என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 122057
நீங்கள் தேடியது "மாற்றம்"
அடியலா சிறையில் இருந்து சிஹாலா ஓய்வு இல்லத்துக்கு மாறிச்செல்ல நவாஸ் ஷெரீப் மகள் மரியம் மறுத்து விட்டதாக ஊடக தகவல்கள் கூறுகின்றன. #NawazSharif #Maryam
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஊழல் பணத்தில் லண்டன் அவென்பீல்டு சொகுசு வீடுகளை வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பான வழக்கில் அவருக்கு 10 ஆண்டு, அவரது மகள் மரியத்துக்கு 7 ஆண்டு, மருமகன் கேப்டன் சப்தாருக்கு 1 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
தண்டனையை எதிர்த்து 3 பேரும் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்து உள்ளனர்.
தற்போது அவர்கள் உச்சக்கட்ட பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட ராவல்பிண்டி அடியலா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். ஆனால் பாதுகாப்பு காரணங்களையொட்டி நவாஸ் ஷெரீப்பையும், மரியத்தையும் கிளைச்சிறையாக மாற்றப்பட்டு உள்ள சிஹாலா ஓய்வு இல்லத்துக்கு மாற்ற சிறைத்துறை பரிசீலித்து வருகிறது என தகவல்கள் வெளியாகின.
ஆனால் மரியம், அடியலா சிறையில் இருந்து சிஹாலா ஓய்வு இல்லத்துக்கு மாறிச்செல்ல மறுத்து விட்டதாக ஊடக தகவல்கள் கூறுகின்றன.
தனது தந்தை நவாஸ் ஷெரீப், கணவர் கேப்டன் சப்தார் ஆகியோருடன் தான் அடியலா சிறையில் அடைக்கப்பட்டு இருப்பதைத்தான் விரும்புவாக அதிகாரிகளிடம் மரியம் தெரிவித்து விட்டார் என அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.
நவாஸ் ஷெரீப்பும், மரியமும் காவலில் வைக்கப் படுவதற்காக சிஹாலா போலீஸ் கல்லூரி வளாகத்தில் உள்ள ஓய்வு இல்லம் ரூ.20 லட்சம் செலவில் கிளைச்சிறையாக மாற்றப்பட்டு உள்ளதாக தெரிய வந்து உள்ளது. #NawazSharif #Maryam #tamilnews

சென்னை-கூடூர் இடையே பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில் சேவையில் நாளையும், நாளை மறுநாளும் (சனி, ஞாயிற்றுக்கிழமை) மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
வேளச்சேரி-கும்மிடிப்பூண்டி காலை 8.50 மணி மின்சார ரெயில் பொன்னேரி-கும்மிடிப்பூண்டி இடையே 2 நாட்களும், மூர்மார்க்கெட்-சூலூர்பேட்டை காலை 9.55 மணி ரெயில் கும்மிடிப்பூண்டி-சூலூர்பேட்டை இடையேயும், சூலூர்பேட்டை-மூர்மார்க்கெட் மதியம் 1.15 மணி ரெயில் சூலூர்பேட்டை-கும்மிடிப்பூண்டி இடையேயும், மூர்மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி காலை 10.25 மணி ரெயில் பொன்னேரி-கும்மிடிப்பூண்டி இடையேயும், கும்மிடிப்பூண்டி-மூர்மார்க்கெட் காலை 11.20, 1.35 மணி ரெயில் கும்மிடிப்பூண்டி-பொன்னேரி இடையேயும் நாளை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
மூர்மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி காலை 10.25, 1.25 மணி ரெயில் பொன்னேரி-கும்மிடிப்பூண்டி இடையேயும், கும்மிடிப்பூண்டி-மூர்மார்க்கெட் காலை 11.20, 1.35, 3.15 மணி ரெயில் கும்மிடிப்பூண்டி-பொன்னேரி இடையேயும், மூர்மார்க்கெட்-சூலூர்பேட்டை மதியம் 12.40 மணி ரெயில் கும்மிடிப்பூண்டி-சூலூர்பேட்டை இடையேயும், சூலூர்பேட்டை-மூர்மார்க்கெட் மதியம் 1.15 மணி ரெயில் சூலூர்பேட்டை-கும்மிடிப்பூண்டி இடையேயும் நாளை மறுநாள் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதர் பதவி வகிப்பவர், டேவிட் ஹேலே. இவரை அந்தப் பதவியில் இருந்து மாற்றிவிட அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் திடீரென முடிவு எடுத்து உள்ளார். #DonaldTrump #DavidHale
வாஷிங்டன்:
டேவிட் ஹேலேவுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறையில் கீழ்நிலை செயலாளர் பதவி வழங்க அவர் தீர்மானித்து இருக்கிறார். அமெரிக்காவில் வெளியுறவுத்துறையில், துறைக்கான மந்திரி, செயலாளர் பதவிக்கு அடுத்த மூன்றாவது உயர் பதவி இந்தப் பதவி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பதவியில் இருந்து வந்த தாமஸ் ஷானோன் கடந்த மாதம் 4-ந் தேதி ஓய்வு பெற்று விட்டதை அடுத்து உருவாகி உள்ள காலி இடத்தை நிரப்புவதற்கு டேவிட் ஹேலே வருகிறார்.
டேவிட் ஹேலே, வெளியுறவுத்துறையில் கீழ்நிலை செயலாளர் பதவி ஏற்பதற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேல்சபையான செனட் சபை தனது ஒப்புதலை வழங்க வேண்டும்.
இவர் 2015-ம் ஆண்டு முதல் பாகிஸ்தானில் அமெரிக்க தூதர் பதவி வகித்து வருகிறார். இந்தியா, பாகிஸ்தான் இடையேயான உறவு, இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்பதற்கு இவர் தனது ஆதரவை தெரிவித்து வந்தார். இவர் லெபனான் நாட்டிலும் அமெரிக்க தூதர் பதவி வகித்து இருக்கிறார். #DonaldTrump #DavidHale #Tamilnews

கூடலூரில் பஸ் நிறுத்தங்களை போக்குவரத்து போலீசார் அடிக்கடி மாற்றுவதால் கிராம மக்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர்.
கூடலூர்:
கூடலூரில் இருந்து ஓவேலி, தேவர்சோலை, பாட்டவயல், பந்தலூர், சேரம்பாடி, ஊட்டி, கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர் உள்ளிட்ட இடங்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதுதவிர கேரள-கர்நாடகா பஸ்களும் வந்து செல்கிறது. இதேபோல் ஓவேலி, பந்தலூர் பகுதியை சேர்ந்தவர்கள் வேலைநிமித்தம் காரணமாக கூடலூருக்கு தினமும் வந்து செல்கின்றனர். இதனால் கூடலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஓவேலிக்கு செல்லும் பஸ்கள் சக்தி விநாயகர் கோவில் அருகே உள்ள நிறுத்தத்தில் நின்று பயணிகளை அழைத்து செல்வது வழக்கம்.
இதேபோல் ஊட்டியில் இருந்து வரும் பஸ்கள் கோவிலின் எதிர்புறம் பயணிகளை இறக்கி விட்டு செல்வது வாடிக்கை. மேலும் அதே பகுதியில் சாலையோரம் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் எந்தவித சிரமம் இன்றி பயன் அடைந்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு போக்குவரத்து போலீசார் தேசிய நெடுஞ்சாலையின் நடுவில் வரிசையாக இரும்பு தடுப்பு கம்பிகளை வைத்தனர். இதனால் கூடலூர்- ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதைதொடர்ந்து இருசக்கர வாகனங்களை சாலையோரம் நிறுத்துவதற்கு போலீசார் தடை விதித்தனர். ஆனால் ஆட்டோ, ஜீப் உள்ளிட்ட வாகனங்கள் சாலையில் நிறுத்தி கொள்ள போலீசார் அனுமதி வழங்கினர். இருசக்கர வாகனங்கள் சாலையோரம் நிறுத்த அனுமதிக்காததால் நகராட்சி வணிக வளாகத்தில் நிறுத்தப்பட்டன. ஆனால் வியாபாரிகள் எதிர்ப்பு காரணமாக நகராட்சி வணிக வளாகத்தில் இருசக்கர வாகனங்களை நிறுத்த நகராட்சி நிர்வாகம் தடை விதித்தது.
இதனால் கூடலூர் கடைசி பகுதியான ராஜகோபாலபுரத்தில் இருசக்கர வாகனங்களை நிறுத்த போலீசார் அனுமதித்தனர். இதனிடையே அரசு பஸ்கள் நிறுத்தும் இடத்தை போக்குவரத்து போலீசார் மாற்றி உள்ளனர். இதனால் கிராம மக்கள் கடும் அதிருப்தி அடைந்து உள்ளனர். ஏற்கனவே பயன்படுத்தி வந்த பஸ் நிறுத்தத்தில் ஆட்டோ, ஜீப் மற்றும் தனியார் வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இது குறித்து இருசக்கர வாகன ஓட்டிகள், கிராம மக்கள் கூறியதாவது-
கூடலூரில் போக்குவரத்து போலீசாரின் குளறுபடியால் வாகன நிறுத்தும் இடங்கள் அடிக்கடி மாற்றி அமைக்கப்படுகிறது. மேலும் நாளுக்குநாள் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து வருகிறது. சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளால் தேசிய நெடுஞ்சாலை குறுகலாகி வருகிறது. இதனால் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே வாகனங்கள் நிறுத்த போதிய இடம் கிடைக்கும். இல்லை எனில் இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்காது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

சென்னை - கூடூர் பிரிவு இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் மின்சார ரெயில் சேவையில் இன்று (வெள்ளிக்கிழமை) மற்றும் நாளை (சனிக்கிழமை) மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
சென்னை-கூடூர் பிரிவு இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் கீழ்க்கண்ட மின்சார ரெயில் சேவையில் இன்று (வெள்ளிக்கிழமை) மற்றும் நாளை (சனிக்கிழமை) மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
* மூர்மார்க்கெட்டில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு காலை 6.40, 9, 10.25 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில், பொன்னேரி-கும்மிடிப்பூண்டி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதேபோல், மூர்மார்க்கெட்டில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு காலை 7, 8.15, 9.30 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில், மீஞ்சூர்-கும்மிடிப்பூண்டி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
* மூர்மார்க்கெட்டில் இருந்து சூலூர்பேட்டைக்கு காலை 7.30 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில், பொன்னேரி-சூலூர்பேட்டை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
* கும்மிடிப்பூண்டியில் இருந்து மூர்மார்க்கெட்டுக்கு காலை 8.25, 9.50, 10.50 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில், கும்மிடிப்பூண்டி-பொன்னேரி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதைபோல் கும்மிடிப்பூண்டியில் இருந்து மூர்மார்க்கெட்டுக்கு காலை 11.20 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில், கும்மிடிப்பூண்டி-மீஞ்சூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
* கும்மிடிப்பூண்டியில் இருந்து வேளச்சேரிக்கு காலை 8.50 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில், கும்மிடிப்பூண்டி-மீஞ்சூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
* சூலூர்பேட்டையில் இருந்து மூர்மார்க்கெட்டுக்கு காலை 10 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில், சூலூர்பேட்டை-மீஞ்சூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதைபோல் சூலூர்பேட்டையில் இருந்து மூர்மார்க்கெட்டுக்கு காலை 11.15 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில், சூலூர்பேட்டை-பொன்னேரி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சென்னை-கூடூர் இடையே பராமரிப்பு பணி காரணமாக இன்று (வியாழக்கிழமை) முதல் 30-ந் தேதி வரை (25-ந் தேதி தவிர) மின்சார ரெயில் சேவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன
சென்னை:
சென்னை-கூடூர் இடையே பராமரிப்பு பணி காரணமாக இன்று (வியாழக்கிழமை) முதல் 30-ந் தேதி வரை (25-ந் தேதி தவிர) மின்சார ரெயில் சேவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. அதன் விவரம் வருமாறு:-
* மூர்மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி இடையே இரவு 12.15 மணிக்கும், கும்மிடிப்பூண்டி-மூர்மார்க்கெட் இடையே நள்ளிரவு 2.45 மணிக்கும் இயக்கப்படும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.
* மூர்மார்க்கெட்-சூலூர்ப்பேட்டை இடையே அதிகாலை 4.20 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் எண்ணூர் வரை மட்டுமே இயக்கப்படும். மறுமார்க்கமாக அதிகாலை 4.55 மணிக்கு இயக்கப்படும் சூலூர்ப்பேட்டை-மூர்மார்க்கெட் இடையே இயக்கப்படும் மின்சார ரெயில் எண்ணூரில் இருந்து புறப்படும்.
* கும்மிடிப்பூண்டி-சூலூர்ப்பேட்டை இடையே அதிகாலை 5.38 மணிக்கு சிறப்பு மின்சார ரெயில் இயக்கப்பட உள்ளது.
மேற்கண்ட தகவல்கள் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளன.

சென்னை-கூடூர் இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் இன்று (வியாழக்கிழமை) ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்னை:
சென்னை-கூடூர் இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் இன்று (வியாழக்கிழமை) மூர்மார்க்கெட்-ஆவடி மதியம் 2.05 மணி, ஆவடி-மூர்மார்க்கெட் மதியம் 2.50 மணி மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. நெல்லூர்-சூலூர்பேட்டை காலை 10 மணி, சூலூர்பேட்டை-நெல்லூர் மதியம் 12 மணி ரெயில்கள் 1½ மணி நேரம் தாமதமாக புறப்படும்.
விஜயவாடா-சென்னை சென்டிரல் பிற்பகல் 1 மணி பினாகினி எக்ஸ்பிரஸ் 1 மணி 20 நிமிடங்கள் தாமதமாகவும், இந்த ரெயில் மறுமார்க்கமாக சென்னையில் இருந்து புறப்படும்போது 1 மணி நேரம் தாமதமாகவும் செல்லும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

தி.மு.க.வில் சமீபத்தில் நடத்தப்பட்ட கள ஆய்வு கூட்டத்திற்கு பிறகு, 10 மாவட்டங்களில் தி.மு.க. நிர்வாகிகள் மாற்றப்பட்டுள்ளனர். கோவை தெற்கு, நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்களும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை:
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அக்கட்சி நிர்வாகிகளின் செயல்பாடு தொடர்பாக மாவட்ட வாரியாக கள ஆய்வுக்கூட்டம் நடைபெற்று முடிந்த நிலையில், சில மாவட்டங்களில் நிர்வாகிகள் மாற்றப்பட்டுள்ளனர். இது தொடர்பாக, தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன், மாவட்ட வாரியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அந்த வகையில், கோவை மாநகர் வடக்கு, கோவை மாநகர் தெற்கு, கோவை வடக்கு, கோவை தெற்கு மாவட்டங்களில், சில இடங்களில் பகுதிக் கழக, ஒன்றிய கழக செயலாளர்கள் மாற்றப்பட்டு புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல், திருப்பூர் வடக்கு, நீலகிரி, ஈரோடு வடக்கு, சேலம் மேற்கு, சேலம் கிழக்கு, நாமக்கல் கிழக்கு ஆகிய மாவட்டங்களிலும், சில இடங்களில் மாநகரப் பொறுப்பாளர், பகுதி கழகப் பொறுப்பாளர், நகரக் கழகச் செயலாளர், ஒன்றிய கழகச் செயலாளர்கள் மாற்றப்பட்டு, அந்தப் பதவிகளுக்கு புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, கோவை தெற்கு மாவட்டக் கழக செயலாளர் இரா.தமிழ்மணி அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, தென்றல் செல்வராஜ் புதிதாக கோவை தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல், நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் பார்.இளங்கோவன் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, செ.காந்திசெல்வன் புதிய பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தூத்துக்குடியில் நடந்த கலவரம் தொடர்பாக மேலும் 2 வழக்குகள் சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டு உள்ளன.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து தூத்துக்குடி வடபாகம், தென்பாகம், சிப்காட் ஆகிய போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளன. இந்த வழக்குகள் சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டு உள்ளன.
இதன் விசாரணை அதிகாரியாக நெல்லை சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு அனில்குமார் நியமிக்கப்பட்டு உள்ளார். மேலும் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் குமார் மற்றும் வெளிமாவட்டங்களை சேர்ந்த 20 சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியமர்த்தப்பட்டனர். நேற்று முன்தினம் ஒரு சில போலீசாரே தூத்துக்குடிக்கு வந்தனர்.
நேற்று சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்குமார் தூத்துக்குடிக்கு இன்னும் வரவில்லை என்றும், இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை மாவட்ட போலீஸ் அதிகாரிகள் இன்னும் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இருந்தபோதிலும் போலீசார் சம்பவம் நடந்த இடங்களுக்கு சென்று தடயங்களை சேகரிக்கும் பணியில் நேற்று ஈடுபட்டனர். இன்று (வியாழக்கிழமை) சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை முழுவீச்சில் தொடங்க உள்ளனர்.
இந்த நிலையில் தூத்துக்குடியில் நடந்த கலவரத்தில் அரசு ஆஸ்பத்திரி முன்பு பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பான வழக்கும், மில்லர்புரத்தில் 2 வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்ட வழக்கும் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு உள்ளதாக உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை-கூடூர் இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
சென்னை-கூடூர் பிரிவு இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் கீழ்க்கண்ட மின்சார ரெயில் சேவையில் இன்று(ஞாயிற்றுக்கிழமை), நாளை(திங்கட்கிழமை) மற்றும் நாளை மறுநாள்(செவ்வாய்கிழமை) மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
* மூர்மார்க்கெட்டில் இருந்து இரவு 11.20 மணிக்கு கும்மிடிப்பூண்டி நோக்கி புறப்படும் மின்சார ரெயில் பொன்னேரி-கும்மிடிப்பூண்டி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மூர்மார்க்கெட்டில் இருந்து காலை 7.30, 8.35 மணிக்கு சூலூர்பேட்டை நோக்கி புறப்படும் மின்சார ரெயில் கும்மிடிப்பூண்டி-சூலூர்பேட்டை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. சூலூர்பேட்டையில் இருந்து காலை 10, 11.15 மணிக்கு சூலூர்ப்பேட்டை நோக்கி புறப்படும் மின்சார ரெயில் சூலூர்பேட்டை-கும்மிடிப்பூண்டி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
* மூர்மார்க்கெட்டில் இருந்து காலை 7.30, 8.35 மணிக்கு சூலூர்பேட்டை நோக்கி புறப்படும் மின்சார ரெயில் கும்மிடிப்பூண்டி-சூலூர்பேட்டை இடையே நாளை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. சூலூர்பேட்டையில் இருந்து காலை 10, 11.15 மணிக்கு சூலூர்பேட்டை நோக்கி புறப்படும் மின்சார ரெயில் சூலூர்பேட்டை-கும்மிடிப்பூண்டி இடையே நாளை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
* மூர்மார்க்கெட்டில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு இரவு 12.15 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் நாளை மறுநாள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதைப்போல் கும்மிடிப்பூண்டியில் இருந்து அதிகாலை 2.45 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் நாளை மறுநாள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
* கும்மிடிப்பூண்டியில் இருந்து அதிகாலை 4 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் கும்மிடிப்பூண்டி-பொன்னேரி இடையே நாளை மறுநாள் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

அயர்லாந்தில் கருக்கலைப்பு தடைச் சட்டத்தில் மாற்றம் செய்வது தொடர்பாக பொதுவாக்கெடுப்பு நடந்து முடிந்துள்ள நிலையில், கருக்கலைப்புக்கு ஆதரவாக பெரும்பாலான பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். #Irishabortionlaws
டப்ளின்:
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான அயர்லாந்தில் கருக்கலைப்பு செய்வது சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை. கருக்கலைப்பு குறித்து கடினமான சட்டம் நடைமுறையில் உள்ளது. கர்ப்பிணித் தாயின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே கருக்கலைப்பு செய்ய சட்டம் அனுமதிக்கிறது. கருக்கலைப்பு தண்டனைக்குரிய குற்றம் என்பதால், உரிய நேரத்தில் கருக்கலைப்பு செய்ய முடியாமல், இந்திய வம்சாவளி பல் மருத்துவர் சவிதா 2012ம் ஆண்டு உயிரிழந்தார்.
இந்த விவகாரம் அயர்லாந்து மக்களிடையே கடும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. அத்துடன், கருக்கலைப்பு சட்டத்தை மறுவரையறை செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் பேரணி நடத்தினர். இதையடுத்து சட்டத்தை மாற்ற அரசு முன்வந்தது.
இதற்கிடையே வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் கருக்கலைப்புக்கு ஆதரவாக சுமார் 70 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.
அயர்லாந்து தேசிய தொலைக்காட்சி மற்றும் ஐரிஷ் டைம்ஸ் சார்பில் தனித்தனியாக கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. ஐரிஷ் டைம்ஸ் சார்பில் நாடு முழுவதும் 160 வாக்குச்சாவடிகளில் 4000 பேரிடமும், தேசிய தொலைக்காட்சி சார்பில் 175 மையங்களில் 3800 பேரிடமும் கருத்து கேட்கப்பட்டது.
தேசிய தொலைக்காட்சி நடத்திய கருத்துக் கணிப்பில், கருக்கலைப்புக்கு ஆதரவாக 69.4 சதவீதம் மக்கள் கூறியுள்ளனர். இதேபோல் ஐரிஷ் டைம்ஸ் வாக்கெடுப்பில் 68 சதவீதம் பேர் கருக்கலைப்புக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.
எனவே, பொதுவாக்கெடுப்பின் முடிவுகள், கடுமையான கருக்கலைப்பு தடைச் சட்டத்தை ரத்து செய்ய வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. #Irishabortionlaws

அதன்படி கருக்கலைப்புக்கு எதிரான சட்டத்தை திரும்பப் பெறுவது தொடர்பாக, மக்கள் கருத்தினை அறியும் வகையில் நேற்று பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதற்காக நாடு முழுவதும் 6500 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. காலை முதல் மாலை வரை நடைபெற்ற வாக்குப்பதிவில் 60.52 சதவீத வாக்குகள் பதிவாகின. இன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதற்கிடையே வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் கருக்கலைப்புக்கு ஆதரவாக சுமார் 70 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.
அயர்லாந்து தேசிய தொலைக்காட்சி மற்றும் ஐரிஷ் டைம்ஸ் சார்பில் தனித்தனியாக கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. ஐரிஷ் டைம்ஸ் சார்பில் நாடு முழுவதும் 160 வாக்குச்சாவடிகளில் 4000 பேரிடமும், தேசிய தொலைக்காட்சி சார்பில் 175 மையங்களில் 3800 பேரிடமும் கருத்து கேட்கப்பட்டது.
தேசிய தொலைக்காட்சி நடத்திய கருத்துக் கணிப்பில், கருக்கலைப்புக்கு ஆதரவாக 69.4 சதவீதம் மக்கள் கூறியுள்ளனர். இதேபோல் ஐரிஷ் டைம்ஸ் வாக்கெடுப்பில் 68 சதவீதம் பேர் கருக்கலைப்புக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.
எனவே, பொதுவாக்கெடுப்பின் முடிவுகள், கடுமையான கருக்கலைப்பு தடைச் சட்டத்தை ரத்து செய்ய வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. #Irishabortionlaws
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளதாக மூத்த போலீஸ் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். #sterliteprotest
சென்னை:
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டம் வன்முறையானது. போலீஸ் துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள்.
போலீசாரின் நடவடிக்கைகள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. சாதாரண உடையில் வாகனத்தில் ஏறி நின்று போலீசார் துப்பாக்கியால் சுடுவது ஏன்? என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
இந்த நிலையில் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
சரியான திட்டமிடல் மற்றும் தலைமை இல்லாததே தூத்துக்குடியில் துப்பாக்கி சூடுக்கு வழிவகுத்துள்ளது. போலீசார் தங்களது அடையாளத்தை மறைத்தது ஏன்?. சாதாரண உடையில் உள்ளவர்கள் கூட்டத்தில் கலந்து உளவு பார்ப்பது கிடையாது.
போலீஸ் உடையில் இருந்து போலீசார் ஆயுதத்தை பயன்படுத்துவதற்கும், சாதாரண உடையில் ஆயுதத்தை பயன்படுத்துவதற்கும் ஏராளமான வேறுபாடுகள் இருக்கின்றன. குறி பார்த்து திறமையுடன் சுடுபவர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபடுத்தப்பட்டு இருப்பது தொடக்க கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.
கூட்டத்தை கலைப்பதை விட தங்களை பாதுகாத்து கொள்வதற்காக போலீசார் துப்பாக்கி சூட்டை நடத்தியது போல் தோன்றுகிறது.
கட்டுக்கடங்காத கும்பலை கட்டுப்படுத்த ஒரு முறை துப்பாக்கிச்சூடு, ஒரு பலியே போதுமானது. 12க்கும் மேற்பட்டோரை துப்பாக்கியால் சுட்டதை நியாயப்படுத்துவது ஆச்சரியமாக இருக்கிறது.
சுப்ரீம் கோர்ட்டின் வழி காட்டுதல்படி போலீசார் நடத்தும் துப்பாக்கி சூடு சம்பவங்கள் சி.பி.சி.ஐ.டி. மாற்றப்படும். அதன்படி இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்யப்படுகிறது. துப்பாக்கி சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டு தடயவியல் சோதனைக்கு உட்படுத்தப்படும்.
இவ்வாறு அந்த உயர் போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். #sterliteprotest
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டம் வன்முறையானது. போலீஸ் துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள்.
போலீசாரின் நடவடிக்கைகள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. சாதாரண உடையில் வாகனத்தில் ஏறி நின்று போலீசார் துப்பாக்கியால் சுடுவது ஏன்? என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
இந்த நிலையில் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
சரியான திட்டமிடல் மற்றும் தலைமை இல்லாததே தூத்துக்குடியில் துப்பாக்கி சூடுக்கு வழிவகுத்துள்ளது. போலீசார் தங்களது அடையாளத்தை மறைத்தது ஏன்?. சாதாரண உடையில் உள்ளவர்கள் கூட்டத்தில் கலந்து உளவு பார்ப்பது கிடையாது.
கூட்டத்தை கலைப்பதை விட தங்களை பாதுகாத்து கொள்வதற்காக போலீசார் துப்பாக்கி சூட்டை நடத்தியது போல் தோன்றுகிறது.
கட்டுக்கடங்காத கும்பலை கட்டுப்படுத்த ஒரு முறை துப்பாக்கிச்சூடு, ஒரு பலியே போதுமானது. 12க்கும் மேற்பட்டோரை துப்பாக்கியால் சுட்டதை நியாயப்படுத்துவது ஆச்சரியமாக இருக்கிறது.
சுப்ரீம் கோர்ட்டின் வழி காட்டுதல்படி போலீசார் நடத்தும் துப்பாக்கி சூடு சம்பவங்கள் சி.பி.சி.ஐ.டி. மாற்றப்படும். அதன்படி இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்யப்படுகிறது. துப்பாக்கி சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டு தடயவியல் சோதனைக்கு உட்படுத்தப்படும்.
இவ்வாறு அந்த உயர் போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். #sterliteprotest
×

X