என் மலர்
நீங்கள் தேடியது "கொள்ளை"
- கைதான 2 பேர் சிறையில் அடைப்பு
- மேலும் பல திருட்டு வழக்குகளின் தொடர்பு குறித்து போலீசார் விசாரணை
நாகர்கோவில்:
நாகர்கோவில் சைமன் நகரைச் சேர்ந்தவர் சங்கர நாராயணன் (வயது 38), தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.
கடந்த மாதம் 7-ந் தேதி சங்கரநாராயணன், பணி நிமித்தமாக வெளியூர் சென்று இருந்தார். அவரது மனைவி பிருந்தா, தனது குழந்தையுடன் வில்லுக்குறியில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்று விட்டார்.
இதனை அறிந்த யாரோ சிலர் வீட்டின் கதவை உடைத்து, பீரோவில் இருந்த 62¾ பவுன் நகைகள் மற்றும் ரூ.90 ஆயிரத்தை கொள்ளை யடித்துச் சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்த போது 2 பேர் சந்தேகத்திற்கிடமாக நட மாடி யது தெரிய வந்தது.இதனைத் தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் துைண சூப்பிரண்டு நவீன்குமார் மேற்பார்வையில் போலீசார், அந்த நபர்களை தேடி வந்தனர்.
இந்தநிலையில் அவர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்களது பெயர் ராமநாதபுரம் மாவட்டம் காக்கூர் பகுதி யைச் சேர்ந்த சாந்தகுமார் (29), விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சிவ குமார் (25) என தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து 50 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர்.
கைதான 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களை சிறையில் அடைக்க நீதிபதி உத்தர விட்டார். அதன்படி 2 பேரும் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதற்கிடையில் கைதான சாந்தகுமார், சிவகுமார் பற்றி தீவிரமாக விசாரித்த போது, குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் இவர்கள் திருட்டு வழக்கு களில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது. இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
- அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் நகை கொள்ளை சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உறவுகாரர் போல் பேசி மர்ம நபர் கைவரிசை
அரியலூர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் உடையார்பாளையம் அருகே உள்ள சுத்தமல்லி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் குமார். இவர் விக்கிரமங்கலம் அரசு மேல்நிலை பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் சுரேஷ் குமார் தத்தனூர் தனியார் பள்ளியில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டியில் கலந்து கொள்வதற்காக சென்றுவிட்டார். இதனை அறிந்த மர்ம நபர், ஆசிரியர் வீட்டிற்கு வந்து, ஆசிரியர் மனைவி எழிலரசியிடம் , உறவுக்காரர் போல் பேசியுள்ளார்.
மேலும் புதுமனை விழாவிற்க்கு மா இலை வேண்டும் கொஞ்சம் ஒடித்து கொடுங்கள் என்று கேட்டுள்ளார். ஆசிரியர் மனைவி எழிலரசி எதிர் வீட்டில் மா இலை பறித்து வந்து கொடுத்த நிலையில் மர்ம நபர் வாங்கி கொண்டு சென்றுள்ளார்.
சிறிது நேரம் சென்ற எழிலரசி வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைந்து இருந்தது. அதில் இருந்த சுமார் 1.60 லட்சம் மதிப்பிலான 8 பவுன் நகையை திருடு போயிருந்தது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் உடையார்பாளையம் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
- குருந்தன்கோடு ஊற்று விளையில் பத்திரகாளி அம்மன் கோவில் உள்ளது
கன்னியாகுமரி:
இரணியல் அருகே உள்ள குருந்தன்கோடு ஊற்று விளையில் பத்திரகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினமும் பூஜை வழிபாடுகள் நடந்து வருகிறது.
இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு கோயிலுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்த உண்டியலை உடைத்து ரூ.1000 பணத்தை திருடிச் சென்று உள்ளனர்.
இது குறித்து கோவில் நிர்வாகி ராமசாமி (வயது 62) கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 7 பவுன் நகை, ரூ.14ஆயிரம் ரொக்கம் மற்றும் மிக்சி, கிரைண்டர், அண்டா உள்ளிட்ட பொருட்களும் கொள்ளைபோயிருந்தன.
- போலீசார் வழக்குபதிவு செய்து சி.சி.டிவி காமிராக்கள் உள்ளதா என்றும், அதில் கொள்ளையர் உருவம் பதிவாகி உள்ளதா எனவும் ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் ஆர்.எம்.டி.சி காலனி போக்குவரத்து நகரை சேர்ந்தவர் சதீஸ்குமார். இவர் கோவையில் வாடகை கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ராம்கமலா(41) என்ற மனைவியும், விக்ரமன்(20) என்ற மகனும் உள்ளனர்.
சதீஸ்குமார் 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே வீட்டிற்கு வருவது வழக்கம். ராம்கமலா சுயஉதவிக்குழு நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இடைவிடாது பெய்த மழையினால் வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள தனது தங்கை வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இன்று காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று ராம்கமலா பார்த்தபோது பீரோவில் இருந்த 7 பவுன் நகை, ரூ.14ஆயிரம் ரொக்கம் மற்றும் மிக்சி, கிரைண்டர், அண்டா உள்ளிட்ட பொருட்களும் கொள்ளைபோயிருந்தன.
சுயஉதவிக்குழு பெண்களிடம் வசூல் செய்த பணத்தை தான் கட்டுவதற்காக வைத்திருந்ததாகவும், அதனை மர்மநபர்கள் திருடிச்சென்றுவிட்டதாகவும் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜய், மலைச்சாமி, தலைமையிலான போலிசார் வந்து விசாரணை நடத்தினர். அப்பகுதியில் சி.சி.டிவி காமிராக்கள் உள்ளதா என்றும், அதில் கொள்ளையர் உருவம் பதிவாகி உள்ளதா எனவும் ஆய்வு செய்தனர்.
- நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே கார்கூடல்பட்டி ஊராட்சி யில் அம்மன் கோவிலில் பூட்டை உடைத்து பீரோவை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த சுமார் 2 லட்சம் பணத்தையும், ஒரு பவுன் தங்கச் செயின் ஆகியவற்றை கொள்ளை யடித்துச் சென்றனர்.
- கைவரிசை காட்டிய மர்ம நபர்களை கண்டுபிடிக்க தனிப்படை அமைப்பு
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே கார்கூடல்பட்டி ஊராட்சி யில் அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் கதவை வழக்கம்போல் பூசாரிகள் பூட்டி விட்டு சென்றனர். நேற்று காலை யில் கோவில் பூசாரி கோவிலை திறப்பதற்காக வந்துள்ளார். அப்போது கோவில் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.
பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் கோவில் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தையும், அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த சுமார் 2 லட்சம் பணத்தையும், ஒரு பவுன் தங்கச் செயின் ஆகியவற்றை கொள்ளை யடித்துச் சென்றனர். இந்த கொள்ளையர்கள் முகமூடி கொள்ளையர்களாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு ஆயில்பட்டி போலீசார் மற்றும் பேளுக்குறிச்சி இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் ஆகியோர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.
கொள்ளையர்களை கண்டுபிடிக்க ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை தனிப்படை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதே கோவிலில் ஏற்கனவே 2 தடவை இது போன்று கொள்ளை சம்பவம் நடந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
சில நாட்களுக்கு முன்பு ராசிபுரம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற அழியா இலங்கை அம்மன் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளையர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்றது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ச்சியாக கோவில்களை குறிவைத்து கொள்ளையடிக்கும் கும்பலை கூண்டோடு கைது செய்ய வேண்டும் என பகுதிக்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மதுரை வைகை ஆற்றில் கொள்ளையடிப்பதற்காக பதுங்கியிருந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
- போலீசார் மேற்கண்ட 4 பேரையும் திலகர்திடல் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
மதுரை
மதுரை வைகை தென்கரை பகுதியில் ஆயுதங்களுடன் 10 பேர் கும்பல் கொள்ளை யடிப்பதற்காக பதுங்கி இருப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது. இவர்களை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.
இதையடுத்து மாநகர தெற்கு துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் மேற்பார்வையில், உதவி கமிஷனர் சுவாதி ஆலோசனையின் பேரில், திலகர் திடல் இன்ஸ்பெக்டர் சங்கர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நேற்று காலை வைகை தென்கரை பகுதியில் ரோந்து சென்றனர். அனுமார் கோவில் படித்துறை பகுதியில் 10 பேர் கும்பல் ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பது தெரியவந்தது.
அவர்களை போலீசார் சுற்றி வளைத்தனர். போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பி ஓடினர். அவர்களில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. போலீசார் மேற்கண்ட 4 பேரையும் திலகர்திடல் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
அவர்கள் சிம்மக்கல், வெங்கடசாமி அக்ரஹாரம் செந்தில்குமார் மகன் சந்தோஷ் (20), சிம்மக்கல் சுப்பையா பிள்ளை தோப்பு, பாரதி மகன் பூமிநாதன் (23), மேல அண்ணாதோப்பு, சுடுதண்ணீர் வாய்க்கால் தெரு, கதிரேசன் மகன் ராமர் என்ற யுவா ராம்குமார் (20), அவரது சகோதரர் லட்சுமணன் என்ற யுவராஜ்குமார் என்பது தெரியவந்தது. யுவராம்குமார், யுவராஜ்குமார் ஆகியோர் இரட்டையர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- மர்மநபர்கள் கைவரிசை
- சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு
நாகர்கோவில்:
ஈத்தாமொழி அருகே கேசவன் புத்தன் துறை பகுதியில் தூய மாசற்ற திரு இருதய அன்னை ஆலயம் உள்ளது.இந்த ஆலயத்தின் எதிர்ப்புறம் மிக்கேல் அதிதூதர் குருசடி ஆலயம் அமைந்துள்ளது.
இந்த குருசடியில் காலை மாலை நேரங்களில் பிரார்த்தனை நடைபெறும். நேற்று காலை வழக்கம் போல் பிரார்த்தனை முடிந்து அனைவரும் சென்றனர். மாலையில் பிரார்த்தனைக்கு வந்த போது குருசடி இருந்த மிக்கேல் அதிதூதர் கழுத்தில் கிடந்த 12 பவுன் நகை மாயமாக இருந்தது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நிர்வாகிகள் ஈத்தாமொழி போலீசுக்கு தகவல் தெரிவித்தன.ர் கன்னியாகுமரி டிஎஸ்பி ராஜா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி னார்கள். மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது.
கொள்ளை நடந்த பகுதியிலிருந்து மோப்பம் பிடித்து விட்டு சிறிது தூரம் ஓடிய நாய் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதுகுறித்து ஈத்தாமொழி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆட்கள் நடமாட்டம் இல்லாததை நோட்டமிட்டு யாரோ இந்த கைவரிசையில் ஈடுபட் டுள்ளனர். எனவே இந்த கொள்ளை சம்பவத்தில் உள்ளூர் கொள்ளையர்க ளுக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கி றார்கள். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
- போட்டோ ஸ்டுடியோ பூட்டை உடைத்து ரூ.8.50 லட்சம் கொள்ளை நடந்துள்ளது.
- பணத்தையும் அள்ளிச்சென்ற மர்ம நபர்கள்
திருச்சி:
மணப்பாறையில் போட்டோ கடையின் பூட்டை உடைத்து 8.50 லட்சம் மதிப்பிலான கேமரா கொள்ளை போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொள்ளை
திருச்சி மாவட்டம், மனப்பாறையை அடுத்த பழைய காலனியைச் சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 25). இவர் திருச்சி சாலையில் உள்ள ஒரு சினிமா தியேட்டர் அருகே நவீன வசதிகளுடன் கூடிய கேமராவுடன் ஸ்டூடியோ வைத்து நடத்தி வருகிறார்.
நேற்று இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு சென்றார். பின்னர் இன்று காலை வந்து பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் கண்ணாடி கதவில் இருந்த பூட்டும் உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் கடையின் உள்ளே சென்று பார்த்த போது ரூ.8.40 லட்சம் மதிப்பிலான கேமராக்கள் மற்றும் ரூ.4 ஆயிரம் ரொக்கப் பணம் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது.
போலீசார் விசாரணை
இதையடுத்து கொள்ளை பற்றிய தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் விரல் ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. பிரதான சாலையில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் மணப்பாறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொள்ளை சம்பவங்களை தடுக்க இரவு நேரங்களில் கூடுதல் போலீசார் நியமனம் செய்யப்பட்டு ரோந்து பணியில் ஈடுபட நடவடிக்ைக எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் கோரிக்கை
- மதுரை அருகே விவசாயி வீட்டில் 45 பவுன் நகை-பணம் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
- கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
மதுரை
மதுரை பெருங்குடி அருகே வலையப்பட்டியை அடுத்துள்ள ஓ.ஆலங்கு ளத்தைச் சேர்ந்தவர் பாண்டி (வயது 42). விவசாயியான இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன் வயலுக்கு சென்று விட்டார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவை உடைத்த அவர்கள் அதில் இருந்த 45 பவுன் நகைகள், வெள்ளி கொலுசுகள், ரூ. 10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிக் கொண்டு தப்பினர்.
மாலையில் வேலை முடிந்து வீடு திரும்பிய பாண்டி கதவு உடை க்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது நகை, பணம் திருடு போயிருந்தது. இதுகுறித்து பெருங்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்க ப்பட்டன. இந்த துணிகர கொள்ளை குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- மாநில வரி அலுவலர் அரவிந்தை கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்திற்கு பேச வேண்டும் என கூறி அழைத்து சென்றனர்.
- புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து குணசேகரன் உட்பட 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் கூத்தப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த் (வயது 40).கடலூர் வணிகவரித்துறை அலுவலகத்தில் மாநில வரி அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் அதே அலுவலகத்தில் 30 வயது பெண் ஒருவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர்கள் 2 பேரும் நட்பாக பழகி பேசிக் கொண்டிருந்தனர். இதனால் அந்த பெண்ணின் தந்தை குணசேகரன்2 பேரையும் பலமுறை கண்டித்து உள்ளார். சம்பவத்தன்று குணசேகரன் மற்றும் 3பேர் வணிகவரித்துறை அலுவலகத்திற்கு நேரில் வந்தனர். பின்னர் மாநில வரி அலுவலர் அரவிந்தை கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்திற்கு பேச வேண்டும் என கூறி அழைத்து சென்றனர். அப்போது குணசேகரனுக்கும், அரவிந்துக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. . இதில் குணசேகரன் மற்றும் 3 பேர் திடீரென்று மாநில வரி அலுவலர் அரவிந்தை சரமாரியாக தாக்கினர்.
மேலும் அவர் அணிந்திருந்த 9 பவுன் செயின் மற்றும் அவரிடம் இருந்த விலை உயர்ந்த 2 ஐபோன் ஆகியவற்றை பறித்து கொலை மிரட்டல் விடுத்தனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த அரவிந்த் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து குணசேகரன் உட்பட 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். கடலூரில் பட்டப்பகலில் வணிகவரித்துறை அலுவலகம் அருகே மாநில வரி அலுவலர் அரவிந்தை தாக்கி நகை மற்றும் ஐபோன் பறித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- முன்பக்கம் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள் காணவில்லை.
- மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து கொள்ளை.
தஞ்சாவூர்:
தஞ்சை கீழவஸ்தாசா வடியை சேர்ந்தவர்அசார் முகமது.
இவர் வெளிநா ட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி நஷியாபேகம் (வயது 28).
சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டுக்கு சென்றார்.
திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
வீட்டுக்குள் சென்று பார்த்தபோது முன்பக்கம் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் காணவில்லை.
மேலும் வீட்டினுள் இருந்த ஹோம் தியேட்டர், தையல் எந்திரம், பாத்திரம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.
இது குறித்து அவர் தஞ்சை தாலுகா போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர்.
மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- வியாபாரி வீட்டில் நகை கொள்ளை சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பட்டப்பகலில் துணிகரம்
திருச்சி:
திருச்சி சோமரசம்பேட்டை வாசன் நகர் 5-வது கிராஸ் சேர்ந்தவர் சத்யநாராயணன்(வயது 57). இவர் தனது வீட்டில் ஒரு பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று தனது மனைவி ஆனந்தியை(53) கடையை பார்க்க சொல்லிவிட்டு, காந்தி மார்க்கெட்டுக்கு மளிகை பொருட்கள் வாங்க சென்று விட்டார்.
அப்போது கடைக்கு வந்த மர்மநபர் , சில பொருட்களை வாங்கி விட்டு தனக்குத் தாகம் எடுப்பதாகவும் தண்ணீர் வேண்டும் என்று ஆனந்திடம் கேட்டுள்ளார். ஆனந்தி தண்ணீர் கொண்டு வந்து கொடுத்துவிட்டு அவர் தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கும் போது அதே பகுதியில் ஒன்பதாவது கிராசில் இருக்கும் தனது தோழியின் வீட்டிற்கு கடையை பூட்டாமல் சென்று விட்டார்.
அவர் சென்றதை அறிந்த மர்ம நபர் கடையின் வழியாக வீட்டினுள் புகுந்து, பூட்டாமல் இருந்த பீரோவில் இருந்து 2 பவுன் ஆரம் மற்றும் 2 பவுன் மதிப்புள்ள தங்க சங்கிலி ஆகியவற்றை திருடி சென்று விட்டார். தோழியின் வீட்டிற்கு சென்று திரும்பி ஆனந்தி, வீட்டின் உள்ளே சென்ற போது பீரோவில் இருந்த துணிமணிகள் கலைந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் பீரோவை சோதித்துப் பார்த்தபோது உள்ளே வைத்திருந்த நகைகள் காணவில்லை. இதுகுறித்து சோமரசம்பட்டை போலீசில் புகார் அளித்துள்ளார். சம்பவம் குறித்து சோமரசம்பேட்டை போலீசார் அப்பகுதிகளில் உள்ள சிசிடி கேமராவை வைத்து தப்பி ஓடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.
பட்டப் பகலில் நடந்த இந்த திருட்டு சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.