search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிஎஸ்ஜி"

    • பிஎஸ்ஜி அணிக்காக 305 போட்டிகளில் விளையாடி 255 கோல்கள் அடித்துள்ளா
    • ரியல் மாட்ரிட் அணிக்கு செல்ல வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

    பிரான்ஸ் நாட்டின் நட்சத்திர கால்பந்து வீரர் கிலியான் எம்பாப்வே. 25 வயதான இவர் பிரான்ஸ் நாட்டின் லீக்-1ல் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் அணிக்காக விளையாடி வருகிறார். நீண்ட காலமாக பிஎஸ்ஜி அணிக்காக விளையாடி வரும் எம்பாப்வே ரியல் மாட்ரிட் அணிக்கு செல்ல விரும்புவதாக தகவல் வெளியானது.

    இது தொடர்பாக தொடர்ந்து யூகச் செய்திகள் வெளியாகி கொண்டிருந்தன. ஆனால் பிஎஸ்ஜி அணிக்காகவே விளையாடி வந்தார். இந்த நிலையில் ஜூன் மாதத்துடன் முடிவடையும் லீக்-1 சீசனோடு பிஎஸ்ஜி அணியில் இருந்து வெளியேற இருப்பதாக எம்பாப்பே அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். வரும் ஞாயிற்றுக்கிழமை விளையாடுவது பிஎஸ்ஜி அணிக்காக தனது கடைசி ஆட்டம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

    இவர் பிஎஸ்ஜி அணிக்காக 305 போட்டிகளில் விளையாடி 255 கோல்கள் அடித்துள்ளார். 2022 கால்பந்து உலகக் கோப்பையில் அர்ஜென்டினாவிற்கு எதிராக அபாரமாக விளையாடி 3 கோல்கள் அடித்தார். ஆனால், போட்டி டிரா ஆகி பெனால்டி ஷூட்அவுட்டில் அர்ஜென்டினா கோப்பையை வென்றன. 2017-ல் தனது 18 வயதில் பிரான்ஸ் அணியில் இடம் பிடித்து உலகக் கோப்பையை வென்ற இளம் வீரர் என்ற பெருமையை பெற்றார்.

    எம்பாப்வே 2015 முதல் 2018 வரை மொராக்கோ அணிக்காக விளையாடி 16 போட்டிகளில் 41 கோல் அடித்துள்ளார். 2017-18-ல் லோன் மூலம் பிஎஸ்ஜி அணியில் அறிமுகம் ஆனார். அதில் இருந்து தற்போது வரை பிஎஸ்ஜி அணிக்காக விளையாடி வருகிறார்.

    • முதல் பாதி ஆட்டம் 1-1 என சமநிலையில் இருந்தது
    • 2-வது பாதி ஆட்டத்தில் நைஸ் ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்றது

    பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் முன்னணி கால்பந்து தொடர் லீக்-1. இதில் முன்னணி அணியாக பிஎஸ்ஜி திகழ்ந்து வருகிறது. இந்த அணியில் இருந்து மெஸ்சி, நெய்மர் ஆகியோர் வெளியேறிவிட்டனர். நட்சத்திர வீரர் எம்பாப்வே அந்த அணிக்காக விளையாடி வருகிறார்.

    இந்திய நேரப்படி இன்று காலை பிஎஸ்ஜி அணி நைஸ் அணியை எதிர்கொண்டது. இதில் எம்பாப்பே இரண்டு கோல்கள் அடித்த போதிலும், 2-3 என நைஸ் அணியிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது.

    ஆட்டம் தொடங்கிய 21-வது நிமிடத்தில் நைஸ் அணியின் டெரெம் மொஃப்பி கோல் அடித்தார். இதற்கு எம்பாப்வே 29-வது நிமிடத்தில் பதில் கோல் அடித்தார். இதனால் முதல் பாதி நேர ஆட்டத்தில் இரு அணிகளும் 1-1 சமனில் இருந்தது.

    2-வது பாதி நேரத்தில் நைஸ் வீரர்கள் அபாரமாக விளையாடினர். 53-வது நிமிடத்தில் கயேடன் லபோர்டேவும், 68-வது நிமிடத்தில் மொஃப்பியும் கோல் அடித்தனர். இதனால் நைஸ் 3-1 என முன்னிலைப் பெற்றது.

    அதன்பின் பிஎஸ்ஜி அணியால் கோல் அடிக்க முயற்சித்தது. ஆட்டத்தின் 87-வது நிமிடத்தில் எம்பாப்பே மீண்டும் ஒரு கோல் அடித்தார். ஆனால், அதன்பின் பிஎஸ்ஜி அணியால் கோல் அடிக்க முடியவில்லை. இதன்காரணமாக பிஎஸ்ஜி 2-3 எனத் தோல்வியை சந்தித்தது.

    இந்தத் தோல்வியால் பிஎஸ்ஜி புள்ளிகள் பட்டியலில் 3-வது இடத்திற்கு சரிந்துள்ளது. மொனாக்கோ முதல் இடத்திலும், நைஸ் 2-வது இடத்திலும் உள்ளது.

    • பிஎஸ்ஜி அணியில் ஒப்பந்தத்தை நீட்டிக்க எம்பாப்வே விரும்பவில்லை
    • சவுதி அரேபிய அணி எம்பாப்பேவை ஒப்பந்தம் செய்ய விருப்பம்

    பிரான்ஸ் கால்பந்து வீரர் கேப்டன் எம்பாப்பே, உலகளவில் நட்சத்திர வீரராக திகழ்ந்து வருகிறார். அவர் தற்போது பிரான்சில் உள்ள பிஎஸ்ஜி அணிக்காக விளையாடி வருகிறார். இந்த அணியுடன் இரண்டு ஆண்டு ஒப்பந்தம் மீதமுள்ளது.

    மேலும், ஒரு வருடத்திற்கான ஒப்பந்தத்தை நீட்டிக்க பிஎஸ்ஜி விரும்பியது. ஆனால், எம்பாப்வே ரியல் மாட்ரிட் அணிக்கு செல்ல விரும்புகிறார். இதனால் பிஎஸ்ஜி-யின் ஒப்பந்தத்தை நீட்டிக்க விரும்பவில்லை. ஃப்ரீ டிரான்ஸ்பராக செல்ல வாய்ப்புள்ளது.

    இதற்கிடையே சவுதி அணியான அல்-ஹிலால் பிஎஸ்ஜி-யுடன் பேச்சுவார்த்தை நடத்தி 332 மில்லியன் டாலர் (இந்திய பண மதிப்பில் 2700 கோடி ரூபாய்) டிரான்ஸ்பர் ஃபீஸ் செலுத்த முன்வந்தது. எந்தவித ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறினால் பணம் கிடைக்காது என்பதால், பிஎஸ்ஜி விருப்பம் தெரிவித்தது.

    இந்த நிலையில்தான் அல்-ஹிலால் அணி எம்பாப்பேவை சந்திக்க பிரான்ஸ் சென்றுள்ளனர். ஆனால், எம்பாப்வே அவர்களை சந்திக்க மறுத்துவிட்டார் எனத்தகவல் வெளியாகியுள்ளது.

    ஏற்கனவே அல்-ஹிலால் மெஸ்சியை ஒப்பந்தம் செய்ய விரும்பியது. ஆனால், அமெரிக்காவின் இன்டர் மியாமி அணிக்கு மெஸ்சி சென்றுவிட்டார்.

    • பி.எஸ்.ஜி. அணிக்காக 57 போட்டிகளில் 22 கோல்கள் அடித்துள்ளார்
    • இரண்டு சீசனோடு பிஎஸ்ஜி-யில் இருந்து வெளியேறுகிறார்

    கால்பந்து, அர்ஜென்டினா என்றாலே நினைவுக்கு வரும் முன்னணி கால்பந்து வீரர்களில் ஒருவர் மெஸ்சி. பார்சிலோனா அணிக்காக நீண்ட காலம் விளையாடிய அவர், திடீரென பி.எஸ்.ஜி. (paris saint-germain fc) அணிக்கு மாறினார். 2021-ல் இருந்து பிஎஸ்ஜி அணிக்காக விளையாடி வருகிறார்.

    இதுவரை 57 போட்டிகளில் விளையாடி 22 கோல்கள் அடித்துள்ளார். பிஎஸ்ஜி அணியில் இருந்து மெஸ்சி வெளியேற வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வெளியாகிய வண்ணம் இருந்தன.

    இந்த நிலையில் பிஎஸ்ஜி அணி நாளை மறுதினம் சனிக்கிழமை கிளெர்மோன்ட் அணியை எதிர்த்து விளையாடுகிறது. இதுதான் மெஸ்சி பிஎஸ்ஜி அணிக்காக விளையாடும் கடைசி போட்டி என அந்த அணியின் பயிற்சியாளர் கிறிஸ்டோபர் கால்டியர் தெரிவித்துள்ளார்.

    பார்சிலோனா அணிக்காக மெஸ்சி 474 போட்டிகளில் விளையாடி 520 கோல்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பார்சிலோனா அணி நிர்வாகத்திடம், மீண்டும் பார்சிலோனாவில் விளையாட தங்களுக்கு விருப்பம் இருந்தால் 10 நாட்களுக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும் என மெஸ்சி தெரிவித்ததாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

    மெஸ்சி மீண்டும் அணிக்கு திரும்புவதை பார்சிலோனா மகிழ்ச்சியுடன் எதிர்பார்க்கும் நிலையில், அவர்களின் நிதி அமைப்பு சிக்கலாக இருக்கும் எனத் தெரிகிறது.

    • பிஎஸ்ஜி அணியின் புதிய நிபந்தனைகளை தம்மால் ஒப்புக்கொள்ள முடியாது என்றே மெஸ்ஸி கூறியுள்ளார்.
    • பிஎஸ்ஜி அணியை பொறுத்தமட்டில் ஊதியத்தை குறைத்துக் கொள்ள கட்டாயப்படுத்துவதாக கூறப்படுகிறது.

    பிரான்சின் பிஎஸ்ஜி அணியுடனான ஒப்பந்தம் புதுப்பிக்காத நிலையில் அர்ஜென்டினா கால்பந்து நட்சத்திரம் மெஸ்ஸியின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறியுள்ளது என கூறப்படுகிறது.

    ஊதியம் தொடர்பாக இருதரப்புக்கும் இடையே முரண்பாடு நீடிப்பதால், பிஎஸ்ஜி அணியுடனான ஒப்பந்தம் புதுப்பிக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. பிஎஸ்ஜி அணியில் இணைந்த பின்னர் மொத்தம் 28 ஆட்டங்களில் 17 கோல்கள் விளாசியுள்ள மெஸ்ஸி, 16 கோல் வாய்ப்புகளை உருவாக்கி சக வீரர்களுக்கு உதவியுள்ளார்.

    தமது கால்பந்து வாழ்க்கையை சமீப மாதங்களாக கொண்டாடிவரும் மெஸ்ஸி, 2022 ஆம் ஆண்டின் ஃபிபா கால்பந்து உலகக் கோப்பையையும் கைப்பற்றினார். கத்தார் உலகக் கோப்பைக்கு முன்னர் பிஎஸ்ஜி அணியுடன் ஓராண்டுக்கான ஒப்பந்தம் ஒன்றை முன்னெடுத்திருந்தார் மெஸ்ஸி.

    ஆனால் பிஎஸ்ஜி அணியின் புதிய நிபந்தனைகளை தம்மால் ஒப்புக்கொள்ள முடியாது என்று மெஸ்ஸி கூறியுள்ளார். பிஎஸ்ஜி அணியை பொறுத்தமட்டில் ஊதியத்தை குறைத்துக் கொள்ள கட்டாயப்படுத்துவதாக கூறப்படுகிறது.

    தற்போது அவர் ஆண்டுக்கு 34.84 மில்லியன் பவுண்டுகள் ஊதியமாக பெற்று வருகிறார். மேலும், புதிய ஒப்பந்தம் தொடர்பில் பிஎஸ்ஜி அணி முன்வைத்த நிபந்தனைகளும் மெஸ்ஸியால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

    இதனிடையே, மெஸ்ஸியின் தந்தை பார்சிலோனா அணியுடனான பேச்சுவார்த்தையை முன்னெடுத்திருந்தார். இந்த நிலையில் தான் மெஸ்ஸியின் எதிர்காலம் தொடர்பில் ரசிகர்களிடையே கவலை எழுந்துள்ளது.

    பிரெஞ்ச் கோப்பை கால்பந்து காலிறுதி ஆட்டத்தில் டி மரியாவின் சிறப்பான ஆட்டத்தால் பிஎஸ்ஜி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. #PSG
    பிரெஞ்ச் கோப்பை கால்பந்து காலிறுதி ஆட்டம் ஒன்றில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் டிஜோன் அணியை எதிர்கொண்டது. பிஎஸ்ஜி முன்னணி வீரர்களான நெய்மர், கவானி ஆகியோர் இல்லாமல் களம் இறங்கியது. ஆனால் டி மரியா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    8-வது மற்றும் 28-வது நிமிடத்தில் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தினார். இதனால் முதல் பாதி நேரத்தில் பிஎஸ்ஜி 2-0 என முன்னிலைப் பெற்றது. 2-வது பாதி நேரத்தில் அந்த அணியின் தாமஸ் மியுனியர் 76-வது நிமிடத்தில் கோல் அடிக்க பிஎஸ்ஜி 3-0 என முன்னிலைப் பெற்றது.

    அதன்பின் டிஜோன் அணியால் கோல் அடிக்க இயலவில்லை. இதனால் பிஎஸ்ஜி 3-0 என வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
    ×