search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 123633"

    • மாவட்ட அளவில் குறை கேட்டு முகாம் நடத்தப்பட்டு குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது.
    • முகாம் வருகிற 10-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    தஞ்சை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்த விரிவான அறிவுரைகள் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் வழங்கப்பட்டு வேலை அடையாள அட்டை கோரும் 18 வயது நிரம்பிய மாற்று திறனாளிகள் அனைவருக்கும் பிரத்தியேக நீல நிறத்திலான வேலை அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது.

    தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 7829 மாற்று திறனாளிகளுக்கு வேலை அட்டை வழங்கப்பட்டு உள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு குறைகளை தீர்க்கும் விதமாக பிரதி மாதம் 2-வது செவ்வாய்க்கிழமை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தலைமையில் 14 ஊராட்சி ஒன்றியங்களிலும் 2 மாதங்களுக்கு ஒரு முறை மாவட்ட அளவில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) தலைமையில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் குறை கேட்டு முகாம் நடத்தப்பட்டு குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது.

    இதன் தொடர்ச்சியாக அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களிலும் மாற்று திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் தொடங்கி நடந்து வருகிறது. இந்த முகாம் வருகிற 10-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    இந்த முகாமை பயன்படுத்தி தாங்கள் வசிக்கும் பகுதியை சேர்ந்த ஊராட்சி மன்ற அலுவலகத்தை அணுகி தகுதியுடைய மாற்றுத் திறனாளிகள் நீல நிற வேலை அடையாள அட்டை பெற்றுக் கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடந்தது.
    • 1 முதல் 18 வயதுக்குள்பட்டோர் 209 பேர் பங்கேற்று பயன்பெற்றனா்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும் மாவட்ட மாற்றுத்திற னாளிகள் நல அலுவலகம் சாா்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஊரணிப்பட்டி நடுநிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளி களுக்கான இலவச மருத்துவ முகாம் நடந்தது. வட்டார வளமைய மேற்பார்வையாளர் மருதக்காளை தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தாா்.

    மாவட்ட மாற்றுத்திற னாளிகள் நல அலுவலர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். மருத்துவா்கள் சீனிவாசன் (மனநலம்),சுரேஷ் (எலும்பு முறிவு), ரமேஷ் பாபு (காது, மூக்கு, தொண்டை), பாஸ்கரன் (கண்) ஆகியோா் மாற்றுத்திறனாளிகளை பரிசோதித்து மருத்துவச் சான்று வழங்கினா்.

    மேலும் மாற்றுத்திறனா ளிகளுக்கான தேசிய அடையாள அட்டை மற்றும் தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை பதிவு செய்தல், புதுப்பித்தல், உதவித்தொகை மற்றும் உதவி உபகரணங்கள் பெறுவதற்கு பதிவு செய்தல், ரெயில் மற்றும் பஸ் பயண கட்டணச்சலுகை பெறுதல், மருத்துவரின் ஆலோசனை ஆகிய சேவைகள் வழங்கப் பட்டன.

    முகாமில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றிய பகுதிகளில் இருந்து 1 முதல் 18 வயதுக்குள்பட்டோர் 209 பேர் பங்கேற்று பயன்பெற்றனா். இதில் தேசிய அடையாள அட்டை 60 பேருக்கும், ரெயில் மற்றும் பஸ் பயண கட்டணச் சலுகை 180 பேருக்கும், உதவி உபகரணங்கள் 34 பேருக்கும் வழங்கப்பட்டன.

    • 4,348 மாற்றுத்திறனாளிகளுக்கு நீலநிற வேலை அட்டையை கலெக்டர் வழங்கினார்.
    • ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் வழங்கப்பட்டு வரும் வேலை வாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து விரிவான அறிவுரைகள் அனைத்து மாவட்ட கலெக் டர்களுக்கும் வழங்கப்பட்டு உள்ள நிலையில் இத்திட்ட வேலை அட்டை கோரும் 18 வயது நிரம்பிய மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் பிரத்யேக நீல நிறத்திலான வேலை அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 4.348 மாற்றுத் திறனாளிகளுக்கு நீலநிற வேலை அட்டை வழங்கப்பட்டு உள்ளது. மாற்றுத்திறனாளிகளது குறைகள் தீர்க்கும் விதமாக பிரதி மாதம் 2-வது செவ்வாய்க்கிழமை வட்டார வளர்ச்சி அலுவலர் அளவிலும், 2 மாதங்களுக்கு ஒரு முறை இரண்டாவது செவ்வாய்க்கிழமை கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்சி முகமை முன்னிலையில் குறைகேள் முகாம்கள் நடத்தப்பட்டு குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது.

    இதன் தொடர்ச்சியாக வருகிற மார்ச் 1-ந்தேதி முதல் மார்ச் 10 வரை ராமநா தபுரம் மாவட்டத்தி லுள்ள அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இந்த முகாமினை பயன்படுத்தி தாங்கள் வசிக்கும் பகுதியை சார்ந்த ஊராட்சி மன்ற அலுவல கத்தை அணுகி தகுதியுடைய மாற்றுத் திறனாளிகள் நீல நிற அட்டையினை பெற்று பயன்பெற வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • சிவகங்கை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் வருகிற 10-ந்தேதி வரை நடக்கிறது.
    • மாற்றுத்திறனாளிகள் நீல நிற வேலை அட்டையை பெற்று பயன்பெறலாம்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மூலம் செயற்படுத்தப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் வேலை வாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.

    இந்த துறையின் அரசாணையின்படி மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு பணிகள் வழங்கப்பட்டு வருவது தேசிய அளவில் முன்னோடி முயற்சியாகும்.

    இந்த திட்ட வேலை அட்டை கோரும் 18 வயது நிரம்பிய மாற்றுத்தி றனாளிகள் அனைவருக்கும் பிரத்யேக நீல நிறத்திலான வேலை அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் இன்றைய தேதி வரை 4 ஆயிரத்து 796 மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை அட்டை முன்னதாக வழங்கப்பட்டுள்ளது.

    மாற்றுத்திறனாளிகளின் குறைகளை தீர்க்கும் வகையில் மாதந்தோறும் 2-வது செவ்வாய்கிழமை வட்டார வளர்ச்சி அலுவலர் அளவிலும், 2 மாதங்களுக்கு ஒரு முறை 2-வது செவ்வாய்கிழமை திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அவர்கள் முன்னிலையிலும் குறைகேள் முகாம்கள் நடத்தப்பட்டு குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது.

    இதன் தொடர்ச்சியாக நேற்று (1-ந்தேதி) தொடங்கி 10-ந்தேதி வரை சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாமை பயன்படுத்தி தாங்கள் வசிக்கும் பகுதியை சேர்ந்த ஊராட்சிமன்ற அலுவலகத்தை அணுகி தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் நீல நிற வேலை அட்டையை பெற்று பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வருகிற 10-ந் தேதி வரை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடக்கிறது.
    • இந்த தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. இந்த துறையின் அரசாணை (நிலை) எண் 52, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை நாள்: 25.6.2012-ன் படி மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு பணிகள் வழங்கப்பட்டு வருவது தேசிய அளவில் முன்னோடி முயற்சியாகும்.

    இது குறித்து விரிவான அறிவுரைகள் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் வழங்கப்பட்டுள்ள நிலையில் இந்த திட்ட வேலை அட்டைகோரும் 18 வயது நிரம்பிய மாற்றுத்தி றனாளிகள் அனைவருக்கும் பிரத்யேக நீல நிறத்திலான வேலை அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது.

    விருதுநகர் மாவட்டத்தில் நாளது வரை 5 ஆயிரத்து 170 மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை அட்டை வழங்கப்பட்டுள்ளது.

    மாற்றுத்திறனாளிகளது குறைகளை தீர்க்கும் வகையில் பிரதி மாதம் 2-வது செவ்வாய்கிழமை வட்டார வளர்ச்சி அலுவலர் அளவிலும், 2 மாதங்களுக்கு ஒரு முறை 2-வது செவ்வாய்கிழமை கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை முன்னிலையிலும் குறைகேள் முகாம்கள் நடத்தப்பட்டு குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது.

    இதன் தொடர்ச்சியாக இன்று (1-ந் தேதி) முதல் 10-ந் தேதி வரை விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களில் மாற்று திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாமை பயன்படுத்தி தாங்கள் வசிக்கும் பகுதியைச் சார்ந்த ஊராட்சி மன்ற அலுவலகத்தை அணுகி தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் நீல நிற வேலை அட்டையை பெற்று பயன்பெறலாம் .

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் நீல நிறத்திலான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது.
    • 1,509 மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை அட்டை வழங்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு பணிகள் வழங்கப்பட்டு வருவது தேசிய அளவில் ஓர் முன்னோடி முயற்சியாகும். இந்த திட்ட வேலை அட்டை கோரும் 18 வயது நிரம்பிய மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் பிரத்யேகமாக நீல நிறத்திலான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை மாநில அளவில் 1 லட்சத்து 70 ஆயிரத்து 767 மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை அட்டை வழங்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் 1,509 மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை அட்டை வழங்கப்பட்டுள்ளது.

    மாற்றுத்திறனாளிகளுக்கு குறைகளை தீர்க்கும் விதமாக மாதந்தோறும் 2-வது செவ்வாய்க்கிழமை வட்டார வளர்ச்சி அலுவலர் அளவிலும், இருமாதங்களுக்கு ஒருமுறை 2-வது செவ்வாய்க்கிழமை ஊரக வளர்ச்சி முகமை இணை இயக்குனர் முன்னிலையில் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது.

    இதன்தொடர்ச்சியாக நாளை (புதன்கிழமை) முதல் வருகிற 10-ந் தேதி வரை திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இந்த முகாமை பயன்படுத்தி தாங்கள் வசிக்கும் பகுதியை சேர்ந்த ஊராட்சி மன்ற அலுவலகத்தை தொடர்பு கொண்டு நீலநிற வேலை அட்டையை பெறலாம். இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    • பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 233 மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர்.
    • மாற்றுத்திறனாளிக்கு ரூ.1.35 லட்சம் மதிப்பிலான ஸ்மார்ட் செல்போன்களை கலெக்டர் வழங்கினார்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தலைமை வகித்து மனுக்களை பெற்றுக் கொண்டார். கூட்டத்தில், பொதுமக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 233 மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் அளி த்தனர்.

    அதனை அவர் பெற்றுக்கொண்டு சம்மந்தப்பட்ட துறை அலுவல ர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

    அதனைத்தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் கண்பார்வை குறைபா டுடைய மற்றும் செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச ஸ்மார்ட் செல்போன் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.13,500 வீதம், பத்து மாற்றுத்திறனாளிக்கு ரூ.1.35 லட்சம் மதிப்பிலான ஸ்மார்ட் செல்போன்களை கலெக்டர் வழங்கினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் பாலசந்தர், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • 100 நாள் வேலையில் மாற்றுத்திறனாளிக்கு 4 மணி நேரம் முழு ஊதியத்துடன் வேலை வழங்க வேண்டும். 100 நாள் வேலையில் மாற்றுத்திறனாளிக்கு 4 மணி நேரம் முழு ஊதியத்துடன் வேலை வழங்க வேண்டும்.

    உசிலம்பட்டி

    மதுரை புறநகர் மாவட்ட தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மாவட்ட செயலாளர் முருகன், பொருளாளர் சின்ன கருப்பு, ஒன்றிய செயலாளர் சின்னச்சாமி, ஒன்றிய தலைவர் நாகராஜ், ஒன்றிய பொருளாளர் வீரய்யா மற்றும் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். 100 நாள் வேலையில் மாற்றுத்திறனாளிக்கு 4 மணி நேரம் முழு ஊதியத்துடன் வேலை வழங்க வேண்டும்.

    100 நாள் வேலை திட்டத்தில் அடையாள அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி யூனியன் ஆணையாளரிடம் மனு கொடுத்தனர். 

    • மாற்றுத்திறனாளிகள் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.
    • போராட்டத்திற்கு ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் ராஜேஷ் தலைமை தாங்கினார்.

    முதுகுளத்தூர்

    அனைத்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் நலச்சங்கம் சார்பில் மத்திய பட்ஜெட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட நிதியை பாதியாக குறைத்ததை கண்டித்து ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.

    யூனியன் ஆணையாளர் ரவி, வட்டார வளர்ச்சி அலுவலர் தேவ பிரியதர்ஷினி ஆகிேயார் நேரில் வந்து, நீங்கள் அளித்த கோரிக்கை சரியானது. இதை விரைவில் சரி செய்து தருவதாக உறுதி அளித்ததின் பெயரில் இந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. போராட்டத்திற்கு ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் ராஜேஷ் தலைமை தாங்கினார்.

    தாலுகா தலைவர் முனியசாமி, துணைத் தலைவர் முத்து கண்ணன், இணை செயலாளர் மயில்சாமி, உறுப்பினர்கள் வில்வதுரை, ராமர் விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகி முருகன், அங்குதன் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

    • பாவூர்சத்திரத்தில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    தென்காசி:

    தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் சார்பில் பாவூர்சத்திரத்தில் கீழப்பாவூர் யூனியன் அலுவலகம் முன்பு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் தங்கம் தலைமை தாங்கினார். முருகன், ஜெகநாதன், சுமன், இசக்கிமுத்து, ஜோதி உலகம்மாள், நாகராஜன், பாண்டியராஜன் மூக்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் குணசீலன், சி.ஐ.டி.யு. பீடிதொழிலாளர் சங்க இணை செயலாளர் ஆரியமுல்லை கற்பகவல்லி, அய்யாச்சாமி, மாதர் சங்க ஒன்றிய செயலாளர் சொரணம் ஆகியோரும் கலந்து கொண்டு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து கீழப்பாவூர் யூனியன் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மாரியப்பனிடம் கோரிக்கை மனுவினை வழங்கினர்.

    • 70 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.
    • 125-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

    பாபநாசம்:

    பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர்களின் மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடந்தது. முகாமில் கும்பகோணம் மாவட்ட கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். பாபநாசம் வட்டார வளமைய மேலாளர் முருகன் அனைவரையும் வரவேற்றார்.

    பாபநாசம் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி மாற்றுத்திறனாளி மாணவர்களின் மருத்துவ மதிப்பீட்டு முகாமை தொடங்கி வைத்து 70 பேருக்கு அடையாள அட்டை வழங்கினார்.

    முகாமில் மாவட்ட மறுவாழ்வு அலுவலர் சாமிநாதன், பாபநாசம் தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் நாசர், பேரூராட்சி கவுன்சிலர் பிரகாஷ், வருவாய் ஆய்வாளர் வரதராஜன், எம்.எல்.ஏ.வின் நேர்முக உதவியாளர் முகமது ரிபாயி, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ஹிதாயத்துல்லா, பாபநாசம் ஒன்றிய தலைவர் கலீல், தி.மு.க. ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மணிமாறன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    முகாமில் 75 மாற்றுத்தி றனாளி மாணவர்களும், 125 மாற்றுத்திறனாளி பெரியவர்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர். முடிவில் ஆசிரியர் பயிற்று னர் சுதாகர் நன்றி கூறினார்.

    • அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
    • மாற்றுத்திறனாளி சகோதர சகோதரிகளும் தன்மானத்துடன், சமத்துவமாக, நல்வாழ்வு வாழ்வதை உறுதி செய்ய வேண்டும்.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

    மாதாந்திர உதவித்தொகை உயர்வு, அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு உள்ளிட்ட மாற்றுத்திறனாளி பெருமக்களின் நீண்டநாள் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற மறுப்பது மனவேதனை அளிக்கிறது. தங்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகளை வீதியில் இறங்கிப் போராடும் நிலைக்குத் தள்ளியுள்ள திமுக அரசின் மனச்சான்றற்ற செயல் வன்மையான கண்டனத்திற்குரியது.

    மாற்றுத்திறனாளி சகோதர, சகோதரிகள் தங்களின் அடிப்படை உரிமைகளைக் கேட்டு அரசுக்குப் பலமுறை கோரிக்கை வைத்தும், வீதியில் இறங்கி போராடியும் கடந்த அதிமுக அரசு கண்டுகொள்ளாமல் காலங்கடத்தியது போலத் தற்போதைய திமுக அரசும் தொடர்ந்து ஏமாற்றி வருவது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள் விரைந்து நிறைவேற்றப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா ஸ்டாலின் அவர்கள் அறிவித்த நிலையில் இதுவரையில் அவர்களின் கோரிக்கைகள் ஒன்றுகூட நிறைவேற்றவில்லை என்பது கொடுங்கோன்மையாகும்.

    ஆகவே, தமிழ்நாடு அரசு உடனடியாக..

    * அண்டை மாநிலமான ஆந்திராவில் வழங்குவது போன்று மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை மாதம் ரூ.5000 மாக உயர்த்தி வழங்க வேண்டும்.

    * அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

    * அனைத்து மாற்றுத்திறனாளிகளின் குடும்ப அட்டையையும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கான குடும்ப அட்டையாக மாற்றித் தரவேண்டும்.

    * பெருமழை உள்ளிட்ட பேரிடர் காலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு விடுமுறை அளிக்க வேண்டும்.

    * மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதுடன் வீடு கட்டவும், சிறு தொழில் தொடங்கவும் அரசு சார்பில் மானியத்துடன் கூடிய வட்டியில்லாக் கடன் வழங்க வேண்டும்.

    * மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவச் சான்றிதழ் அளிக்கும் நரம்பியல் மருத்துவர்கள் பற்றாக்குறையைப் போக்கி, அனைத்து மாவட்ட தலைமை மருத்துவமனைகளிலும் நரம்பியல் மருத்துவர்கள் உறுதியாகப் பணியமர்த்தப்பட வேண்டும்

    * மாற்றுத்திறனாளிகளுக்காக தமிழ்நாடு முழுவதும் சுழற்சி முறையில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்துவதோடு, அம்மருத்துவ முகாம்களிலேயே அவர்களுக்கான பேருந்து மற்றும் ரயில் பயண, கட்டண சலுகை அட்டையைப் புதுப்பிக்கும் வசதியை செய்துதர வேண்டும்.

    * மாற்றுத்திறனாளிகளுக்கான மின்கல சக்கர நாற்காலிகளைப் பழுதுபார்க்கும் சேவை மையங்கள் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட வேண்டும்.

    * உள்ளாட்சித் தேர்தல்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5% சிறப்பு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

    * அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பேருந்து நிலையங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வு தளம் மற்றும் கழிவறை வசதிகளை உடனடியாக அமைத்துதர வேண்டும்.

    அடிப்படை உரிமைகளான மேற்கண்ட அனைத்து நியாயமான கோரிக்கைகளையும், தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்றித்தந்து, அனைவரையும் போலவே மாற்றுத்திறனாளி சகோதர சகோதரிகளும் தன்மானத்துடன், சமத்துவமாக, நல்வாழ்வு வாழ்வதை உறுதி செய்ய வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

    ×