search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்தூர்"

    மத்தூர் அருகே பஸ் மோதி கட்டிட மேஸ்திரிகள் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள மேல் சந்தம்பட்டி பகுதியை சேர்ந்த சக்கரவர்த்தி (வயது49) கட்டிட தொழிலாளி. இவருக்கு பழனியம்மாள் என்ற மனைவியும், இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அதே பகுதியை சேர்ந்தவர் சக்தி (வயது48). இவருக்கு தமிழ்செல்வி என்ற மனைவியும், இண்டு மகன்களும் உள்ளனர்.

    நேற்று மாலை மத்தூர் பகுதியில் கட்டிட வேலையை முடித்து விட்டு சக்கரவர்த்தி, சக்தி ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது மத்தூர் அருகேயுள்ள கவுண்டனூர் கூட்ரோடு பகுதியில் செல்லும் போது எதிரே புதுச்சேரியில் இருந்து பெங்களூரை நோக்கி வந்த புதுச்சேரி அரசு விரைவு பேருந்து எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்டு சக்கரவர்த்தி, சக்தி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் அரசு பஸ்சின் கண்ணாடிகயை உடைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    விபத்தில் இறந்த 2 பேர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து பேருந்து ஓட்டுர் புதுச்சேரியை சேர்ந்த நீதி நாதன் (55) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போச்சம்பள்ளி அருகே மத்தூரிலும் பஸ் நிலையம், கிருஷ்ணகிரி மெயின்ரோடு, திருப்பத்தூர் மெயின்ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
    தருமபுரி:

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் முழு கடை போராட்டம் இன்று நடைபெறும் என்று அறிவித்திருந்தது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் பஸ் நிலையம், சந்தூர் மெயின்ரோடு, கல்லாவி மெயின்ரோடு, தருமபுரி மெயின்ரோடு, திருப்பத்தூர் மெயின்ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள கடைகள் மூடப்பட்டிருந்தன. இதுபோன்று போச்சம்பள்ளி சுற்றுவட்டார கிராமங்களான அரசம்பட்டி, புளியூர், பாரூர், கண்ணந்தூர் ஆகிய பகுதிகளிலும் டீக்கடை, பூக்கடை, மருந்து கடை, பாத்திரம் கடை உள்பட பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஆனால் வழக்கம்போல் அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஓடின. ஆட்டோகளும் வழக்கம்போல் இயங்கின.

    இதுபோன்று போச்சம்பள்ளி அருகே மத்தூரிலும் பஸ் நிலையம், கிருஷ்ணகிரி மெயின்ரோடு, திருப்பத்தூர் மெயின்ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பஸ்களும், ஆட்டோக்களும் வழக்கம்போல் ஓடின. அசாம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 
    மத்தூர் அருகே குடிநீர் பிரச்சினைக்காக கிராம மக்கள் சாலைமறியல் செய்ய முயற்சி செய்தனர். அவர்களை போலீசார் சமரசம் செய்தனர்.
    மத்தூர்:

    மத்தூர் அருகே உள்ளது நாகம்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் கடும் குடிநீர் பிரச்சினை கடந்த 2 மாதமாக நிலவி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஊர் பொதுமக்கள் மற்றும் பெண்கள் காலிக்குடங்களுடன் இடும்பன் கோவில் அருகில் சாலை மறியல் செய்வதற்காக நேற்று திரண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற மத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபால கிருஷ்ணன் பொதுமக்கள் கூட்டமாக இருந்ததை கண்டு என்ன பிரச்சினை என விசாரித்தார். அப்போது குடிநீர் பிரச்சினை காரணமாக சாலை மறியல் செய்ய போவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

    இதையடுத்து மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) சண்முகம், நாகம்பட்டி ஊராட்சி செயலாளர் சண்முகம், ஊர் முக்கிய பிரமுகர்கள் மாதையன், கதிர்வேல் உள்பட பலரிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபால கிருஷ்ணன், ஆழ்துளை கிணறு உள்ள இடத்தை பார்வையிட்டார்.

    அங்கிருந்து சிறு மின்விசை நீர்தேக்க தொட்டிக்கு உடனடியாக பைப்லைன்கள் அமைத்து நீரை ஏற்றும்படியும், அதன் மூலம் குடிநீர் வினியோகத்தை மேற்கொள்ள முடியும் என்று வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அறிவுறுத்தினார். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. 
    ×