search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இபிஎஸ்"

    ஓ.பி.எஸ்-இ.பி.எஸ். வேட்பாளர் படிவத்தில் கையெழுத்திட தடை கோரிய வழக்கை 25-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக டெல்லி ஐகோர்ட்டு அறிவித்துள்ளது. #ADMK #DelhiCourt

    புதுடெல்லி:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அந்த கட்சி இரண்டு பிரிவாக செயல்பட்டது.

    முதல்-அமைச்சர் இ.பி.எஸ், துணை முதல்- அமைச்சர் ஓ.பி.எஸ். ஆகியோர் ஓர் அணியாகவும், சசிகலா, தினகரன் மற்றொரு அணியாகவும் செயல்பட்டனர்.

    கடந்த 2017-ல் நடந்த அ.தி.மு.க. பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர்கள், வழிகாட்டுதல் குழு என புதிய பதவிகள் உருவாக்கப்பட்டன.

    ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பொதுக்குழுவில் நியமிக்கப்பட்டனர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வேட்பாளர்கள் வேட்புமனுவில் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். கையெழுத்திட தடை விதிக்க கோரியும் அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    அந்த மனுவில் ‘‘அ.தி.மு. க.வின் விதிகளின்படி வேட்பாளர்களின் மனுவில் கையெழுத்திட பொதுச் செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த வழக்கை விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு மார்ச் 28-ந்தேதிக்கு ஒத்தி வைத்தது. ஆனால் தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தொடங்குவதால் அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று கே.சி.பழனிசாமி தரப்பில் முறையிடப்பட்டது.

    இந்த கோரிக்கையை ஏற்று அவரது வழக்கை இன்று அவசர வழக்காக விசாரிப்பதாக டெல்லி ஐகோர்ட்டு தெரிவித்து இருந்தது.

    இந்தநிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை வருகிற 25-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக டெல்லி ஐகோர்ட்டு அறிவித்தது. #ADMK #DelhiCourt

    இரட்டை இலை சின்னத்தை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வுக்கு ஒதுக்கியது செல்லும் என டெல்லி ஐகோர்ட் தீர்ப்பளித்தது. #DoubleLeafSymbol
    புதுடெல்லி:

    தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வுக்கு தேர்தல் கமி‌ஷன் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து சசிகலா, டி.டி.வி.தினகரன் சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    இந்த வழக்கில் சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோர் தரப்பில் மூத்த வக்கீல்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி, வக்கீல்கள் மீனாட்சி அரோரா, ராஜா செந்தூர்பாண்டியன் ஆகியோர் ஆஜரானார்கள்.

    எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வக்கீல்கள் முகுல் ரோகத்கி, சி.எஸ்.வைத்தியநாதன், கே.வி.விஸ்வநாதன், குரு கிருஷ்ணகுமார், வக்கீல்கள் பாலாஜி ஸ்ரீனிவாசன், கவுதம் குமார், பாபு முருகவேல் ஆகியோர் ஆஜரானார்கள்.

    இவ்வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த 8-ம் தேதி முடிவடைந்த நிலையில்,  நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.



    பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பரபரப்பாக பேசப்படும் இந்த வழக்கில் டெல்லி ஐகோர்ட் நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர். அப்போது, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்தது செல்லும் என நீதிபதிகள் தெரிவித்தனர். தேர்தல் ஆணைய உத்தரவை எதிர்த்து சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களையும் தள்ளுபடி செய்தனர். #DoubleLeafSymbol

    பதவி சுகத்துக்காகவே ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இணை பிரியாமல் உள்ளனர் என்று அ.ம.மு.க. கொள்ளை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் தெரிவித்தார். #Thangatamilselvan
    திண்டுக்கல்:

    ஒட்டன்சத்திரத்தில் நடந்த அ.ம.மு.க. பொதுக் கூட்டத்தில் பங்கேற்று ஊர் திரும்பிய நிர்வாகிகள் 4 பேர் விபத்தில் சிக்கினர். அவர்கள் காயத்துடன் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களை கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பொதுக்கூட்டம் நடத்துவது என்றால் அதற்கு போலீசார் அனுமதி அளிக்க மறுக்கின்றனர். ஒவ்வொரு கூட்டத்துக்கும் நாங்கள் கோர்ட்டுக்கு சென்றே அனுமதி பெற வேண்டியது உள்ளது.

    எங்கள் கட்சி கூட்டத்துக்கு சேரும் மக்களை பார்த்து தமிழக முதல்வரும், துணை முதல்வரும் மிரண்டு போய் உள்ளனர். அதன் காரணமாகவே பல்வேறு கெடுபிடிகளை விதித்து கூட்டம் நடத்த தடை எற்படுத்தி வருகின்றனர்.



    முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்டுப்பாட்டில் உள்ள நெடுஞ்சாலைத் துறையில் ரூ.1500 கோடி ஊழல் நடந்துள்ளதாக கடந்த 6 மாதத்துக்கு முன்பே நாங்கள் தெரிவித்தோம். ஆனால் தற்போதுதான் கம்யூனிஸ்டு, காங்கிரஸ், தி.மு.க., பா.ம.க. போன்ற கட்சிகள் அதனை கூறி வருகின்றன.

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் குறித்து தீர்ப்பு வரும் வரை ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள முதல்வரும், துணை முதல்வரும் ஒற்றுமையாக இருக்கின்றனர். அவர்களை பொறுத்தவரையில் மக்கள் நலன் குறித்த அக்கறை கிடையாது. பதவி சுகத்துக்காகவே ஒற்றுமையாக இருப்பது போல் காட்டிக் கொள்கின்றனர்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். #Thangatamilselvan

    ×