search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மெஞ்ஞானபுரம்"

    மெஞ்ஞானபுரம் அருகே வீடு புகுந்து 8 பவுன் தங்க நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்செந்தூர்:

    மெஞ்ஞானபுரம் அருகே உள்ள அருளானந்தபுரம் வாலிவிளையைச் சேர்ந்தவர் ஜஸ்டின்பவுல் (வயது 45) அறுவடை இயந்திர வாகன டிரைவராக உள்ளார். இவரது மனைவி ஸ்டெல்லா(40). வீட்டை பூட்டி சாவியை ஜன்னல் ஓரத்தில் வைத்துவிட்டு அருகே உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

    பின்னர் சிறிது நேரத்தில் வீட்டுக்கு வந்தபோது மர்ம நபர் ஒருவர் இவர் வீட்டு காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து ஓடுவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் வீட்டுக்குள் சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 8 பவுன் தங்க நகைகளை மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது.

    இது குறித்து ஸ்டெல்லா மெஞ்ஞானபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மெஞ்ஞானபுரம் அருகே வி‌ஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்செந்தூர்:

    மெஞ்ஞானபுரம் அருகே உள்ள கீழராமசாமிபுரத்தைச் சேர்ந்தவர் சிவலிங்கம் (வயது 29). கூலித் தொழிலாளி. இவருக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது, முத்தரசி என்ற மனைவியும் 2 வயதில் சுபஸ்ரீ என்ற பெண் குழந்தையும் உள்ளனர். சிவலிங்கத்திற்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் அவர் வேலைக்கும் செல்லாமல் இருந்தார். இதை மனைவி முத்தரசி கண்டித்தார்.

    இந்த நிலையில் இரவு வீட்டுக்கு அருகில் சிவலிங்கம் மதுவில் வி‌ஷம் கலந்து குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரை திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியில் சிவலிங்கம் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து மெஞ்ஞானபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மெஞ்ஞானபுரம் அருகே கோவில் உண்டியல் உடைத்து பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்செந்தூர்:

    மெஞ்ஞானபுரம் அருகே உள்ளது நங்கைமொழி கிராமம். இங்கு மந்திரமூர்த்தி என்ற இரட்டை சுடலை மாடசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலை மேலராமசாமியாபுரத்தைச் சேர்ந்த தங்கவேல்(76) என்பவர் நிர்வகித்து வருகிறார். இந்த கோவில் பூசாரி உலகுபிள்ளை சம்பவத்தன்று வழக்கம் போல் இரவு 7மணிக்கு பூஜை முடித்துவிட்டு கோவிலை பூட்டி சென்று விட்டார். மறுநாள் காலையில் பூஜை செய்ய கோவிலை திறக்க சென்றபோது கோவில் கேட் உடைக்கப்பட்டு கிடந்தது.

    உள்ளே உண்டியலும் உடைக்கப்பட்டிருந்தது. உண்டியலை உடைத்து மர்ம நபர் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இது குறித்து கோவில் நிர்வாகி தங்கவேல் மெஞ்ஞானபுரம் போலீஸ்நிலையத்தில் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கோவிலில் கொள்ளை சம்பவம் மூன்றாவது முறையாக நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×