search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 119461"

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார் பிரியங்கா காந்தி. #PriyankaGandhi #KashiVishwanathtemple
    லக்னோ:

    காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள பிரியங்காவுக்கு உத்தரபிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதியில் உள்ள 42 பாராளுமன்ற தொகுதிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

    மிகவும் பலவீனமாக உள்ள இந்த 42 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியை வளர்க்கும் பொறுப்பு பிரியங்காவிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் மற்ற மாநிலங்களில் பிரசாரம் செய்வதை தவிர்த்து விட்டு இந்த 42 தொகுதிகளிலும் பிரியங்கா அதிக கவனம் செலுத்த தொடங்கி உள்ளார்.

    முதல் கட்டமாக அவர் நேற்று முன்தினம் உத்தரபிரதேசத்தில் கங்கையில் படகு பிரசாரத்தை தொடங்கினார். பிரயாக்ராஜ் பகுதியில் உள்ள மனையா காட்டில் இருந்து அவர் படகு பயணத்தை தொடங்கினார். மொத்தம் 3 நாட்கள் படகில் சென்று வாரணாசியை சென்றடைகிறார்.



    பிரியங்கா காந்தி மேற்கொண்டுள்ள படகு பயணத்தின் இறுதி நாளான இன்று வாரணாசிக்கு சென்றார். அங்குள்ள ராம் நகரில் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி  வீட்டுக்கு சென்றார். அங்குள்ள லால்பகதூர் சாஸ்திரி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இதைத்தொடர்ந்து, காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்றார். அங்கு காசி விஸ்வநாதரை வழிபட்டு தரிசனம் செய்தார்.  #PriyankaGandhi #KashiVishwanathtemple
    தடை செய்யப்பட்ட வயதுடைய 2 பெண்கள் மட்டுமே சபரிமலையில் தரிசனம் செய்ததாக தேவசம் போர்டு மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார். #KadakampallySurendran #Sabarimala
    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்து வந்த நிலையில், கடந்த மாதம் 2-ந் தேதி தடை செய்யப்பட்ட வயதுடைய 2 பெண்கள் தரிசனம் செய்தனர்.

    இதைப்போல சபரிமலையில் சமீபத்தில் நடந்து முடிந்த மகரவிளக்கு-மண்டல பூஜை காலத்தில் தடை செய்யப்பட்ட வயதுடைய 51 பெண்கள் தரிசனம் செய்ததாக சுப்ரீம் கோர்ட்டில் மாநில அரசு தெரிவித்தது. இது மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக மாநில சட்டசபையில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின.



    இதற்கு தேவசம் போர்டு மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் எழுத்து மூலம் பதிலளித்தார். அதில் அவர், சபரிமலையில் சமீபத்தில் நடந்து முடிந்த சீசன் காலத்தில் தடை செய்யப்பட்ட வயதுடைய 2 பெண்கள் மட்டுமே தரிசனம் செய்ததாக கூறினார். சசிகலா (வயது 47) என்ற இலங்கைப்பெண் சபரிமலையில் தரிசனம் செய்ததாக வெளியான தகவல் குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

    மந்திரியின் இந்த தகவலால் சபரிமலையில் தரிசனம் செய்த தடை செய்யப்பட்ட வயதுடைய பெண்களின் எண்ணிக்கையில் குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது. #KadakampallySurendran #Sabarimala

    சபரிமலையில் 17 இளம்பெண்கள் மட்டுமே தரிசனம் செய்ததாக புதிய ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது. #Sabarimala #SC
    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை செயல்படுத்த கேரள மாநில அரசு முயற்சி மேற்கொண்டது. இதை எதிர்த்து ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தினர். பக்தர்களின் போராட்டத்தை கட்டுப்படுத்தி போலீசார் இளம்பெண்களை சபரிமலைக்கு அழைத்துச் சென்றனர்.



    இது தொடர்பாக கேரள அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த அறிக்கையில் 51 இளம்பெண்கள் சபரிமலையில் தரிசனம் செய்ததாக அறிவித்தனர்.

    சபரிமலையில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு திருவிழா காலங்களில் 51 இளம்பெண்களும் தரிசனம் செய்ததாகவும் தெரிவித்த கேரள அரசு அவர்களின் பெயர் விவரம் மற்றும் ஆதார் அட்டை விவரங்களையும் பட்டியலில் குறிப்பிட்டிருந்தது.

    இந்த பட்டியல் வெளியானதும் அதில், பல்வேறு முரண்பாடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 50 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் சில ஆண்களின் பெயர்கள் பட்டியலில் இருந்தது தெரிய வந்தது.

    பட்டியலில் ஏற்பட்ட குளறுபடி கேரள அரசுக்கு பெரும் பிரச்சினையை ஏற்படுத்தியது. இதையடுத்து பட்டியலில் உள்ள குளறுபடியை கண்டறிந்து புதிய பட்டியல் தயாரிக்க கேரள அரசு உத்தரவிட்டது.

    இதற்காக தலைமை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி. ஆகியோர் அடங்கிய புதுக்குழுவும் அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் ஏற்கனவே வெளியான 51 பேர் பட்டியலை ஆய்வு செய்தனர். அதில், 34 பேரை விடுவித்தனர். மீதம் 17 பேரே சபரிமலை சென்று ஐயப்பனை தரிசித்ததாக தெரிவித்தனர். இந்த புதிய பட்டியல் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படுகிறது. #Sabarimala #SC

    சபரிமலையில் இலங்கை பெண் சாமி தரிசனம் செய்தார் என்பது போலீசார் வெளியிட்ட வீடியோ பதிவின் மூலம் தற்போது தெரிய வந்துள்ளது. #SabarimalaTemple #SrilankanWoman
    திருவனந்தபுரம்:

    சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்ய சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்து வருகிறது. 2 நாட்களுக்கு முன்பு பிந்து, கனகதுர்கா என்ற 2 இளம்பெண்கள் போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலை சென்றனர்.

    18-ம் படி ஏறாமல் பின்பக்க பாதை வழியாகச் சென்று சாமி தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து கோவில் நடை மூடப்பட்டு பரிகார பூஜை நடத்தப்பட்டது.

    சபரிமலையில் பெண்கள் நுழைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று கேரளாவில் முழு அடைப்பு போராட்டமும் நடந்தது.

    இந்தநிலையில் இன்று இலங்கை காரத்தீவைச் சேர்ந்த தமிழ் பெண் சசிகலா (வயது 47) என்பவர் சன்னிதானம் சென்று சாமி தரிசனம் செய்தார். இந்த தகவல் வெளியானதும் சபரிமலையில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.

    மரக்கூட்டம் பகுதியில் இலங்கை தமிழ் பெண் சசிகலாவை போராட்டக்காரர்கள் வழிமறித்தனர். அப்போது அவர் சபரிமலை சென்றது உண்மை. ஆனால் 18-ம் படி ஏறவில்லை. சாமி தரிசனமும் செய்யவில்லை என்றார். தன்னுடன் வந்த கணவரும், குழந்தையும் மட்டுமே 18-ம் படியேறி தரிசனத்துக்கு சென்றதாக கூறினார்.

    இதனால் இலங்கை தமிழ் பெண் சன்னிதானம் சென்ற 18-ம் படி ஏறி சாமி தரிசனம் செய்தாரா? என்ற கேள்வி எழுந்தது.

    இதையடுத்து சபரிமலை சன்னிதானத்தில் உள்ள கண்காணிப்பு காட்சிகள் மற்றும் ஊடகங்கள் பதிவு செய்த காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது சசிகலாவின் கணவரும், அவரது மகனும் இன்று காலையில் சன்னிதானம் வழியாக செல்லும் காட்சிகள் காணப்பட்டது. அவர்கள் சென்ற சில நிமிடங்களுக்கு பிறகு சசிகலா தனியாக நடந்து செல்லும் காட்சிகளும் பதிவாகி இருந்தன.

    இதுபற்றி போலீசாரிடம் நிருபர்கள் கேட்டபோது அவர்கள் அதை மறுக்கவில்லை. மாறாக இலங்கை பெண் சசிகலாவுக்கு 47 வயதே ஆவதால் அவரை போராட்டக்காரர்கள் தடுத்து அசம்பாவிதங்கள் ஏற்படலாம் என்பதால் மறுப்பு தெரிவித்து கூறியதாக தெரிவித்தனர். போராட்டக்காரர்களுக்கு பயந்தே சசிகலாவும் சாமி தரிசனம் செய்ததை மறுத்ததாகவும் கூறப்பட்டது.

    சசிகலாவுக்கு 47 வயதே ஆனாலும் அவர் உடல் நலக்குறைவால் கர்ப்பப்பை அகற்றப்பட்டவர். அதற்கான மருத்துவ சான்றிதழையும் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    காலையில் தரிசனம் செய்த சசிகலா, போலீஸ் பாதுகாப்புடன் பம்பை சென்றார். அங்கு ஏற்கனவே தயாராக இருந்த மற்றொரு போலீஸ் குழுவுடன் அவர் மின்னல் வேகத்தில் கொச்சி விமான நிலையம் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு உடனடியாக விமானம் மூலம் இலங்கைக்கு புறப்பட்டார். சசிகலா புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்துக்கு பிறகே அவர் சபரிமலையில் சாமி தரிசனம் செய்த காட்சிகள் அடங்கிய வீடியோ பதிவை போலீசார் வெளியிட்டனர். இதன் மூலம் சசிகலாவை போலீசார் திட்டமிட்டே சன்னிதானம் அழைத்துச் சென்று தரிசனம் செய்ய வைத்ததாக பக்தர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    இலங்கை பெண் தரிசனம் செய்ததை உறுதி செய்த போலீசார் அவர் 18-ம் படி ஏறினாரா? என்பதை கூற மறுத்தனர்.

    இதற்கிடையே இன்று சபரிமலை சென்ற திருநங்கை ஒருவரும் ஐயப்ப பக்தர்கள் போராட்டம் காரணமாக சுவாமி தரிசனம் செய்ய முடியவில்லை. அவரது பெயர் கயல்.

    சபரிமலைக்கு தரிசனம் செய்ய சென்ற அவரை ஐயப்ப பக்தர்கள் தடுத்து போராட்டம் நடத்தியதால் ஏமாற்றத்துடன் அவர் திரும்பினார். #SabarimalaTemple #SrilankanWoman
    திருப்பதி கோவிலில் டிசம்பர் மாதம் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோர் ஆகியோருக்கு வழங்கப்படும் தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. #Tirupati
    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோர் ஆகியோருக்கு பக்தர்களின் கூட்டம் குறைவாக உள்ள நாட்களில் மாதத்திற்கு இருமுறை தரிசனம் அளிக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் 8 ஆயிரம் பேருக்கு மாதத்தில் இரு நாட்களும், 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளின் பெற்றோருக்கு சுபதம் பகுதி வழியாக காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும் மாதந்தோறும் இரு நாட்களும் தரிசனம் செய்ய அனுமதி வழங்கிவந்தது.

    இந்நிலையில், டிசம்பர் மாதம் வைகுண்ட ஏகாதசி, துவாதசி மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு, மார்கழி மாத உற்சவங்கள், அரையாண்டு விடுமுறை உள்ளிட்டவற்றால் திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதனால் இந்த மாதத்தில் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோர் ஆகியோருக்கு வழங்கப்பட்ட இலவச தரிசனங்களை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.


    ஏழுமலையான் கோவில் மற்றும் தேவஸ்தானம் நிர்வகித்து வரும் பல கோவில்களுக்கு பக்தர்கள் நன்கொடையாக வழங்கிய துணிகளை வரும் 13-ந் தேதி இணையதளம் வாயிலாக ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    பாலியஸ்டர், பருத்தி வேட்டிகள், துணிகள், உண்டியலுக்கு பயன்படுத்தும் துணிகள், ரவிக்கைத் துணிகள், மேல்துண்டுகள், லுங்கிகள், சால்வைகள், படுக்கை விரிப்பு, தலையணை உறை, பஞ்சாபி ஆடைகள், ஜமுக்காளம், போர்வைகள், திரைச் சீலைகள் உள்ளிட்டவை ஏலம் விடப்பட உள்ளன.

    இது தொடர்பாக மேலும் விவரங்களை அறிய www.tirumala.org, www.mstce commerce.com/ www.mstcindia.co.in  ஆகிய இணையதளங்களை தொடர்பு கொள்ளலாம் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. #Tirupati #TirupatiTemple
    திருவண்ணாமலை மகா தீப தரிசனத்திற்கு மலை ஏற 2,500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று கலெக்டர் கந்தசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #KarthigaiDeepam #ArunachaleswararTemple
    திருவண்ணாமலை:

    மகா தீப தரிசனத்துக்காக மலை ஏற 2,500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீபம் 23-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.

    மகா தீப தரிசனத்தன்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி மகா தீபம் ஏற்றப்படும் 2,668 அடி உயரமுள்ள தீப மலை மீது 2,500 பக்தர்கள் மட்டும் நிபந்தனைகளுடன் ஏற உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளது.



    இதுகுறித்து கலெக்டர் கந்தசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மலை ஏற அனுமதிச்சீட்டு 2,500 பக்தர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியில் 23-ந் தேதி காலை 6 மணி முதல் 11 மணி வரை மட்டுமே அனுமதி சீட்டு வழங்கப்படும். அனுமதி சீட்டு பெற வருபவர்கள் உரிய அடையாள சான்று, ஆதாரங்களை காண்பிக்க வேண்டும். அனுமதி சீட்டு பெற்றவர்கள் மலை ஏறுவதற்கென அறிவிக்கப்பட்ட பேகோபுரம் எதிர்புறத்தில் அனுமதி சீட்டை காண்பித்து மலை ஏற வேண்டும். மற்ற வழிகளில் மலை ஏற அனுமதி இல்லை.

    மலை ஏறும் பக்தர்கள் தண்ணீர் பாட்டில் மட்டும் எடுத்து செல்ல வேண்டும். கற்பூரம், பட்டாசு மற்றும் எளிதில் தீப்பிடிக்கக் கூடிய பொருட்களை கண்டிப்பாக எடுத்து செல்லக்கூடாது. மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்படும் நேரத்தில் நிர்ணயிக்கப்பட்ட வழியில் மட்டுமே மலை ஏறவும், இறங்கவும் வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பரணி தீபம், மகா தீபம் ஏற்றும்போது, பக்தர்கள் கோவிலுக்குள் செல்லத் தேவையான கட்டண டிக்கெட்டுகள் இணையதளத்தில் விற்பனை செய்யப்படுகின்றன.

    பரணி தீபத்துக்கான ரூ.500 மதிப்பிலான டிக்கெட்டுகள் 500 எண்ணிக்கையில் விற்கப்படுகின்றன.

    மகா தீபத்துக்கு ரூ.500 மதிப்பிலான டிக்கெட்டுகள் ஆயிரமும், ரூ.600 மதிப்பிலான டிக்கெட்டுகள் 100 என மொத்தம் ரூ. 1,600 எண்ணிக்கையிலான சிறப்பு கட்டண டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன.

    இந்த டிக்கெட்டுகளை இன்று பகல் 11 மணி முதல் கோவிலின் இணைய தளமான www.arunachaleswarartemple.tnhrce.in என்ற இணைய தளத்தில் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம். கட்டணச் சீட்டை பெற ஆதார் அட்டை, செல்லிடபேசி எண், இணையதள முகவரி ஆகியவை கண்டிப்பாகத் தேவை. ஓர் ஆதார் அட்டைக்கு ஒரு கட்டண சீட்டு மட்டுமே பதிவு செய்ய முடியும்.

    குறுஞ்செய்தி பதிவு செய்யப்பட்ட செல்லிப்பேசி எண்ணுக்கு அனுப்பப்படும். கட்டணச் சீட்டு பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சலுக்கு மட்டுமே அனுப்பப்படும்.

    தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் கட்டணச் சீட்டு அசல், ஆதார் அட்டை அசலுடன் வர வேண்டும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. #KarthigaiDeepam #ArunachaleswararTemple
    நவராத்திரியின் நான்காவது நாளான இன்று, பிரபல கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி ராஞ்சியில் உள்ள திவ்ரி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து காணிக்கை செலுத்தினார். #MSDhoni #DivriTemple
    டேராடூன்:

    நவராத்திரி பண்டிகை கடந்த 10ம் தேதி தொடங்கி நடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக,  வட மாநிலங்களில் துர்கா பூஜை என்ற பெயரில் மிகவும் பிரமாண்டமாக கொண்டாடப்படுவது வழக்கம் .

    நவராத்திரி பண்டிகை தினங்களில் முக்கிய தலைவர்கள், பிரபல கிரிக்கெட் வீரர்கள் மற்றும்  பாலிவுட் நட்சத்திரங்கள்
    தங்கள் வசிக்கும் பகுதியின் அருகிலுள்ள அம்மன் கோவில்களுக்கு சென்று காணிக்கை செலுத்தி மகிழ்வார்கள்.

    இந்நிலையில், நவராத்திரியின் நான்காவது நாளான இன்று, பிரபல கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி ராஞ்சியில் உள்ள திவ்ரி துர்கா அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து காணிக்கை செலுத்தினார்.

    ராஞ்சியில் உள்ள திவ்ரி துர்கா அம்மன் கோவில் மிகவும் பழமை வாய்ந்தது. எம்.எஸ்.டோனி அந்த கோவிலுக்கு சென்று அங்குள்ள அம்மனை வணங்கிய பின்னர் தனது காணிக்கையை செலுத்தினார். டோனி வருகையை முன்னிட்டு கோவிலில் ஏராளமான ரசிகர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. #MSDhoni #DivriTemple
    காஷ்மீரில் ஆட்சி கவிழ்ப்புக்கு பின்னர் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று ஸ்ரீநகர் வந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக கவர்னர் வோராவுடன் ஆலோசனை நடத்தினார். #RajnathinJK #RajnathinAmarnath
    ஜம்மு:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மெகபூபா முப்தி தலைமையிலான கூட்டணி அரசுக்கு அளித்துவந்த ஆதரவை பா.ஜ.க. சமீபத்தில் விலக்கி கொண்டது. இதைதொடர்ந்து அங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி கவிழ்ந்தது.

    கவர்னர் வோரா தலைமையில் ஜனாதிபதி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மத்திய உள்துறை  மந்திரி ராஜ்நாத் சிங் இருநாள் பயணமாக இன்று மாலை காஷ்மீர் வந்தடைந்தார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால், உள்துறை செயலாளர் ராஜிவ் கவுபா உள்ளிட்ட உயரதிகாரிகளும் அவருடன் வந்துள்ளனர்.

    ஸ்ரீநகரில் உள்ள விமானப்படை தளத்தில் கவர்னரின் ஆலோசகர்கள் பி.பி.வியாஸ், தமிழகத்தை சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி விஜயகுமார் ஆகியோர் ராஜ்நாத் சிங்கை வரவேற்றனர்.

    வரவேற்புக்கு பிறகு கவர்னர் மாளிகைக்கு சென்ற ராஜ்நாத் சிங், அம்மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு மற்றும் அமர்நாத் யாத்திரைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக கவர்னர் வோரா மற்றும் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    நாளை அமர்நாத் ஆலயத்துக்கு செல்லும் அவர், அங்கு தோன்றியுள்ள பனி லிங்கத்தை தரிசிக்கிறார். ராஜ்நாத் சிங் வருகையையொட்டி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பல பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. #RajnathinJK #RajnathinAmarnath
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2 மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்யும் வகையில் ஆந்திர சுற்றுலாத் துறை புதிய சுற்றுலா திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
    திருமலை:

    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்கிறார்கள். இந்த காத்திருப்பு நேரத்தை குறைக்க ஆந்திர அரசும், திருமலை திருப்பதி தேவஸ்தானமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

    தற்போது ஆந்திர மாநில சுற்றுலாத்துறை மூலம் புதிய திட்டத்தை அமல்படுத்த ஆந்திர அரசு அனுமதி வழங்கியுள்ளது. திருப்பதி செல்லும் பக்தர்களுக்காக ஏ.சி., டி.வி., வைபை வசதியுடன் கூடிய அதிநவீன சொகுசு பஸ்களை ஆந்திர சுற்றுலா துறை இந்த மாத இறுதியில் இருந்து இயக்க உள்ளது. சோதனை அடிப்படையில் இந்த திட்டம் முதல் கட்டமாக விசாகப்பட்டினத்தில் இருந்து தொடங்குகிறது.

    இந்த சொகுசு பஸ்சில் 43 பேர் பயணம் செய்யலாம். இந்த பஸ் தினமும் விசாகப்பட்டினத்தில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்பட்டு மறுநாள் திருப்பதி வந்தடையும்.

    பின்னர் திருப்பதியில் இருந்து திருமலைக்கு மாற்று பஸ்சில் பக்தர்கள் அழைத்து செல்லப்படுவர். அவர்களுக்கு சிறிது நேரம் தங்கும் இடம், தலைமுடி காணிக்கை செலுத்தும் வசதி, குளியல் வசதி போன்றவை ஏற்பாடு செய்யப்படும்.

    பின்னர் அவர்கள் தரிசனத்துக்கு அழைத்து செல்லப்படுவார்கள். அவர்களுக்காக முன் கூட்டியே தரிசன டிக்கெட்டுகளை சுற்றுலா துறை ஏற்பாடு செய்து தயாராக வைத்திருக்கும். அவர்கள் 2 மணி நேரத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்யலாம். அவர்களுக்கு தேவையான லட்டு பிரசாதங்களும் வழங்கப்படும்.

    பின்னர் அவர்கள் திருமலையில் இருந்து திருப்பதி அழைத்து செல்லப்பட்டு அங்கிருந்து சொகுசு பஸ் மூலம் காளகஸ்தி கோவிலுக்கு செல்வார்கள். அங்கு தரிசனம் செய்த பின்பு விசாகப்பட்டினம் புறப்பட்டு செல்வார்கள்.

    இது 3 நாள் சுற்றுலா ஆகும். இதற்கான கட்டணம் ரூ.4 ஆயிரம். இந்த திட்டம் வெற்றி பெற்றால் படிப்படியாக விஜயவாடா, குண்டூர், பிரகாசம், கோதாவரி மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ஆந்திர சுற்றுலாத் துறை இந்த திட்டத்தை தமிழகத்திலும் செயல்படுத்த வேண்டும் என்று தமிழக பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருப்பதியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். #edappadipalaniswami #tirupati
    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குடும்பத்தினருடன் நேற்று மதியம் சேலத்தில் இருந்து புறப்பட்டு வேலூர் வழியாக கார்மூலம் திருமலைக்கு வந்தார்.

    திருப்பதிக்கு வந்த அவரை தேவஸ்தான இணை செயல் அலுவலர் சீனிவாச ராஜு திருப்பதி ஆர்.டி.ஓ. கனக நரசாரெட்டி, துணை செயல் அலுவலர் பாலாஜி, ஏ.எஸ்.பி. முரளி கிருஷ்ணா ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

    பின்னர், ஆந்திர மாநில போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் ஏற்றுக்கொண்டார். இரவில் வராக சுவாமி ஹயக்ரிவர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.



    திருமலையில் உள்ள விருந்தினர் மாளிகையில் இரவில் தங்கினார். இன்று அதிகாலை அஷ்டதள பாதபத்ம ஆராதனை சேவையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தனது குடும்பத்தினருடன் சென்று ஏழுமலையானை சாமி தரிசனம் செய்தார்.

    ரங்கநாயகர் மண்டபத்தில் வைத்து அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் லட்டு பிரசாதம் மற்றும் சாமி படங்களை வழங்கினர். #edappadipalaniswami #tirupati
    ×