங்களை விற்பனைக்கு கொண்டு வராமல் விரக்தி அடைந்தனர்.

    தினசரி 4 ஆயிரம் 60 கிலோ பைகளில் வெங்காயம் வருவது வழக்கம். ஆனால் தற்போது மழையின்மையால் வெங்காய சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் தற்போது 2 ஆயிரம் 60 கிலோ பைகளே வருகிறது. இதனால் விலை ஓரளவு உயர்ந்துள்ளது. ஒரு கிலோ சின்னவெங்காயம் ரூ.25 வரை விற்பனை செய்யப்படுகிறது. கோடைகாலம் தொடங்குவதால் விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ×