search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பப்ஜி"

    நாடு முழுவதும் இன்று ஹோலி பண்டிகையையொட்டி, ஹோலிகா தகனம் எனும் நிகழ்வு நடைபெறும். இதில் மசூத் அசார், பப்ஜி கேம் ஆகியவற்றின் உருவ பொம்மைகள் எரிக்கப்படுகின்றன. #Holi #HolikaDahan
    மும்பை:

    ஹோலி (அரங்கபஞ்சமி) பண்டிகை இந்து மதத்தின் பிரபலமான இளவேனிற்காலப் பண்டிகையாகும். இந்த பண்டிகையானது இந்தியாவின் மும்பை, மேற்கு வங்காளம், வங்கதேசம் ஆகிய பகுதிகளில் தோல்யாத்திரை (தௌல் ஜாத்ரா) அல்லது வசந்த உற்சவம் (வசந்தகாலத் திருவிழா) என அழைக்கப்படுகின்றது. இது பெரும்பாலும் பிரஜ் சமூகத்தினரால் கடவுள் கிருஷ்ணனுடன் தொடர்புடைய மதுரா, பிருந்தாவன், நந்தகோன், பர்சனா ஆகிய நகரங்களில் மிக சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

    இதேப் போன்று நேபாளம், வங்கதேசம், போன்ற நாடுகளிலும் சூரிநாம், கயானா, தென்ஆப்பிரிக்கா, திரினிதாத், இங்கிலாந்து, மொரீசியஸ் மற்றும் பிஜி போன்ற இந்து மக்கள் பரவலாக வாழும் நாடுகளிலும் விரிவாகக் கொண்டாடப்படுகின்றது.



    இப்பண்டிகையில் முக்கிய நிகழ்வாக கருதப்படுவது 'ஹோலிகா தகனம்' ஆகும். இதனை ஹோலிகா எரிப்பு என்றும் கூறுவர்.  இந்துசமயப் புராணங்களின்படி, பிரகலாதனைக் கொல்வதற்காக இரணியகசிபுவின் தூண்டுதலால் ஹோலிகா மேற்கொண்ட முயற்சியில் அவளே எரிந்து மாண்டுபோனாள். இதன் அடையாளமாக ஹோலிகா தகனம், வைக்கோலில் உருவ அமைப்பு வைக்கப்பட்டு, எரித்து கொண்டாடப்படுகிறது.

    மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று நடைபெற உள்ள ஹோலிகா தகனம் நிகழ்வில், ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசார் மற்றும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் அடிமையாக்கி பலரது கவனத்தினை பெரிதும் ஈர்த்த ஆன்லைன் கேமான பப்ஜி ஆகியவற்றின் கொடும்பாவிகள் எரிக்கப்பட உள்ளன. மும்பை ஒர்லி பகுதியில் இந்த கொடும்பாவிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. #Holi #HolikaDahan


    மகாராஷ்டிராவில் ரெயில்வே தண்டவாளத்தின் அருகே பப்ஜி கேமை தீவிரமாக விளையாடியபோது, 2 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். #PUBGgame
    மும்பை:

    உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள மக்கள் ஆன்லைன் கேமிற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். இந்த ஆன்லைன் கேம்கள் பெரியவர்கள் , சிறியவர்கள் என அனைத்து வயதினரையும் ஈர்ப்பதோடு மட்டுமல்லாமல் அடிமையாக்கியும் உள்ளது.

    இந்நிலையில் மகாராஷ்டிராவில் உள்ள ஹிங்கோலி பகுதியில்  கடந்த சனிக்கிழமை அன்று, ரெயில்வே தண்டவாளத்திற்கு அருகே நாகேஷ் கோர்(24), சுவப்னில் அன்னப்பூர்ணே(22) ஆகியோர் பப்ஜி கேம் விளையாடியுள்ளனர். அப்போது  ஐதராபாத்தில் இருந்து அஜ்மீர் செல்லும் ரெயில் வந்துள்ளது. இதனை கவனிக்காமல் தொடர்ந்து விளையாட்டில் தீவிரம் காட்டியுள்ளனர்.  இதனால் ரெயிலில் அடிபட்டு இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.



    இவர்களது சடலங்களை அப்பகுதியில் வசிக்கும் மக்கள் நள்ளிரவு கண்டறிந்து, போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சடலங்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.  

    பப்ஜி என்பது மிகவும் ஆபத்தான ஆன்லைன் மல்டிபிளேயர் கேம் ஆகும். இதில் 100 வீரர்கள் போர்க்களத்தில் போராட வேண்டும். இதில், ஒருவர், இருவர், நால்வர் என எண்ணிக்கையில் அணி அணியாக சேர்ந்து விளையாடலாம். இறுதியாக உயிர்தப்புபவர் வெற்றி பெறுவார்.

    மும்பையில் வாலிபர் ஒருவர் பப்ஜி விளையாடுவதற்கு செல்போன் வாங்கி தர பெற்றோர் மறுத்ததால், தற்கொலை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. #PUBGgame 
    இந்தியாவில் பப்ஜி மொபைல் கேம் விளையாடியவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதை தொடர்ந்து டென்சென்ட் இந்தியா களத்தில் குதித்திருக்கிறது. #PUBG



    குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட்டில் பப்ஜி விளையாடியதாக பத்து பேர் கைது செய்யப்பட்டதற்கு டென்சென்ட் இந்தியா அதிர்ச்சி தெரிவித்திருக்கிறது. 

    இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், பப்ஜி மொபைல் வெறும் கேம் தான். இதனை பொழுதுபோக்காக மட்டுமே எடுத்துக் கொண்டு ஆரோக்கியம் மற்றும் பொறுப்புணர்வுடன் அணுக வேண்டும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    சில நகரங்களில் பப்ஜி விளையாட தடை விதிக்கப்பட்டிருப்பது எங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. கடந்த சில மாதங்களில் பெற்றோர்களும், சில பள்ளி நிர்வாகத்தினரும் பப்ஜி மொபைல் கேமிற்கு எதிராக தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். அவர்களை பொருத்தவரை பப்ஜி மொபைல் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் கல்வியை பாதிக்கும் ஒன்றாக பாரக்கப்படுகிறது.

    இந்நிலையில், அவர்களது கவலையை போக்கும் வகையில், இந்தியாவுக்கென ஆரோக்கியமான கேம்பிளே அமைப்பை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டிருக்கிறோம் என டென்சென்ட் இந்தியா தெரிவித்திருக்கிறது. இதுதவிர குறைந்த வயதுடையோருக்கு கேம் விளையாடும் நேரத்தை குறைப்பதற்கான பணிகளும் நடைபெறுவதாக அவர் தெரிவித்தார்.



    இதனால் எதிர்காலத்தில் பப்ஜி மொபைல் கேம் விளையாடும் போது, பயனர்கள் தினமும் எவ்வளவு நேரம் விளையாட வேண்டும் என்பதை முன்கூட்டியே தீர்மானித்துக் கொள்ளும் வசதி மொபைல் இன்டர்ஃபேசில் இடம்பெறும் என தெரிகிறது. பப்ஜி மொபைல் மீதான தடை பற்றி அதன் டெவலப்பர்கள் கூறும் போது, இந்த கேமிற்கு எதிராக வரும் கருத்துக்களை புரிந்து கொள்ள விரும்புகிறோம். 

    மேலும் இந்த கேம் தொடர்பான எங்களது கருத்துக்களை சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விளக்கமாக எடுத்துரைத்து தடையை விலக்குவதற்கான பணிகளை தொர்ந்து செய்வோம். பப்ஜி மொபைல் விளையாடுவோருடன் நாங்கள் இருக்கிறோம், இந்த விவகாரத்தில் முறையான தீர்வை எட்ட முயற்சி செய்கிறோம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    சில தினங்களுக்கு முன் ராஜ்கோட்டில் தடையை மீறி பப்ஜி மொபைல் கேமினை விளையாடியதாக பத்து பேரை போலீசார் கைது செய்தனர். குஜராத் மாநிலத்தில் பப்ஜி மொபைல் மற்றும் மோமோ சவால்களுக்கு தடை விதிக்கப்படுவதாக மார்ச் 6 ஆம் தேதி சிறப்பு அரசாணையை அம்மாநில அரசு பிறப்பித்து இருந்தது.
    மகாராஷ்டிராவில் பப்ஜி கேம் விளையாடிய போது சார்ஜ் தீர்ந்ததால், ஆத்திரமடைந்த இளைஞர் , தங்கைக்கு நிச்சயிக்கப்பட்டவரைக் குத்தியுள்ளார். #PUBGgame
    மும்பை:

    உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள மக்கள் ஆன்லைன் கேமிற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். இந்த ஆன்லைன் கேம்கள் பெரியவர்கள் , சிறியவர்கள் என அனைத்து வயதினரையும் ஈர்ப்பதோடு மட்டுமல்லாமல் அடிமையாக்கியும் உள்ளது.

    மகாராஷ்டிராவின் கல்யாண் பகுதியைச் சேர்ந்தவர் ரஜினீஷ் ராஜ்பாய். இவர் தனது செல்போனில் பப்ஜி  விளையாடிக் கொண்டிருந்தார். தொடர்ந்து விளையாடவே, செல்போனின் சார்ஜ் வேகமாக குறைந்து , ஆப் ஆகி விட்டது. விளையாட்டில் தீவிர முனைப்புடன் இருந்த இவர், செல்போன் சார்ஜரை தேடியுள்ளார்.



    வீடெங்கும் தேடியதில், அந்த சார்ஜர் அறுந்த நிலையில் இருப்பதைக் கண்டார். இதனால் கடும் கோபத்திற்கு ஆளான ரஜினீஷ் , தனது சகோதரிதான் இவ்வாறு செய்திருப்பார் என நினைத்து அவரிடம் சண்டைப் போட்டுள்ளார். அப்போது அவரது சகோதரி தனக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த ஓம் என்பவருடன் பேசிக்கொண்டிருந்தார்.

    இதனையடுத்து ரஜினீஷ்க்கும் ஓமிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இறுதியில் கைகலப்பாகியது. இதனால் ஆத்திரமடைந்த ரஜினீஷ் , அருகிலிருந்த கத்தியினால் , ஓமின் வயிற்றில் குத்தினார். இச்சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    போலீசார் ரஜினீஷின் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். கத்தியால் குத்தப்பட்ட  ஓம் அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பப்ஜி என்பது மிகவும் ஆபத்தான ஆன்லைன் மல்டிபிளேயர் விளையாட்டு ஆகும். இதில் 100 வீரர்கள் போர்க்களத்தில் போராட வேண்டும். இதில், ஒருவர், இருவர், நால்வர் என எண்ணிக்கையில் அணி அணியாக சேர்ந்து விளையாடலாம். இறுதியாக உயிர்தப்புபவர் வெற்றி பெறுவார்.

    மும்பையில் வாலிபர் ஒருவர் பப்ஜி விளையாடுவதற்கு செல்போன் வாங்கி தர பெற்றோர் மறுத்ததால், தற்கொலை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. #PUBGgame  





    உலகின் பிரபல கேமாக இருக்கும் பப்ஜி மற்றும் ஃபோர்ட்நைட் உள்ளிட்டவற்றுக்கு போட்டியாக அறிமுகமான அபெக்ஸ் லெஜண்ட்ஸ் கேமினை மூன்று நாட்களில் பத்து லட்சம் பேர் டவுன்லோடு செய்துள்ளனர். #ApexLegends



    சர்வதேச கேமிங் சந்தையில் பிரபல நிறுவனங்களான இ.ஏ. மற்றும் ரிஸ்பான் எண்டர்டெயின்மென்ட் இணைந்து அபெக்ஸ் லெஜண்ட்ஸ் எனும் புதிய ராயல் கேமினை அறிமுதம் செய்துள்ளன.

    பப்ஜி மற்றும் ஃபோர்ட்நைட் கேம்களுக்கு போட்டியாக அறிமுகமாகி இருக்கும் அபெக்ஸ் லெஜண்ட்ஸ் வெளியான முதல் 72 மணி நேரத்தில் (மூன்று நாட்கள்) சுமார் பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் கேமினை விளையாட துவங்கியுள்ளனர். 

    தற்சமயம் அபெக்ஸ் லெஜண்ட்ஸ் சோனியின் பிளே ஸ்டேஷன் 4 (PS4) கன்சோல்கள், மைக்ரோசாஃப்ட் எக்ஸ்பாக்ஸ் ஒன் மற்றும் கணினிகளில் கிடைக்கிறது. எனினும், பப்ஜி மற்றும் ஃபோர்ட்நைட் கேம்கள் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயங்குதளங்களிலும் கிடைக்கிறது.



    வெளியான மூன்று நாட்களில் அதிகளவு வரவேற்பை பெற்றிருக்கும் அபெக்ஸ் லெஜண்ட்ஸ் பப்ஜி மற்றும் ஃபோர்ட்நைட் கேம்களை மிஞ்சுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நவம்பர் 2018 வரை ஃபோர்ட்நைட் விளையாடுவோர் எண்ணிக்கை 20 கோடியாகவும், கடந்த ஆண்டு செப்டம்பர் வரை தினமும் பப்ஜி விளையாடுவோர் எண்ணிக்கை இரண்டு கோடியாக இருக்கிறது.

    அபெக்ஸ் லெஜண்ட்ஸ் முதற்கட்டமாக கேமிங் கன்சோல்களுக்கு மட்டும் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், இந்த கேம் பப்ஜி மற்றும் ஃபோர்ட்நைட் போன்று ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயங்குதளங்களில் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
    மும்பையில் பப்ஜி கேமுக்கு அடிமையான வாலிபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெற்றோரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. #MumbaiPUBGgame #youthSuicide
    மும்பை:

    மும்பையில் நேரு நகரில் உள்ள குர்லா பகுதியில் 18 வயதுடைய வாலிபர் ஒருவர், பெற்றோரிடம் பப்ஜி கேம் விளையாடுவதற்காக  ரூ.37000 மதிப்புடைய விலை உயர்ந்த செல்போன் ஒன்றைக் கேட்டுள்ளார். இதனை பெற்றோர் வாங்கித்தர மறுப்பு தெரிவித்து வந்தனர்.

    இதனையடுத்து பெற்றோருக்கும் வாலிபருக்கும் இடையே நடைபெற்ற கடும் வாக்குவாதத்தினை தொடர்ந்து பெற்றோர் ரூ.20,000-க்குள் செல்போன் வாங்கித் தருவதாக கூறியுள்ளனர். இதனை ஏற்க மறுத்து அந்த வாலிபர் வீட்டின் சமையல் அறையில் உள்ள மின்விசிறியில், கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் பெற்றோரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



    பப்ஜி என்பது மிகவும் ஆபத்தான ஆன்லைன் மல்டிபிளேயர் விளையாட்டு ஆகும். இதில் 100 வீரர்கள் போர்க்களத்தில் போராட வேண்டும். இதில், ஒருவர், இருவர், நால்வர் என எண்ணிக்கையில் அணி அணியாக சேர்ந்து விளையாடலாம். இறுதியாக உயிர்தப்புபவர் வெற்றி பெறுவார்.

    இந்நிலையில் இந்த ஆன்லைன் விளையாட்டினால் பல குழந்தைகள் தேர்வுகளில் கவனம் செலுத்துவது குறைந்து வருகிறது எனவும், இதனை தடை செய்ய வேண்டும் எனவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில் சமீபத்தில் பப்ஜி விளையாட்டை தடை செய்யுமாறு 11 வயதுடைய மாணவன், தனது தாயின் உதவியோடு மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.  #MumbaiPUBGgame #youthSuicide   

    உலகம் முழுக்க ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோரில் சுமார் 20 கோடி பேர் டவுன்லோடு செய்து, தினமும் சுமார் மூன்று கோடி பேர் விளையாடும் மொபைல் கேம் பற்றி பார்ப்போம். #PUBGmobile #gaming



    பப்ஜி மொபைல் கேம் விளையாடுவோர் எண்ணிக்கை மூன்று கோடியாக அதிகரித்துள்ளது என பப்ஜி உருவாக்கிய பப்ஜி கார்ப்பரேஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகம் முழுக்க பப்ஜி விளையாடுவோரின் எண்ணிக்கை இது என்றாலும், இதில் சீனா மட்டும் சேர்க்கப்படவில்லை.

    இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் பப்ஜி விளையாடுவோர் எண்ணக்கை அதிகரித்து வருகிறது. குறைந்த மெமரி கொண்ட ஆண்ட்ராய்டு சாதனங்களிலும் பப்ஜி மொபைல் விளையாட முடியும் என்பதால், இந்த கேம் அதிக பிரபலமாக முக்கிய காரணமாக மாறியிருக்கிறது.

    பப்ஜி மொபைல் கேமினை உலகம் முழுக்க சுமார் 20 கோடி பேர் டவுன்லோடு செய்திருக்கின்றனர். தினசரி பப்ஜி மொபைல் விளையாடுவோர் எண்ணிக்கை அதிகமாக இருப்பது இந்த கேம் பிரபலமாக முக்கிய காரணமாக இருக்கிறது. சில சந்தைகளில் ஃபோர்ட்நைட் பயனர் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது என்றாலும், பப்ஜி மொபைல் கேம் இதனை பின்தள்ளி இருக்கிறது.



    குறிப்பாக ஃபோர்ட்நைட் கேமினை பதிவு செய்து விளையாடுவோர் எண்ணிக்கை 20 கோடியாக இருக்கிறது. ஃபோர்ட்நைட் மற்றும் பப்ஜி மொபைல் பிரபலமாக இருக்கும் நிலையில், சமீபத்தில் ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் அதிக வருவாய் ஈட்டும் கேமாக பப்ஜி மொபைல் ஃபோர்ட்நைட் கேமினை பின்தள்ளியது. 

    சென்சார் டவர் வெளியிட்டிருக்கும் தகவல்களின் படி ஆசியா மற்றும் சீன சந்தைகளில் பப்ஜி மொபைல் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் பப்ஜி மொபைல் பிரபலமானதாக இருக்கும் நிலையில், கணினி மற்றும் கன்சோல்களில் இந்தியா போன்ற சந்தைகளில் பிரபலமாக இருக்கிறது.

    ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் பப்ஜி மொபைலில் தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்படுகி்ன்றன. பப்ஜி மொபைல் பல்வேறு இயங்குதளங்களில் சீராக இயங்கும் படி மிக நேர்த்தியாக வழங்கப்படும் நிலையில், ஃபோர்ட்நைட் பல்வேறு சாதனங்களில் விளையாட ஏதுவாக ஆப்டிமைஸ் செய்யப்படவில்லை.
    வி.ஐ.டி. கல்லூரியின் மாணவர்கள் தங்கும் விடுதியில் பப்ஜி விளையாட தடை விதிக்கப்பட்டு இருப்பது மாணவர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. #PUBG



    ஸ்மார்ட்போன் ஆன்லைன் கேமிங்கில் இந்த ஆண்டின் பிரபல கேமாக பப்ஜி இருக்கிறது. பப்ஜி விளையாட்டு உலகில் அதிகம் விற்பனையாகும் கணினிக்கான் கேம்களில் முன்னணி இடம் பிடித்திருக்கிறது. பப்ஜி விளையாடுவதால் மாணவர் தங்கும் விடுதியின் சூழல் பாதிக்கப்படுவதால் தங்கும் விடுதியில் பப்ஜி விளையாட வி.ஐ.டி. மாணவர் தங்கும் விடுதி தடை விதித்துள்ளது.

    இத்தகவலை தங்கும் விடுதியின் காப்பாளர் மின்னஞ்சல் மூலம் தெரிவித்ததாக ரெடிட் தளத்தில் வெளியாகும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    பப்ஜி விளையாடுவதை தவிர்த்து உடல் மற்றும் மன வலிமையை பரைசாற்றும் விளையாட்டுக்களில் கவனம் செலுத்தவும், மாணவர்கங்கள் தங்களின் எதிர்காலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என விடுதியின் காப்பாளர் கேட்டுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.



    புதிய விதிமுறையை மாணவர்கள் பின்பற்ற தவறும் பட்சத்தில் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மாணவர்கள் தங்கும் விடுதிக்கு மட்டும் பப்ஜி விளையாட தடை விதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படும் நிலையில், மாணவிகள் தங்கும் விடுதியில் இதுபோன்ற தடை விதிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    பொறியியல் கல்லூரியில் பப்ஜி விளையாட மாணவர்களுக்கு தடை விதிக்ககப்பட்டு இருப்பது மாணவர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் கேமிற்கான தடை இருபாலினத்தவருக்கும் பொருந்தாதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

    இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் உலக சுகாதார மையம் கேமிங்கை ஆரோக்கிய சீர்கேடாக அறிவித்தது. இத்துடன் மனநல ஆரோக்கியம் மற்றும் நரம்பியல் அறிவியல் துறைக்கான தேசிய ஆணையம் பப்ஜி கேம் பலரை அடிமையாக்கி இருப்பதாக தெரிவித்திருந்தது.
    சோனி பிளே ஸ்டேஷன் 4 கேமிங் கன்சோலில் பப்ஜி கேம் வெளியிடப்பட்டது. பிளே ஸ்டேஷனுக்கென பப்ஜி பிரத்யேக அம்சங்களை கொண்டுள்ளது. #PUBGPS4 #PlayStation4



    ஸ்மார்ட்போன்களில் அதிக பிரபலமான கேமாக இருக்கும் பப்ஜி பிளே ஸ்டேஷன் 4 கேமிங் கன்சோலில் வெளியிடப்பட்டது. பல்வேறு வெர்ஷன்களில் வெளியிடப்பட்டு இருக்கும் பப்ஜி ஒவ்வொன்றும் தனித்தனி விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    பிரத்யேக அணிகளை பொருத்த வரை பப்ஜி பி.எஸ்.4 பப்ஜி பி.எஸ்.4 பிக்சல் ஆர்ட் பாராசூட் உடன் வழங்கப்படுகிறது. பிளே ஸ்டேஷனில் விளையாட கேமர்கள் தங்களது கேமில் லாக்-இன் செய்தாலே போதும். பிளே ஸ்டேஷனுக்கென இருக்கும் நீல நிற பாராசூட் கிடைக்கும்.

    இதனுடன் நாதன் டிரேக் டெசர்ட், அன்சார்ட்டெட் உள்ளிட்டவை பி.எஸ். 4 கேமில் இருக்கும். மேலும் எலைட் பேக்பேக்கில் இருந்து தி லாஸ்ட் ஆஃப் யு, பப்ஜி அவதார், பப்ஜி மிராமர் போன்ற தீம்கள் பிளே ஸ்டேஷனுக்கு என பிரத்யேக அணிகளாக இருக்கின்றன.

    பப்ஜி பி.எஸ்.4: டிஸ்க் எடிஷன், பப்ஜி லூட்டர்ஸ் எடிஷன், பப்ஜி சர்வைவர்ஸ் எடிஷன் மற்றும் பப்ஜி சேம்பியன்ஸ் எடிஷன் என நான்று வெர்ஷன்களில் கிடைக்கிறது. டிஸ்க் எடிஷன் விலை ரூ.1,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது பேஸ் கேமிற்கான கட்டணம் மட்டும் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    பப்ஜி லூட்டர்ஸ் டிஜிட்டல் எடிஷன் விலை ரூ.2,750 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுவும் பேஸ் கேமிற்கான கட்டணம் மட்டுமே. பப்ஜி சர்வைவர்ஸ் டிஜிட்டல் எடிஷன் விலை ரூ.2,750 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் பேஸ் கேம், விகென்டி இவென்ட் பாஸ், 2,300 ஜி-காயின் பேக் மற்றும் 20,000 பி.பி. உள்ளிட்டவை அடங்கும்.

    பப்ஜி சேம்பியன்ஸ் டிஜிட்டல் எடிஷன் விலை ரூ.3,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் பேஸ் கேம், விகென்டி இவென்ட் பாஸ், 6,000 ஜி காயின் பேக் மற்றும் 20,000 பி.பி. உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    ஸ்மார்ட்போன் தவிர எக்ஸ்பாக்ஸ் ஒன் கன்சோலில் மட்டும் பப்ஜி வெளியிடப்பட்டு இருந்த நிலையில், தற்சமயம் இந்த கேம் பிளே ஸ்டேஷனிற்கும் வெளியிடப்பட்டுள்ளது. பி.எஸ். 4 வெளியீட்டிற்கு முன்னரே பப்ஜி டெவலப்பர்கள் கேமின் முழு வரைபடத்தை அவர்களது வலைதளத்தில் பதிவேற்றம் செய்திருந்தனர்.
    பிளேயர் அன்-நோன் பேட்டிள்கிரவுன்ட் (பப்ஜி) பிளே ஸ்டேஷன் 4இல் வெளியாகிறது. இதன் வெளியீடு மற்றும் பி.எஸ். 4 டிஸ்க் விலை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #PUBG #Playstation4



    பிளேயர் அன்-நோன் பேட்டிள்கிரவுன்ட் (பப்ஜி) கேம் பிளே ஸ்டேஷன் 4ல் அறிமுகமாவது உறுதியாகி இருக்கிறது. பப்ஜி கார்ப் மற்றும் சோனி இத்தகவலை உறுதி செய்திருப்பதோடு, இவை டிஸ்க் வடிவில் சர்வதேச சந்தையில் கிடைக்கும் என தெரிவித்துள்ளன.

    பப்ஜி பி.எஸ்.4 இந்திய வெளியீடு குறித்து சோனி இந்தியா சார்பில் எவ்வித தகவலும் இல்லாத நிலையில், பல்வேறு விற்பனையாளர்கள் பப்ஜி பி.எஸ்.4 டிஸ்க் இந்திய வெளீயட்டை உறுதி செய்துள்ளன. இது பப்ஜி பி.எஸ்.4 டிஜிட்டல் வெர்ஷனை விட விலை குறைவாக இருக்கும் என கூறப்படுகிறது.

    இந்தியாவில் பப்ஜி பி.எஸ்.4 டிஸ்க் விலை ரூ.1,999 முதல் துவங்குகிறது. சர்வதேச சந்தையில் டிசம்பர் 7ம் தேதி அறிமுகமாகும் நிலையில், இதே தேதியில் இந்தியாவிலும் கிடைக்கும் என தெரிகிறது. இந்தியாவில் டிஜிட்டல் வடிவம் ரூ.2,750 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், டிஸ்க் விலை ரூ.1,999 முதல் துவங்குகிறது. அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளங்களில் பப்ஜி பி.எஸ்.4 டிஸ்க் கிடைக்கும்.



    பப்ஜி பி.எஸ்.4 விலை மற்றும் விவரங்கள்

    டிஸ்க் எடிஷன் பேஸ் கேம் விலை ரூ.1,999
    லூட்டர்ஸ் டிஜிட்டல் எடிஷன் பேஸ் கேம் விலை ரூ.2,750
    சர்வைவர்ஸ் டிஜிட்டல் எடிஷன் 
    பேஸ் கேம், விகென்டி ஈவென்ட் பாஸ், 2,300 ஜி-காயின் பேக், 20,000 விலை ரூ.2,750
    சேம்பியன் டிஜிட்டல் எடிஷன்
    பேஸ் கேம், விகென்டி ஈவென்ட் பாஸ், 6,300 ஜி-காயின் பேக், 20,000 விலை ரூ.3,999

    பப்ஜி சர்வைவர்ஸ் மற்றும் லூட்டர்ஸ் எடிஷன் டிஸ்க் ஒரே விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது சோனி தரப்பில் நடைபெற்று இருக்கும் பிழையாக இருக்கலாம் என்றும் இது திறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    பிளே ஸ்டேஷனில் பப்ஜி கேமின் வெளியீட்டு தேதி அமேசான் மூலம் தெரியவந்து இருக்கிறது. #PUBG #PlayStation4



    ஸ்மார்ட்போன்களில் பிரபலமாக இருக்கும் பப்ஜி கேம் பிளே ஸ்டேஷன் 4 சாதனத்திற்கு வழங்கப்பட இருக்கும் நிலையில் இதன் வெளியீட்டு தேதி அமேசான் மூலம் தெரியவந்துள்ளது. முன்னதாக வெளியான தகவல்களில் நவம்பர் மாதத்தில் வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டது.

    அந்த வகையில் அமேசான் தளத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களில் பிளே ஸ்டேஷன் 4ல் பப்ஜி கேம் டிசம்பர் 8ம் தேதி வழங்கப்படும் என தெரிகிறது. பிளே ஸ்டேஷனில் அறிமுகமானதும் பப்ஜி கேம், ஸ்மார்ட்போன், எக்ஸ்பாக்ஸ் ஒன் மற்றும் கம்ப்யூட்டர் என அனைத்து தளங்களிலும் கிடைக்கும்.

    பிளே ஸ்டேஷன் 4 சாதனத்தில் பப்ஜி கேம் சில மாற்றங்களுடன் வழங்கப்படுகிறது. பிளே ஸ்டேஷனில் விளையாடுவதற்கு ஏற்ப அந்த மாற்றங்கள் இருக்கும் என்பதால், கேமின் அனுபவம் வேறாக இருக்கும். பிளே ஸ்டேஷனுக்கென பப்ஜியில் வடிவமைப்பு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இருக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.



    அமேசானில் வெளியீட்டு விவரம் பிழை காரணமாக இடம்பெற்று இருந்த நிலையில், உடனடியாக பதிவு நீக்கப்பட்டு விட்டது. 

    முன்னதாக ரெஸ்ட்இரா எனும் கேமிங் தளம் மற்றும் பி.எஸ்.என்.ப்ரோஃபைல்ஸ் உள்ளிட்டவற்றில் இருந்து வெளியான தகவல்களில் பி.எஸ்.4 கேமிங் டேட்டாபேசில் பப்ஜி இருப்பதை உறுதிப்படுத்தின.

    செப்டம்பர் மாதத்தில் கொரிய கேம் ரேட்டிங் மற்றும் நிர்வாக குழு பி.எஸ்.4-க்கான பப்ஜி கேமினை வரிசைப்படுத்தி இருந்தது. சமீபத்தில் எக்ஸ்பாக்ஸ் ஒன் (Xbox One) தளத்தில் பப்ஜி 1.0 வெளியிடப்பட்ட நிலையில் மற்ற தளங்களிலும் பப்ஜி வெளியாகலாம் என எதிர்பார்க்கலாம்.
    ×