search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சம்பத்"

    காலா புரோமஷன் நிகழ்ச்சிக்காக ஐதராபாத் சென்ற ரஜினி, தான் எதிர்பார்த்ததை விட குறைவாக தான் எதிர்ப்புகள் வந்திருப்பதாக கூறியிருக்கிறார். #Kaala #Rajinikanth
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவி விட்டதாக ரஜினி தெரிவித்த கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு ரஜினி விளக்கம் அளிக்கும் வகையில் ரஜினி அளித்த பேட்டி வருமாறு:-

    கே:- தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக நீங்கள் தெரிவித்த கருத்துக்கு தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளரே?

    ப:- சிலர் நான் சொன்னதை திரித்து சொல்லி வருகிறார்கள். இப்போது தொழில்நுட்பம் பெறுகிவிட்டது. யூடியூப் வீடியோவில் என்ன வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம். நான் என்ன சொல்லி இருக்கேன். என்ன பேசி இருக்கேன் என்பது அதில் உள்ளது. இதில் மறைப்பதற்கு ஒன்றுமே இல்லை. 

    கே:- காலா படத்தின் புரமோ‌ஷனுக்காகவே ரஜினி தூத்துக்குடி சென்றதாக விமர்சிக்கப்படுகிறதே? சாரிங்க... அது பற்றி நான் சொல்ல விரும்பல. ஆண்டவன் அருளால் என்னோட ரசிகர்கள், மக்களோட ஆதரவு உள்ளது. படம் ஒடுவதற்காக இந்த மாதிரி ஸ்டண்ட் கொடுக்கணும்னு அவசியம் இல்ல. சினிமாவுக்கு வந்து 43 வரு‌ஷம் ஆகுது. இந்த வயசுல நான் அதுமாதிரி செய்யணும்னு அவசியம் இல்லை.

    கே:- அரசியலில் குதித்துள்ள உங்களையும், உங்கள் தொழிலையும் தொடர்புபடுத்தி பேசுறத எப்படி பார்க்கிறீங்க?

    ப:- அவங்க அப்படித்தான் பண்ணுவாங்க. என்ன பண்றது. அரசியல் வேற, சினிமா தொழில் வேற.



    கே:- அரசியல் பிரவேசத்துக்கு அப்புறம் காலா படம் வருது. உங்க மன்றத்தின் சார்பா என்ன வேண்டுகோள் விடுக்கிறீர்கள்?

    ப:- எதிர்ப்புகள் இன்னும் கம்மியா இருக்கேன்னு நான் பார்த்துட்டு இருக்கேன். இதைவிட ஜாஸ்தியா இருக்கும்னு நினைச்சேன். படம் நல்லா இருந்தா 100 சதவீதம் நன்றாக ஓடும். நன்றாக இருந்தால் ஏற்றுக் கொள்வார்கள்.

    கே:- காலா படத்துக்கு கர்நாடகாவில் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளதே?

    ப:- கர்நாடகாவில் ஒரு பிரச்சினையும் வராது என்று எதிர்பார்க்கிறேன். எதிர்ப்பதற்கு எந்த ஒரு காரணமும் இல்லை. இது கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கும் தெரியும். அங்கு நமது தமிழக மக்கள் மட்டுமல்ல. பல லட்சம் பிறமொழி மக்களும் இந்த படத்தை பார்க்க மிகுந்த ஆர்வமாக உள்ளனர். எனவே அவர்களை ஏமாற்றக் கூடாது. எனவே கர்நாடகாவில் காலா படத்தை வெளியிட உறுதியான நடவடிக்கைகள் எடுப்பார்கள் என்று நினைக்கிறேன். தேவையான பாதுகாப்பை வழங்குவார்கள் என்ற நம்பிக்கையும் இருக்கு. நான் மதிக்கும் பெரியவர் தேவேகவுடாவும் இருக்கிறார். அவர் நிச்சயம் படத்தை தடை செய்ய விடமாட்டார்.

    கே:- பெண் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய எஸ்.வி.சேகர் கைது செய்யப்படாத நிலையில் அவர் போலீஸ் பாதுகாப்புடன் வலம் வருகிறாரே?

    ப:- சார்... அது பற்றி நான் கருத்து கூறவிரும்பவில்லை.

    கே:- நீட் தேர்வு வேண்டாம் என்பது பற்றி உங்கள் கருத்து என்ன?

    ப:- இதுபற்றி பெரியவர்கள் கலந்து ஆலோசித்து முடிவு செய்ய வேண்டும்.

    இவ்வாறு ரஜினி கூறினார். #Kaala #Rajinikanth

    ரஜினிகாந்த் நடிப்பில் காலா படம் வருகிற ஜூன் 7-ஆம் தேதி ரிலீசாக இருக்கும் நிலையில், தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் படம் ரிலீஸாக இருக்கிறது. #Kaala #Rajinikanth
    ரஜினியின் காலா படம் வருகிற 7-ந்தேதி வெளியாகிறது. பா.ரஞ்சித் இயக்கி உள்ளார். தனுஷ் தயாரித்துள்ளார்.

    தமிழகத்தின் தென் மாவட்டத்தில் இருந்து மும்பை சென்று வசிக்கும் தாராவி தமிழர்களுக்காக போராடிய தாதாவின் கதை தான் காலா. இதற்கிடையே ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்த பிறகு வெளியாகும் முதல் படம் என்பதால் பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    படம் ரிலீசுக்கு இடையே தூத்துக்குடி சென்ற ரஜினி தெரிவித்த கருத்துக்கு வரவேற்பும், எதிர்ப்பும் எழுந்தது. 

    சில அமைப்புகள் காலா படத்துக்கு எதிராக போராட தயாராகி வருகின்றன. தமிழகம் முழுக்க இதுவரை 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகள் காலா வெளியீட்டை உறுதி செய்திருக்கின்றன. சென்னையில் மட்டும் இதுவரை 45-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் காலா திரையிடப்படுவது உறுதியாகி இருக்கிறது.

    தென் மாவட்டங்களில் ரஜினியின் காலா படத்தை புறக்கணிப்போம் என்ற ரீதியில் பரப்பிவருகிறார்கள். சென்னையிலும் சில அமைப்புகள் காலா வெளியாகும் போது படம் வெளியாகும் திரையரங் குகளின் முன்பு போராட்டம் நடத்த திட்டமிட்டிருப்பது போலீசுக்கு தெரிய வந்துள்ளது.



    இதனால் காலா படத்துக்கு பாதுகாப்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. காலா வெளியாகும் திரையரங்குகள் எண்ணிக்கை இன்னும் முழுமை அடையவில்லை. எனவே திரையரங்கு எண்ணிக்கை மேலும் கூட வாய்ப்புள்ளதாக திரைப்பட வினியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர்.

    காவிரி விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் கர்நாடகத்துக்கு எதிராக கருத்து தெரிவித்து இருப்பதாக கூறி கன்னட அமைப்புகள் கர்நாடகத்தில் ‘காலா’ படத்தை திரையிட அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி உள்ளனர். கர்நாடகத்தில் ‘காலா’ படத்தை திரையிடக் கூடாது என்று கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கும், கன்னட அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

    இதைத்தொடர்ந்து கர்நாடகத்தில் ‘காலா’ படத்தை திரையிட தடை செய்து கர்நாடக வர்த்தக சபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. படத்தை ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. #Kaala #Rajinikanth

    ரஜினிகாந்த் நடிப்பில் காலா படம் வருகிற ஜூன் 7-ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், காலா படத்தின் புரோமஷனுக்காக ரஜினிகாந்த் இன்று ஐதராபாத் சென்றுள்ளார். #Kaala #Rajinikanth
    ரஜினிகாந்த் நடிப்பில் காலா படம் வருகிற ஜூன் 7-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பா.இரஞ்சித் இயக்கியிருக்கும் இந்த படத்தில் ரஜினி மும்பையில் வாழும் தமிழ் மக்களுக்காக போராடும் தலைவனாக நடித்திருக்கிறார். நிலத்தின் உரிமைக்காக போராடும் கதையை மையப்படுத்தி இந்த படம் உருவாகி இருக்கிறது.

    படத்தின் ரிலீசையொட்டி தெலுங்கு பதிப்புக்கான விளம்பர நிகழ்ச்சி கடந்த வாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தூத்துக்குடி கலவரம் காரணமாக அது தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று மதியம் 12.30 மணிக்கு ரஜினி விமானம் மூலம் ஐதராபாத் புறப்பட்டு சென்றார். 



    தனுஷின் வுண்டர்பார் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். சமுத்திரக்கனி, சம்பத், அருள்தாஸ், அரவிந்த் ஆகாஷ், ‘வத்திகுச்சி’ திலீபன், ரமேஷ் திலக், ஹுமா குரேஷி, அஞ்சலி பட்டேல், அருந்ததி, சாக்ஷி அகர்வால், சுகன்யா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். #Kaala #Rajinikanth

    காலா படத்திற்கு கர்நாடகாவில் தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், படத்திற்கு எதிராக யார் போராடினாலும், படம் கண்டிப்பாக வெளியாகும். அதை யாரும் தடுக்க முடியாது என்று பிரகாஷ் ராஜ் கூறியிருக்கிறார். #Kaala #Rajinikanth
    நடிகர் ரஜினிகாந்த் நடித்த காலா படம் வருகிற 7-ந்தேதி தமிழ்நாடு மற்றும் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது.

    கர்நாடகத்தில் காலா படத்தை திரையிட சில கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழகத்துக்கு ஆதரவாக ரஜினி குரல் கொடுத்ததால் ரஜினி படத்தை வெளியிட எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதையடுத்து கர்நாடக திரைப்பட வர்த்தக சபை படத்திற்கு தடை விதித்துள்ளது. 

    காலா படத்தை ரிலீஸ் செய்வது குறித்து, கர்நாடக வர்த்தக சபையுடன், தேசிய திரைப்பட அமைப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.



    இந்த நிலையில், காலா விவகாரம் குறித்து பேசிய பிரகாஷ் ராஜ், 

    பொழுதுபோக்குக்காக எடுக்கப்படும் ஒரு திரைப்படத்தையோ அல்லது ஒரு கலையையோ சமூக பிரச்சனையை சுட்டிக்காட்டி எதிர்ப்பது சரியல்ல. ஒரு பொதுவான பிரச்சனையை சுட்டிக் காட்டி சட்டத்தை கையில் எடுப்பது தவறு. இந்த விவகாரத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க அரசு உறுதியளிக்க வேண்டும். படத்திற்கு எதிராக போராடினாலும், காலா படம் வெளியாவதை யாராலும் தடுக்க முடியாது.

    படத்தை ரிலீஸ் செய்ய கர்நாடக வர்த்தக சபை தடை கோரவில்லை. விநியோகஸ்தர்களின் அழுத்தம் காரணமாகவே படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பிரகாஷ் ராஜ் கூறியிருக்கிறார். #Kaala #Rajinikanth #PrakashRaj
    பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் காலா படத்திற்கு கர்நாடகாவில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நார்வே, சுவிஸ் நாட்டிலும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. #Kaala #Rajinikanth
    ரஜினி நடித்த காலா படம் வரும் 7-ந்தேதி வெளியாகிறது. இந்த நிலையில் தூத்துக்குடியில் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களை பார்த்து ஆறுதல் கூற சென்ற ரஜினி. சமூக விரோதிகள் சிலரால் தூத்துக்குடி போராட்டம் கலவரமாக மாறியதாக கூறினார். ரஜினியின் கருத்துக்கு எதிர்ப்பும், ஆதரவும் கிளம்பி வருகிறது. 

    இதற்கிடையே காவிரி விவகாரத்தில் குரல் கொடுத்ததற்காக காலா படத்தை கர்நாடகாவில் வெளியிட கர்நாடக வர்ததக சபை தடை விதித்துள்ளது. இதுகுறித்து பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், கர்நாடகாவில் காலா படம் ரிலீஸ் செய்வதற்கு எதிர்ப்பு கிளம்பியிருக்கும் நிலையில், அதுபற்றி மக்கள் முடிவுக்கு விட்டுவிட்டேன் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.



    இந்த நிலையில், ‘காலா’ படத்தை நார்வே மற்றும் சுவிட்சர்லாந்திலும் ரிலீசாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறாக ரிலீஸ் தேதி நெருங்கும் நிலையில், அடுத்தடுத்து ‘காலா’ ரிலீசுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் ‘காலா’ படத்தின் வசூலுக்கு இது பின்னடைவாக அமையும் என்று சினிமா வினியோகஸ்தர்கள் கூறுகிறார்கள். #Kaala #Rajinikanth

    ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் காலா திரைப்படத்திற்கு கர்நாடகாவில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், படம் வெளியாவது குறித்து இன்று முடிவு வெளியிடப்படும் என்று விஷால் கூறியிருக்கிறார். #Kaala #Rajinikanth
    ரஜினிகாந்த் நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ளா காலா படம் அடுத்த மாதம் 7-ம் தேதி திரைக்கு வர உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் புதிய டிரைலர் வெளியாகிய நிலையில், காலா படம் கர்நாடகாவில் வெளியாகாது என அம்மாநில திரைப்பட வர்த்தக சபை அறிவித்தது.

    இதுகுறித்து கர்நாடக வர்த்தக சபையுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த விஷால் கூறும்போது, 

    ரஜினி சார் நடித்த காலா படத்தை கர்நாடகாவில் வெளியிட தடை செய்ய வேண்டும் என சில அமைப்புகள் கூறுகிறார்கள். இதுகுறித்து கர்நாடகா பிலிம் சேம்பர் அவர்களிடம் பேசியுள்ளோம். நேற்று மாலை இதுகுறித்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்ட நிலையில்,  இன்று முடிவு எடுக்கப்படும் என கூறியிருக்கிறார்கள். சினிமா வேறு அரசியல் வேறு. 



    இதுதொடர்பாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியை சந்திப்போம். காவிரி பிரச்சனை பற்றி ரஜினி சார், கமல் சார், சிம்பு மற்றும் நான் என பலரும் பேசியுள்ளோம். அது எங்களின் தனிப்பட்ட கருத்து, அதனால் படம் பாதிக்க கூடாது. சினிமாவையும், அரசியலையும் ஒன்று சேர்க்க கூடாது என்பதே எங்கள் நோக்கம். ரஜினி சார் அரசியல் வருவதில் தவறில்லை. படம் வெளிவரும் போது அதையும் அரசியலையும் ஒன்று சேர்ப்பது தவறு. நாம் அனைவரும் இந்தியர்களே, மாநிலங்கள் ஒரு எல்லைக்கோடு அவ்வளவுதான். எனவே இந்த பிரச்சனையில் ஒரு நல்ல முடிவு எட்டும் என்று நம்புகிறோம் என்றார். #Kaala #Rajinikanth

    ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் காலா படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கும் நிலையில், படம் ரிலீசாகும் அன்றே இணையதளங்களிலும் வெளியாகும் என்று தமிழ் ராக்கர்ஸ் அறிவித்துள்ளது. #Kaala #Rajinikanth
    ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படம் வருகிற ஜூன் 7-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. பா.இரஞ்சித் இயக்கியிருக்கும் இந்த படத்திற்கான புரமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், புதிய டிரைலர் ஒன்றை படக்குழு நேற்று வெளியிட்டது. 

    அந்த டிரைலரில், நிலம் - உனக்கு அதிகாரம், எங்களுக்கு வாழ்க்கை என்று ரஜினி பேசும் வசனங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில், காலா படத்தை இணையதளத்தில் வெளியிடுவோம் என்று தமிழ்ராக்கர்ஸ் அறிவித்துள்ளது.

    தமிழ் படங்களை திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியிடும் பைரசி இணையதளம், காலா படத்தை வெளியாகும் நாள் அன்றே வெளியிடுவோம் என்று அறிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.



    பைரசி இணையதளங்களை கட்டுப்படுத்த தயாரிப்பாளர் சங்கம் முயற்சி எடுத்து வருவதாக கூறி வந்தாலும், அவ்வப்போது புதுப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி தான் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

    இதற்கிடையே இன்று ஐதராபாத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த விளம்பர நிகழ்ச்சி ஒன்று தூத்துக்குடி கலவரம் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Kaala #Rajinikanth

    ரஜினிகாந்த் நடிப்பில் ‘காலா’ படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கும் நிலையில், `மெர்சல்' படத்திற்கு பிறகு `காலா' படத்திற்கு டுவிட்டரில் எமோஜி வெளியிடப்பட்டுள்ளது. #Kaala #Rajinikanth
    ரஜினிகாந்த் நடிப்பில் ‘காலா’ படம் வருகிற ஜூன் 7-ஆம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையில் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.

    இந்த நிலையில், ரிலீசை முன்னிட்டு படத்தின் புரமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், மெர்சல் படத்திற்கு பிறகு காலா படத்திற்கு டுவிட்டர் எமோஜி வெளியிடப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் காலா என்ற ஹேஷ் டேக்குக்கு எமோஜி வடிவமைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் டுவிட்டரில்  வெளியிடப்பட்டுள்ள காலா எமோஜிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. 



    மும்பை பின்னணியில் உருவாகி இருக்கும் இந்த படத்தில், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கும் தலைவனாக ரஜினி நடித்திருக்கிறார். பா.இரஞ்சித் இயக்கியிருக்கும் இந்த படத்தை தனுஷ் அவரது வுண்டர்பார் பிலம்ஸ் மூலம் தயாரித்துள்ளார். 

    சமுத்திரக்கனி, சம்பத், அருள்தாஸ், அரவிந்த் ஆகாஷ், ‘வத்திகுச்சி’ திலீபன், ரமேஷ் திலக், ஹுமா குரேஷி, அஞ்சலி பட்டேல், அருந்ததி, சாக்ஷி அகர்வால், சுகன்யா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். #Kaala #Rajinikanth

    பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் காலா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக 2 பேர் நடித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Kaala #Rajinikanth
    காலா படத்தில் ரஜினிக்கு இரண்டு ஜோடிகள். இதை ரஜினி மனைவியாக நடித்திருக்கும் ஈஸ்வரி ராவ் இதை உறுதிப்படுத்தி இருக்கிறார். ரஜினியுடன் நடிப்பது தெரிந்தது முதல் ‘உன்னை ரஜினிக்கு அம்மாவாக நடிக்க வைக்கப் போகிறார்கள்’ என்று வீட்டில் கிண்டல் செய்தார்கள்.

    ரஞ்சித் என்னிடம் நீங்கள் தான் ரஜினிக்கு ஜோடி. ஆனால் இன்னொரு ஜோடியும் படத்தில் இருக்கிறார் என்று சொன்னதும் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றுவிட்டேன். சாப்பிட்டுக் கொண்டிருந்த என்னால் அதன் பின் தொடர்ந்து சாப்பிடவே முடியவில்லை. சினிமாவுல மீண்டும் நான் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதே என் குடும்பம் தான். ‘காலா’ படத்துக்காக முதன் முறையாக நானே டப்பிங் பேசியிருக்கிறேன்’ என்று கூறி இருக்கிறார்.

    காலா வருகிற ஜூன் 7-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Kaala #Rajinikanth
    பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் காலா படத்தில் ரஜினியுடன் நடிக்க தனுஷ் விருப்பம் தெரிவித்த நிலையில், ரஜினிகாந்த் அதனை தவிர்த்து விட்டாராம். #Kaala #Rajinikanth
    தனுசும், சமுத்திரக்கனியும் கலந்துகொண்ட திரைப்பட விழா ஒன்றில், ‘ ரஜினியுடன் நடிக்கும் சமுத்திரக்கனியைப் பார்த்தால் எனக்குப் பொறாமையாக இருக்கிறது. ‘காலா’வில் எந்த வேடம் கொடுத்தாலும் நான் நடிக்கிறதுக்குத் தயாராக இருக்கிறேன்’ என்று பகிரங்கமாக தனது விருப்பத்தை வெளியிட்டவர் தனுஷ். ஆனால் தனுஷ் ஆசையை இயக்குநர் பா.ரஞ்சித் ஏனோ நிறைவேற்றவில்லை.

    ‘காலா’வில் ரஜினிக்கு மூன்று மகன்கள். ஏதாவது ஒரு மகன் வேடத்தில் நடிப்பதற்கு நிச்சயமாய் தன்னை ரஞ்சித் அழைப்பார் என்று நம்பிக்கையோடு காத்துக்கொண்டிருந்தார் தனுஷ். தனுஷை நடிக்கவைக்கும் முன் ரஜினியிடம் சம்மதம் வாங்கிக்கொள்வது நல்லது என்று தனுஷ் நடிக்க விருப்பம் தெரிவித்திருக்கும் வி‌ஷயத்தை ரஜினியிடம் சொல்லியிருக்கிறார் ரஞ்சித். 



    நீண்டநேரம் யோசித்த ரஜினி, தனுஷ் தயாரிப்பாளராக மட்டும் இருக்கட்டும். நடிக்க வேண்டாமே!’ என்று தவிர்த்துவிட்டாராம். தனுசுடன் ரஜினி ஏன் நடிக்க மறுத்தார் என்று காரணம் தெரியவில்லை. #Kaala #Rajinikanth #Dhanush

    ரஜினியின் காலா படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சாக்ஷி அகர்வால், தனக்கு முதலில் ரஜினி படம் என்று தெரியாது, தலைவர் பெயரை சொன்னதும் தலை சுற்றிவிட்டதாக கூறினார். #Kaala #Rajinikanth
    பார்ப்பதற்கு இந்தி நடிகைகள் போல இருக்கிறார் சாக்‌ஷி. ஆனால் வாயை திறந்தால் தமிழ் சரளமாக வருகிறது. காலா படத்தில் ரஜினியுடன் நடித்த அனுபவங்களை மாலைமலருக்காக பகிர்ந்துகொண்டார்.

    பிறந்தது இமாச்சல பிரதேசத்தில். வளர்ந்தது சென்னை. படித்தது அண்ணா பல்கலைகழகம். தங்க பதக்க மாணவி. பின்னர் மாடலிங், ஃபே‌ஷன் ஷோ, விளம்பரங்கள் அப்படியே சினிமா நுழைவு.

    காலா படம்னு சொல்லாம ஒரு படத்துக்கான தேர்வுனு தான் கூப்பிட்டாங்க. ரஞ்சித்தின் உதவி இயக்குநர்னு பேசினப்ப யாரோ விளையாடறாங்கன்னு தான் நினைச்சேன். தேர்வு நடந்தபோது கூட இது ரஜினி படம் என்று சொல்லவில்லை. தேர்வில் என்னை பார்த்த உடனேயே இயக்குநர் ரஞ்சித் ‘இந்த பொண்ணு கதாநாயகியாத் தான் நடிப்பேன்னு சொன்னா என்ன செய்வது... அதனால வேண்டாம் என்று சொல்லிட்டார். அப்புறம் எந்த வேடமா இருந்தாலும் நடிக்க தயார்னு சொன்னபிறகு சரி சொன்னார். அவர் என்னை தேர்ந்தெடுத்த பிறகு தான் மெதுவா ‘யார் சார் ஹீரோ?’னு கேட்டேன். ரஜினி சார்னு சொன்னார். எனக்கு தலையே சுத்திவிட்டது. என்னது தலைவர் கூடவே நடிக்க போறோமான்னு என்னால நம்பவே முடியலை. அப்புறம் 21 நாட்கள் நடிக்க பயிற்சி கொடுத்து தான் படப்பிடிப்புக்கு வர சொன்னார்கள். ரஜினி சார் தவிர எல்லோருமே பயிற்சில கலந்துகொண்டார்கள்.



    படத்துக்கான போட்டோஷூட் நடந்தப்ப தான் முதல் தடவையா பார்த்தேன். கூடவே இருந்தாலும் ரொம்ப சந்தோ‌ஷமா இருந்ததால பேச முடியலை. மும்பை படப்பிடிப்பில் தான் அவருக்கு அறிமுகம் ஆனேன். என்னை பார்த்ததும் ‘நீங்க மும்பையா?’னு கேட்டார். ‘அய்யோ இல்லை சார். நான் பக்கா சென்னை பொண்ணு’ன்னு சொன்னேன். அப்புறம் என்னை பற்றி விசாரித்து தெரிந்துகொண்டார். அவர்கூட வசனம் பேசற காட்சியில் பதற்றமாவே இருந்தேன். இயக்குநர் ஒத்திகைக்கு கூப்பிட்டார். ஒத்திகைக்கு ரஜினி வரமாட்டார்னு நினைச்சா அவரும் அங்கேயே இருக்கார். நான் பதற்றமாவே வசனம் பேசி முடிச்சேன். ரஜினி சார் ‘என்ன ரஞ்சித் இந்த பொண்ணு பார்க்க வட இந்திய பொண்ணு மாதிரி இருக்கு. ஆனா இவ்வளவு நல்லா தமிழ் பேசுது’ன்னு சொன்னார். அப்பதான் எனக்கு உயிரே வந்தது.

    ஒரு சாதாரண பெண்ணா தான் இருப்பேன். அவர்களும் என்னை அப்படி தான் பார்ப்பார்கள். இப்பகூட வீட்டில் ஏதும் வேலை இருந்தால் நானே செய்வேன். பழகிப் பாருங்கள். பக்கத்து வீட்டு பொண்ணு மாதிரி எளிமையா இருப்பேன். கடின உழைப்பாளி. மனதில் பட்டதை பட்டுஞ்னு பேசிவிடுவேன் என்றார். #Kaala #Rajinikanth #SakshiAgarwal

    நான் கண் மூடுவதற்குள் தென்னிந்திய நதிகளை இணைக்க வேண்டும் என்பது தான் எனது ஆசை என்று காலா இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த் தெரிவித்தார். #Kaala #KaalaAudioLaunch #Rajinikanth
    ரஜினிகாந்த் நடிப்பில் ‘காலா’ படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசும் போது,

    இது ஒரு இசை வெளியீட்டு விழா மாதிரி தெரியவில்லை, படத்தின் வெற்றி விழா மாதிரி இருக்கிறது. நான் கடைசியாக கொண்டாடிய வெற்றி விழா சிவாஜி தான். சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அந்த வெற்றி விழாவுக்கு வந்த கலைஞர் அன்று பேசினார். அவரது அந்த குரலை மறக்க முடியாது. அவரது குரலை மறுபடியும் கேட்க வேண்டும். 75 ஆண்டுகளாக ஒலித்த அந்த குரல், மீண்டும் ஒலிக்க மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் நானும் ஒருவன். விரைவில் அவரது குரல் ஒலிக்கும் என்று நம்புகிறேன். 

    சிவாஜிக்கு பின்னர் ரோபோ படம் வெளியாகி வெற்றி பெற்றது. அதன் பின்னர் உடல் நலம் மோசமானதால் படத்தின் வெற்றியை கொண்டாடவில்லை. பின்னர் ராணா படம் சரியாக போகவில்லை. புத்திசாலியுடன் பழகலாம். அதிபுத்திசாலியுடன் பழக கூடாது. அவர்களிடம் ஆலோசனை கேட்க கூடாது. நேரம் வரும் போது வழி, ஜன்னல், கதவு தெரியாமல் அவர்கள் ஓடி விடுவார்கள். பின்னர் லிங்கா பண்ணோம். அதுவும்சரியாக போகவில்லை. 



    அவ்வப்போது இமயமலைக்கு போவேன். அங்கே போவதே கங்கையை பார்க்கத்தான். தென்னிந்திய நதிகளை இணைப்பது தான் எனது கனவு. நான் கண் மூடுவதற்கு முன்னால் அது நடக்க வேண்டும். 

    படத்திலும் சரி, வாழ்க்கையில் சரி நல்லவனாக இருக்க வேண்டும். ஆனால் ரொம்ப நல்லவனாக இருக்கக் கூடாது. இவ்வாறு தோல்விகள் தொடர்ந்தது. உடனே ரஜினி அவ்வுளோ தான். முடிஞ்சு போச்சுனு சொன்னாங்க. 40 வருசமாக சொல்றாங்க, அவர்களையும் தப்பு சொல்ல முடியாது. வயிறு எரியத்தான் செய்யும். 

    யார் என்ன சொன்னாலும் என் வழியில் நான் போய்க் கொண்டே இருப்பேன். அந்த நிலையில், காலத்திற்கு ஏற்ப மாற நினைத்தேன். அப்போது சவுந்தர்யா ரஞ்சித்தை அறிமுகம் செய்தார். அவர் டான் கதையை சொன்னார். ஒரே பாட்ஷா தான். மலேசியா அன்டர்வேர்டு டான் என்று அவர் கதை சொன்னதால் கதையை கேட்க ஆரம்பித்தேன். அவரிடம் பேசும்போதே, அவரது குணாதிசயமே பிடித்தது. பிறகு கதையை கேட்டேன். ரஞ்சித் சந்தர்ப்பவாதி இல்லை. அவர்மேல் அவருக்கு நம்பிக்கை இருந்தது.



    அந்த படம் வெற்றி பெற்றது. பினன்ர் வுண்டர்பார் தயாரிப்பில் படத்தில் நடிக்க ஆசைப்பட்டேன். அது தற்போது நடந்தது. தனுஷ் தங்கப் பையன். அப்பா அம்மாவை மதிக்கிறார். மனைவியை நல்லபடியாக பார்த்துக் கொள்கிறார். பின்னர் வெற்றிமாறன் ஒரு கதை சொன்னார், கதை எனக்கு பிடித்தது, அது முழு அரசியல் படம். நான் அப்போது அரசியலுக்கு வரவில்லை. எனவே அந்த படத்தில் நடிக்கவில்லை. 

    பின்னர் மறுபடியும் ரஞ்சித்தை அழைத்தேன். இருவரும் இணைந்தோம். காலா படம் உருவானது. காலா அரசியல் படம் கிடையாது. ஆனால் அரசியல் இருக்கும். 

    அரசியல் பற்றிய பேச நேரம் வரவில்லை. நேரம் வரும் போது அரசியல் பற்றி பேசுகிறேன் என்றார். #Kaala #KaalaAudioLaunch #Rajinikanth

    ×