search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 118868"

    அவனியாபுரத்தில் வீட்டின் கதவை உடைத்து பணம் மற்றும் வெள்ளி பொருட்களை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
    அவனியாபுரம்:

    அவனியாபுரம் சந்தோஷ் நகரைச் சேர்ந்தவர் ஞானசி காமணி (வயது 55). இவரது மனைவி ஜான்ஸ் பெல் ராணி. கோடை விடுமுறை யை முன்னிட்டு இவர்கள் 10 நாட்கள் நாகர்கோவில் சென்றனர்.

    நேற்று காலை அவர்கள் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப் பதை கண்டு அதிர்ச்சி அடைந்த னர்.

    உள்ளே சென்று பார்த்த போது பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த பொருட்கள் சிதறிக் கிடந் தன.

    இது குறித்து அவனியா புரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்tசெல்வன், போலீஸ்காரர்கள் ராஜபாண்டி, முனியாண்டி ஆகியோர் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர்.

    பீரோவில் இருந்த 6 பட்டுச்சேலைகள், வெள்ளி பொருட்கள், ரூ. 20 ஆயிரம் ரொக்கம் கொள்ளை போயிருப்பதாக ஜான்ஸ் பெல்ராணி தெரிவித்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து திருடிய மர்ம மனிதர்களை தேடி வருகின்றனர்.
    புதுவை சத்யா நகரில் ஆட்டோ டிரைவரின் வீட்டில் புகுந்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.
    புதுச்சேரி:

    புதுவை சத்யா நகர் 3-வது குறுக்கு தெருவில் ஒரு வாடகை வீட்டில் 2-வது தளத்தில் சீனிவாசன் (வயது 41) என்பவர் வசித்து வருகிறார். ஆட்டோ டிரைவரான இவர் நேற்று காலை ஆட்டோ தொழிலுக்கு சென்று விட்டார்.

    அவரது மனைவி தமிழரசி வீட்டின் கீழ் தளத்தில் படிக்கட்டில் அமர்ந்து அருகில் குடி யிருந்தவர்களிடம் பேசி விட்டு பின்னர் வீட்டுக்கு சென்றார்.

    அப்போது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பீரோவில் வைத்திருந்த 6 பவுன் நகை மற்றும் ரூ.30 ஆயிரம் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.2 லட்சமாகும்.

    தமிழரசி பக்கத்து வீட்டுக் காரர்களிடம் பேசிக் கொண்டிருந்ததை யாரோ மர்ம நபர்கள் நோட்டமிட்டு இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் உருளையன் பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாகர்கோவில் அருகே வீட்டை உடைத்து 11 பவுன் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆரல்வாய்மொழி:

    ஆரல்வாய்மொழி அருகே குமாரபுரத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 52), ஆட்டு பண்ணை வைத்துள்ளார். இவரது மனைவி சண்முகவடிவு.

    இவர்களது மகள் ஜெயராமன். இவரை சாத்தான்குளத்தில் திருமணம் செய்து கொடுத்துள்ளனர். தற்போது கோடை விடுமுறையையொட்டி ஜெயராமன் தனது 5 வயது மகளுடன் தனது பெற்றோர் வீட்டிற்கு வந்திருந்தார். ஜெயராமன் தனது நகைகளை வீட்டில் இருந்த பீரோவில் கழற்றி வைத்திருந்தார்.

    நேற்றிரவு சுப்பிரமணியன் ஆட்டு பண்ணைக்கு தூங்கச் சென்றார். வீட்டில் சண்முகவடிவு, ஜெயராமன் மற்றும் அவரது மகள் ஆகியோர் தூங்கினர். அதிகாலையில் வீட்டின் பின் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே புகுந்தனர்.

    வீட்டில் பீரோவில் இருந்த பொருட்களை சிதறியடித்த கொள்ளையர்கள் அதில் இருந்த 11 பவுன் நகை மற்றும் ரூ.6,500 ரொக்கப்பணத்தை திருடி விட்டு தப்பியோடி விட்டனர். இன்று காலை கண்விழித்து பார்த்த சண்முக வடிவு கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து ஆரல்வாய் மொழி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். கொள்ளை நடந்த வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளும் பதிவு செய்யப்பட்டது. கொள்ளை சம்பவம் குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

    ஆரல்வாய்மொழி பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 6 வீடுகளில் அடுத்தடுத்து கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். இந்த கொள்ளை சம்பவங்களில் உள்ளூர் கொள்ளையர்கள் கைவரிசை காட்டி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    எனவே பழைய கொள்ளையர்களின் பட்டியலை தயாரித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
    ×