search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவிடைமருதூர்"

    திருவிடைமருதூர் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. #LokSabhaElections2019

    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே எஸ். புதூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக காரைக்காலில் இருந்து தஞ்சாவூர் நோக்கி வந்த லோடு ஆட்டோவை அதிகாரிகள் மடக்கி சோதனை செய்தனர்.

    இதில் லோடு ஆட்டோவில் ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்து 100 இருந்தது தெரியவந்தது. இதற்கு உரிய ஆவணங்கள் உள்ளதா? என்று அதிகாரிகள் விசாரித்தனர்.

    பின்னர் லோடு ஆட்டோவில் வந்த நபரிடம் விசாரித்தனர். விசாரணையில் அவர் தஞ்சாவூர் சீனிவாச புரத்தைச் சேர்ந்த ஆதிகேசவன் நாயுடு என்பவரது மகன் ஜெயராமன் (வயது 43) என்பது தெரிய வந்தது.

    அப்போது அவர் உரிய ஆவணங்களை அதிகாரிகளிடம் காண்பிக்காததால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பணத்தை திருவிடைமருதூர் தாலுகா அலுவலதத்தில் உதவி அலுவலர் ஜெயபாரதியிடம் பறக்கும் படையினர் ஓப்படைத்தனர். #LokSabhaElections2019

    மற்ற கோவில்களில் சென்ற வழியே திரும்புவதுதான் வழக்கம். ஆனால் திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோவிலில் வேறு வாசல் வழியே திரும்ப வேண்டும். அதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.

    மற்ற கோவில்களில் சென்ற வழியே திரும்புவதுதான் வழக்கம். திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோவிலில் வேறு வாசல் வழியே திரும்ப வேண்டும். எதற்காக?

    அர்ஜுனம் என்றால் மருதமரம். மருத மரத்தை தல விருட்சமாக கொண்ட தலங்கள் அர்ஜுனத் தலங்கள் என்றழைக்கப்படும். வடக்கிலுள்ள ஸ்ரீசைலத்தை மல்லிகார்ஜுனம் என்றும், தெற்கில் திருநெல்வேலி அருகிலுள்ள திருப்புடை மருதூரை ஜுடார்ஜுனம் என்றும், இவ்விரு தலங்களுக்கு நடுவில் இருப்பதால் இத்தலம் மத்தியார்ஜுனம் என பெயர் பெற்றது.

    அம்பிகை, அகத்தியர் வழிபட்ட இத்தலத்தில் சிவன் மகாலிங்க சுவாமி என்ற பெயரில் அருளுகிறார். ஏழு பிரகாரம் கொண்ட இத்தலத்தில் அம்பிகை பெருநலமாமுலையம்மன் என்னும் பெயரில் அருள்பாலிக்கிறாள்.

    இங்கு எந்த வழியில் சென்றோமோ, அதே வழியில் திரும்பக் கூடாது என்பது நியதி. சிவன் சந்நிதி எதிரிலுள்ள கோபுரம் வழியாக நுழைந்து முதலில் படித்துறை விநாயகரை வணங்கி, சிவன், அம்பாள் சந்நிதிகளுக்குச் சென்று, பின்பு மூகாம்பிகையை தரிசித்து முடிக்க வேண்டும். வேறு வாசல் வழியாக வெளியே வர வேண்டும். இதற்கு ஒரு காரணம் உண்டு.

    ஏதேனும் பீடை மனிதனுக்கு இருந்தால், அது நுழைவு வாசலில் நின்று கொள்ளும். கோவிலை விட்டு வெளியேறும் போது தொற்றிக் கொள்ளும். வேறு வாசல் வழியாக வந்தால் பிடிக்காது. ஒருமுறை சிவன், அம்பிகையிடம் இத்தல மகிமையைச் சொல்ல, ஆனந்த கண்ணீர் வடித்தாள். அதுவே குளமாக உருவெடுத்தது. இது காருண்ய (கருணை) தீர்த்தம் எனப்படுகிறது.
    ×