search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லண்டன்"

    • லண்டனில் இருந்து சிங்கப்பூருக்கு சென்று கொண்டிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம், மோசமான வானிலை காரணமாக கடும் டர்புலன்ஸை எதிர்கொண்டதில் நடு வானில் நிலை தடுமாறி குலுங்கியது.
    • தேவையான மருத்துவ உதவிகளை வழங்க தாய்லாந்தில் உள்ள உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றுகிறோம், தேவைப்படும் கூடுதல் உதவிகளை வழங்க ஒரு குழுவை பாங்காக்கிற்கு அனுப்புகிறோம் என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

    லண்டனில் இருந்து சிங்கப்பூருக்கு சென்று கொண்டிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம், மோசமான வானிலை காரணமாக கடும் டர்புலன்ஸை எதிர்கொண்டதில் நடு வானில் நிலை தடுமாறி குலுங்கியது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்துள்ளனர்.

    இதுதொடர்பாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் அதிகாரப்பூர்வ அறிக்கையில், போயிங் 777-300ER விமானத்தில் மொத்தம் 211 பயணிகளும் 18 பணியாளர்களும் இருந்தனர். விமானம் லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் செல்லும் வழியில் கடுமையான டர்புலன்ஸை சந்தித்தபோது, உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3:45 மணிக்கு தாய்லாந்து தலைநகர் பாங்காக்கின் சுவர்ணபூமி விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது என்றும் இதில் ஒருவர் உயிரிழந்ததாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    மேலும், தேவையான மருத்துவ உதவிகளை வழங்க தாய்லாந்தில் உள்ள உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றுகிறோம், தேவைப்படும் கூடுதல் உதவிகளை வழங்க ஒரு குழுவை பாங்காக்கிற்கு அனுப்புகிறோம் என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

    இந்த விபத்தில் 30 பேர் காயம் அடைந்ததாகத் தாய்லாந்து ஊடகங்கள் தெரிவித்தாலும், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் எத்தனை பேர் காயமடைந்தனர் என்பதைக் குறிப்பிடவில்லை. விபத்து தொடர்பான ரேடார் பதிவுகளில், விமானம் 37,000 அடி உயரத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது மூன்று நிமிடங்களில் 31,000 அடிக்குக் கீழே இறங்கியது. பின் அங்கிருந்து வேகமாக இறங்கி அரை மணி நேரத்திற்குள் பாங்காக்கில் தரையிறங்கியது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்கள் இதுவரை இதுவரை மொத்தம் ஏழு விபத்துகளைச் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • குடும்பத்தினர்கள், நண்பர்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
    • திருமணத்தில் அமைச்சர் நேரடியாக கலந்து கொண்டது அனைவரின் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

    வேதாரண்யம்:

    நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகே பஞ்சநதிக்குளம் மேலச்சேத்தியை சேர்ந்தவர் ராமநாதன். வேதாரண்யம் மேற்கு பகுதி தி.மு.க. மாவட்ட பிரதிநிதி. இவரது மனைவி சாந்தி. இந்த தம்பதிக்கு அருந்ததி என்ற மகள் உள்ளார். பி.ஏ. பட்டதாரி.

    இவரும் தஞ்சாவூர் மாவட்டம், பரக்கலக்கோட்டையை சேர்ந்த சுப்பிரமணியன்-பரமேஸ்வரி தம்பதியின் மகனான விஜய்யும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். விஜய் படிப்பை முடித்து விட்டு லண்டனில் பணியாற்றி வருகிறார்.

    நாளடைவில் இவர்கள் காதலித்து வருவது அவர்களது குடும்பத்தினருக்கு தெரிய வருகிறது. இதற்கு குடும்பத்தினர்கள் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதன்படி, விஜய்-அருந்ததிக்கு கடந்த 3-ந்தேதி பஞ்சநதிக்குளம் மேலச்சேத்தியில் வைத்து நிச்சயதார்த்தம் நடந்தது. நிச்சயம் முடிந்ததும் நீண்ட விடுப்பு கிடைக்காத காரணத்தால் மணமகன் விஜய் லண்டன் புறப்பட்டு சென்றார். அதனை தொடர்ந்து, திருமணத்திற்கான ஏற்பாடுகளில் மணமக்கள் வீட்டார் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில் அருந்ததியோ தான் லண்டன் சென்று தனது காதலனை கரம் பிடிக்க போவதாக வீட்டில் கூறிவிட்டு, அதன்படி, கடந்த 8-ந்தேதி தனியாக சென்னையில் இருந்து லண்டனுக்கு விமானத்தில் புறப்பட்டு சென்றார். அங்கு அவரின் உறவினர் வீட்டில் தங்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் காலை லண்டனில் உள்ள முருகன் கோவிலில் மணமக்களுக்கு இந்து முறைப்படி சிவாச்சாரியார் தமிழில் மந்திரங்கள் கூறி திருமணம் நடைபெற்றது. இதில் குடும்பத்தினர்கள், நண்பர்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்த விழா நடந்து கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக அந்த முருகன் கோவிலுக்கு தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்ய வந்தார். அப்போது இந்து முறைப்படி நடந்த திருமணத்தில் குறித்து அறிந்த அவர் விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். திருமணத்தில் அமைச்சர் நேரடியாக கலந்து கொண்டது அனைவரின் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 

    • பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத்திற்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாக்கு பதிவு நடந்தது.
    • ஜெகன் மோகன் ரெட்டி தனது எக்ஸ் தளத்தில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

    ஆந்திரா மாநில முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி பாராளுமன்றம் மற்றும் சட்டப்பேரவை தேர்தலில் தனது ஒய்எஸ்ஆர்சி வேட்பாளர்களை ஆதரித்து கடந்த ஐந்து மாதங்களாக பரபரப்பான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

    தொடர்ந்து, ஆந்திர மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத்திற்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாக்கு பதிவு நடந்தது. தேர்தலை தொடர்ந்து ஜெகன் மோகன் ரெட்டி தனது எக்ஸ் தளத்தில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

    இந்நிலையில், ஆந்திராவில் சட்டமன்ற தேர்தல் முடிவடைந்ததை அடுத்து, ஜெகன் மோகன் ரெட்டி தனது குடும்பத்துடன் விடுமுறையை கழிக்க லண்டன் சென்றுள்ளார்.

    ஜெகன் மோகன் ரெட்டி நேற்று இரவு விஜயவாடாவில் உள்ள கன்னவரம் விமான நிலையத்தில் இருந்து சிறப்பு விமானம் விஸ்ட்ஜெட் மூலம் புறப்பட்ட நிலையில் இன்று லண்டன் சென்றடைந்தார்.

    முதலமைச்சருடன் அவரது மனைவி ஒய்.எஸ். பாரதி மற்றும் மகள்கள் ஹர்ஷா மற்றும் வர்ஷா உள்ளனர்.

    லண்டனை தொடர்ந்து ஜெகன் மோகன் ரெட்டி குடும்பத்துடன் பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்திற்குச் செல்கின்றனர்.

    நாடு முழுவதும் சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் ஜூன் 4 ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே ஜெகன் மோகன் ரெட்டி ஜூன் 1 ஆம் தேதி அன்று நாடு திரும்புகிறார்.

    • கவுன்சிலர்களை தேர்வு செய்ய உள்ளாட்சி தேர்தல் நடந்தது.
    • உள்ளாட்சித் தேர்தலில் தொழிலாளர் கட்சி அமோக வெற்றியை பெற்றுள்ளது.

    இங்கிலாந்தில் சமீபத்தில் கவுன்சிலர்களை தேர்வு செய்ய உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லண்டன் மேயர் தேர்தலில் தொழிலாளர் கட்சியின் சாதிக் கான் மூன்றாவது முறையாக வெற்றி பெற்றார். ஆளும் கன்சர்வேடிவ் கட்சி வேட்பாளர் சூசன் ஹாலை 11 புள்ளிகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். சுயேட்ச்சையாக போட்டியிட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தருண் குலாட்டியும் தோல்வியை சந்தித்தார்.

    அதேபோல் இங்கிலாந்து உள்ளாட்சித் தேர்தலில் தொழிலாளர் கட்சி அமோக வெற்றியை பெற்றுள்ளது. அதிக இடங்களை கைப்பற்றி உள்ளது. ஆளும் கன்சர்வேடிவ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. பல இடங்களில் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.மேலும் இங்கிலாந்தின் வடமேற்கில் உள்ள பிளாக்பூல் சவுத் பாராளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலிலும் எதிர்க்கட்சி வெற்றி பெற்றுள்ளது.

    • 640 ஆண் கைதி அறைகள் கொண்ட இந்த சிறையில் கடந்த சில மாதங்களாக நச்சு கதிர்வீச்சு அலைகள் வீசப்படுவது கண்டறியப்பட்டது.
    • காற்றில் அளவுக்கதிமான நச்சு கதிர்வீச்சு அலைகள் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    லண்டன்:

    பிரின்ஸ்டவுன் நகரில் புகழ்பெற்ற டார்ட்மூர் மத்தியச்சிறைச்சாலை உள்ளது. 640 ஆண் கைதி அறைகள் கொண்ட இந்த சிறையில் கடந்த சில மாதங்களாக நச்சு கதிர்வீச்சு அலைகள் வீசப்படுவது கண்டறியப்பட்டது. சோதனையின்போது சிறை வளாகத்தில் ரேடான் என்னும் கதிரியக்க தனிமத்தின் அளவு அதிகரித்து காணப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.

    இதனால் காற்றில் அளவுக்கதிமான நச்சு கதிர்வீச்சு அலைகள் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சிறைச்சாலையில் இருந்து 194 கைதிகள் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டு வேறுசிறைகளில் அடைக்கப்பட்டனர். சிறைவளாகத்தில் பரவி இருக்கும் ரேடான் அளவை குறைக்கும் பணி நடந்து வருகிறது.

    • வேக கட்டுப்பாட்டை மீறி 3 மடங்கு வேகத்தில் கேரி சென்றார்
    • என் ஒரே அழகான மகளை இழந்து விட்டேன் என்றார் லட்சுமிதாஸ்

    கடந்த 2019 ஆகஸ்ட் மாதம், இங்கிலாந்து தலைநகரான லண்டன் நகரின் மேற்கில் உள்ள கென்சிங்டன் பகுதியில் ஜேட் முடுவா (22) எனும் இளம் பெண் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது, ஒரு பெண்ணை கத்தியை காட்டி எவரோ பயமுறுத்துவதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு வந்ததின் பேரில், அப்பெண்ணை காக்க சம்பவ இடத்திற்கு பெருநகர காவல்துறை வாகனத்தில் கேரி விட்கின்சன் (Gary Witkinson) எனும் காவலர் விரைந்து சென்று கொண்டிருந்தார்.

    அந்த பகுதியில் மணிக்கு சுமார் 50 கிலோமீட்டர் வேகத்தில்தான் செல்ல வேண்டும் என கட்டுப்பாடு இருந்தும் தனது கடமையை ஆற்ற சுமார் 100 கிலோமீட்டர் வேகத்தில் கேரி சென்று கொண்டிருந்தார்.

    நடந்து வந்து கொண்டிருந்த முடுவா, சாலையை கடக்க முயன்றார். அப்போது கேரி, முடுவாவை பார்த்ததும் தனது வாகனத்தை நிறுத்த முயன்றார். ஆனால், மிக வேகமாக ஓட்டியதால் அவரால் உடனே நிறுத்த முடியவில்லை. இதனால் துரதிர்ஷ்டவசமாக முடுவா மீது கேரியின் காவல்துறை வாகனம் மோதியது.

    இதையடுத்து உடனடியாக கேரி காரை நிறுத்தினார். அங்கிருந்தவர்கள் ஆம்புலன்சை வரவழைத்தனர். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட முடுவா, பலத்த காயங்களால், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த விபத்திற்கு காரணமான கேரி மீது வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்தது.

    ஆனால், கேரி காவல்துறையினரின் நடத்தை விதிகளின்படியே செயல்பட்டதாக தீர்ப்பு வெளியாகியுள்ளது.

    இதனையடுத்து, மிகுந்த வேதனையடைந்துள்ள முடுவாவின் தந்தை ஜெர்மைன் லட்சுமிதாஸ் (Jermaine Laxmidas), தெரிவித்ததாவது:

    காரால் மோதிய கேரியிடம் கேட்கப்பட்ட போது, "காவல்துறை வாகனங்கள் கடமையை ஆற்ற வேக கட்டுப்பாட்டை தாண்டி 3 மடங்கு அதிகம் செல்லாம்" என கூறியுள்ளார். இது தவறு. இந்த சட்டம் மாற்றப்பட வேண்டும். என் ஒரே அழகான மகளை நான் இழந்துள்ளேன். காவலர்களின் வாகனங்களுக்கும் வேக கட்டுப்பாடு கொண்டு வர வேண்டும்.

    இவ்வாறு லட்சுமிதாஸ் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

    அவரது இழப்பிற்கு வருத்தம் தெரிவிக்கும் அதே நேரம் இவரது தனிப்பட்ட கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைதளத்தில் பயனர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • கப்பல்களுக்காக திறந்து மூடும் வகையில் இது கட்டப்பட்டது
    • மூடி கொள்ளாமல் இருப்பதை கண்டு பார்வையாளர்கள் கூடி விட்டனர்

    இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் உள்ளது புகழ் பெற்ற டவர் பிரிட்ஜ் (Tower Bridge).

    பாஸ்க்யூல் முறையில் அமைக்கப்பட்ட இந்த தொங்கு பாலம் 1894ல் கட்டி முடிக்கப்பட்டது. லண்டனில் உள்ள புகழ் பெற்ற லண்டன் டவர் சுற்றுலா தலத்திற்கு அருகே தேம்ஸ் நதியின் குறுக்கே டவர்

    ஹாம்லெட்ஸ் மற்றும் சவுத்வார்க் ஆகிய இரு பகுதிகளை இணைக்கும் வகையில் கட்டப்பட்டது. நதியில் சிறு கப்பல்கள் வரும் போது இது திறந்து மூடும் வகையில் கட்டப்பட்டுள்ளதால், இங்கிலாந்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் காண விரும்பும் இடங்களில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது.

    நேற்று மாலை 01:15 மணியளவில் அதன் கீழ் ஒரு படகு சென்றது. அது சென்றவுடன் வழக்கம் போல் திறந்த அந்த பாலம் மூடி கொள்ளவில்லை. இதனை கண்ட அங்கிருந்த பார்வையாளர்கள் ஆச்சரியமடைந்து நடப்பதை பார்த்து கொண்டிருந்தனர்.

    சுமார் அரை மணி நேரம் கழித்துத்தான் அது மீண்டும் மூடி கொண்டது. அந்த பாலத்தின் ஹைட்ராலிக் அமைப்பில் ஏற்பட்ட கோளாறினால் அதனால் சிறிது நேரம் மூடி கொள்ள இயலாமல் போனதாக தெரிவிக்கப்பட்டது.

    தமிழ்நாட்டின் பிரபலமான பாம்பன் பாலமும் இதை போலவே வடிவமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • ராமநாதபுரத்தில் லண்டன் பிரிட்ஜ் பொருட்காட்சியை நகரசபை தலைவர் திறந்து வைக்கிறார்
    • அனைவரும் விரும்பி கண்டுகளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் நகரில் முன்னாள் குடியரசுத் தலைவர் பாரதரத்னா டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் கல்வி பயின்ற ஸ்வார்ட்ஸ் மேல் நிலைப்பள்ளி மைதானத்தில் 7 வருட நீண்ட கால இடைவெளிக்கு பிறகு மீண்டும் பிரம்மாண்டமான லண்டன் பிரிட்ஜ் பொருட் காட்சி இன்று தொடங்கு கிறது.

    நகர சபை தலைவர் ஆர்.கே.கார்மேகம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு இன்று மாலை 6 மணிக்கு பொருட்காட்சியை திறந்து வைக்க உள்ளார்.

    ஏராளமான பொழுது போக்கு அம்சங்களுடன் கூடிய இப்பொருட்காட்சியானது இன்று தொடங்கி அடுத்த மாதம் ஜூன் 4-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    4 D ஷோ,பேய் வீடு,பன் சிட்டி, ஸ்டால்கள் என அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களும் ஒரே இடத்தில் அமைந்து பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி கண்டு களிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள

    இப்பொருட்காட்சிக்கான ஏற்பாடுகளை பொருட் காட்சி அமைப்பாளர்கள் செய்து வருகின்றனர்.

    • இவர் லண்டனில் உள்ள விர்ரல் பல்கலைகழக மருத்துவமனையில் பல ஆண்டுகள் பணியாற்றியவர்
    • சென்னையில் உள்ள எம்.ஐ.ஓ.டி. சர்வதேச மருத்துவமனையிலும், பெங்களூரு மருத்துவமனையிலும் பணியாற்றியுள்ளார்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பொன் ஜெஸ்லி சூப்பர் ஸ்பெசா லிட்டி மருத்துவமனையில் லண்டன் குடியுரிமை பெற்ற இதயவியல் நிபுணர் டாக்டர் சரவணன் (வயது 53) நாளை (திங்கட்கிழமை) முதல் முழுநேர மருத்துவ மனை இயக்குனராகவும் இருதய வியல் துறை தலைவராகவும் பதவியேற்கிறார். இவர் எம். பி.பி.எஸ்., எம்.டி. பட்டங்களை மதுரை மருத்துவ கல்லூரி யிலும், எப்.ஆர். சி.பி. லண்ட னிலும், சி.சி.டி. லண்ட னிலும், சி.சி.டி.எஸ். அமெரிக்காவிலும், எப்.இ. எஸ்.இ. லண்டனிலும் படித்துள்ளார்.

    இவர் லண்டனில் உள்ள விர்ரல் பல்கலை கழக மருத்துவமனையில் பல ஆண்டுகள் பணி யாற்றிவிட்டு, சென்னையில் உள்ள எம்.ஐ.ஓ.டி. சர்வதேச மருத்துவமனையிலும், பெங்களூரு மருத்துவமனை யிலும் பணியாற்றியுள்ளார்.

    இவர் ரத்த ஓட்ட சோதனை இதய தமனி களில் ரத்த ஓட்டத்தை பரிசோதித்தல், மூடிய இதய தமனிகளை திறந்து பின்னர் ஸ்டென்ட் பொருத்துதல், இதய முடுக்கி பொருத்து தல், இதய படபடப்பு தடுப்பு மற்றும் உயிர் காக்கும் எந்திரம் பொருத்துதல், இதய மறு சீரமைப்பு, இதய முடுக்கி பொருத் துதல், இதய மின் இணைப்புக்களை சோதித்தல் போன்ற சிகிச் சைகள் அளிக்கிறார்.

    இவரை பொன் ஜெஸ்லி குழு மங்களின் தலைவர் பொன்.ராபர்ட் சிங், மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஜார்ஜ். இருதயவியல் டாக்டர்கள் ஸ்ரீதரசுதன், வெங்கடேஸ் மற்றும் மருத்துவமனை டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் பணி யாளர்கள் வாழ்த்தினர்.

    லண்டனில் கைதான மும்பை வைர வியாபாரி நிரவ் மோடி சார்பில் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்படுகிறது. #PNBFraud #NiravModi
    லண்டன்:

    மும்பை வைர வியாபாரி நிரவ் மோடி (வயது 48), அங்குள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை ஒன்றின் மூலமாக வெளிநாட்டினர் பலருக்கு சட்ட விரோதமாக 2 பில்லியன் டாலருக்கு அதிகமான தொகையை (சுமார் ரூ.13 ஆயிரத்து 500 கோடி) பரிமாற்றம் செய்து உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இது தொடர்பாக அவர் மீது இந்தியாவில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. ஆனால் இதற்கு முன்பாகவே அவர் நாட்டில் இருந்து தப்பி விட்டார். அவர் இங்கிலாந்தில் இருப்பதை அறிந்து, அவரை நாடு கடத்திக்கொண்டு வருவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்தது. இந்த நிலையில் அவர் லண்டனில் கடந்த 19-ந்தேதி கைது செய்யப்பட்டார். 20-ந்தேதி வெஸ்ட்மின்ஸ்டர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் தரப்பில் ஜாமீன் மனு தாக்கலானது. ஆனால் அதை நீதிபதி மேரி மல்லான் தள்ளுபடி செய்துவிட்டார். அதைத்தொடர்ந்து நிரவ் மோடி சிறையில் அடைக்கப்பட்டார்.

    அவரது நீதிமன்றக்காவல், நாளை மறுதினம் (29-ந்தேதி) முடிகிறது. அன்றைய தினம் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார். அப்போது அவரது சார்பில் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்படுகிறது. விசாரணையை விஜய் மல்லையாவை நாடு கடத்த உத்தரவிட்ட தலைமை மாஜிஸ்திரேட்டு எம்மா ஆர்புத்நாட் நடத்துவார் என தகவல்கள் கூறுகின்றன.
    இங்கிலாந்து தலைநகர் லண்டன் சாரிங் கிராஸ் ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர். #CharingCrossStation
    லண்டன்:

    இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள சாரிங் கிராஸ் ரெயில் நிலையம் நகரத்தின் மிக பரபரப்பான இடங்களில் ஒன்றாகும். இந்நிலையில், இன்று காலை ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாக ஒரு நபர் அங்கிருந்து மிரட்டியுள்ளார். இதனை அடுத்து ரெயில் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.

    ஆயுதம் தாங்கிய அதிரடிப்படையினர் ரெயில் நிலையத்தில் குவிக்கப்பட்டனர். சிறிது நேரத்திற்கு பிறகு மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். வழக்கமான ரெயில் போக்குவரத்து விரைவில் தொடங்கும் எனவும் கூறினர். 
    நான் முக்கியமா? இல்லை நாய்கள் முக்கியமா? என்ற கேள்விக்கு நாய்கள் தான் முக்கியம் என மனைவி பதிலளித்ததால் அதிர்ச்சியில் கணவர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
    லண்டன்:

    பிரிட்டனின் சப்போல்க் பகுதியில் வசிப்பவர் மைக் ஹாஸ்லாம். 53 வயதான இவரது மனைவி லிஸ் (49) நாய்கள் பிரியர். 1991-ம் ஆண்டு திருமணமான இவர்களுக்கு 21 வயதில் தற்போது மகன் உள்ளார். இந்நிலையில், நாய்களின் காரணமாக மைக் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

    லிஸியின் தந்தை விலங்குகளுக்கான உணவு விற்கும் தொழில் செய்து வந்ததன் காரணமாக சிறுவயது முதலே லிஸ் விலங்குகள் பிரியராக இருந்துள்ளார். சமீபத்தில், 30-க்கும் மேற்பட்ட நாய்களை லிஸ் கண்டெடுத்து வளர்த்து வந்துள்ளார். எந்த நேரமும் நாயுடனே அவர் நேரத்தை செலவிட்டுள்ளார்.

    பொறுத்து பொறுத்து பார்த்து ஒருநாள் பொங்கி எழுந்த மைக், “நான் முக்கியமா, இல்லை நாய்கள் முக்கியமா?” என கோபத்துடன் கேட்க, நாய்கள்தான் முக்கியம் என லிஸ் கூலாக பதில் கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த மைக் வீட்டை விட்டு வெளியேறப்போவதாக கூறியுள்ளார்.

    வீட்டை விட்டு வெளியேறினால் தன்னை மனைவி தடுத்துவிடுவார் என நினைத்த மைக்-க்கு அடுத்த அதிர்ச்சியாக, “உங்கள் உடமைகளை பேக் செய்யவா?” என லிஸ் கேட்க புலம்பிய படியே வீட்டை விட்டு அவர் வெளியேறினார். “என்னைப்பற்றி மைக்-க்கு நன்றாக தெரியும். ஆனாலும், அவர் என்னை புரிந்து கொள்ளவில்லை. விதவையாக வாழ விரும்பவில்லை. அதனால், என்னை எனது நாய்களிடம் நான் ஒப்படைத்துவிட்டேன்” என லிஸ் கூறியுள்ளார்.
    ×