search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குறைவு"

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.248 குறைந்து, ஒரு சவரன் ரூ.24,114-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    தங்கம் விலை கடந்த 20-ந்தேதி ஒரு பவுன் ரூ.24 ஆயிரத்து 312 ஆக இருந்தது. பின்னர் படிப்படியாக விலை அதிகரித்தது. 24-ந் தேதி பவுன் ரூ.24 ஆயிரத்து 656-க்கு விற்றது. அதையடுத்து விலை படிப்படியாக குறைந்தது.

    நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ.24 ஆயிரத்து 392 ஆக இருந்தது. இன்று ஒரேநாளில் அதிரடியாக பவுனுக்கு மேலும் ரூ.248 குறைந்து ஒரு பவுன் ரூ.24 ஆயிரத்து 144 ஆக உள்ளது. கிராமுக்கு ரூ.31 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.3,018-க்கு விற்கிறது.

    பங்கு சந்தை மீதான முதலீடு அதிகரிப்பு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு, சர்வதேச சந்தை நிலவரம் போன்றவை காரணமாக தங்கம் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.500 குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.40 ஆயிரத்து 200 ஆகவும் ஒரு கிராம் ரூ.40.20 ஆகவும் உள்ளது.
    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.25,488-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    தங்கம் விலை கடந்த ஒரு வாரமாக ‘கிடுகிடு’வென உயர்ந்து வந்தது. ஒரு சவரன் ரூ. 26 ஆயிரத்தை தொடும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று சவரனுக்கு ரூ. 160 குறைந்து ரூ. 25 ஆயிரத்து 648 ஆக இருந்தது.

    இன்றும் தொடர்ந்து தங்கம் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. சவரனுக்கு ரூ. 160 குறைந்துள்ளது. ஒரு சவரன் ரூ. 25 ஆயிரத்து 488 ஆக உள்ளது. கிராமுக்கு ரூ. 20 குறைந்து ரூ. 3,186-க்கு விற்கிறது.

    வெள்ளி ஒரு கிலோ ரூ. 43 ஆயிரத்து 500 ஆகவும், ஒரு கிராம் ரூ. 43.50 ஆகவும் உள்ளது. #Gold
    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 குறைந்து ஒரு சவரன் ரூ.25,264-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    சென்னையில் ஆபரண தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ.192 சரிந்தது. நேற்றைய விலையில் இருந்து கிராமுக்கு ரூ.24 குறைந்தது.

    இன்று காலை தங்கம் விலை கிராம் ரூ.3158-க்கும், பவுன் ரூ.25,264க்கும் விற்பனையாது.

    வெள்ளி விலை கிராம் ரூ.43,20 ஆகவும், 1 கிலோ ரூ.43, 200 ஆகவும் இருந்தது.
    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.184 குறைந்து, ஒரு சவரன் ரூ.23,704-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    சில நாட்களாக தங்கம் விலை பவுன் ரூ.24 ஆயிரத்தை தாண்டி விற்பனை ஆனது. கடந்த 11-ந்தேதி ஒருபவுன் ரூ.24 ஆயிரத்து 192 ஆக இருந்தது.

    பின்னர் விலை படிப்படியாக குறைந்தது. நேற்று முன்தினம் பவுன் ரூ.23 ஆயிரத்து 944-க்கு விற்றது. நேற்று பவுனுக்கு 56 குறைந்து ரூ.23 ஆயிரத்து 888 ஆக இருந்தது.

    இன்று அதிரடியாக மீண்டும் பவுனுக்கு ரூ.184 குறைந்துள்ளது. ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 704 ஆக உள்ளது. கிராமுக்கு ரூ.23 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.2,963-க்கு விற்கிறது.

    அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு மற்றும் பங்கு சந்தையில் முதலீடு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலையில் சரிவு ஏற்பட்டு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். தற்போது திருமண சீசன் இல்லாததால் தங்கம் விலை குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.300 குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.39 ஆயிரத்து 800 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.39.80-க்கு விற்கிறது.
    கோயம்பேடு மார்க்கெட்டில் ஏறுமுகமாக இருந்த காய்கறி விலை கடந்த சிலநாட்களாக குறைந்து உள்ளது. #KoyambeduMarket
    போரூர்:

    கோயம்பேடு மார்க்கெட்டில் ஏறுமுகமாக இருந்த காய்கறி விலை கடந்த சிலநாட்களாக குறைந்து உள்ளது.

    சமையலுக்கு அதிகமாக பயன்படுத்தும் பெரிய வெங்காயத்தின் விலை கிலோ 10 ரூபாயாக குறைந்ததால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். கடந்த 2 வாரத்துக்கு முன்பு பெரிய வெங்காயம் கிலோ ரூ.30-க்கு விற்கப்பட்டது.

    கிலோ ரூ.100 வரை விற்கப்பட்ட பச்சைப்பட்டானி தற்போது ரூ.35-க்கு விற்பனையாகிறது.

    இதேபோல் சின்ன வெங்காயம், காலிபிளவர், உருளைக்கிழங்கு, தக்காளி, கேரட், முள்ளங்கி உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் மிகவும் குறைந்து உள்ளன.

    தென்மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்ததால் விளைச்சல் அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் இருந்து கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறி வரத்து அதிக அளவில் உள்ளதால் விலை குறைந்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை விபரம் (ஒரு கிலோவில்) வருமாறு:-

    தக்காளி - ரூ.13
    பெ.வெங்காயம் -ரூ. 10
    சி.வெங்காயம் - ரூ.40
    கத்திரிக்காய்-ரூ.15
    வெண்டை- ரூ.15
    பச்சை பட்டாணி-ரூ.35
    கேரட்-ரூ.8
    பீன்ஸ்-ரூ.30
    முள்ளங்கி-ரூ.8
    முட்டைகோஸ்-ரூ.8
    கொத்தவரை- ரூ.15
    இஞ்சி- ரூ.55
    ப.மிளகாய்- ரூ.20
    காலி பிளவர்- ரூ.10
    உருளை- ரூ.25

    காய்கறி விலை குறைந்தது பற்றி கோயம்பேடு காய்கறி மொத்த வியாபாரி பெருமாள் ரெட்டி கூறியதாவது:-

    கோயம்பேடு காய்கறி மார்கெட்டில் வழக்கமாக பச்சை காய்கறிகள் கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து தினமும் 75 முதல் 80 லாரி லோடுகளில் விற்பனைக்குவரும். விளைச்சல் அதிகம் மற்றும் சீசன் காரணமாக தற்போது 100 முதல் 120 லோடுகளில் காய்கறிகள் விற்பனைக்கு வருகின்றன.

    இதனால் காய்கறி விலை கடும் வீழ்ச்சி அடைந்து உள்ளது. இதேபோல் வெங்காயம் மகாராஷ்டிரா மற்றும் ஆந்திராவில் இருந்து தினமும் 50 லாரிகளில் விற்பனைக்கு வருகிறது. வரும் நாட்களில் காய்கறி விலையில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது.

    இவ்வாறு அவர் கூறினார். #KoyambeduMarket
    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.216 குறைந்து, ஒரு சவரன் ரூ.23,848-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    கடந்த 1-ந்தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.23 ஆயிரத்து 320 ஆக இருந்தது. தொடர்ந்து படிப்படியாக உயர்ந்தது. உச்சக்கட்டமாக 5-ந்தேதி தங்கம் விலை பவுன் ரூ.24 ஆயிரத்தை தாண்டியது. அன்று ஒரு பவுன் ரூ.24 ஆயிரத்து 64 ஆக இருந்தது.

    நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதே விலைக்கு தான் தங்கம் விற்கப்பட்டது. இன்று தங்கம் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டது. ஒரே நாளில் அதிரடியாக ரூ.216 குறைந்தது.

    ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 848 ஆக உள்ளது. கிராமுக்கு ரூ.27 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.2,981-க்கு விற்கிறது. சர்வதேச சந்தையில் ஏற்பட்ட விலை மாற்றம் மற்றும் பங்கு சந்தையில் முதலீடு போன்ற காரணங்களால் தங்கம் விலை குறைந்து விட்டதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.400 குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.41 ஆயிரத்து 500 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.41.50-க்கு விற்றது.
    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து, ஒரு சவரன் ரூ.23,232-க்கு விற்பனையாகிறது. #Gold
    சென்னை:

    கடந்த 19-ந்தேதி ஒரு பவுன் தங்கம் விலை ரூ.23 ஆயிரத்து 600 ஆக இருந்தது. பின்னர் ஏற்ற இறக்கத்துடன் 25-ந்தேதி பவுன் ரூ.23 ஆயிரத்து 544-க்கு விற்றது. தொடர்ந்து விலை சரிந்தது.

    நேற்று பவுனுக்கு ரூ.72 குறைந்து ரூ.23 ஆயிரத்து 432 ஆக இருந்தது. இன்று ஒரே நாளில் அதிரடியாக பவுனுக்கு ரூ.200 குறைந்தது. ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 232 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.2,904-க்கு விற்கிறது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.500 குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.40 ஆயிரத்து 200 ஆகவும், ஒரு கிராம் ரு.40.20 ஆகவும் உள்ளது. #Gold
    நீண்ட தூர பயணத்தில் ஆட்டோ கட்டணத்தை விட விமான கட்டணம் குறைவு என விமான போக்குவரத்து மந்திரி ஜெயந்த் சின்கா கூறியுள்ளார். #JayantSinha
    கோரக்பூர்:

    உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் விமான நிலையத்தில் புதிய உள்நாட்டு முனய கட்டிட அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில் கலந்துகொண்டு சிவில் விமான போக்குவரத்து மந்திரி ஜெயந்த் சின்கா பேசும்போது விமானக் கட்டணத்தையும் ஆட்டோக் கட்டணத்தையும் ஒப்பிட்டு பேசினார்.

    அவர் கூறியதாவது:-

    இன்றைய காலத்தில் நமது நாட்டில் விமான கட்டணம் மிக குறைவாக உள்ளது. குறிப்பாக, நீண்ட தூர பயணத்தில் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கான கட்டணத்தை ஒப்பிட்டால் ஆட்டோ சவாரியை விட விமானக் கட்டணம் மிகவும் குறைவு என்றே சொல்லவேண்டும்.

    இது எப்படி என்று கேட்பீர்கள். 2 பேர் ஒரு ஆட்டோவில் சவாரி செய்தால் அவர்கள் ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.10-ஐ கட்டணமாக கொடுக்கிறார்கள். அப்படியென்றால் இருவரும் ஒரு கிலோ மீட்டருக்கு தலா ரூ.5 செலவிடுகின்றனர். ஆனால் நீண்ட தூரம், குறிப்பாக கோரக்பூரில் இருந்து மும்பைக்கோ அல்லது பெங்களூருவுக்கோ விமானத்தில் பயணம் செய்தீர்கள் என்றால் ஒரு கிலோ மீட்டருக்கு நீங்கள் செலுத்தும் கட்டணம் ரூ.4 மட்டும்தான்.

    அதற்காக குறுகிய தூரத்துக்கு விமானப் பயணம் மேற்கொள்ளவேண்டும் என்று நான் வலியுறுத்தவில்லை. விமான கட்டணம் குறைவு என்பதை சுட்டிக் காட்டவே இதைக் கூறுகிறேன்.

    நம்மைப் போன்றதொரு பெரிய நாட்டில் தற்போது தொலைதூர விமானப் பயணம் பெரிதும் விரும்பப்படுகிறது. ஏனென்றால் இதில் கட்டணம் குறைவு. அதேநேரம் விமான பயணம் விரைவாகவும், வசதியாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #JayantSinha
    மேட்டூர் அணைக்கு இன்று காலை நீர்வரத்து மேலும் சரிந்து 89 ஆயிரத்து 15 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணையின் நீர் மட்டம் இன்று காலை 120.31 அடியாக இருந்தது. #MetturDam
    மேட்டூர்:

    கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மீண்டும் கன மழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகள் நிரம்பி உள்ளன.

    கிருஷ்ணராஜசாகர் அணைக்கு இன்று காலை நீர்வரத்து 57 ஆயிரத்து 464 கன அடியாகவும், கபினி அணைக்கு நீர்வரத்து 40 ஆயிரம் கன அடியாகவும் இருந்தது.

    கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து நேற்று 1 லட்சத்து 40 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்ட நிலையில் இன்று 2 அணைகளில் இருந்தும் 1 லட்சத்து 20 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த அணைகளில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள உபரிநீர் கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

    நேற்று காலை மேட்டூர் அணைக்கு ஒரு லட்சத்து 14 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இன்று நீர்வரத்து மேலும் சரிந்து 89 ஆயிரத்து 15 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணையின் நீர் மட்டம் இன்று காலை 120.31 அடியாக இருந்தது.

    அணையில் இருந்து 88 ஆயிரத்து 518 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் அதிகாரிகள் 24 மணி நேரமும் காவிரி கரையோர பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். வெள்ளம் சூழ்ந்த மேட்டூர் தங்கமாபுரி பட்டணம், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதிகளில் வசித்து வந்தவர்கள் திருமண மண்டபங்களில் தொடர்ந்து தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    ஒகேனக்கல்லில் நேற்று காலை ஒரு லட்சத்து 19 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்த நிலையில் இன்று தண்ணீர் வரத்து 80ஆயிரம் கன அடியாக குறைந்தது. ஒகேனக்கல்லில் அனைத்து அருவிகள், நடை பாதையும் தண்ணீரில் மூழ்கி உள்ளது. இதனால் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    ஒகேனக்கல் காவிரியில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தை பொதுமக்கள் காவிரி கரையோரம் நின்று வேடிக்கை பார்த்து வருகிறார்கள். #MetturDam
    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 குறைந்து, ஒரு சவரன் ரூ.22,792-க்கு விற்பனையாகிறது.

    சென்னை, ஜூலை. 18-

    தங்கம் விலை கடந்த 2 மாதங்களுக்கு மேலாக பவுன் ரூ.23 ஆயிரத்தை கடந்து விற்று வந்தது. இந்த நிலையில் இன்று விலை அதிரடியாக சரிந்து ரூ.23 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியுள்ளது. கடந்த 9-ந்தேதி ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 416 ஆக இருந்தது. பின்னர் படிப்படியாக விலை சரிந்து நேற்று பவுன் ரூ.23 ஆயிரஹ்து 16 ஆக இருந்தது. இன்று அதிரடியாக பவுனுக்கு ரூ.224 குறைந்தது. ஒரு பவுன் ரூ.22 ஆயிரத்து 792 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.2,849-க்கு விற்கிறது.

    வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.500 குறைந் துள்ளது. ஒரு கிலோ ரூ.41 ஆயிரத்து 700 ஆகவும் ஒரு கிராம் ரூ.41.70-க்கு விற்கப்படுகிறது.

    மீன்களின் இனப்பெருக்கத்துக்காக கடந்த ஏப்ரல் 15-ந் தேதி தொடங்கிய மீன்பிடி தடைக்காலம் நாளையுடன் முடிகிறது. மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல இருப்பதால் மீன் விலை குறைய வாய்ப்பு உள்ளது.
    ராயபுரம்:

    மீன்களின் இனப்பெருக்கத்துக்காக கடந்த ஏப்ரல் 15-ந் தேதி முதல் 61 நாட்கள் மீன்பிடி தடை காலம் தொடங்கியது. இது நாளையுடன் முடிவடைகிறது.

    இதையடுத்து நாளை நள்ளிரவு 12 மணிக்கு பிறகு மீனவர்கள் கடலுக்குள் செல்கிறார்கள். 61 நாட்களுக்கு பிறகு மீனவர்கள் செல்வதால் அதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    தடைகாலத்தில் ஏற்கனவே பழுதான படகுகள், வலைகளை சீரமைத்திருந்தனர். தற்போது கடலுக்கு செல்ல தேவையான ஐஸ்கட்டிகள், டீசல், உணவு பொருட்களை ஏற்றும் பணியில் தீவிரம் காட்டி வருகிறார்கள். இதனால் மீனவர்கள் உற்சாகத்துடன் காணப்படுகிறார்கள்.

    தடைகாலம் நிறைவடைந்து மீன் பிடிக்க செல்வதால் அதிக அளவு மீன்கள் கிடைக்கும் என்று எதிர்பார்த்துள்ளனர்.

    கடந்த 2 மாதமாக மீன் விலை உச்சத்தில் இருந்தது. வஞ்சிரம், வவ்வால் மீன்கள் கிலோ ரூ. 900 வரை விற்கப்பட்டது. தற்போது மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல இருப்பதால் மீன் விலை குறைய வாய்ப்பு உள்ளது.

    வழக்கமாக ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் 15 நாட்களுக்கு பிறகே கரை திரும்புவார்கள். ஆனால் சிறிய வகை படகுகளில் செல்பவர்கள் ஞாயிற்றுக்கிழமை கரை திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மீன் விலை விரைவில் குறையும் என்று மீன் பிரியர்கள் எதிர்பார்த்துள்ளனர். #Tamilnews
    இந்திய எண்ணை நிறுவனங்கள் கடந்த இரு வாரமாக தினமும் விலையை குறைத்து வருகின்றன. இன்று 13-வது நாளாக நாடு முழுவதும் பெட்ரோல்-டீசல் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. #Petrol #Diesel
    சென்னை:

    பெட்ரோல், டீசல் விலை கடந்த மாதம் தினமும் உயர்ந்தபடி இருந்தது.

    பெட்ரோல் விலை லிட்டர் ரூ.85 வரை அதிகரித்தது. 10 நாட்களுக்குள் பெட்ரோல் விலை லிட்டருக்கு 4 ரூபாய் வரை அதிகரித்ததால் வாகன ஓட்டிகள் மத்தியில் அதிருப்தி உருவானது.

    இதைத் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையையும் ஒரே மாதிரி வரி விதிப்பு திட்டமான ஜி.எஸ்.டி. திட்டத்தில் கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. மக்கள் மத்தியில் அதிருப்தி அதிகரித்ததால் விலை குறைப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டது.

    அதன் பேரில் இந்திய எண்ணை நிறுவனங்கள் கடந்த இரு வாரமாக தினமும் விலையை குறைத்து வருகின்றன. இன்று (திங்கட்கிழமை) 13-வது நாளாக நாடு முழுவதும் பெட்ரோல்-டீசல் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.


    சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலையில் 21 காசுகள் குறைக்கப்பட்டது. டீசல் விலையில் 16 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது.

    இதனால் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.79.48க்கு விற்பனையானது. டீசல் விலை லிட்டர் ரூ.71.73 ஆக உள்ளது.

    பெட்ரோல், டிசல் விலை மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Petrol #Diesel
    ×