search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 119870"

    தேர்தல் பறக்கும் படையினர் இன்று நடத்திய வாகன சோதனையில் ரூ.3.64 கோடி மதிப்பிலான தங்கம்-வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டது. #Parliamentelection #LSPolls

    மதுரை:

    17-வது பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது. தமிழகத்தில் வருகிற 18-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இன்று வேட்பு மனுத்தாக்கல் தொடங்குகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து தமிழகம் முழுவதும் அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    உரிய ஆவணமின்றி ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

    மதுரை மாவட்டத்திலும் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் தீவிர நடவடிக்கை காரணமாக நாள்தோறும் ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

    மதுரை மேலூர் அருகே உள்ள சிட்டம்பட்டி டோல்கேட் பகுதியில் மதுரை கிழக்கு தொகுதிக்குட்பட்ட தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் போலீசார் இன்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அதிகாலை 4.30 மணிக்கு கும்பகோணத்தில் இருந்து மதுரை நோக்கி வந்த கண்டெய்னர் வேனை மறித்து டிரைவரிடம் விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்கு பின் முரணான தகவல் தெரிவித்ததையடுத்து சந்தேகம் அடைந்த அதிகாரிகள் கண்டெய்னரை திறந்து சோதனை செய்தனர்.

    அப்போது அதில், 8 கிலோ தங்கம், வைரம், வெள்ளி கட்டிகள் இருப்பது கண்டறியப்பட்டது. இது குறித்து ஆவணங்கள் கேட்டபோது, டிரைவரிடம் எந்த பதிலும் இல்லை.

    இதையடுத்து அதிகாரிகள் கண்டெய்னருடன் தங்கம், வெள்ளி, வைரத்தை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

    தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான நடராஜன் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றப்பட்ட தங்கம், வெள்ளி, வைர கட்டிகளை ஆய்வு செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், வெள்ளி, வைரத்தின் மதிப்பு ரூ.3.64 கோடி ஆகும்.

    இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் நடராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மதுரை கிழக்கு தொகுதிக்குட்பட்ட பறக்கும் படை அதிகாரிகள் சிட்டம்பட்டி டோல்கேட் அருகில் இன்று அதிகாலை வாகன சோதனை செய்தபோது 8 கிலோ தங்கம் மற்றும் வெள்ளி, வைரம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.3.64 கோடி ஆகும்.

    டிரைவரிடம் இருந்த ஆவணங்களை சோதனை செய்ததில் கும்பகோணத்தில் இருந்து சென்னைக்கு செல்வதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் மதுரைக்கு ஏன் கொண்டு வரப்பட்டது? என தெரியவில்லை. இது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரையில் தேர்தலை நியாயமாக நடத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

    கடந்த 24 மணி நேரத்தில் ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ.4.74 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இதுவரை மதுரை மாவட்டத்தில் ரூ.62 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் பொருட் களுக்கு உரிய ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டால் அதனை உரியவரிடம் அளிப்பது குறித்து அதிகாரிகள் முடிவு செய்வார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கொருக்குப்பேட்டையில், நகை வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து 11 கிலோ தங்கம், 140 கிலோ வெள்ளி மற்றும் ரூ.1 லட்சம் கொள்ளை போனது. #GoldRobbery
    பெரம்பூர்:

    சென்னை கொருக்குப்பேட்டை உள்ளாரம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 37). இவர், சென்னை சவுகார்பேட்டையில் நகை வியாபாரம் செய்து வருகிறார். மேலும் வீட்டின் அருகிலேயே சொந்தமாக நகைக்கடையும் வைத்து உள்ளார்.

    நேற்று இவருடைய மனைவி, வீட்டை பூட்டிவிட்டு உறவினர்களுடன் வெளியில் சென்றுவிட்டார். சந்தோஷ், கடைக்கு சென்றுவிட்டார். மாலையில் வீட்டுக்கு வந்த சந்தோஷ், கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை உடைத்து அதில் இருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. இதுபற்றி சந்தோஷ் அளித்த புகாரின் பேரில் கொருக்குப்பேட்டை போலீசார் மற்றும் வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் ரவளிபிரியா சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர்.

    அதில், சந்தோஷ் வியாபாரத்துக்காக தனது வீட்டில் வைத்து இருந்த 11 கிலோ தங்கம், 140 கிலோ வெள்ளி மற்றும் ரூ.1 லட்சம் கொள்ளை போனது தெரிந்தது. சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கொள்ளையர்களின் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன.

    மேலும் இதுபற்றி கொருக்குப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என சந்தோஷ் வீடு மற்றும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆராய்ந்து வருகின்றனர்.

    அத்துடன் நகை வியாபாரி சந்தோசிடமும், அவரது வீட்டுக்கு யார் யார்? வந்து செல்வார்கள்?, உண்மையிலேயே நகை, வெள்ளி கொள்ளை போனதா? அல்லது நாடகம் ஆடுகிறாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். #GoldRobbery
    தங்கம் விலை பவுனுக்கு ரூ.184-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.2 ஆயிரத்து 953-க்கும், ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 624-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. #Gold #GoldRate
    சென்னை :

    தங்கம் விலை கடந்த ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் ஒரு கிராம் ரூ.2 ஆயிரத்து 900-க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வந்தது. பின்னர் விலை அதிகரித்து, கடந்த அக்டோபர் மாதம் 6-ந்தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.3 ஆயிரத்தை தாண்டியது. அதனைத் தொடர்ந்து விலை அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்டது. கடந்த மாதம் (நவம்பர்) 30-ந்தேதி ஒரு கிராம் ரூ.2 ஆயிரத்து 902 என்ற நிலையில் இருந்தது.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக தங்கம் விலை அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.25-ம், பவுனுக்கு ரூ.200-ம் ஒரே நாளில் உயர்ந்தது. அதேபோல், நேற்றும் தங்கம் விலை உயர்ந்து காணப்பட்டது.

    நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.2 ஆயிரத்து 930-ம், பவுன் ரூ.23 ஆயிரத்து 440-க்கும் விற்பனை ஆனது. நேற்று கிராமுக்கு ரூ.23-ம், பவுனுக்கு ரூ.184-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.2 ஆயிரத்து 953-க்கும், ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 624-க்கும் விற்பனை செய்யப்பட்டது.



    தங்கம் விலையை போலவே, வெள்ளி விலையும் அதிகரித்து காணப்பட்டது. நேற்று கிராமுக்கு 50 காசும், கிலோவுக்கு ரூ.500-ம் அதிகரித்து, ஒரு கிராம் 39 ரூபாய் 70 காசுக்கும், ஒரு கிலோ ரூ.39 ஆயிரத்து 900-க்கும் விற்பனை ஆனது.

    தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது குறித்து சென்னை வைரம் மற்றும் தங்கம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் ஷலானி யிடம் கேட்டபோது, ‘அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே சுமுக உறவு ஏற்பட்டு இருப்பதால், அவர்களுக்கு இடையேயான வர்த்தக உறவு பிரகாசமாகி இருக்கிறது. இதன் காரணமாக அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்து வருகிறது. அமெரிக்க டாலரின் மதிப்பு உயரும்போது, இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடையும். அதனால் தான் தங்கம் விலை அதிகரித்து இருக் கிறது.

    இனிவரக்கூடிய நாட்களிலும் தங்கம் விலை மேலும் உயரும்’ என்றார். #Gold #GoldRate
    ஆசிய விளையாட்டு போட்டியின் வில்வித்தை பிரிவில் வெள்ளி பதக்கம் வென்ற முஸ்கான் கிராருக்கு ம.பி. அரசு சார்பில் ரூ.75 லட்சம் வழங்கப்படும் என முதல் மந்திரி சிவராஜ்சிங் சவுகான் அறிவித்துள்ளார். #AsianGames2018 #Muskarkirar #ShivrajSinghChauhan
    போபால்:

    ஆசிய விளையாட்டு போட்டியில் இன்று நடைபெற்ற வில்வித்தை போட்டியில் இந்திய பெண்கள் அணியினர் வெள்ளி பதக்கம் வென்றனர். இந்த அணியில் மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த முஸ்கான் கிரார் இடம் பெற்றிருந்தார்.

    இந்நிலையில், ஆசிய விளையாட்டு போட்டியின் வில்வித்தையில் பங்கு பெற்று இந்தியாவுக்கு வெள்ளி வென்று தந்த முஸ்கான் கிராருக்கு ரூ.75 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என முதல் மந்திரி சிவராஜ்சிங் சவுகான் அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆசிய விளையாட்டு போட்டியில் வில்வித்தை பிரிவில் இந்திய அணி வெள்ளி பதக்கம் வென்றுள்ளதற்கு வாழ்த்துக்கள். இந்த அணியில் இடம் பிடித்த முஸ்கான் கிராருக்கு ம.பி. அரசு சார்பில் 75 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். #AsianGames2018 #Muskarkirar #ShivrajSinghChauhan
    ×