search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 116343"

    • சிவவழிபாடு நம் துன்பங்களை போக்கும்.
    • எந்த மலர்களில் சிவனுக்கு பூஜை செய்தால் என்ன பிரச்சனைகள் தீரும் என்று பார்க்கலாம்.

    செந்தாமரை - தனலாபம், வியாபார விருத்தி, ஆயுள் விருத்தி

    மனோரஞ்சிதம், பாரிஜாதம் - பக்தி, தம்பதி ஒற்றுமை, ஆயுள்விருத்தி

    வெண்தாமரை, நந்தியாவட்டை, மல்லிகை, இருவாட்சி - மனச்சஞ்சலம் நீங்கி, புத்திக்கூர்மை ஏற்படும். சகலகலாவிருத்தி.

    மாசிப்பச்சை, மரிக்கொழுந்து - நல்ல விவேகம், சுகபோகங்கள், உறவினர் ஒற்றுமை உண்டாகும்.

    மஞ்சள் அரளி, தங்க அரளி, செவ்வந்தி - கடன்நீங்கும், கன்னியருக்கு விவாகப்ராபதி ஏற்படும்.

    செம்பருத்தி, அடுக்கு அரளி, தெத்திப்பூ - ஞானம் நல்கும், புகழ், தொழில் விருத்தி

    நீலச்சங்கு - அவச்சொல், அபாண்டம், தரித்திரம் நீங்கும் அருளும் ஆயுளும் கிட்டும்.

    வில்வம், கருந்துளசி, மகிழம்பூ - சங்கடங்கள் நீங்கி, சகலகாரியமும் கைகூடும்.

    தாமரை, செண்பகம் ஆகியவற்றை மொட்டுகளாகவும் பூஜை செய்யலாம். ஏனையவை மலர்ந்திருக்க வேண்டும்.

    குங்குமப்பூ தவிர மற்ற முள் உள்ள பூக்கள் பூஜைக்கு உகந்தவை அல்ல. கிளுவை, விளா, வெண்நொச்சி, மாவிலங்கை, வில்வம் ஆகியவை பஞ்ச வில்வங்களாகும்.

    மாதப்பிறப்பு, சோமவாரம், அமாவாசை, பவுர்ணமி, சதுர்த்தி, சதுர்த்தசி, அஷ்டமி, நவமி நாள்களில் வில்வத்தை மரத்தில் இருந்து பறிக்கலாகாது.

    • சிவதரிசனம் செய்யும் வேளைகளைக் கொண்டே பலன்கள் கிடைக்கும்.
    • சிவபெருமானின் தனித்துவ அடையாளங்களாக கீழ்வருவன கொள்ளப்படுகின்றன.

    சிவம் என்ற சொல்லுக்கு "செம்மை" (பூரணத்துவம்), "மங்களமானது" என்று பொருள். எல்லாவற்றிற்கும் மேலாக, முழுமையாக, தான் மங்களகரமாகவும் தன்னைச் சார்ந்தவர்களை மங்களகரமாக்குபவரும் ஆன இனிய இறைவனைச் சிவபெருமான் என்று அழைக்கின்றோம்.

    சிவன்முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்து நின்று ஐந்தொழில்களையும் செய்து, ஆன்மாக்களின் மூன்று மலங்களையும் போக்கி வீடுபேறு அருளுகிறார். அருவத் திருமேனியுடைய சிவம் "சத்தர்' என்றும், அருவுருவத் திரு மேனியுடைய சிவம் "பரம்பொருள்' என்றும், உருவத் திருமேனியுடைய சிவம் "பிரவிருத்தர்' என்றும் சைவர்களால் அழைக்கப்படுகிறது. சிவதரிசனம் செய்யும் வேளைகளைக் கொண்டே பலன்கள் கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவை;

    காலையில் தரிசிக்க - நோய்கள் நீங்கும்.

    நண்பகலில் தரிசிக்க - தனம் பெருகும்.

    மாலையில் தரிசிக்க - பாவம் அகலும்

    அர்த்த சாமத்தில் தரிசிக்க - வீடுபேறு கிடைக்கும்.

    படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்னும் ஐந்தும் சிவனின் தொழில் எனப்படுகிறது. சிவபெருமானின் தனித்துவ அடையாளங்களாக கீழ்வருவன கொள்ளப்படுகின்றன.

    நெற்றிக்கண் காணப்படல்.

    கழுத்து நீலநிறமாக காணப்படல்.

    சடைமுடியில் பிறைநிலாவைக் கொண்டிருத்தல்.

    நீண்ட சுருண்ட சடாமுடி

    தலையில் கங்கை நதி பாய்ந்து கொண்டிருத்தல்.

    உடல் சாம்பல் நிறமாக இருத்தல்.

    புலித் தோலினை ஆடையாக அணிந்திருத்தல்.

    கழுத்தினைச் சுற்றி பாம்பு காணப்படல்.

    கையினில் உடுக்கை, திரிசூலம் தாங்கியிருத்தல். நந்தியினை (காளை) வாகனமாகக் கொண்டிருத்தல். இடு காட்டினை வாழ்வி டமாக கொண்டிருப்பவர் சக்தி யைப் பாதியாக கொண்டிருத்தல் அருவம், உருவம், அருவுருவம் என்ற மூன்றுவகையான சிவ வழிபாட்டு முறையில் உருவ வழிபாடும் சைவர்களால் கடைபி டிக்கப்படுகிறது. உருவ வழிபாட்டில் சிவனை, லிங்கம், மகேசுவர மூர்த்தங்கள், சிவ உருவத்திருமேனிகள் ஆகிய சிவ வடிவங்களாக சைவர்களால் வணங்குகிறார்கள்.

    இந்த வடிவங்களை சிவ ரூபங்கள் என்றும், சிவ சொரு பங்கள் என்றும் குறிப்பிடலாம். மகேசுவ மூர்த்தங்கள் என்று இருபத்து ஐந்து வடிவங்களும், உருவத்திருமேனிகள் என்று அறுபத்து நான்கு வடிவங்களும் குறிப்பிடப்படுகின்றன.சிவனை மூலமூர்த்தியாகக் கொண்டு இந்தியா, இலங்கை, நேபாளம் உட்பட பல நாடுகளில் கோயில்கள் பல உண்டு. சோதி லிங்கங்கள் உள்ள சிவத்தலங்கள்,பஞ்சபூத சிவத்தலங்கள், ஐந்து தாண்டவங்களுக்கான சிவத்தலங்கள், ஐந்து மன்றங்களுக்கான சிவத்தலங்கள், சத்த விடங்க சிவத்தலங்கள்,முக்தி தரவல்ல சிவத்தலங்கள், தமிழகத்தின் நவ கைலாயங்கள் (சிவதலங்கள்),தேவாரப் பாடல் பெற்ற சிவதலங்கள்,அட்டவீரட்டானக் கோயில் என பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

    மகாசிவராத்திரி, யோகசிவராத்திரி, நித்திய சிவராத்திரி, பட்ஷிய சிவராத்திரி, மாத சிவராத்திரி என ஐந்து வகைகளாக கொண்டாடப்படும் சிவராத்திரி திருவிழா சைவர்களின் முக்கிய விழாவாகும். மாசி மாதத்தில் தேய்பிறை காலத்தில் வரும் சதுர்த்தசி நாளை மகா சிவராத்திரி என்று அழைக்கின்றார்கள்.

    • நித்தியஆனந்தத்தை உணருவதே உன்னதமானது.
    • நடராஜரின் மெய் மறந்து கூத்தாடும் நிலையை உணர்த்துகிறது.

    சிவராத்திரி தினத்தன்று நடராஜர் உருவத்தில் சிவபெருமான் நடனம் ஆடியதாகக் கூறுவார்கள். இந்த நடனத் தோற்றம் இறைவனின் தத்துவத்தை உணர்ந்த பக்தன் உணர்ச்சியால் மெய் மறந்திருப்பதைப் பிரதிபலிக்கிறது.

    விழித்திருப்பது, தூங்குவது, ஆழ்ந்த தூக்கம் ஆகியவற்றை கடந்த நிலை வந்தால், மற்ற உணர்ச்சிகள் இந்த நிலையைப் பாதிக்காது. இந்த நிலையில் நித்தியஆனந்தத்தை உணருவதே உன்னதமானது. அதையே நடராஜரின் தோற்றம் பிரதிபலிக்கிறது. உடல் உள்ளம் ஆகியவற்றைச் சார்ந்த உணர்வுகளும், மனத்தின் எண்ணங்களும், புத்தியின் இயக்கமும் கட்டுப்படும் நிலையே பேரானந்தமானது. இதையே நடராஜரின் மெய் மறந்து கூத்தாடும் நிலையை உணர்த்துகிறது.

    நடராஜர் ஒரு காலை இருத்தியும், ஒரு காலை உயர்த்தியும் ஆடுவது, உலகப் பற்றுகளை மிதித்து அடக்கியும், உன்னதமான ஆன்மீக உணர்வுகளை உயர்த்தியும் வாழ்ந்தாலும் பேரானந்தம் தரும் என்பதை உணர்த்துகிறது. எனவே மறக்காமல் நடராஜர் சன்னதியிலும் வழிபாடுகள் செய்ய வேண்டும்.

    • சிவனை ‘ஐமுகச் சிவன்’ என்றே கொண்டாடுகின்றனர்.
    • நமசிவாய நாமம் சொல்லி வழிபட வேண்டும்.

    காலையில் சிவதரிசனம் - அறச்சிந்தனையை வளர்க்கும்

    முற்பகல் சிவதரிசனம் - நற்செல்வம் தரும்

    மாலை சிவதரிசனம் - விரும்பியதை அளிக்கும்

    இரவு சிவதரிசனம் - ஞானத்தை அளிக்கும்

    பிரதோஷகால சிவதரிசனம் - பிறவாமையைத் தரும்

    • சிவனை வழிபட்டால் சிவனுடைய அருள் உங்களுக்கு கிடைக்கும்.
    • நினைத்த காரியம் நிறைவேறும்.

    சனிப்பிரதோஷம் ஆன இன்று நாம் சிவனை பசுவின் கறந்த பாலைக் கொண்டு சிவனையும், சிவன் அருகில் உள்ள நந்தி பகவானையும் அபிஷேகம் செய்து வில்வ இலை மற்றும் சங்குப்பூ வைத்து வழிபட்டால் பூர்வ ஜென்ம பாவங்கள் அனைத்தும் நீங்கி உங்களுக்கு நன்மை கிடைக்கும். மேலும் உலக நன்மையை கருத்தில் கொண்டு தீமையான விஷத்தை சிவன் ஏற்றுக்கொண்டு உங்களுக்கு நன்மையை தரும் அருளை வழங்குவார்.

    பிரதோஷ தினமான இன்று அதிகாலையில் நீராடி குளித்து முடித்த பின்னர் திருநீர் இட்டு சிவநாமம் ஆன நமச்சிவாய என்ற வாசகத்தை ஓதி உங்களது வேண்டுதலை துவங்கலாம். இன்று காலை முதல் பிரதோஷம் முடியும் வரை உணவினை தவிர்த்து விரதமிருந்து பிரதோஷத்தை முடித்த பின்னர் உணவை உட்கொள்ளவேண்டும். பின்னர் நீங்கள் இரவு உணவு சாப்பிடலாம் இப்படி பதினொரு பிரதோஷங்கள் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் சிவனுடைய அருள் உங்களுக்கு கிடைக்கும்.

    மேலும் ஒரு சனி பிரதோஷமான இன்று ஒருநாள் நீங்கள் சிவன் கோவிலுக்கு சென்று வந்தால் ஐந்து வருடங்கள் தினமும் நீங்கள் சிவன் கோயிலுக்கு சென்று வந்த புண்ணியம் உங்களுக்கு கிடைக்கும். இந்த பிரதோஷம் வேண்டுதல் மூலம் உங்களுக்கு கிடைக்கும் பலன்கள் யாதெனில் : திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடும் , ஏழ்மையில் வாடுபவர்களுக்கு வறுமை நீங்கும், நோய்களால் அவதிப்பட்டு துன்புற்று இருக்கும் நபர்களுக்கு நோய்கள் நீங்கும், எடுத்த காரியங்கள் நிறைவேறாமல் பாதியிலேயே தடங்கலுடன் இருக்கும் அனைவருக்கும் சகல காரியங்களிலும் நீங்கள் நினைத்த வெற்றி கிடைக்கும்.

    மேலும் சனிபிரதோஷ தினத்தில் விரதம் இருந்து சிவனை வழிபடுவர்களுக்கு சிவன் அருளும் கிடைக்கும். பிரதோஷ தினத்தில் சிவாலயம் சென்று பூஜையில் கலந்து கொண்டு சிவபெருமானை அனைவருடனும் வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும். இதே தினத்தில் நந்தியையும் சேர்த்து வழிபாடு செய்தால் இந்திரனுக்கு சமமான பெயரும் புகழும் செல்வாக்கும் உங்களுக்கு கிடைக்கும். இன்றைய தினத்தில் நீங்கள் செய்யும் தானங்கள் எண்ணிலடங்கா பலனை கொடுக்கும் என்பதால் நீங்கள் உங்களால் முடிந்த தானங்களை இன்று செய்யலாம்.

    ஓம் நமச்சிவாய… ஓம் நமச்சிவாய…

    • கோவில் வளாகத்தில் பக்தி சார்ந்த கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன.
    • பட்டிமன்றம், சிவதரிசனம், நாட்டிய சங்கம் உள்ளிட்டவை நடக்கின்றன.

    மகா சிவராத்திரி விழா இன்று சிவன் கோவில்களில் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் உள்ள விளையாட்டு மைதானத்தில், இன்று மாலை 6 மணிக்கு மங்கள இசை, திருமுறை விண்ணப்பத்துடன் மகா சிவராத்திரி விழா தொடங்குகிறது.

    விழாவில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா, எம்.பி.க்கள் ஜெகத்ரட்சகன், தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

    மாலை 6.45 மணி முதல் கயிலை வாத்தியம், யோகா சிறப்பு நிகழ்ச்சி, கிராமிய இசை நடனம், கதக் நடனம், சிவதாண்டவ துதி, பட்டிமன்றம், சிவதரிசனம், நாட்டிய சங்கம் உள்ளிட்டவை நடக்கின்றன.

    கோடம்பாக்கம் ஆண்டவர் நகர் 5-வது தெருவில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 24-ம் ஆண்டு மகாசிவராத்திரி விழா நடக்கிறது. இதையொட்டி நாளை (19-ந்தேதி) பால்குட ஊர்வலம், பால் அபிஷேகம் நடக்கிறது. இரவு 7 மணிக்கு அம்மன் திருவீதி புறப்பாடு, இரவு 10 மணிக்கு கும்பம் இடுதல் நடைபெற இருக்கிறது.

    வடபழனி முருகன் கோவிலில் மகாசிவராத்திரி விழாவையொட்டி இன்று இரவு 8.30 மணிக்கு முதல் கால பூஜை தொடங்குகிறது. அதன்பிறகு ஒவ்வொரு 2 மணி நேரத்தில் ஒரு கால பூஜை என தொடர்ந்து 4 கால பூஜைகள் நடக்கிறது.

    இன்று மாலை 6 மணி முதல் நாளை அதிகாலை 2 மணி வரை சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. மாலை 6 மணிக்கு நாகை முகுந்தன் சொற்பொழிவு, பாணிஷ் மாணவர்கள் சுலோக பாராயணம், பேபி தியாவின் பக்தி இசை, கணேஷின் நாமசங் கீர்த்தனம், அபிஷேக் குழு வினர் பக்தி பாடல்கள், சிவசுப்பிரமணிய பாகவதர் குழுவினரின் பஜனைகள் நடக்கின்றன.

    சென்னை வியாசர்பாடி ரவீஸ்வரர் கோவிலில் இன்று மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கங்கை தீர்த்தமும், வில்வ இலையும், கண்டமணி ருத்ராட்சமும் வழங்கப்பட உள்ளது. இன்று இரவு கோவிலுக்குள் 6 கால பூஜையும், கோவில் வளாகத்தில் பக்தி சார்ந்த கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன.

    திருவான்மியூர் மருந்தீசுவரர் கோவில், திருவொற்றியூர் தியாகராஜசாமி கோவில், வேளச்சேரி தண்டீஸ்வரர் கோவில், மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோவில், பள்ளிக்கரணை ஆதிபுரீஸ்வரர் கோவில், பாடி திருவல்லீசுவரர் கோவில், கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோவில் உள்ளிட்ட அனைத்து சிவன் கோவில்களிலும் மகா சிவராத்திரி விழா நடக்கிறது.

    • சிவபுராணத்தில் எத்தனையோ கிளைக் கதைகள் உள்ளன.
    • சிவராத்திரி தரிசன பலனை விளக்கும் கதை இது.

    அக்காலத்தில் மதுரை மாநகரில் சம்பகன் என்றொரு திருடன் தன் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு ஒரு கோவிலில் புகுந்து கொள்ளையடித்தான். கோவில் காவலர்களால் மற்றவர்கள் பிடிபட, சம்பகன் மட்டும் விலை உயர்ந்த சில ஆபரணங்களோடு தப்பியோடி விட்டான்.

    பின்னர், மாறு வேடம் பூண்டு சப்தஸ்தான தலங்களில் ஒன்றான திருச்சோற்றுத் துறையில் இருந்த சிவத்தலத்தை அடைந்து, பதுங்கி கொண்டான். அன்று மாசி மகா சிவராத்திரி. ஆலயத்தில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடந்து கொண்டிருந்தன.

    பதுங்கி கொண்டிருந்த சம்பகன் அங்கே திருடவும் முடியாமல், வயிற்று பசிக்கு உணவுமில்லாமல் உறக்கமும் இல்லாமல் அன்றிரவு முழுவதும் கண் விழித்திருந்தான். நடு நிசியில், மகாசிவராத்திரியில் சிவதரிசனம் கண்டு மக்கள் இறைவனை துதித்து மகிழ்ந்தனர். விடியற் காலையில் சம்பகன் கோவிலை விட்டு வெளியேறி, காவிரி நதியில் நீராடினான். அன்று மதியம் பிச்சை எடுத்து உண்டான். அன்று முழுவதும் திருட்டு எதுவும் செய்யாமல் இருந்தான். காலப்போக்கில் உயிரும் துறந்தான். அவ்வாறு இறந்த அவன் உயிரை எமதூதர்கள் எமதர்மராஜனின் அவைக்கு இழுத்து சென்றனர்.

    எமதர்மன் தன் அமைச்சரான சித்ர குப்தரை நோக்கி, சம்பகனின் வரலாறு பற்றிக்கேட்க அவரும் அவன் செய்த பாவங்கள் அனைத்தையும் கூறிவிட்டுக் கடைசியில், பிரபு இவன் கடைசி காலத்தில் மகாசிவராத்திரியன்று சிவாலயத்தில் உணவும் உறக்கமும் இன்றி உபவாசம் இருந்து சிவபெருமானை தரிசித்தான். மறுநாள் காவிரியில் நீராடினான். பின்னர் பிச்சை எடுத்து உண்டான். இவ்வகையில் மகாசிவராத்திரி விரதம் அனுஷ்டித்திருக்கிறான் என்று சித்ரகுப்தன் சொல்லி முடிக்கும் முன்னரே சிவகணங்கள் விரைந்து வந்து சம்பகனை சிவலோகத்திற்கு அழைத்து சென்றனர்.

    சம்பகன் அவனையும் அறியாமல் சிவராத்திரி விரதம் மேற்கொண்டதால் செய்த பாவங்கள் நீங்கி முக்தி பெற்றான்.

    • சிவராத்திரி தினத்தன்று அன்னதானம் செய்து புண்ணியம் தேடிக் கொள்ளலாம்.
    • இன்று சிவபெருமானை வழிபாடு செய்வது புண்ணியம் தரும்.

    சென்னையில் எத்தனையோ சிவாலயங்கள் உள்ளன. அவற்றுள் பாடல் பெற்ற தலங்கள் என்ற சிறப்பு திருமயிலை எனப்படும் மயிலாப்பூர், திருவான்மியூர், திருவொற்றியூர், திருவேற்காடு, திருவலிதாயம் (பாடி), திருமுல்லைவாயல் ஆகிய 6 தலங்கள் பெற்றுள்ளன. மகா சிவராத்திரி தினத்தன்று இந்த 6 தலங்களில் ஏதாவது ஒரு கோவிலுக்கு சென்று வழிபடுவது மிகுந்த புண்ணியத்தையும், பலன்களையும் தரும்.

    மகா சிவராத்திரியை முன்னிட்டு இந்த 6 சிவாலயங்களிலும் பக்தர்கள் வசதிக்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் வரிசையில் வந்து வழிபாடு நடத்த வசதி செய்யப்பட்டுள்ளது. இரவு முழுக்க தங்கி இருக்கும் போது தேவைப்படும் குடிநீர் வசதி உள்பட எல்லா வசதிகளுக்கும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

    சிவராத்திரி தினத்தன்று சிவால யங்களுக்கு வரும் சிவபக்தர்களுக்கு அன்ன தானம் கொடுப்பது அளவிட முடியாத அளவுக்கு புண்ணியம் தரும். வசதி, வாய்ப்பு இருப்பவர்கள் சிவராத்திரி தினத்தன்று அன்னதானம் செய்து புண்ணியம் தேடிக் கொள்ளலாம்.

    அன்னதானம் செய்ய இயலாதவர்கள், தங்களால் முடிந்த அளவுக்கு இரவு கண் விழித்திருக்கும் பக்தர்களுக்கு காபி, டீ, குளிர்பானங்கள் கொடுத்து உபசரிக்கலாம். இதற்காக சிவாலய நிர்வாக அதிகாரிகளிடம் முன் கூட்டியே அனுமதி பெற்றுக் கொள்வது நல்லது. சிவ பக்தர்களுக்கு செய்யும் உதவியானது, மிக எளிதாக சிவன் அருளைப் பெற்றுத்தரும் என்பது ஐதீகம்.

    • நாடு முழுவதும் இன்று மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது.
    • இன்று விரதம் இருந்து சிவபெருமானை வழிபாடு செய்வது உகந்தது.

    திருவண்ணாமலையில் பிரம்மாவுக்கும் திருமாலுக்கும் சிவபெருமான் ஒளி வடிவில் காட்சி கொடுத்த நாள் சிவராத்திரி. அப்படிச் சிவன் விஸ்வரூப தரிசனம் கொடுத்த காலம் லிங்கோத்பவ காலம்னு சொல்லப்படுகிறது.

    (சிவராத்திரி அன்று நள்ளிரவு கடைசி 14 நாழிகை அதாவது இரவு 11.30 முதல் நள்ளிரவு 1 மணி வரையான காலம் லிங்கோத்பவ காலம் என்றழைக்கப்படும்) அதை நினைவுப்படுத்தும் விதமாகத் தான் எந்தச் சிவன் கோவிலாக இருந்தாலும் சிவலிங்கத்துக்குப் பின்புறம் லிங்கோத்பவர் இடம் பெற்றிருப்பார்.

    சிவனை அந்த நேரத்தில் நாம் வழிபட்டால் நம்முடைய பாவங்கள் அனைத்தும் பஸ்பமாகும். சவுக்யமாக வாழ ஒரு வழி கிடைக்கும்.

    • விபூதி அணிந்து சிவனைப் போற்ற வேண்டும்.
    • சிவராத்திரி வழிபாடு பற்றி லிங்க புராணத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    சிவராத்திரியில் செய்ய வேண்டிய வழிபாடு பற்றி லிங்க புராணத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    1. சிவபெருமானைத் தீர்த்தவாரி செய்ய வேண்டும்.

    2. மனம் மிகுந்த மலரைச் சிவபெருமானின் உச்சி முதல் கால் வரத்தூவ வேண்டும். தூவும் பொழுது நமச்சிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓத வேண்டும்.

    3. ஓதிக் கொண்டே வலம் வர வேண்டும். வணக்கம் செலுத்த வேண்டும்.

    4. சிவாலயங்களை துடைப்பத்தால் பெருக்கித் தூய்மை செய்து கோலமிடுதல் வேண்டும்.

    5. நீர், பால், நெய் முதலியவற்றால் சிவபெருமானை அபிஷேகம் செய்ய வேண்டும்.

    6. சிவபெருமானுக்கு நல்ல தூய்மை ஆன ஆடையை அணிவிக்க வேண்டும்.

    7. எருக்க மலர் மாலைகளைப் பெருமாள் தலையில் வட்டமாக அணிய வேண்டும்.

    8. சிவ தண்டமான கட்டங்களும், கபாலமும் ஏந்தி அவன் புகழைப் பாட வேண்டும்.

    9. அஷ்டங்க நமஸ்காரம் ஆண்கள் செய்ய வேண்டும். பெண்கள் ஐந்தகங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்.

    10. விபூதி அணிந்து சிவனைப் போற்ற வேண்டும்.

    இவ்வாறு லிங்க புராணம் கூறுகிறது.

    • ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு வகையாக பூஜை செய்ய வேண்டும்.
    • பூஜை செய்ய முடியாதவர்கள் பிறர் செய்வதைக் கண்டு கேட்டுத் தரிசிக்கலாம்.

    சிவராத்திரி அன்று மாலையில் பிரதோஷம் முதல் வழிபாடு தொடங்க வேண்டும். சிவராத்திரிக்கு முந்தைய மாலை நேரத்தில் நடராஜ மூர்த்தியையும் பிரதோஷ நாயகரையும் வழிபட வேண்டும். பிரதோஷ நேரத்தில் இறைவனைத் தரிசித்தது முதல் கோவிலிலேயே இருந்து கொண்டு சிவ சிந்தனையுடனே ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு வகையாக பூஜை செய்ய வேண்டும். பிறர் செய்வதைக் காண வேண்டும்.

    1. இரவின் முதல் காலம்:- (ஜாமம்) சோமஸ்கந்தரை வழிபட வேண்டும். அப்போது பஞ்ச கவ்ய அபிஷேகம் சிறந்தது. ரிக்வேதம் ஓத வேண்டும்.

    2. இரண்டாம் காலம்:-தென் முகக் கடவுளாகிய தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும். சிவலிங்கத்திற்கு தேன், சர்க்கரை, தயிர், பால், நெய் கலந்த பஞ்சாமிர்த அபிஷேகம் செய்வது மிகச் சிறந்தது. யசூர் வேதம் ஓத வேண்டும்.

    3. மூன்றாம் காலம்:- லிங்கோற்பவரை வழிபடுவது சிறப்பு. திருவண்ணாமலையில் இந்த மூன்றாம் காலத்தில் தான் (ஜாமத்தில்) லிங்கோற்பவர் உற்பத்தி ஆயிற்று என்று புராணம் சொல்லுகிறது.

    4. நான்காம் காலம் :- சிவராத்திரி நான்காம் காலத்தில் கருப்பஞ்சாறு அபிஷேகம் செய்வது சிறப்பு. கஸ்தூரி மேல் பூச்சாக பூசலாம். பச்சை ஆடை அணிவிக்கலாம். திருநாவுக்கரசர் பாடலைப் பாடலாம். அதர்வண வேதம் ஓதுதல் சிறந்தது.

    இவ்வாறு பூஜை செய்ய முடியாதவர்கள் பிறர் செய்வதைக் கண்டு கேட்டுத் தரிசிக்கலாம்.

    • சிவ சிந்தனையுடன் கண் விழித்திருந்து நான்கு ஜாம வழிபாடு செய்ய வேண்டும்.
    • சிவராத்திரியில் விரதமிருந்து உறக்கத்தைத் தவிர்க்கும் போது புலன்கள் கட்டுப்படுகிறது.

    சிவராத்திரி அன்று கண் விழித்திருந்து விரதமிருந்து இறைவனை வணங்கும் போது முழுமையான இறைவன் அருள் கிடைக்கும். நினைத்த காரியம் நடக்கும்.

    விரதம் கடைப்பிடிப்போர் முதல் நாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண் விழித்திருந்து நான்கு ஜாம வழிபாடு செய்ய வேண்டும்.

    அடுத்த நாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி விரதத்தை நிறைவு செய்தல் வேண்டும். சிவராத்திரிக்கு மறுநாள் சிவபுராணம் படித்தோ அல்லது கேட்டோ, பகல் பொழுதைக் கழிக்க வேண்டும்.

    மனம் போனபடி போகும் புலன்களைக் கட்டுப்படுத்துவதே விரதம் இருப்பதன் அடிப்படை நோக்கமாகும். உணவை தவிர்க்கும்போது உணர்வுகளைக் கட்டுப்படுத்துவது என்பது எளிது என்று கருதப்படுகிறது.

    தினமும் நாம் அனுபவிக்கும் நித்திரை தாமத குணத்தின் வெளிப்பாடு என்றும், விழித்திருப்பதன் மூலம் அந்தக் குணம் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது என்றும் சொல்லப்படுகிறது.

    இவ்வாறு உணவையும் உறக்கத்தையும் கட்டுப்படுத்துவதன் மூலம் நாம் சாதாரண விழிப்பு நிலையையும், விழிப்பற்ற உறக்க நிலையையும் கடந்து மிகஉயர்ந்த உணர்வு விழிப்பு நிலைக்கு செல்கிறோம். சாதாரண விழிப்பு, உறக்க நிலைகள் இறைவனை உணர்வதற்குத் தடையாக இருப்பனவாகக் கருதப்படுகின்றன. தினமும் விழிப்பு நிலைக்கும் தூக்க நிலைக்கும் போய் வரும் நாம் உயர் விழிப்பு நிலை பற்றி உணர்வதே இல்லை.

    சிவராத்திரியில் விரதமிருந்து உறக்கத்தைத் தவிர்க்கும் போது புலன்கள் கட்டுப்படுகிறது. அந்த நிலையில் நின்று இறைவனைப் போற்றி வழிபடும் போது உணர்வுகள் வெண்ணைபோல உருகி, நாம் உயர்ந்த விழிப்பு நிலைக்குச் செல்ல வழி வகுக்கிறது.

    ×