என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 123584
நீங்கள் தேடியது "தூக்குப்பாலம்"
பராமரிப்பு பணிகள் நிறைவடைந்ததையடுத்து 84 நாட்களுக்கு பிறகு பாம்பன் தூக்குப்பாலம் வழியாக ராமேசுவரத்துக்கு மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்கியது. #PambanBridge #PambanRailwayBridge
ராமேசுவரம்:
மண்டபத்தையும், ராமேசுவரம் தீவையும் இணைக்கும் வகையில் பாம்பனில் 3 கிலோ மீட்டருக்கு கடலில் ரெயில் மேம்பாலம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டது.
இந்த பாலத்தில் ராமேசுவரத்துக்கு நாள்தோறும் 10-க்கும் மேற்பட்ட ரெயில்கள் இயக்கப்படுகிறது. அதேநேரத்தில் கப்பல் போக்குவரத்துக்கும் ஏற்றவகையில் இருபிரிவுகளாக திறக்கும்படி பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ராமேசுவரம் பாம்பன் ரெயில் தூக்குப்பாலத்தில் கடந்த டிசம்பர் மாதம் 4-ந் தேதி விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து அந்த வழி தடத்தில் ரயில் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டு, பராமரிப்பு பணிகள் தொடங்கப்பட்டன.
பாம்பன் ரெயில் தூக்குப்பாலத்தில் பராமரிப்பு பணிகள் முழுமையாக முடிவடைந்த நிலையில், 84 நாட்களுக்கு பிறகு தற்போது ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. 6.5 டன் துருப்பிடிக்காத இரும்பு ராடுகளை கொண்டு விரிசல் சரிசெய்யப்பட்டதையடுத்த தற்போது மீண்டும் ரயில் சேவையை ரயில்வே தொடங்கியுள்ளது.
புவனேஸ்வர், சேது, கோவை உள்ளிட்ட விரைவு ரயில்கள் 10 கிமீ வேகத்தில் ரயில் பாலத்தில் சென்றதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. #PambanBridge #PambanRailwayBridge
×

X