search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 118697"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பவுர்ணமி அன்று திருவண்ணாமலையை சுற்றி கிரிவலம் வருவது சிறப்பானது.
    • புரட்டாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் வரும் ஏராளமான பக்தர்கள் இங்குள்ள மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள்.

    இந்தநிலையில், பக்தர்களுக்கு புரட்டாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி வருகிற 9-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4.06 மணிக்கு தொடங்கி 10-ந்தேதி (திங்கட்கிழமை) அதிகாலை 3.09 மணி வரை பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கார்த்திகை தீபத் திருவிழா நவம்பர் 24-ந்தேதி தொடங்கி டிசம்பர் 10-ந் தேதி வரை நடக்கிறது.
    • மகா தீபம் டிசம்பர் மாதம் 6-ந்தேதி மலையின் உச்சியில் ஏற்றப்பட உள்ளது.

    திருவண்ணாமலை பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது.

    இந்த கோவிலில் பல்வேறு விழாக்கள் நடைபெற்றாலும் கார்த்திகை மாதத்தில் வரும் தீபத் திருவிழா மிகவும் விசேஷமானதாகும். இவ்விழாவிற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.

    இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா வருகிற நவம்பர் மாதம் 24-ந் தேதியன்று தொடங்கி டிசம்பர் மாதம் 10-ந் தேதி வரை நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீபம் டிசம்பர் மாதம் 6-ந் தேதி மாலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையின் உச்சியில் ஏற்றப்பட உள்ளது.

    தீபத்திருவிழாவினை முன்னிட்டு பூர்வாங்க பணிகள் தொடங்குவதற்கான பந்தக்கால் நடும் முகூர்த்த விழா இன்று அதிகாலை 5.30 மணிக்கு மேல் நடைபெற்றது. விழாவையொட்டி சம்பந்த விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்யப்பட்டு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு பந்த கால் நடும் நிகழ்ச்சிக்கான சிறப்பு பூஜைகள் அங்கு வைத்து செய்யப்பட்டு பின்பு அங்கிருந்து ஊர்வலமாக வந்து ராஜகோபுரம் முன்பு பந்தக்கால் முகூர்த்தம் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத நடைபெற்றது.

    விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து கார்த்திகை தீப திருவிழாவிற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டன

    விழாவிற்கான. ஏற்பாடுகளை அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் அசோக்குமார் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • நாளை தொடங்கி வருகிற 4-ந்தேதி வரை நடக்கிறது.
    • 4-ந்தேதி மகிஷாசூரமர்த்தினி அலங்காரம் நடைபெற உள்ளது.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா வருகிற 26-ந் தேதி (திங்கட்கிழமை) தொடங்கி வருகிற 4-ந் தேதி வரை நடைபெற உள்ளது. விழாவையொட்டி கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் மாலையில் பராசக்தி அம்மனுக்கு பல்வேறு அலங்காரம் செய்யப்பட உள்ளது.

    வருகிற 26-ந் தேதி மாலை பராசக்தி அம்மன் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு வாண வேடிக்கையுடன் மங்கள வாத்தியங்கள் முழங்க திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    தொடர்ந்து 27-ந் தேதி ராஜராஜேஸ்வரி அம்மன் அலங்காரமும், 28-ந் தேதி கெஜலட்சுமி அலங்காரமும் 29-ந் தேதி மனோன்மணி அலங்காரமும், 30-ந் தேதி ரிஷப வாகன அலங்காரம் மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகமும் செய்யப்பட உள்ளது.

    தொடர்ந்து 1-ந் தேதி ஆண்டாள் அலங்காரமும், 2-ந் தேதி சரஸ்வதி அலங்காரமும், 3-ந் தேதி லிங்க பூஜை அலங்காரமும், 4-ந் தேதி மகிஷாசூரமர்த்தினி அலங்காரமும் நடைபெற உள்ளது.

    மேலும் அன்று காலையில் திருக்கல்யாண மண்டபத்தில் பராசக்தி அம்மனுக்கு அபிஷேகம் நடக்கிறது. மாலையில் சரஸ்வதி பூஜை மற்றும் உண்ணாமலை அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட உள்ளது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் அசோக்குமார் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

    • பஞ்சமூர்த்திகளின் 10 நாள் உற்சவம் நடைபெறும்.
    • கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 6-ந்தேதி நடைபெறவுள்ளது.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா துர்க்கை அம்மன் உற்சவத்துடன் வரும் நவம்பர் 24-ம்தேதி தொடங்குகிறது. மூலவர் சன்னதி முன்பு உள்ள தங்கக் கொடிமரத்தில், கொடியேற்றம் நடைபெற்றதும், பஞ்சமூர்த்திகளின் 10 நாள் உற்சவம் நடைபெறும்.

    இதற்கிடையில், கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த, பஞ்ச ரதங்களின் மகா தேரோட்டம், கொடியேற்றத்துக்கு பிறகு வரும் 7-ம் நாள் உற்சவத்தில் நடைபெறவுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான கார்த்திகை தீபத் திருவிழா வரும் டிசம்பர் 6-ந் தேதி நடைபெறவுள்ளது.

    2,668 அடி உயரம் உள்ள, மலையே மகேசன் என போற்றப்படும் அண்ணாமலை உச்சியில் மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. முன்னதாக, கோவிலில் பரணி தீபம் ஏற்றப்படும்.

    இந்நிலையில், கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி பூர்வாங்கப் பணிகளை மேற்கொள்வதற்காக, பந்தக்கால் முகூர்த்தம் வரும் 30-ந்தேதி காலை நடைபெறவுள்ளது. அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதியில் அதிகாலை 5.30 மணிக்கு மேல் 7 மணிக்குள் கன்னியா லக்கினத்தில் பந்தக்கால் முகூர்த்தம் நடைபெறவுள்ளது.

    மங்கல இசை ஒலிக்க, சிவாச் சாரியார்கள் வேத மந்திரங்களை சிறப்பு முழங்க பந்தக்காலுக்கு அபிஷேகம் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • அருணாசலேஸ்வரர் கோவிலில் 50 ரூபாய் கட்டண வழி மட்டும் உள்ளது.
    • வெளிமாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் அதிகமாக வந்திருந்தனர்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். நேற்று புரட்டாசி மாத பிறப்பு என்பதால் அருணாசலேஸ்வரர் கோவில் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    இதனால் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பொது தரிசனம் மட்டுமின்றி ரூ.50-க்கான கட்டண தரிசன வழியிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    கோவிலில் முக்கிய பிரமுகர்கள் (வி.ஐ.பி.) சாமி சன்னதியில் உள்ள துர்க்கை அம்மன் அருகில் உள்ள கேட்டின் வழியாக தரிசனத்திற்காக செல்வார்கள். நேற்று அந்த பகுதியிலும் ஏராளமானோர் காத்திருந்து சென்றனர். கோவிலில் முக்கிய பிரமுகர்களுக்கு முக்கியத்துவம் அளித்து தரிசனத்திற்கு அழைத்து செல்லப்பட்டதால் பொது மற்றும் கட்டண தரிசன வழியில் வந்த பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது. இதனால் அவர்கள் சாமி தரிசனம் செய்ய 2 மணி நேரத்திற்கு மேலானதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையில் வரிசையில் காத்திருந்த பக்தர் ஒருவர், "தமிழக கோவில்களில் காசு மட்டுமே பிரதானம். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 50 ரூபாய் கட்டண வழி மட்டும் உள்ளது. 2 மணி நேரம் காத்திருந்தும் தரிசிக்க முடியவில்லை. இதற்கு அருணாசலேஸ்வரரே முடிவு கட்டுவார்" என்று டுவிட்டர் மூலம் முதல்- அமைச்சருக்கும், இந்து சமய அறநிலையத்துறைக்கும் பதிவிட்டு இருந்தார்.

    இதுகுறித்து அறநிலையத்துறையில் இருந்து கோவில் நிர்வாகத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் கோவில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களிடம் சலசலப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து முக்கிய பிரமுகர்கள் சென்ற சிறப்பு தரிசன வழியை கோவில் பணியாளர்கள் அடைத்து விட்டு பொது மற்றும் கட்டண தரிசன வழியில் இருந்த பக்தர்களை விரைந்து சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்தனர். அதன் பின்னர் பக்தர்கள் விரைவாக சாமி தரிசனம் செய்தனர்.

    நேற்று வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் அதிகமாக வந்திருந்தனர். கோவிலில் அம்மணி அம்மன் கோபுரம் நுழைவு வாயில் அருகிலும், திருமஞ்சன கோபுரம் நுழைவு வாயில் அருகிலும் பார்க்கிங் வசதி உள்ளது. நேற்று பகலில் அம்மணி அம்மன் கோபுரம் அருகில் கார் மற்றும் வேனில் வந்த பக்தர்கள் பார்க்கிங் செய்ய போதிய இட வசதி இல்லாததால் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து அங்கிருந்த ஆட்டோ டிரைவர்கள் மற்றும் பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலை சீர் செய்ய முயற்சி செய்தனர். அப்போது அங்கு அதிக ஒலியுடன் சைரன் அடித்தபடி அதிவிரைவு படை போலீசார் வேனில் வந்தனர். போலீஸ் வாகனம் வேகமாக வருவதை கண்டதும் அங்கிருந்த கார் மற்றும் ஆட்டோ டிரைவர் செய்வது அறியாமல் அம்மணி அம்மன் கோபுரம் பகுதியில் இருந்து பே கோபுரம் செல்லும் வழியில் ஒருவர் பின் ஒருவர் செல்ல முயன்றதால் மேலும் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து போலீசார் வாகனத்தில் இருந்து இறங்கி வந்து போக்குவரத்தை சீர் செய்தனர். இதனால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • கிரிவலம் செல்லும் பக்தர்கள் அஷ்டலிங்க கோவில்களில் வழிபாடு செய்வார்கள்.
    • இதில் பக்தர்கள் மற்றும் கோவில் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையை சுற்றி பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

    14 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த மலை சுற்றும் பாதையில் இந்திர லிங்கம், அக்னிலிங்கம் எமலிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசான்ய லிங்கம் உள்ளிட்ட அஷ்ட லிங்க கோவில்களும் மற்றும் சூரியன், சந்திர லிங்கம் கோவில்களும் உள்ளன.

    கிரிவலம் செல்லும் பக்தர்கள் அந்த கோவில்களில் வழிபாடு செய்வார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருவண்ணாமலைக்கு வந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

    இதைதொடர்ந்து அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் அசோக்குமார் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய கலசம் வைத்து மங்கள வாத்தியங்கள் முழங்க சிறப்பு பூஜை செய்தனர்.

    பின்னர் கலசத்திற்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு அதனை சிவாச்சாரியார்கள் சாமி சன்னதியை சுற்றி வந்தனர்.

    பின்னர் கும்பாபிஷேக திருப்பணிகளுக்கான பணியை தொடங்கி வைத்தனர். இதில் பக்தர்கள் மற்றும் கோவில் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    இதைதொடர்ந்து அஷ்ட லிங்க கோவில்களில் கும்பாபிஷேகம் செய்வதற்கான திருப்பணிகள் நடைபெற உள்ளது.

    • பஞ்ச பூதஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது.
    • சுமார் 4 மணி நேரம் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    பஞ்ச பூதஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    பவுர்ணமி மட்டுமின்றி விஷேச நாட்களில் ஏராளமான பக்தர்கள் 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் கிரிவலம் செல்வார்கள். ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் இக்கோவிலில் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.

    இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி மாலை 6.25 மணியளவில் பவுர்ணமி தொடங்கி நேற்று முன்தினம் மாலை 4.35 மணிக்கு நிறைவடைந்தது. பவுர்ணமியையொட்டி கடந்த 9-ந் தேதி முதல் திருவண்ணாமலையில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் இருந்தனர். மேலும் கோவிலிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து 3-வது நாளாக நேற்றும் திருவண்ணாமலையில் பக்தர்கள் பலர் கிரிவலம் சென்றனர். கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுமார் 4 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    வரிசையில் காத்திருக்க முடியாமல் சிலர் இடையில் நுழைவதற்காக இரும்பு தடுப்பு கம்பிகள் மேல் ஏறி இறங்கி சென்றனர். இதனால் வரிசையில் வந்த பக்தர்கள் ஆத்திரம் அடைந்து கூச்சலிட்டனர். இதையடுத்து கோவில் பணியாளர்கள் வந்து அதனை சரி செய்தனர். இதனால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

    • பக்தர்கள் 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட மலை சுற்றும் பாதையில் கிரிவலம் செல்வார்கள்.
    • அஷ்ட லிங்க கோவில்களில் பக்தர்கள் சாமி தாிசனம் செய்தவாறு கிரிவலம் சென்றனர்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவிலின் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி பவுர்ணமி மட்டுமின்றி விஷேச நாட்களில் ஏராளமான பக்தர்கள் 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட மலை சுற்றும் பாதையில் கிரிவலம் செல்வார்கள்.

    இந்த மாதத்திற்கான பவுர்ணமி நேற்று முன்தினம் மாலை 6.25 மணியளவில் தொடங்கியது. இரவு 7 மணிக்கு மேல் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. இரவில் கிரிவலப்பாதையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் மற்றும் 16 கால் மண்டபத்தின் முன்பு கற்பூரம் ஏற்றி வழிப்பட்டனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம் சென்றனர்.

    பவுர்ணமி நேற்று மாலை 4.35 மணி வரை இருந்தால் பக்தர்கள் இரவு வரை தொடர்ந்து கிரிவலம் சென்றனர். கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்க கோவில்களில் அவர்கள் சாமி தாிசனம் செய்தவாறு கிரிவலம் சென்றனர்.

    தொடர்ந்து அருணாசலேஸ்வரர் கோவிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கோவிலை சுற்றியுள்ள ஒத்தவாடை தெருவை சுற்றி பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    • திருவண்ணாமலையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
    • இந்த மாதத்திற்கான பவுர்ணமி நாளை தொடங்குகிறது.

    திருவண்ணாமலை அருணாலேஸ்வரர் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

    மேலும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று கோவிலில் சாமி தரிசனம் செய்வார்கள்.

    இந்த மாதத்திற்கான பவுர்ணமி நாளை(வெள்ளிக்கிழமை) மாலை சுமார் 6.20 மணியளவில் தொடங்கி மறுநாள் மாலை 4.30 மணியளவில் நிறைவு பெறுகின்றது. பக்தர்கள் கிரிவலம் செல்வதையொட்டி அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.

    • பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சுமார் 2 மணி நேரத்திற்கு மேலானதாக கூறப்படுகிறது.
    • அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். விடுமுறை நாட்களில் கோவிலில் வழக்கத்தை விட அதிகமான பக்தர்கள் கூட்டம் காணப்படும். இந்த நிலையில் சுதந்திர தினத்தையொட்டி நேற்று முன்தினம் முதல் தொடர்ந்து 3 நாட்கள் அரசு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

    இதனால் நேற்று அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் பல மடங்கு அதிகரித்து காணப்பட்டது. மேலும் பவுர்ணமி கடந்த 11-ந் தேதி காலை 10.16 மணிக்கு தொடங்கி மறுநாள் 12-ந் தேதி காலை 8 மணியளவில் நிறைவடைந்தது. பவுர்ணமி நாட்களில் திருவண்ணாமலைக்கு வர முடியாத பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான நேற்று திருவண்ணாமலைக்கு வருகை தந்து அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி தனித்தனியாக கிரிவலம் சென்றனர்.

    இதனாலும் கோவிலில் பக்தர்களின் வருகை நேற்று அதிகமாக காணப்பட்டது. பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சுமார் 2 மணி நேரத்திற்கு மேலானதாக கூறப்படுகிறது. தொடர்ந்து இரவு வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்தவாறு சென்றனர்.

    இன்று சுதந்திர தின விடுமுறை என்பதால் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகமாக காணப்படும் என்பதால் தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்துள்ளனர்.

    • தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர்.
    • பக்தர்கள் கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்க கோவில்களில் சாமி தரிசனம் செய்தனர்.

    திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். மேலும் பவுர்ணமி நாட்களில் கோவிலின் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி லட்சக்கணக்கான பக்தர்கள் 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட மலை சுற்றும் பாதையில் கிரிவலம் செல்வார்கள்.

    இந்த மாதத்திற்கான பவுர்ணமி நேற்று முன்தினம் காலை 10.16 மணிக்கு தொடங்கி நேற்று காலை 8 மணியளவில் நிறைவடைந்தது. பவுர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் நேற்று முன்தினம் கிரிவலம் சென்றனர். தொடர்ந்து நேற்று காலை சுமார் 9 மணி வரை விடிய, விடிய பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

    அப்போது பக்தர்கள் கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்க கோவில்களில் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து நேற்று அருணாசலேஸ்வரர் கோவிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    • பவுர்ணமி கிரிவலத்தையொட்டி தற்காலிக பஸ் நிலையங்களில் பஸ்கள் நிறுத்தப்பட்டன.
    • பக்தர்கள் ராஜகோபுரம் மற்றும் 16 கால் மண்டபத்தின் முன்பு கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.

    திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவிலின் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி பவுர்ணமி மட்டுமின்றி விசேஷ நாட்களில் ஏராளமான பக்தர்கள் 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட மலையை சுற்றும் பாதையில் கிரிவலம் செல்வார்கள்.

    இந்த மாதத்திற்கான பவுர்ணமி நேற்று காலை 10.16 மணிக்கு தொடங்கியது. இதனால் நேற்று காலையில் இருந்தே பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடங்கினர். நேற்று பகலில் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் இருந்தனர்.

    மேலும் கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்க கோவில்களிலும், அருணாசலேஸ்வரர் கோவிலிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    மாலையில் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. இரவில் கிரிவலப்பாதையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றதால் கிரிவலப்பாதையில் ஆங்காங்கே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

    பவுர்ணமி கிரிவலத்தையொட்டி தற்காலிக பஸ் நிலையங்களில் பஸ்கள் நிறுத்தப்பட்டன. பக்தர்கள் அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் மற்றும் 16 கால் மண்டபத்தின் முன்பு கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். பவுர்ணமி இன்று காலை 8 மணி வரை இருந்ததால் பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம் சென்றனர்.

    மேலும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    ×