search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதம்"

    மதம் மாற மனைவி வற்புறுத்தியதால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.

    மதுரை:

    திருமங்கலம் அருகில் உள்ள தங்கலச்சேரியை சேர்ந்தவர் ஜெயபாண்டி (வயது 29). இவருக்கு கர்நாடகாவை சேர்ந்த முறுக்கு வியாபாரி புதுராஜா மகள் ஜெயாவுடன் 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இந்த நிலையில் ஜெயா நீங்கள் உடனடியாக மதம் மாற வேண்டும் என்று கணவரிடம் வற்புறுத்தியுள்ளார். ஆனாலும் ஜெயபாண்டி மறுத்து விட்டார். இதையடுத்து ஜெயா நகை, பணத்தை எடுத்துக்கொண்டு தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

    இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த ஜெய பாண்டி வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக நாகையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் ஒத்தக்கடை அருகில் உள்ள யானைமலை குவாரியை சேர்ந்தவர் மூர்த்தி (35). இவரது மனைவி மகேஸ்வரி (31). கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதற்கிடையே மகேஸ்வரி ஒத்தக்கடை போலீசில் மூர்த்தி மீது புகார் கொடுத்தார்.

    இதைத் தொடர்ந்து போலீசில் ஆஜரான மூர்த்தி மனைவியுடன் சேர்ந்து வாழ்வதாக உறுதி அளித்து வீட்டுக்கு சென்றார். இந்த நிலையில் வாழ்க்கையில் விரக்தியடைந்த மூர்த்தி வி‌ஷம் குடித்தார். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது தொடர்பாக சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேர்தல் ஆதாயத்துக்காக அரசியல் கட்சிகள் மதத்தை பயன்படுத்துவதை தடுக்க உத்தர விடகோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டு உள்ளது. #SupremCourt #Religion
    புதுடெல்லி:

    சுப்ரீம் கோர்ட்டு வக்கீலும், பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்தவருமான அஸ்வினி உபாத்யாய் சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்து உள்ளார்.

    அந்த மனுவில் அவர் கூறி இருப்பதாவது:-

    தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் தங்கள் ஆதாயத்துக்காக மதத்தை தவறாக பயன்படுத்துகின்றன. இதேபோல் வேட்பாளர்களும் மதத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள். இந்த போக்கு அதிகரித்து வருகிறது. இதனால் மதசார்பின்மை, நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு பாதிக்கப்படுகிறது. மேலும் தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாக நடைபெறுவதையும் இது பாதிக்கிறது.

    இது தொடர்பான திருத்த மசோதா கடந்த 1994-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் 1996-ம் ஆண்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதால் அந்த மசோதா காலாவதியாகி விட்டது. ஆனால் அதன்பிறகு அந்த மசோதாவை கொண்டு வர தேர்தல் கமிஷன் யோசனை தெரிவித்த போதிலும், அரசாங்கத்தின் தரப்பில் அதுதொடர்பான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.

    எனவே தேர்தலில் போட்டியிடும் கட்சிகளும், வேட்பாளர்களும் மதத்தை தவறாக பயன்படுத்துவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கும், தேர்தல் கமிஷனுக்கும் உத்தரவிடவேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

    இந்த மனு அடுத்த மாதம் (ஜூலை) 4-ந் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிகிறது.  #SupremCourt #Religion #Tamilnews
    ×