search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாற்றம்"

    தமிழகத்தையே உலுக்கியிருக்கும் பொள்ளாச்சி பாலியல் கொடூரம் தொடர்பான வழக்கு, சிபிசிஐடி போலீசுக்கு மாற்றப்பட்டுள்ளது. #PollachiAbuseCase #PollachiAssaultCase #JusticeforWomen
    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சியில் மாணவிகள் மற்றும் இளம்பெண்களை ஒரு கும்பல் பலாத்காரம் செய்து மிரட்டிய சம்பவம் தமிழகத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பெண்களை சமூக வலைத்தளங்கள் மூலம் காதல் வலையில் விழவைத்து, கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்து, வீடியோ எடுத்து, பணம் பறித்து வார்த்தைகளால் சொல்ல முடியாத கொடூரங்களை நிகழ்த்தியுள்ளனர்.

    இதுதொடர்பாக  சபரிராஜன் (வயது 25) திருநாவுக்கரசு (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27) ஆகியோரை பொள்ளாச்சி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



    இந்நிலையில், பொள்ளாச்சி பாலியல் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை டிஜிபி பிறப்பித்துள்ளார். இதையடுத்து குற்றப்பிரிவு போலீசாரிடம் உள்ள வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட உள்ளன.

    பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டி வரும் இந்த நபர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். #PollachiAbuseCase #PollachiAssaultCase #JusticeforWomen
    பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் சிக்கிய ராஜீவ் குமார் சி.ஐ.டி. பிரிவுக்கு கூடுதல் டி.ஜி.பி.யாக திடீரென மாற்றப்பட்டார். #PoliceCommissioner #RajeevKumar
    கொல்கத்தா:

    நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமிஷனராக இருந்த ராஜீவ் குமாரிடம் சி.பி.ஐ. விசாரிக்க மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் ஷில்லாங்கில் ராஜீவ் குமாரிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.

    இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் சிக்கிய ராஜீவ் குமார் சி.ஐ.டி. பிரிவுக்கு கூடுதல் டி.ஜி.பி.யாக திடீரென மாற்றப்பட்டார். இதையடுத்து கொல்கத்தா போலீஸ் கமிஷனராக மூத்த ஐ.பி.எஸ். அதிகாரியான அனுஜ் சர்மா நேற்று நியமனம் செய்யப்பட்டார். #PoliceCommissioner #RajeevKumar 
    திருப்பூர் போலீஸ் கமிஷனர் உள்பட 4 உயர் போலீஸ் அதிகாரிகளை மாற்றி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    திருப்பூர் போலீஸ் கமிஷனர் உள்பட 4 உயர் போலீஸ் அதிகாரிகளை மாற்றி, தமிழக அரசு நேற்று உத்தரவிட்டது.

    அதன் விவரம் வருமாறு:-

    * திருப்பூர் போலீஸ் கமிஷனர் எஸ்.மனோகரன் அங்கிருந்து மாற்றப்பட்டு, சென்னை பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    * சென்னை பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி சஞ்சய்குமார், திருப்பூர் போலீஸ் கமிஷனராக பொறுப்பு ஏற்பார்.

    * மதுரை நகர குற்றப்பிரிவு துணை கமிஷனர் ஆர்.ஜெயந்தி, ராஜபாளையம் தமிழ்நாடு சிறப்பு காவல்படை 11-வது பட்டாலியன், கமாண்டராக மாற்றப்பட்டார்.

    * ராஜபாளையம் தமிழ்நாடு சிறப்பு காவல்படை 11-வது பட்டாலியன் கமாண்டராக பணியாற்றும் டாக்டர் டி.செந்தில்குமார், மதுரை நகர குற்றப்பிரிவு துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு வழக்கை விசாரித்த சென்னை சி.பி.ஐ. அதிகாரி சரவணன் மும்பைக்கு மாற்றப்பட்டுள்ளார். #Thoothukudifiring
    புதுடெல்லி:

    சி.பி.ஐ. இடைக்கால இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ள நாகேஸ்வரராவ் நாடு முழுவதும் சி.பி.ஐ. அதிகாரிகளை இடமாற்றம் செய்து அதிரடி நடவடிக்கையை எடுத்து உள்ளார்.

    முக்கிய நகரங்களில் பணியாற்றி வந்த 20 உயர் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    சென்னையில் சி.பி.ஐ. உயர் அதிகாரிகளில் ஒருவராக சரவணன் இருந்தார். இவர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் அவர் மும்பை சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டுள்ளார். மும்பையில் வங்கி முறைகேடுகள் பிரிவுக்கு அவர் மாற்றப்பட்டு இருக்கிறார்.

    நிரவ்மோடி செய்துள்ள வங்கி மோசடியை விசாரிக்கும் பிரிவுக்கு தற்போது அவர் சென்றுள்ளார்.

    சரவணன் மும்பைக்கு இடமாற்றம் செய்யப்பட்ட போதிலும் ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு விவகாரத்தை தொடர்ந்து விசாரிப்பார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மும்பையில் உள்ள பணிகளை பார்த்துக்கொண்டே அவர் கூடுதலாக இந்த பணியையும் செய்வார் என்று தெரிய வந்துள்ளது.

    2ஜி ஊழல் வழக்கை விசாரித்து வந்த டெல்லி சி.பி.ஐ. அதிகாரி விவேக் பிரியதர்சி சண்டிகருக்கு மாற்றப்பட்டுள்ளார். மற்றொரு சி.பி.ஐ. அதிகாரி கவுதமிடம் உள்ள பொறுப்புகள் குறைக்கப்பட்டுள்ளன.

    இதற்கிடையே நாகேஸ்வர ராவ் சி.பி.ஐ.யின் இடைக்கால இயக்குனராக நியமிக்கப்பட்டதை எதிர்த்து பிரபல வக்கீல் பிரசாந்த் பூ‌ஷன் சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அதை விசாரிக்கும் பொறுப்பில் இருந்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விலகினார்.

    இதையடுத்து இந்த வழக்கு நீதிபதி சிக்ரி தலைமையிலான பெஞ்சுக்கு மாற்றப்பட்டுள்ளது. நாளை அந்த பெஞ்சில் நாகேஸ்வர ராவுக்கு எதிரான வழக்கு விசாரணை நடைபெற உள்ளது. #Thoothukudifiring
     
    பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    தெற்கு ரெயில்வேக்கு உட்பட்ட சென்னை கோட்டத்தின் பல்வேறு பிரிவில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் கீழ்க் கண்ட மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    * மூர்மார்க்கெட்-சூலூர்ப்பேட்டை இரவு 7.05 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் இன்று முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

    * சென்னை கடற்கரை-செங்கல்பட்டு அதிகாலை 3.55 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் கடற்கரை-தாம்பரம் இடையே இன்று பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    மிசோரம் மாநில தலைமை தேர்தல் அதிகாரியாக செயல்பட்டு வந்த எஸ்.பி.சசாங் இன்று மாற்றப்பட்டு உள்ளார். #Mizoram #Shashank #ChiefElectroralOfficer
    புதுடெல்லி:

    மிசோரம் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. லால் தன்ஹாவ்லா முதல்-மந்திரியாக பதவி வகித்து வருகிறார். அம்மாநில சட்டசபைக்கு வருகிற 28-ம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது.

    இந்நிலையில், மாநில தலைமை தேர்தல் அதிகாரியாக செயல்பட்டு வந்த  எஸ்.பி.சசாங் அந்த பதவியில் இருந்து மாற்றப்பட்டுள்ளார்.



    இதுதொடர்பாக, தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மிசோரம் மாநில தலைமை தேர்தல் அதிகாரியாக செயல்பட்டு வந்த சசாங் இன்று மாற்றப்பட்டு உள்ளார். அவருக்கு பதிலாக புதிய அதிகாரியாக ஆஷிஷ் குந்த்ரா என்பவரை நியமனம் செய்துள்ளோம் என தெரிவித்துள்ளது.

    ஏற்கனவே, மாநில தலைமை தேர்தல் அதிகாரி எஸ்.பி.சசாங்கை நீக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்-மந்திரி சமீபத்தில் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது. #Mizoram #Shashank #ChiefElectroralOfficer
    கர்நாடக ஐகோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றி வரும் வினீத் கோத்தாரி சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டார்.
    புதுடெல்லி:

    ஐகோர்ட்டு நீதிபதிகள் 3 பேரை வெவ்வேறு மாநிலங்களுக்கு பணியிட மாற்றம் செய்து மத்திய சட்ட அமைச்சகம் நேற்று அறிவிக்கை வெளியிட்டது.

    அதன்படி கர்நாடக ஐகோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றி வரும் வினீத் கோத்தாரி சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டார்.

    இதேபோல் காஷ்மீர் ஐகோர்ட்டு நீதிபதி அலோக் அராதே கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டார். மேலும் பஞ்சாப் மற்றும் அரியானா மாநில ஐகோர்ட்டு நீதிபதி ராஜேஷ் பிந்தால், காஷ்மீர் மாநில ஐகோர்ட்டுக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டார். 
    அமெரிக்காவின் அட்டார்னி ஜெனரல் ஜெப் செசன்ஸ் நீக்கப்பட்டார். மந்திரிசபையிலும் ஒரு வாரத்தில் மாற்றம் செய்யப்போவதாக ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார். #DonaldTrump #JeffSessions
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் கடந்த 6-ந்தேதி நடந்த நாடாளுமன்ற தேர்தல், ஜனாதிபதி டிரம்பின் 2 ஆண்டு பதவி காலத்துக்கான கருத்து வாக்கெடுப்பாக அமையும் என கருதப்பட்டது. எனவே இந்த தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தின.

    இந்த நிலையில் நாடாளுமன்ற கீழ்சபையான பிரதிநிதிகள் சபையை எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி கைப்பற்றி விட்டது. 435 இடங்களை கொண்ட அந்த சபையில், முடிவு அறிவிக்கப்பட்ட 420 இடங்களில் அந்த கட்சிக்கு 223 இடங்கள் கிடைத்தன. டிரம்பின் குடியரசு கட்சி 197 இடங்களுடன் திருப்தி அடைய வேண்டியதாயிற்று.



    அதே நேரத்தில் மேல்சபையான செனட் சபையை குடியரசு கட்சி தக்க வைத்துக்கொண்டது. 33 இடங்களுக்கு நடந்த தேர்தலில் 3 இடங்களுக்கு முடிவு வர வேண்டி உள்ளது. அறிவிக்கப்பட்ட முடிவுகளைத் தொடர்ந்து குடியரசு கட்சியின் பலம் 51 ஆகவும், ஜனநாயக கட்சியின் பலம் 44 ஆகவும், மற்றவர்களின் பலம் 2 ஆகவும் உள்ளது.

    இந்த நிலையில் அந்த நாட்டின் அட்டார்னி ஜெனரல் (அரசு தலைமை வக்கீல்) ஜெப் செசன்ஸ் திடீரென நீக்கப்பட்டார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி டிரம்புக்கு அனுப்பிவைத்தார்.

    அதில் அவர், “நீங்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க என் ராஜினாமாவை சமர்ப்பிக்கிறேன்” என அவர் கூறி உள்ளார்.

    இதில் இருந்து அவர் தாமாக பதவி விலகவில்லை, டிரம்பின் உத்தரவுப்படியே அவரது விலகல் அமைந்துள்ளது என்பது தெளிவாகிறது. மேலும் அவர், “நான் அட்டார்னி ஜெனரல் பதவி வகித்த கால கட்டத்தில் நாங்கள் சட்டத்தின் ஆட்சியை மீட்டு, நிலை நிறுத்தி உள்ளோம்” என குறிப்பிட்டுள்ளார்.

    ஜெப் செசன்ஸ் பதவி விலகலுக்கு நன்றி தெரிவித்து டிரம்ப் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர், “ ஜெப் செசன்சின் சேவைக்காக நாங்கள் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். அவருக்கு நல்வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

    அதே நேரத்தில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் மூத்த தலைவரும் செனட் சபையின் எதிர்க்கட்சி தலைவருமான சூக் ஸ்கூமர், “இதில் நிச்சயமாக ஜனாதிபதி எதையோ மறைக்கிறார்” என கூறி உள்ளார்.

    2016-ம் ஆண்டு நடந்த அமெரிக்க தேர்தலில் ரஷிய தலையீடு தொடர்பான விசாரணையில் இருந்து ஜெப் செசன்ஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் விலகிக்கொண்டதில் இருந்து, டிரம்பின் விமர்சனத்துக்கு ஆளாகி வந்தார். ஜெப் செசன்ஸ் மிகவும் பலவீனமானவர் என கூறி வந்தார்.

    இந்த நிலையில் இப்போது ஜெப் செசன்ஸ் நீக்கப்பட்டு, அவரது இடத்தில் தற்காலிகமாக மேத்யூ விட்டேகர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அமெரிக்க தேர்தலில், ரஷிய தலையீடு தொடர்பான ராபர்ட் முல்லர் குழுவின் விசாரணையை குறை கூறி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஜெப் செசன்ஸ் நீக்கப்பட்டுள்ள நிலையில், உள்துறை மந்திரி ரியான் ஸிங்கே மாற்றப்படலாம் என தகவல்கள் கூறுகின்றன. இதே போன்று வாஷிங்டன் வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் சாரா சாண்டர்ஸ் பதவியும் தொங்கலில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே ஐ.நா.சபைக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே பதவி விலகி அந்த இடம் காலியாக உள்ளது.

    இந்த நிலையில் அமெரிக்க மந்திரிசபையில் ஒரு வார காலத்தில் மாற்றம் இருக்கும் என்று டிரம்ப் உணர்த்தி உள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று முன்தினம் வாஷிங்டனில் நிருபர்களிடம் பேசுகையில், “அநேகமாக ஒரு வார காலத்தில் நிர்வாகத்தில் மாற்றங்கள் கொண்டு வர எண்ணி இருக்கிறேன். மந்திரி சபை உள்பட நிறைய மாறுபட்ட அம்சங்களை பார்க்க வேண்டியது இருக்கிறது. எனது மந்திரிசபையில் இடம் பெற்றுள்ளவர்கள் மீது மகிழ்ச்சி அடைந்துள்ளேன். ஆனாலும் பல்வேறு நிலைகளில் மாறுபட்ட நபர்களை அமர்த்த வேண்டியதிருக்கிறது. இத்தகைய மாற்றங்கள், இடைக்கால தேர்தலுக்கு பின்னர் மிகவும் இயல்பான ஒன்றுதான்” என கூறினார்.

    எனவே ஒரு வார காலத்தில் டிரம்ப் மந்திரிசபையில் மட்டுமல்லாது, வெள்ளை மாளிகையிலும் முக்கிய மாற்றங்களை எதிர்பார்க்கலாம். 
    சென்னையில் நேற்று ஒரே நாளில் 26 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். #PoliceInspectors
    சென்னை:

    கானாத்தூர் சட்டம்- ஒழுங்கு போலீஸ் இன்ஸ்பெக்டராக ஆனந்த ஜோதி நியமிக்கப்பட்டுள்ளார். சிட்லபாக்கம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் அதே காவல் நிலையத்தில் சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டராகியுள்ளார்.

    நொளம்பூரில் பணியாற்றிய கிருஷ்ணமூர்த்தி, நுங்கம்பாக்கம் சட்டம்-ஒழுங்குக்கு மாற்றப்பட்டுள்ளார். ராயலா நகரில் பணியாற்றிய சுப்பிரமணியன், வளசர வாக்கத்துக்கும், வடபழனி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பசுபதி அண்ணா சதுக்கத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

    அண்ணா சாலை இன்ஸ்பெக்டராக தங்கராஜ், மாம்பலம் இன்ஸ்பெக்டராக மோகன்ராஜ், வியாசர்பாடி இன்ஸ்பெக்டராக பிரபு, நொளம்பூருக்கு சத்தியலிங்கம் ஆகியோரும் மாற்றப்பட்டுள்ளனர்.

    இதற்கான உத்தரவை கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பிறப்பித்துள்ளார். #PoliceInspectors

    பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட ரெயில் சேவையில் நாளை முதல் அடுத்த மாதம் 7-ந்தேதி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட ரெயில் சேவையில் நாளை (திங்கட்கிழமை) முதல் அடுத்த மாதம் (அக்டோபர்) 7-ந்தேதி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    * கும்மிடிப்பூண்டி-சூலூர்பேட்டை காலை 4.40, 5.30 மணிக்கு புறப்படும் ரெயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

    * சூலூர்பேட்டை-மூர்மார்க்கெட் காலை 5.45 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் சூலூர்பேட்டை-கும்மிடிப்பூண்டி இடையே பகுதியாக ரத்துசெய்யப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு காரணமாக ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    * கொல்லம்-தாம்பரம் சிறப்பு ரெயில்(வண்டி எண்:06028), கொல்லத்தில் இருந்து இன்று(செவ்வாய்க்கிழமை) புறப்படும் ரெயில், கொல்லம்-செங்கோட்டை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

    * சென்னை சென்டிரல்-திருவனந்தபுரம் முன்பதிவற்ற சிறப்பு ரெயில்(06049), இன்று மாலை 5.30 மணிக்கு சென்டிரலில் இருந்து புறப்பட்டு, மறுநாள் மதியம் 1.40 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 
    விழுப்புரம் பணிமனையில் தண்டவாளத்தை சுத்தப்படுத்தும் பணி நடைபெறுவதால் இன்று (செவ்வாய்க்கிழமை), நாளை மற்றும் நாளை மறுநாள் கீழ்க்கண்ட ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #SouthernRailway
    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    விழுப்புரம் பணிமனையில் தண்டவாளத்தை சுத்தப்படுத்தும் பணி நடைபெறுவதால் இன்று (செவ்வாய்க்கிழமை), நாளை (புதன்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) கீழ்க்கண்ட ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    * சென்னை எழும்பூர்-புதுச்சேரி-எழும்பூர் பயணிகள் ரெயில் (வண்டி எண்:56037/56038), திண்டிவனம்-புதுச்சேரி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

    * திருப்பதி-புதுச்சேரி-திருப்பதி பயணிகள் ரெயில் (56041/56042), திண்டிவனம்-புதுச்சேரி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

    * எழும்பூர்-மதுரை வைகை எக்ஸ்பிரஸ் (12635), மதியம் 1.40 மணிக்கு புறப்படும் ரெயில், 2 மணி நேரம் தாமதமாக 3.40 மணிக்கு இன்று எழும்பூரில் இருந்து புறப்படும்.

    * எழும்பூர்-காரைக்குடி பல்லவன் எக்ஸ்பிரஸ் (12605), மதியம் 3.45 மணிக்கு புறப்படும் ரெயில், 30 நிமிடம் தாமதமாக 4.15 மணிக்கு இன்று எழும்பூரில் இருந்து புறப்படும்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. #Tamilnews 
    ×