search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 118052"

    • சிறுநீர் வெளியேறாதால் உடலில் நீர் வறட்சி ஏற்படும்.
    • தர்பூசணி, வெள்ளரி போன்ற பழங்களைச் சாப்பிடலாம்.

    திருப்பூர் :

    வெய்யிலின் தாக்கம் அதிகளவில் இருக்கும் என்பதால் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென திருப்பூர் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது:- அதிக வெப்ப காலங்களில் சிறுநீர்த் தொற்று உட்பட பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். வயதானவர்களுக்கு வெயிலால் உடல் பலவீனமாகி 'ஹீட் ஸ்ட்ரோக்' எனும் வெப்பத்தாக்கு நோய் வரலாம்.கோடைக் காலத்தில் வியர்வைச் சுரக்காதது, சுரந்தும் ஆவியாகாதது, 'ஹைபோதலமஸ்' சரியாக வேலை செய்யாமல் இருப்பதால் ஹீட் ஸ்ட்ரோக் வர வாய்ப்புகள் அதிகம்.நடுத்தர வயதினருக்கு சிறுநீரகப் பிரச்னைகளும், குழந்தைகளுக்கு தொண்டையில் பாதிப்புகளும் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.வெப்பம் அதிகமுள்ள காலங்களில் அதிக வியர்வை மற்றும் அளவுக்கதிகமாக சிறுநீர் வெளியேறாதால் உடலில் நீர் வறட்சி ஏற்படும்.அதை தவிர்க்க இளநீர், மோர், நன்னாரி சர்பத் போன்ற இயற்கை பானங்கள், தர்பூசணி, வெள்ளரி போன்ற பழங்களைச் சாப்பிடலாம்.

    கோடைக்காலத்தில் மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, அல்சர் பிரச்னைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய நார்ச்சத்து அதிகமுள்ள முழுதானிய உணவு, காய்கறி, பருப்பு வகைகள் நீர்ச்சத்து நிறைந்த பழவகைகளை அதிகம் சாப்பிட வேண்டும்.குறிப்பாக, வழக்கமாக குடிக்கும் அளவை விட சற்று அதிகமாக நீர் அருந்த வேண்டும். சூரிய ஒளியில் உள்ள புறஊதாக் கதிர்களால் கோடைக்காலங்களில் சருமத்தில் அரிப்பு ஏற்படும்.எனவே பகலில் வெளியே செல்லும்போது முகம் மற்றும் கைகளை துணிகளால் மூடியபடி செல்வது நல்லது. தலைக்கு தொப்பி அணிவது குடை பயன்படுத்துவது நல்லது.வயதானவர்கள் வெளியே செல்வதைத் தவிர்க்கலாம். குழந்தைகள் மதியவேளையில் விளையாடுவதை தவிர்த்து மாலையில் விளையாடலாம்.பருத்தி ஆடைகளை அணிவது நல்லது. அடர் நிறத்திலான ஆடைகள், இறுக்கமான ஆடைகள் அணிவதைத் தவிர்க்கவேண்டும்.ஐஸ் வாட்டர் குடிப்பது, உடலுக்கு கேடு விளைவிக்கும். குறிப்பாக ஐஸ்கிரீமைத் தவிர்க்க வேண்டும். ப்ரிட்ஜில் வைத்த தண்ணீரையும் தவிர்க்க வேண்டும். இது தொண்டையில் பாதிப்பை ஏற்படுத்தும்.இவ்வாறு அவர் கூறினார்.ஐஸ் வாட்டர் குடிப்பது உடலுக்கு கேடு விளைவிக்கும். குறிப்பாக ஐஸ்கிரீமைத் தவிர்க்க வேண்டும். ப்ரிட்ஜில் வைத்த தண்ணீரையும் தவிர்க்க வேண்டும். இது தொண்டையில் பாதிப்பை ஏற்படுத்தும். இவ்வாறு அவர்கள் கூறினர். 

    • கொளுத்தும் வெயிலால் மக்கள் தவித்து வருகின்றனர்
    • பகல் நேரத்தில் வெயில் தாக்கம் அதிகம்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் கொளுத்தும் வெயிலால் மக்கள் தவித்து வருகின்றனர் பெரம்பலூர் குடை பிடித்தபடி செல்கின்றனர் கொரோனா ஒருபுறம் அச்சுறுத்தி வரும் அதேவேளையில் சத்தமில்லாமல் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பெரம்பலூர் மாவட்டத்தில் கோடை காலம் ஆரம்பிப்பதற்கு முன்பே சில நாட்களாக வெயில் வாட்டி வதைக்க தொடங்கி விட்டது என்றே கூறலாம். அந்த அளவிற்கு பகல் நேரத்தில் வெயில் தாக்கம் அதிகமாக உள்ளது.

    நேற்றும் வெயில் கடுமையாக கொளுத்தியது. வெயிலின் கொடுமையை தாங்க முடியாமல் சாலையில் நடந்து செல்வோர்கள் குடை பிடித்தபடியும், தலையில் துணி போட்டுக்கொண்டும், பெண்கள் தங்களது துப்பட்டாவால் தலையை மூடிக்கொண்டும் சென்றனர்.

    வாகன ஓட்டிகள் சிரமம் வெயிலின் தாக்கத்தினால் சாலையில் கானல் நீர் தோன்றுகிறது. மேலும் வெயிலோடு சேர்ந்து அனல் காற்றும் வீசுவதால் இரு சக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். வெயிலின் கொடுமையை சமாளிக்க முடியாமல் வெளியில் செல்வதை தவிர்த்து பலர் வீடுகளிலேயே முடங்கினர்.

    • சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி வதைக்கிறது.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி வதைக்கிறது. ஈரோடு உள்ளிட்ட சில நகரங்களில் 110 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்துகிறது. இந்த நிலையில் இன்று முதல் வருகிற 11-ந்தேதி வரை வெயில் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அதிக பட்ச வெப்பநிலை இயல்பில் இருந்து 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிக பட்ச வெப்ப நிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்த பட்ச வெப்பநிலை 27 முதல்28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும் .

    11-ந்தேதி வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணண் தெரிவித்து உள்ளார்.

    • கடும் வெப்பத்தால் பொதுமக்கள் கடும் அவதி
    • உடல் குளிச்சிக்கு கம்பங்கூல் தேடி செல்லும் பொதுமக்கள்

    கரூர்,

    தமிழகத்தில் அதிக அளவு வெயில் தாக்கும் மாவட்டங்களில் ஒன்றாக கரூர் உள்ளது. குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளாக கரூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் க.பரமத்தியில் அதிக அளவு வெயில் பதிவாகி வருகிறது. இந்த நிலையில் கரூரில் வெயில் அளவு 103 டிகிரி அதிகமான காரணத்தால் பொதுமக்கள் பகல் வேளையில் வீட்டில் முடங்கும் நிலை உள்ளது. வெயில் தாக்கத்தை குறைத்துக் கொள்வதற்காக பொது மக்கள் கையில் தண்ணீர் பாட்டில், நீர் மோர் பந்தல், குளிர் பானங்கள், இளநீர், நுங்கு, சர்பத் ஆகியவற்றை கடைகளில் அதிக அளவு வாங்கி அருந்தினர். மேலும் கரூரில் தற்போது வெயில் அதிகமாக இருப்பதால் கரூர் நகர மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியிலும் காந்திகிராமம், வெங்கமேடு, பசுபதிபாளையம், தான்தோன்றிமலை, ராயனூர் ஆகிய பகுதிகளில் புளியமரத்தின் நிழல்களில் அதிகமான அளவு கம்பங்கூழ் விற்பனையாக செய்யப்படுகிறது. அதேபோல் கரூரின் பல்வேறு பகுதிகளில் தர்பூசணி விற்பனையும் சூடுபிடித்துள்ளது.

    • நாகை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்தது.
    • வேதாரண்யத்தில் இன்று ஒரே நாளில் 69 மி.மீ மழை பதிவாகியது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்தது. பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.

    இந்நிலையில் இன்று வேதாரண்யம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக கோடை மழை பெய்தது. மழையால் வேதாரண்யம் நகரில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    வேதாரண்யத்தில் இன்று ஒரே நாளில் 69 மி.மீ மழை பதிவாகியது. இந்த கோடை மழையால் நகரில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

    • மழை, வெயில், குளிர் என 3 சீதோஷ்ண நிலைகளும் அந்தந்த காலத்திற்கு ஏற்ப அதிகரித்து காணப்படும்.
    • 100 டிகிரிக்கு மேல் சுட்டெரிக்கும் வெயிலால் பரிதவிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.

    காங்கயம் :

    கோடை காலம் தொடங்குவதற்கு முன்பாகவே சேவூர் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. மழை, வெயில், குளிர் என 3 சீதோஷ்ண நிலைகளும் அந்தந்த காலத்திற்கு ஏற்ப அதிகரித்து காணப்படும். குறிப்பாக வெயில் மிகச்சாதாரணமாக 100 டிகிரியை கடந்து சுட்டெரிக்கும். அதற்கேற்ப இந்த ஆண்டும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 2 வாரக்காலமாக வெயிலின் தாக்கத்தினை அதிகமாக காண முடிகிறது. பகல் நேரங்களில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு அஞ்சுகிறார்கள்.கோடை தொடங்குவதற்கு முன்பாகவே 100 டிகிரிக்கு மேல் சுட்டெரிக்கும் வெயிலால் வாகன ஓட்டிகள், குழந்தைகள், முதியவர்கள் பரிதவிப்பிற்கு ஆளாகியுள்ளனர். சேவூரில் வெயிலின் தாக்கத்தால் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையோரம் உள்ள மரங்களின் நிழலில் நின்று இளைப்பாரி செல்வதை காண முடிகிறது. பொதுமக்களின் உடல் நலனை பாதுகாக்கும் வகையில் வெள்ளரிப்பிஞ்சு விற்பனை சேவூர் பகுதிகளிலும், சிறு வியாபாரிகள் சைக்கிள்களில் சென்று ஊர் பகுதிகளிலும் விற்பனை செய்து வருகின்றனர். இதனை பொதுமக்கள் வாங்கிச் செல்கின்றனர்.

    கோடை வெயிலின் தாக்கத்தை சமாளிக்க, உடலிலிருந்து வெளியேறும் தண்ணீர் அளவு குறைவை சமாளிக்க பொதுமக்கள், பள்ளி குழந்தைகள் மதிய வேளையில் இந்த வெள்ளரி பிஞ்சுகளை அதிகமாக வாங்கி சாப்பிடுகிறார்கள். குறிப்பாக மற்ற குளிர்பான பொருளை விட விலை மிக குறைவாக (ஒரு வெள்ளரி பிஞ்சு ரூ.10 முதல்) கிடைப்பதால் சூட்டை தணிக்கும் வெள்ளரிப்பிஞ்சு விற்பனை சூடு பிடித்துள்ளது.

    இதுகுறித்து திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த வெள்ளரிப்பிஞ்சு வியாபாரி கூறுகையில், வெள்ளரிப்பிஞ்சு சாறு உடல் உஷ்ணத்தை குறைக்கும். வெள்ளரி பிஞ்சுகளில் நீர் சத்து அதிகமாக இருப்பதால் தண்ணீர் தாகம் எடுக்காது. அதனால் வெயில் காலங்களில் இதை விரும்பி வாங்கி சாப்பிடுகிறார்கள். மார்ச் மாதம் முதல் மே மாதம் முடிய வெள்ளரிப்பிஞ்சு விற்பனை நன்றாக இருக்கும். நாங்கள் சைக்கிள்களில் சென்று ஒவ்வொரு வீதியிலும் விற்பதாலும், வீட்டின் அருகிலேயே கொண்டு சென்று வெள்ளரிப்பிஞ்சு விற்பனை செய்வதாலும், வெயிலுக்கு அஞ்சி வீட்டை விட்டு வெளியே வர முடியாத முதியோர்கள் உள்பட குழந்தைகள் வரை வெள்ளரி பிஞ்சை வாங்கி சாப்பிடுகிறார்கள் என்றார்.

    • வெயில் அதிகம் உள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துடன் வெளியில் சென்று வருகின்றனர்.
    • நீர்மோர் பந்தலை கலெக்டர் மகாபாரதி தொடங்கி வைத்தார்.

    தரங்கம்பாடி:

    தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது.

    வெப்ப சலனம் அதிகம் உள்ள காரணத்தால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துடன் வெளியில் சென்று வருகின்றனர்.

    இந்நிலையில், வெயிலை சமாளிக்க பஸ் நிலையம், ரெயில் நிலையம் போன்ற நகரின் முக்கிய இடங்களில் நீர், மோர் பந்தல் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

    இதேபோல், மயிலாடுதுறை ஆஞ்சநேயர் கோவில் அருகே தன்னார்வ தொண்டு நிறுவனம் ஏற்பாட்டில் அமைக்கப்பட்டுள்ள நீர்மோர் பந்தலை மாவட்ட கலெக்டர் மகாபாரதி தொடங்கி வைத்தார்.

    பின்னர், பொதுமக்களுக்கு நீர்மோர், தர்ப்பூசணி பழங்களை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் செல்வராஜ், நகர்மன்ற உறுப்பினர் சதீஷ்குமார், தன்னார்வலர் ஆனந்தன் மற்றும் கலந்து கொண்டனர்.

    • நீர் நிலைகளில் விளையாட செல்வதை கண்காணித்து தடுத்து கட்டுப்படுத்த வேண்டும்.
    • 24 மணிநேரமும் இயங்கக்கூடிய இலவச எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளி–யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவாரூர் மாவட்டத்தில், கோடைவெயில் மற்றும் எதிர்வரும் காலங்களில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விட இருக்கும் நிலையில், பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள், கோடை வெயிலில் தேவையின்றி வெளியே நடமாடுவதை தவிர்க்க வேண்டும்.

    தற்போது பள்ளிகளில் தேர்வு நடைபெற்று கொண்டிருப்பதால், பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகள் பள்ளிக்கு மிகுந்த பாதுகாப்புடன் அனுப்பும் பொருட்டும், பள்ளி முடிந்தவுடன் வெளியிடங்களுக்கு பெற்றோர்கள் அனுமதியின்றி நீர் நிலைகளில் விளையாட செல்வதை கண்காணித்து தடுத்து கட்டுப்படுத்திட வேண்டும்.

    ஏதேனும், அசம்பாவிதம் ஏற்பட்டால் அதனை உடனுக்குடன் தீயணைப்பு துறையினருக்கு (இலவச எண்.101) காவல்துறை, தீயணைப்புதுறை மற்றும் மருத்துவதுறையை அழைக்க (இலவச எண்.108), காவல் துறை மற்றும் தீயணைப்புதுறையை அழைக்க (இலவச எண்.112) என்ற 24 மணிநேரமும் இயங்கக்கூடிய இலவச எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும்.

    மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24/7 நாள் முழுவதும் இயங்கக்கூடிய 04366 – 226623 / 1077 கட்டணமில்லா இலவச தொலைபேசி எண்களுடன் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.

    கோடைகாலங்களில் அதிக வெப்ப சலனத்தினால் திருவாரூர் மாவட்டத்தில் உயிர்ச்சேதங்கள் ஏதுமின்றி இருக்க உதவ வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது.
    • வீடுகளிலும் இரவு நேரங்களில் வெப்ப காற்று வீசி வருவதால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. காலை 8 மணிக்கு தொடங்கும் வெயிலின் தாக்கம் மாலை 5 மணி வரை தொடர்கிறது. குறிப்பாக 12 மணி முதல் 3 மணி வரை வெயிலின் தாக்கம் உச்சத்தில் உள்ளது.

    வெயிலுடன் அனல் காற்று வீசி வருவதால் வாகன ஓட்டிகள் குழந்தைகள், முதியவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    வீடுகளிலும் இரவு நேரங்களில் வெப்ப காற்று வீசி வருவதால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

    இப்போதே வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்போது இனி மே மாதம் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயிலின் தாக்கம் இன்னும் கடுமையாக இருக்கும் என மக்கள் இப்பவே அச்சப்பட்டு வருகின்றனர்.

    குறிப்பாக கடந்த சில நாட்களாக ஈரோடு மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிக அளவில் பதிவாகி 100 டிகிரி வரை வாட்டி வதைத்து வருகிறது. புழுக்கத்தால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். கடந்த 2 நாட்களாக மாவட்டத்தில் புறநகர் பகுதியில் லேசாக மழை பெய்து வருகிறது.

    எனினும் வெயிலின் தாக்கம் தொடர்ந்து நீடித்து வருகிறது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மக்கள் கரும்பு பால், இளநீர், தர்பூசணி பழம் ஆகியவற்றை விரும்பி பருகி வருகின்றனர்.

    • சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை அதிகாலையில் குளிர், சூரிய உதயத்திற்கு பிறகு கடும் வெயில் என்று மாறுபட்ட சீதோஷ்ணம் நிலவி வருகிறது.
    • இந்நிலையில் நேற்று 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தியது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

    சேலம்:

    சேலம், நாமக்கல்லில் கடந்த 2 நாட்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தியதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

    தமிழகத்தில் ஏப்ரல், மே மாதங்கள் முழுமையான கோடை காலமாக இருக்கும். ஆனால் நடப்பாண்டில் ஏப்ரல் துவங்கும் முன்பே, கடும் வெயில் கொளுத்தி வருகிறது.

    இதில் சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை அதிகாலையில் குளிர், சூரிய உதயத்திற்கு பிறகு கடும் வெயில் என்று மாறுபட்ட சீதோஷ்ணம் நிலவி வருகிறது.

    இந்நிலையில் நேற்று 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தியது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

    நேற்று முன்தினம் சேலம் மாவட்டத்தில் 98 டிகிரி பதிவான நிலையில், நேற்று 100.6 டிகிரி வெயில் பதிவானது. அதே நேரத்தில் நாமக்கல்லில் நேற்று முன்தினம் 100.4 டிகிரி வெயில் பதிவான நிலையில், நேற்று 98.6 வெயில் பதிவானது.

    கடந்த 2 நாட்களில் 2 மாவட்டங்களிலும் வெயில் உச்சம் தொட்டுள்ளது. இந்த வெயிலால் வாகன ஓட்டிகள், தள்ளு வண்டி கடை உரிமையாளர்கள், சாலையோர வியாபாரிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். இதனால் இளநீர், கூல்டிரிங் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. நேற்று இரவு வீடுகளில் புழுக்கம் அதிகமாக காணப்பட்டது. 

    • கோடைகாலம் தொடங்கும் முன்னரே தற்போது பழனியில் வெயில் வாட்டி வதைக்கிறது.
    • பழனி மலைக்கோவிலில் தரிசனத்திற்காக நீண்டநேரம் வரிசையில் காத்திருக்கும் சூழல் ஏற்படுகிறது.

    பழனி:

    பழனி தண்டாயுதபாணிசுவாமி கோவிலுக்கு விடுமுறை நாட்கள் மட்டுமின்றி திருவிழா காலங்களிலும் வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து அதிகளவிலான பக்தர்கள் வருகின்றனர். கோடைகாலம் தொடங்கும் முன்னரே தற்போது பழனியில் வெயில் வாட்டி வதைக்கிறது.

    இதனால் பழனி மலைக்கோவிலில் தரிசனத்திற்காக நீண்டநேரம் வரிசையில் காத்திருக்கும் சூழல் ஏற்படுகிறது. வெளிப்பிரகாரத்தை சுற்றிவரும் பக்தர்களும் சிரமப்படுகின்றனர். எனவே பக்தர்களை வெயிலில் இருந்து காக்கவும், நிழலில் இளைப்பாற வசதியாகவும் மலைக்கோவில் அலுவலகத்தை ஒட்டியுள்ள பகுதியில் தகரத்தில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் தரிசனம் முடிந்து வெளிப்பிரகாரத்தை சுற்றி வரும் பக்தர்கள் பாதத்தில் சூடு ஏற்படுவதை தவிர்க்கவும், தேங்காய் நாரினால் தயாரிக்கப்பட்ட தரைவிரிப்பு விரிக்கப்பட்டுள்ளது. அவ்வப்போது இந்த தரைவிரிப்பில் கோவில் பணியாளர்கள் தண்ணீர் தெளிப்பதால் பிரகாரத்தை சிரமமின்றி பக்தர்கள் சுற்றி வருகின்றனர்.

    இருப்பினும் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தண்ணீர் தெளித்த சிறிதுநேரத்திலேயே ஆவியாகி விடுகிறது. இதனால் வெளிப்பிரகாரத்தை சுற்றிலும் கூலிங்பெயிண்ட் அடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. படிப்பாதை, யானைப்பாதை வழியாக மலைக்கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு வெயில் தெரியாமல் இருக்க வடக்கு கிரிவீதியில் 500 மீ நீளத்திற்கு தற்காலிக நிழற்பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

    • டெல்டா மாவட்டங்களில் இரு தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது.
    • வெயிலின் தாக்கம் குறைந்து மிதமான குளிர்ந்த காற்று வீசியது.

    தஞ்சாவூர்:

    கோடை காலம் ஆரம்பிக்கும் முன்பே தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கும் அதிகரித்து காணப்பட்டது.

    இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் இரு தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

    அதன்படி, தஞ்சை மாவட்டத்தில் இன்று காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காட்சியளித்தது.

    திடீரென பகல் 12 மணியளவில் தஞ்சையில் மிதமான சாரல் மழை ெபய்தது.

    இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து மிதமான குளிர்ந்த காற்று வீசியது. இந்த மழை சுமார் அரை மணி நேரம் நீடித்தது.

    ×