என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நீர்வரத்து"
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததாலும் கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படாதாலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கடந்த 1 மாதத்திற்கும் மேலாக வெகுவாக குறைந்தது.
நேற்று அணைக்கு 39 கன அடி தண்ணீர் வந்தது. இன்று இது காலை அடியோடு சரிந்து 16 கன அடி தண்ணீர் மட்டும் வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1000 கன அடி தண்ணர் திறந்து விடப்படுகிறது. அணையின் நீர்மட்டம் நேற்று 64.34 அடியாக இருந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி இது 64.21 அடியாக குறைந்துள்ளது.
நீர்வரத்து இதேநிலை நீடித்தால் அணையின் நீர்மட்டம் மேலும் குறைவதற்கான வாய்ப்பு உள்ளது. #MetturDam
வடகிழக்கு பருவமழை ஏமாற்றியதால் வைகை, பெரியாறு அணகளின் நீர்மட்டம் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் கோடை காலத்தில் குடிநீர் தேவையை சமாளிக்க முடியுமா? என கேள்வி எழுந்துள்ளது.
அவ்வப்போது சாரல் மழை பெய்து வருவதால் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று வரை 510 கன அடி நீர் வந்துகொண்டிருந்தது. இன்று காலை அது 615 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 115.85 அடியாக உள்ளது. தமிழக பகுதிக்கு 300 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
வைகை அணயின் நீர்மட்டம் 48.92 அடியாக உள்ளது. 11 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து பாசனம் மற்றும் மதுரை மாநகர குடிநீருக்காக 760 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 39.15 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 88.39 அடியாக உள்ளது. வருகிற 3 கன அடி நீர் அப்படியே திறந்து விடப்படுகிறது.
வைகை அணை 2.2., மஞ்சளாறு 7, சோத்துப்பாறை 7 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
மேட்டூர் அணைக்கு நேற்று 150 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 243 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து காவிரி ஆற்றில் டெல்டா பாசனத்திற்காக 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று மாலை முதல் தண்ணீர் திறப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டது.
இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் மீண்டும் உயர தொடங்கி உள்ளது. நேற்று 70.81 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 70.82 அடியாக இருந்தது. இனி வரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது. #MetturDam
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்து உள்ளது. கடந்த 16-ந் தேதி 86 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மேலும் அதிகரித்து 118 கன அடியானது. இன்று நீர்வரத்து மேலும் அதிகரித்து 134 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக காவிரி ஆற்றில் 4 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து பல மடங்கு கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.
நேற்று 73.09 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 72.7 அடியாக சரிந்தது. இனி வரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக சரிய வாய்ப்பு உள்ளது. #Metturdam
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வந்தது. இந்த நிலையில் மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
நேற்று 75 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 109 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரி ஆற்றில் டெல்டா பாசனத்திற்கு 11 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து பல மடங்கு கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.
நேற்று 79.3 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் ஒரு அடி சரிந்து 77.31 அடியாக இருந்தது. இதே நிலை நீடித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் இனி வரும் நாட்களில் மேலும் வேகமாக சரிய வாய்ப்புள்ளது. #MetturDam
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் மேட்டூர் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
நேற்று 2 ஆயிரத்து 270 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 2ஆயிரத்து 109 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரி ஆற்றில் டெல்டா பாசனத்திற்காக 9 ஆயிரம் கன அடியும், கால்வாயில் 400 கன அடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. நேற்று 102.24 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 101.75 அடியாக இருந்தது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் கடந்த ஜூன் மாதம் முதல் மேட்டூர் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
நேற்று 5 ஆயிரத்து 134 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 4 ஆயிரத்து 347 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாய் பாசனத்திற்கு 750 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.
அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
நேற்று 103.54 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 103.63 அடியானது. இனி வரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது. #Metturdam
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையால் மேட்டூர் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
நேற்று 5 ஆயிரத்து 623 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 5 ஆயிரத்து 734 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு காவிரி ஆற்றில் 2 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாய் பாசனத்திற்கு 600 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டு வந்தது.
இன்று காலை முதல் கால்வாய் பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு 750 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. டெல்டா பாசனத்திற்கு வழக்கம் போல 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
நேற்று 103.22 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று 103.4 அடியாக உயர்ந்தது. இனி வரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது. #Metturdam
கூடலூர், நவ.24-
கடந்த சில நாட்களாக கேரள மாநிலம் மற்றும் தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. முல்லைப்பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் கன மழை நீடித்ததால் அணைக்கு வரும் நீர்வரத்து 1882 கன அடியில் இருந்து 2223 கன அடியாக உயர்ந்துள்ளது.
இதனால் தமிழக பகுதிக்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவும் உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று வரை 900 கன அடி திறந்து விடப்பட்ட நிலையில இன்று காலை 4 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
மூல வைகையாற்றில் நீர்வரத்து அதிகரித்துள் ளதால் வைகை அணைக்கு நீர்வரத்து 2664 கன அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 62.04 அடியாக உள்ளது. அணையில் இருந்து 3 மாவட்ட பாசனத்திற்காக 3810 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
மஞ்சளாறு அணை நீர் மட்டம் 55 அடியாக உள்ளதால் அணைக்கு வரும் 100 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126 அடியாக உள்ளது. 93 கன அடி நீர் வருகிறது. 30 கன அடி நீர் திறக்கப்படுகிறது. பெரியாறு 16.2, தேக்கடி 12.2, சண்முகாநதி அணை 4 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது. இன்று காலையும் மழை தொடர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் மேட்டூர் அணைக்கு 6 மாதங்களுக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
நேற்று 4,785 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 4,670 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 1,400 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் தண்ணீர் திறப்பு இன்று காலை 1,100 கன அடியாக குறைக்கப்பட்டது.
அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைந்துள்ளதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று 100.36 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 100.58 அடியானது. #MetturDam
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு கடந்த சில நாட்களாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
நேற்று 4 ஆயிரத்து 6 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று சற்று அதிகரித்து 4 ஆயிரத்து 378 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து நேற்று காலை 5 ஆயிரத்து 900 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில், நேற்று இரவு முதல் தண்ணீர் திறப்பு 1,900 கனஅடியாக குறைக்கப்பட்டது.
அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் மீண்டும் உயரத் தொடங்கி உள்ளது.
நேற்று 99.86 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று 99.88 அடியாக உயர்ந்தது. இனிவரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்பு உள்ளது. #MetturDam
கர்நாடக மாநிலம் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக இருந்தது. இன்றும் வினாடிக்கு தொடர்ந்து 15 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது.
இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி மற்றும் காவிரி ஆற்றின் கரையோரங்களில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். பரிசல் சவாரி சென்று காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.
மேலும் தொங்குபாலம், முதலை பண்ணை ஆகிய பகுதிக்கும் சென்று சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர். #Hogenakkal
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்